Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

‘குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்’

Posted on August 25, 2015 by admin

‘குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்’

  Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)  

ஈராக் நாட்டின் அமெரிக்க கூட்டுப் படையின் யுத்தம் 2003 மார்ச் மாதத்திலிருந்து 2003 மே மாதம் வரை நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்தக் கூட்டுப் படையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, போலந்து போன்ற பங்கேற்றன. அதன் பின்பு ஈராக்கினை சீறாக்குகின்றோம் என்ற நடவடிக்கையில் 36 நட்பு நாடுகள் பங்கேற்றன.

ஈராக் யுத்தத்திற்கு முக்கிய காரண, காரிய கர்த்தாக்கள் அமெரிக்காவின் குடியரசு கட்சியின் ஜனாதிபதி ஜார்ஜு புஷ்சும், இங்லாந்து நாட்டின் தொழிலாளர் கட்சி பிரதமர் டோனி பிளேயர் ஆகும். அவர்கள் இருவரும் ஐ.நா. உத்திரவினையும் மீறி, தன்னிச்சையாக போர் தொடங்கும் முன்பு அவர்கள் ஏன் போர் தொடுக்குகின்றோம் என்ற கீழ்கண்ட காரணங்களைச் சொன்னார்கள்:

1) ஈராக் உயிர் கொல்லி ஆயுதங்களை கைப்பற்றி, அணு ஆயுதங்கள் ஒசாமா பின்லேடன், ‘அழகடா’ இயக்கத்தின் கைகளில் சிக்காமல் செய்யவும்.

2) தீவிரவாதத்திற்கு அதிபர் சதாம் ஹுசைன் ஆதரவினை முறியடிக்கவும்,

3) ஈராக் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவும் எடுக்கப்படுகிற நடவடிக்கையே! என்றும் நொண்டிச் சாக்கினை கூறினார்கள். ஆனால் ஐரோப்பாவின் நேட்டோ கூட்டுப் படையின் கமாண்டரும், மற்றும் அமெரிக்க கூட்டுப் படையின் கூடுதல் கமாண்டர் ஜெனரலான வெஸ்லி கிளார்க் எழுதியிருக்கும் புத்தகமான, ‘வின்னிங் மாடர்ன் வார்ஸ்'(நவீன யுத்தங்களில் வெற்றியடைவது) என்பதில் முதலில் ஈராக் அதன் பின்னர் சிரியா, லெபனான், லிபியா, ஈரான், சோமாலியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளை படிப்படியாக ஐந்து ஆண்டுகளில் கைப்பற்றுவது தான் நோக்கம் என்று கூறியிருக்கின்றார்.

போர் தொடங்குவதிற்கு முன்னர் அமெரிக்காவில் சி பி எஸ் நிறுவனம் ஒரு சர்வே நடத்தியது. அதில் 64 சத வீத மக்கள் ஈராக் மீத தொடுக்க ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் 63 சதவீத மக்கள் ஈராக்கின் மீது போர் தொடுக்குமுன் பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்றனர். ஏனன்றால் ஈராக் யுத்தம் ஈராக் மக்கள் மீது மேலும் தீவிரவாதத்தினைப் புகுத்தும் என்றார்கள்.

அமெரிக்காவின் நெருங்கிய தோழமை நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, நீயுசிலாந்து போன்ற நாடுகள் போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் யுத்தம் தொடங்குவதிற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிருந்து போருக்கு எதிரான கோசங்கள், ஆர்பாட்டங்கள் கிளம்பின. அந்த ஆர்ப்பட்டங்களுக்களெல்லாம் மணிமகுடமாக ரோம் நகரில் 30 லட்சம் மக்கள் நடத்திய பேரணி கின்னஸ் வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடித்தது என்றால் பாருங்களேன். ஆனால் அவையெல்லாம் புஸ்சுக்கும், டோனி பிளேயருக்கும் செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தது. அவர்கள் என்ன சொல்ல நான்கேட்க, போர் தொடுத்தே ஆவேன் என்று தனது தோழன் டோனி பிளேயருடன் சேர்ந்து ஈராக்கில் போர் தொடுத்தார்.

சகோதரர்களே, மேலை நாடுகளின் யுத்த தந்திரங்கள் எதற்கு உதவுகின்றன என்றால் பொருளாதார ஆதாயம் பெற முடியும் என்பதால் தான். அது எப்படி என்று நீங்கள் கேட்கலாம். அவை பின் வருமாறு:

1) உலகம் அமைதியாக இருக்குமேயானால் ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூட வேண்டியிருக்கும். யுத்தங்கள் நடந்தால் துப்பாக்கிகள், குண்டுகள், ஏவுகணைகள், டாங்கிகள், பீரங்கிகள், யுத்த விமானங்கள், கப்பல்கள் ஆகியவை தயாரிக்கவும், பழைய ஆயுதங்களைப் புதுப்பிக்கவும் உதவி செய்யும்.

2) எண்ணெய் வளங்களிருந்து, விலை மதிக்க முடியா செல்வங்களை அபகரிக்க முடியும்.

3) பொம்மை ஆட்சியாளர்களை தங்களுக்கு ஆதரவாக நியமிக்க முடியும் இதனையே தான் யூதர்கள் பழங்கால புத்தகமான, செர்கி நிலஸ், ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்து தமிழிலில் ‘யூத பயங்கர வாதிகளின் அரசியல் இரகசிய அறிக்கையும்’ மொழி பெயர்த்த ஆரூர் சலீம் புத்தகமும் சொல்கிறது.

ஈராக் யுத்தத்திற்குப் பின்பு நடந்தது என்னென்ன நடந்தது என்று தூதரக அதிகாரி ‘பீட்டர் டபிள்யு கால்ப்ரைத்’ கீழ்காண்டவாறு கூறுகின்றார்:

1) புலி வருது, புலி வருது என்று உயிர்கொல்லி ஆயுதம் இருக்கின்றது என்று பொய்யான கூக்கிரல் போட்டு, பூச்சாண்டிக் காட்டி, சதாம் ஹுசைனை பதவியினை விட்டு இறக்கியதோடு மட்டுமல்லாது, அவரை தூக்கு மேடைக்கும் ஏற்ற வழி விட்டதும், ஈரான் மற்றும் வாட கொரியா போன்ற நாடுகள் அணு ஆயுதங்கள் தயாரிக்கவும் வழி வகுத்தது.

2) தீவிர வாத ஒழிப்புக் கோசம் பல தீவிரவாத கும்பல் கிளம்பி நாள் தோறும் ஒரு குண்டு வெடிப்பு மூலம் ஈராக் சின்னா பின்னமானது.

3) இஸ்ரேயிலுக்கு பாதுகாப்பு நடவடிக்கை என்ற கோசம் போய் நாள் தோறும் இஸ்ரேயலுக்கு ஈரான், சிரியா, ஹோஸ்புல்லா சியா இயக்கங்களிருந்து பயமுறுத்தல் வந்து கொண்டே இருக்கின்றது.

4) அமெரிக்க ராணுவ பலத்தினை நிரூபிக்க தொடுக்கப்பட்ட யுத்தம், அமெரிக்க ராணுவத்திற்கும், நிர்வாகத்திற்கும் பின்னடைவு ஏற்பட்டது.

5) குர்திஸ் இனத்தினர் தனி நாடு ஆதரவு அமெரிக்கா தெரிவித்ததால் அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கியின் பகையினை சம்பாதிக்க நேர்ந்தது. ஈராக் யுத்தமானது 36,000 அமெரிக்க கூட்டுப் படை உயிர்களையும், 500000 ஈராக் மக்கள் உயிரையும் பலி கொண்டது. ஜார்ஜ் புஷ் அமெரிக்க போர் தொடுத்து 10 ஆண்டு நினைவு நாளில், “ஈராக் போருக்கு மன்னிப்புக் கேட்பதாக” ஒரு செய்தியினை அமெரிக்க பத்திரிக்கையின் பேஸ் புத்தகத்தில் வெளியிட்டதினை பார்த்து உலகமே அது உண்மையா என்று கேள்வி கேட்டது. ஆனால் அந்த செய்தி ஒரு ஏப்ரல் பூல் செய்தி என்று பின்பு தெரிய வந்தது. உண்மையில் அந்த நிகழ்ச்சியில் பேசும்போது தான் ஈராக் போருக்கு வருந்தவில்லை என்று சொல்லியிருக்கின்றார். அதே போலதான் டோனி பிளேயரும் தான் போருக்காக வருந்தவில்லை என்றார்.

போருக்குப் பின்னால் நடந்த அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தேர்தலில் ஜார்ஜ் புஷ் குடியரசு கட்சியும், டோனி பிளேயர் லேபர் கட்சியும் தோற்றது இறைவன் கொடுத்த தண்டனையாகும் என்றால் மிகையாகாது.

தற்போது இங்கிலாந்து லேபர் கட்சி தலைவர் பதிவிற்கு தேர்தல் நடக்கின்றது. அதில் போட்டிபோடும் ‘கார்பின்’ என்பவர் தன்னை தலைவராக தேர்ந்தெடுத்தால் முதல் வேலையாக ஈராக் யுத்தத்திற்கு இங்கிலாந்து துணை போனதிற்காக பகிரங்க மன்னிப்பு கேட்பேன் என்று அறை கூவல் விட்டுள்ளார். அதற்கான காரணத்தினையும் சொல்லும்போது, ‘ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் மீது மக்கள் உயிர்கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக பொய்யான குற்றச் சாட்டைக் கூறி போர் தொடுத்து ஈராக் மக்களுக்க எண்ணற்ற துன்பம் விளைவித்ததற்காக தான் மன்னிப்புக் கேட்பேன்’ என்கிறார்.

அவருக்குள்ள குற்ற உணர்வு, நியாயமற்ற ஈராக் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்க மற்றும் அதனுடன் போர் தொடுத்த அல்லது அதற்கு துணை போன நாடுகளின் தலைவர்களுக்கு வந்தால் ‘கண் கெட்டதும் சூரிய நமஸ்காரம் ‘போன்ற மன ஆறுதல் செயலாக இருக்கலாம். அதே போன்று தான் குஜராத் இனக் கலவரத்தில் 2000 பேருக்கு மேல் கொல்லப் பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லுவது போல பகிரங்க மன்னிப்புக் கேட்டால் ‘கல்லிலும் ஈரமுள்ள நெஞ்சு’ என்று சொல்லலாம். இல்லையென்றால் ஈரமே இல்லாத வெறும் கட்டாந்தரை என்று தான் பெயரிட வேண்டும்.

அல்குர்ஆன் அத்தியாயம் 9 அத் தவ்பாவில், ‘இறைவன் மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறிவான் என்று கூறப் பட்டுள்ளது. ஆகவே நீங்கள் ‘பூனை கண்ணை மூடிக் கொண்டு திருட்டுத் தனமாக பாலைக் குடித்தால்’ வீட்டு சொந்தக்காரருக்கு தெரியாமல் இருக்கப் போவதில்லை. அதே போன்று தான் குற்றங்கள் செய்வது மனித இயல்பு. உங்கள் குற்றங்களை அல்லாஹ் நன்கறிவான். உங்களின் குற்றங்களால் பாதிக்கப் பட்ட மக்களிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்பதினால் உங்கள் மணிமகுடம் தரையில் விழுந்து விடுவதில்லை. அதனால் பாதிக்கப் பட்ட மக்களின் புண் ஆறிவிடாது. மாறாக வெந்த புண்ணிற்கு சற்று தைலம் தடவிய இதமாகவாவது இருக்குமல்லவா?

AP,Mohamed Ali

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

44 + = 53

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb