இறைவங்கியில் சேமிப்போம்!
ஒரு மாந்தோப்பு. மாங்காய் காய்த்துக் தொங்கிக் கொண்டிருக்கிறது. யார் வேண்டுமானாலும் பறித்துக் கொள்ளலாம் என்று சொன்னால்ஞ் இப்போது வேண்டாம்.. அடுத்த பருவத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றா சொல்லுவோம்? நிச்சயம் சொல்ல மாட்டோம்!
மாங்காய் தொங்கிய இடத்தில் 1000 ரூபாய் நோட்டுக்கள் தொங்குகின்றன. அவற்றை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றால்.. அப்போது என்னவாகும்?
ஒருவரை ஒருவர் முண்டியத்துக் கொள்ளும் அளவுக்கு தள்ளு, முள்ளு ஏற்படுவது இயல்புதான்!
இத்தகைய நன்மைகளை முழுமையாக பெற நபிகளார் நான்கு விசயங்களை அறிவுறுத்துகிறார்: 1. இல்லை இறைவன் ஒருவனைத் தவிர என்னும் சொல்லை அதிகமாக உச்சரிப்பது. 2. இறைவனிடம் உள்ளமுருக பாவமன்னிப்பு கோருவது. 3. சொர்க்கத்தை தந்தருளும்படி யாசிப்பது. 4. நரகத்திலிருந்து காத்தருளும்படி மன்றாடுவது.
மனித வாழ்வின் அவலங்களை அலசிப் பார்க்க இறைவனின் நல்லதொரு ஏற்பாடு இது. அனாதைகள், ஏழை, எளியோர், சொந்த-பந்தங்கள் என தன்னைச் சுற்றியிருக்கும் சமுதாயத்தை பொருளியல் வடிவில் கைத்தூக்கிவிட கிடைக்கும் ஓர் அரிய வாய்ப்பு.
ஆத்மாவை கவ்வியுள்ள உலகாசை என்னும் இருளை விலக்க வேண்டும் என்றால், மனிதன் அறப்பணிகளில் அதிகமதிகம் செலவு செய்ய வேண்டும். தேவையுள்ளோர் துயர் துடைக்க பாடுபட வேண்டும்.
கஞ்சன் என்னதான் தொழுதாலும், எத்தனை நாள் பசித்திருந்து நோன்பு நோற்றாலும், விழித்திருந்து திருமறையை ஓதினாலும் அவனுடைய ஆத்மாவின் இருள் விலகாது.
செல்வந்தர்கள் ‘ஜகாத்’ என்னும் சமூக நலநிதியைத் சரியாக அதற்கான உச்சவரம்பை கணக்கிட்டு தந்திட வேண்டும். அதன் வரம்புக்கு உட்படாதவரோ முடிந்தளவு தான, தர்மங்களில் அதிகளவு ஈடுபட வேண்டும்.
“இறைவன் தன் அருளிலிருந்து தங்களுக்கு வழங்கியுள்ளவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் செய்கிறார்களோ, அவர்கள் அதனை தமக்கு நல்லது என்று எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு மிகவும் கெட்டதாகும். தமது கஞ்சத்தனத்தின் மூலம் அவர்கள் சேமித்து வைத்ததெல்லாம் மறுமை நாளில் அவர்களின் கழுத்தில் விலங்காகப் பூட்டப்பட்டு அவர்களின் பேரழிவுக்கு காரணமாகிவிடும்” – என்கிறது திருக்குர்ஆன்.
தேவையுள்ளோருக்கு செல்வத்தை செலவு செய்வதில் இறைநம்பிக்கையாளனின் பண்பு உலகவிரும்பிகளைவிட மாறுபாடானது.
உலகவிரும்பி, அறப்பணிகளில் செலவு செய்தால் தனது செல்வம் குறைந்துவிடும் என்று எண்ணுகின்றான். ஆனால், இறைநம்பிக்கை கொண்டவனோ அப்படிப்பட்ட செலவை இறைவனிடத்தில் தனது நாளைய சேமிப்பாக கருதுகிறான்.
பயிரிடப்படும் ஒரு தானிய விதை, ஏழு கதிர்களாக முளைத்து ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியமணிகள் உருவாகும் உவமானம் அது.
-இக்வான் அமீர்
source: http://www.samooganeethi.org/