Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உடலையும் உள்ளத்தையும் உறுதிசெய்வோம்!

Posted on September 9, 2015 by admin

உடலையும் உள்ளத்தையும் உறுதிசெய்வோம்!

இந்தியாவில் ஏறக்குறைய 45 கோடி இளைஞர்கள் உள்ளனர். இவர்களில் நகர்ப்புறங்களில் 32 சதவீதம் பேர் மதுபானம் அருந்துகிறார்கள். 25 சதவீதம் பேர் புகை பிடிக்கிறார்கள். 4.5 சதவீதம் பேர் போதைப் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். தற்கொலை செய்து கொள்ளும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை கடந்த 25 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்துள்ளது.

இளம் பருவத்தினர் மரணங்களில் 72 சதவீதம் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படுகிறது.

இளையோர்களில் 40 சதவீதம் பேர் மனப்பதற்ற நோய்களுக்கு ஆளாகி உள்ளனர்.

இளம்பருவத்தினர் மத்தியில் பாலியல் நோய்களும் அதிகமாகப் பரவி வருகிறது. புதிய எய்ட்ஸ் நோயாளிகளில் 40 சதவீதம் பேர் 15 வயது முதல் 29 வயதுக்குள்பட்டவர்கள்.

இந்தியாவில் பாலியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவீதத்தினர் 16 வயது முதல் 20 வயதுக்குள்பட்டவர்கள். நேற்று கல்யாணம் இன்று விவாகரத்து என்பதெல்லாம் மேலை நாடுகளில் சர்வசாதாரணம். ஆனால் இப்பொழுது நம் இந்திய இளைஞர் மத்தியிலும் விவாகரத்து வழக்குகள் அதிகமாகிக் கொண்டு வருகிறது.

தலைநகர் தில்லியில் ஆண்டுக்கு 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை விவாகரத்து வழக்குகள் குடும்பநல நீதிமன்றங்களில் பதிவாகின்றன. அடுத்து மும்பை மற்றும் பெங்களூர் இடம் பெற்றுள்ளது. இங்கு ஆண்டுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விவாகரத்து வழக்குகள் பதிவாகி உள்ளன. பாரம்பரியத்துக்குப் பெயர் பெற்ற கொல்கத்தா மற்றும் சென்னையில்கூட விவாகரத்து வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளில் 200 சதவீதம் அதிகரித்துள்ளது.

விவசாய மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணாவில் 150 சதவீதம் அதிகரித்துள்ளது. கேரளத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்றங்கள் மூலம் 350 சதவீதம் விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் பதிவாகாத விவாகரத்துகள் எத்தனை எத்தனையோ.

மேலும் சினிமா, தொலைக்காட்சி, செல்லிட பேசி, இணையதளம் போன்றவை, இளையோரைக் குறிவைத்து சிதைத்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக உளவியல் ஆராய்ச்சியாளர்கள், மனவியல் வல்லுநர்கள் ஆய்வின்படி இன்றைய இளம் தலைமுறையினர் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் கீழான செயல்களான வெறுப்பு, காழ்ப்புணர்வு, பேராசை, சினம், உயர்வு தாழ்வு மனப்பான்மை. வஞ்சம், போதைப்பழக்கம் இது போன்ற பல எதிர்மறை இயல்புகளை இயற்கையான இயல்புகளாக நினைத்து தன்னைத்தானே அழித்துக்கொண்டு வருகிறார்கள்.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் புதுமைமயமாக்கல் தலைவிரித்தாடுகிற இன்றைய சூழ்நிலையில் நல்ல இளையோரை உருவாக்க முயற்சி எடுக்கவில்லை என்றால், இந்தியாவின் எதிர்காலத் தூண்கள், வருங்காலத் தலைவர்கள் என்று வார்த்தைகளால் சித்திரிக்கப்படுகின்ற இளையோரின் நிகழ்காலமும், எதிர்காலமும் சிதைக்கப்படும்.

விரிவடைதல் தான் வாழ்க்கை, சுருங்குதல் தான் மரணம் என்றார் சுவாமி விவேகானந்தர். மனிதன் வெறும் உடலால் மட்டும் வாழ்பவனன்று. மானுட அமைப்பில் உடலைவிட முக்கியமானது உள்ளம். உள்ளத்தை வளர்ப்பதையும் உள்ளத்தால் வாழ்வதையுமே விரிவடைதல் என்றார்.

இன்றைய இளையோரை அன்பால், அறிவால், பண்பால், பாசத்தால், கருணையால், வலிமையால், வாய்மையால், ஊக்கத்தால், தேசபக்தியால், எளிய வாழ்க்கையால், உயரிய சிந்தனையால், தியாக உணர்வால், நேர்மையால், உண்மையால், ஒழுக்கத்தால், உலகளாவிய உணர்வால் விரிவடையச் செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பிறர்மீதான அன்பால் விரிவடையச்செய்ய வேண்டும். இது போன்ற நல்ல பண்புகளிலும், செயல்களிலும், செயல்பாடுகளிலும் இளையோரைப் பயணிக்கச் செய்ய வேண்டும் என்றால், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைச் சிறுவயது முதலே முறையான, ஆரோக்கியமான, ஆன்மிகப் பயிற்சி முறைகளைக் கற்றுக் கொடுத்து தெய்வபக்தியில் பிள்ளைகளை வளர்க்க வேண்டும், வார்த்தெடுக்க வேண்டும்.

இறைபக்தியில் வளர்த்தால்தான் தன்னிடமுள்ள ஆன்மாவை உணர முடியும். ஆன்மாவை உணர்ந்தால்தான் மனிதன் மனிதனாக வாழ முயற்சிப்பான். குருடர் குருடருக்கு வழிகாட்ட இயலாது. எனவே, முதலில் பெற்றோர் பெற்றோராக இருக்க வேண்டும். தன் பிள்ளைகளை நன்மக்களாக ஆளாக்குவதும், பாழாக்குவதும் பெற்றோரையே சாரும். இளையோர் குற்றம் செய்து தண்டனை வழங்கும்போது அவர் பெற்றோருக்கும் சிறிதளவு தண்டனை வழங்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் தன் பிள்ளைகளை நன்முறையில் வளர்க்க அவர்கள் முயற்சிப்பார்கள். பெற்றோர்தான் அவரவர் பிள்ளைகளுக்குப் பொறுப்பு.

கர்ப்பிணிப் பெண்களை அரசு சுகாதாரப் பணியாளர்கள் கண்காணித்து நல்ல உடல் தகுதியுள்ள பிள்ளைகளைப் பெற்றெடுக்க உதவுவது போல வயிற்றில் குழந்தை வளரும்போது நல்ல நேர்மறையான எண்ணங்களில் வளர கர்ப்பிணிப் பெண்களுக்கு மனப்பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் எதிர்காலம் வகுப்பறையில் உருவாக்கப்படுகிறது என்பதற்கிணங்க பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு முறையான யோகாசனம், மூச்சுப்பயிற்சி மற்றும் எந்த மதத்தினரின் மனதையும் புண்படுத்திவிடாமல் பொதுவான தியான முறைகளைக் கற்றுக்கொடுத்து அவர்களின் உடலையும், உள்ளத்தையும் உறுதி செய்து அதன்மூலம் மனதில் உறைந்து கிடக்கும் பேராற்றல்களை வெளிக்கொணர்ந்து தன் வளர்ச்சிக்கும், பிறர் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எந்த நாடு மனித வளத்தை முழுமையாக பயன்படுத்தத் திட்டம் தீட்டுகிறதோ அந்த நாடே உலகம் போற்றும் நாடாகத் திகழும் என்கிற பொருளாதாரத் தத்துவத்தின்படி ஆரோக்கியமான திட்டங்களைத் தீட்டி, அவற்றை முறையாகச் செயல்படுத்தி இளையோரைப் பக்குவப்படுத்துவோம்!

source: http://zubairsiraji.com/?p=2066

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 28 = 32

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb