Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

எறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி

Posted on July 7, 2015 by admin

எறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி

இறைத்தூதர் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (கி.மு. 1032 – கி.மு. 975) ஓர் பேரரசர்.

ஒரே நேரத்தில் முழு உலகையும் ஆண்ட நால்வரில் ஒருவர். பெரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவர்.

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் படையில் மனிதர்கள் மட்டுமன்றி ஜின்கள், பறவைகள் ஆகியவையும் இடம்பெற்றிருந்தன. அதனால் பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றின் மொழிகளும் அன்னாருக்குத் தெரியும்.

காற்று அவர்களுக்குப் பணிவிடை செய்தது. தீர்ப்பு வழங்குவதில் வல்லவர்; நேர்மையாளர்.

ஒருமுறை அவர்களின் பிரமாண்டமான படைகளின் அணிவகுப்பு நடந்தது.

ஜின்கள், மனிதர்கள், பறவைகள் புடைசூழ பவணி வந்தார்கள். வழியில் ஒரு பள்ளத்தாக்கைக் கடக்க வேண்டியிருந்தது.

அதில் எறும்புகள் கூட்டமாக வாழ்ந்த ஓடை ஒன்றும் இருந்தது.

அப்போது ஓர் எறும்பு பேசியதை நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்டு முறுவலித்தார்கள்.

இதைத் திருக்குர்ஆன் இப்படிச் சொல்லும்.

அவர்கள் எறும்புகளின் ஓடைக்கருகே (வாதிந் நம்ல்) வந்தபோது ஓர் எறும்பு, “எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் (மஸாகின்) நுழைந்துவிடுங்கள். சுலைமானும் அவருடைய படையினரும் உங்களை மிதித்துவிட வேண்டாம்” என்று கூறியது. அது கூறியதைக் கேட்டு சுலைமான் புன்னகைத்துச் சிரித்தார். (27:18,19)

இங்கு ‘எறும்பு ஓடை’ என்பதைக் குறிக்க ‘வாதிந் நம்ல்’ எனும் சொற்றொடர் ஆளப்பட்டுள்ளது.

நம்லத்-எறும்பு; நம்ல்-எறும்புகள். ‘வாதீ’ என்பதற்கு பள்ளத்தாக்கு (Conyon), கணவாய் (Ravine), மலை இடுக்கு (Gully), இடுக்கு வழி (Gorge), ஓடை (Rivulet) ஆகிய பொருள்கள் உள்ளன.

இந்தச் சொல்லாக்கத்தைப் பார்த்து கீழை அறிஞர்கள் சிலர் நகைத்ததுண்டு.

ஏனெனில், புற்றுகளில் எறும்பு இருக்கும்; மண் தரையில் வழியமைத்து சிறிய அளவில் வீடுகளை அமைத்து வாழும்.

எறும்புகளுக்குப் பெரிய அளவில் ஓடையோ சுரங்கமோ எங்கே உள்ளது என்று அவர்கள் குர்ஆன்மீது வினா தொடுத்தார்கள்;

இதைக் கருத்தில் கொண்டுதானோ என்னவோ நம்மில் சிலரும் ‘வாதிந் நம்ல்’ என்பதற்கு ‘எறும்புப் புற்று’ என்றே பொருள் செய்துவருகிறோம்.

உண்மையில் புற்றைக் குறிக்க இவ்வசனத்தில் வேறொரு சொல் (மஸாகின் – குடியிருப்புகள்) ஆளப்பெற்றிருப்பது கவனத்திற்குரியது.

ஆக, எறும்புக்கு ஓடையோ சுரங்கமோ இல்லை என்றே உலகம் கருதிவந்த நிலையில் அண்மையில் அப்படி ஒன்று உண்டு என்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதுதான் வியப்பு.

பிரேசில் நாட்டில் அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பூமிக்கடியில் எறும்புகளின் ஒரு நகரமே கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் எறும்புகளுக்கான சாலைகள், தோட்டங்கள் என எல்லாம் உள்ளன.

சீனாவின் பெருஞ்சுவரைப் போல மிகப்பெரும் அற்புதமாக இது காட்சியளிக்கிறது.

பல மில்லியன் எறும்புகள் சேர்ந்து இச்சாதனையைப் புரிந்துள்ளன

இந்த எறும்பு நகரத்தில், பொதுச்சாலைகள், கிளை நடைபாதைகள், பூங்காக்கள் உள்பட ஒரு நகரத்திற்கு வேண்டிய எல்லா கட்டமைப்புகளும் உள்ளன.

இதுதான் உலகிலேயே எறும்புகளின் பெரும்கூட்டம் வசிக்கும் இடமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

காற்று வாங்குவதற்காகக் கால்வாய் போன்று எறும்புகள் தயாரித்துள்ள இடைவெளிகளில் 10 டன் வெள்ளை சிமிண்டை முதலில் நிபுணர்கள் கொட்டினார்கள்.

இதனால் அக்கால்வாய்கள் வலுவாகவும் உறுதியாகவும் மாறக்கூடும்.

பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே 8 மீட்டர் ஆழத்தில் 46.5 ச.மீட்டர் பரப்பை நிரப்புவதற்காக சிமிண்ட் கொட்டும் பணிக்கே 10 நாட்கள் பிடித்தது.

ஒரு மாதத்திற்குப்பின், பேராசிரியர் லூயிஸ் ஃபோர்ஜி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு பூமியை அகழும் பணியைத் தொடங்கியது.

அப்போதுதான் எறும்புகளின் இந்தப் பிரமாண்டமான நகரத்தைக் கண்டுபிடித்து, சீனப் பெருஞ்சுவர் போன்ற உலக அற்புதம் இது என்று வர்ணித்தனர்.

கட்டமைப்புகளை உருவாக்குவதில் வியத்தகு ஆற்றல் பெற்றது எறும்புக் கூட்டம்.

ஒவ்வோர் எறும்புக்கும், தன் எடையைப்போல் 50 மடங்கு எடையைச் சுமக்கும் ஆற்றல் உண்டு.

அதைத் தூக்கிக்கொண்டு பல பத்து கி.மீ. தூரம் நடக்கவும் அதற்கு முடியும். இதைத் தொடர்ச்சியாகத் திரும்பத் திரும்பச் செய்யும் திறன் படைத்தது.

இந்த அடிப்படையில்தான், இந்தச் சுரங்கத்தைக் கட்ட சுமார் 40 டன் மண்ணை ஒரு பெரிய எறும்புக் கூட்டம் தோண்டி எடுத்துள்ளது.

இதன்மூலம் எறும்புகள் புதிய காற்றைச் சுவாசிக்கவும் சுருக்க வழியில் பயணிக்கவும் வழி பிறந்தது.

இந்த எறும்பு நகரத்தில், அறைகளை இணைக்கும் முதன்மைச் சாலைகள் உண்டு.

புற்றுகளுக்குச் செல்லும் குறுக்குச் சாலைகளும் உண்டு. அங்கு சிறு தானியங்களையும் சேமித்த உணவுகளையும் எறும்புகள் பாதுகாக்கின்றன.

அவ்வாறே, எறும்புகள் கொண்டுவந்து சேர்த்த பச்சைப் புற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களும் உண்டு.

இவை எறும்புகளின் முட்டைப் புழுக்களை (Larva) காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இப்போது சொல்லுங்கள்! அந்த வசனத்தில் எறும்பு ஓடை, அல்லது பள்ளத்தாக்கு (வாதிந் நம்ல்) என்று அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது எவ்வளவு பொருத்தம்! எவ்வளவு பெரிய ஆராய்ச்சி! எத்துணை பெரும் உண்மை! சுப்ஹானல்லாஹு!

-அஹ்மத் கான் பாக்கவி

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

54 − = 48

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb