நெறிநூல்கள் கூறும் விண்வெளி வெள்ளம்
S.ஹலரத் அலி, திருச்சி
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் நமது பூமி மட்டுமே ஆழிசூழ் உலகாக அழகுடன் விளங்குகிறது. மூன்று பங்கு நீரும் ஒரு பங்கு நிலமும் உள்ளது. நிலத்தில் வாழும் கோடானுகோடி உயிரினங்கள் உருவாவதற்கு ஆதாரமான ஜீவநீர் ஆதியில் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? என்ற கேள்விக்கு அறிவியல் உலகம் பல்வேறு பதில்களைக் கூறி வந்தது.
நாலரைக் கோடி பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி, எரிமலைகளால் சூழப்பட்ட நெருப்பு கோளமாக இருந்தது. இதிலிருந்து வெளியான நீராவியும், வாயுக்களும்தான் வளிமண்டலத்தில் நிறைந்திருந் தன. பின்பு பூமி குளிர்ந்த போது வளிமண்டல நீராவியும் குளிர்விக்கப்பட்டு மழையாகப் பொழிந் தது. பூமியின் தாழ்வான இடங்கள் நிரப்பப்பட்டு ஏரிகளும் கடல்களும் உருவாயின.
அறிவியல் வளர்ச்சியின் அடுத்தக் கட்ட விளக்க மாக இவ்வாறு கூறப்பட்டது. கடும் வெப்பமான பூமியின் மீது விண்வெளியில் நிறைந்துள்ள ஆஸ்ட்ராய்டு எனும் நீர் நிறைந்த விண் கற்களும் பனிப்பந்து வால் நட்சத்திரங்களும் தொடர்ந்து மோதிப் பெரும் வெள்ளத்தைப் பூமிக்குக் கொண்டு வந்து கடல் உருவானதாகக் கூறப்பட்டது. இதன் பின்னரே ஒரு செல் உயிரினங்கள் தோன்றி பரி ணாம வளர்ச்சியடைந்து தாவர, மிருக, மனிதனாக மாறியதாகக் கூறுகிறார்கள்.
நமது இருபதாம் நூற்றாண்டு அறிவியல் கருத்துக்களுக்கு முரணாக, அனைத்து நெறிநூல்களும் நீர், முதன் முதலில் உருவானது, சூரிய மண்ட லம் மற்றும் நட்சத்திரங்கள் படைக்கப்படுவதற்கு முன்பே என்று கூறி வருவது அறிஞர்களால் அலட்சியப்படுத்தப்பட்டது. காரணம் அறிவியலும் மதமும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது என்ற கருத்து மேலை நாட்டு அறிவு ஜீவிகளால் ஆழமாகப் பதிக்கப்பட்டு விட்டது.
ஆனால் இன்று நெறிநூல்கள் கூறும் விண் வெளி நீர், சூரிய நட்சத்திர மண்டலங்கள் உருவாவதற்கு முன்பே, ஆதார ஜீவ நீராக விண்வெளியில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதன் விளக்கத்தை இறுதியில் பார்ப்போம்.
திருப்பாற் கடலில் பள்ளிகொண்ட பெருமாள் :
இந்து வேதங்களில் கூறப்படும் கடவுளான திருமால் வாசம் செய்யும் இடம் நமது பூலோகமல்ல. வானத்தில் அதாவது விண்வெளியில் உள்ள வைகுண்டம். அங்கு பெரும் வெள்ளப் பரப்பான பாற்கடலில் பள்ளி கொள்கிறார். இங்கு இறைவன் பாற்கடல் வண்ணனாக (சீராப்திநாதன்) பாம் பணை மேல் தெற்கு நோக்கிய சயன கோலத்தில் காட்சியளிக்கிறார். பாற்கடல் என்னும் பெரு வெள்ளக் கடல் பரப்பு பூமி உருவாவதற்கு முன்பே விண் வெளியில் படைக்கப்பட்டுவிட்டது.
அந்தப் பாற்கடல் என்னும் நீரில் இருந்தே அனைத்து உயிர்களும் தோன்றின என்பதை குறியீடாக காட்டுவதே பாற்கடல் கடைந்து படைப்புக் கள் வருவது. ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத் தமை உட்பட அறுபதாயிரம் அரம்பையர்கள் உச்சை சிரவஸ் எனும் வெள்ளைக்குதிரை, ஐரா வதம் எனும் வெள்ளை யானை மற்றும் புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பந்தம், சார்வ பெளமம், சுப்பிரதீகம் எனும் எட்டு வகை யானை, கெளஸ்து மணி, சிந்தாமணி, கவுத்துவ மணி, கற்பக மரம், பாரிஜாதம், சந்தனம், மந்தாரம் போன்ற ஐவகை மரங்கள், தன் வந்திரி, சூரிய, சந்திரன் மற் றும் பல ஆக சூரியன், சந்திரன், பூமி போன்றவைகள் படைக்கப்படுவதற்கு முன்பே ஆதியில் நீர் நிறைந்தி ருந்தும் அதிலிருந்து பிற ஜீவன்கள் வந்ததாக அறிய முடிகிறது.
விஷ்ணு என்றால் விண்ணவன் என்று பொருள். எட்டுத் திசையிலும் உள்ள அண்டங்களின் மூலவர். மாயோன், மால், திருமால் என்றாலே கருமை வண்ணம் கொண்டவன் “”கண்ணா! கருமை நிறக் வண்ணா!” கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப் பவன். நமது பேரண்ட பிரபஞ்சத்தைச் சூழ்ந்திருக் கும் பெரும் சக்தி; அடையாளம் காண முடியாத கரும் பொருள். கரும் சக்தி, (Dark Energy, Dark Matter)
இந்திய வேதத்தில் பழமையான ரிக் வேதம், பிரபஞ்சத்தின் மூலப்பொருளை “ஹிரண்ய கர்ப்பம்’ என்று சித்தரிக்கிறது. இதன் பொருள் “தங்கமயமான முட்டை’ ஆரம்பத்தில் எதுவுமற்ற பெருவெளியில் எல்லையற்று எங்கும் விரிந்து கிடந்த நீர்ப்பரப்பில் அந்த தங்க முட்டை தன்னந்தனியாக மிதந்து கொண்டிருந்தது. பின் அது இரண்டாக உடைந்து ஒரு பாதி “”பிரகிருதி” (பூமி)யாகவும், மறுபாதி சுவர்க்கமாகவும் (ஆகாயம்) உருக்கொண்டது.
புருஇ சூக்தம் :
எல்லா சுப காரியங்களிலும் இந்துக்கள் பாரா யணம் செய்யும் ரிக் வேதத்தின் பத்தாவது மண்ட லம், தொண்ணூறாவது புருஇ சூக்தம் இப்படிக் கூறுகிறது.
முதலில் உண்டான அந்த யஞ்ன புருஇனான பிரம்மாவின் மீது தண்ணீர் தெளித்தீர்கள். அதன் பிறகு சாத்யர்களும், தேவர்களும் ரிஷிகளும் இன் னும் யார் யார் உண்டோ அவர்களும் யாகத்தைச் செய்தார்கள்.
பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்தில் இருந்து தயிர் கலந்த நெய் உண்டாயிற்று.
பறவைகளையும் மான் புலி போன்ற காடு விலங்குகளையும், பசு போன்ற வீட்டு மிருகங்களை யும் பிரம்மா படைத்தார்.
பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்தில் இருந்து ரிக், சாம வேத மந்திரங்களும் காயத்ரீ சந்தங் களும் உண்டாயின. அதிலிருந்தே யஜுர் வேதம் உண்டாயிற்று. அதிலிருந்தே குதிரைகள் தோன்றின.
இருவரிசைப் பற்கள் உடைய மிருகங்களும், பசுக்களும் வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் தோன்றின. நீர் தெளிக்கப்பட்ட பின்னரே பிரம்மா வால் உயிர்கள் தோன்றின என்று இச்சுலோகம் கூறு கிறது. பிரம்மாவே, நாபிக்கமலத்தில் பிறந்தவர், தாமரை மலர்வது தரையில் அல்ல தண்ணீரில், தண்ணீர் இன்றி தாமரை இல்லை, பிரம்மா இன்றி படைப்புகள் இல்லை.
மந்திர புஷ்பம் :
யஜுர் வேதத்தை சார்ந்த தைத்ரிய ஆரண்யகம் (1:22) இந்த மந்திர புஷ்பத்தில் கூறுவதாவது.
ஓம் யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி: சந்த்ரமா வா அபாம் புஷ்பம்: புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி: ய ஏவம் வேத(1)
யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ, அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகி றான். நிலவே நீரின் மலர், யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங் களை உடையவனாக ஆகிறான்.
“நிலவே நீரின் மலர்” என்ற முதலாம் ஸ்லோகத் தில் ஆரம்பித்து மீண்டும் மீண்டும் இயற்கையின் ஆதாரங்களான நீர், நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மேகம், மழைக்காலம் என்று சுழன்று, நீருடன் ஒவ்வொன்றும் ஆதாரம் என்று உறுதியாகச் சொல்கிறது.
ஆபோ வா அக்னேராயதனம் – நீரே நெருப்பின் ஆதாரம்
ஆபோ வை வாயோராயதனம் -நீரே காற்றின் ஆதாரம்
ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்-நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம்
ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம் -நீரே நிலவின் ஆதாரம்
ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம்-நீரே நட்சத்திரங்களின் ஆதாரம்
ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்-நீரே மேகங்களின் ஆதாரம்
ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம்-நீரே மழைக்காலத்தின் ஆதாரம்
பிரபஞ்சம் என்னும் ஜலக்கூட்டம் மேல் கிருகத் தில் இருக்கிறது அனைத்து உலகங்களும் நீரிலிருந்து தான் பிறந்துள்ளது. கடவுளுக்கு ஒப்பாக ஒருவரும் இருக்க முடியாது. ஆனால் கடவுளும் நீரும் நெருக்க மாக இருப்பதை அறிய முடிகிறது. தண்ணீர் திரவப் பொருள் உறைந்து விட்டால் திடப் பொருள் கொதி நிலையில் வாயுப் பொருள்,கடவுளும் ஏறக்குறைய அப்படித்தான், அவருக்கு உருவம் இருக்கிறது. உருவம் இல்லாமலும் இருக்கிறார். அதே நேரம் அறுதியிட்டு கூற முடியாத அருவுருவ நிலையிலும் இருக்கிறார்.
தெய்வ நம்பிக்கை கொண்ட மானிடர்கள் தங்கள் நம்பிக்கைக்கு தகுந்தாற்போல் உருவக் கடவுளையும், உருவம் இல்லாக் கடவுளையும், இறைவனுக்கு உருவம் உண்டு. ஆனால் அது இப்ப டித்தான் இருக்கும் என்று அறுதியிட்டு கூற இயலாத அருவுருவ நிலையையும் வணங்கி வருகின்றனர். வேதமுடைய அனைத்து மதங்களும் இம்மூன்று நம்பிக்கையில் உள்ளனர்.
எந்த வடிவத்தை நினைத்து ஒருவர் தியானிக்கி றாரோ அந்த வடிவத்திலேயே இறைவன் தோன்று வான் என்று திருநாவுக்கரசு நாயனார் பாடுகிறார்.
”ஆரோருவர் உள்குவார் உள்ளத்துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்”
இதை ரிக் வேதம் அழகாக இப்படிச் சொல்கி றது. “”ஏகம் சத் விப்ரா பஹூதா வதந்தி” அதாவது ஒன்றான மெய்ப்பொருளை ஞானிகள் பலவாறு அழைக்கிறார்கள். கடவுளின் மூன்று நிலையை சச்சிதானந்த பெருநிலை என்று கூறுவார். “”சத்” என்றால் எப்போதும் அழியாமல் இருக்கும் உண்மைப்பொருள். “”சித்” என்றால் எல்லாவற்றை யும் அறியும். அறிந்து கொண்ட பேரறிவு, “”ஆனந்தம்” என்றால் எப்போதும் அழியாத இன்பம்.
அதாவது கடவுள் உண்மையாகவும், அறிவாக வும, ஆனந்தமாகவும் இருக்கிறார். தண்ணீர்தான் படைப்பினங்களுக்கு மூலம். ஆனால் இவை அனைத்திற்கும் படைத்த இறைவனே மூலம் மூலவர்.
“”அம்ருதம் பிரம்மா பூர் புவஸுவரோம்” இதன் பொருள்.
தண்ணீர் உயிர்களின் அமிருதம், அதுவே அசை வுடைய உயிர்களைக் கொண்ட இந்த உலகத்தின் அசைவுக்கும், சுவர்க்கத்தின் இயக்கத்திற்கும், ஓம் என்ற நாதம் தோன்றவும் ஆதாரமாக அமைகிறது.
கிரேக்க, எகிப்திய புராணம் கூறும் செய்தி :
கிரேக்க புராணங்களின் கூற்றுப்படி முதலில் எங்கும் வெட்டவெளி, அதைச் சுற்றிப் பெருவெள் ளம். அந்த வெள்ளத்தில் வாழ்ந்தவள் ஓசியானிஸ் (Oceanus) கடல் தேவதை, அவளுக்கும் வடக்குக் காற்றுக்கும் காதல் வந்து இணைந்தார்கள். அவர் களுக்கு ஈரினோம் (Eurynome) என்ற பெண் குழந்தை பிறந்தது. இவள் காதல் கடவுள் தன் மகள் ஓடி விளையாட ஓசியானிஸ் கடலில் அலைகளை உரு வாக்கினாள். ஈரினோம் அந்த அலைகளோடு விளை யாடினாள், அந்த ஆட்டத்தில் பிறந்தன. விண்ணுல கம், மண்ணுலகம், வானம், கடல், மிருகம், பறவை.
எகிப்து நாட்டு மக்களின் புராண நம்பிக்கை, ஆரம்பத்தில் எங்கும் தண்ணீர், அங்கே ஆண், பெண் ஜோடிகளாக எட்டுக் கடவுளர்கள். இவர்களின் சேர்க்கையால் முதலில் சூரியன், பிறகு பிற உயிரி னங்கள் பிறக்கின்றன. ஆக இவ்விரு புராணச் செய்தி களிலும் தண்ணீர்தான் படைப்பின் ஆரம்பமாக உள்ளதை அறிய முடிகிறது.
கிருஸ்துவ வேதம் பைபிள் சொல்லும் செய்தி :
பைபிளின் ஆரம்ப வசனங்களும் இக்கருத் தையே கூறுகின்றன.
“”தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்”. ஆதியாகமம் : 1:2
ஆதியில் தேவனும் அவரது வார்த்தையும் இருந் தது. அடுத்தாற்போல் அந்தத் தேவன் தான் முதலில் படைத்த ஜலத்தில் அசைவாடிக் கொண்டிருந்தார். பெருமாள் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டு பின்பு அதிலிருந்து படைப்புகளைப் படைத்தும்; தேவ ஆவியானவர் ஜலத்தின் மீதிருந்து வானம் பூமியைப் படைத்ததும் ஒன்றே.
பிறகு “”தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி ஆகாய விரிவுக்கு கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாய விரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார். அது அப்படியே ஆயிற்று”
ஆதி ஆகமம் : 1:7
“”ஆகாய மண்டலத்தின் மேலுள்ள தண்ணீர் களே, அவரை துதியுங்கள்ஸ” சங்கீதம் : 148
புதிய ஏற்பாட்டிலும் இச்செய்தியைக் காணலாம்.
”ஜலத்தினின்று தோன்றி, ஜலத்தினாலே நிலை கொண்டிருக்கின்ற பூமியும் உண்டாயினவென்ப தையும்ஸ” ணூணூ பேதுரு.
இறுதி நெறிநூல் திருகுர்ஆன் கூறும் செய்தி :
இந்து மற்றும் கிருஸ்துவ வேதத்தில் விண்வெளி யில் உருவான பெருவெள்ள நீர்ப்பரப்பைப் பற்றி பார்த்தோம். இனி இஸ்லாம் என்ன சொல்கின்றது?
”அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷி (அரி யணை ஆட்சிக்கேந்திரம்) நீரின் மேல் இருந்தது.”
(குர்ஆன் : 11:7)
இந்த வசனத்திற்கு விளக்கவுரையாக இறைவனின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
”ஆதியில் அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவ னைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்க வில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ் பூல் எனும்) பாதுகாக்கப்பட்டப் பலகையில் அவன் எல்லா விசயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்.” (அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி 3191)
மற்றொரு அறிவிப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
“”அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதி விட் டான் (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது.”(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் : 5160)
திருகுர்ஆன், விரிவுரையாளர்கள் இவ்வசனத் திற்கு விரிவான விளக்கம் கொடுத்துள்ளனர்.
”வானங்கள், பூமி உள்ளிட்ட பேரண்டத்தை அல்லாஹ் படைப்பதற்கு முன் அவனது அரியணை அதாவது ஆட்சியின் கேந்திரம் தண்ணீரின் மீது இருந்தது. அதற்கும் முன்பே அல்லாஹ் இருக்கின் றான். அல்லாஹ்வுக்கு ஆரம்பம், முடிவு என்பதெல் லாம் கிடையாது. எனவே அல்லாஹ் எப்போதும் இருக்கின்றான். முதலில் அவன் தண்ணீரைப் படைத்தான். தண்ணீரால் மற்ற பொருட்களைப் படைத்தான். வானங்கள், பூமி அவற்றில் உள்ள எல் லாப் பொருட்களும் அவ்வாறு படைக்கப்பட்டது தான்”. (நூல் : தப்ஸீர் தபரி, தப்ஸீர் இப்ன் அபீ ஹாத்தம்.)
இப்பேரண்டப் பிரபஞ்சத்தை படைப்பதற்கு முன்பே இறைவன் தண்ணீரைப் படைத்து விட் டான் என்று மூன்று வேதங்களும் தெளிவாக உரைக் கின்றன. இறைவன் இருப்பது எங்கே? அது “”வைகுண்டத்தில் திருப்பாற்கடலில்” என்று இந்து மதம் கூறுகிறது “”தேவ ஆவியானவர் ஜலத்தின் மீது அசைவாடிக் கொண்டிருந்ததாக” கிருஸ்துவ பைபிள் கூறுகிறது. பிரபஞ்சத்தை படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ்வின் அரி யணை தண்ணீரில் இருந்ததாக இஸ்லாம் கூறுகிறது.
இந்த மூன்று முப்பெரும் வேதங்கள் கூறும் இறை வன், ஒருவனே என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் மதங்களையும், வேதங்களையும் மறுத்து இறைவன் உண்டா எனும் கேள்வி எழுப்பும் அறிவியல் ஆய்வாளர்கள், பூமிக்கு தண்ணீர் வந்த மர்மத்தை இப்பொழுதுதான் கண்டு பிடித்துள்ளார் கள். அவர்கள் சொல்லும் செய்தி, இப்பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்பே தண்ணீர் உள்ளது. சூரியன், சந்திரன், பூமி உருவாவதற்கு முன்பே நீர் நிறைந்த விண்வெளி பெரு வெள்ளப் பரப்பு இருந் தது. அனைத்து நட்சத்திரம் மற்றும் எல்லாக் கோள்களிலும் நீர் நிறைந்துள்ளது.
Where do the oceans come from? The study headed by Adam Sarafian of the Woods Hole Oceanographic Institution (WHOI) in Woods Hole, Massachusetts, found that our seas may have arrived much earlier on our planet than previously thought.
The study pushes back the clock on the origin of Earth’s water by hundreds of millions of years, to around 4,6 billion years ago, when all the worlds of the inner solar system were still forming.
அமெரிக்காவின் வுட்ஸ் ஹோல் கடலாய்வு கழ கத்தை (Woods Hole Oceanographic Institution-WHOI) சேர்ந்த ஆய்வாளர்கள் பூமியில் வீழ்ந்த கார்போ னேசியஸ் விண்கற்களில் (Carbonaceous Chondrite Meteorites) நீர் இருப்பதற்கான சான்றுகளை ஆராய்ந் தனர். ஏனெனில் இந்த விண்கல்லானது சூரிய மண்டலம் உருவாகிய காலத்தைச் சேர்ந்த ஒன்று
அடுத்ததாக விண்ணில் உள்ள வெஸ்டா (Astroid Vesta) என்னும் குறுங்கோளில் இருந்து வந்து விழுந்த விண்கல் மாதிரியில், நீர் இருப்பதற்கான சான்று களை ஆராய்ந்தனர். இந்த குறுங்கோளானது பூமி தோன்றிய சமகாலத்தில் உருவான ஒன்று. இரண்டு விண் கல்லிலும் ஒரே மாதிரியான நீர்மக்கூறுகள் உள்ள Carbonaceous Chondrite இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
ஆக பூமி உருவாகும்போது அதனுடன் தண்ணீ ரும் இருந்தது என்ற உண்மை அறியப்பட்டது. (The planet formed as a wet planet with water on the surface) சூரிய மண்டலம் தோன்றுவதற்கு முன்பே விண் வெளி விரி பரப்பில் பெரு வெள்ளக் கடல் பரப்பு இருந்தது என்ற உண்மையை இன்றைய அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அனைத்து வேதங்க ளின் ஆன்மீக செய்தி இன்று ஆன்மீக அறிவியல் செய்தியாகிவிட்டது. ஒரு கடவுள் கொள்கையை உரத்துக் கூறும் இறுதி நெறிநூல் திருக்குர்ஆன் வழி யில் அறிவியல் உண்மைகள் வெளிவருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.