பெண்கள் நிறம் மட்டுமே வேறு வேறு, சுவை ஒன்று தானே!
ஒரு நாட்டு மன்னன் தன் அரன்மனையில் நாட்டியம் ஆடவந்த பெண்ணின் அழகில் மயங்கி அவளை அடைய ஆசைப்பட்டான்.
அப்பெண்னோ மன்னா நாங்கள் நடனம் ஆடுவது எங்கள் குலதொழில் வேண்டாம்…. மன்னா நாங்கள் ஆண்டவனுக்கு தொண்டு செய்பவர்கள் என்றாள்.
மன்னவனோ ஆண்டவனும் அரசனும் ஒன்று தான்.(!!!!) நீ என் இச்சைக்கு இனங்கதான் வேண்டும்… வா நான் இந்த நாட்டிற்கே உன்னை அரசியாக்குகிறேன் என்றான்.
அப்பெண் எவ்வளவோ வாதாடியும் விடவில்லை மன்னன்யிடம் கடைசியில் ஒப்புக் கொண்டாள் அப்பெண்!
சரி மன்னா நாளை தாங்கள் என் வீட்டிற்கு வாருங்கள் விருந்து வைக்கிறேன், அமுதுண்டு பிறகு சல்லாபிக்களாம் என்றாள்.
மன்னனும் சென்றான். அப்பெண் மன்னனுக்கு 16 வகை கலரில் இனிப்பு வழங்கினாள்.
மன்னன் எனக்கு சாப்பிட பொருமை இல்லை, நீயே ஊட்டி விடு என்று கூறினான்.
அப்பெண்ணும் ஊட்டி விட்டாள். மன்னன் சுவைத்தான். விருத்து முடிந்தது.
மன்னனிடம் கேட்டாள்; “மன்னா 16 வகையான இனிப்பு சுவைத்தீர்களே ஒவ்ஒன்றின் சுவை எப்படி இருந்தது மன்னா?”
மன்னன் “நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தான்” என்றான்.
பெண்; “மன்னா நாங்களும் அப்படிதான் பெண்கள் நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தானே” என்றாள்.
“தாயே என் அறிவுக்கண் திறிந்தவளே” என்றான் மன்னன்.
இது கதையாக இருந்தாலும் உண்மை அதுதானே!
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். உடனே தம் மனைவி ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று, தம் தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர் வெளியே வந்து, “பெண் எதிரில் வந்தால் ஷைத்தானின் வடிவில் எதிர்கொள்கிறாள். எனவே, நீங்கள் ஒரு பெண்ணைக் கண்டு மயங்கினால் தம் மனைவியிடம் செல்லட்டும். அவளிடம் இருப்பதுதான் இவளிடமும் இருக்கிறது” என்றார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூது, அஹ்மத்)
www.nidur.info