Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்!

Posted on August 25, 2015 by admin

இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்!

இன்று இஸ்லாத்தின் எதிரிகளும் அவர்களோடு சேர்ந்தவர்களும் பெண்ணின் சிறப்பைப் போக்கி அவளுடைய உரிமைகளைப் பறிக்க விரும்புகின்றனர்.

இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சிறப்பு, கண்ணியம், பாதுகாப்பு முதலியவற்றை இறைமறுப்பாளர்களும் நயவஞ்சகர்களும் விரும்புவதில்லை; அவர்கள் பெண்ணினம் மதிக்கப்படுவதை வெறுக்கின்றனர். அவர்களின் இதயங்களை பகைமை எனும் நோய் பிடித்துக் கொண்டுள்ளது.

தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொண்ட தன் பின் மிருகத்தனமான இச்சையுள்ளவர்களையும் பலவீன முஸ்லிம்களையும் வேட்டையாடுவதற்கான ஒரு வேட்டைக் கருவியாகவும் இதனால் அவர்கள் பெண்களை ஒரு அழகுபொருளாகவும், தங்கள் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் கருவிகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அடிமைகளை விடவும் கேவலமாக நடத்துபவர்களும் உள்ளனர்.

”தங்கள் (மனோ)இச்சைகளைப் பின் பற்றி நடப் பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலுமாய்ச் சாய்ந்து விட வேண்டும் என விரும்புகிறார்கள்.” (அல்குர்ஆன் 4:27)

இதயத்தில் இச்சை எனும் நோயுள்ள சில முஸ்லிம்கள்கூட, பெண்களின் அழகு மற்றும் அங்கங்களை ரசிப்பதற்கே வழிவகுக்கின்றனர். பெண்களை ஒரு கண்காட்சிப் பொருளாகவே இவர்கள் மதிக்கின்றனர். இது ஷைத்தானின் தூண்டுதல் என்பதை மறந்து செயல்படுகின்றனர். தங்களின் கண்களுக்கு முன்பாக பெண்கள் எப்போதும் மேனி திறந்தவர்களாக இருக்கவேண்டும் அந்த அழகை ரசிக்கவேண்டும் என விரும்புகின்றனர். பெண்களுக்கு உரிமைவாங்கித் தரப்போவதாகக் கூறிக்கொள்ளும் இவர்கள், ஆண்களைப் போன்று பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டும். அவர்களுக்குச் சமமாக வேலைகளில் பங்கெடுக்க வேண்டும்,

மருத்துவமனைகளில் ஆண்களுக்கு பணி விடை, உதவி செய்கின்ற பணிப்பெண்களாக இருக்க வேண்டும். விமானங்களில் இவர்கள் பணிப்பெண்களாக நியமிக்கப்பட வேண்டும். கல்விச்சாலைகளில் இவர்கள் ஆண்களுடன் ஒன்றிணைந்து படிக்கும் மாணவிகளா கவும், ஆசிரியைகளாகவும் இருக்க வேண்டும்,

நாடகங்களில் நடிகைகளாக இருக்கவேண்டும். இன்னிசைக் கச்சேரிகளில் பங்கு கொண்டு பாடவேண்டும். செய்தி வாசிக்கிறோம் என்ற பெயரில் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் வலம்வந்து ஆண்களை மகிழ்விக்க வேண்டும் என்றெல்லாம் விரும்புகின்றனர்.

மஞ்சள் பத்திரிக்கைகள் பெண்களின் நிர்வாணப் படங்களை வெளியிட்டு விற்பனையை அதிகரித்து செல்வங்கள் சேகரித்து வருகின்றனர். வியாபாரிகளில் சிலர் தங்களின் வணிகஸ்தலங்களிலும் தொழில் நிறுவனங்களிலும் மக்களைக் கவர்வதற்காகவும், விற்பனையை அதிகரித்துக் கொள்வதற்காகவும் பெண்களின் ஆபாசப்படங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஜவுளிக்கடைகளில் ‘ஷோகேஸ்’ பொம்மைகளைக்கூட அழகான பெண்களின் தோற்றத்தில்தான் அமைத்துள்ளனர்.

பெண்ணுரிமை என்ற பெயரில் மேற்கண்டவாறு இழைக்கப்படும் தீமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டதால் இவற்றையெல்லாம் பார்க்கின்ற பெண்கள் ”நாம் இதற்காகத்தான் படைக்கப்பட்டுள்ளோம் போலும்; நாம் இப்படித்தான் வாழவேண்டும் போலும்” என பெண்கள் எண்ணிக் கொண்டனர்; அவர்களின் மன நிலை இதை சரிகாணும் அளவிற்கு மாற்றப்பட்டுவிட்டது. இதன் காரணத்தினால் அப்பெண்களின் கணவன்மார்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காகவும், தங்கள் வீட்டுக்காரியங்களை கவனிப்பதற்காகவும் அன்னியப் பெண்களை வேலைக்காக அமர்த்துகின்றனர். இதனால் மிகப்பெரிய குழப்பங்களும், தீமைகளும் ஏற்படுகின்றன.

source: https://todayislamicsound.wordpress.com/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

34 + = 43

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb