Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆபத்துக்கு உதவுவது யார்?

Posted on August 29, 2015 by admin

ஆபத்துக்கு உதவுவது யார்?

சொற்ப கால வாழ்க்கை !
மாய உலகம் !
மயக்கும் ஷைத்தான்!
ஷைத்தானின் வலையில் விழுந்து விடாதீர்கள்!
அல்லாஹ்வை அஞ்சி வாழ்வோம்!

சொற்பக் கால வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் நமக்கு ரொம்ப முக்கியம் நல்ல [சாலிஹான ] அமல்கள் செய்வது, அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை அடைவது . அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வழிமுறைகளை பின்பற்றி வாழ்வது. இவைகள் தான் ரொம்ப முக்கியம். இவைகள் தான் மறுமை நாளில் நமக்கு பலன் தரும்.

ஓர் ஊரில் ஒரு வாலிபர் ஒரு பேணுதலான பெரிய மனிதருடன் தொடர்பு வைத்து பல நல்ல விஷயங்களை அப்பெரியார் மூலம் தெரிந்து கொண்டார். மேலும் மார்க்க விஷயங்களில் மிக பேணுதலாகவும் இருந்து வந்தார். அந்த வாலிபர் இவ்வாறு அப்பெரியாருடன் தொடர்பு வைப்பதும் மார்க்க விஷயத்தில் பேணுதலாக இருந்து வருவதும் அவ்வாலிபரின் தந்தைக்கு பிடிக்கவில்லை . எனவே அப்பெரியாரிடம் தொடர்பு வைப்பதை அத்தந்தைத் தடுத்துவிட்டார்.

[பெரும்பாலும் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை உலக கல்வியை தான் குறிகோளாக வைத்து ஆர்வம் ஊட்டுவார்கள். ”நன்றாக படி அப்படி படித்தான் இன்ன வேலை கிடைக்கும் இப்படி இப்படி ஆகலாம் நல்ல சம்பாதிக்கலாம்” என்று கூறுவார்கள் .தம் பிள்ளைகள் தப்லிக் ஜமாஅத் ஈடுப்பாடு இருந்தால் பெற்றோர்களுக்கு பயம் .ஏன் இப்படி அவர்கள் நினைக்கிறார்கள் என்று புரியவில்லை..? உலக கல்வி அவசியம்! மார்க்க கல்வி ரொம்ப ரொம்ப அவசியம்! ]

இந்த செய்தியை அப்பெரியாரிடம் சென்று அவ்வாலிபர் முறையிட்டார் . இதை செவியுற்ற அப்பெரியார் அவ்வாலிபரிடம் ” நீ வீட்டிற்குச் சென்று உடல் நிலை சரியில்லை என்று கூறி படுத்துக்கொள். பிறகு கண்களை நன்றாக மூடிக் கொண்டு சுயநிலை இழந்ததைப் போன்று ஆகிவிடு. உன்னை எழுப்புவதற்கு யார் முயற்சித்தாலும் நீ விழிக்காமல் உஷார் இல்லாதவனைப் போன்று இருந்து விடு” என்று சொல்லி அனுப்பினார்.

அவ்வாலிபர் வீட்டிற்குச் சென்று அப்பெரியார் சொன்னப்படி நடந்து கொண்டார். அவ்வாளிபரின் உஷார் இல்லாத நிலையைக் கண்டு அவரின் பெற்றோர்களும் உறவினர்களும் பயந்து அப்பெரியாரை அழைத்து வரும்படி ஆளுனுப்பினார்கள் . எனவே அப்பெரியார் அவ்வாலிபரின் வீட்டிற்கு வந்து அவரின் அருகில் அமர்ந்து கொண்டார். சிறிது நேரம் கழித்து பிறகு அங்கு குழுமியிருந்த வீட்டாரிடம் ” இவ்வாலிபர் உயிரோடிருக்க வேண்டுமானால் உங்களில் யாராவது ஒருவர் இப்பொழுது மரணமாக தயாராக வேண்டும். ” என்று அப்பெரியார் கூறினார்.

இதை செவியுற்ற அவ்வீட்டினரில் எவருமே மரணமாக முன்வரவில்லை. ”உங்களில் மிக வயதடைந்த மூதாட்டியாவது தயாராகுங்கள்” என்று கூற, எந்த மூதாட்டியும் முன்வராமல் ‘வாலிபர் மரணம் அடைந்தால் பரவாயில்லை” என்று வீட்டினர் அனைவரும் கூறி விட்டனர்.

பிறகு அப்பெரியார் எதோ சிகிச்சை செய்வதைப் போன்று பல காரியங்களைக் கையாண்டார். நீண்ட நேரம் கழித்து வாலிபரும் உஷாராகி விட்டார். பிறகு அவ்வாலிபரிடம் ”இதுதான் துன்யா” [உலகம்] மரணமடைந்த பிறகு யாரும் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். என்பதை இந்த சம்பவத்தின் மூலம் தெரிந்து கொண்டு உன்னுடைய மறுமை வாழ்வின் வெற்றிக்கு நீதான் முயற்சிக்க வேண்டும் என்பதை நன்றாக மனதில் பதியவை” என்று அப்பெரியார் கூறினார்.

தீனுடைய முன்னேற்றத்திற்கு யார் தடை செய்தாலும் கேட்க கூடாது என்பதை உணர்ந்து அந்த வாலிபர் வழக்கம் போல் அப்பெரியாரிடம் தொடர்பு வைத்து முன்பை விட மிகவும் பேணுதலான வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

படிப்பினை.. *** தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாவரின் நட்பும் தொடர்பும் இவ்வுலகத்துடன் முடிவடைந்து விடும் . ஆனால் அல்லாஹ்வின் நட்பும் தொடர்பும் தான் என்றென்றும் நிலையானது என்பதை மேற்கண்ட சம்பவத்திலிருந்து புரிந்து கொள்கின்றோம்.

யாரெல்லாம் கவலைப்படுவார்கள் ?

ஒரு சந்தர்ப்பத்தில் சிலர் கால் நடையாக பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். அவ்வாறு செல்லும் பொழுது நாடு இரவு , இருளான நேரம். அப்பொழுது ஒரு சம்பவம் வந்தது. அதாவது , ”இங்கு இருக்கும் குவியல்களில் யாரெல்லாம் எடுத்துக் கொள்வார்களோ அவர்களும் , எடுத்துக் கொள்ளாதவர்களும் கவலைப்படும்படி ஏற்படும்” எடுத்துக் கொண்டால்ம் கவலை, எடுத்துக் கொள்ளாவிட்டாலும் கவலை. அப்பிரயாணிகளுக்கு என்ன செய்வதுதென்று புரியவில்லை? எனினும் அவர்களின் சிலர் அக்குவியல்களிருந்து சிலதை எடுத்துக் கொண்டார்கள், வேறு சிலர் அறவே எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் அவர்கள் அனைவரும் பிரயாணத்தைத் தொடர்ந்தனர்.

நீண்ட தூதரம் சென்ற பிறகு குவியல்களில் எடுத்துச் சென்றதைப் பார்த்த பொழுது என்ன ஆச்சிரியம்! அவைகள் அனைத்திலும் , முத்து, மரகதம், மாணிக்கம், வைடூரியம் ஆகியவைகள் இருந்தன . இவைகளைப் பார்த்ததும், அவைகளை எடுத்துச் சென்றவர்கள் இதைவிட அதிகமாக எடுத்துக் கொள்ளவில்லையே என்றும் அவைகளை எடுத்துச் செல்லாதவர்கள் நாம் சிறிதளவு கூட எடுத்துக் கொள்ள வில்லையே என்றும் பெரிதும் கவலையும் வேதனையும் அடைந்தார்கள்.

படிப்பினை :

இதைப் போன்றுதான் இவ்வுலகில் இருக்கும் பொழுது நற்செயல்கள் புரிந்தவர்கள் இதைவிட அதிகமாக நற்செயல்கள் புரியவில்லையே என்றும்,, அறவே நற்செயல்கள் புரியாதவர்கள் நாம் சிறிதளவு கூட நற்செயல்கள் புரியவில்லையே என்றும் மறுமை நாளில் கவலையும் வேதனையும் அடைவார்கள். எனவே இவ்வுலகில் இருக்கும்பொழுதே நமக்கு எவ்வளவு முடியுமோ அந்தளவு நற்செயல்கள் புரிய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் மறுமையில் நமக்கு மாபெரும் கவலையும், வேதனையும் ஏற்படும்.

என்ன அன்பு சகோதர/ சகோதரிகளே! இப்பொழுது உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று நாம் நம்புகிறோம்! நாம் செய்த அனைத்து நற்செயல்களையும் . நாம் பாதுக்காக வேண்டும் . அதாவது பலன் இல்லாமல் ஆகிவிடக் கூடாது. அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக! [ ஆமீன்]

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

-சத்திய பாதை இஸ்லாம்

source: http://islam-bdmhaja.blogspot.in/2015/08/good-lesson.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

32 − = 23

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb