ரமலான்! வரவேற்பும்… வழியனுப்புதலும்…
ஒவ்வோர் ஆண்டும் மகத்துவமும், அருள்வளமும் நிறைந்த ரமலான் மாதம் நம்மிடம் வருகின்றது. துவக்கத்தில் வரவேற்கின்றோம், முடிவில் வழியனுப்பி வைக்கின்றோம். வரவேற்பதும், வழியனுப்புவதும் நமக்குத் தான் பழகிப்போன விஷயமாயிற்றே!
”ரமலானில் நாம் என்ன சாதித்து இருக்கின்றோம்?, நோன்பின் மூலம் நாம் அடைய வேண்டிய தக்வாவை அடைந்து கொண்டோமா?, நரக நெருப்பிலிருந்து ஈடேற்றம் பெற்று விட்டோமா? பாவத்திலிருந்து மீட்சி அடைந்தோமா? அல்லாஹ்வின் ரஹ்மத்தை அடைந்து கொண்டோமா?”
இது போன்று ஆயிரமாயிரம் கேள்விகள் பதில் இல்லாமல் நம் மனதைக் குடையாய் குடைந்து கொண்டிருக்கும் போதே அடுத்து இன்னுமொரு ரமலானில் நாம் அடியெடுத்து வைக்க இருக்கின்றோம்.
வழக்கம் போல் வரவேற்கப் போகின்றோமா? அல்லது தொக்கி நிற்கிற கேள்விகளுக்கான விடைகளைத் தேடி பயணிக்கப் போகின்றோமா?
ஏனெனில், ரமலான் என்பது நம் வீட்டில் வைபவம் நடக்கும் நாட்களைப் போல் அல்லவே! சடங்கு சம்பிரதாயத்தோடு அணுகுவதற்கு…
மாறாக, படைத்த ரப்பின் சந்நிதானத்தின் முன்னால் ஓர் அடியானை கௌரவத்தோடும், உயர் மரியாதையோடும் அடையாளப் படுத்துகிற ஓர் உன்னதம் வாய்ந்த கொடையாகும்.
அல்லாஹ்வின் திருமுன் சமர்ப்பிக்க முடிந்த அளவு தயார் செய்யும் களமாக எதிர் வருகிற ரமலானைப் பயன் படுத்த வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அருள் பாளிப்பானாக! ஆமீன்!
ரமலான் மூலம் ஓர் அடியான் அடைகிற உயர்வும்… தாழ்வும்…
عن أبي هريرة رضي الله عنه ، أن النبي صلى الله عليه وسلم صعد المنبر ، فقال : ” آمين آمين آمين ” . قيل : يا رسول الله ، إنك حين صعدت المنبر قلت : آمين آمين آمين . ، قال : ” إن جبريل أتاني ، فقال : من أدرك شهر رمضان ولم يغفر له فدخل النار فأبعده الله ، قل : آمين ، فقلت : آمين . ومن أدرك أبويه أو أحدهما فلم يبرهما ، فمات فدخل النار فأبعده الله ، قل : آمين ، فقلت : آمين . ومن ذكرت عنده فلم يصل عليك فمات فدخل النار فأبعده الله ، قل : آمين ، فقلت : آمين “
حسن صحيح
رواه ابن خزيمة و ابن حبان في صحيحه و ابي يعلى الموصلي في مسنده و الطبراني في المعجم الأوسط و البيهقي في الشعب.
صححه الالباني رحمه الله في صحيح الترغيب و الترهيب (997) و الله أعلم
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொற்பொழிவு மேடை மீது ஏறும் போது மூன்று முறை “ஆமீன்” கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மிம்பரின் மீது ஏறும் போது “ஆமீன்” என மூன்று முறை கூறினீர்களே” என வினவப்பட்டது.
என்னிடம் வானவர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வருகை தந்தார். வந்தவர், “யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வில்லையோ அவர் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டும் அவர் தூரமாகிவிடட்டும்” எனக் கூறிவிட்டு, ”ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே, நான் முதல் முறை “ஆமீன்” கூறினேன்.
“யார் தன்னுடைய பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் அவர்களுக்கு நன்மை செய்யாமல் இறந்து விட்டாரோ அவரும் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டு அவரும் தூரமாகி விடட்டும்” எனக் கூறிவிட்டு, “ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே, நான் இரண்டாவது முறையாக “ஆமீன்” கூறினேன்.
மேலும், “யாரிடம் தங்களது பெயர் கூறப்பட்டும் தங்களின் மீது ஸலவாத் சொல்லாத நிலையிலேயே மரணித்து விடுகின்றாரோ அவரும் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டு அவரும் தூரமாகி விடட்டும்” எனக் கூறிவிட்டு, “ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே, நான் மூன்றாவது முறையாக “ஆமீன்” கூறினேன்” என்று பதில் கூறினார்கள். (நூல்: இப்னு குஸைமா)
روى ابن ماجه بسند صحيح عن طلحة بن عبيد الله أن رجلين قَدِما على رسول الله صلى الله عليه وسلم، وكان إسلامهما جميعاً, فكان أحدهما أشد اجتهاداً من الآخر, فغزا المجتهد منهما فاستشهد, ثم مكث الآخر بعده سنة ثم توفي, قال طلحة: فرأيت في المنام بينا أنا عند باب الجنة إذا أنا بهما, فخرج خارج من الجنة فأذن للذي توفي الآخِر منهما, ثم خرج فأذن للذي استشهد, ثم رجع إلي فقال: ارجع فإنك لم يأْنِ لك بعد, فأصبح طلحة يحدث به الناس, فعجبوا لذلك, فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم, وحدثوه الحديث, فقال: (مِن أي ذلك تعجبون؟), فقالوا: يا رسول الله! هذا كان أشد الرجلين اجتهاداً، ثم استشهد, ودخل هذا الآخر الجنة قبله, فقال رسول الله صلى الله عليه وسلم: (أليس قد مكث هذا بعده سنة). قالوا: بلى, قال: (وأدرك رمضان، فصام، وصلى كذا، وكذا من سجدة في السنة)، قالوا: بلى, قال رسول الله صلى الله عليه وسلم: (فما بينهما أبعد مما بين السماء والأرض).
தல்ஹா இப்னு உபைதில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அந்தலூஸ் – ஸ்பெயினிலிருந்து இரண்டு மனிதர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள். இருவரும் ஒரே சமயம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
அவ்விருவரில் ஒருவர் மற்றவரை விட அல்லாஹ்வின் வழிபாடு விஷயத்தில் கடுமையாக முயற்சிக்கக்கூடியவர். அவ்விருவரில், முயற்சி செய்பவர் அறப்போரில் கலந்து கொண்டு உயிர்த்தியாகம் செய்து ஷஹீத் ஆக்கப்பட்டார். மற்றொருவர், அவருக்குப் பிறகு ஒரு வருடம் வாழ்ந்தார். பின்னர் மரணித்தார்.
“நான் கனவில் என்னை சொர்க்கத்தின் வாசல் அருகிலே அவ்விருவருடனும் இருந்ததைப் பார்த்தேன். அப்போது சொர்க்கத்திலிருந்து ஒருவர் வெளியே வந்து அவ்விருவரில் இறுதியாக மரணித்தவருக்கு சொர்க்கத்தின் உள்ளே செல்ல அனுமதி அளித்தார்.
பின்னர், மீண்டும் வெளியே வந்து உயிர்த்தியாகம் செய்து ஷஹீதான முதலாமவருக்கு சொர்க்கத்தின் உள்ளே செல்ல அனுமதி வழங்கினார்.
பிறகு, அவர் என்னிடம் வந்தார். மேலும், என்னைப் பார்த்து “நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; உங்களுக்கு உள்ளே செல்வதற்கான நேரம் வரவில்லை” என்று கூறினார்.
இதை நான் காலையில் மக்களிடம் கூறினேன். மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். இந்தச் செய்தி மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் தெரிய வந்தது. மக்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று தங்களின் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார்கள்.
அதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “எது குறித்து நீங்கள் ஆச்சர்யம் அடைகின்றீர்கள்?” என்று மக்களை நோக்கி வினவினார்கள். அப்போது, மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! முதலாமவர் கடுமையாக முயற்சி செய்தார்; அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்து ஷஹீதும் ஆனார். ஆனால், மற்றவரோ இவருக்கு முன்னால் சுவனத்தில் நுழைந்து விட்டாரே!?” என்று தங்களின் ஆச்சர்யத்திற்கான காரணத்தை வெளிப்படுத்தினார்கள்.
அதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “இவர் அவருக்குப் பின்னால் ஒரு வருடம் வாழவில்லையா?” என மக்களிடம் கேட்டார்கள். அதற்கு மக்களும் “ஆம், வாழ்ந்தார்” என்று ஆமோதித்தனர்.
அப்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அவர் ரமலானை அடைந்திருப்பார்; நோன்பு நோற்றிருப்பார்; உபரியான தொழுகைகளை அதிகமதிகம் தொழுதிருப்பார் இல்லையா?” எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் ”ஆமாம்” என்று பதில் கூறினார்கள்.
ஆகவே தான் அவ்விருவருக்கும் இடையே வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள மிகப்பெரிய தூரத்தைப் போன்று இடைவெளி உள்ளது” என்று கூறினார்கள்.
(நூல்: இப்னு மாஜா, இப்னு குஸைமா, பஸ்ஸார், இப்னு ஹிப்பான்)
الإمام أحمد من حديث عمرو بن مرة الجهني ، قال
جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال : يا رسول الله ، شهدت أن لا إله إلا الله ، وأنك رسول الله ، وصليت الخمس ، وأديت زكاة مالي ، وصمت شهر رمضان ، فقال رسول الله صلى الله عليه وسلم : ” من مات على هذا كان مع النبيين والصديقين والشهداء يوم القيامة هكذا – ونصب أصبعيه –
அம்ர் இப்னு முர்ரா அல்ஜுஹனீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்களின் சபைக்கு வருகை தந்தார். வந்தவர் “அல்லாஹ்வின் தூதரே! நான், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும், நிச்சயமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்றும் நான் சாட்சியம் சொல்கின்றேன்; மேலும், ஐந்து நேரம் தொழுகின்றேன்; ஜகாத்தையும் கொடுக்கின்றேன்; ரமலான் நோன்பையும் நோற்கின்றேன் எனில் நான் யாரைச் சார்ந்தவன்” எனக் கேட்டார்.
அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் “நீர் இதே நிலையில் வாழ்ந்து மரணித்து விடுவீர் எனில் ஸித்தீக்கீன்கள் – வாய்மையாளர்கள், மற்றும் ஷுஹதாக்கள் – உயிர்த்தியாகிகள், நபிமார்கள் ஆகியோருடன் நாளை மறுமை நாளில் தங்கள் விரல்களை இணைத்துக் காட்டி இவ்வாறு இருப்பீர்” என்று பதில் கூறினார்கள். (நூல்: அஹ்மத்)
எனவே, ரமலானை பயன் படுத்துகின்ற விதங்களைப் பொறுத்து சில போது உயர்வையும், சில போது தாழ்வையும் ஓர் அடியான் பெற்றுக் கொள்கின்றான் என்பதை மேற்கூறிய நபிமொழிகள் நமக்கு நினைவூட்டுகின்றன.
நாமும் தான் எத்தனையோ ரமழானைக் கடந்திருக்கின்றோம். அல்லாஹ் ரமழானின் மூலம் அடியார்களிடம் எதிர்பார்க்கும் அந்த இறையச்சம் நம்மிடம் வந்திருக்கின்றதா?
பொதுவாக எந்த ஓர் இறைக்கட்டளையையும் செயலாக்கம் கொடுக்க வேண்டுமானாலும், அந்த இறைக்கட்டளையின் மூலம் நம் வாழ்வில் மாற்றம் ஏற்பட வேண்டுமானாலும் சில உயர்ந்த பண்பியல்களைக் கொண்டவர்களாக நாம் உருவாக வேண்டும்.
1. அல்லாஹ்வின் தவ்ஃபீக் நமக்கு இருக்க வேண்டும்.
ஒரு அடியானுக்கு அல்லாஹ் தன்னுடைய அருட்கொடைகளை வாரி, வாரி வழங்குவது அருள் என்றால் அதை அனுபவிப்பதற்கான ஆற்றலைத் தருவது அதை விட மிகப்பெரிய அருளாகும்.
உதாரணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நாம் சாப்பிட்டு முடித்த உடன் கேட்க வேண்டிய பிரார்த்தனையைக் கற்றுத் தந்துள்ளார்கள். அதில் உணவைக் கொடுத்ததற்காக மாத்திரம் நாம் நன்றி செலுத்தவில்லை. மாறாக, உண்ண வைத்ததற்கும் அல்லவா நாம் நன்றி செலுத்துகின்றோம்.
ஏனெனில், உலகில் ஏராளமான வசதி வாய்ப்புகள் கொடுக்கப்பட்டவர்களில் எத்தனையோ பேருக்கு வாய்க்கு பக்கத்தில் கூட உணவைக் கொண்டு போக முடியாது. அல்லது வித விதமான உணவுகளைச் சாப்பிட முடியாது, அல்சர், சுகர், பிரஷ்ஷர் என பல்வேறு நோய்களின் தாக்கத்தால் தூய உணவுகளையும், சிற்றுண்டிகளையும் வாயில் எடுத்து கூட வைக்க முடியவில்லை.
எனவே தான் உணவு கொடுத்த அல்லாஹ் அதை உண்ணவும் வைத்ததற்காக நன்றிப் பெருக்கோடு துஆச் செய்யுமாறு ஒரு பிரார்ர்த்தனையை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
“எங்கள் இறைவா! எங்களுக்கு உண்ண உணவளித்து, நீர் பருகச் செய்து, எங்களைக் கீழ்ப்படியும் முஸ்லிம்களில் ஒருவனாக ஆக்கியுள்ளாயே உனக்கே புகழனைத்தும்”
எனவே, அல்லாஹ்வின் தவ்ஃபீக் ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்விற்கு மிகவும் முக்கியம் ஆகும்.
எல்லா அறிவும் பெற்றிருந்தும், வானவர்களுக்கு ஆசானாக இருந்தும் அல்லாஹ்வின் தவ்ஃபீக் இல்லாத காரணத்தால் இப்லீஸ் மல்வூனாக மாறிப்போனான்.
அல்லாஹ்வின் தவ்ஃபீக் இல்லாததால் உலகம் மற்றும் மறுமை வாழ்வு சூன்யமாகிப் போனவர்களின் வரலாற்றை குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் பேசுகின்றான்.
وذات مرة كان يزورها، وقد شرع الرسول يجهر بدعوته..
وخشيت قريش أن يلقاه الطفيل ويسلم، ثم يضع موهبته الشعرية في خدمة الاسلام، فتكون الطامة على قريش وأصنامها..
من أجل ذلك أحاطوا به.. وهيئوا له من الضيافة كل أسباب الترف والبهجة والنعيم، ثم راحوا يحذرونه لقاء رسول الله صلى الله عليه وسلم، ويقولون له:
” ان له قولا كالسحر، يفرّق بين الرجل وابيه.. والرجل وأخيه.. والرجل وزوجته.. ونا نخشى عليك وعلى قومك منه، فلا تكلمه ولا تسمع منه حديثا”..!!
துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ ஏமனைச் சேர்ந்த தவ்ஸ் கோத்திரத்தின் மதிப்பு மிக்க தலைவர். அறியப்பட்ட அன்றைய அரேபிய தீபகற்பத்தின் கொடையாளர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர். கஅபாவை தரிசிக்க அடிக்கடி மக்காவிற்கு வந்து செல்பவர்.
அப்படித்தான் அன்றும் கஅபாவை தரிசிக்க மக்காவிற்குள் அடியெடுத்து வைத்திருந்தார். ஆனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவருக்கு குறைஷி தலைவர்கள் உபசரிப்பு வழங்கினர்.
ولنصغ للطفيل ذاته يروي لنا بقية النبأ فيقول:
” فوالله ما زالوا بي حتى عزمت ألا أسمع منه شيئا ولا ألقاه..
وحين غدوت الى الكعبة حشوت أذنيّ كرسفا كي لا أسمع شيئا من قوله اذا هو تحدث..
وهناك وجدته قائما يصلي عند الكعبة، فقمت قريبا منه، فأبي الله الا أن يسمعني بعض ما يقرأ، فسمعت كلاما حسنا..
وقلت لنفسي: واثكل أمي.. والله اني لرجل لبيب شاعر، لا يخفى عليّ الحسن من القبيح، فما يمنعني أن أسمع من الرجل ما يقول، فان كان الذي يأتي به حسن قبلته، وان كان قبيحارفضته.
ومكثت حتى انصرف الى بيته، فاتبعته حتى دخل بيته، فدخلت وراءه، وقلت له: يا محمد، ان قومك قد حدثوني عنك كذا وكذا.. فوالله ما برحوا يخوّفوني أمرك حتى سددت أذنيّ بكرسف لئلا أسمع قولك..
ولكن الله شاء أن أسمع، فسمعت قولا حسنا، فاعرض عليّ أمرك..
فعرض الرسول عليّ الاسلام، وتلا عليّ من القرآن..
فأسلمت، وشهدت شهادة الحق،
துஃபைல் அவர்கள் கூறுகின்றார்கள்:
உபசரிப்பின் ஊடாக அபூஜஹ்லும் இன்ன பிற தலைவர்களும் ஒன்று சேர்ந்து என்னிடம் “துஃபைல் அவர்களே! நீங்கள் எங்கள் ஊருக்கு வந்துள்ளீர்கள். தன்னை நபியெனக் கூறிக்கொண்டு முஹம்மத் எனும் மனிதர் எங்களைத் துண்டாடி விட்டார்.
நீங்கள் அவரிடம் சென்று பேசவோ, அவரிடம் இருந்து எதையும் கேட்கவோ வேண்டாம். அவரின் பேச்சு பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளையும், கணவனிடமிருந்து மனைவியையும் பிரித்து விடும் அளவுக்கு அமைந்திருக்கிறது” என்று கூறினர்.
நானும் அப்போதிலிருந்து இனி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சைக் கேட்கவோ, பேசவோ கூடாது எனும் முடிவோடு மக்காவின் வீதிகளில் காதில் பஞ்சை வைத்துக் கொண்டு அலைந்து திரிந்தேன்.
இந்நிலையில் ஒரு நாள் நான் கஅபாவிற்குள் நுழைந்த போது, தூரத்தில் ஒருவர் என்னுடைய வணக்க முறைக்கு மாற்றமான முறையில் நின்று வணங்குவதைக் கண்டேன். அந்த வணக்கம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. என்னையும் அறியாமல் நான் அவரின் பக்கம் ஈர்க்கப்பட்டதை உணர்ந்தேன்.
மெதுவாக அவரின் அருகில் சென்றேன். அவர் ஏதோ முணு முணுப்பதாக நான் உணர்ந்தேன். என் காதில் ஏதோ கேட்டது. அது அழகானதாகவும் இருந்தது. அப்போது நான் எனக்குள் “துஃபைலே! உமக்கென்ன கேடு! நீ ஒன்றும் முட்டாள் அல்ல, நீ ஒரு கவிஞன் தானே, ஏன் காதில் பஞ்சை வைத்துக் கொண்டு அலைகிறாய்? தூக்கி எறிந்து விட்டு அவர் சொல்வதைக் கேள்! நல்லதாயின் ஏற்றுக் கொள்! கெட்டதாக இருப்பின் தூக்கி எறிந்து விடு!” என்று பேசிக்கொண்டேன்.
இதன் பின்னர் காதில் இருந்த பஞ்சை தூக்கி எறிந்து விட்டு முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது முடிக்கும் வரை காத்திருந்தேன். அவர்கள் சென்ற பின் நானும் பின்னாலேயே சென்று அவர்கள் இல்லத்தில் நுழைந்தேன்.
பின்னர் மக்காவில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரித்து விட்டு, ”நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்! எனக்கும் கொஞ்சம் கூறுங்கள்!” என்றேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏகத்துவ சுகந்தத்தை என் மீது பொழிந்தார்கள். நான் அதன் வசந்தத்தில் திளைத்துப் போனேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனக்கு ஃபலக், இக்லாஸ் அத்தியாயங்களை ஓதிக்காட்டினார்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இவற்றை விட சிறந்த வார்த்தைகளை நான் முன்னெப்போதும் கேட்டதில்லை. அப்போதே நான் நபிகளாரின் கரம் பற்றி திருக்கலிமாவை மொழிந்து இஸ்லாத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.
பின்பு நான் சிறிது காலம் அண்ணலாரின் அருகாமையில் இருந்து சன்மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொண்டேன். குர்ஆனின் சில பகுதிகளையும் மனனமிட்டேன்.
وقلت: يا رسول الله: اني امرؤ مطاع في قومي واني راجع اليهم، وداعيهم الى الاسلام، فادع الله أن يجعل لي آية تكون عونا لي فيما أدعهوهم اليه، فقال عليه السلام: اللهم اجعل له آية”..
மீண்டும் என் ஊருக்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் என் மனதில் தோன்றிய போது, அண்ணலாரின் முன் வந்து நின்று “அல்லாஹ்வின் தூதரே! என் குடும்பத்தினருக்கும், என் கோத்திரத்தாருக்கும் நான் இந்த சத்திய தீனை எத்தி வைக்க விரும்புகின்றேன். நான் சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். எனினும் ஏதேனும் ஓர் அத்தாட்சியோடு நான் அவர்களிடம் சென்றால் அது எனக்கு உறுதுணையாக இருக்கும், அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றேன்.
அப்போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “அல்லாஹ்வே! இவருக்கு உறுதுணையாக ஓர் அத்தாட்சியை இவரிடம் நீ ஏற்படுத்துவாயாக! என்று துஆ செய்தார்கள்.
(இதன் விளைவாக அவரின் தலைக்கு மேல் அல்லாஹ் ஒளிக்கற்றையை பிரகாசிக்கச் செய்தான் என்று ஓர் அறிவிப்பிலும், இரண்டு கண்களுக்கிடையே ஒளியை பிரகாசிக்கச் செய்தான் என்று வேறொரு அறிவிப்பிலும் கூறப்படுகிறது.)
وأسلم أبوه في الحال..
ثم انتقل الى أمه، فأسلمت
ثم الى زوجه، فأسلمت..
ولما اطمأن الى أن الاسلام قد غمر بيته، انتقل الى عشيرته، والى أهل دوس جميعا.. فلم يسلم منهم أحد سوى أبي هريرة رضي الله عنه..
ஊருக்குச் சென்ற துஃபைல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆரம்பமாக தம் தந்தை, பின்னர் தாய், பின்னர் மனைவி, பின்னர் குடும்பம் என இஸ்லாமிய வட்டத்தை விரிவு படுத்தினார்.
பின்னர் தம் கோத்திரமான தவ்ஸ் மக்களிடம் சத்திய தீனின் அழைப்பைக் கொண்டு சென்றார். அங்கே அபூஹுரைரா மாத்திரம் இவரின் அழைப்பை ஏற்று இஸ்லாத்தில் இணைந்தார்கள்.
ولقد راحوا يخذلونه، وينأون عنه، حتى نفذ صبره معهم وعليهم. فركب راحلته، وقطع الفيافي عائدا الى رسول الله صلى الله عليه وسلم يشكو اليه ويتزوّد منه بتعاليمه..
وحين نزل مكة، سارع الى دار الرسول تحدوه أشواقه..
وقال للنبي:
” يا رسول الله..
انه ق غلبني على دوس الزنى، والربا، فادع الله أن يهلك دوسا”..!!
وكانت مفاجأة أذهلت الطفيل حين رأى الرسول يرفع كفيه الى السماء وهو يقول:
” اللهم اهد دوسا وأت بهم مسلمين”..!!
ثم التفت الى الطفيل وقال له:
” ارجع الى قومك فادعهم وارفق بهم”.
பின்னர், மீண்டும் அண்ணலாரைச் சந்திக்க வந்த துஃபைல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! என் கோத்திரத்தார் இஸ்லாத்தை ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் வட்டியிலும், விபச்சாரத்திலும் மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்களை அல்லாஹ் அழித்திட துஆச்செய்யுங்கள்!” என்றார்கள்.
ஆனால், அல்லாஹ்வின் தூதரோ “அல்லாஹ்வே! தவ்ஸ் கோத்திரத்தாருக்கு இஸ்லாத்தை நஸீபாக்குவாயாக! அவர்களை என் முன்னால் முஸ்லிம்களாக வரச் செய்வாயாக!” என்று துஆச் செய்தார்கள்.
பின்னர், துஃபைலை நோக்கி “துஃபைல் அவர்களே! உம் மக்களிடம் திரும்பிச் செல்லுங்கள்! மென்மையான முறையில் அவர்களை அணுகுங்கள்!” என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.
ولقد هدى الله دوسا..
وجاء بهم مسلمين..
وها هم أولاء.. ثمانون بيتا، وعائلة منهم، يشكلون أكثرية أهلها، يأخذون مكانهم في الصفوف الطاهرة خلف رسول الله الأمين.
அகழ்ப்போர் நடந்து முடிந்திருந்த தருணத்தில் நான் என் குடும்பம் மற்றும் கோத்திரம் சமூகமாக 80 குடும்பங்களை அழைத்துக் கொண்டு மதீனா வந்து அண்ணலாரின் முன்னிலையில் இஸ்லாத்தில் இணைத்தேன். மக்கா வெற்றி வரை அண்ணலாருடன் இருந்து விட்டு எஞ்சியிருந்த என் கோத்திரத்தார்களுக்கு தீனை எத்தி வைக்கவும், அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் சிலைகளை தீயிட்டு எரிப்பதற்கும் அனுமதி கேட்டேன். அண்ணலார் அனுமதி வழங்கினார்கள்.
பின்னர், நான் என் கோத்திரத்தார்களிடம் சென்று தீனை எத்தி வைத்து சிலைகளை தீயிட்டு எரித்தேன். அந்த சாம்பலோடு என் கோத்திரத்தார்களின் மூடநம்பிக்கைகளும், இணைவைப்பும் எரிந்து சாம்பலாயின. என் ஒட்டு மொத்த தவ்ஸ் கோத்திரமும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.
(நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..)
அண்ணலார் நபியாக அனுப்பப்பட்ட காலத்திலிருந்து கிட்டத்தட்ட 93 அத்தியாயங்கள் நபிகளாருக்கு இறக்கியருளப்பட்டது. இதில் பெரும்பாலான சூராக்களையும், குர்ஆன் வசனங்களையும் அண்ணலார் ஓத அபூஜஹ்ல் உட்பட குறைஷி குலத்தின் தலைவர்கள் கேட்டிருந்த போதிலும், குர்ஆன் வசனம் ஓதப்படுவதை கேட்கவே கூடாது எனும் நோக்கத்தோடு காதில் பஞ்சை வைத்துக் கொண்டு மக்காவின் வீதி எங்கும் அலைந்து திரிந்த துஃபைல் அவர்களின் காதில் அல்லாஹ் ஒரு சில வசனங்களை விழச் செய்தான்.
அல்லாஹ்வின் தவ்ஃபீக் அவரை மாத்திரமல்ல அவரின் குடும்பத்தை மாத்திரமல்ல விபச்சாரத்திலும், வட்டியிலும் மூழ்கிக்கிடந்த அவரின் ஒட்டு மொத்த கோத்திரத்தாரையும் ஹிதாயத்தின் சுகந்தத்தை நுகர வைத்தது.
அண்ணலாரின் அருகாமையில் இருந்து ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நபிமொழிகளை இந்த உம்மத்திற்கு கொண்டு வந்த சேர்த்த பெருமை துஃபைல் இப்னு அம்ர் அத்தவ்ஸீ ரளியல்லாஹு அன்ஹு உண்டென்றால் அது அல்லாஹ்வின் தவ்ஃபீக்கால் விளைந்தது தானே!
ஆகவே தான் எத்தனை ரமலானை நாம் அடைந்தாலும், எத்தனை ரமலான் நம்மை அடைந்தாலும் அல்லாஹ்வின் தவ்ஃபீக் இல்லையானால் அந்த ரமலானின் மூலம் நாம் நம்மை நரகிலிருந்து காக்கவோ, மன்னிப்பை பெற்றுக் கொள்ளவோ, தக்வாவை அடைந்து கொள்ளவோ முடிவதில்லை.
ஆதலால் தான் ரஜப் மாதத்திலிருந்தே அல்லாஹ்விடம் “யாஅல்லாஹ் எங்களுக்கு நீ ரஜபிலும், ஷஅபானிலும் பரக்கத் செய்வாயாக! மேலும், எங்களுக்கு ரமலானை அடையும் பாக்கியத்தை அருள்வாயாக!” என்று பிரார்த்திக்குமாறு நபி {ஸல்} அவர்கள் பணித்தார்கள்.
எனவே தான் முன்னோர்களான மேன்மக்களும் அல்லாஹ்விடம் அவன் தவ்ஃபீக்கை வேண்டி பிரார்த்தித்தும் இருக்கின்றார்கள்.
قال معلى ابن الفضل : كانوا يدعون الله ستة أشهر أن يبلغهم رمضان ، ثم يدعونه ستة أشهر أن يتتقبل منهم رمضان .
முஅல்லா இப்னு அல் ஃபள்ல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்:
”மேன்மக்களான முன்னோர்கள் ஆறு மாத காலத்திற்கு முன்னரே ரமழானை அடைந்திட அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள்.
பிந்திய ஆறு மாத காலம் அந்த ரமழானில் செய்த இபாதத்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள்.”
وقال يحيى ابن كثير كان من دعائهم : اللهم سلمني إلى رمضان ، وسلم لي رمضان ، وتسلمه مني متقبلاً يا رب الأنام .
யஹ்யா இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்:
முன்னோர்களான சீதேவிகள் ”ரமழான் என்னை சாந்தியோடு சந்திக்கவும், ரமழானை நான் சாந்தியோடு சந்திக்கவும் இறைவா நீ அருள் புரிவாயாக! மேலும், ரமலானில் நான் செய்கிற வணக்கங்களை பூரணமாக ஏற்றுக் கொள்வாயாக!” என்று துஆ செய்யும் பழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள்.
2. இபாதத் மற்றும் அமலைக் கொண்டு மனநிறைவும், பூரிப்பும் அடைந்து விடக் கூடாதுஸ
இன்று நம்மில் பலரிடம் இவ்வகையான பூரிப்பும், மனநிறைவும் ரமலானில் செய்த இபாதத்கள் மற்றும் அமல்கள் விஷயத்தில் ஏற்பட்டு விடுகின்றது.
ரமலான் நம்மிடம் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.
روى الحاكم في المستدرك على الصحيحين ج4/ص278, قال رحمه الله:” أخبرني أحمد بن محمد بن سلمة العنزي ثنا عثمان بن سعيد الدارمي ثنا عبد الله بن صالح المقرئ ثنا سليمان بن هرم القرشي وحدثنا علي بن حمشاد العدل ثنا عبيد بن شريك ثنا يحيى بن بكير ثنا الليث بن سعد عن سليمان بن هرم عن محمد بن المنكدر عن جابر بن عبد الله رضي الله عنهما قال خرج علينا النبي صلى الله عليه وسلم فقال:” خرج من عندي خليلي جبريل آنفا فقال يا محمد والذي بعثك بالحق إن لله عبدا من عبيده عبد الله تعالى خمس مائة سنة على رأس جبل في البحر عرضه وطوله ثلاثون ذراعا في ثلاثين ذراعا والبحر محيط به أربعة آلاف فرسخ من كل ناحية وأخرج الله تعالى له عينا عذبة بعرض الأصبع تبض بماء عذب فتستنقع في أسفل الجبل وشجرة رمان تخرج له كل ليلة رمانة فتغذيه يومه فإذا أمسى نزل فأصاب من الوضوء وأخذ تلك الرمانة فأكلها ثم قام لصلاته فسأل ربه عز وجل عند وقت الأجل أن يقبضه ساجدا وأن لا يجعل للأرض ولا لشيء يفسده عليه سبيلا حتى بعثه وهو ساجد قال ففعل فنحن نمر عليه إذا هبطنا وإذا عرجنا فنجد له في العلم أنه يبعث يوم القيامة فيوقف بين يدي الله عز وجل فيقول له الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول رب بل بعملي فيقول الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول يا رب بل بعملي فيقول الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول رب بل بعملي فيقول الله عز وجل للملائكة قايسوا عبدي بنعمتي عليه وبعمله فتوجد نعمة البصر قد أحاطت بعبادة خمس مائة سنة وبقيت نعمة الجسد فضلا عليه
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நாங்கள் குழுமியிருந்த சபைக்கு வருகை தந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களை நோக்கி “தோழர்களே! கொஞ்ச நேரத்திற்கு முன்பாகத்தான் என் நண்பர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வருகை தந்து வியத்தகு வரலாறு ஒன்றைக் கூறி என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்திப்போனார்” என்று கூறி விட்டு எங்களிடம் “என்னிடம் வருகை தந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! சத்தியத்தைக் கொண்டு உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் அடியார்களில் ஒரு நல்லடியார் இருந்தார்.
அந்த அடியார் நாற்புறமும் கடலால் சூழப்பட்ட மலைப்பிரதேசத்தில் மலையின் உச்சியில் 500 ஆண்டு காலம் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதிலேயே கழித்து வந்தார்.
கடல் சூழ்ந்த – உப்பு நீர் நிறைந்த அந்தப் பகுதியிலும் கூட அல்லாஹ் அவருக்கு மதுரமான ஓர் நீரூற்றை ஓடச் செய்தான். அருகில் ஓர் மாதுளை மரத்தையும் உருவாக்கிக் கொடுத்தான்.
தினமும் மாலை நேரத்தில் மலையின் உச்சியிலிருந்து கீழிறங்கு வரும் அவர் அந்த மாதுளை மரத்திலிருந்து ஒரு கனியை உண்டு விட்டு, அந்த நீரூற்றிலிருந்து சிறிது நீர் அருந்தி விட்டு உளூ செய்து விட்டு மீண்டும் மலை உச்சிக்கு சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு விடுவார்.
ஒரு நாள் அந்த நல்லடியார் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது “யாஅல்லாஹ்! என் உயிர் பிரியும் தருவாயில் என் ரூஹ் உனக்கு நான் ஸஜ்தா செய்யும் நிலையிலேயே பிரிய வேண்டும் என ஆசிக்கின்றேன்! மேலும், என் உடலை மறுமை நாள் பரியந்தம் வரையில் அந்த நிலையிலேயே நீ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்! மேலும், அதே நிலையிலேயே நான் எழுப்பப்பட வேண்டும்! என்னுடைய இந்த ஆசையை நீ நிறைவேற்றித் தர வேண்டும்” என்று கோரினார்.
அல்லாஹ்வும் அவரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அப்படியே செய்தான்.
வானவர்களாகிய நாங்கள் விண்ணுலகத்திலிருந்து பூமிக்கு வரும் போதும், பூமியிலிருந்து விண்ணுலகிற்கு செல்லும் போதும் அவரை அதே நிலையிலேயேக் கண்டோம்.
தொடர்ந்து ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்: “ நாளை மறுமையில் மஹ்ஷர் பெருவெளியில் மக்களோடு மக்களாக அந்த நல்லடியார் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் நின்றிருப்பார்.
அப்போது, அல்லாஹ் வானவர்களிடம், அவரை நோக்கி “இதோ என்னுடைய இந்த அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்பான்.
அதற்கு, அவர் அல்லாஹ்விடம் “அல்லாஹ்வே! நான் செய்த என்னுடைய அமலின் துணை கொண்டு என்னை சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வானவர்களுக்கு நீ ஆணையிடுவாய் என்றல்லவா நான் எதிர் பார்த்தேன். ஆனால், நீயோ உன் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஆணையிடுகின்றாய்! அப்படியானால், என்னுடைய 500 ஆண்டு கால இபாதத் என்னவாயிற்று?” என்று வினவுவார்.
அப்போது, அல்லாஹ் தன் வானவர்களுக்கு “இந்த அடியானுக்கு நான் வழங்கிய அருட்கொடைகளையும், இந்த அடியான் செய்த இபாதத்களையும் கணக்குப் பாருங்கள்” என்று கட்டளையிடுவான்.
அப்போது வானவர்கள் “இவரின் 500 ஆண்டு கால இபாதத் அனைத்தும் நீ அவருக்கு வழங்கிய அருட்கொடைகளில் ஒன்றான கண்பார்வைக்கு ஈடாகி விட்டது.
நீ வழங்கிய மற்றெந்த அருட்கொடைகளுக்கும் ஈடாக வேறெந்த அமலும் அவரின் பதிவேட்டில் இல்லை” என்று அல்லாஹ்விடம் கூறுவார்கள்.
فيقول أدخلوا عبدي النار قال فيجر إلى النار فينادي رب برحمتك أدخلني الجنة فيقول ردوه فيوقف بين يديه فيقول يا عبدي من خلقك ولم تك شيئا فيقول أنت يا رب فيقول كان ذلك من قبلك أو برحمتي فيقول بل برحمتك فيقول من قواك لعبادة خمس مائة عام فيقول أنت يا رب فيقول من أنزلك في جبل وسط اللجة وأخرج لك الماء العذب من الماء المالح وأخرج لك كل ليلة رمانة وإنما تخرج مرة في السنة وسألتني أن أقبضك ساجدا ففعلت ذلك بك فيقول أنت يا رب فقال الله عز وجل فذلك برحمتي وبرحمتي أدخلك الجنة أدخلوا عبدي الجنة فنعم العبد كنت يا عبدي فيدخله الله الجنة قال جبريل عليه السلام إنما الأشياء برحمة الله تعالى يا محمد”. هذا حديث صحيح الإسناد
அது கேட்ட அல்லாஹ் வானவர்களிடம் “இதோ இந்த அடியானை நரகத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்” என்பான்.
அவர் நரகத்திற்கு இழுத்து செல்லப்படுவார். வழி நெடுக அவர் “இறைவா! உன் அருளின் துணை கொண்டே என்னை சுவனத்தில் நுழையச்செய்!” என அலறுவார்.
அந்த அலறலைக் கேட்டதும் அல்லாஹ் வானவர்களிடம் “அந்த அடியானை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்!” என்பான். அவர் அல்லாஹ்வின் திருமுன் நிறுத்தப்படுவார்.
அப்போது, அல்லாஹ்வுக்கும் அந்த அடியானுக்கும் இடையே நடக்கின்ற அந்த உரையாடல் இதோ….
அல்லாஹ்: என் அடியானே! ஒன்றுமே இல்லாமல் இருந்த உன்னை படைத்தது யார்?
அடியான்: நீ தான் என் இறைவா!
அல்லாஹ்: என் அடியார்களிலேயே 500 ஆண்டு கால ஆயுளையும், வணக்க வழிபாடுகள் செய்கிற ஆற்றலையும் கொடுத்து உன்னை வாழ வைத்தது யார்?
அடியான்: நீ தான் என் இறைவா!
அல்லாஹ்: கடலும் –உப்பு நீரும் சூழ்ந்த இடத்தில் மதுரமான நீரூற்றையும், புற்பூண்டுகளே முளைத்திடாத பாறையிலிருந்து மாதுளை மரத்தையும் உனக்குக் கொடையாக வழங்கியது யார்?
அடியான்: நீதான் என் இறைவா!
அல்லாஹ்: உன் ரூஹ் ஸஜ்தா – சிரம் பணிந்த நிலையில் பிரிய வேண்டும் என்று நீ ஆசித்த போது உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்தது யார்?
அடியான்: நீதான் என் இறைவா!
இந்த உரையாடலை முடித்து வைக்கும் முகமாக, இறுதியாக அல்லாஹ் அந்த அடியானிடம் “என் அடியானே! இவை அனைத்தும் என் அருளின் மூலமாகத்தான் நீ பெற்றாய்! இப்போதும், நீ என் அருளின் துணை கொண்டு தான் சுவனத்திற்கும் செல்ல இருக்கின்றாய்! அடியானே! என் அடியார்களில் நீ நல்லவனே” என்று கூறி விட்டு வானவர்களை நோக்கி “இதோ இந்த என் அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்தில் கொண்டு போய் விட்டு விடுங்கள்!” என்பான்.
இதைக் கூறி விட்டு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் “முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! ஓர் அடியானைச் சுற்றி ஈருலகிலும் நடைபெறும் அத்துனை காரியங்களும் அல்லாஹ்வின் அருளின் துணை கொண்டே தான் அமையப் பெறுகின்றது” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் கூறினார்கள். (நூல்: முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன்)
எனவே, ரமலானில் நாம் புரிகிற இபாதத்களைக் கொண்டு மனநிறைவும், பெருமிதமும் அடைந்து விடக்கூடாது. அப்படி மனநிறைவு அடைந்து விடுவதே இறைவன் எதிர் பார்க்கிற நோன்பு விளைவிக்கிற இறையச்சம் உருவாக்கம் பெற தடையாக இருக்கின்றது என்கிற பேருண்மையை இந்த நிகச்சி நமக்கு உணர்த்துகின்றது.
3. குற்ற உணர்வு இல்லாதவர்களாக, அல்லாஹ்வின் முன் அர்ப்பணம் செய்தவர்களாக மறுமையில் அல்லாஹ்வை சந்திக்க ஆவல் கொள்ள வேண்டும்ஸ
சனிக்கிழமை மீன் பிடிக்க தடைசெய்யப்பட்ட சமூகத்தினர் அல்லாஹ்வின் கட்டளையை மீறி, சனிக்கிழமைகளில் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்களின் ஆணவப்போக்கு சங்கிலித்தொடர் போல் தொடர்ந்த போது அவர்களில் சிலர் “அல்லாஹ்வின் வரம்புகளை மீறாதீர்; அல்லாஹ் தண்டிப்பான்; துன்புறுத்தும் வேதனை செய்வான்” என எச்சரித்தனர்.
ஆனால், அவர்கள் அதைக் கொஞ்சம் கூட மதிக்கவில்லை. மேலும், அங்கிருந்த இன்னும் சிலரோ எச்சரிக்கை செய்த இவர்களைப் பார்த்து “எந்த மக்களை அல்லாஹ் அழிக்கவிருக்கின்றானோ அல்லது கடுமையான தண்டனைக்கு ஆளாக்க இருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுரை வழங்குகின்றீர்கள்? என்று விமர்சித்தனர்.
அதற்கு, அவர்கள் “(நாளை மறுமையில் இப்படி ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருந்தவர்களிடையே நீங்கள் வாழ்ந்து கொண்டு இருந்தீர்களே? என்ன செய்தீர்கள்? என்று இறைவன் எங்களிடம் கேட்டால்) நாங்கள் உங்கள் இறைவனிடம் இது குறித்து தகுந்த காரணம் கூற வேண்டும் என்பதற்காகவே இவர்களுக்கு நல்லுரை கூறுகின்றோம். ஒரு வேளை இந்த நல்லுரையின் மூலம் இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து இவர்கள் தவிர்ந்து கொள்வார்கள் அல்லவா?” என்று பதில் கூறினார்கள். (பார்க்க: அல்குர்ஆன்: 7: 162 – 166)
ஃபிர்அவ்னின் ஏவலை செய்து முடித்து, இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை மண்ணைக் கவ்வச் செய்து ஃபிர்அவ்ன் வழங்கும் பரிசில்களை அள்ளிச் செல்லவேண்டும் என்கிற முனைப்போடு மாபெரும் மக்கள் திரளின் ஆராவாரத்தின் பிண்ணனியில் மைதானத்தில் குழுமியிருந்தார்கள் மந்திரவாதிகள்.
அல்லாஹ்வின் அற்புதத்திற்கு முன்னால் மந்திரவாதிகளின் தந்திரவேலை ஒன்றுமில்லாமல் போனதைக் கண்டதும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உண்மையில் இறைத்தூதர் தான் என உணர்ந்து கொண்டு உடனடியாக இறைநம்பிக்கை கொண்டு இறையடியார்களின் அணியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
சினம் கொண்டு சீறி எழுந்தான் ஃபிர்அவ்ன். அனல் பறக்கும் ஆணைகளை பிறப்பித்தான்.
சிலுவையில் அறையப்போவதாகவும், மாறு கால் மாறு கை வாங்கப்போவதாகவும் கடுமையான தண்டனையை உத்தரவாக பிறப்பித்தான் சிறுமை அடைந்த ஃபிர்அவ்ன்.
ஏற்றுக் கொண்ட கொள்கையில் சிறிதும் சருகாமல் மிகவும் பற்றோடும், முகத்தில் எவ்வித சலனமோ, மரண பயமோ இல்லாமல் அவர்கள் கூறினார்கள்:
“நீ என்ன செய்ய விரும்புகின்றாயோ செய்து கொள்! உன்னால் இவ்வுலக வாழ்வில் மட்டுமே எங்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்க முடியும்! திண்ணமாக, நாங்கள் எங்கள் இறைவனை நம்பிக்கை கொண்டு விட்டோம்! எங்களின் குற்றங்களையும், எந்தச் சூனியத்தைக் கையாளுமாறு எங்களை நீ கட்டாயப்படுத்தினாயோ அந்தச் சூனியச் செயலையும் அவன் எங்களை மன்னிக்க வேண்டும் என்பதற்காக! (உன் தண்டனையை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்) என்றார்கள். (பார்க்க: அல்குர்ஆன்: 20: 57 – 73)
தனி மனிதர் அல்ல ஒரு சமுதாயத்திற்கு ஒப்பானவர் என்ற படைத்தவனின் புகழாரம் அவருக்கு உண்டு.
சிலை வணக்கத்திற்கு எதிராக தன் இளமைப் பருவத்தை துணிவோடு பகிர்ந்து கொண்டு, ஏகத்துவ எழுச்சிக்காக நெருப்புக்குண்டத்தை இன்முகத்தோடு ஏற்றுக் கொண்ட உயர்ந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர் எனும் புகழாரமும் அவருக்கு உண்டு.
அல்லாஹ்வின் கட்டளைக்கு முன்பாக தன் உணர்வுகள், தம் மனைவி, மக்களை இழக்க எப்போது முன் வரிசையில் காத்து நின்றவர் எனும் மகுடமும் அவருக்கு சூட்டப்பட்டதுண்டு.
இவற்றிற்கெல்லாம் மேலாக, அவர் நின்ற இடம் தொழுமிடம், அவர் இழக்க முன் வந்தது இபாதத் என புகழுக்கு மேலாக புகழ் சேர்த்த இறைவன்.
தம்முடைய நெருங்கிய நேசர் எனும் உயரிய அரியாசணையை வழங்கி கௌரவித்த வரலாற்றுக்குச் சொந்தக்காரரும் கூட..
ஆம்! அவர்கள் தான் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
ஆனால், இவ்வளவு புகழாரமும், கௌரவமும், உயர் மரியாதையும் பெற்றிருந்தும் கூட கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் ஒரு நாள் பொழுது அல்லாஹ்விடம் அவர்கள் செய்த முறையீட்டை அல்லாஹ் உலகம் உள்ளளவும் பதிவு செய்து வைத்திருக்கின்றான்.
“யாஅல்லாஹ்! மனிதர்கள் அனைவரும் எழுப்பப்படும் அந்நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே! செல்வமோ, சந்ததிகளோ பயனளித்து விடாத நாளல்லவா அது?!”
கொஞ்சம் அவதானித்து சிந்திக்க கடமை பட்டிருக்கின்றோம். தங்கள் முடிவு எவ்வளவு கோரமானது என்பதை உணர்ந்த நிலையிலும் தங்களின் உயிரை அர்ப்பணம் செய்து அதனை அல்லாஹ்வின் திருமுன் காணிக்கையாக சமர்ப்பித்து பாவமன்னிப்பை பெற்று குற்றமற்றவர்களாக அல்லாஹ்வின் முன் நின்று விட ஆவல் கொண்ட இறைநம்பிக்கையாளர்கள்.
ஒரு புறம் வரம்பு மீறுவோர், மறுபுறம் பரிகாசமும், விமர்சனமும் செய்வோர் இவர்களுக்கு மத்தியில் தங்களின் மீதான சமூகக் கடமையை உணர்ந்து பாதுகாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திட முனைந்து நாளை அல்லாஹ்வின் திருமுன் இந்த நற்கருமத்தை காணிக்கையாகச் சமர்ப்பித்து இறை உவப்பை பெற்று விடலாம் எனும் ஆசை கொண்ட இறைநம்பிக்கையாளர்கள்.
தங்களது வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்களின் ஊடாகப் பெற்ற படிப்பினைகளை அலசி ஆராய்ந்து, தம் வாழ்க்கையையே அல்லாஹ்விற்காக அர்ப்பணித்து விட்டு மறுமையில் “தான் அவமானத்திற்கும் கேவலத்திற்கும் ஆளாகி விடக்கூடாது” என்று பதை பதைக்கும் உள்ளத்தோடு இறைவனை அணுகிய ஓர் ஒப்பற்ற இறைத்தூதர்.
மேற்கூறிய இந்நிகழ்வுகளில் மேன்மக்களான இறைநேசர்கள் அல்லாஹ்வை சந்திக்கும் நாளில் அல்லாஹ்வின் திருமுன் குற்றமற்றவர்களாக, தூய உள்ளத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக தங்களது இபாதத்களையும், அமல்களையும் தங்களுக்கு ஆதரவான சீர்மிகு சாட்சிகளாக தயார் படுத்தினார்கள் என்பதை உணர முடிகின்றது.
ஆகவே, எதிர் வரும் இந்த ரமலானின் முழுப்பகுதியையும் அல்லாஹ்வின் திருமுன் நமக்கு ஆதரவான சாட்சியங்களாக சமர்ப்பிக்கும் பொருட்டு இபாதத்களாலும், அமல்களாலும் நிரப்பமாக்க முயற்சிப்போம்.
5. ஆர்வமும், அதை நோக்கிய செயலாக்கமும் வேண்டும்ஸ
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ وَاللَّفْظُ لِأَبِي الطَّاهِرِ قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ فِي الْجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ يَا رَسُولَ اللَّهِ مَا عَلَى أَحَدٍ يُدْعَى مِنْ تِلْكَ الْأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الْأَبْوَابِ كُلِّهَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ
حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ وَالْحَسَنُ الْحُلْوَانِيُّ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالُوا حَدَّثَنَا يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ حَدَّثَنَا أَبِي عَنْ صَالِحٍ ح و حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ كِلَاهُمَا عَنْ الزُّهْرِيِّ بِإِسْنَادِ يُونُسَ وَمَعْنَى حَدِيثِهِ
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, “அல்லாஹ்வின் அடியாரே! இது பெரும் நன்மையாகும்! இதன் வழியாக நுழையுங்கள்!” என்று அழைக்கப்படுவார்.
தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் “ஜிஹாத்” எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் “ரய்யான்” எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் “ஸதகா” எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அப்போது, அங்கிருந்த அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாக அழைக்கப்படுவாரா?” என்று கேட்டார்கள்.
அதற்கு, மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஆமாம்” நீரும் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என நான் ஆசிக்கின்றேன். ஒருவராக இருப்பீர் என நான் நம்புகின்றேன்” என்று கூறினார்கள். (நூல்:முஸ்லிம்)
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم :அمَنْ أَصْبَحَ مِنْكُمْ الْيَوْمَ صَائِمًاஞ؟ قَالَ أَبُو بَكْرٍ رضي الله عنه :أَنَا. قَالَ:அفَمَنْ تَبِعَ مِنْكُمْ الْيَوْمَ جَنَازَةًஞ؟ قَالَ أَبُو بَكْرٍ رضي الله عنه :أَنَا. قَالَ: அفَمَنْ أَطْعَمَ مِنْكُمْ الْيَوْمَ مِسْكِينًاஞ؟ قَالَ أَبُو بَكْرٍ رضي الله عنه :أَنَا. قَالَ:அفَمَنْ عَادَ مِنْكُمْ الْيَوْمَ مَرِيضًاஞ؟ قَالَ أَبُو بَكْرٍ رضي الله عنه :أَنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم :அمَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلَّا دَخَلَ الْجَنَّةَஞ .
أخرجه مسلم .
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம், “இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு நான் என்று பதில் கூறினார்கள்.
இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு நான் என்று பதில் கூறினார்கள்.
இன்றைய தினம் ஓர் உங்களில் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு நான் என்று பதில் கூறினார்கள்.
இன்றைய தினம் உங்களில் ஒரு நோயாளியைச் சந்தித்து நலம் விசாரித்தவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு நான் என்று பதில் கூறினார்கள்.
அப்போது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “எந்த மனிதர் நல்லறங்களான இவையனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்றார்கள். (நூல்: முஸ்லிம்)
இங்கே, அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முந்தைய நபிமொழியில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியதையும், அடுத்த நபிமொழியில் அதற்கான செயல் வடிவம் கொடுத்ததையும் பார்க்க முடிகின்றது.
எனவே, வழக்கம் போல் ரமலானை வரவேற்பதோடு நின்று விடாமல் மேற்கூறிய அத்துனை அம்சங்களோடும் ரமலானைப் பயன்படுத்தி ரமலானின் மூலம் இறைநெருக்கத்தையும், இறைப் பொருத்தத்தையும், இறைமன்னிப்பையும், இறையருளையும், மேலான சுவனத்தையும் பெறுகிற மேன்மக்களாக உருவாகிடவும், இவற்றிற்கு அருகே அழைத்துச் செல்கிற உயரிய பொக்கிஷமான இறையச்சத்தைப் பெற்றவர்களாக வாழ்ந்திட வல்ல ரஹ்மான் அருள் புரிந்திடுவானாக! ஆமீன்!
ஆகவே, எதிர்வருகிற ரமழானை முந்தைய ரமழான் போல் ஆக்கி விடாமல் நம் வாழ்க்கையை அல்லாஹ் எதிர் பார்த்திடும் படியாக மாற்றிடும் ரமழானாக ஆக்கிட முயற்சி செய்வோம்.
பின் வரும் துஆவை ரமழான் வரும் வரை தினந்தோரும் அல்லாஹ்விடம் மன்றாடிக் கேட்போம்!
اللهم بلغنا رمضان .. اللهم بلغنا رمضان ..اللهم بلغنا رمضان ..
وارزقنا صيامه وقيامه إيماناً واحتساباً يا ذا الجلال والإكرام ..
اللهم وفقنا فيه لفعل الطاعات..
ووفقنا فيه لترك المعاصي والمنكرات ..
اجمع فيه شملنا .. ووحد فيه صفنا ..
وأصلح فيه ولاة أمورنا ..
وانصر فيه المجاهدين..
وسدد فيه الدعاة والعلماء الربانيين ..
وفق فيه الشباب ووالشيب .. والنساء والإماء..
لتوبة نصوح واستقامة وثبات حتى الممات يا رب العالمين ..
அல்லாஹ் பூரணமான உடல் நலத்துடன், எந்த விதமான கேடுகள் முஸீபத்கள் இல்லாமல் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு மற்றும் இதர உபரியான இபாதத்கள் செய்திடும் நல்ல நஸீபை உங்களுக்கும் எனக்கும் தந்தருள் பாளிப்பானாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!!
இன்னும் விரிவாகப் பேச விரும்புவோர் நம்முடைய கடந்த ரமலானின் பதிவான “ரமலான்! அல்லாஹ் எதிர்பார்ப்பது என்ன?” எனும் தலைப்பை பார்வையிடவும்…
சங்கைக்குரிய உலமா நண்பர்களே!
வெள்ளி மேடை ப்ளஸ் –ஸின் நேயர் நெஞ்சங்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ…
எதிர் வருகிற ரமலான் மாதம் முழுவதும் நம்முடைய ப்ளாக்கில் பதிவுகள் போடப்படாது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்ஷா அல்லாஹ்ஸ ரமலானுக்குப் பின்னர் நல்ல தலைப்புகளோடும், நல்ல பல தரமான ஆக்கங்களோடும் மீண்டும் சந்திக்க வல்ல ரஹ்மான் அருள் புரிய வேண்டும் என ஆதரவு வைக்கின்றேன்.
ரமலான் மாதத்தை பூரண உடல் ஆரோக்கியத்தோடும், நிறைவான இபாதத்தோடும் பூர்த்தியாக்கிட அல்லாஹ் தௌஃபீக் செய்வானாக! ஆமீன்!
– N.S.M. பஷீர் அஹ்மத் உஸ்மானி