தொழுகையில் திருடும் பலே திருடர்கள்!
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க ளுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு ”திரும்பவும் நீர் தொழுவீராக? நீர் தொழவே இல்லை” என்று கூறினார்கள்.
அந்த மனிதர் முன்பு தொழுதது போலவே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் கூறினார். ”திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (இவ்வாறு மூன்று தடவை நடந்தது.) அதன் பிறகு அந்த மனிதர் “சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார்.
“நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்காருவீராக! பின்னர் அடுத்த ஸஜ்தா செய்வீராக, இவ்வாறே உமது எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி : 793)
பராவு பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ருகூவும் ஸுஜூதும் ருகூவிலிருந்து எழுந்து நிற்கும் நேரமும் இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடைப்பட்ட நேரமும் ஏறக்குறைய ஒரே அளவாக இருந்தன. (நூல்: புகாரி : 801)
பராவு பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ருகூவும் ஸுஜூதும் இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடைப்பட்ட நேரமும் ஏறக்குறைய ஒரே அளவாக இருந்தன. (புகாரி : 820)
பராஉ பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது :
நான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தொழுகையை ஊன்றிக் கவனித்தேன். தொழுகையில் அவர்களது நிற்றல் (கியாம்), குனிதல்(ருகூஉ), குனிந்து நிமிர்ந்த பின் நிலை கொள்ளல், அவர்களின் சிரவணக்கம் (சஜ்தா), இரு சிரவணக்கங்களுக் கிடையிலான அமர்வு. பிறகு சலாம் கொடுப்பதற்கும், எழுந்து செல்வதற்கும் இடையேயான இடைவெளி ஆகியவற்றின் கால அளவுகள் ஏறக்குறைய சம அளவில் அமைந்திருந்தன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (நூல்: முஸ்லிம் : 810)
குறிப்பு : 79 : தொழுகையில் நிற்றல் (கியாம்), குனிதல்(ருகூஉ), மீண்டும் எழுந்து நிற்றல், சிரம் பணிதல் (சஜ்தா), பின்னர் அமர்தல், மீண்டும் சிரம் பணிதல் போன்ற ஒவ்வொரு நிலைகளையும் நிறுத்தி நிதா னமாகச் செய்திடல் வேண்டும். இதற்கு, ‘இஃதிதால்” என்பர். அதாவது ஒவ்வொரு நிலையை அடைந்த பின்பும் அசைவு நின்று சற்று நிலை கொண்ட பின் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். முதல் நிலையின் அசைவு முடிந்தும் முடியாமலும் இருக்கும் போதே அடுத்த நிலைக்குச் செல்லக் கூடாது.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட மிகச் சுருக்கமாக, அதே நேரத்தில் நிறைவாகத் தொழுவிக்கக் கூடிய எவருக்குப் பின்னாலும் நான் தொழுததில்லை. அவர்களது தொழுகை(யின் ஒவ்வொரு நிலையும்) சமமான அளவிலேயே அமைந்திருந்தது. அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது தொழுகை(யின் ஒவ்வொரு நிலையும் அவ்வாறே) சமமான அளவிலேயே அமைந்திருந்தது. உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (ஆட்சிக்கு) வந்த போது ஃபஜ்ர் தொழுகையை நீண்ட நேரம் தொழுவித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தொழு கையில்) “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறியதும் நீண்ட நேரம் நிலையில் நிற்பார்கள். எந்த அளவிற்கென்றால் நாங்கள் “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறந்து விட்டார்களோ’ என்று கூறுவோம். பிறகு சிர வணக்கம் (சஜ்தா) செய்வார்கள். இரு சிரவணக்கங்களுக்கிடையே (நீண்ட நேரம்) அமர்ந்திருப்பார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் மறந்துவிட்டார்களோ’ என்று நாங்கள் கூறுவோம். (நூல்: முஸ்லிம் : 813)
இவைதான் ருகூவிலும், ருகூவுக்குப் பின்னர் நிலைக்கு வந்த பின்னரும், சுஜூதுகளிலும், இரண்டு சுஜூதுகளுக்கு இடையிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடைபிடித்த அழகிய முன்மாதிரி. தொழும்போது ருகூவுக்குப் பின்னர் நிலையில் நிற்றல், சுஜூது, இரண்டு சுஜூதுகளுக்கிடையில் தாமதித்தல் இவை அனைத்தும் சரிசமமாக இருந்த தாகத்தான் இந்த ஹதீஃத்கள் கூறுகின்றன.
தொழும்போது தொழுகையின் ருகூஉ, சிறு நிலை, சுஜூது, சுஜூதுகளின் இடையிலுள்ள இருப்பு, இவற்றை உரிய நேரம் கொடுத்துச் செய்யாதவர்கள் திருடர்களே!
அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் :
ஒரு முறை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “திருட்டால் மிக மோசமான திருடன் தனது தொழுகையிலே திருடுபவன்தான்” என்றார்கள். அதற்கு (சஹாபாக்கள்) அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எவ்வாறு தனது தொழுகையில் திருட முடியும்? என்று கேட்க, அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவன் தொழுகையில் தனது ருகூஃவை யும், ஸுஜூதையும் சரிவரச் செய்ய மாட்டான் என்றார்கள். (நூல்கள்: அஹ்மது, தாரகுத்னீ, தப்ரானீ பக்கம் 90)
ஹனஃபிகளிடம் குறிப்பாக கபுரு வழிபாட்டினரிடம் பரேல்வி கொள்கையுடையோரிடம் இத்திருட்டு மிக அதிகமாகக் காணப்படுகிறது.
இந்த முஸ்லிம் சமுதாயத்தை இன்று பீடித்துள்ளப் பெரும் சாபக்கேடு என்ன தெரியுமா? நேரடியாகத் தெளிவாகச் சொல்லும் குர்ஆன் வசனங்களையும், சுன்னாவையும் எடுத்துக் காட்டினாலும் அவற்றைச் சிறிதும் சட்டை செய்யாமல், எங்கள் மத்ஹபில் இப்படித்தான் கூறப்பட்டுள்ளது. எங்கள் இமாம் இப்படித்தான் கூறியுள்ளார்; கலீஃபாக்கள் இப்படித்தான் செயல்பட்டுள்ளார்கள். நபிதோழர்கள் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள், எங்கள் அண்ணன் இப்படித்தான் விளக்கம் தந்துள்ளார் என்று 2:186, 7:3, 18:102-106, 59:7 குர்ஆன் வசனங்களை நிராகரித்து மனிதக் கருத்துக்களை, சுய விளக்கங்களை(2:159) தூக்கிப்பிடித்துச் சாதிக்கின்றனர். இச்செயல் 9:31 குர்ஆன் வசனம் கூறுவது போல் அவர்களைத் தங்களின் ரப்பாகக் கொண்டு அவர்களுக்கு வழிபடுவதாகும். கொடிய ஒஷிர்க்காகும். கிறித்தவர்களின் வழிகேட்டையே நன்கு அறிந்த நிலையில் பின்பற்றுகின்றனர்.
இவர்கள் நாளை ஆதம் அலைஹிஸ்ஸலாம் நரகிற்கென்று தேர்வு செய்யும் ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 999 பேரில் அடங்குவர். நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒருவரையொருவர் குற்றம் சாட்டி சபிப்பதை அல்குர்ஆன் 7:35-41, 33:66-68, 34:31, 37:27-33, 38:55-64, 40:47-50, 43:36-45 வசனங்கள் கட்டியம் கூறுகின்றன. இவற்றில் 40:47,48 வசனங்கள் பெருமையடிக்கும் இம்மவ்லவிகளையும், தலைவர்களையும் குறிப்பிட்டுக் கூறுகின்றன. எச்சரிக்கை!
இந்தக் குர்ஆனையும், இதற்கு முன்னுள்ளதையும் நிச்சயமாக நாங்கள் நம்பமாட்டோம் என்று நிராகரிக்கிறவர்கள் கூறுகிறார்கள். இந்த அநியாயக்காரர்கள் தங்கள் இறைவனிடம் நிறுத்தப்படும் போது நீர் பார்ப்பீரானால், அவர்களில் சிலர் சிலர் மீது பேச்சைத் திருப்பி, பலவீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமையைத் தேடிக் கொண்டிருந் தோரை நோக்கி, நீங்கள் இல்லாதிருந்திருப்பின், நிச்சயமாக நாங்கள் நம்பிக்கையாளர்களாகியிருப்போம் என்று கூறு வார்கள். (அல்குர்ஆன் 34:31)
பெருமை தேடிக் கொண்டிருந்தவர்கள் பலவீனர்களகாகக் கருதப்பட்டவர்களிடம், உங்களிடம் நேர்வழி வந்தபின், அதைவிட்டும் உங்களை நாங்களா தடுத்தோம்? அல்ல! நீங்கள் தாம் (நேர்வழி ஏற்காத) குற்றவாளிகளாக இருந்தீர்கள் என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 34:32)
அதற்குப் பலவீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், அப்படியல்ல! நாங்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும், அவனுக்கு இணைகளை நாங்கள் கற்பிப்பதற்கும் நீங்கள் எங்களுக்கு ஏவியபொழுது (அது) இரவிலும், பகலிலும் உள்ள (உங்களுடைய) சூழ்ச்சியாகும் என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒரு வருக்கொருவர்) மறைப்பார்கள். இன்னும், நிராகரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்குகளை மாட்டுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா? (அல்குர்ஆன் 34:33)
(அந்நாளில்) நிராகரித்தவர்கள் எங்கள் இறைவா! ஜின்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் எங்களை வழிகெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! அவ்விருவரும் தாழ்ந்தவர்களாக ஆவதற்கு நாங்கள் எங்களுடைய கால்களுக்குக் கீழ் ஆக்குவோம் எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன் 41:29)
அவர்கள் நரக நெருப்பில் தர்க்கம் செய்து கொண்டு, பலவீனர்கள் பெருமை அடித்துக் கொண்டிருந்தோரை நோக்கி, நிச்சயமாக நாங்கள் உங்க ளைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம்; எனவே, எங்களை விட்டும் இந்நெருப்பிலிருந்து ஒரு பகுதியையாவது நீங்கள் தடுத்து விடுபவர்களா? என்று அவர்கள் சொல்லும் வேளையை (நினைவூட்டு வீராக!) (அல்குர்ஆன் 40:47)
(அப்போது) நிச்சயமாக நாம் எல்லோருமே இதிலிருக்கிறோம். நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடி யார்களுக்கிடையில் தீர்ப்புச் செய்துவிட்டான் என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 40:48)
எவனொருவன் அளவற்ற அருளாளனின் நல்லுபதேசத்தைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை சாட்டி விடுகிறோம், அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான். (அல்குர்ஆன் 43:36)
இன்னும் அவர்கள் அவர்களை (நேரான) பாதையிலிருந்து தடுத்துவிடுவார்கள். ஆனாலும் தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். (அல்குர்ஆன் 43:37)
இறுதியாக நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்) ஆ! எனக்கிடையிலும் உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும் மேற்குத் திசைக்கும், இடையேயுள்ள தூரம் இருந்திருக்கவேண்டுமே! (எங்களை வழிகெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன் என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 43:38)
(அப்போது) நீங்கள் அநியாயம் செய்ததற்காக இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது. நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள் (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்) (அல்குர்ஆன் 43:39)
–அபூ அப்தில்லாஹ்