Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மனித குலத்தின் ஒளிவிளக்கு அல்குர்ஆன்

Posted on August 18, 2015 by admin

மனித குலத்தின் ஒளிவிளக்கு அல்குர்ஆன்

  எம்.பி.ரபீக் அஹ்மத்  

‘துக்ளக்’ ஆசிரியர் சோ ராமசாமி ஒரு மீலாது விழாவில் ஒரு அழகான கருத்தைச் சொன்னார்.

“எல்லா மதத்தவர்களிடமும் நான் நாத்திகர்களை பார்க்கின்றேன். ஆனால் முஸ்லிம்களிடையே நாத்திகர்களை பார்ப்பது அரிதாக இருக்கின்றது; ஏனெனில் அவர்களுடைய கடவுள் நம்பிக்கை அவ்வளவு உறுதியாக இருக்கின்றது” என்றார் அவர்.

இந்த உறுதியை முஸ்லிம்களிடம் தந்தது எது? அல்குர்ஆன்தான். நாத்திக வாதம் என்ற நோய் AIDS நோயைவிட பயங்கரமாக பரவி வருகின்றது.

கடவுள் நம்பிக்கையாளர்கள் தங்கள் கடவுள் நம்பிக்கையை காப்பாற்றிக் கொள்ள அல்குர்ஆனை ஒரு முறையாவது ஜாதி மத பேதங்களை எல்லாம் பார்க்காமல் படிக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.”]

மனித குலத்தின் ஒளிவிளக்கு அல்குர்ஆன்

  எம்.பி.ரபீக் அஹ்மத்  

உலகில் பிரபலமாக இருக்கும் மதங்கள் ஐந்து.

1. கிறிஸ்துவ மதம், 2. இஸ்லாமிய மார்க்கம், 3. யூத மதம், 4. இந்து மதம், 5. புத்த மதம்.

இன்னும் சில சிறிய மதங்கள் இருக்கின்றன. அவைகள் உலகில் பிரபலமான மதங்களாகவோ, அதிக மக்கள் பின்பற்றக்கூடிய மதங்களாகவோ இல்லை. மேலே சொல்லப்பட்ட ஐந்து மதங்களில் புத்தமதம் தன்னை ஒரு மதமாக சொல்லிக் கொள்ளவில்லை. அந்த மதத்தில் கடவுள் நம்பிக்கை இல்லை என்று புத்தர்கள் சொல்லிக் கொள்கின்றார்கள். கடவுள்் நம்பிக்கையே இல்லாத பொழுது கடவுளால் அருளப்பட்ட வேதம் என்ற ஒன்று அவர்களிடம் வேதம் இருக்க வாய்ப்பே இல்லை. அவர்களிடம் வேதம் இருப்பதாக அவர்கள் சொல்லிக் கொள்ளவுமில்லை.’ தம்மம்’ என்ற ஒரு நூல் இருக்கின்றது. புத்தருடையதும், அவருடைய பிகஷுகளுடையதுமான போதனைகள் அவற்றில் அடங்கியுள்ளன கடவுள் நம்பிக்கையில்லாத ஒரு வழிமுறையை இந்த உலகம் மதம் என்று ஏற்றுக் கொள்வதில்லை. ஆக மதங்களில் பட்டியலிலிருந்து அது தானாகவே விலகிக் கொள்கின்றது.

இப்பொழுது மீதியுள்ள நான்கு மதங்களுக்கும் கடவுள் நம்பிக்கையுண்டு. இந்த நான்கு மதங்களும் தங்களிடம் இறைவனால் அருளப்பட்ட வேதங்கள் உண்டு என்று சொல்லிக் கொள்கின்றன.

ஆக இந்த நான்கு மதத்தவர்களும் வேதமுடையவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

கிறிஸ்துவ மதத்தினர் பைபிளை தங்கள் வேதம் என்கின்றனர். இஸ்லாமிய மார்க்கத்திற்கு திருகுர்ஆன் வேதமாக இருக்கின்றது. யூதர்கள் பழைய ஏற்பாட்டை தங்கள் வேதம் என்கின்றனர்.

இந்துக்கள் தங்களிடம் நான்கு வேதங்கள் உண்டு என்று கூறிக் கொள்கின்றனர். யஜுர்வேதம், சாமவேதம், ரிக்வேதம், அதர்வண வேதம். ஐந்தவாதாக பகவத்கீதையும் வேதம் என்கின்றனர்.

உலகில் பெரிய மதங்களாக கருதப்படும் இந்த நான்கு மதத்தவர்களின் நம்பிக்கைகளிலும் சில ஒற்றமைகள் உண்டு. அவை என்ன?

இந்த நான்கு மதங்களும்

1. கடவுள் உண்டு என்று நம்புகின்றன.

2. வேதம் என்ற ஒன்றுண்டு என்று நம்புகின்றன.

3. மரணத்திற்குப் பிறகு மறுமை வாழ்க்கை என்ற ஒன்றுண்டு என்று நம்புகின்றன.

4. சொர்க்கமும நரகமும் உண்டு என்றும் நம்பிக்கை கொள்கின்றன. ஆக இந்த நான்கு நம்பிக்கைகளிலும் முஸ்லிம்கள் மற்ற மதத்தவர்களுடன் ஒன்றுபடுகின்றனர்.

நான்கு மதங்களும் நம்பும் இந்த பொதுவான நம்பிக்கைகள் எந்த வேதத்தில் விரிவாகவும், விளக்கமாகவும். தெளிவாகவும், குழப்பமில்லாமலும் எல்லோரும் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு எளிமையாகவும் இருக்கின்றது என்று ஆராய்ந்து பார்த்தால் திருகுர்ஆனில் மட்டும்தான் அழகாகவும் ஆணித்தரமாகவும் அமைந்துள்ளது என்பது புலனாகும். இந்த உண்மையை, உண்மையான கடவுள் நம்பிக்கையாளன், கடவுளை நேசிக்கின்றவன் அவன் எந்த மதத்தில் இருந்தாலும் மறுக்க முடியாது.

மதங்களுக்கு அஸ்திவாரமாக, ஆணிவேராக அடிப்படையாக இருக்கின்ற இந்த நான்கு நம்பிக்கைகளை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டுமானால் அல்லது விளக்கிச் சொல்ல வேண்டுமானால், தயவு தாட்சண்யமின்றி, விருப்பு வெறுப்பின்றி திருகுர்ஆனை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு ஏற்படுகின்றது.

கடவுள் நம்பிக்கையாளர்கள் யாராக இருந்தாலும் ஒரு விஷயத்தில் உறுதியாக இருப்பார்கள். அது என்ன?

கடவுளே, சத்தியம், சத்தியமே கடவுள்.God is Truth. Truth is god. இவ்விஷயத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது.

உண்மை, சத்தியம் எங்கிருந்தாலும், யாரிடம் இருந்தாலும் நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

நாம் ஒன்றை உண்மை சத்தியம் என்று சொல்வதனால் மட்டும் அது உண்மையாக முடியாது. உரைகல்லில் உரசிப் பார்த்த பிறகுதான் இந்த உலகம் உண்மையை ஏற்றக் கொள்ளும்.

நாம் வாழும் காலத்தல் இந்த நான்கு மத வேதங்களும் நாம் பேசும் மொழிகளில் கிடைக்கின்றன. காழ்ப்பின்றி பாகுபாடின்றி நாங்களே அலசிப் பார்ப்போம். பிறகு முடிவை நம் மனச்சாட்சிகளுக்கே விட்டு விடுவோம்.

கடவுள் நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒரு விஷயத்தை பகிரங்கமாக ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும்.

கடவுளை அறிந்துக் கொள்வதற்கும், தெரிந்துக் கொள்வதற்கும், கடவுளை வணங்குவதற்கும் வழிப்படுவதற்கும், ஈடேற்றம் அடைவதற்கும் வழிப்படுவதற்கும், ஈடேற்றம் அடைவதற்கும் மதங்கள் கருவிகளாக பயன்படுகின்றன.

ஆக நம்முடைய நோக்கம் எல்லாம கடவுளே தவிர மதங்களல்ல.

எந்த மதம் கடவுளை பெருமைப்படுத்துகின்றது. கடவுளை பற்றியான சரியான உறுதியான நம்பிக்கையை தருகின்றது என்பதை ஆராய வேண்டியது நமது கடமையல்லவா?

நான் மேலே சொன்ன இந்த நான்கு அடிப்படை நம்பிக்கைகள் சரியாக இருந்தால்தானே நம்முடைய கடவுள் நம்பிக்கையும் சரியாக இருக்கும்.

இதில் சிறிய தவறு நேர்ந்தாலும் கடவுள் நம்பிக்கையில் குழப்பம் வரும். நாம் எதில் தெளிவாக இல்லாவிட்டாலும் கடவுள் நம்பிக்கையிலாவது தெளிவாக இருக்க வேண்டாமா?

‘துக்ளக்’ ஆசிரியர் சோ ராமசாமி ஒரு மீலாது விழாவில் ஒரு அழகான கருத்தைச் சொன்னார்.

“எல்லா மதத்தவர்களிடமும் நான் நாத்திகர்களை பார்க்கின்றேன். ஆனால் முஸ்லிம்களிடையே நாத்திகர்களை பார்ப்பது அரிதாக இருக்கின்றது; ஏனெனில் அவர்களுடைய கடவுள் நம்பிக்கை அவ்வளவு உறுதியாக இருக்கின்றது” என்றார் அவர்.

இந்த உறுதியை முஸ்லிம்களிடம் தந்தது எது? அல்குர்ஆன்தான். நாத்திக வாதம் என்ற நோய் AIDS நோயைவிட பயங்கரமாக பரவி வருகின்றது.

கடவுள் நம்பிக்கையாளர்கள் தங்கள் கடவுள் நம்பிக்கையை காப்பாற்றிக் கொள்ள அல்குர்ஆனை ஒரு முறையாவது ஜாதி மத பேதங்களை எல்லாம் பார்க்காமல் படிக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.

நாத்திகர்கள் முன் வைக்கும் வாதங்களின் முன்னால் பல மாற்று மத சகோதரர்கள் தங்களை கடவுள் நம்பிக்கையாளர்கள் என சொல்லிக் கொள்வதற்கே வெட்கப்படுகின்ற, தலைகுனிகின்ற பரிதாப நிலையை நான் பலமுறை நேரில் பார்த்திருக்கின்றேன். இந்த கேவலங்களுக்கும் ஏளனங்களுக்கும் கடவுள் நம்பிக்கையாளர்கள் ஆளாகத்தான் வேண்டுமா? இது தேவையா? இந்து என்று சொல்லடா? தலைநமிர்ந்து நில்லடா என்று சுவர்களில் எழுதி வைக்கின்றோம். நாத்திகர்களின் முன்னால் தலை நிமிர முடிகின்றதா?

என நெஞ்சுக்கினிய மாற்று மத சகோதரர்களே! நீங்கள் தலை நிமிர்ந்து நிற்கவும் நாத்திகரகளின் சவால்களை தீரமுடன் சமாளிக்கவும் தயவு செய்து திருகுர்ஆனை உங்கள் மொழியில் ஒரு முறையாவது படியுங்கள். நீங்கள் கடவுள் நம்பிக்கையாளர் என்பதற்காக பெருமை படுவீர்கள் பெருமிதம் கொள்வீர்கள். புளாங்கிதம் அடைவீர்கள்.

ஒருமுறை ஒரே ஒரு முறை அல்குர்ஆனை படியுங்கள். எந்த வேதத்தையும் குறை காணுவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.

இந்த வேதங்களை வைத்துக் கொண்டு உங்களால் தலைநிமிர்ந்து நிற்க முடியவில்லையே. இதற்கான காரணத்தை நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களா? இந்த கேவலங்களுக்கான சரியான காரணத்தை அல்குர்ஆன் சுட்டிக் காட்டுகின்றது. கேளுங்கள். திருகுர்ஆன் பேசுகின்றது.

“(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா?

இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும் நம்பி, காஃபிர்களை (அவநம்பிக்கையாளர்களை) குறித்து இவர்கள்தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும ்கூறுகின்றனர்.”

இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கின்றான். எவர்களை அல்லாஹ் சபிக்கின்றானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர். (அல்குர்ஆன்: அத். 4 வசனம் 51,52)

அல்குர்ஆன் எவ்வளவு பெரிய உண்மையை சொல்கிறது. நான் கிறிஸ்துவர்களின் புதிய ஏற்பாட்டை படித்திருக்கின்றேன். யூதர்களின் பழைய ஏற்பாட்டையும் படித்திருக்கின்றேன். இந்துக்களின் பகவத் கீதையையும் படித்திருக்கின்றேன். சிலை வணக்கம் செய்யுமாறு எந்த வேதமும் சொல்லவில்லை. பிறகு எங்கிருந்து வந்தது இந்த சிலை வணக்கம்?

அல்குர்ஆனை தவிர மற்ற எந்த வேதமும் முமுக்க முழுக்க இறைவசனம் கொண்டவை என்று அந்த வேதத்தை நம்புபவர்களே இதுவரை சொல்லவில்லை.

முழுக்க முழுக்க இறைவசனங்களைக் கொண்ட ஒரே வேதம் திருகுர்ஆன் மட்டும்தான் அதில் இறைவன் மட்டுமே பேசுகின்றான். இறைவனைத் தவிர வேறு யாரும் பேசவில்லை. நான் சொன்ன இந்த விஷயத்தில் யாருக்கும் கருத்து வேறபாடில்லை.

முஸ்லிம்களை தவிர மற்ற அனைத்து வேதக்கார மதத்தவர்களும் சிலை வணக்கம செய்கின்றனர். முஸ்லிம்களிடம் மட்டும் சிலை வணக்கம் இல்லை. இது எதனால்.

மற்ற வேதங்களில் இறைவனைத் தவிர மற்றவர்களும் பேசுவதால் வந்த விளைவு, இறை வசனங்களுடன் மனித வசனங்களையும கலந்ததினால் ஏற்பட்ட விபத்து.

வேதங்கள் வரிசையில் இறுதியாக வந்த வேதம் அல்குர்ஆனே என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

மற்ற வேதங்களில் ஒவ்வொரு பாகமாக அளிக்கப்பட்ட இறைவனின் தெளிவுரைகள், அல்குர்ஆன் இறுதி வேதமாக வந்ததால் முழுமையான தகவல்களைப் பரிபூரணமாக தரப்பட்ட சம்பூரண வேதமாக அருளப்பட்டுள்ளது. மற்ற வேதங்களையும் படித்துப் பாருங்கள்.

அல்குர்ஆனையும் படித்துப் பாருங்கள். வித்தியாசம் தானாகத் தெரியும். மனித வாழ்வின் அத்தனை அம்சங்களுக்கும் தங்கள் வேதங்களில் முழுமையான வழிகாட்டி இருக்கின்றது என்று எந்த வேதமும் சொல்லவில்லை. அந்த வேதங்களை நம்புபவர்களும் இதுவரை சொல்லத் துணிய வில்லை.

அல்குர்ஆன் மட்டும்தான் மனித வாழ்வின் இம்மைக்கும் மறுமைக்கும் முழுமையான வழிகாட்டுதலைத் தருகின்றது.

அரை வைத்தியனிடம் சிகிச்சைச்பெற்றால் அரைக் கிணற்ற தாண்டினால் பேராபத்தில் தானே முடியும்.

இறை நம்பிக்கையாளர்களே முழுமையான நேர்மையான, பரிபூரணமான வழிகாட்டுதலின் பக்கம் திருகுர்ஆன் உங்களை அழைக்கின்றது.

நான் கிறிஸ்துவ வேதத்தை படித்துள்ளேன்; கிறிஸ்துவ மதம் என்று ஒன்ற இருப்பதாக அது ஒரு இடத்திலும் சொல்லவில்லை.

யூத வேதத்தை படித்துள்ளேன்; யூத; மதம் என்ற ஒன்றிருப்பதாக அது ஒரு இடத்திலும் சொல்லவில்லை.

இந்து மத வேதங்களை படித்திருக்கின்றேன்; அவற்றில் ஒரு இடத்திலாவது இந்து மதம் என்ற ஒன்றிருப்பதாகச் சொல்லவில்லை.

அல்குர்ஆன் மட்டும்தான் சொல்கின்றது; ஆரம்பம் முதல் இறுதி வரை மனித குலத்திற்கு ஒரே மார்க்கம்தான்; அது இஸ்லாம்தான் என்று.

இஸ்லாத்தை தவிர எந்த மார்க்கத்தையும் எந்த வேதத்திலும் இறைவன் சொல்லவில்லை.
மற்ற மதங்கள் எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை; இறைவனால் அல்ல என்பதற்கு எல்லா வேதங்களும் சாட்சியாக இருக்கின்றன.

அல்குர்ஆனையும் படியுங்கள் அல்குர்ஆனின் ஒளியில் மற்ற வேதங்களையும் படியுங்கள்.உண்மை உங்களுக்கு தானாக விளங்கும்.கீழ்வரும் குர்ஆன் வசனங்களையும் படித்துப் பாருங்கள். மேலும் தெளிவு கிடைக்கும்.

source: http://annajaath.com/archives/4207

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb