AN EXCELLENT ARTICLE
ஆள்பாதி! ஆடைபாதி!
[ மனித மனதிலுள்ள மிருக உணர்ச்சிகளை பகிரங்கமாக வெளிப்படுத்த எல்லாவகையான வாய்ப்புகளையும் உருவாக்கித்தந்த பெருமையும் மேலை நாகரீகத்துக்கு உண்டு!. ஆகையால், உலகில் ‘வாழ’வேண்டும் என்று எண்ணுகின்ற யாவரும் மேலை நாகரீகத்தின் தாக்கத்துக்கு ஆட்படவே செய்வர்.
வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் முஸ்லிம்களும் இதற்குப் பலியாகிவிட்டதுதான்!. தமக்கென்று கொள்கையோ கோட்பாடோ இல்லாதவர்கள் மாற்றாரின் ‘கவர்ச்சி’க்கு மயங்கி பின்பற்றுவதில் சொல்வதற்கொன்றுமில்லை. உலகத்திற்கே வழிகாட்ட வந்த முஸ்லிம்கள், பிரகாசமான வரலாற்றை தமக்கென்று கொண்டவர்கள், அறிவியலிலும் அரசியலிலும் முன்னணியில் இருக்க வேண்டியவர்கள் இப்படி தரந்தாழ்ந்து, மதிப்பிழந்து, கொள்கை இழந்து, வரலாற்றை மறந்து ஒடிக் கொண்டிருக்கிறார்கள்.
இஸ்லாம் என்பதொரு இயற்கையான மார்க்கம். மனித அறிவுக்கும் மனித இயல்புக்கும் மிகவும் பொருத்தமான வழிமுறைகளையே அது முன்வைக்கின்றது. நாம் அணிந்திருக்கின்ற கலர் கலரான கண்ணாடிகளை கழற்றிவிட்டு சாதாரணமாகப் பார்த்தோமென்றால் இஸ்லாம் முன்வைக்கின்ற முடிவுகளைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
தன்னைப் பின்பற்றுகின்ற மக்கள் குறிப்பிட்டதோர் ஆடையைத்தான் அணியவேண்டும் என்று அது அறிவுறுத்துவதில்லை. மாறாக, இயல்பாக மக்களின் வாழ்க்கைமுறையும் ஆடை அமைப்பும் எவ்வாறு வளர்ச்சி காண்கின்றனவோ அவற்றை அவ்வாறே தக்க வைக்கின்றது. கூட்டமைப்புக் கோட்பாட்டையும் ஒழுக்கத்தையும் மட்டும் மனதில் கொண்டு அது ஒரு சில அறிவுறுத்தல்களை மட்டும் வழங்குகின்றது.
எந்தவொரு சமூகமாக இருந்தாலும் இந்த நியதிகளை மனதில் கொண்டே தத்தமது ஆடைகளையும் பழக்க வழக்கங்களையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றது. அவற்றில் முதல் விஷயம் மறைக்கப்படவேண்டிய பகுதிகள் (அவ்ரத்). ஓர் ஆண் – அவன் உலகின் எந்தப் பகுதியில் எந்த நாட்டில் வசித்தாலும் சரி- தன்னுடைய உடலில் தொப்புள் முதல் முழங்கால் வரையுள்ள பகுதியை கண்டிப்பாக மறைத்தே ஆகவேண்டும்; ஒழுக்க அடிப்படையில் அது கட்டாயம் என்று இஸ்லாம் கூறுகின்றது. அதுபோலவே பெண்கள் – உலகின் எந்தப் பகுதியில் எந்த நாட்டில் வசித்தாலும் சரி- முகத்தையும் கைகால்களையும் தவிர உடலின் மற்ற அனைத்து பாகங்களையும் கண்டிப்பாக மறைத்தே ஆகவேண்டும் என்று கூறுகின்றது.]
ஆள்பாதி! ஆடைபாதி!
‘இஸ்லாம் அநாதரவான நிலையில் தோன்றியது. மீண்டும் அது அநாதரவான நிலைக்குச் செல்லும்! (அக்காலத்து) ஆதரவற்றோருக்கு வாழ்த்துகள்!’ என்று இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிச் சென்றுள்ளார்கள்.
ஆரம்பத்தில் இஸ்லாம் யாருடைய ஆதரவும் இல்லாமல் பாலைவனத் தில் தனித்தொரு தீவாக இருந்து வந்தது. இறைத்தூதர் காலத்தில் சிறுகச்சிறுக வளர்ச்சி அடைந்து கொண்டே சென்ற இஸ்லாம் நேர்வழி நின்ற நான்கு ஃகலீபாக்கள் காலத்தில் வெற்றிமேல் வெற்றி பெற்று புகழேணியின் உச்சாணிக் கொம்பையே தொட்டுநின்றது. உலகத்தின் இருபெரும் வல்லரசு களாகத் திகழ்ந்த பாரசீக, ரோமானிய அரசுகளை வென்று இஸ்லாமியக் கொடியின் கீழ் அந்நாடுகளைக் கொண்டுவந்தது.
அரசியலில் மட்டும் ஆதிக்கம் செலுத்தாமல் சமூகம், பண்பாடு, நாகரீகம் என்று மனித வாழ்வு தொடர்பான எல்லாத்துறைகளிலும் தன்னுடைய தெளிவான வழி காட்டுதலை இஸ்லாம் வழங்கியது.
இறைவனால் அருளப்பட்ட மார்க்கம் என்றால் அவ்வழிகாட்டு தலை வழங்கியே ஆகவேண்டும். இவ்வழிகாட்டுதலுக்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக பத்து நூற்றாண்டுகள் உலகமெங்கும் இஸ்லாமிய ஆதிக்கமே நிலவியது.
இஸ்லாமிய பண்பாட்டையும் நாகரீகச் சிறப்பையும் உலக நாடுகள் அனைத்தும் தலையில் வைத்துக் கொண்டாடின!. அப்பாஸியாக்களின் ஆட்சியில் அறிவும் ஞானமும் தழைந்தன; கல்வியும் அறிவுக் கலைகளும் செழித்தன!.
ஐரோப்பியா கண்டத்தின் மக்கள் அப்போது அறிவற்ற மூடர்களாகவும் பண்பாடறியா மாக்களாகவும் இருந்தனர். அறிவின் ஆரம்ப எழுத்துகளை அவர்கள் அப்பாஸியாக்களின் காலத்தில்தாம் கற்றுக் கொண்டனர். தொழிலையும் வருமானம் ஈட்டும் வழிவகைகளையும் அறிந்து கொண்டனர்.
ஆட்சிக்கட்டிலில் வெகுகாலம் வீற்றிருந்த முஸ்லிம்கள் தங்கள் மீதான பொறுப்புகளை மறந்து சுகபோகங்களிலும் ஆடம்பர வாழ்விலும் திளைத்து இலட்சியத்தை மறந்து போனதால் வீழ்ச்சிப் படிக்கட்டுகளில் வேகமாக இறங்கலாயினர். பாதாளத்தில் வேகமாக உந்தித் தள்ளுபவர்களாக, புதைசேறாக மீர் ஜஅஃபர், மீர் சாதிக், குலாம் முஹம்மத் காதியானி போன்றோர் இதே உம்மத்தில் தலையெடுத்தனர்.
இஸ்லாமிய அரசு வீழ்ந்தது; ஒன்றன்பின் ஒன்றாக முஸ்லிம் நாடுகள் அடிமைத் தளையில் சிக்குண்டு கொண்டே சென்றன. முஸ்லிம்கள் தங்களுடைய வீழ்ச்சிக்கு தாங்களே காரணமாக ஆயினர். உலகளாவிய சதி, யூதர்களின் திட்டம் என்றெல்லாம் கூறிக்கொள்வது நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்ளும் செயல்!!.
இழந்துவிட்ட அதிகாரத்தை பெறும் முயற்சியில் வேகத்தோடு உலகமேங்கும் முஸ்லிம்கள் போராடலா யினர். இந்தியாவில் சையத் அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஷாஹ் இஸ்மாயீல் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றோர் தலைமையில் நடை பெற்ற உத்வேகப் போராட்டங்களை நாம் அறிவோம்.
அத்தகைய போராட்டங்கள் அதே வேகத்தோடு நீண்ட காலம் தொடரவில்லை. அவை நீர்த்துப் போயின!. முஸ்லிம்கள் தாம் சென்றாகவேண்டிய திசையை மறந்து போயினர்.மேலை நாகரீகத்தின் அடையாளப் பண்பு
போராட்டம் நீர்த்துப் போனதற்கு என்ன காரணம்? முஸ்லிம்கள் தங்களது அடையாளங்களை ஏன் தொலைத்து விட்டனர்?. இஸ்லாமிய சமூகத்தில் ஏதேனும் தீயபண்பு குடியேறி இருந்ததா?. தீர்க்கமுடி யாத வியாதி ஏதேனும் புரையோடிப் போயிருந்ததா?. அல்லது முன்னேறிச்சென்று வரவேற்று அணைத்துக் கொள்ளும் வகையில் ஏதேனும் சிறப்புக் கூறுகளை மேலைப் பண்பாடு பெற்றிருந்ததா?.
உலகவரலாற்றில் பல்வேறு சமூகங்களுக்கு இறைவன் ஆட்சிப் பொறுப்பை கொடுத்துள்ளான். ஒவ்வொரு சமூகத்திடமும் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பண்பு மிகைத்துள்ளதைக் காண முடிகின்றது. ஆது சமூகத்தைப் பற்றியும் சமூது சமூகத்தைப் பற்றியும் ஃபிர்அவ்னைப் பற்றியும் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. அவர்களிடம் காணப்பட்ட பண்பு எது? எதனால் அவர்கள் அழிக்கப்பட்டார்கள்? என்பதைப் பற்றியும் விளக்கமாகக் கூறுகின்றது.
தலைமைப்பொறுப்பில் உள்ள சமூகம் அல்லது ஆட்சி, அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சமூகம் இறைவனால் அங்கீகரிக்கப்படாத தீயபண்புகளைப் பெற்று குற்றச் செயல்களை தொடர்ந்து செய்து வந்தால் இறைவனால் அச்சமூகம் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அப்புறப்படுத்தப் படுகின்றது. இது இறைவனின் என்றும் மாறாத நியதி!.
முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கு அல்லர். ஆட்சிக்கடிவாளத்தை ஏந்தியுள்ள சமூகம் சிறந்த பண்புகளை உடையதாக விளங்கினால் இறைவன் அச்சமூகத்திற்கு மென்மேலும் சிறப்புகளை அருளுகிறான். அச் சமூகம் இறைவனை ஏற்றுக்கொண்ட, கீழ்ப்படிகின்ற முஸ் லிம் சமூகமாக இருந்து விட்டால் கேட்கவே முஸ்லிம்கள் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றுக் கொண்டே போனதற்கு இதுதான் காரணம்!.
இஸ்லாமிய சமூகம் எளிமை, பணிவு, தாழ்மை, நிறைவு மனப்பான்மை, இறையச்சம் போன்ற அருங் குணங்களைப் பெற்றுத் திகழ்ந்தது. அது வளர்ந்து கொண்டே போனதற்கும் இவையே காரணங்கள்!. பொதுவாக இப்பண்புகளை இச்சைகளுக்கு ஆட்பட்ட மனிதமனம் விரும்புவதில்லை.
அபுபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு போன்றோரின் ஆட்சிச்சிறப்பை உலகம் இன்றும் புகழ்கின்றது என்றால் என்ன காரணம்? இத்தகைய பண்புகள்தானே!. அவர்கள் வெறுமனே ஆட்சிக்கோலை மட்டுமா ஏந்திக் கொண்டிருந்தார்கள்? மக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் சீர்திருத்தவாதிகளாகவும் அல்லவா இருந்தார்கள்? மக்களுடைய வழிபாடுகளை முறைப்படுத்தும் ஆன்மீக அரசர்களாகவும் அல்லவா இருந்தார்கள்?.
இன்று உலகமனைத்தையும் தன் கைப்பிடிக்குள் அடக்கிக் கொண்டுள்ள மேலை நாகரீகத்திடமும் ஒரு பண்பு உள்ளது. இச்சைகளை வளர்க்கும் பண்பு!. மனித மனம் விரும்புவதை யெல்லாம் அள்ளித்தரும் பண்பு. ஆம்! மேலைப் பண்பாடு மனோயிச்சைகளை பாலூற்றி/பாலூட்டி வளர்க்கின்றது.
மனோயிச்சைகள் கவர்ச்சியானவையாகவும் கண்களை விட்டு அகலாதவையாகவும் இருக்கின்றன. ‘மனோயிச்சைகளால் நரகம் சூழப்பட்டுள்ளது!’ என்று நபி மொழிகள் கூறிக்கொண்டுள்ளன அல்லவா?. நிறம், இனம், மொழி, தேசியம் போன்ற இயல்பான உணர்வுகளைக் கொள்கைகளாக உருமாற்றி அரசியல் அரங்கில் உலாவரச் செய்த பெருமையும் மேலை நாகரீகத்துக்கு உண்டு!.
அதுமட்டுமல்லாமல் மனித மனதிலுள்ள மிருக உணர்ச்சிகளை பகிரங்கமாக வெளிப்படுத்த எல்லாவகையான வாய்ப்புகளையும் உருவாக்கித்தந்த பெருமையும் மேலை நாகரீகத்துக்கு உண்டு!. ஆகையால், உலகில் ‘வாழ’வேண்டும் என்று எண்ணுகின்ற யாவரும் மேலை நாகரீகத்தின் தாக்கத்துக்கு ஆட்படவே செய்வர்.
வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் முஸ்லிம்களும் இதற்குப் பலியாகிவிட்டதுதான்!. தமக்கென்று கொள்கையோ கோட்பாடோ இல்லாதவர்கள் மாற்றாரின் ‘கவர்ச்சி’க்கு மயங்கி பின்பற்றுவதில் குற்றமில்லை. உலகத்திற்கே வழிகாட்ட வந்த முஸ்லிம்கள், பிரகாசமான வரலாற்றை தமக்கென்று கொண்டவர்கள், அறிவியலிலும் அரசியலிலும் முன்னணியில் இருக்க வேண்டியவர்கள் இப்படி தரந்தாழ்ந்து, மதிப்பிழந்து, கொள்கை இழந்து, வரலாற்றை மறந்து ஒடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒழுங்கும் வடிவமும் ஓங்கிய மினாராக்கள் வழி ஒலிக்கும் பாங்கொலி கேட்டு நீங்கள் படைத்த இறைவனைத் தொழுவதற்காக பள்ளிவாசலுக்குள் நுழைகிறீர்கள். உங்களுக்கு முன்னால் வரிசையில் ஒரு சகோதரர் நின்று தொழுது கொண்டுள்ளார். ஷார்ட் ஷர்ட் இடுப்புவரைதான் உள்ளது. இறுக்கமான ஒரு பேண்ட் இடுப்பைக் கவ்விக் கொண்டுள்ளது. காலுக்குக் கீழே நீளும் பேண்ட்டை ஓர் அடி உயரத்திற்கு அவர் மேலே தூக்கிவிட்டுக் கொண்டுள்ளார். அந்தப் பேண்ட்டின் முனைப்பகுதியில் ‘ஜிப்’ வைத்து தைக்கப் பட்டுள்ளது. சகோதரர் ருகூவுக்குப் போகும்போது இறுக்கக் கட்டிய பெல்ட்டுக்கு மேலாக ஒன்றரை இன்ச் சுக்கு உடற்பகுதி வெளியே தெரிகின்றது. ஸஜ்தாவுக்குச் சென்றால் தெரியும் காட்சி ஒரே கண்றாவியாக இருக்கின்றது.
சகோதரர் என்ற வார்த்தையை நான் பயன்படுத்துகிறேன். பேஷனுக்குப் பலியான இளவட்டங்கள் அணிந் திருந்தால்கூட (தவறுதான் எனினும்) வாலிப முறுக்கு என விட்டுவிடலாம். நாற்பதை நெருங்கிய நாற்பதைத் தொட்டுவிட்ட ‘நல்ல’ முஸ்லிம்கள் எல்லாம்கூட இத்தகு ‘ஆடை’களில் காட்சி தருகிறார்கள். பிரம்மாண்டமாக ஒரு கேள்வி உங்கள் முன்பு எழுந்து நின்று விடைகேட்டு உங்களை பயங்கரமாய் உலுக்குகின்றது. இத்தகைய ஆடைகள் வெளிப்படுத்துவது இஸ்லாமியப் பண்பாட்டைத்தானா?
‘ஆடை’ என்பதுதான் என்ன? வழிகாட்ட வந்த இறைமார்க்கம் உடைகளுக்கென்று வரம்புகளை மட்டும் தான் நிர்ணயித்து உள்ளதா? அல்லது வடிவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளதா? ஆடைக்கென்று ஒழுங்கு மட்டும் உள்ளதா? அல்லது தோற்றமும் உள்ளதா?
ஆடையின் அவசியம்
ஆடைகளின் வடிவங்களுக்கு பண்பாடே காரணமாக அமைகின்றது. பண்பாட்டை நீக்கிவிட்டு மனிதன் எதற்காக உடைகளை அணிகிறான் என்பதை மட்டும் பார்த்தால் அவனுடைய இயற்கைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய சாதாரண ஆடைகளே போதுமானது. அவனுடைய உடலில் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்கவும் மற்றவர்களுக்குக் காட்ட வெட்கப்படும் மறைவிடங்களைப் போர்த்திக்கொள்ளவும் தட்பவெப்ப நிலைகளைச் சமாளிக்கவும் தான் மனிதன் ஆடைகளை அணிகிறான். அவ்வகையில் உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ஒரேவிதமான ஆடையே போதுமானது.
மனிதர்கள் அனைவரும் உடலமைப்பில் ஒரேமாதிரி யானவர்கள்தாமே!. வேண்டுமென்றால் மாறுபட்ட தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்ப ஆடை அமைப்புகளில் வேறுபாடு காணப்படலாம். வெப்பநாடுகளில் வசிப்பவர்கள் சாதாரண மெல்லிய ஆடைகளையே அதுவும் குறைவான உடற்பகுதிகளை மறைக்கும் வண்ணம் உடுத்திக் கொள்ள, குளிர் நாடுகளில் வசிப்பவர்கள் சற்று கனமான ஆடைகளை அதுவும் உடலின் பெரும்பாலான பகுதிகளை மறைக்கும் வண்ணம் உடுத்த நேரிடும்.பழங்கால மனிதர்கள் பல்வேறு பகுதிகளில் வசித்தாலும் அவர்களுடைய உடையமைப்பில் குறிப்பிடத் தகுந்த அளவு எந்த மாற்றமும் இருக்கவில்லை என்பதையே அவர்களுடைய வாழ்க்கை வரலாறு களிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம். அதிகபட்சம் அவர்களுடைய வசிப்பிடங்களுக்கேற்ப ஆடையமைப் பில் சற்றே மாறுதல் இருந்துள்ளதையும் காண்கிறோம்.
மனிதனுடைய சிந்தனை வளர்ச்சியடைந்தபோது தொழிற்துறைகளில் வியக்கத்தக்க புரட்சிகள் ஏற்பட்ட போது வாய்ப்புகளும் வசதிகளும் பெருகியபோது ‘ரசனை’ என்றும் ‘அழகியல்’ என்றும் நாம் குறிப்பிடும் உணர்வுகள் மெல்லமெல்ல வளர்ந்தோங்கின. இயற்கை யாக அவனுக்குத் தேவையான ஆடைகளோடு மேலும் சிற்சில மாற்றங்களை அவன் செய்யலானான். இம்மாற் றங்கள் வடிவிலும் அளவிலும் ஒன்றோடொன்று மாறு பட்டிருந்தன. பல்வேறு சமூகங்களைச் சார்ந்தவர்கள் தத்தமது தோற்றங்கள் தேவைகளுக்கேற்பத்தான் மாற்றங்களைச் செய்தாகவேண்டும். அவ்வாறே நிகழ்ந்தது.
ஆடை மாற்றத்திற்கான காரணங்கள்
ஒவ்வொரு சமூகத்திலும் ஆடைவடிவங்களிலும் தோற்றங்களிலும் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்ந்து அவை பரிணாமம் பெற்றுக்கொண்டே சென்றமைக்கு சிறியதும் பெரியதுமான பல்வேறு காரணங்கள் பின்னணியாக அமைந்தன. அவற்றையெல்லாம் ஒன்றுதிரட்டித் தருவது என்பது இயலாத காரியம்!. கடந்தகால ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஒவ்வொரு சமூகமும் அச்சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களும் எண்ணற்ற கணக்கிடவே முடியாத அகக்காரணங்களாலும் புறக்காரணங்களாலும் பாதிப் படைந்திருக்கிறார்கள். அவையனைத்தையும் பதிவு செய்து பாதுகாத்து வைத்திருப்பது என்பது இயலாத காரியம் என்பது ஒருபுறமிருக்க அவற்றில் பல உணரவே முடியாத அளவுக்கு நுண்ணியதாகவும் உள்ளன. உடைகளில் மாற்றங்கள் தோன்றக் காரணமாக இருந்தவற்றில் நம்மை உறுத்தும் அளவுக்கு பெரிதாக உள்ள காரணங்களை மட்டும் ஆராய்ந்தால் கீழ்வரும் எட்டு காரணங்கள் நமக்குக் கிடைக் கின்றன.
1) புவியியற் சூழ்நிலைகள் ஒரு தேசத்தில்வசிக்கும் மக்களை ஒரு குறிப்பிட்ட வகை உடைகளையும் ஒரு குறிப்பிட்ட வகையான பழக்கவழக்கங்களையும் தேர்ந்தெடுக்குமாறு நிர்ப்பந்திக்கின்றன.
2) சமயக்கோட்பாடுகளும் ஒழுக்கக் கண்ணோட்டங்களும் இயற்கையாகவே மாறுபட்டுள்ள காரணத்தால் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் பல்வேறு வடிவமைப்பிலான ஆடைகளை அணிகிறார்கள்.
3) இயற்கையான ரசனைகள் பல்வேறு வகையான வாய்ப்புகள் சூழல்களின் பின்னணியில் தோன்றுவதால் சமூகத்துக்குச் சமூகம் வேறுபடுகின்றன. இயற்கை ரசனைகள் இவ்விதம் வேறுபடுகின்ற காரணத்தினால் தான் ஒரு சமூகம் மிகவும் விரும்புகின்ற அம்சங்களை இன்னொரு சமூகம் விரும்பாமல் புறக்கணிக்கின்றது.
4) சமூக நடைமுறைகள் தோன்றவும் வளரவும் அச் சமூகத்தின் புவியியல் அமைப்பு, பொருளாதார நிலை, அறிவுத்திறன், ஒழுக்க நிலை போன்றன காரணங்களாக அமைகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு சமூகமும் தனக்கென்று, தேர்ந்தெடுத்துக் கொண்ட சமூக நடை முறைகளுக்கு ஏற்ப தனக்கு வசதியான ஆடையமைப்பை வடிவமைத்துக் கொள்கின்றது.
5) பொருளாதார சூழல்தான் ஒரு சமூகத்தின் பொதுவான வாய்ப்புகளையும் வருமானம் ஈட்டும் வழிகளையும் தொழில்களையும் வேலைகளையும் தீர்மானிக்கின்றது. வளமான வளர்ச்சியடைந்த சமூகமாக அல்லது வாய்ப்பற்ற ஏழை சமூகமாக அது மாறவும் பொருளாதா ரமே காரணமாக அமைகின்றது.
இப்பொருளாதாரத்தின் அடிப்படையில்தாம் அச்சமூகத்தின் ஆடைகள் அமைகின்றன; அவற்றில் ஏற்படும் மாறுதல்களுக்கும் இதுவே காரணமாக அமைகின்றது.
6) பண்பாடும் கலாச்சாரமும் ஒவ்வொரு சமூகத்திலும் தனித்தன்மையோடும் மற்றவற்றோடு வேறுபட்டும் உள்ளன. ஒரு சமூகத்தின் ஆடையமைப்பைத் தீர்மானிப்பதில் இவையிரண்டும் பெரும்பங்கு வகிக்கின்றன.
7) சமூக மரபுகள் முன்னோர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தனித்த வாழ்க்கை முறையையும் ஆடையமைப் பையும் பிந்தைய தலைமுறையினருக்கு வழிவழியாகக் கடத்துகின்றன. சிற்சில மாற்றங்களோடு இவற்றை அவை அடுத்தடுத்த தலை முறைக்குக் கொண்டுசெல் கின்றன. இக்கடத்தல் உண்மையில் அச்சமூக இருப்பின் அடையாளமாக அமைகின்றது. ஆகையால், ஒவ்வொரு சமூகமும் இவற்றுக்கு பெருமதிப்பு அளிக்கின்றது.
8) வெளித்தாக்கங்கள் அதாவது மற்ற சமூகங்களோடு உறவாடுவதால் ஒரு சமூகத்தின் எண்ணங்களிலும் வாழ்க்கை முறையிலும் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்கவே இயலாதது. ஒரு சமூகத்தின் அரசியல் நிலைமை, சிந்தனைப்போக்கு, ஒழுக்க சூழல் ஆகியவற்றைப் பொருத்தே இந்தத் தாக்கம் பாதிப்புகளை ஏற்படுத்தும்.இந்த எட்டும் ஒரு சமூகத்தின் ஆடையமைப்பில் மட்டுமல்லாது அதனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லவை. இந்த எட்டும் சேர்ந்த கலவை ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்துத்தான் ஒரு சமூகத்தின் ஆடை அமைகின்றது.
இந்த ஆய்வை மனதில் வைத்துக்கொண்டு சமூகத்தின் ஆடைப்பிரச்சனையை அணுகினால் இரண்டு பெரும் உண்மைகளை நாம் விளங்கிக் கொள்கிறோம்.
(அ) வெளியிலிருந்து உடம்பைப் போர்த்தி மறைக்கும் ஒரு போர்வையாக, உடம்பை வெளியிலிருந்து பாதுகாக்கும் ஒரு கருவியாக மட்டும் ஆடை இல்லை!. மாறாக, சமூக உளவியல், பண்பாடு கலாச்சாரம், சமூக நடை முறைகள், சமூகக் கூட்டமைப்பு சூழல்கள் போன்றவற் றோடும் அதற்கு ஆழமான தொடர்பு உள்ளது. உண்மையில் ஆடையானது சமூகமெனும் உடம்பை இயக்கும் உயிரின் வெளிப்பாடாகவும் வளர்ச்சிக்கான வழியாகவும் உள்ளது. ஆடையென்பது ஒரு சமூகத்தின் பேசுமொழி!. அம்மொழி வாயிலாக அச்சமூகம் தன்னைப்பற்றி தன் அடையாளத்தைப் பற்றி உலகத்தோடு
(ஆ) ஆடையமைப்பை உருவாக்கும் மேலே கண்ட எட்டு காரணிகளுள் புவியமைப்பைத் தவிர மற்ற அனைத்தும் ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் உணரமுடியா நுண்ணிய தளங்களில் மாறுதல் அடைந்து கொண்டே உள்ளன. அவற்றில் எதுவொன்றும் நொடிநேரமும் தேக்கமடையாது மாறிக் கொண்டே உள்ளது. அவற்றில் ஏற்படும் மாற்றங்களும் பரிணாம வளர்ச்சியும் ஆடைகளில் மட்டுமல்லாது அச்சமூகத்தின் எல்லா அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியே தீருகின்றன.
தாழ்வு மனப்பான்மை
ஆடை மாற்றத்திற்கு அடிப்படைக் காரணங்களாக இருப்பதில் மிகவும் மோசமானது தாழ்வு மனப்பான்மை ஆகும். ஒரு மனிதனுடைய தன்னம்பிக்கையைச் சிதைத்து அவனுடைய உயர்வுக்கு முட்டுக்கட்டை போடு வதில் தாழ்வு மனப்பான்மையைவிடக் கொடியது எதுவும் கிடையாது.
நாம் அழகாக இல்லை! நம்மிடம் படிப்பறிவும் இல்லை! பழகும் முறையும் தெரியவில்லை! நம்மிடம் வசதி வாய்ப்பு இல்லை! — என்கிற சிந்தனைகள் ஆபத் தானவை. நம்முடைய முன்னேற்றத்திற்கே உலைவைப்பவை.
வெற்றிகொள்ளப்பட்ட சமூகங்கள் யாவும் தாழ்வு மனப்பான்மைக்கு பலியாகும் என்பது வரலாறு!. வென்றவர்கள் சிறந்தவர்கள்; அவர்களைப்போல வாழ வேண்டும் எனும் சிந்தனை இயல்பாகவே தோற்றுப் போனவர்களின் உள்ளத்தில் தோன்றுகின்றது. நடை, உடை, பாவனைகளில் அவர்களைப்போல மாறத் தொடங்குகிறார்கள்.அல்லது, சமூகத்தில் தம்மைவிட உயர்வாகக் கருதும் நபர்களை செயலளவில் பின்பற்றத் தொடங்குகிறார்கள். அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் போன்றோரை பாமர மக்கள் அப்படிக்கு அப்படியே பின்பற்றக் காரணமும் ஒரு செயல் சரியா, தவறா என்று தீர்மானிக்கும்போது அச்செயலை செய்யத்தூண்டும் காரணியையும் கட்டாயம் கவனத்தில் கொண்டாக வேண்டும். இஸ்லாமிய வரம்பு களை மட்டும் கவனத்தில் கொண்டால் போதும்; ஆடை கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றெல்லாம் முடிவெடுக்க முடியாது.
அரபியில் பெயர் வைப்பது கூட இஸ்லாமிய வழிமுறையல்ல!. இறைநம்பிக்கைக்கு முரணான பெயர்களையும் பல தெய்வக் கொள்கையை வெளிப்படுத்தும் பெயர்களையும் வைக்கக் கூடாது என்றுதான் இஸ்லாம் சொல்கின்றது. அதற்காக நாம் தமிழிலும் மலையாளத்திலும் பெயர் சூட்டிக் கொள்கிறோமா? ஒப்பீட்டளவில் பார்த்தோமென்றால் மாற்றார்களின் உடைகளை அணிவதை விட, வேறு மொழியில் பெயர்வைத்துக் கொள்வதில் கூட தவறு இல்லை எனலாம்!.
தன்னுடைய ‘அல்ஜிஹாத் ஃபில் இஸ்லாம்’ நூலின் ஓரிடத்தில் மௌலானா மௌதூதி குறிப்பிட்டுள்ளதைப் போன்று…
“வெல்லப்பட்ட சமூகங்களிடையே இவ்வியாதி வேக மாகப் பரவுகின்றது. அம்மக்கள் தம்மை வென்றவர்களின் நடை, உடை, பாவனைகளை அப்படியே பின்பற்றத் தலைப்படுகிறார்கள். அதில் பெருமிதமும் கொள் கிறார்கள். இவ்வடிமைத்தன சிந்தனை இன்றுள்ள வெல்லப்பட்ட அடிமைநாடுகள் பலவற்றிலும் இருப்பதைக் காணலாம்.
இந்தியாவில்கூட எண்ணற்ற ஜாதி இந்துக்கள் ஆங்கிலேயரின் உடைகளை விரும்பி அணிகிறார்கள். அவற்றை அணிந்து கொண்டு தாங்கள் ஏதோ வாழ்வின் உன்னத நிலையை அடைந்து விட்டாற்போன்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால், எந்த பிரிட்டிஷ்காரனும் இந்திய உடையை அணிவதாகத் தெரிவதில்லை. அப்படியே ஏதேனும் சபைகளில் அணிந்து வந்தாலும் நகைச்சுவைக்காகவும் கலைக்காகவும்தான் அணிந்து வருகிறார்கள்”.
“விநோதம் என்னவென்றால் ஆங்கிலேயர் நாட்டை விட்டுச் சென்ற பின்பும் நாடு இந்தியா, பாகிஸ்தான் என்று பிரித்து விடப்பட்ட பின்னரும் மேலே குறிப்பிட்டதைப் போலவேதான் நிலைமை உள்ளது. விடுதலைக்கு முந்தைய நிலைமையிலும், விடுதலைக்குப் பிந்தைய நிலைமையிலும் எந்தவொரு மாற்றமும் இல்லை. நீண்ட காலம் அடிமைகளாக இருந்ததால் அதன் தாக்கம் உள்ளங்களிலும், சிந்தனையிலும் உள்ளது என் றால் நாடு விடுதலை பெற்றபின்புகூட, ‘ஆங்கிலேயர் உடை அணிவதால் சமூகத்தில் எவ்வித மரியாதையும் கௌரவமும் இப்போது அதிகரிக்கப் போவதில்லை. நம்முடைய ஆடைகளை அணிவதில் எத்தகைய கௌரவக் குறைச் சலும் இல்லை!’ என்பதை நம்முடைய மக்கள் உணரவே இல்லை!”
“இன்னோர் ஆச்சரியம் என்னவென்றால் பணி நிமித்தம் இங்கேயே தங்கிவிட்ட ஆங்கிலேயர்கள் தாங்கள் ஆட்சி யில் இல்லை என்றபோதிலும் இங்குள்ள மக்களின் மதிப்பைப் பெற்றுக் கொள்வதற்காக இங்குள்ள ஆடைகளை ஒருபோதும் அணிவதே இல்லை
ஆடை அமைப்பின் வளர்ச்சி
ஒரு சமூகம் முன்னேற்றப்பாதையில் பயணிக்கும் போது அறிவும் கல்வியும் அங்கே வளருகின்றன; சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படுகின்றது; ஆலை களும் தொழிற்சாலைகளும் வியாபாரமும் வணிகமும் வளர்ந்தோங்குகின்றன; பொருளாதாரத்தில் தன்னிறைவும் முன்னேற்றமும் தோன்றுகின்றன; பிறசமூகங் களோடு கலந்து பழக வாய்ப்புகள் கிடைப்பதால் அதனுடைய ஒழுக்கம், சமுதாய அமைப்பு, பண்பாடு கலாச்சாரம் போன்ற தளங்களில் பல்வேறு வகையான படித்தரப் பரிணாமங்கள், படிப்பினைகள் ஏற்படவே செய்கின்றன.
இதன் விளைவாக ஒட்டுமொத்த சமூக வாழ்விலும் முன்னேற்றத்தை நோக்கிய இயக்கம் தொடங்குகின்றது. அதனுடைய உணர்வுகளில் மாறுதல்கள் நிகழுகின்றன; இயற்கையான ரசனைகள் மாறுகின்றன; சமுதாய நடை முறைகளில் நளினமும் நாகரீகமும் தென்படத் தொடங்குகின்றன; பழக்கவழக்கங்களின் படித்தரம் உயருகின்றது; புதிய தேவைகளைப் பூர்த்தி செய்ய புதியபுதிய வடிவங்கள் பிறக்கின்றன; புதிய விழுமங்களின் வாயிலாக சமூக நடைமுறைகள் மதிக்கப்படத் தொடங்குகின்றன; வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் ஏற்படும் மாறுபாடு ஆடையையும் விட்டுவைப்பதில்லை. உருவாக்கம், தோற்றம் என்று இரண்டு கோணங்களிலும் ஆடை மாறு தலடையத் தொடங்குகின்றது. அழகானதாகவும் மிருது வானதாகவும் நயத்தக்க வடிவம் கொண்டதாகவும் அது மாறிக்கொண்டே செல்கின்றது. மாறுதல் படிக்கட்டுகளின் எந்தவோர் இடத்திலும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பொதுவானதோர் ஆடையை வடிவமைக்க வேண்டும் என்று நின்று சிந்திக்கத் தோன்றுவதே இல்லை. சமூகக்காரணிகளின் தொடர் சுழற்சியின் விளைவாக ஆடை வடிவத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழ்ந்து கொண்டே உள்ளன. ஒட்டுமொத்த சமூகத்தின் ரசனை, தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப ஆடை மாற்றத்தை அனுமதித்துக் கொண்டே செல்கின்றது.
ஒரு சமூகத்தின் ஆடைகள் இயல்பாக இப்படித்தான் உருவாகின்றன; மாறுகின்றன; படிப்படியாக வளர்ச்சியடைகின்றன. இதற்கு நேர்மாற்றமாக இன்னொரு முறையில் செயற்கையாக மாறவும் செய்கின்றன. வலுக் கட்டாயமாக ஒரு சமூகத்தின் ஆடைகள் மாற்றப்படுவது தான் அது! அச்சமூகத்தின் இயல்பான ஆடைகளுக்குப் பதிலாக வேறு சமூகத்தின் ஆடைகள் இரவல் வாங்கப்பட்டு அதற்கு அணிவிக்கப்படுகின்றன. மாற்றம் என்பதென்னவோ இரண்டு விதங்களிலும் நிகழத்தான் செய்கின்றது என்றாலும் இரண்டுக்குமிடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருக்கின்றது.
மண்ணில் நடப்பட்ட ஒரு விதை செடியாக முளைக் கின்றது. சிறுகச் சிறுக வளர்கின்றது. மரமாகின்றது. அதனுடைய அடி பாகம், கிளைகள், விழுதுகள் என்று எல்லாவற்றிலும் மாற்றம் நடைபெறுகின்றது. என்ன தான் மாற்றம் நடந்தாலும் அது ‘அது’வாகத்தான் இருக்கின்றது. புளியமரம் பட்டுப்போய் இற்று பூமியில் சாயும்வரை புளியமரமாகத்தான் இருக்கின்றது. மாமரம் கடைசி காலம் வரை மாமரமாகத்தான் இருக்கின்றது. மண், காற்று,வெப்பம், நீர், வெயில் என்று பலபொருள்களை அது உள்வாங்கிக் கொண்டாலும் உள்வாங்கிய அனைத்தையும் அது தனக்குள் கரைத்துக்கொண்டு மா மரமாகத்தான் அதேசமயம் ஒரு புளியமரத்தின் மீது மாமரத்தின் கிளைகளையும் மாம்பழங்களையும் கொண்டுவந்து பொருத்தி விட்டால் அதை அந்த அதிசயக் காட்சியை என்னவென்று சொல்வது? வலுக்கட்டாயமாக சுற்றப்பட்ட செயற்கையான இம்மாற்றங்கள் எந்த பலனையும் அளிக்கப் போவதில்லை. இயற்கையான வளர்ச்சிப் பாதையில் தேவையற்ற குறுக்கீடுகள் ஏற்படுவதுதான் மிச்சம்.
சமூகப் பிரச்சனைகளில் ஆழமான தொலை நோக்குப்பார்வையைச் செலுத்தாமல் மேலோட்டமாக நுனிப்புல் மேய்பவர்கள் ஆடைகளையும் வெளிப்படையான சிலபல பழக்க வழக்கங்களையும் மாற்றிவிட்டால் ஒரு சமூகம் மாறிவிடும் என்று தவறாக கணிக்கிறார்கள்.
சமூகத்தின் ஆடையமைப்பை மாற்றியே ஆக வேண்டும் என்று வன்மையாக முயற்சிப்பவர்கள் அதற்குப் பல காரணங்களை முன்வைக்கிறார்கள்.
(1) தாழ்ந்து அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு சமூகத்தின் மனோநிலை அதனால் மாறுகின்றது.
(2) தேக்கம், செயலின்மை நீங்கி அவற்றினிடத்தில் இயக்கமும் ஊக்கமும் பிறக்கின்றன.
(3) அடிமைப்பட்டுக் கிடந்தபோது அணிந்திருந்த ஆடைகளை கழற்றி எறிந்துவிட்டால் அவ்வாடைகளோடு அடிமைச்சிந்தனையும் உட்கோளாறுகளும் தானாக வெளியேறிவிடும். அடிமைப்பட்டுக் கிடந்த போது வலுக்கட்டாயமாக விரும்பி ஏற்றுக்கொண்ட அம்சங்களும் மனதைவிட்டு நீங்கிவிடும்.
(4) புதிய ஆடைகளை வடிவமைக்கும்போது அதிலும் குறிப்பாக ஜெயித்த சமூகத்தின் ஆடைகளை விரும்பித் தேர்ந்தெடுக்கும்போது சமூகத்தின் உளவியலும் வாழ்க்கையும் ஒரேயடியாக மாறிப் போய்விடுகின்றது. முன்னேற வேண்டும் என்ற ஊக்கமும் வளர்ந்த சமூகமாக மாறவேண்டும் என்று உத்வேகமும் இயல்பாகவே எழுகின்றது. வளர்ந்துகொண்டே செல்லும் சமூகங்களின் அணியில் தானும் நிற்பதாக அச்சமூகம் உணருகின்றது.
(5) முன்னேறிய சமூகமொன்றின் பழக்கவழக்கங்களை அது கைக்கொள்ளும்போது அவர்களிடம் காணப்படும் நாகரீகத்தையும் நளினத்தையும் செயலூக்கத்தையும் இயக்கத்தையும் பெற்றுக் கொள்கின்றது. ஏனென்றால் நாகரீகமும் செயலூக்கமும் கொண்ட ஒரு சமூகத்தின் உடைகளையும் பழக்கவழக்கங்களையும் மேற் கொள்ளும்போது அதன் விளைவாகத் தோன்றும் மற்ற அம்சங்களையும்கண்டிப்பாக மேற்கொண்டே ஆக வேண்டும். அப்போது தான் நாகரீகமும் செயலூக்கமும் கொண்டவர் களாக நாமும் மாற முடியும்.
ஆடைகளை மாற்ற முயற்சிப்போர் இப்படி பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்கள். ஆனால், ஆழ்ந்த சிந்தனை, தொலை நோக்குப் பார்வையின் விளைவாகப் பிறந்த கருத்துகளாக இவை இல்லை. மேலோட்டமான எண்ணங்களாகவே தென்படுகின்றன. தங்களுக்கு ஆதரவாக பல பெரிய மனிதர்களின் கருத்துகளையும் அவர்கள் முன்வைக்கிறார்கள். அந்தப் பெரிய மனிதர்கள் உண்மையில் ‘பெரிய மனிதர்கள்’ எல்லாம் கிடையாது; சொல்லப் போனால் இவர்களைப் போன்று அவர்களும் வெளிப்படையான விஷயங்களைப் பார்த்து மேலோட்டமாக கருத்து சொல்லக்கூடியவர்களே!. ஆழமான அறிவும் கிடையாது; தொலைதூரப் பார்வையும் கிடையாது.
களேபரமான சூழ்நிலைகளில் ஒருவர் கடகடவெனச் செயல்பட்டு தன்னுடைய சமூகத்தைக் காத்துநிற்பாரேயானால் கண்டிப்பாக அவர் மரியாதைக்குரியவர்தாம்! அதில் சந்தேகமே இல்லை. இருப்பினும் அந்த மரியாதைக்கும் ஓர் எல்லை இருக்கின்றது. எந்தளவுக்கு மரியாதை செய்யப்பட வேண்டுமோ அந்தளவுக்கே அவர் மரியாதை செய்யப்படுவார். அவர் செய்துகாட்டிய வெற்றிச் செயலின் கோணத்திற்குத் தக்கவாறே மரியாதை செய்யப்படுவார். ஒரேயடியாக அவரை மேலே தூக்கி மிகப்பெரிய சிந்தனையாளர்; சமுதாயச்சிற்பி என்றெல்லாம் அவரை அழைத்தால் அது அறிவுடைமையே அல்ல!.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றங்கரை உடைந்துவிட்ட போது ஓர் எஞ்சினியர் சுறுசுறுப்பாக செயல்பட்டு விரைந்து அந்த உடைப்பை சரிசெய்துவிட்டார் என்பதற் காக அவரைப் போய் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு மாபெரும் சிந்தனையாளர் என்றும் காக்கவந்த நம்பிக்கை நட்சத்திரம் என்றும் புகழ்மாலை சூட்டி, நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பையே அவரிடம் ஒப்படைத்துவிடுவது அறிவுக்கு மாற்றமான செயலாகத் தென்படுவதைப் போலத்தான் இதுவும்!.
ஆடைகளை மாற்றியே ஆகவேண்டும் என்று வாதாடு பவர்களுக்குப் பதிலளிக்க மேலே விளக்கப்பட்டுள்ள பொதுவான நியதிகளே போதுமானவை. காலசூழ்நிலை களின் காரணமாக மக்களின் மனங்களின் சிலபல விஷயங் கள் ஊறிப் போய்விட்டதால் அவற்றைக் களைவது எளிதான காரியமாக இல்லை. ஆகையால் தேவைகருதி அதற்கான ஆதாரங்களை காட்டமாக வலியுறுத்த வேண்டியுள்ளது.
(1) எந்தவொரு சமூகத்தின் ஆடையும் நிரந்தரமாக நிலைத்திருப்பதில்லை. மாறாக, இயற்கையான காரணங்களினாலும் செயற்கையான காரணங்களினாலும் அது மாறிக்கொண்டே இருக்கும் என்பதை முன்பே பார்த்து வந்துள்ளோம். அந்த காரணங்களில் ஏதேனும் ஒன்றின் தாக்கத்தால் ஒரு சமூகத்தின் ஆடையமைப்பில் மாற்றம் ஏற்பட்டால்தான் அதை இயற்கையான மாற்றம் என்று சொல்லமுடியும். அதல்லாமல் ஒரு சமூகத்தின் ஆடையை திடுதிப்பென்று மாற்றமுயல்வது இயற்கைக்கு மாற்ற மான திணிப்பாகவே முடியும்.
(2) சமூக நடைமுறைக்கும் அச்சமூகத்தின் ஆடைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. ஒரு சமூகத்தின் நடை முறைக்கும் அச்சமூகத்தின் பண்பாட்டுக்கும் பல்வேறு கோணங்களில் நீக்கமுடியாத பிணைப்பு நிலவுகின்றது. சமூக நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உடைகளில் மாற்றம் ஏற்படும்போது இந்தத் தொடர்புகளும் பிணைப்புகளும் அவ்வாறே தொடர்கின்றன. ஏனென்றால் அப்போது அச்சமூகத்தில் ஏற்படும் மாற்றம் சமூகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தி எல்லாவிடங்களிலும் வியாபித்து நிற்கின்றது. இயற்கைக்கு மாற்றமான முறையில் வேண்டுமென்றே செயற்கையாக ஆடையையும் சமூக நடை முறையையும் மாற்றினால் அல்லது ஆடையை மட்டும் மாற்றினால் ஒட்டுமொத்த சமூக வாழ்க்கையிலும் ஒரு விதமான அன்னியத்தன்மையும் தொடர்பின்மையும் நிலவும். வாழ்க்கையின் மற்றமற்ற பகுதிகள் இம்மாற்றத்தோடு ஒத்துழைக்காததால் ஒன்றோடு ஒன்று இணையாமல் தனித்தே காணப்படும்.
(3) ஒரு சமூகம் வளர்ச்சியடையும்போது — நாகரீகம், பண்பாடு, நடைமுறைகள், சிந்திக்கும் பாங்கு, ஒழுக்கம், ரசனை போன்றவற்றில் செழித்தோங்கி உயர்வடையும் போது அவற்றின் அடையாளங்கள் உடைகளில் வெளிப் படுவதுதான் இயற்கையானது. இப்பாதையில் அது மெல்ல மெல்ல வளர்ச்சியடையும்போது அதற்கேற்றாற் போல அதனுடைய ஆடையும் சிறுகச்சிறுக மாற்ற மடைந்துகொண்டே செல்லும். ஒரு கூட்டமைப்பின் உள்ளமை வளர்ச்சி காணும்போது தன்னுடைய வெளித் தோற்றத்திலும் தேவையான மாற்றங்களை அது தானாகவே மேற்கொள்ளும்; தனக்குத் தேவையான பொருத்தமான அம்சங்கள் வெளியில் வேறெங்கும் காணக் கிடைத்தால் அவற்றையும் பெற்றுத் தனதாக்கிக் கொள்ளும். வெளியிலிருந்து பெறப்படும் அத்தகைய அம்சங்கள் வெகுநேர்த்தியாக அதனோடு பொருந்திப் போகும். முன் னேற்றம், மறுமலர்ச்சியின் இயற்கையான இந்த வழிமுறையை அறவே புறக்கணித்துவிட்டு அணிந்திருக்கின்ற ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு ஒரே நொடி யில் வேறு ஆடையை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் மாற்றத்தை எதிர்பார்த்தால் என்னவாகும்? கற்பனையிலும் கூட நடக்காது.
(4) ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு ‘நிலை’ இருக்கின்றது. அந்நிலையை மேம்படுத்தவும் முன்னேற்றவும் எந்த முயற்சியும் எடுக்காமல், ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கான வழிவகைகளை ஆராயாமல் அச்சமூகத்தின் ஆடையையும் நடைமுறைகளையும் மாற்ற நினைப்பது எவ்வாறு உள்ளது தெரியுமா? பருவமடையாத ஒரு குழந்தையை இயற்கைக்கு மாற்றமான ஒரு சூழலில் வைத்து போஷாக்கான உணவுகளையும் ஹார்மோன் ஊசிகளையும் உடம்பில் செலுத்தி பருவமடைய வைப்பதைப் போன்றது. இவ்வழியில் பருவமடையும் குழந்தையின் உடல்நிலை சீர்குலைந்து போவதோடு அதனுடைய சிந்தனையும் வெகுவாக குழம்பிப்போகும். வெளியிலிருந்து வலுக்கட்டாயமாக ஒரு சமூகத்தின் மீது நாகரீகத்தையும் பண்பாட்டையும் திணித்தால் அதனுடைய சமூக உள்ளமையும் ஒழுக்கமும் சிந்திக்கும் மனப்பாங்கும் இதைவிடவும் அதிகமாக சீர்கெட்டுப் போகும்.
(5) எந்தவொரு சமூகமும் ஒரு குறிப்பிட்ட வகை ஆடையையும் குறிப்பிட்ட அளவு சமூகப் பொறுப்புகளையும் ஏற்கின்றது. அதற்குப் பொருந்தாத ஆடைகளையும் அதனால் சுமக்க இயலாத பொறுப்புகளையும் அதன்மீது திணித்தால் செயலுலகில் அழிவையே அதற்குப் பெற்றுத் தரும். இன்னொரு சமூகத்தின் ஆடையையும் சமூக நடை முறைகளையும் அது பெற்றுக்கொள்ளும்போது பண்பாட்டின் வேறு அம்சங்களையும் அது கண்டிப்பாக பின்பற்ற முற்படும். அவ்வாறு அது பின்பற்றும்போது அதனால் ஏற்படும் விளைவுகள் அதற்கு பேரழிவையே ஏற்படுத்தும்.
(6) ஒரு சமூகத்தின் தனித்தன்மையை அச்சமூகத்தின் ஆடையும் அதனுடைய மொழியும் எழுத்து வடிவமும் தான் வெளிப்படுத்துகின்றன. ஏதேனும் ஒரு சமூகம் இவற்றைத் தொலைத்துவிட்டால் அது தன்னுடைய தனித் தன்மையை மெல்லமெல்ல இழந்து ஒரு கட்டத்தில் பிற சமூகங்களோடு கரைந்து போய்விடுகின்றது.
முன்னொரு காலத்தில் சீரும்சிறப்புமாக இவ்வுலகில் வாழ்ந்து பிறகு காலமாற்றத்தில் அழிந்துபோன சமூகங்கள் இவ்வாறுதான் அழிந்துபோயுள்ளன. ஒரு சமூகம் அழிந்து போய்விட்டது என்றால் அச்சமூகத்தைச் சேர்ந்த மக்கள் எல்லாம் அழிந்துபோய் விட்டனர் என்று பொருளல்ல!. அச்சமூகத்தின் வம்சாவழிகள் இன்றும் வாழவே செய்கிறார்கள். அச்சமூகம் தன்னுடைய இருப்பை அறிவிக்கும் தனித்தன்மைகளை இழந்து விட்டது; தன்னுடைய வேர்களைத் தொலைத்துவிட்டது. அச்சமூக மக்கள் தங்கள் அடையாளங்களை அழித்து விட்டனர்; அல்லது அழிந்துபோகுமாறு விட்டு விட்டனர். மற்றமற்ற சமூகங்களின் ஆடைகளையும் மொழியையும் எழுத்துவடிவம் – லிபியையும் சமூக நடைமுறை களையும் பின்பற்றத் தொடங்கி அவற்றை தங்களுடையதாகவே ஆக்கிக்கொண்டனர்.
ஒருகட்டத்தில் அவர் களுடைய சமூகத்தை பிற சமூகங்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் அடையாளங்கள் எல்லாம் தொலைந்து போய் அச்சமூகமே மறைந்து விட்டது.
தங்களுடைய முட்டாள் தலைவர்களை வழிகாட்டிகளாக எண்ணிக்கொண்டு கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றும் சமூகங்களின் நிலை இன்றைக்கும் இதுதான்!.
(7) ஒரு சமூகம் பிறிதொரு சமூகத்தின் உடையையும் பழக்க வழக்கங்களையும் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றது என்றால் அது, படு பயங்கரமான தாழ்வு மனப்பான் மைக்கு பலியாகி விட்டது; அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்கின்றது என்றுதான் பொருள்!. தன்னைத்தானே அது தாழ்வாகவும் இழிவாகவும் கருதுகின்றது; பெருமையோடு மற்றவர்களிடம் பிரஸ்தாபித்துக் கொள்ள அதனிடம் எதுவுமே இல்லை; வெட்கப்படாமல் மற்றவர்கள் பார்க்கப்பார்க்க வெளிப்படையாகப் பின்பற்றும் அளவுக்கு எதனையும் அதனுடைய முன்னோர்கள் விட்டுச் செல்லவில்லை என்றுதான் பொருள்!.
அதனுடைய ஒட்டுமொத்த சமூக ரசனை வீழ்ந்து கிடக்கின்றது. அதனுடைய சிந்தனை பிடிப்பற்றுப் போய்விட்டது. அதனிடம் எத்தகைய படைப்பாற்றலும் இல்லை. தனக்கென்று ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கி கொள்ளக்கூட அதற்குத் தகுதியில்லை. அதனால் தான் தன்னை நாகரீகமாகக் காட்டிக்கொள்ள வேறுவழி இல்லாமல் பிற சமூகங்களிடம் மடியேந்துகின்றது. பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம், அழகியல், ரசனை எதுவுமே தன்னிடம் இல்லை என்பதை வெட்கமில்லா மல் உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது.
இவையனைத்தும் பிற சமூகங்களிடம்தான் உள்ளன; அவையே பண்பாட்டில் சிறந்தவை; பின்பற்றத் தகுந்தவை என்பதையும் ஆயிரக்கணக்கான நூற்றுக்கணக்கான பழம்பெருமை வாய்ந்த வரலாறு எங்களுக்கு இருந்தும் அக்காலங்களில் நாங்கள் மிருகங்களாக வாழும்முறை அறியாதவர்களாகவே வாழ்ந்து வந்துள்ளோம்; மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தருகின்ற குறைந்தபட்சம் வாழ்வதற்காவது வழிவகுக்கின்ற எந்த விஷயத்தையும் உருவாக்குகின்ற தகுதி எங்களுக்கு இல்லை என்பதையே பறைசாற்றுகின்றது.
ஒரு சமூகம் தன்மானத்தை ஒட்டுமொத்தமாக தொலைத்து விடவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் பாக்கி வைத்துள்ளது என்றால் அவமானத்தின் இழிவின் விளம்பர வடிவங்களாக மாறி வாழும் இந்த வாழ்வை ஒருபோதும் விரும்பாது.
வரலாற்றை உற்றுப்பார்த்தால் இவற்றுக்கான உதார ணங்களை நம்முடைய கண்களால் கண்டு கொள்ளலாம். இரண்டே இரண்டு நிலைகளில்தான் ஒரு சமூகம் இந்த அளவுக்கு அவமானத்தையும் இழிவையும் சகித்துக் கொள்ளும்.
அ) வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து துவண்டுபோய் எதிரியின் முன்னால் அது தன்னுடைய எல்லா ஆயுதங் களையும் கீழே போட்டுவிட்டு தளர்ந்து நிற்கும். உதாரணம் : இந்தியா, துருக்கி, ஈரான்.
ஆ) தனக்கென்று ஒரு பெருமைமிக்க வரலாற்றையோ மரபையோ (Tradition) பண்பாட்டையோ அது கொண்டிருக்காது. புதிதாக ஒன்றை தோற்றுவித்துக் கொள்ளும் படைப்பாற்றலும் அதனிடம் இருக்காது. அன்று பிறந்த பாலகனைப் போல (Upstart) அது உலக நாடுகளிடையே காணப்படும். உதாரணம் : ஜப்பான்.
(8) ஒரு சமூகத்திடமிருந்து ஏதேனும் ஒன்றைப் பெற வேண்டுமென்றால் பெறுவதற்கான தகுதி ஒரு பொருளுக்கு இருக்குமென்றால் அது அறிவியல் கண்டுபிடிப்புகளும் அதன் விளைவுகளும்தான்!. அறிவியல் கண்டுபிடிப்புகளின் காரணமாகவும் அதைச் சிறப்பாக பயன்படுத்தியதன் காரணமாகவும் ஒரு சமூகம் உலகில் வெற்றி பெற்றுள்ளதென்றால் தாராளமாக அதனைக் கைக்கொள்ளலாம். அதேபோல அதனுடைய வரலாற்றிலும் அதனுடைய இயக்கங்களிலும் ஒழுக்க அம்சங்களிலும் சிறப்பான கூறுகள் காணப்பட்டால் அதைக் கண்டிப்பாக கைக்கொள்ளத்தான் வேண்டும். அது பெற்றுள்ள வெற்றியையும் அதனுடைய வளர்ச்சியையும் ஆய்வுக் கண்கொண்டு உற்றுநோக்கி சிறப்புக்கூறுகளாக அடையாளம் காண்பதையெல்லாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மனிதகுலம் முழுமைக்கும் சொந்தமானவை இவை அனைத்தும்!. இனம்,தேசியம் போன்ற காரணங்களால் இவற்றைப் பெறாது போனால் அது வடிகட்டிய முட்டாள்தனம் ஆகும். ஆனால், இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒரு சமூகத்திடமிருந்து அது அணிகின்ற ஆடைகளையும் சாப்பிடவும் தூங்கவும் அது கடைப்பிடிக்கின்ற பழக்க வழக்கங்களையும் அதனுடைய உணவுகளையும் கேட்டுப்பெறுவது, அதனையே வளர்ச்சிக்கான அடையாளமாகக் கருதிக்கொள்வது என்பதெல்லாம் கடைந் தெடுத்த சிந்தனைக் கோளாறேயாகும்.
கோட்சூட் அணிந்து கொண்டதாலும், டை கட்டிக்கொண்டதாலும், ஷன் போட்டுக் கொண்டதாலும்தான் ஐரோப்பா முன்னேறியது; கரண்டியால் அவர்கள் உணவை உண்பதுதான் அவர்களுடைய வெற்றிக்கு மூல காரணம்; நளினமாக அவர்கள் வாழ்வதாலும் பவுடர், லிப்ஸ்டிக் போன்ற மேக்கப்பை உபயோகிப்பதாலும் தான் அவர்கள் உயர்ந்த இடத்திற்கு சென்றடைந்துள்ளார்கள் என்று எந்த அறிவாளியாவது நினைப்பானா? அப்படியில்லை என்றால் — அப்படியில்லை என்பது தானே உண்மை! — சீர்திருத்தம் பற்றிப் பேசுவோர் எடுத்தவுடன் இவற்றைப் பற்றியே குறிப்பிட என்னதான் காரணம்? அவர்கள் அனைவரும் ஒரு விஷயத்தை அடியோடு மறந்துவிடுகிறார்கள்.
இன்றைய ஐரோப்பாவின் பகட்டுக்கும் செழுமைக்கும் பின்னால் பன்னூற்றாண்டு கால உழைப்பும் விடாமுயற்சியும் மறைந்து கிடக்கின்றது. அயராத உழைப்பையும் நிலைகுலையாத உறுதியையும் கொட்டி பாடுபடும் எந்தவொரு சமூகமும் — இன்றைய ஐரோப்பா அடைந்துள்ளதைப் போன்று — பிறர் கண்டு பொறாமை கொள்ளத்தக்க இந்த முன்னேற் றத்தை கண்டிப்பாக ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் ஆடையையும் அவர்களின் பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிக்கத் தொடங்குவதென்பது இயற்கைக்கு முரணான பகுத் தறிவுக்கு ஒவ்வாத விஷயம் என்பதையே மேற்கண்ட ஆதாரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சாதாரணமான சூழ்நிலைகளில் எந்தவொரு மனிதனும் தானும் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களும் வாழ்ந்துவருகின்ற வாழ்க்கை முறைக்கு மாற்றமானதொரு வாழ்க்கை முறையை வாழத் தயாராவதில்லை. அப்படி ஏதாவது நிகழ்ந்தால் அது சூல்கொண்ட பெண்கள் மண்ணைச் சாப்பிடுவதைப் போல அசாதாரணமான சூழலையே எடுத்துக்காட்டும்.
சமயப்பார்வை
இதுவரை நாம் இப்பிரச்சனையை சமூகவியல் கோணத்தில் தான் பார்த்து வந்தோம். இப்போது சமயக் கோணத்திலும் பார்ப்போம்.
இஸ்லாம் என்பதொரு இயற்கையான மார்க்கம். மனித அறிவுக்கும் மனித இயல்புக்கும் மிகவும் பொருத்தமான வழிமுறைகளையே அது முன்வைக்கின்றது. நாம் அணிந்திருக்கின்ற கலர் கலரான கண்ணாடிகளை கழற்றிவிட்டு சாதாரணமாகப் பார்த்தோமென்றால் இஸ்லாம் முன்வைக்கின்ற முடிவுகளைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
தன்னைப் பின்பற்றுகின்ற மக்கள் குறிப்பிட்டதோர் ஆடையைத்தான் அணியவேண்டும் என்று அது அறிவுறுத்துவதில்லை. மாறாக, இயல்பாக மக்களின் வாழ்க்கைமுறையும் ஆடை அமைப்பும் எவ்வாறு வளர்ச்சி காண்கின்றனவோ அவற்றை அவ்வாறே தக்க வைக்கின்றது. கூட்டமைப்புக் கோட்பாட்டையும் ஒழுக்கத்தையும் மட்டும் மனதில் கொண்டு அது ஒரு சில அறிவுறுத்தல்களை மட்டும் வழங்குகின்றது.
எந்தவொரு சமூகமாக இருந்தாலும் இந்த நியதிகளை மனதில் கொண்டே தத்தமது ஆடைகளையும் பழக்க வழக்கங்களையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றது. அவற்றில் முதல் விஷயம் மறைக்கப்படவேண்டிய பகுதிகள் (அவ்ரத்). ஓர் ஆண் – அவன் உலகின் எந்தப் பகுதியில் எந்த நாட்டில் வசித்தாலும் சரி- தன்னுடைய உடலில் தொப்புள் முதல் முழங்கால் வரையுள்ள பகுதியை கண்டிப்பாக மறைத்தே ஆகவேண்டும்; ஒழுக்க அடிப்படையில் அது கட்டாயம் என்று இஸ்லாம் கூறுகின்றது. அதுபோலவே பெண்கள் – உலகின் எந்தப் பகுதியில் எந்த நாட்டில் வசித்தாலும் சரி- முகத்தையும் கைகால்களையும் தவிர உடலின் மற்ற அனைத்து பாகங்களையும் கண்டிப்பாக மறைத்தே ஆகவேண்டும் என்று கூறுகின்றது.
பெண்களைப் பொருத்தவரை ‘மறைவிடங்கள்’ (அவ்ரத்) என்பது வேறு! ‘ஹிஜாப்’ என்பது வேறு! இரண்டையும் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். கணவனைத் தவிர வேறு யாருக்கும் தந்தையோ பிள்ளையோ யாருக்கும் காட்டக்கூடாத பகுதிகள் ‘மறைவிடங்கள்’ (அவ்ரத்) எனப்படும். மறைவிடங்களுக்கும் மேலாக அணிய வேண்டியதுதான் ‘ஹிஜாப்’ ஆகும். அதாவது நெருங்கிய சொந்தக்காரர்களையும் வேற்று வெளியாட்களையும் இஸ்லாம் பிரித்துப் பார்க்கின்றது. வேற்றுவெளியாட்களுக்கு முன்னால் தன்னுடைய அழகையும் அலங்காரத்தையும் ஒரு பெண் காட்டலாகாது என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
ஏதேனும் ஒரு சமூகம் இந்த நியதிகளுக்கு அப்பாற்பட்டு உடைகளை உடுத்துகின்றது எனில், அவர்களிடம் தமது உடைகளை சீர்படுத்திக் கொள்ளுமாறு இஸ்லாம் கேட்டுக் கொள்ளும். இந்த நியதிகளுக்கு உட்பட்டு அச்சமூகம் ஆடைகளை அணியத் தொடங்கிவிட்டால் போதும். அது எப்பேற்பட்ட ஆடைகளை அணிகின்றது; எந்த ஸ்டைலை கடைப்பிடிக்கின்றது என்பதைப் பற்றி யெல்லாம் இஸ்லாம் அக்கறை இரண்டாவதாக, ஆடைஅணிகலன்கள் விஷயத்தில் இஸ்லாம் வேறுசில கருத்துகளையும் முன்வைக்கின்றது.
ஆண்கள் பட்டாடைகளை உடுத்தக்கூடாது; பொன் வெள்ளி ஆபரணங்களை அணியலாகாது.ஆண்களாயினும் பெண்களாயினும் பகட்டான தற்பெருமையை தம்பட்டம் அடிக்கும் வகையிலான ஆடைகளை உடுத்தக்கூடாது; ஆடம்பரமான, உல்லாச வாழ்க் கையை விளம்பரப்படுத்தும் ஆடைகளை தவிர்க்க வேண்டும். கர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் தரையில் இழுத்துக் கொண்டு செல்லவைக்கும் உடைகளை புறக்கணிக்க வேண்டும். மற்றவர்களுக்கு முன்னால் தன்னுடைய உயர்வை வெளிக்காட்டும் வகையில் மனிதர்கள் ஆடை அணிவதை இஸ்லாம் சமூகத்திலுள்ள மற்ற மக்களிடையே ஆடைகளின் மூலமாகவே தங்களுடைய அந்தஸ்த்தையும் குடிச் சிறப்பையும் சொல்லாமல் சொல்லிக்கொள்ளும் தங்களுடைய மதிப்பை பறைசாற்றிக் கொள்ளும் மனிதர் களின் ஆடைகளை இஸ்லாம் ‘ஹராம்’ என்று சொல்கின்றது. உல்லாசத்தையும் மினுமினுப்பையும் வளர்க்கும் ‘நயத்தக்க’ ஆடைகளை அணியாதீர்கள் என இஸ்லாம் அறிவுறுத்துகின்றது.
இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு நீங்கள் அணியும் ஆடை எதுவாயினும் அது உங்கள் நாட்டின் ஆடையோ சமூகத்தின் ஆடையோ இஸ்லாமிய ஆடையேதான்!.
மூன்றாவதாக, ஒரே இறைவனை விட்டுவிட்டு வேறு வேறு கடவுளர்களை வணங்குவதை இஸ்லாம் முழு மூச்சாக எதிர்ப்பதால் அவற்றை அடையாளப்படுத்தும் உடைகளையோ அவற்றின் சின்னங்களைத் தாங்கிய உடைகளையோ அல்லது ஏதேனும் ஒரு சமயநெறி தனக் கென்று உரித்தாக்கிக் கொண்ட உடைகளையோ அணியவே கூடாது என இஸ்லாம் தடுக்கின்றது. உதாரணமாக சிலுவை, சித்திரங்கள், உருவப்படங்கள், பூணூல் இன்னும் இதுபோன்ற இஸ்லாமல்லாத கோட்பாடுகளை பிரதிபலிப்பவை.
தோற்றத்திலும் வேறுபாடு
இத்தகைய சமூக-ஒழுக்கவியல் சீர்திருத்தங்களைக் கடைப்பிடிக்கும் ஒரு சமூகத்தின் ஆடையமைப்பு இஸ்லாம் விரும்புகின்ற வலியுறுத்துகின்ற இறையச்ச பண்பாட்டை வெளிப்படுத்தும் விதத்தில் கண்டிப்பாக அமையும். அதே சமயம் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இஸ்லாம் கூறவே செய்கின்றது. முஸ்லிம்களுடைய உடையமைப்பில் மற்றவர்களை விட்டும் அவர்களை வித்தியாசப்படுத்தும் ஏதேனும் ஓர் அம்சம் கண்டிப்பாக இருந்தாகவேண்டும்; ஒருவரோடொருவர் கலக்கும்போதும் முஸ்லிம்கள் தனியாகத் தெரிய வேண்டும்; அவர்களிடையிலான கூட்டுவாழ்வும் அவ்வுடையால் பிரகாசிக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. அதற்காக எந்தவொரு வித்தியாசமான உடையமைப்பையும் இஸ்லாம் முன்மொழியவில்லை. மாறாக, அதனை பொதுமக்களின் விருப்பத்திற்கே விட்டு விட்டது.
அரபு மக்களிடையே இஸ்லாமிய இயக்கம் தன்னுடைய பயணத்தைத் தொடங்கியபோது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மற்ற முஸ்லிம்களும் பொதுவாக அரபுக்கள் அணியும் அவர்களுடைய மரபுடையையே அணிந்தார்கள். ஆனால் மற்ற இணை வைப்பாளர்களிடமிருந்து முஸ்லிம்களை வேறுபடுத்தும் விதமாக முஸ்லிம்கள் தலையில் தொப்பிக்கும் மேலாக தலைப்பாகை அணிய வேண்டும் என்று இறைத்தூதர் கட்டளையிட்டிருந்தார்கள்.
அபுதாவுது, நஸாயீ மற்றும் முஸ்தத்ரக் நூற்களில் பதிவாகியுள்ள ஹதீஸ் ஒன்றில் ‘தொப்பியின் மீதாக தலைப் பாகை கட்டுவதால் நம்முடைய உடைகளுக்கும் முஷ்ரிக் கீன்களின் உடைகளுக்கும் இடையே வேறுபாடு தோன்றி விடும்’ என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
எல்லா காலங்களிலும் கட்டாயமாக தலைப்பாகை அணிந்தே ஆக வேண்டும்; அது ஸுன்னத் என்று ஒரு சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். பின்பற்றி வருகிறார்கள். ஹதீதை முறையாக விளங்காததால் வந்த விளைவு இது!.
பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக இல்லாத ஒரு சமூகத்தில் முஸ்லிம்கள் வாழும்போது தங்களை வேறுபடுத்திக் காட்டும் வகையிலான உடைகளை முஸ்லிம்கள் அணிந்தாக வேண்டும். ஏதேனும் ஒரு வகையில் அவ்வேறுபாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்பதே ஸுன்னத்தான வழிமுறை ஆகும். அதற்காகத் தான் இறைத்தூதர் தலைப்பாகைக்குக் கீழாக தொப்பி அணிந்துள்ளார்கள். தொப்பியே அணியாத ஷிர்க் செய்யும் மக்களிடையே வாழும்போது அவர்களை விட்டும் வேறுபடுத்திக்காட்ட தொப்பியே போதுமானது என்றால் தொப்பியை மட்டும் அணிந்தால் போதும்!.
அரபுக்கள் ஒன்று தொப்பி அணிவார்கள் அல்லது தலைப்பாகை அணிவார்கள். தொப்பி அணிந்து அதற்கு மேலாக தலைப்பாகை அணிவது முஸ்லிம்களின் வழக்கமாக ஆகிப்போனது. தம் சமகாலத்தைய பொதுமக்களிட மிருந்து முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்ட இந்த வித்தியாசம் போதுமானது என்று இஸ்லாமிய இயக்கத் தலைவர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கருதினார்கள்.பிற்காலத்தில் அரபுலகம் முழுவதும் இஸ்லாம் பரவிய பிறகு, அதற்குத் தேவையில்லாமல் போய்விட்டது. அராபியரின் ஆடையே இஸ்லாமியர்களின் ஆடையாக ஆகிவிட்டது. அந்த உடையை அணியும் இறைநிராகரிப்பாளர்கள் எவரும் எஞ்சியிருக்கவில்லை. ஆகையால் வேறுபாடு தேவையில்லாமல் போய்விட்டது.
அதேபோன்று ஈரான் போன்ற தேசங்களில் இஸ்லாம் பரவிய போது புதிதாக இஸ்லாமைத் தழுவும் மக்கள் ஒன்று அராபியர்களின் உடையை அணிவார்கள். அல்லது தங்கள் நாட்டு உடையோடு தலைப்பாகை, அபா போன்று வேறு ஏதேனும் ஒன்றை அதிகபட்சமாக அணிவார்கள். ஏனென்றால் அவர்களுடைய நாட்டு உடை முஸ்லிமல்லாதோரின் உடையாக இருந்ததால் முஸ்லிம்களுடைய கூட்டமைப்பு வாழ்க்கைக்கு அது ஒத்துவரவில்லை. மற்றவர்களிடமிருந்து முஸ்லிம்களை வேறு படுத்திக் காட்டும் ஏதேனும் ஓர் அம்சம் கண்டிப்பாக இருந்தாகவேண்டும்.அதேசமயம் அந்நாட்டு மக்கள் அனைவருமே இஸ்லாமை ஏற்றுக்கொண்டுவிட்டபோது இஸ்லாமிய உடை வரம்புகளை தங்களது உடைகளிலும் பின்பற்றத் தொடங்கி விட்டபோது அந்நாடுகளின் பல்வேறு பகுதி மக்கள் உடுத்திவந்த பல்வேறு வகைப்பட்ட உடைகளும் இஸ்லாமிய உடைகளாகவே ஆகிவிட்டன.
தற்காலத்திலும் ஏதேனும் நாட்டு மக்கள் ஒட்டுமொத்த மாக இஸ்லாமைத் தழுவிவிட்டார்களென்றால் அந்நாட்டு உடை எப்படியிருப்பினும் அது இஸ்லாமிய உடையாகவே கருதப்படும். அஃதில்லாது ஒரு நாட்டில் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதோரும் கலந்து வாழ்கிறார்கள் என்றால் முஸ்லிம்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் உடையே இஸ்லாமிய உடையாகக் கருதப்படும். நாட்டின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிமல்லாதோராக இருக்கும்போது இஸ்லாமை ஏற்றுக் கொள்ளும் ஒருவர் கண்டிப்பாக ‘இஸ்லாமை’ வெளிப்படுத்தும் வகையில் தனது உடையை அமைத்துக் கொண்டே ஆகவேண்டும்.
முதுமையை அடைந்துவிட்ட ஆண்கள் தங்களுடைய நரைத்த தாடிக்கு மருதாணி அல்லது அதைப்போன்ற சாயத்தைப் பூசிக்கொள்ளுமாறு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதி வழங்கியுள்ளார்கள். அவ்வனுமதியின் போதும் அதற்கான காரணத்தை தெரியப்படுத்தியுள்ளார்கள். ‘யூதர்களும் கிறிஸ்துவர்களும் அவ்வாறு பூசுவதில்லை!. அவர்களுக்கு மாறு செய்யும் விதத்தில் நீங்கள் பூசுங்கள்’ என்று அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்கள்.
ஒப்புமைப் பிரச்சனையும் இங்கு எழுகின்றது.
ஒப்புமை என்றால் என்ன?
(அ) தமக்கென்று உள்ள கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இழிவாகக் கருதி மற்றவர்களின் கொள்கை, கோட்பாடுகளைப் பின்பற்றத்
(ஆ) இஸ்லாமோடு சம்பந்தமே இல்லாத இன்னொரு கொள்கைக்காக எல்லாவகையான அர்ப்பணிப்பு, தியாகங்களையும் செய்து அதற்கென்றே ஆகிப்போவது.
(இ) தம்முடைய நடை, உடை, பாவனைகள், பழக்க வழக்கங்களை வேறொரு சமூகத்தைப் போல மாற்றிக் காட்டுவது.
(ஈ) தம்முடைய கொள்கைக்கென்றே உள்ள சிறப்புக் கூறுகளை விட்டுவிட்டு வேறொரு சமூகத்தின் கூறுகளைப் பின்பற்றத்
(உ) தோற்றத்திலும் காட்சியிலும் இஸ்லாமுக்கு சம்பந்தமே இல்லாத இன்னொரு சமூகத்தினரைப் போலக் காட்சியளிப்பது.
‘ஒப்புமை’ என்றால் யாரேனும் ஒருவரை ‘இமிடேட்’ செய்வது என்றும் பொருள்!. பொதுவாக நான்கு விஷயங்களில் ‘ஒப்புமை’ ஏற்படலாம். அவை குறித்த இஸ்லாமின் பார்வையை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
1) பாலின ஒப்புமை அதாவது ஆண்கள் பெண்களைப் போன்றும் பெண்கள் ஆண்களைப் போன்றும் உடைகளை அணிந்துகொள்வது. இயற்கைக்குப் பொருந்தாத விஷயம் என்பதாலும் முரண் மனோநிலையை அது வெளிப்படுத்துகின்றது என்பதாலும் இஸ்லாம் அதை சபிக்கப்பட்டதாக கருதுகின்றது. ஆண்களுடைய உடைகளை அணியும் பெண்களையும் பெண்களுடைய உடைகளை அணியும் ஆண்களையும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெளிப்படையாகவே சபித்துள்ளார்கள்.
இயல்பான மனோநிலை கொண்ட எந்தவொரு மனிதனும் இத்தகைய உடை அணிவதை இறைத்தூதர் கருதியதைப் போன்று சபிக்கப் பட்டதாகவே கருதுவான். ஆண்களைப்போல நடந்து கொள்ளும் பெண்களும் பெண்களைப் போல நடந்து கொள்ளும் ஆண்களும் — அது எந்த விகிதத்தில் இருந்தாலும் — வெறுக்கத்தக்கவர்களே! அத்தகையோரைப் பார்த்தவுடன் மனதில் வெறுப்பு மண்டுகின்றது.
2) இன ஒப்புமை அதாவது ஒரு சமூகமக்கள் அத்தனை பேரும் இன்னொரு சமூகமக்களின் ஆடையை அணியத் தொடங்குவது. இயற்கைக்கும் பகுத்தறிவுக்கும் முரணான இந்தப் போக்கு ஒரு சமூகத்தில் தாழ்வுமனப் பான்மை மிகும்போதுதான் அப்பட்டமாக வெளிப்படு கின்றது. இஸ்லாமை ஒருபோதும் இதை அங்கீகரிப்பதில்லை. ஸஹாபாக்கள் குறைஷியரைப் போன்று உடைகளை அணிவதை விட்டும் தடுக்கப்பட்டிருந்தார்கள். வெற்றிகொண்ட நாடுகளில் வெற்றிகொள்ளப்பட்ட மக்கள் அராபியர்களைப் போன்று உடைகளை உடுத்தலாகாது என்று வன்மையாகத் தடுக்கப்பட்டார்கள். இஸ்லாமியக் கருத்தை உயிரோட்டத்தோடு வெளிப்படுத்திய செயல்
3) ஒருசில தனிப்பட்ட மனிதர்கள் வேறொரு சமூகத்தைச்சார்ந்தவர்களைப் போன்ற உடைகளை அணியத் தொடங்குவது. தனிநபர் ஆளுமையில் ஏற்படும் மிகப் பெரும் குறைபாடாகும் இது!.
தனிநபர் ஒழுக்கத்தின் குறைபாடாகும் இது. அங்கும் இங்கும் மாறும் பல்நிற பச்சோந்திக் குணம் உடையவர்களின் மனப்போக்கையே இது வெளிப்படுத்துகின்றது. அவர்களுடைய உள்ளத்தில் உறுதியில்லை. எப்பாத்திரத்திலும் இருக்கக்கூடிய திரவங்களின் மனோநிலை கொண்டவர்கள் அவர்கள்.
ஒழுக்கரீதியிலும் மிகவும் மோசமான செயலாகும் இது!. ஒருவன், தான் பிறந்த குடும்பத்தைக் கேவலமாக நினைத்து தன்னுடைய தந்தையை அவமானமாகக் கருதி வேறொரு குடும்பத்தைச் சேர்ந்தவனாக தன்னைக் காட்டிக்கொள்வதைப் போன்றது இது!.
தன்னுடைய சொந்தக் குடும்பத்தைப் பற்றி வெளியே சொல்வது அவனைப் பொருத்தவரை இழிவானதாக இருக்கின்றது.அவ்வாறே ஒரு சமூகத்தில் பிறந்தவன் பெருமையையும் புகழையும் பெறுவதற்காக இன்னொரு சமூகத் தின் உடைகளை அணிந்து கொள்கிறான் எனில், தான் பிறந்த சமூகத்தைக் கேவலமானதாகவும் இழிவான தாகவும் கருதுகிறான்; ‘அந்த’ சமூகத்தைச் சேர்ந்தவனாக தன்னைக் காட்டிக் கொள்வதில்தான் பெருமை இருக்கின்றது என்றும் கருதுகிறான் என்றுதானே பொருள்!.
சமூக உளவியலின்படி இது மிகவும் மோசமான எண்ணப் போக்காகும். இப்படிப் பட்டவர்கள் ‘இங்கும்’ இருப்ப தில்லை; ‘அங்கும்’ இருப்பதில்லை. (காண்க : அல் குர்ஆன் 4:143)
இவர்களுடைய நிலை வௌவாலைப் போன்று ஆகிவிடுகின்றது.(வௌவாலைப் பார்த்திருக்கிறீர்களா? அது ஒரு வினோதமான உயிரினம். பறப்பதால் அதை பறவை என்று சொல்லவும் முடியாது; பாலூட்டுவதால் விலங்கு என்று சொல்லவும் முடியாது. ஒருமுறை பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் சண்டை ஏற்பட்டபோது வௌவால் எந்தப் பக்கமும் சேராமல் ஓரமாய் ஒதுங்கி நின்றது. பறவைகள் வெற்றி பெற்றுவிட்டன. உடனே, ஓடோடிச் சென்று தன்னை பறவையாக இனங்காட்டிக்கொண்டது. அடுத்தமுறை நடந்த சண்டையில் விலங்குகள் வெற்றிபெற்றுவிட்டன. விலங்குகளிடம் சென்ற வௌவால், ‘சென்ற முறை நான் யார்? பறவையா, விலங்கா என்று சரிவரப் புரியாததால் பறவைகளோடு போய்ச் சேர்ந்து விட்டேன். இப்போது பாலூட்டுவதால் நான் ஒரு விலங்குதான் என்ற முடிவிற்கு வந்துவிட்டேன்’ என்றெல்லாம் நைச்சியமாகப் பேசி சேர்ந்து கொண்டது. காலம் மாறாமல் அப்படியே இருக்குமா?. காலம் சுழன்றது. மறுபடியும் போர் மூண்டது. இம்முறை வெற்றி பறவைகளுக்கு! தயங்கித் தயங்கி அங்கு சென்றது வௌவால். உண்மை வெளிப்பட்டு விட்டதல்லவா? பறவைகள் அதை அடித்துத் துரத்திவிட்டன)
அரபு மக்கள் பாரசீகம், ரோம தேசம் போன்ற வேறு நாடுகளில் சென்று குடியேற ஆரம்பித்தபோது அவர் களில் ஒருசிலர் தாழ்வுமனப்பான்மைக்கு பலியாகி அந்நாட்டிற்கேற்ப ரோமானிய, பாரசீக உடைகளை அணியத் தொடங்கினார்கள். ஸஹாபாக்கள் குறிப்பாக உமர் ரளியல்லாஹு அன்ஹு, அலி ரளியல்லாஹு அன்ஹு போன்றோர் மிகக் கடுமையான கண்டனத்தைத்
4) காஃபிர்களோடு ஒப்புமை அதாவது முஸ்லிம் அல்லாதவர்களின் உடைகளைப் போன்று முஸ்லிம்களும் அணிவது. முஸ்லிம்களின் கூட்டமைப்புக்கு ஊறு விளைவிக்கும் செயலாகும் இது!. இதன் காரணமாக முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதோருக்கு மிடையே ஒருவித அந்நியத்தன்மை ஏற்படும். அவர்களிடையே நிலவும் உறவுகளில் இஸ்லாம் விரும்புகின்ற பரஸ்பர உதவியும் பரஸ்பர ஒத்தாசையும் ஏற்படாமல் போகும்.
முஸ்லிமாக மாறியபிறகும் ஒருவர் முஸ்லிமல்லாதோரின் பால் ஈர்க்கப்படுகிறார் என்பதன் அடையாளம் இது!. அரசியல் ரீதியாகவும் முறையற்ற செயல் இது. இதன் காரணமாக முஸ்லிம்களையும் முஸ்லிமல்லா தோரையும் பிரித்தறிய முடியாததால் ஒரு முஸ்லிம் முஸ்லிமல்லாதவரைப் போன்று நடத்தப்படக்கூடும்.
இக்காரணங்களையெல்லாம் மனதில் கொண்டுதான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்‘முஷ்ரிக்கீன்களுக்கு மாறு செய்யுங்கள்! யூதர்களுக்கும் கிறுத்துவர்களுக்கும் மாறு செய்யுங்கள்! மஜூஸிகளுக்கு – நெருப்பு வணங்கிகளுக்கு மாறு செய்யுங்கள்!’ என்று அடிக்கடி பலமுறை குறிப்பிட்டுள்ளார்கள்.
இம்மாதிரியான கருத்துகளை பல்வேறு ஹதீதுகளில் நம்மால் பார்க்க முடிகின்றது. பார்த்தவுடன் ஒரு முஸ்லிமை முஸ்லிமென்று அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அதற்கேற்றாற்போன்று அவனிடம் இஸ்லாமியச் சின்னங்கள் உடையிலும் தோற்றத்திலும் காணப்பட வேண்டும். அப்போதுதான் அவனிடம் ஒரு முஸ்லிமைப் போல நடந்து கொள்ள முடியும். காஃபிர் என்று கருதிக் கொண்டு அவனிடம் வேறு மாதிரியான நடந்துகொள்ள நேரிடுவதைத் தவிர்க்க
‘யாரொருவர் பிற சமய-சமூக மக்களை ஒத்து காட்சியளிக்கிறாரோ அவர், அவர்களைப் போன்றே கருதப்படுவார்!’ என்பதன் பொருளும் இதுதான்!.
பிற சமூக மக்களைப் போன்று காட்சியளிப்பவர் அவர்களில் ஒருவரைப் போலவே கருதப் படுவார்; அவர்களைப் போலவே நடத்தப்படுவார்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இமாம் இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி -மறைவு ஹி. 728) மாற்றாரை ஒத்த ஆடைகளை அணிவது குறித்து ‘இக்திழாஉஸ் ஸிராத்தில் முஸ்தகீம் முஃகாலஃபத்து அஸ்ஹாபில் ஹமீம்’ என்றொரு விரிவான நூலை எழுதியுள்ளார். இறை நிராகரிப்பையும் இறைவனல்லாதவற்றை இறைவனாக எண்ணி வணங் கும் இணைவைப்பையும் இழிவானதாகக் கருதும் இஸ்லாம், தன்னைப் பின்பற்றுபவர்கள் தோற்றம் உட்பட எவ்வகையிலும் அதனை ஒத்துக்காணப்படக் கூடாது என்று உறுதிபடக் கூறுகின்றது.
ஆடைகளிலும் உண்டு ஒப்புமைமேற்கண்ட ஒப்புமை ஹதீஸ் சாதாரணமான நடை முறைப் பழக்கவழக்கங்களுக்குப் பொருந்தாது என்றும் ஒருசிலர் ஆட்சேபணை தெரிவிக்கிறார்கள். சாப்பிடுவது, தூங்குவது, ஆடை அணிவது போன்றவை எல்லாம் பழக்கவழக்கங்கள்!. இவை வணக்கங்கள் அல்ல, என்பது அவர்களுடைய வாதம்.ஒரு சமயத்தின் அல்லது சமூகத்தின் மதரீதியான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும்தான் பின் பற்றக்கூடாது; அதைத்தான் இந்த ஹதீஸ் குறிப்பிடு கின்றது என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள்.
‘தஷப்பஹ்’ எனும் சொல் ஹதீஸில் பயன்படுத்தப் பட்டுள்ளது. நம்பிக்கைகள், தோற்றம், பழக்கவழக்கங்கள் என்று எல்லாவற்றையுமே இச்சொல் உள்ளடக்கியுள்ளது. நம்பிக்கைகள், சம்பிரதாயங்களை மட்டும் குறிப்பதாக இருந்தால் ‘தஃகல்லுக்’ என்று சொல் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.
இரண்டாவதாக, முஸ்னது அபீ அவானா என்ற ஹதீஸ் நூலில் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. அதைக் கீழே காணலாம்.
‘காவியாடைகளை அணிவதை விட்டும், பட்டாடை களை அணிவதை விட்டும், தங்க மோதிரங்களை அணிவதை விட்டும், ருகூஃவில் கிராஅத் ஓதுவதை விட்டும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள்’ என்று அலி ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்.
‘தொழுகையில் ருகூஉவில் இருக்கும்போது குர்ஆனை ஓதவேண்டாம் என்றும் தங்கம் அணியவேண்டாம் என்றும் செம்மஞ்சள் நிற சாயமிடப்பட்ட ஆடைகளை அணிய வேண்டாம்” (அறிவிப்பு : அலீ ரளியல்லாஹு அன்ஹு, பதிவு : முஸ்லிம்) காண்க : ரஹ்மத் டிரஸ்ட் வெளியீடு. பாகம் : 3 எண் : 4221
இந்த ஹதீதுகளில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பல விஷயங்களை ஒரே ‘ஆர்டரில்’ ஒழுங்கில் வைத்துக் கூறியுள்ளார்கள். ஆடைகள் அணி வதையும் மோதிரம் அணிவதையும் ருகூஃவில் கிராஅத் ஓதுவதோடு இணைத்துக் கூறியுள்ளார்கள். அப்படி என்றால் இவையனைத்தும் ஒரே விதமானவை; ஒரே தரத்தில் அமைந்தவை என்பதைப் புரிந்து கொள்கிறோம்.
ஆண்களின் அழகும் பெண்களின் அழகும்!
யாருக்கு எது அழகு என்பதெல்லாம் படைத்தவனுக்குத் தான் தெரியும். ஆண்களுக்கு என்ன அழகு? பெண்களுக்கு என்ன அழகு? என்பதை அவன் தெளிவாகவே விளக்கியுள்ளான். ஆண்கள் தாடி வைக்கவேண்டும்; பெண்கள் கூந்தல் சூடவேண்டும். கூந்தலை வெட்டிக் கொள்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. கூந்தலால் பெண்களுடைய அழகு எடுப்பாக உள்ளது போலவே தாடியால் ஆண்களுடைய அழகு எடுப்பாக மிளிரும்.
இறைநம்பிக்கையாளர்கள் இறைநிராகரிப்பாளர்களைப் போலக் காணப்படக்கூடாது என்பதற்காகத்தான் ‘முஷ்ரிக்கீன்களுக்கு மாறு செய்யுங்கள்; தாடி வையுங்கள் மீசையைக் கத்தரியுங்கள்!’ என்றும் இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆணையிட்டுள்ளார்கள். இறுதித்தூதரின் ஷரீஅத்தில் மட்டும் இது கடமையாக ஆக்கப்படவில்லை. மாறாக நமக்கு முன்சென்ற எல்லா நபிமார்களுடைய ஷரீஅத்திலும் கடமையாக ஆக்கப்பட்டிருந்தது என்பதை குர்ஆன் மூலம் அறிகிறோம். (காண்க : 20:94).
‘நாகரீகம்’ என்ற பெயரில் ஆண்கள் முழுக்க முழுக்க ஷேவ் செய்து கொண்டு ‘பச்சை’ முகத்தோடு காட்சியளிப்பதையும் இஸ்லாம் விரும்பவில்லை; ‘ஃபேஷன்’ என்ற பெயரில் கழுத்தைத் தாண்டி நீளும் கூந்தல் வளர்ப் பதையும் இஸ்லாம் விரும்பவில்லை.
ஃகரீம் அஸதி என்றொரு நபித்தோழர் இருந்தார். அவருடைய முடியும் நீளமாக இருக்கும்; அவருடைய பேண்ட்டும் நீளமாக இருக்கும். ‘கழுத்துக்கு வெளியே நீளும் முடியின் நீளத்தை அவர் குறைத்துக் கொண்டால், முழங்காலின் பாதி வரை இருக்குமாறு தன்னுடைய பேண்ட்டை ஆக்கிக்கொண்டால் அவர் இன்னும் சிறந்த மனிதராகக் காட்சியளிப்பார்!’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வல்லம் கூறினார்கள்.
ஓர் இளைஞரை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டார்கள். அவர் தன்னுடைய தலையின் ஒரு பாகத்தை ஷேவ் செய்து ஒரு பாகத்தில் முடி வைத்திருந்தார். அவ்வாறு செய்யக் கூடாது என இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடை செய்தார்கள். ‘ஒன்று முழுமையாக ஷேவ் செய்து கொள்! இல்லையென்றால் முழுமையாக முடி வளர்த்துக்கொள்!’ என்று கூறினார்கள். (பதிவு : முஸ்லிம்)
‘கஸஃ’ என்றொரு ஸ்டைல் அக்காலத்தில் பின்பற்றப் பட்டு வந்தது. அதாவது முன்தலையில் மட்டும் கொஞ்சம் முடி வைத்துக் கொண்டு தலை முழுக்க மொட்டை அடித்துக் கொள்வார்கள்; அல்லது காதுக்கு மேலாக தலையின் இரு பக்கங்களிலும் முடிவைத்துக் கொண்டு தலையை மொட்டை அடித்துக் கொள்வார்கள். இந்த ஸ்டைலை பின்பற்றக் கூடாதென்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடைசெய்ததாக உபைதுல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் ஹதீஸ் ஒன்று ஸஹீஹ் புஃகாரியில் பதிவாகி உள்ளது.
ஏன்? என்ன காரணம்? என்றால், அவ்வாறு யூதர்கள் செய்து வந்தார்கள். ‘அது யூதர்களின் ஸ்டைல்!’ என்று அதற்கான காரணமும் ஸுனன் அபு தாவுதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோற்றத்தில் கூட யூதர்கள், கிறிஸ்துவர்களை ஒத்துக்காணப்படக் கூடாது என்று இளவயது ஸஹாபாக்களை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடை செய்துள்ளார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் களுடைய காலத்தில் மஜூஸிகள் தாடியை முழுக்க முழுக்க ஷேவ் செய்து கொள்வார்கள். பெரிய மீசைகளை வளர்த்துக் கொள்வார்கள். மீசை பெரிதாக இருந்தால் வீரத்துக்கு அடையாளம் என்று நினைக்கும் மடைமை இன்று கூட காணப்படுகின்றது அல்லவா?. நம்மிலும் பலர் அதைப் பின்பற்றி வருகிறார்கள். மீசையை வளர்த்து தாடியைச் சிரைப்பது மஜூஸிகளின் அல்லது இந்துக்களின் தோற்றம்!.
தோற்றத்தில் அவர்களை ஒத்துக் காணப்படக் கூடாதென்று அவ்வாறு வைப்பதை இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள். ‘மீசையைக் கத்தரியுங்கள்; தாடியை வளருங்கள்; மஜூஸிகளுக்கு மாற்றமாக நடந்து கொள்ளுங்கள்!’ என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (பதிவு : முஸ்லிம்).
ஆகையால், பசை வைத்து ஒட்ட வைத்தது போல ஒன் றிரண்டு முடிகள் தொங்கினால்கூடப் பரவாயில்லை, தாடி வையுங்கள் என்று உற்சாகம் ஊட்டப்படுகின்றது.
பெண்களின் ஆடை
மேலை நாகரீகம் பெண்களின் உடையை எந்த அளவுக்கு கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டது என்பதைச் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. வீட்டை விட்டு பெண் வெளியே செல்லும் தூரம் அதிகரிக்க அதிகரிக்க அவளுடைய ஆடை குறைந்து கொண்டே போகின்றது. விளையாட்டு மைதானங்களில் வெகுவாகக் குறையும் ஆடை, கலாச்சார பொழுதுபோக்குக் கொண்டாட்டங்களின்போதோ கழன்றே விடுகின்றது.
வளர்ந்தபிறகு இத்தகைய ஆடைகளை அணிவதற்கு பெண்கள் கூச்சப்படக் கூடாது என்பதற்காக குழந்தைப் பருவத்திலேயே இப்போதெல்லாம் இம்மாதிரியான ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. மூளையைக் கசக்கி கொஞ்சம்கூட யோசிக்காமல் நாமும் நம்முடைய குழந்தைகளுக்கு இவற்றை அணிவித்துக் கொண்டுள்ளோம். சக்திமான், ஸ்பைடர்மேன் போன்ற கற்பனை கதாபாத்திரங்களின் ஆடைகளையும் அதனுடைய பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் அணிவித்துக் கொண்டுள்ளோம்.
நம்முடைய பெண்கள் அணியும் ‘ஹிஜாப்’ கூட இஸ்லாமிய ஹிஜாப் என்று சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. உடலோடு உடல் ஒட்டி இருக்குமாறு வடித்து வடிவமைக்கப்படும் ஹிஜாப்கள், பெண்களின் இயற்கையழகு எடுப்பாகத் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஹிஜாப்கள், உள்ளே அணிந்துள்ள சேலை ஷல்வார் போன்றவை வெளித்தெரியும் வகையிலான டிரான்ஸ்பரண்ட்டான பர்தாக்கள், இருபுறமும் முழங்கால்கள் வரை தையலின்றி காணப்படும் ஹிஜாப்கள், கலக்கலான அலங்காரத்தோடு பட்டாடைகளைவிட மிடுக்காகக் காட்சியளிக்கும் – பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கும் பர்தாக்கள் என்று உண்மையில் அவை அலங் கோலமாகக் காட்சியளிக்கின்றன.
ஆக, விளங்கவரும் விஷயம் என்னவெனில் நம் முடைய மனதில் உள்ளதுதான் வெளியில் வெளிப்படு கின்றது. நாம் மேலை நாகரீகத்தை மேன்மையாகக் கருதினோம் என்றால் அது எவ்வகையிலாவது ‘ஹிஜாபி’லாவது வெளிப்பட்டு விடுகின்றது.
இஸ்லாமிய ஆடை
‘இஸ்லாமிய ஆடை’ என்று ஏதும் உள்ளதா, இல்லையா? என்றொரு கேள்வி இயல்பாக எழுகின்றது. ஷரீஆ இதற்கு ஏதேனும் பதில் சொல்கின்றதா எனப் பார்ப்போம்.
‘இறையச்சமென்ற ஆடையே சிறந்தது!’ n(அல்குர்ஆன் 7 : 26)
ஒரு நபித்தோழர் காவியாடைகளை அணிந்து வந்தபோது, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ‘இது நரகவாசிகளின் ஆடை’ (ஸியாபி அஹ் லின்னார்) என்றோ, ‘இது இறை நிராகரிப்பாளர்களின் ஆடை (ஸியாபில் குஃப்பார்’) என்றோ குறிப்பிட்டுள் ளார்கள். அது இறைநிராகரிப்பாளர்களின் ஆடை என்றால் இறை நம்பிக்கையாளர்களின் ஆடைதான் என்ன?.
ஆடைகளிலும் இறைநிராகரிப்புத் தன்மை இருக்கின்றது; வெளிப்படுகின்றது என்பதை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனிடமிருந்து வந்த வஹீயின் மூலமாகத்தானே அறிவித்திருப்பார்கள்?
நாம் அணியும் உடைகள் ஜுப்பாவாக, குல்லாவாக இருக்க வேண்டும் என்று நாம் சொல்லவரவில்லை. பேண்ட்டாக இருக்கலாம். ஆனால், அது இஸ்லாமிய பேண்ட்டாக இருக்கவேண்டும். நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காணவருகிறார். ‘உன்னுடைய கீழாடையை உயர்த்திக் கட்டு!’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள். அவரும் உயர்த்துகிறார். ‘இன்னும் உயர்த்து!’ என்கிறார் பெருமானார். இன்னும் உயர்த்துகிறார். ‘இன்னும் உயர்த்து!’ என்கிறார் பெருமானார். இன்னும் உயர்த்துகிறார். இப்போது அவருடைய கீழாடை முட்டிக் காலை விடக் கொஞ்சம் கீழே இருக்கின்றது. ஸஹீஹான ஹதீதில் பதிவாகியுள்ள சம்பவம் இது!.
அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு இதை அறிவிக்கும்போது கேட்டுக் கொண்டிருந்த மக்கள் ‘எதுவரை உணர்த்தினீர்கள்?’ என்று கேட்கவும் செய்கிறார்கள். ‘கெண்டைக்கால்களின் பாதியளவுக்கு!’ என அவர் காண்க : முஸ்லிம். ரஹ்மத் டிரஸ்ட் வெளியீடு. பாகம் : 3 எண் : 4238.
நம்முடைய மனதில் குடிகொண்டுள்ள எண்ணங் களுக்கும் நம்முடைய தோற்றத்திற்கும் சம்பந்தம் உள்ளது. மனதில் தற் பெருமையும் கர்வமும் இருந்தால் அது ஆடைகளைத் தழையத் தழையக் கட்டுவதில் வெளிப்படும் என்பதையே நபிமொழிகளிலிருந்து புரிந்து தங்கச்செயின் அணியும் ஆண்களைப் பார்த்திருக்கிறீர்களா?
பெண்கள் தங்கம் அணிவதற்கும் ஆண்கள் அணிவதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கின்றது. கூலி வேலைக்குப் போகும் பெண்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துவைத்து காதிலும் கழுத்திலும் தங்க நகைகளைப் போட்டுக் கொள்கிறார்கள். ஆனால், ஆண் களுடைய நிலை அப்படிப்பட்டதல்ல!. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சம்பாதித்துவிட்டு தன்னிடம் பணம் இருக்கின்றது என்பதைக் வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்பும் மனிதர்கள்தாம் ‘மைனர் செயின்’களை அணிகிறார்கள்.
தங்கம் அணிவதுதானே ஹராம்.வெள்ளி அணியலாம் அல்லவா என்று கேட்டுக்கொண்டு, மூக்கணாங்கயிறு சைசில் வெள்ளிக் கயிற்றை கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்ளும் சகோதரர்களும் ‘உம்மா’வில் காணப்படுகிறார்கள் அல்லவா?.
இஸ்லாமிய ஆட்சியாளர்களும் இயக்கப்பொறுப் பாளர்களும் முஸ்லிம்களுடைய ஆடை எவ்வாறிருக் கின்றது என்பதை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு மனிதர் இளஞ்சிவப்பு நிறத்திலான ஆடையை அணிந்து கொண்டிருந்தார். ‘இந்த ஆடையை அணியாதீர்கள். கழற்றி விடுங்கள்!’ என்று அவரிடம் உமர் இப்னு ஃகத்தாப் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்.
‘அமீருல் முஃமினீன் அவர்களே! நான் இன்றைக்குத்தான் இந்த டிரஸ்ஸைப் புதிதாக போட்டிருக்கிறேன்’ என்று அவர் பதில் அளித்தார். ‘இன்றைக்கு நீங்கள் போடவில்லை. முந்தா நாள் போட்டிந்தீர்கள்; அதற்கு முன்பு அன்றைக்கு போட்டிருந்தீர்கள்; அதற்கு முன்பு அன்றைக்கு போட்டி ருந்தீர்கள்’ என்று அவர் அந்த ஆடையை அணிந்திருந்த நாட்களையெல்லாம் உமர் ரளியல்லாஹு அன்ஹு கோடிட்டுக் காட்டினார்.
அவர் ‘அல்லாஹ் என்னை மன்னிப்பானாக! நான் மறந்து போயிட்டேன்!’ என்று பதில் கூறினார். ‘நீங்கள் இலேசாக நினைக்கிற இக்காரியம் உங்கள் மீது எவ்வளவு சமையாக மாறும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் நல்லது!’ என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவருக்கு விளக்கினார். (காண்க : அல்ஜாமிஃ முஅமர் இப்னு ராஷித்).
அடையாளச் சின்னம்
முஸ்லிம்களுக்கென்று அடையாளமோ குறியீடோ கண்டிப்பாக இருந்தாக வேண்டும். வெளியில் வீதியில் அவர்கள் சென்றால் அவர்களை மற்றவர்கள் கண்டால் இவர் ஒரு முஸ்லிம் என்று எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அது அமைய வேண்டும். அதற்காகத்தான் தொப்பிவைத்து அதற்கு மேலாக தலைப்பாகை கட்டுமாறு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வல்லம் வலியுறுத்தியுள்ளார்கள். தொப்பிதான் அணிய வேண்டும் என்றில்லை, வேறு அடையாளக் குறியீடுகளையும் உலமாப் பெருமக்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
சமூக வாழ்க்கையில் தன்னை முஸ்லிம், இறைவனுக்குக் கட்டுப் பட்டவன் என்று வெளிப்படுத்திக் கொள்வது இறைநம்பிக்கையின் அடையாளமாகும்.
‘இறைவனின் பக்கம் மக்களை அழைத்து, நல்லறங்களைப் புரிந்து, தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக் கொள்பவனை விடச் சிறந்தசொல் யாருடையதாக இருக்க முடியும்?’. (அல்குர்ஆன் 41 :33).
தெருவில், கடைவீதியில், சந்தையில், அலுவலகங் களில், பிரயாணங்களில், பொதுமக்கள் கூடுமிடங்களில் — என்றிவ்வாறாக எல்லா இடங்களிலும் நாம் நம்மை முஸ்லிம் என்று வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். பார்த்தவுடன் இவர் முஸ்லிமா என்பதை நம் முடைய ஆடைகளும் தோற்றமும்தான் வெளிப்படுத்தும்!.
இஸ்லாம் வெகுவாக வலியுறுத்தியுள்ள தாடியைப் பெரிதாக வைக்கவேண்டும். நீண்ட அடர்த்தியான தாடியை வைக்க வேண்டுமே தவிர, ட்ரிம் செய்யப்பட்ட தாடையுடன் தாடையாக ஒட்டிக்கொண்டுள்ள, ஏதோ பிரஷ்ஷால் பூசியதுபோல தாடியை வைத்துக் கொண் டிருக்கக் கூடாது. மீசையைக் கத்தரியுங்கள்; தாடியை வையுங்கள் என்றால் மீசையின் ‘லேயரை’ விட தாடி சற்றேனும் பெரிதாக இருக்கவேண்டுமா, உண்மை என்னவென்றால், நம் எல்லோருடைய மனதிலும் தாழ்வு மனப்பான்மை குடிகொண்டுள்ளது. வெளிவாழ்க்கையில் நம்மை ஒரு முஸ்லிம் என்று வெளிப்படுத்திக் கொள்ள நாம் பெரிதும் யோசிக் கிறோம். தாடியும் வைக்க வேண்டும்; அதே சமயம் அது தாடி மாதிரி இருக்கவும் கூடாது. பாம்பும் சாகவேண்டும்; அதே சமயம் தடியும் உடைந்துவிடக் கூடாது. இதுதான் நம்முடைய பாலிஸி!.
நம்முடைய வியாபார நிறுவனங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இஸ்லாமியப் பெயர்களை யாருமே சூட்டுவது கிடையாது. கேட்டால் லைஸென்ஸ் பிரச்சனை என்று என்னென்னவோ காரணங்களைச் நம்முடைய ஸுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் தொப்பி அணிவதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. தொப்பியின் காரணமாக சமயங்களில் சண்டையே ஏற்பட்டு விடுகின்றது. தொப்பி அணிவது இஸ்லாமிய அடையாளம் என்றால் அதை தொழுகையின் போது மட்டும்தான் அணியவேண்டுமா?. தொப்பி அடையாளமா? இபாதத்தா?. அடையாளம் என்றால் எல்லா இடங்களிலும் கட்டயாயம் அணிய வேண்டுமல்லவா?. நம்முடைய முன்னோர்கள் அடையாளம் என்று எண்ணித் தானே அதை கடைவீதிகள், வேலை செய்யுமிடங்கள் என்று எல்லா இடங்களிலும் அணிந்துள்ளார்கள்.
நாம் இவ்வாறாக எல்லா விஷயங்களையும் சரியான கோணத்தில் புரிந்துகொள்ளாமல் தவறிழைக்கிறோம். ஒவ்வொரு தொழுகை யின் போதும் ஜும்ஆ தொழுகை ஆரம்பிக்கும் முன்னாலும் இமாம் ‘கீழாடைகளை கெண்டைக்காலுக்கும் மேலாக உயர்த்திக் கொள்ளுங் கள்!’ என்று அறிவிப்பு செய்கிறார்.
கெண்டைக்காலுக்கு மேலாக ஆடையை உயர்த்திக் கட்டுவது இபாதத்தா? தொழுகையின் போது மட்டும் அதை செய்தால் போதுமா? என்று யாருமே சிந்திப்பதில்லை.
வெளிப்படவேண்டும் வீடுகளிலும்
நாம் முஸ்லிம்கள் என்பதை நம்முடைய உடைகளில் மட்டுமல்லாது நாம் குடியிருக்கின்ற கட்டுகின்ற வீடுகளிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கவேண்டும்.
மூச்சுக்கு மூச்சு, பேச்சுக்கு பேச்சு ‘இஸ்லாம் நிறைவான மார்க்கம்! முழுமையான வாழ்வியல் கொள்கை!’ என்றெல்லாம் முழங்கிக் கொண்டுள்ளோம். நம்முடைய குடும்ப வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்? நம்முடைய இல்லறத்தின் அழகு எவற்றில் உள்ளது? என்ற தெளிவான வழிகாட்டுதலை இஸ்லாம் வழங்கியே உள்ளது.
நாம் கட்டுகின்ற வீடு எவ்வாறு அமைய வேண்டும்? எத்தனை அறைகளைக் கொண்டதாக இருக்கவேண்டும்? நம் குடும்பத்து பெண்கள் யார்யாரிடம் ஹிஜாபைப் பேண வேண்டும்? வெளியாட்களிடம் எப்படி பேச வேண்டும்? ஏதேனும் விசாரிக்கவரும் ஆண்களிடம் எந்தத் தொனியில் பேசவேண்டும் …. ஸுப்ஹானல்லாஹ்! அனைத்து விஷயங்களைப் பற்றியும் இறை மார்க்கம் வழிகாட்டியுள்ளதா? அப்படியென்றால் இந்த வழிகாட்டுதல்களை யெல்லாம் பின்பற்றும் வகையில்தானே நம்முடைய வீடுகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்?நம்முடைய வீடுகள் இங்ஙனம் அமைக்கப்படுகின்றனவா? என்றொரு கேள்வி எழுந்தால் ‘இல்லை’ என்பதுதான் பதில்!.
வீட்டிற்கு வரும் வெளியாட்களின் பார்வையில் பெண்களுடைய நடமாட்டம் படாதவகையில் வீடுகள் அமைக்கப்படவேண்டும். மாற்று மதத்தவர்கள் வந்தால் ‘இது ஒரு முஸ்லிமின் வீடு!’ என்பதை நம்முடைய வீடு கட்டப்பட்டுள்ள விதமே உணர்த்திவிட வேண்டும்.வீட்டுச்சூழல் இஸ்லாமியமயமாக இருந்தால் வெளியாட்கள் மட்டுமல்லாமல் நம்முடைய குழந்தைகளும் அதன் வசீகரத்தால் கவரப் படுவார்கள். அவர்களுடைய மனதில் இஸ்லாமின் மீதான பற்றும் பாசமும் இயல்பாகவே தோன்றிவிடும்.
இறைவசனங்கள் ஓதப்படவேண்டிய வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் கூக்குரலும் எஃப்எம் ரேடியோக்களின் நான்ஸ்டாப் கானங்களும் ஒலித்துக் கொண்டிருந்தால் நம்முடைய குழந்தைகள் உருப்படுவார்கள்; இஸ்லாமிய வார்ப்பில் உருவாவார்கள் என்ற உத்தரவாதத்தை அளிக்கமுடியுமா?.
நோக்கம் முக்கியம்
‘எண்ணங்களின் அடிப்படையில்தான் எல்லாச் செயல் களும் அமைகின்றன!’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு மனிதர் மது அருந்தும் ஸ்டைலில் பால் குடிக்கிறார் என்றால் மதுக்கிண்ணங்களில் மது அருந்தும்போது உபயோகிக்கும் வார்த்தைக் கூறியவாறு அவர் பால் குடிக்கிறார் என்றால் ஷரீயத் அதை வெறுப்போடு பார்க்கின்றது. அவருடைய மனதில் மதுவருந்தும் ஆசை மறைந்துள்ளது என்பதுதான் அதற்குக் காரணம்.
சாதாரணமாக வசதியற்ற பெண்கள் இமிடேட் கவரிங் நகைகளை அணிகிறார்கள். தங்க நகைகளை வாங்கி அணிய வசதி இல்லாததுதான் காரணம். தங்க நகை அணியும் ஆசையை இதன் மூலம் அவர்கள் பூர்த்திசெய்து கொள்கிறார்கள். ஒரு மனிதர் பொன்முலாம் பூசிய செயினுள்ள வாட்ச்சை அணிகிறார் என்றால் தங்க வாட்ச்சை அணிய அவர் மனதில் ஆசை இருக்கின்றது என்று தான் பொருள்!.
தங்க நகை அணிவது தவறு; தடை உள்ளது என்பதை பரிபூரணமாக அவர் நம்புவார் என்றால் தங்கத்தைப் போன்று காட்சியளிக்கும் பொருளையும் விரும்பக் கூடாது. இது தங்கமில்லைதானே, இதை அணிவதில் என்ன குற்றம் இருக்கப் போகின்றது என்றெல்லாம் அவர் கேட்கலாம். ஷரீஅத் அதைக் குற்றமாகக் கருதவில்லை என்றாலும் அவர் எண்ணத்தை இன்னும் பக்குவப் படுத்திக் கொள்ளவேண்டும்.
இறைவன் ஒரு விஷயத்தைத் தடுத்துள்ளான் எனும் போது அதையோ அல்லது அதைப்போன்று காட்சியளிப் பதையோ ஓர் இறை நம்பிக்கையாளன் விரும்பக்கூடாது. அவனுக்கு என்னதான் அது பிடித்திருந்தாலும் விட்டுவிட வேண்டும்; விலகிவிட வேண்டும்.ஒரு நபித்தோழர் தங்கமோதிரம் அணிந்திருந்ததைக் கண்ட இறைத்தூதர் ‘நீங்கள் அணிந்திருப்பது நரகத்தின் நெருப்புக்கங்கு. தூக்கி எறியுங்கள் அதை!’ எனக் கூறினார் கள். உடனே அவர் அதை எறிந்துவிட்டார். இறைத்தூதர் சென்றபிறகு அங்கிருந்த மற்ற நபித்தோழர்கள் ‘அதை யெடுத்துச் சென்று வீட்டிலுள்ள பெண்களுக்குக் கொடுத்துவிடுங்கள். அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் ஒன்றும் குற்றமில்லை’ எனக் கூறினார்கள். ‘இறைத்தூதர் சபித்ததை நான் கையாலும் தொடமாட்டேன்!’ என்று அவர் கூறி விட்டார். இறை நம்பிக்கையாளர்களுக்கு இதில் செய்திகள் நிறைய உள்ளன.
காட்சி கூறும் கருத்து
நாம் யாரைப்போலக் காட்சி அளிக்கிறோமோ அவரைப் போலவே மாற ஆசைப்படுகிறோம் என்றுதான் பொருள்!. அரசியல்வாதிகளைப் போல ஆக ஆசைப்படு பவர்கள் வேட்டி கட்டுகிறார்கள். சினிமா ஹீரோக்களைப் போல மாற ஆசைப்படுபவர்கள் புதுப்படங்களில் வருவதுபோன்ற உடைகளை அணி கிறார்கள். காதுகளில் கண்டதையும் மாட்டிக் கொள்கிறார்கள். வாகனங்களின் வர்ணங்களில் கூட ‘அது’ வெளிப்படுகின்றது.
மேலை நாகரீகத்தின் நடமாடும் விளம்பரங்களாக நாம் உருமாறித் திரிகிறோம் என்றால், நம்முடைய மனதில் மேலை நாகரீகம்தான் சிறந்தது என்று கருத்து ஆழமாகப் பதிந்துள்ளது என்றுதான் பொருள்!. அதனுடைய பிம்பம் தான் நம்முடைய வெளித்தோற்றத்தில் அப்பட்டமாக பிரதிபலிக்கின்றது.
நாம் ஒருவகையான போலிக்கலாச்சாரத்திற்கு பலி யாகிக் கொண்டுள்ளோம். போலித்தனத்தை இறைத் தூதர் அவர்கள் வெறுத்துள்ளார்கள்; போலியாக நடந்து கொள்ள தடை விதித்துள்ளார்கள்.
ஷரீஅத் சட்டங்களை துணைக்கு வைத்துக்கொண்டு நாம் இதை மூடிமறைக்க நினைக்கிறோம். நாம் செய்வ தொன்றும் தவறல்ல என்ற மாயையை வளர்த்துக் கொள்கிறோம். நாம் வாழும் சமூக மக்கள் நம்மை அங்கீகரிக்க வேண்டும்; ஆதரவளிக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்காமல் நம்மைப் படைத்த இறைவன் நம்மை அங்கீகரிக்கவேண்டும் எனும் நோக்கில் நாம் செயல்பட வேண்டும். இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழும் முழுமையான முஸ்லிம்களாக நாம் மாறவேண்டும்.
source: www.dhisaikaati.com