நீங்கள் யூதர்களின் மாதிரியை காண விரும்பினால்…
இந்தியத்துணைக்கண்டத்தின் மாபெரும் மேதை ஷாஹ் வலிய்யுல்லாஹ் முஹத்திஸ் தெஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்;
“நீங்கள் யூதர்களின் மாதிரியை காண விரும்பினால் நமது காலத்து “கெட்ட உலமா” (மார்க்க அறிஞர்களை) பாருங்கள்.
இவர்கள் உலகாயத நன்மைகளை நாடி அதன் பின்னால் ஓடுபவர்களாகவும்,
தமது முன்னோர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுகிறவர்களாக இருக்கின்றார்கள்.
இவர்கள் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர்ஆனையும், ஸுன்னாவையும் புறக்கணிப்பு செய்கின்றார்கள்.
தனது மனதுக்கு பிடித்த ‘ஆலிமின்’ மார்க்கப்புலமை, கடுமையான போக்கு, நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை கெட்டியாக பற்றிப்பிடித்துக்கொண்டுள்ளார்கள்.
தவறுகள், பாவங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் “ஹதீஸ்”களை புறக்கணித்து விட்டு இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்களையும் குழப்பம் விளைவிக்கக்கூடிய அனுமானங்கள், விரிவுரைகளை அரவணைத்துக் கொண்டுள்ளார்கள். இதன்காரணமாகவே இவர்கள் அழிவின் பால் சென்று கொண்டிருக்கின்றார்கள்”
(நூல் : அல் ஃபௌஸுல் கபீர்ஃபீ உஸூலித்தஃப்ஸீர்’பக்கம் 10,11)