ஆம்பூர் கலவரமும் சில கேள்விகளும்
காவல்துறையினால் அடித்துக்கொல்லப்பட்ட ஷமீல் அகமதுவின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டு உயரதிகாரிகள் சமாதானத்திற்கு பின்னர் மறியலை கைவிட்டு வாகனங்கள் சென்ற காட்சியை அனைத்து வாகனங்களும் சென்ற காட்சியை அனைத்து ஊடகங்களும் ஒளிபரப்பியது.அதன் பின்னர் தடியடி நடத்திய காட்சி ஒளிபரப்பானது.
1.மறியலை கைவிட்டு அமைதியாக கலைந்து செல்லும்போது கல்வீசிய கயவர்கள் யார்..?
2. தடியடியில் காயம்பட்ட மக்களில் ஒருவரது படம்கூட ஊடகங்களில் வரவில்லையே ஏன்.?
3. தடியடிவரை நடந்தகாட்சிகளை ஒளிபரப்பிய ஊடகங்கள் கலவரத்தை படம்பிடிக்காததேன்?ஒளிபரப்பாததேன் ?
4. காவல்துறை வாகனத்தில் சுழலும் கேமிரா மூலம் அனைத்து நிகழ்வும் பதிவு செய்யப்பட்டதே.தடியடிக்கு பின்னர் நடந்தது என்ன..?
5. ஐ.எஸ்.;எஸ்.ஐ.டி.;ஐ.பி.ஆகிய மூன்று புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளும் வீடியோ காமிராவில் பதிவு செய்தனர்.தடியடிக்கு பின்னர் நடந்தது என்ன..?கல் எந்த பகுதியிலிருந்து வீசப்பட்டது.?
6. கலவரத்தில் ஈடுபட்டது போராட்டம் செய்தவர்கள் இல்லை.கைது செய்யப்பட்டவர்கள் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் இல்லை என்ற மக்களின் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன..?
7. காவல்துறை பதிவுசெய்த காட்சிகளை ஒளிபரப்பவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுப்பதேன்..?
8. புகாருக்குள்ளான ஆய்வாளர் மணற்மாபியா கும்பலுக்கு ஆதரவானவர் என்பதும் அவரைப்காப்பாற்றி வழக்கை திசை திருப்பவும் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலென்ன..?
9. 144 தடை உத்தரவுக்கு பின்னர் கலவரத்தை நடத்திய சமூகவிரோத கும்பலை கைது செய்யாமல் நோன்பு துறக்க பள்ளிக்கு வந்த நூற்றுக்கும் மேலானவர்களை கைது செய்ததேன்..?
10. கலவரகாட்சிகள் பதிவாகியுள்ளது.அதை வைத்துஅதில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்படுவர் என்ற ஐ.ஜி.மஞ்சுனாத்தின் உத்தரவை மீறியது எதனால்..?
11. பதிவான காட்சிகளை வெளியிட மறுப்பதேன்..?
12. இன்றுவரை துணை நிலைப்படைகளை குவிக்க காரணம் கோவையை போல் இங்கும் மதக்கலவரத்தை நடத்த பாரத வகுப்புவாத கும்பல் திட்டமிட்டுள்ள தகவல் உளவுத்துறைக்கு கிடைத்ததால் தான் என அப்பகுதி மக்கள் பேசிக்கொள்வது உண்மையா..?
13. இச்சம்பவத்தின் ஆணிவேர் பழநி என்பவர் கொடுத்த புகார்மனு.அவர் மனைவி பவித்ரா எங்கே..?நடந்தது என்ன..?
14. 15ம் தேதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஷமீல் அகமதுவை 19ம் தேதிவரை இல்லீகல் கஸ்டடியில் வைத்தது ஏன்?
15. சிபிசிஐடி விசாரணைக்கு முன்னர் காவல்துறை பதிவு செய்த காட்சிப்படி சமூகவிரோதிகள் கைது செய்யப்பட்டு அப்பாவிகள் விடுவிக்கப்படுவரா..?
-இனியவன் தமிழன்