அறிவிற்சிறந்த நபித்தோழர்கள் – 1
உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
பெயர் உமர். சிறப்புப் பெயர் அபுல் ஹஃப்ஸ். குறிப்புப் பெயர் ஃபாரூக் ஆகும். தந்தையின் பெயர் கத்தாப். தாயாரின் பெயர் கதிம்மா.
முழுமையான வம்சாவழித் தொடர் கீழ்வருமாறு.
உமர் இப்னு கத்தாப் இப்னு நுஃபைல் இப்னு அப்துல் உஸ்ஸா இப்னு ரிபாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஃபுரத் இப்னு ரிஸாஹ் இப்னு அதீ இப்னு கஅப் இப்னு லுவை இப்னு ஃபஹ்ரு இப்னு மஸாலிக். (அல்இசாபா)
அதீ என்பாருடைய இன்னொரு சகோதரரின் பெயர் முர்ரா ஆகும். இந்த முர்ரா, அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மூதாதையர்களுள் ஒருவர். ஆக, உமர் அவர்களின் வம்சாவழித் தொடர் எட்டாவது தலை முறையில் அண்ணலாரின் வம்சா வழியோடு இணைகின்றது.
குறைஷிகளில் எல்லோரையும்விட, அண்ணல் நபிகளாரையும் இஸ்லாமையும் வன்மையாக எதிர்த்தோர் இருவர். அபு ஜஹ்ல் மற்றும் உமர். இதன் காரணமாகத்தான் இவ்விருவரில் யாரேனும் ஒருவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்து வாயாக, என அண்ணல் நபிகளார் சிறப்புப் பிரார்த்தனை புரிந்தார்கள். இறைத்தூதரின் பிரார்த்தனை உமருக்கு சாதகமாக ஆகி விட்டது.
இஸ்லாமை ஏற்பதற்கு முன்னால் இஸ்லாமிற்கெதிராக கடுமையான துவேஷத்தை வெளிக்கொட்டுபவராக உமர் இருந்தார். ஆனால், கடுமையாகவும் கொடுமையாகவும் நடந்து கொண்ட போதிலும் அவரால் ஒரே ஒரு நபரைக் கூட இஸ்லாமை விட்டு வெளியே கொண்டுவர முடியவில்லை. இப்போது அவருக்கு முன்னால் ஒரேயொரு வழிதான் இருந்தது. இஸ்லாமின் தூதரான அண்ணல் நபிகளாரை கொன்று விடுவதுதான் அவ்வழி!
வாளை கையில் ஏந்திக்கொண்டு அண்ணல் நபிகளாரைத் தேடி கிளம்பி விட்டார். வழியில் நுஐம் இப்னு அப்துல்லாஹ் எதிர்ப் பட்டார். வேகமாகச் செல்லும் உமரைப் பார்த்து அவர், ‘எங்கே? என்ன விஷயம்?’ என வினவினார். முஹம்மதுவைக் கொன்று போடத்தான் போய்க் கொண்டுள்ளேன் என்றார் இவர்.
‘அதற்கு முன்னால் உங்களுடைய வீட்டையும் கொஞ்சம் பாருங்கள். உங்களுடைய தங்கையும் தங்கை கணவரும் இஸ் லாமை ஏற்றுக் கொண்டு விட்டார்கள்’ என்றார் நுஐம்.
கோபம் திசைமாறி தமது தங்கையின் வீட்டை நோக்கி நடை போட்டார். அவருடைய தங்கை வீட்டில் இருந்தவாறு குர் ஆனை திலாவத் செய்து கொண்டிருந்தார். உமருடைய காலடிச் சத்தம் காதில் பட்டதும் வாய்மூடி மௌனமாகி விட்டார். ஓதிக் கொண்டிருந்த குர்ஆனின் தாள்களை ஒளித்து வைத்துவிட்டார். ஓதும் சப்தத்தை உமர் கேட்டுவிட்டார்.
‘என்ன சத்தம் அது?’ என அவர் தமது தங்கையிடம் விசாரித்தார். ‘நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு விட்டதாக நான் கேள்விப்பட்டேனே!’ சொல்லிக்கொண்டே தன்னுடைய தங்கை கணவரின் மீது பாய்ந்தார். சரமாரியாக தாக்கத் தொடங்கினார். தடுக்க வந்த தங்கைக்கும் அடிகள் விழலாயின.
‘உமரே! என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். எங் களுடைய உள்ளத்தில் இருந்து உங்களால் இஸ்லாமை எடுத்து எறிய முடியாது’ என அவருடைய தங்கை தைரியமாக கூறினார்.
இந்த சொற்களைக் கேட்டதும் உமருடைய கோபம் கொஞ்சம் தணிந்தது. தன்னுடைய தங்கை இரத்தம் சொட்டசொட்ட நின்றிருந்த கோலத்தைக் கண்டு அவருக்கு என்னவோ போலிருந்தது.
‘நீங்கள் வாசித்துக் கொண்டிருந்தீர்களே அதை எனக்குக் கொஞ் சம் காட்டுங்கள்’ எனக்கோரினார். அதைக்கேட்ட அவருடைய தங்கை ஃபாத்திமா குர்ஆன் எழுதப்பட்டிருந்த தாள்களைக் கொண்டு வந்து கொடுத்தார். அத்தாள்களில் கீழ்வரும் இறைவச னங்கள் எழுதப்பட்டிருந்தன.
سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
57:1. வானங்களிலும், பூமியிலும் உள்ளயாவும் அல்லாஹ்வுக்கே தஸ்பீஹு செய்து (துதி செய்து) கொண்டிருக்கின்றன – அவன் (யாவரையும்) மிகைத்தோன், ஞானம் மிக்கவன்.
57:2. வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது, அவனே உயிர்ப்பிக்கிறான், மரிக்கும் படியும் செய்கிறான் – மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
57:3. (யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே!, பிந்தியவனும் அவனே!, பகிரங்கமானவனும் அவனே!, அந்தரங்கமானவனும் அவனே!, மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.
57:4. அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்க ளில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக் கிறான் – அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
57:5. வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது, அன்றியும் காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே
57:6. அவனே இரவைப் பகலில் புகுத்துகின்றான், இன்னும் பகலை இரவில் புகுத்துகின்றான் – அவன் இதயங்களிலுள்ள வற்றையெல்லாம் உமர் வான்மறை குர்ஆனை வாசித்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தார். குர்ஆன் அவருடைய உள்ளத்தில் இறங்கிக் கெர்ண்டே
آَمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ
‘57:7. நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்” என்னும் வசனத்தை அடைந்ததும் தம்மையுமறியாமல் அவர் கூவினார் ‘அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸூலுல் லாஹ்’
அப்போது அண்ணல் நபிகளார் அர்கம் என்னும் நபித்தோழரின் வீட்டில் இருந்தார்கள். அவ்வீடு ஸஃபா குன்றின் அடிவாரத்தில் இருந்தது. அங்க சென்ற உமர் கதவைத் தட்டினார். உமரின் கை களில் உருவப்பட்ட வாள் இருந்தது. அதைக்கண்ட ஸஹாபாக் களின் உள்ளங்களில் சற்றே அச்சம்
‘விடுங்கள், கவலைப்படாதீர்கள். நல்ல எண்ணத்தில் வந்திருந் தால் சரி. இல்லையெனில் அவனுடைய வாளாலேயே அவனு டைய கதையை முடித்து விடுவோம்’ என அமீர் ஹம்ஸா கூறினார்.
உமர் உள்ளே வந்தார். வந்த நோக்கம் என்னவோ என அண்ணல் நபிகளார் வினவினார்கள். ‘ஈமான் கொள்ள வந்துள்ளேன்’ என்றார் உமர். அதைக்கேட்டதுதான். தாமதம் அண்ணலாரும் மற்றமற்ற ஸஹாபாக்களும் தம்மையுமறியாமல் அல்லாஹு அக்பர் என உரத்துக் குரல் எழுப்பினார்கள்.
சுற்றிலுமுள்ள குன்றுகளில் பட்டு அவ்வொலி நாலாபுறங்களிலும் நபவி ஏழாம் ஆண்டு உமர் இஸ்லாமை ஏற்றார். நபவி 13 ஆம் ஆண்டு ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டார். ஹிஜ்ரத் கிளம்புவதற்கான அனுமதி கிடைத்தவுடன் உமர், அதற்கு எல்லா வகையிலும் ஆயத்தமாகி, தம்மோடு ஒருசில தோழர்களையும் அழைத் துக்கொண்டு மதீனாவை நோக்கி கிளம்பினார். கைகளில் உருவிய வாட்களை ஏந்திக்கொண்டு எல்லா வீதிகள் வழியாகவும் உலா வந்தவாறு கஅபத்துல்லாஹ்வை அடைந்தார். எந்தவித பயமோ பதற்றமோ இல்லாமல், நிம்மதியாக தவாஃப் செய்தார். தொழுதார். அதன்பின்பு, இறைநிராகரிப்பாளர்களைப் பார்த்து, ‘தன்னுடைய மனைவி விதவையாவதைப் பற்றியோ தன்னுடைய குழந்தைகள் அநாதைகள் ஆவதைப் பற்றியோ கவலைப் படாதவர்கள் ஊருக்கு வெளியே வந்து என்னோடு மோதலாம்’ என உரத்த குரலில் அறிவித்தார். யாருக்கும் தைரியம் எழவில்லை. உமர் மதீனாவிற்கு கிளம்பிச் சென்றார்.
மதீனாவை அடைந்து குபா பகுதியில் உள்ள ரிஃபாஆ இப்னு அப்துல் முன்திர் என்னும் நபித்தோழரின் வீட்டில் உமர் தங்கலானார். உமரைத்தொடர்ந்து பல ஸஹாபாக்களும் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து சேர்ந்தார்கள். இறுதியில் அண்ணல் நபிகளாரும் கி.பி. 632 ஆம் ஆண்டில் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தார்கள்.
மதீனாவிற்கு வந்ததும் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஹாஜிரீன்களுக்கும் அன்சார்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். உமருக்கும் உத்பா இப்னு மாலிக் என்னும் தோழருக்கும் இடையே சகோதரத்து உறவு ஏற்படுத்தப்பட்டது. பனூ ஸாலிம் கோத்திரத்தைச் சார்ந்த முக்கியமான பெருமனிதராக அவர் இருந்தார்.
போர்களில் பங்கேற்பு
மதீனாவை அடைந்தபின்பு முஸ்லிம்களுக்கும் இறைநிராகரிப் பாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த முதல் போர் பத்ருப்போர் ஆகும். ஹிஜ்ரீ 2 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போரில் தன்னுடைய வீரத்தையும் மறத்தையும் உமர் ஆக்ரோஷமாக வெளிப் படுத்தினார்கள். கைவிரல் நகங்களை கடிப்பதைத் தவிர, வேறொன்றும் செய்ய இயலாமல் இறை நிராகரிப்பாளர்கள் சோர்ந்து போய் நின்றார்கள்.ஆஸ் இப்னு ஹிஷாம் இப்னு முகீரா. உமருடைய மாமா, உறவினர், தாய்மாமா. உமருடைய கரங்களால் வெட்டுப்பட்டு பத்ருக் களத்தில் உயிர் துறந்தார். (இப்னு ஜரீர், பக்கம் 509)
பத்ருப் போருக்குப் பிறகு, மதீனாவில் வசித்துவந்த யூதர்க ளோடு கைகலப்பு ஏற்பட்டது. யூதர்கள் மதீனாவை விட்டு வெளி யேற்றப் பட்டார்கள். அதனையடுத்து, ஸுவைக் யுத்தம், அதனையொத்த இன்னபிற சிறுசிறு யுத்தங்கள் நிகழ்ந்தன. இவை யாவற்றிலும் உமர் தமது போர்த்திறனை வெளிப்படுத்தினார்கள்.
ஹிஜ்ரீ 3 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் உஹதுப் போர் நடை பெற்றது. கலந்து கொண்ட குறைஷியர்களின் எண்ணிக்கை மூவாயிரம். முஸ்லிம்களின் எண்ணிக்கையோ எழுநூறு. குறைஷியரில் இருநூறு புரவி வீரர்களும் எழுநூறு ஆயுதந்தரித்த வீரர்களும் இருந்தார்கள். முஸ்லிம்களிலோ நூறு புரவி வீரர்களும் நூறு ஆயுதந்தரித்த வீரர்களும் ஷவ்வால் மாதம் 7ஆம் நாள் சனிக்கிழமை அன்று போர் தொடங்கியது.
அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஐம்பது வில்லாளர்களை அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் தலைமையில் படையணிக்கு இறுதியில் பின்பக்கமாக, பாதுகாப்புக்கு நிறுத்தியிருநதார்கள். பின்பக்கமாக பகைவர்கள் வரக்கூடும் என்னும் அச்சத்தினால் அண்ணல் நபிகளார் இப்பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்தார்கள்.
போர் தொடங்கிதுமே முஸ்லிம்கள் பகைவர்களை சின்னா பின்னமாக ஆக்கிவிட்டார்கள். அவர்தம் அணிவரிசைகளை ஒன்றுமில்லாமல் குலைத்து விட்டார்கள். பகைவர் தோற்றுத் திரும்பியோடலாயினர். முஸ்லிம்கள் பகைவர் விட்டுச்சென்ற போர்ச்செல்வஙகளை திரட்டும் பணியில் ஈடுபடலாயினர். பாதுகாப்புப் பணியில் நின்றிருந்த போர்வீரர்களும் போர்ச் செல்வங்களை திரட்ட இறங்கி வந்து விட்டார்கள். பின்பக்கமாய் உள்நுழைந்து தாக்க வழி இருப்பதைக் கண்ட காலித் இப்னு வலீத் (அப்போது அவர் முஸ்லிமாகவில்லை) பொன்னான வாய்ப்பாக அதனைப் பயன்படுத்திக் கொண்டு, சீறும் பாம்பாய் முஸ்லிம்களின் மீது தாக்குதல் தொடுத்தார்.
பகைவர் ஓடிவிட்டனர் என அலட்சியமாக இருந்ததால் முஸ்லிம்களால் இந்த திடீர் தாக்குதலை எதிர்கொள்ள இயலவில்லை. திருப்பித்தாக்கவும் சரமாரியாக பகைவர்கள் அம்பு மழை பொழியலாயினர். அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பற்கள் ஷஹீதாகி விட்டன. நெற்றியின் மீது இரத்தக் காயம் ஏற்பட்டது. கன்னங்களில் குருதிக் கோடுகள் வழியலாயின. இவ்வனைத்திற்கும் மேலாக அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழியொன்றில் விழுந்து விட்டார்கள். மக்களுடைய பார்வையில் இருந்து மறைந்து விட்டார்கள்.
ஒருவழியாக போர்க்களத்தில் அமைதி திரும்பியபோது தமது முப்பது தோழர்களோடு அண்ணலார் குன்றின் மீதாக ஏறினார்கள். அதேசமயம், காலித் ஒரு படைப்பிரிவை கூட்டிக்கொண்டு அப் பக்கமாய் முன்னேறினார். ‘இறைவா, அவர்கள் இதுவரை வராதி ருக்க வேண்டுமே!’ என அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அதைக்கண்ட உமர் ஒருசில தோழர்களோடு முன்னேறிச் சென்று அவர்கள் மேலும் முன்னேறி வராதவாறு தடுத்து நிறுத்தினார்கள். (தபரீ, பக்கம் 1411)
ஒரு பக்கம் குறைஷியர்களின் தலைவரான அபு ஸுஃப்யான் நின்று கொண்டு, ‘அங்கே அந்தக் கூட்டத்தில் முஹம்மது இருக்கிறாரா?’ என வினவினார். யாரும் எந்தப் பதிலையும் தர வேண்டாம் என அண்ணலார் சைகை செய்தார்கள். அதனையடுத்து, உமருடைய பெயரையும் அபு பக்கருடைய பெயரையும் சொல்லி இவர்கள் இருவரும் அங்கு உள்ளனரா என அபு ஸுஃப்யான் வினவினார். அதற்கும் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. அதைக்கண்ட அபு ஸுஃப்யான் ‘அப்படியென்றால் கண்டிப்பாக இவர்கள் யாவரும் மரித்துப்போய் இருக்கவேண்டும்’ என அதைக்கண்டும் பேசாமல் வாளாவிருக்க உமரால் இயலவில்லை.
‘இறைவனின் எதிரியே, இவர்கள் யாவரும் உயிரோடு தான் உள்ளனர்’ என அவர் உரத்த குரலில் பதிலளித்தார்.
‘அஃலா ஹுபல்’ (ஹுபல் மேலோங்கட்டும்) என்றார் அபு ஸுஃப்யான்.
‘அல்லாஹு அஃலா வ அஜல்’ (அல்லாஹ்வே மேலானவன், நிரந்தரன்) என பதிலளிக்கும்ம்று உமருக்கு அண்ணலார் சைகை செய்தார்கள். (புகாரி, கிதாபுல் மகாஸி, உஹதுப்போர்)
உஹதுப்போருக்குப் பிறகு, ஹிஜ்ரீ 3 ஆம் ஆண்டு உமருக்கு இன்னொரு நல்வாய்ப்பும் கிடைத்தது. அவருடைய அருமை மகளான ஹஃப்ஸா, அண்ணலாரின் திருமண பந்தத்தின் கீழ் வந்தார்கள். ஹிஜ்ரீ 4ஆம் ஆண்டு நம்பிக்கைத் துரோகம் செய்த காரணத்தால் பனூ நுழைர் கோத்திரத்தார் மதீனாவை விட்டும் வெளியேற்றப்பட்டார்கள். இந்நிகழ்வின்போது உமரும் கூட இருந்தார்கள்.
ஹிஜ்ரீ 5ஆம் ஆண்டு அகழ்ப்போர் நடைபெற்றது. மதீனாவுக்கு வெளிப்புறமாய் அணணலார் அகழை வெட்டினார்கள். பத்தாயிரம் இறைமார்க்க எதிரிகள் அகழுக்கு அந்தப்புறம் வந்து குவிந்தார்கள். மதீனாவை முற்றுகை இட்டார்கள். அவ்வப்போது அகழுக்குள் இறங்கியும் போரிட்டார்கள். ஆகையால், அகழிக்கு இருமருங்கிலும் ஸஹாபாக்களை அண்ணலார் நிறுத்தினார்கள். எதிரிகள் அகழைக்கடந்து இப்பக்கமாய் வராது பார்த்துக் கொள்ளுமாறு பணித்தார்கள். அகழியின் ஒருபுறத்தில் உமரும் நின்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்கள். இன்றும் அவ்விடத்தில் உமரின் பெயரால் ஒரு பள்ளிவாசல் இருக்கின்றது. (புகாரி, கிதா புஸ் சலாத், பாபும் மவாகீத்துஸ் சலாத்)
ஹிஜ்ரீ 6ஆம் ஆண்டு அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஅபத்துல்லாஹ்வை தரிசிக்கும் எண்ணம் கொண்டார்கள். பார்ப்பவர்களுக்கு எவ்வகையிலும் போரிட வருகிறோமோ என்னும் சந்தேகம் தோன்றிவிடக் கூடாதே என்பதற்காக யாரும் ஆயுதம் தரிக்கக் கூடாது என கட்டளை இட்டார்கள். மதீனாவை விட்டு வெளிக்கிளம்பி ‘துல் ஹுலைஃபா’ என்னும் இடத்தை அந்தபோது ‘இப்படி நிராயுத பாணிகளாக பகைவரின் பூமியை அடைவது உசிதமான செயலாக இல்லையே’ என உமருக்குத் தோன்றியது. அதை அண்ணலாரிடம் வெளியிட்டபோது அதை ஆமோதித்து ஏற்றுக் கொண்ட அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவிற்கு ஆளனுப்பி ஆயுதங்களை வரவழைத்தார்கள்.
மக்காவை அண்மித்தபோது முஸ்லிம்கள் எவரையும் நகருக்குள் நுழையவிட குறைஷியர் தயாராக இல்லை என்னும் தகவல் கிட்டியது. போரிடும் எண்ணம் அண்ணல் நபிகளாருக்கு அறவே இல்லையாதலால்
உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தூதராக அனுப்பி வைத்தார்கள். வந்த தூதரை குறைஷியர் தடுத்து நிறுத்திக் கொண்டார்கள். பல நாட்கள் கடந்துவிட்டன. அவர் ஷஹீதாகி விட்டார் என்னும் தகவல் முஸ்லிம்களிடையே வேகமாகப் பரவி விட்டது. நிலைமையை அவதானித்த அண்ணல் நபி ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்போது தம்மோடு வந்திருந்த கிட்டத்தட்ட 1400 ஸஹாபாக்களையும் ஓரிடத்தில் ஒரு மரத்தடியில் ஒன்றுகூட்டி பைஅத் (உறுதிமொழி) பெற்றார்கள்.
“முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்தபோது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்” (48:18) என்னும் இறைவசனம் இதனையே சுட்டிக் காட்டுகின்றது.
(இப்னு பைஅத் செய்வதற்கு முன்பாகவே போரிடுவதற்கான தயாரிப் புகளை உமர் ரழியல்லாஹு அன்ஹு செய்துவிட்டார்கள். ஆயுதங்களை தரித்துக் கொண்டிருந்த போது அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பைஅத் பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்னும் தகவல் எட்டியது. உடனடியாக அண்ணலாரின் சமூகத்தில் ஆஜராகி ஜிஹாதுக்காக பைஅத் செய்து கொண்டார்கள். (புகாரி, கிதாபுல் மகாஸி)
ஹுதைபிய்யா
இந்த வருடம் முஹம்மதுவும் அவர்களுடைய தோழர்களும் மக்காவில் நுழையவே கூடாது என குறைஷியர்கள் அடம் பிடித்தார்கள். கடைசியில் ஒருவழியாக ஓர் உடன்பாடு செய்துகொள்ள சம்மதித்தார்கள்.
இருதரப்பாரும் கையொப்பமிட ஒப்பந்தம் இறுதியானது.அந்த ஒப்பந்தத்தின்படி, குறைஷியர்களில் இருந்து எவரேனும் அண்ணல் நபிகளாரிடம் வந்து சேர்ந்தால் அவரை உடனடியாக குறைஷியரிடம் திருப்பி அனுப்பிவிட வேண்டும். அதேசமயம், மதீனாவில் இருந்து யாரேனும் மக்காவிற்கு வந்தால் அவரை குறைஷியர்கள் திருப்பி அனுப்ப மாட்டார்கள்.
இயல்பாகவே ரோஷ உணர்வு மிகைத்திருந்த உமருக்கு இந்த ஒப்பந்த ஷரத்து வேம்பாய் கசந்தது. அண்ணலாரின் சமூகத்தில் ஆஜராகி, ‘சத்தியப் பாதையில் நாமிருப்பது உண்மையானால் இத்தகைய ஒப்பந்தத்தில் எதற்காக கையெழுத்திட வேண்டும்?’ என சற்று உரத்தே கேட்டார்கள்.
‘நான் இறைவனின் தூதராக உள்ளேன். இறைவனின் விருப்பத் திற்கு மாற்றமாக என்னால் எதுவும் செய்ய இயலாது’ என்றார்கள் அண்ணலார்.
வேகம் தணியாத உமர் ரழியல்லாஹு அன்ஹு, அபுபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று இதே வார்த்தைகளைச் சொன்னபோது அவர்களும் இதே பதிலையே தந்தார்கள். பிற்காலத்தில் தாம் இப்படி அத்துமீறி நடந்துகொண்டதை நினைத்து உமர் ரழியல்லாஹு அன்ஹு பெரிதும் மனம் வருந்தினார்கள். அதற்குப் பரிகாரமாக செல்வத்தை வாரி வழங்கினார்கள்.
ஒருவழியாக ஒப்பந்தம் கையெழுத்தானபோது உமரும் தமது கையெழுத்தை இட்டார்கள். மதீனா திரும்பும் எண்ணத்தில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருந்தார்கள். இடைவழியில் அத்தியாயம் அல் ஃபத்ஹ் இறக்கியருளப்பட்டது.
அந்த அத்தியாயம், (48:1) ‘(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்” எனத் தொடங்கியது.
அப்போது உமரை அழைத்த அண்ணலார் ‘இன்றைய தினம் எனக்கு ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டுள்ளது. இப்பாருலகிலுள்ள பொருட்கள் யாவற்றையும் விட அதிகமான மனநிறைவை அது எனக்கு அளிக்கின்றது’ என்றார்கள். (புகாரி, கிதாபுத் தஃப்ஸீர், அத்தியாயம் அல் ஃபத்ஹ்)
ஹிஜ்ரீ 7ஆம் ஆண்டு கைபர் நிகழ்வு நடைபெற்றது. மதீனாவிற்கு வெளியில் இருந்த கைபர் என்னுமிடத்தில் யூதர்களுடைய பெரும் பெரும் கோட்டை கொத்தளங்கள் இருந்தன. அவற்றை வெல்வது எளிதான செயலாக இருக்கவில்லை. முதலில் அபுபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் படைக்குத் தலைமை தாங்கினார்கள். அதன்பின்பு, உமர் ரழியல்லாஹு அன்ஹு தலைமையேற்றார்கள். ஆனால், வெற்றியென்னவோ அலீ ரழியல்லாஹு அன்ஹுக்காக காத்துக் கொண்டிருந்தது. அலீ ரழியல்லாஹு அன்ஹு கைபரை வென்றார்கள். கைபரின் அதிபதியான இருந்த ‘ரஹப்’ என்பவரை வெட்டிக் கொன்றார்கள். கைபர் வெற்றிக்குப்பின் கிடைத்த நிலபுலன்களை அண்ண லார் முஜாஹிதீன்களிடையே பங்கிட்டு அளித்தார்கள். ‘ஸமஃக்’ என வழங்கப்பட்ட ஒரு காணி நிலம் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பங்குக்கு வந்தது. அதனை அவர்கள் இறைவழியில் வக்ஃபு செய்து விட்டார்கள். (புகாரி, கிதாபுத் தஃப்ஸீர், அத்தியாயம் அல் ஃபத்ஹ்)
இஸ்லாமிய வரலாற்றில் நடைமுறைக்கு வந்த முதல் வக்ஃப் இதுவேயாகும்.அண்ணலாருக்கும் குறைஷியருக்கும் இடையில் கையெழுத் தான ஒப்பந்தத்தை கைபர் போருக்குப்பின் குறைஷியர்கள் முறித்து விட்டார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அபு ஸுஃப்யான் மதீனா வந்து சேர்ந்தார். அண்ணல் நபிகளார் ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்துப் பேசினார். ஒன்றும் சொல்லாமல் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மௌனம் காத்தார்கள். ஆகையால், அவர் அபு பக்கரை சந்தித்தார். பின்பு உமரையும் சந்தித்தார். இவ்விஷயத்தை முடிவிற்குக் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டார். கடுமையான சொற்களால் அவருக்கு உமர் ரழியல்லாஹு அன்ஹு பதிலளித்தார்கள். இதனால், சாதகமான பதில் கிடைக்கும் என்னும் நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார்.
இறுதியில் ஒப்பந்தத்தை முறித்துவிட்டதால், ஏறக்குறைய பத்தாயிரம் வீரர்களோடு அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரீ 8ஆம் ஆண்டு ரமழான் மாதம் மக்காவை நோக்கிக் கிளம்பினார்கள். எதிர்த்துப்போராடும் சக்தி குறைஷியர்களுக்கு இல்லை. ஆகையால், அவர்கள் அணி திரளவில்லை.
உச்சகட்ட பணிவோடும் இறைநினைப்போடும் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தார்கள்.
கஅபத்துல்லாஹ்வின் தலைவாசலில் நின்றவாறு அற்புதமான உரையொன்றை நிகழ்த்தினார்கள். பிறகு, உமரை அழைத்துக் கொண்டு ‘ஸஃபா’ என்னுமிடத்தில் மக்களிடமிருந்து பைஅத்தைப் பெறுவதற்காக அமர்ந்தார்கள். உமர் ரழியல்லாஹு அன்ஹு அண்ணலாருக்கு அண்மையில் ஆனால், சற்று கீழாக அமர்ந்தார்கள். அண்ணலார் பெண்களின் கைகளைத் தொட்டு பைஅத் பெற இயலாது. ஆகையால், பெண்களின் முறை வந்தபோது அண்ணலார் உமரை கைகாட்டினார்கள் அதன்படி அனைத் துப்பெண்களும் உமரின் கைகளில் பைஅத் செய்தார்கள்.
மக்கா வெற்றிக்குப்பிறகு, அதே ஆண்டு ஹுனைன் யுத்தம் நடைபெற்றது. அப்போரிலும் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது வீரத்தையும் போர்த்திறனையும் நிலைநாட்டினார்கள்.
ஹிஜ்ரீ 9 ஆம் ஆண்டு ரோமானிய சீசர் அரபுலகின் மீது படை தொடுக்கப் போவதாக செய்தி ஒன்று வேகவேகமாகப் பரவியது. அனைத்து ஸஹாபாக்களையும் அழைத்து தயாரிப்பு வேலைகளை அண்ணலார் முடுக்கி விட்டார்கள். ஜிஹாதுக்காக வரையாது வழங்குமாறு முஸ்லிம்களைத் தூண்டினார்கள். அத்தருணத் தில் உமர் (ரழி) தம்முடைய ஒட்டுமொத்த சொத்திலிருந்து சரி பாதி 50 % பாகத்தை இறைவழியில் ஹிஜ்ரீ 10ஆம் ஆண்டு அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜத்துல் விதா எனப்படும் விடைபெறும் ஹஜ்ஜுக்காக கிளம்பினார்கள். உமர் ரழியல்லாஹு அன்ஹு கூடவே இருந்தார்கள்.
ஹஜ்ஜிலிருந்து திரும்பியதும் அவ்வாண்டு ரபீஉல் அவ்வல் மாதம் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகை விட்டு விடை பெற்றுச் சென்றார்கள்.
அண்ணலாரோடு நெருங்கிய உள்ளத்தொடர்பை கொண்டிருந்ததால் உமர் ரழியல்லாஹு அன்ஹு மனம் தளர்ந்து, நிலை தடுமாறினார்கள். உணர்விழந்தார்கள். மஸ்ஜிதுந் நபவியின் தலைவாசலில் நின்று கொண்டு, ‘யாரேனும் இறைவனின் தூதர் இறந்துவிட்டதாகக் கூறினால் அவருடைய தலையைக் கொய்துவிடுவேன்’ என முழங்கினார்கள்.
அண்ணலாரின் மறைவுக்குப் பிறகு, உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அபு பக்கர் (ரழி) அவர்களின் கரங்களில் பைஅத் செய்தார்கள். அபு பக்கர் காலத்தில் நடைபெற்ற அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்றார்கள்.
இறைவேதம் குர்ஆனைத் தொகுக்கும் பெரும்பணி அவர்களுடைய ஆலோசனையின் பேரிலேயே செயல் வடிவம் கண்டது. (புகாரி, கிதாபு அப்வாபு ஃபழாயிலுல் குர்ஆன், பாபு ஜம்உல் குர்ஆன்)
தம்முடைய ஆட்சிக்காலத்திலேயே அபுபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்த விட்டிருந்தது. தமக்குப்பிறகு ஆட்சிப் பொறுப்பை சமாளிக்க உமரை விட்டால் வேறு ஆள் யாருமில்லை என்னும் முடிவிற்கு அவர்கள் வந்துவிட்டிருந்தார்கள். அதனால், தம்முடைய இறப்பின் தருவாயில் அனைத்து ஸஹாபாக்களையும் அழைத்து அவர்களோடு ஆலோசனை கலந்து உமர் (ரழி) அவர்களை தமக்குப் பிறகு, கலீஃபா வாக நியமித்தார்கள். அவர்களுக்கு பயனுள்ள பல ஆலோசனை களையும் வழங்கினார்கள். அவற்றை என்றென்றைக்குமாய் உமர் ரழியல்லாஹு அன்ஹு நினைவில் பதித்துச் செயல்பட்டார்கள். அபுபக்கருக்குப் பின் உமரவர்கள் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்தார்கள்.
அதற்கு முன்னதாகவே பல்வேறு நாடுகளிலும் படைத்தாக்குதல்கள் தொடங்கிவிட்டிருந்தன. ஹிஜ்ரீ 12 ஆம் ஆண்டு இராக் நாட்டின் மீது தாக்குதல் தொடங்கி விட்டிருந்தது. சிரியாவின் அனைத்து பகுதிகளும் வெற்றி கொள்ளப்பட்டிருந்தன. ஹிஜ்ரீ 13 ஆம் ஆண்டு சிரியாவின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இப்படைத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாக ஆட்சித்தலைவர் இறப்பெய்து விட்டார். ஆட்சிக் கடிவாளத்தைக் கேயிலேந்தியவுடன் இத்தாக்குதல்களை வெற்றிகளாக மாற்றும் முயற்சிகளை உமரவர்கள் முடுக்கி விட்டார்கள்.
ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்தவுடன் உமரவர்கள் இராக் மீதான படை நடவடிக்கைகளில் கவனத்தைச் செலுத்தினார்கள், கிலா ஃபத் சமயத்தின்போது நாடின் பல்வேறு பாகங்களில் இருந்நதும் பைஅத் செய்வதற்காக மக்கள் திரள்திரள்களாக வந்திருந்தார்கள். அத்தருணத்தை பொன்னான தருணமாகக் கருதிய உமரவர்கள் அம்மக்களுக்கு முன்பாக ஜிஹாதைக் குறித்த உத்வேகத்தை ஊட்டினார்கள், பலநாட்கள் இவ்வுபதேசம் தொடர்ந்தது. குழுமி யிருந்த மக்களுடைய உள்ளங்கள் யாவும் ஜிஹாதிய உணர்வால் பொங்கியெழுந்தன. ஜிஹாதுக்குத் தயார் என அனைவரும் ஒட்டுமொத்த குரலில் முழங்கினார்கள். மதீனா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பகுதிகளில் இருந்து ஓராயிரம் (இன்னோர் அறிவிப்பின்படி ஐந்தாயிரம்) படைவீரர்களை உமரவர்கள் தயார் செய்தார்கள். அபு உபைதா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய தலைமையின் கீழ் அப்படையை அணிவகுத்து அனுப்பினார்கள்.
அபுபக்கருடைய காலத்தில் நடைபெற்ற இராக் தாக்குதலைக் கண்ட ஈரானியர்கள் எச்சரிக்கை அடைந்துவிட்டிருந்தார்கள். பாரசீகர்களோடு கலந்துபேசி பெருங்கொண்ட படையொன்றைத் திரட்டி அதற்கு ருஸ்தும் என்னும் உலகப்புகழ் பெற்ற தளபதியை படைத்தலைவராக நியமித்தார்கள்.
அபு உடைதா அப்பகுதியை அடைவதற்கு முன்னதாகவே ருஸ்தும் புராத் நதிக்கரையை அடைந்து அங்கு மிகப்பெரிய கலவரத்தை உண்டுபண்ணி விட்டார். ஏற்கனவே வெற்றி கொள் ளப்பட்டு முஸ்லிம்களின் கைவசம் வந்துவிட்டிருந்த பகுதிகள் யாவும் இப்போது முஸ்லிம்களின் அதிகாரத்திலிருந்து வெளியேறி ருஸ்தும் வசம் சென்றுவிட்டன.
அச்சமயத்தில் முஸ்லிம்கள் பல்வேறுபட்ட யுத்த நடவடிக்கைகளில் இறங்கினார்கள். ஆயினும் காதிஸிய்யா போர் மட்டும்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய போராகும்.
காதிஸிய்யா போர்
காதிஸிய்யா என்னுமிடத்தில் முஸ்லிம்களும் இறைநிராகரிப் பாளர்களும் எதிரெதிரே அணிவகுத்து நின்றார்கள். அப்போரின் முதல்நாள் ‘யவ்முல் அர்மாஸ்’ என வழங்கப்படுகின்றது. பெருத்த ஆரவாரத்தோடு போர் நடைபெற்றது. ஆயினும் குறிப்பிடத்தக்க விளைவேதும் விளையவில்லை.
காதிஸிய்யாவின் இரண்டாம் நாள் போர் ‘யவ்முல் அக்வாஸ்’ என வழங்கப் படுகின்றது. அன்றைய நாள்முழுக்க சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உக்கிரமமான போர் நடைபெற்றது. சாயந் திரப் பொழுதிற்குள் ஈராயிரம் முஸ்லிம்கள் ஷஹீதாகி விட்டிருந் தார்கள். அங்கே பத்தாயிரம் ஈரானியர்கள் மாண்டுவிட்டார்கள். ஆயினும் வெற்றி தோல்வி தீர்மானிக்கப் படாமலேயே அன்றைய போர் முடிந்துபோனது.
மூன்றாம் நாள் போர் ‘யவ்முல் அம்மாஸ்’ என வழங்கப்படுகின்றது. அந்நாளில் யானைகளின் கடும் தாக்குதலில் இருந்து விடுபடுவதே முஸ்லிம்களுக்கு பெரும் சிரமமான காரியமாக ஆகிவிட்டது. ஏனெனில் யானைகள் எப்பகுதியில் ஊடுருவு கின்றனவோ அப்படைப் பகுதி ஏறக்குறைய நிர்மூலமாகி விடுகின்றது. ழகம் மற்றும் ஸலம் என்னும் பாரசீகத் கோத்திரத் தாரை அழைத்து யானைகளை எவ்வாறு சமாளிப்பது என சஅத் அவர்கள் ஆலோசனை செய்தார்கள். யானைகளை குருடாக்கி அவற்றின் தும்பிக்கைகளை துண்டித்துவிட்டால் அவை சக்தியிழந்து விடும் என அவர்கள் யோசனை கூறினார்கள்.
சஅத் அவர்கள் கஃகாஃ (ரழி) அவர்களையும் ஜமால் மற்றும் ரபீஃ என்பாரையும் இப்பணியில் அமர்த்தினார்கள். அவர்கள் யாவரும் யானைகளை தமது கட்டுப்பாட்டில் கொணர்ந்தார்கள். அவற்றின் மீது ஈட்டிகளை வேகவேகமாக செலுத்தி அவற்றின் தும்பிக்கைகளை அறுத்தெறிந்தார்கள். கண்களைக் குத்திக் குருடாக்கினார்கள். பலமாகக் கத்தியவாறே அவை தறிகெட்டு ஓடின. ஒருவழியாக முஸ்லிம்களுக்கு யானைகளிடமிருந்து நிம்மதி கிடைத்தது.
அந்நாள் முழுக்க யுத்தம் நடைபெற்றது. வைராக்கியத்தோடும் வெகு தீரத்தொடும் ருஸ்தும் களத்தில் நின்று போராடிக் கொண் டிருந்தார். கடைசியில் எண்ணிலடங்கா காயங்களை உடம்பில் வாங்கிக்கொண்டு போர்க்களத்திலிருந்து பின்வாங்கி ஓடலானார். வழியில் எதிர்ப்பட்ட ஆறொன்றில் குதித்துக் கரைசேர்ந்து தப்பித்து விட எண்ணினார். ஆனால், ஹிலால் என்னும் முஸ்லிம் வீரனொருவன் அவரைப் பின்தொடர்ந்து துரத்திக் கொண்டே வந்தான். ருஸ்துமுடைய கால்களைப் பற்றியிழுத்து கரையில் தரையில் தள்ளினான். ஓங்கிய வாளைச் செலுத்தி அவருடைய கதையை முடித்துவிட்டான். ருஸ்தும் மரணமுற்றதும் ஈரானிய படைவீரர்கள் உத்வேகமிழந்து சோர்ந்து போனார்கள். வெகு தூரம் வரை முஸ்லிம்கள் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திக் கொண்டே சென்றார்கள். ஆயிரக்கணக்கான மனித உடல்கள் போர்க்களமெங்கும் சிதறிக் காதிஸிய்யா போர், கிஸ்ரா வம்ச ஆட்சியை முடிவிற்கு கொண்டுவந்தது. காதிஸிய்யாவைத் தொடர்ந்து முஸ்லிம்கள் பாபுல், கூசி, பர்த் ஷேர், மற்றும் நாட்டுத் தலைநகரான மதாயின்போன்ற நகரங்களைத் தமது கைவசம் கொண்டு வந்தார்கள்.
ஹல்வான் நகரில் கஃகாஃ முகாமிட்டுத் தங்கினார். இஸ் லாமை ஏற்றுக் கொள்ளவேண்டும் இல்லையெனில் ஜிஸ்யா வைத்தர தயாராகவிட வேண்டும் என அவர் பொது அறிவிப்பு செய்தார். இவ்விரண்டில் ஒன்றை செய்ய முன்வந்தால் அவருக்கு பாதுகாப்பு கிடைக்கும். இப்பொது அறிவிப்பைக் கேட்ட பற்பல ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மக்கள் தலைவர்களும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு ஓரிறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழத் தயாராயினர். இராக் மாகாணத்தில் நடைபெற்ற கடைசி யுத்தம் இதுவேயாகும். இத்தோடு இராக் முழுவதும் இஸ்லாமிய ஆளுமையின் கீழாக வந்து விட்டது.
அஜ்னாதீன், பசரா போன்ற பகுதிகளும் இன்னபிற சிற்சில பகுதிகளும் அபுபக்கருடைய ஆட்சிக் காலத்திலேயே இஸ்லாமிய ஆளுகையின் கீழ் வந்துவிட்டன. உமரவர்கள் ஆட்சிக் கட்டிலில் ஏறியபோது டமாஸ்கஸ் நகரை இஸ்லாமியப் படைகள் முற்றுகை இட்டிருந்தன. காலித் இப்னு வலீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரீ 14 ஆம் ஆண்டு அந்நகரை தம் கைவசப் டமாஸ்கஸ் நகரை இழந்ததால் கடுங்கோபத்தில் இருந்த ரோமா னியர்கள் ஆவேசத்தோடு படைகளைத் திரட்டிக் கொண்டு பயான் என்னுமிடத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக திரண்டெழுந் தார்கள். எதிரெதிரே இரு அணியினரும் கச்சை கட்டிக் கொண்டு நின்றிருந்தார்கள். கிறிஸ்துவர்களின் கோரிக்கைக்கு இணங்க முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முஸ்லிம்களின் தரப்பிலிருந்து தூதுவராகச் சென்றார்கள். ஆயினும் எத்தகைய உடன்பாடும் எட்டப்படவில்லை. ஆதலால், ஃபெஹல் என்னுமிடத்தில் ஹிஜ்ரீ 14 ஆம் ஆண்டு துல்கஅதா மாதம் கடும் போர் நடை பெற்றது. இறைவனுடைய வற்றாக் கருணையினாலும் பேருதவியினாலும் முஸ்லிம்கள் பெருவெற்றியைப் பெற்றார்கள்.
இவ்வெற்றியை அடுத்து ஜோர்டான் மாகாணத்தின் அனைத்து பகுதிகளையும் அனைத்து நகரங்களையும் முஸ்லிம்கள் தம் வசப் டமாஸ்கஸ் மற்றும் ஜோர்டான் வெற்றிகளைத் தொடர்ந்து முஸ்லிம்கள் ஹிமஸ் பகுதியை நோக்கி முன்னேறினார்கள் வழியில் பஅலபக், ஹிமான், ஷேராஸ், முஅர்ரத்துல் கமான் போன்ற பகுதிகளை வென்றார்கள். இறுதியில் ஹிமஸ் பகுதி யை அடைந்து அந்நகரை முற்றுகையிட்டார்கள். நெடுங்காலம் முற்றுகை நீடித்தது. கடைசியில் ஒருவழியாக நகர மக்கள் சமாதானத்திற்கு இறங்கி வந்தார்கள்.
அதனையடுத்து இஸ்லாமியப் படைகள் ஹிர்கலுடைய மையத்தளமான ‘அன்தாகிய்யா’வை நோக்கி முன்னேறின. ஆனால், அவ்வாண்டு மேற்கொண்டு படை நடவடிக்கைகளில் இறங்க வேண்டாம் என தலைநகரிலிருந்து உத்தரவு வந்ததால் இஸ்லாமியப் படைகள் அவ்விடத்திலிருந்து திரும்பின.
டமாஸ்கஸ், ஹிமஸ் தோல்விக்குப் பிறகு, ரோமானிய சீசர் கடும் கொந்தளிப்பில் இருந்தார். முஸ்லிம்களுக்கு எதிராக தம்முடைய முழு ராணுவ பலத்தையும் பிரயோகிக்க ஆயத்தமானார்.அதனை எங்ஙனம் எதிர்கொள்வது என அபூ உபைதா (ரழி) தமது படைத்தளபதிகள் அனைவரையும் ஒன்றுகூட்டி ஆலோசனை கலந்தார்கள். எல்லா இடங்களில் இருந்தும் படைகளை ஒன்று திரட்டி டமாஸ்கஸ் நகரில் ஒட்டுமொத்த படைகளையும் திரட்டு வது என முடிவாகியது. வெற்றிகொள்ளப்பட்ட மாகாணங்களில் நிலைகொண்டிருந்த இஸ்லாமியப் படைகள் யாவும் அகன்று செல்கின்றன என்னும் தகவல் உமரவர்களை எட்டியதும் முதலில் அவர்கள் கலக்கமுற்றார்கள். பிறகு, படைத்தளபதிகளின் ஆலோசனைகளைப் பெற்றபன்பே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்பதை அறிந்ததும் இறைவனின் ஹிக்மத் இதுவாகத்தான் இருக்கும் என்றெண்ணி சமாதானமடைந்தார்கள்.
உமரவர்கள் உதவிக்காக ஸஈத் இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு தலைமையில் ஆயிரம்பேர் கொண்ட படைப்பிரிவொன்றை அனுப்பி வைத்தார்கள். படையோடு ஒரு செய்தியாளரையும் அனுப்பினார்கள். முஸ்லிம்களின் படையை அடைந்ததும் ஒவ்வொரு அணியினரிடமும் சென்று அவர்களுக்கு முன்னால் நின்றவாறு, ‘உமர் உங்களுக்கு ஸலாம் உரைக்கிறார். உங்களுக்கு அவர் ஒரு செய்தியை விடுத்துள்ளார். பகைவருக்கு முன்னால் வீறு கொண்ட சிங்கங்களாகப் பாயுங்கள். உங்கள் பார்வையில் அவர்கள் சிற்றெறும்பு களாகக் காட்சி அளிக்கவேண்டும். இறைவனுடைய உதவியும் ஒத்தாசையும் நமக்குத்தான் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொள்ளவேண்டும். இறுதி வெற்றி கண்டிப்பாக நமக்கே யர்மூக்கில் நடைபெற்ற முதல்யுத்தம் வெற்றிதோல்வியின்றி முடிந்தது.
ஹிஜ்ரீ 15ஆம் ஆண்டு ரஜப் மாதம் இரண்டாம் யுத்தம் நடைபெற்றது. ரோமானியர்கள் உசசகட்ட யுத்த ஆவேசத்தில் இருந்தார்கள். ஏறக்குறைய முப்பதாயிரம் போர்வீரர்களின் கால்களில் விலங்குகளை மாட்டியிருந்தார்கள். யுத்த களத்தில் இருந்து அவர்கள் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக. ஆயிரக்கணக்கான பாதிரிகளும் பிஷப்களும் கைகளில் சிலுவைகளை ஏந்திக்கொண்டு யுத்தகளத்தில் அணிவகுத்து நின்றார்கள். வெறித்தனமாக ரோமானியர்கள் போரிட்டார்கள். இருதரப்பிலும் குருதியாறு கொப்புளித்து ஓடியது. கிஞ்சிற்றும் கலங்காமல் நிலைத்துநின்று முஸ்லிம்கள் போரிட்டார்கள். அவர்களுடைய நெஞ்சுறுதிக்கு முன்னால் ரோமானியர்களின் வெறியும் ஆக்ரோஷமும் ஒன்றுமில்லாமற்போனது. ரோமானியர்கள் சிதறியோடி னார்கள். ஏறக்குறைய ஒரு லட்சம் ரோமானியர்கள் மாண்டார்கள். மூவாயிரம் முஸ்லிம்கள் ஷஹீதானார்கள்.
தோல்விச்செய்தி சீசரை எட்டியதும் மனவருத்தமுற்று சிரியாவிற்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு கான்ஸ்டான்டைன் நகருக்கு கிளம்பினார். (காண்க ஃபுதூஹுல் புல்தான், பக்கம் 143)
வெற்றிச்செய்தி உமரவர்களுக்கு அறிவிக்கப்பட்டதும் உமரவர்கள் உடனடியாக ஸஜ்தாவில் விழுந்தார்கள். உளப்பூர்வமான நன்றியை இறைவனுக்கு செலுத்தினார்கள்.
பைத்துல் முகத்தஸ்
பைத்துல் முகத்தஸ் நகரை நோக்கிய உமரவர்களின் பயணம் மிகவும் எளிமையான பயணமாக அமைந்தது. ஜாப்பா என்னு மிடத்தில் இஸ்லாமியப் படைவீரர்கள் கலீஃபாவை வரவேற்றார்கள். பைத்துல் முகத்தஸ் நகரில் நுழைந்தவுடன் முதலில் பள்ளிவாசலுக்கு சென்றார்கள். பின்பு, கிறிஸ்துவர்களின் தேவா லயத்திற்குச் சென்றார்கள். தொழுகை நேரம் வந்தவுடன் கிறிஸ்து வர்கள் தேவாலயத்திற்குள்ம்கவே தொழுது கொள்ளுமாறு கூறி னார்கள். ஆனால், தமக்குப் பின்னால் வருபவர்கள் இதனையே சாக்காகக் காட்டி, தேவாலயங்களில் தொழத்தொடங்கி விடுவார்கள் என்றஞ்சிய உமரவர்கள் அங்கு தொழாமல் தவிர்த்தார்கள். தேவாலயத்திற்கு வெளியே வந்து தொழுதார்கள். (ஃபுதூஹுல் புல்தான், பிலாதுரி, பக்கம் 147)
பைத்துல் முகத்தஸ் பயணத்தை இனிதே முடித்துவிட்டு உமரவர்கள் மதீனாவிற்கு நன்முறையில் திரும்பி வந்தார்கள்.
எகிப்து வெற்றிகள்
அம்ரு இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் உமரவர்களின் அனுமதி யைப் பெற்று நான்காயிரம் படைவீரர்களோடு எகிப்தில் காலடி எடுத்து வைத்தார்கள். வழியில் எதிர்ப்பட்ட பல்வேறு இடங்களைக் கைப்பற்றியவாறு ஃபஸ்தாத் நகரை அடைந்தார்கள். முற்றுகையிடடார்கள். மேலும் துணைக்கு படையை அனுப்பி வைக்குமாறு உமர் அவர்களுக்கு கடிதமெழுதினார்கள். அங்கிருந்து பத்தாயிரம் படைத்துருப்புகள் வந்து சேர்ந்தன. ஏழு மாதங்களுக்குப் பிறகு இக்கோட்டை வீழ்ந்தது. அங்கிருந்து இஸ்லாமியப்படைகள் அலெக்ஸான் டிரியாவை நோக்கிப் பயணமாயின.
கரபூன் என்னுமிடத்தில் கடுமையான போர் மூண்டது. அங்கி ருந்த கிறிஸ்துவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். முஸ்லிம்கள் அலெக்ஸான்டிரியாவை அடைந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். ஒருசில நாள்களுக்குப் பிறகு இந்நகரையும் கைப்பற்றி னார்கள்.வெற்றிச்செய்தி உமரவர்களுக்கு அறிவிக்கப்பட்டதும் உமரவர்கள் ஸஜ்தாவில் விழுந்து, உளப்பூர்வமான நன்றியை இறைவனுக்கு செலுத்தினார்கள். (மிக்ரீஸி பக்கம் 267)
சமயப் பணிகள் என்னும் தலைப்பின் கீழாக முதலில் இடம் பெற வேண்டியது இஸ்லாமியப் பரவலாக்கமும் பிரச்சாரமும் ஆகும். இவ்விஷயத்தில் உமரவர்கள் ஆழ்ந்த அக்கறையையும் கவனத்தையும் செலுத்தினார்கள். சிரியா, இராக் போன்ற பகுதிகளில் வசித்துவந்த அரபுக் குலத்தினர் யாவரும் எளிதாக இஸ்லாமை ஏற்றுக் கொள்ள வாய்ப்பிருந்தது. ஆகையால், அவர்களிடம் இஸ்லாமை முன்னெடுத்துச் செல்வதற்கு உமரவர்கள் மிகுந்த முனைப்பு காட்டினார்கள். எனவே, பெரும்பாலான கோத்திரங்கள் சிறியதொரு முயற்சிக்குப் பிறகு எளிதாக இஸ்லாமைத் தழுவிக் கொண்டன. காதிஸிய்யா வெற்றிக்குப் பிறகு, தீலம் கோத்திரத்தைச் சார்ந்த நான்காயிரம் பேர் இஸ்லாமிய வட் டத்திற்குள் நுழைந்தனர். (காண்க ஃபுதூஹுல் புல்தான், பக்கம் 209)
ஆக, உமவர்களின் ஆட்சிக்காலத்தில் மிகப்பரவலாக பல்வேறு இடங்களிலும் இஸ்லாம் வெகுவேகமாகப் பரவியது.
இஸ்லாமியப் பரவலுக்குப் பிறகு இடம்பெறுகின்ற முக்கியப் பணி இஸ்லாமியக் கல்வியும் பயிற்சியும் ஆகும். இஸ்லாமியச் சின்னங்களையும் மக்களிடையே புழக்கத்தில் கொண்டுவர வேண்டும். இப்பணிகளை அவர்கள் அபுபக்கருடைய காலத்திலேயே துவக்கிவிட்டார்கள் எனலாம்.
இஸ்லாமின் அடிப்படை ஆதாரமாகிய வான்மறை குர்ஆன் உமரவர்களின் வற்புறுத்தலின் பேரில்தான் அபுபக்கருடைய காலத்தில் நூல்வடிவில் தொகுக்கப்பட்டது. அதன்பின்பு தமது ஆட்சிக்காலத்தில் குர்ஆனின் போதனைகளை நாடெங்கினும் பரவலாக்கினார்கள்.
ஆசிரியர்கள், போதகர்கள், முஅத்தின்கள், ஹாஃபிழ்கள் போன்றோருக்கான ஊதியங்களை நிர்ணயித்தார்கள். உபாதா இப்னு ஸாமித், முஆத் இப்னு ஜபல், அபுத்தர்தாஃ (ரழியல்லாஹு அன்ஹும்) போன்ற பெரும்பெரும் ஸஹாபாக்களை குர்ஆனைக் கற்பிக்கும் பணியில் நியமித்தார்கள். அப்பணிக்காக அவர்களை சிரியா அனுப்பி வைத்தார்கள்.குர்ஆன் கல்வியை மக்களிடையே பரப்பும் உமரவர்களின் முயற்சிகளுக்கு பெரும்பயன் விளைந்தது. குர்ஆனை பார்த்து வாசிக்கத் தெரியாதவர்கள் யாருமே நாட்டில் இல்லை என்னுமளவுக்கு நிலைமை ஆகிவிட்டது.
குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்களின் எண்ணிக்கையோ ஆயிரக்கணக்கில் இருக்கும். உமரவர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் அபு மூஸா அஷ்அரி அவர்கள் தமது படையில் மட்டும் முன்னூறு ஹாஃபிழ்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இஸ்லாமிய நியதிகளைக் கற்பிக்கையில் வான்மறை குர் ஆனுக்கு அடுத்தபடியாக நபிமொழிகள் இடம்பெறுகின்றன. ஹதீஸ் துறையில் நிகரற்ற ஊழியத்தை உமரவர்கள் செய்துள்ளார்கள். ஹதீஸ்களை கற்பிக்கும் பணிக்கான சான்றோர் சஹா பாக்களை நட்டின் பல்வேறு பாகங்களுக்கும் அனுப்பி வைத்தார்கள். கூஃபா நகருக்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களையும் சிரியா மாகாணத்திற்கு உபாதா இப்னு ஸாமித் மற்றும் அபுத்தர்தாஃ அவர்களையும் பசரா மாகாணத்திற்கு அப்துல்லாஹ் இப்னு மக்ஃபல், இம்ரான் இப்னு ஹுசைன், மிஃகல் இப்னு யஸார் ஆகியோரையும் அனுப்பிவைத்தார்கள். (ஸாதுல் ஃகுலஃபா, பாகம் 2
நபிமொழி அறிவிப்புகளை ஏற்கும் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் நடந்து கொண்டார்கள். ஒரு முறை உமரவர்கள் ஏதோ ஒரு முக்கியப் பணியில் மூழ்கியிருந் தார்கள். அப்போது அவரைச் சந்திப்பதற்காக அபு மூஸா அஷ்அரி (ரழி) வருகை தந்தார்கள். மூன்று தடவை ஸலாம் உரைத்தார்கள். பதில் வராததால் திரும்பிச் சென்றுவிடடர்ர்கள். பணி முடிந்ததும் அபு மூஸா வந்தார் போலிருந்ததே, என உமரவர்கள் திரும்பிப்பார்க்க, அபு மூஸாவோ திரும்பிப் போய்விட்டிருந்தார்கள். பணியாளை அனுப்பி வரவழைத் தார்கள். திரும்பிச் சென்ற காரணத்தை வினவினார்கள்.
ஒருவரை சந்திக்கச் சென்றால் மூன்றுமுறை ஸலாம் உரைக்க வேண்டும். அதன்பின்பும் பதில் கிடைக்கவில்லை எனில், திரும்பிவிட வேண்டும் என அண்ணலார் கூறியுள்ளதாக அபு மூஸா சொன்னார்கள்.
‘நீங்கள் அறிவிக்கும் தகவலுக்கு ஆதாரம் கொண்டு வாருங்கள், இல்லையெனில் உங்களுக்கு தண்டனை அளிக்கப்படும்’ என உமரவர்கள் கூறினார்கள். (காண்க முஸ்லிம் பாபுல் இஸ்தீஸான்)
அவ்வண்ணமே அபு மூஸா அஷ்அரி அவர்கள் தமது கூற்றுக்கு ஆதரவாக அபு ஸஈத் குத்ரி அவர்களை அழைத்துக்கொண்டு வந்தார்கள். அதன்பின்பே அவருடைய கூற்று ஏற்கப்பட்டது.
ஒரு பெண் தனது கருவை தானே கலைக்கும் விஷயத்தில் முகீரா இப்னு ஷைபா ரழியல்லாஹு அன்ஹு ஒரு தகவலை அளித்தார்கள். அதனை ஏற்காது அதற்கொரு சாட்சியாளரை கொணருமாறு உமரவர்கள் கூறிவிட்டார்கள். அவ்வாறே முஹம்மது இப்னு முஸைலமா அதற்கு சாட்சி கூறியபிறகே அக்கருத்து ஏற்கப்பட்டது. (அபு தாவுது, கிதாபுத் திய்யாத், பாபு திய்யத்துல்)
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அவர்கள் ஒரு வழக்கின்போது ஒரு நபிமொழியைக் கூறினார்கள். அதற்கு சாட்சியாளர்களைக் கொண்டு வருமாறு உமரவர்கள் உத்தரவிட்டார்கள். மக்கள் அதற்கு சாட்சியளித்த பிறகு, உம்மீது நம்பிக்கை இல்லாததால் நான் இவ்வாறு கோரவில்லை. கூறப்பட்ட கருத்தை சரிகாணவே இவ்வாறு கூறினேன் என அதற்கான காரணத்தை உமரவர்கள் விளக்கினார்கள்.
நினைத்தபோதெல்லாம் தங்குதடையில்லாமல் நபிமொழிகளை அறிவிக்கலாகாது என மக்களை உமரவர்கள் தடுத்தார்கள். இராக்கிற்கு ஒருமுறை குரழ் இப்னு கஅப் அவர்களை அனுப்பியபோது வெகுதொலைவு வரை கூடவே சென்றார்கள். ‘நாலா புறங்களிலும் குர்ஆனோசை முழங்குகின்ற ஒரு பகுதிக்கு நீங்கள் செல்கிறீர்கள். அவர்களுடைய கவனத்தை குர்ஆனில் இருந்து நபிமொழிகளின் பக்கம் திருப்பிவிடாதீர்கள்’ என அவருக்கு உப தேசம் செய்தார்கள். (தத்கிரத்துல் ஹுஃப்பாழ், தத்கிரத்து உமர்)
நபிமொழிகளுக்குப்பிறகு மார்க்க சட்ட ஞானம் என்னும் ஃபிக்ஹு இடம் தம்முடைய உரைகளிலும் சொற்பொழிவுகளிலும் உமரவர்கள் இஸ்லாமிய சட்ட ஞான விளக்கங்களைக் கொடுத்து வந்தார்கள். நாட்டு ஆளுநர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வரைகின்ற ஓலைகளிலும் சட்டக் கருத்துகளையும் தெளிவுகளையும் எழுதி அனுப்புவார்கள். பலதரப்பட்ட சட்ட சிக்கல்களை ஸஹாபாக்கள் ஒன்றுகூடும் அவைகளில் முன்வைத்து அவைகுறித்து கலந் தாய்வு நடத்து வார்கள். ஒருமித்த தீர்மானத்திற்கு வெற்றிபெற்ற பகுதிகள் யாவிலும் ஃபுகஹாக்களை நியமித் திருந்தார்கள். அவர்கள் யாவருக்கும் தக்க ஊதியம் வழங்கப்பட்டது என இப்னு ஜவ்ஸி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அத்தோடு நில்லாமல் செயற்களத்திலும் உமரவர்கள் பல்வேறு சிறப்புப் பணிகளை துவக்கினார்கள். பற்பல பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. இமாம்களும் முஅத்தின்களும் நினமனமாயினர். ஹரம் ஷரீஃப் ஆன கஅபத்துல்லாஹ்வின் கட்டிடம் போதுமானதாக இல்லாததால் அதனை ஹிஜ்ரீ 17ஆம் ஆண்டு விரிவு படுத்திக் கட்டினார்கள். அவ்வாறே மஸ்ஜிதுந் நபவியும் விரி வாக்கிக் கட்டப்பட்டது. பள்ளிவாசல்களில் நறுமணம் பரப்பு வது, பள்ளிவாசல்களில் ஒளிவிளக்குகளைப் பொருத்துவது போன்ற நடவடிக்கைகளையும் உமரவர்களே முதல்முதலில் மேற்கொண்டார்கள்.
வருடந்தோறும் ஹஜ்ஜுக்காக கிளம்பிச் செல்வார்கள். மக் களைச் சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை நேரிடையாகக் கேட்டறிவார்கள். (அஸதுல் காபா, தத்கிரத்து உமர்)
நற்பண்புகளின் நாயகமாக உமரவர்கள் விளங்கினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பண்புகள் யாவற்றையும் அப்படிக்கு அப்படியே பின்பற்றுவதில் முன்னணியில் நின்றார்கள்.பேணுதலையும் இறையச்சத்தையும் கற்றுக்கொள்ளும் நோக் கத்தில் நாங்கள் எப்போதும் உமரவர்களோடு இருந்து கொண்டி ருப்போம் என மிஸ்வர் இப்னு முஃக்ரிமா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்.
உமரவர்களின் குறிப்பிடத்தக்க பண்புகள்:
உயர் ஒழுக்கத்தின் பிறப்பிடமாக இறையச்சமே திகழுகின்றது. ஒருவருடைய உள்ளத்தில் இறைவனைப் பற்றிய பயமும் அச்சமும் இல்லை என்றால், இறைவனைப் பற்றி சாதாரணமாக அவர் எடைபோட்டுள்ளார் என்றால் அவரிடமிருந்து சிறந்த ஒழுக்கமோ அழகிய நற்பண்புகளோ வெளிப்பட வாய்ப்பே இல்லை.
உமரவர்கள் இறையச்சத்தோடும் பயபக்தியோடும் இரவெல்லாம் நின்று தொழுவார்கள். அதிகாலைப் பொழுதை அடைந்து விட்டால்
‘உம்முடைய இல்லத்தாரை தொழு மாறு உபதேசிப்பீராக’ என்னும் இறைவசனத்தை ஓதியவாரே வீட்டினர்களை எழுப்புவார்கள். (முஅத்தா இமாம் மாலிக், பாபு மா ஜாஅ ஃபீ சலாத்தில் லைல்)
இறுதித்தீர்ப்புநாள், மறுமை, இறைவனின் ஆற்றல், வல்லமை போன்றவற்றைக் குறிப்பிடுகின்ற இறைமறை வசனங்களையே அதிகமாக தொழுகையில் ஓதுவார்கள். அவர்களைம் அறியாமல் அழுகை பொங்கத் தொடங்கிவிடும். அழுது அழுது விம்மத் தொடங்கிவிடுவார்கள்.
‘நான் கடைசி வரிசையில் நின்று கொண்டிருப்பேன். உமரவர் கள் தொழுக வைப்பார்கள். ‘என்னுடைய வருத்தத்தையும் விசனத்தையும் என் இறைவனிடமே முறையிடுகிறேன்’ என்னும் வசனத்தை (இறைத்தூதர் யஃகூப் அவர்கள் ஓதிய துஆ) ஓதுகையில் உமரவர்கள் விம்மி விம்மி அழும் ஓசை எனக்கு நன்றாகக் கேட்கும்’ என நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார். (புகாரி, கிதாபுஸ் சலாத், பாபு இதா பகா இமாமு ஃபஸ் சலாத்)
‘ஒருமுறை உமரவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். ‘உம் இறைவனின் தண்டனை வந்தே தீரும். அதனின்று யாதொன்றும் உம்மைக் காப்பாற்றாது” என்னும் இறைவசனத்தை ஓதுகையில் அழத் தொடங்கினார்கள். அழுது அழுது அவர்களுடைய விழி கள் இரண்டும் பூத்துவிட்டன’ என ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்.
ஒருமுறை வழியில் கிடந்த ஒரு தானியத்தைக் கையிலெடுத்துக் கொண்டார்கள். அதனை ஏக்கத்தோடு பார்த்தவாறு ‘நானும் இதுபோன்ற மதிப்பற்ற தானியமாக இருந்திருக்கக் கூடாதா? நான் பிறக்காமலேயே இருந்திருக்கக் கூடாதா? என்னை என்னுடைய தாய் பெற்றெடுக்காமலேயே இருந்திருக்கக் கூடாதா?’ என்றெல்லாம் உருகத் தொடங்கினார்கள். அந்தளவுக்கு அவர்களுடைய உள்ளம் எந்நேரமும் இறைவனைப் பற்றிய பயத் திலும் அச்சத்திலும் உருகிக்கொண்டே இருக்கும். (கன்ஸுல் உம்மால் பாகம் 6 பக்கம் 245)
ஆக, எந்நேரமும் அவர்களுடைய உள்ளத்தை இறையச்சம் தாக்கிக் கொண்டே இருந்தது. ‘இவ்வுலகிலுள்ள யாவரையும் மன்னித்துவிட்டேன், ஒரேயொரு மனிதனைத் தவிர’ என்றொரு அசரீரி வானிலிருந்து கேட்டாலும் என்னை பயம் விடாது. அந்த ஒரு மனிதன் நானாகவும் இருக்கலாம் அல்லவா?’ என அவர்கள் வினவுவது வழக்கம். (கன்ஸுல் உம்மால் பாகம் 6 பக்கம் 245)
இறைத்தூதர் மீதும் அண்ணலாருடைய வழிமுறையிலும் பேரார்வம்
உமரவர்கள் இறைவனின் தூதரை வெகுவாக நேசித்தார்கள். தம்முடைய உறவினர்கள், பெற்றெருடுத்த பிள்ளைகள், மனைவி, ஏன் தம்முடைய இன்னுயிரை விடவும் அண்ணலாரை அதிகமாக நேசித்தார்கள். தாம் சம்பாதித்த பொருட்கள், செல்வம், சொத்து அனைத்தையும் தம்முடைய உற்றார் உறவினர்கள் யாவ ரையும் இறைத்தூதருக்காக அர்ப்பணிக்க எந்நேரமும் சித்தமாக இருந்தார்கள்.
உமரின் தாய்மாமா ஒருவருடைய பெயர் ஆஸ் இப்னு ஹிஷாம். பத்ருப் போரில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாமுக்கும் எதிராக அவர் களத்திற்கு வந்தார். அவரை உமரவர்களே வெட்டிக் கொன்றார்கள்.
ஒருமுறை அண்ணலார் தம்முடைய அனைத்து மனைவிகளை யும் தலாக் விடுத்து விட்டதாக செய்தி பரவியது. உண்மை நிலையை அறிவதற்காக உமர் அண்ணலாரைத் தேடிச் சென்றார்கள். பன்முறை முயற்சித்தும் உமருக்கு அனுமதி கிடைக்க வில்லை. ‘அண்ணலே, ஹஃப்ஸாவிற்காக பரிந்துபேச நான் வந்துள்ளதாக எண்ணவேண்டாம். தாங்கள் ஆணையிட்டால் இறை வன் மீது சத்தியமாக, ஹஃப்ஸாவை கொன்றுபோட தயாராக இருக்கிறேன்’ எனக் கூறினார்கள். (ஃபத்ஹுல் பாரி, பாகம் 9 பக்கம்
எந்தளவுக்கு அண்ணலாரை நேசித்தார்கள் எனில், அண்ணலார் மறைவுற்ற செய்தியை நம்பவும் அவருடைய மனம் இடம் தரவில்லை. ‘என்னுடைய நேசத்திற்குரிய தூய ஆத்மா மறைவுற்றதாக யாரேனும் துணிந்து கூறினால், அவரை இக்கணமே கொன்று விடுவேன்’ என மஸ்ஜிதுந் நபவியின் வாசலில் நின்று கர்ஜித்தார்கள்.
மறைவிற்குப் பிறகு எப்போது அண்ணலாருடைய நினைவு வந்தாலும் உமரவர்களின் கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்தோடும். சிரியா பயணததின்போது பைத்துல் முகத்தஸ் பள்ளியில் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பாங்கு கொடுத் தார்கள். அதைக்கேட்ட மாத்திரத்திலேயே உமரவர்களுக்கு அழுகை பொங்கியது. தாங்கமாட்டாது அழத் தொடங்கினார்கள். அழுது அழுது விம்மி விம்மி ஒரு கட்டத்தில் விம்மல் ஒலியே வெளிவராது நின்றுவிட்டது. (ஃபுதூஹுஷ் ஷாம், அஸ்ரீ, பைதுல் முகத்தஸ் வெற்றி)
இறைத்தூதரின் வழிமுறைகளைப்பின்பற்றுவதில் பேரார்வம் காட்டினார்கள். உணவு, உடைகள், அமர்வு, நடை, பயணம் என எல்லா வழிகளிலும் இறைத்தூதரை அப்படிக்கு அப்படியே பின்பற்றினார்கள்.
அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போதும் எளிமையான வாழ்வையே மேற்கொண்டார்கள். ஆகையால், ரோமப் பேரரசு, பாரசீகப் பேரரசு போன்ற உலகை ஆட்டிப்படைத்த பேரரசுகளை வென்று தம்முடைய காலடியின் கீழ் வீழ்த்தியபோதும் உமரவர்கள் எளிமையான வாழ்க்கையையே ‘தந்தையே தங்களுக்கு இறைவன் எல்லாவகையான வசதி வாய்ப்பையும் அளித்துள்ளான். அப்படியிருக்கும்போது தாங்கள் ஏன், மெல்லாடைகளை அணியக்கூடாது? மிருதுவான உணவை அருந்தக்கூடாது?’ என ஒருமுறை ஹஃப்ஸா ரழியல்லாஹு அன்ஹா வினவினார்கள்.
‘இறைவனின் தூதர் எங்ஙனம் வாழ்ந்தார்கள் என்பதை மறந்துவிட்டாயா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நான் என் மதிப்பிற்குரிய அண்ணல் வாழ்ந்ததைப் போன்றே வாழ்வேன். மறுமையிலும் அண்ணலாருடைய தோழமையை கைக்கொள் வேன்’ என பதிலளித்தார்கள் உமரவர்கள். தொடர்ந்து அணணலாருடைய வாழ்க்கையைப் பற்றி பல்வேறு விஷயங்களை நினைவு கூர்ந்து கொண்டே இருந்தார்கள். அதைக்கேட்டு ஹஃப்ஸா அவர்களுக்கு தாங்கமுடியாத அழுகை பொத்துக்கொண்டு வந்துவிட்டது. (கன்ஸுல் உம்மால் பாகம் 2 பக்கம் 239)
இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த செயலை அவ்வண்ணமே செய்ய வேண்டும் எனபதில் மிகந்த அக்கறை காட்டினார்கள். ஒருமுறை அண்ண லார் துல்ஹுலைஃபா என்னுமிடத்தில் இரண்டு ரகஅத் தொழு தார்கள். அதேபோன்று உமரும் அவிவிடத்தில் இரண்டு ரகஅத் தொழுதார்கள். ஏன் இவ்விடத்தில் தொழுகை? என்றொருவர் வினவியதற்கு ‘ஏனெனில் இங்கு அண்ணலார் தொழுதுள்ளார்கள்’ என பதிலளித்தார்கள்.
உலகத்தில் பற்றின்மை
உலகத்தையோ உலகப் பொருட்களையோ ஈட்டுவதில் உமரவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஒருமுறை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருக்கு சிலபொருட்களை அளிக்க முன்வந்தபோது ‘என்னைவிட தேவை உடையோர் பலர் உள்ளார்கள். ஆகை யால், அண்ணலாரே! அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்’ எனக் கூறிவிட்டார்கள். ‘முதலில் இதனைப் பெற்றுக் கொள்ளுங்கள். பிறகு, நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அளித்து விடுங்கள்’ என அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். இத்தகவல் ஸஹீஹ் முஸ்லிம் நூலில் பதிவாகியுள்ளது. அபுதாவுது கிதாபுஸ் ஸகாத் பாடத்தி லும் இடம் பெற்றுள்ளது.
‘இஸ்லாமை ஏற்றுக்கொண்டதிலும் ஹிஜ்ரத் செய்ததிலும் பலபேர் உமரை முந்திக் கொண்டார்கள். ஆனால், உலகப் பற் றற்ற தன்மையிலும் போதுமென்ற மனப்பான்மையிலும் அவர் யாவரையும் விட முதலிடத்தில் இருந்தார்’ என தல்ஹா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
ஒருமுறை அன்னை ஆயிஷா அவர்களும் அன்னை ‘ஹஃப்ஸா அவர்களும் ‘அமீருல் முஃமினீன் அவர்களே! தங்களைச் சந்திப் பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் பெருமனிதர்களும் தூதுக் குழுக்களும் வந்துகொண்டே உள்ளன. ஆகையால், தாங்கள் தங்கள் நிலைக்குப் பொருத்தமான உயர் ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள்’ என ஆலோசனை பகர்ந்தார்கள்.
‘நீங்கள் இருவரும் முஃமின்களின் அன்னையராக இருந்தும் உலகை ஈட்டும் ஆலோசனையை வழங்குகிறீர்களே! என்ன வென்று சொல்வது?’
‘ஆயிஷாவே, அண்ணலாரின் வாழ்க்கையை மறந்துவிட் டாயா? உன்னுடைய வீட்டில் ஒரே ஒரு துணிதான் இருக்கும். அதனை நீங்கள் பகலில் விரித்துப் பயன்படுத்திக் கொள்வீர்கள். இரவில் அதனையே படுக்கையாகவும் பயன்படுத்திக் கொள்வீர்கள்’
‘ஹஃப்ஸாவே, ஒருமுறை நீ படுக்கையை இரண்டாக மடித்துப் போட்டுவிட்டாய். அதன் காரணமாக அன்றிரவு அண்ணலாருக்கு நன்றாக தூக்கம் வந்துவிட்டது. இரவில் எழுவேயில்லை. அதிகாலையில் பிலால் வந்து தொழுகைக்காக எழுப்பியபோது அண்ணலார் அவர்கள் உன்னையழைத்து, என்ன செய்தாய்? படுக்கையை மடித்துப் போட்டாயா? காலைவரை தூங்கிக் கொண்டே இருந்துவிட்டேனே, உலகத்தின் வசதி வாய்ப்பு களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? படுக்கையின் சுகத்தில் அலட்சியமாக இருந்துவிட்டேனே?’என வினவினார்கள். அதனை நீ மறந்து விட்டாயா?’ (கன்ஸுல் உம்மால் பாகம் 6 பக்கம் 350)
உமரவர்களின் உணவு மிகவும் எளிமையானதாக இருந்தது. சாதாரணமான ரொட்டியும் ஒலிவ எண்ணையும் தான் அவ்வுணவு. யாரேனும் விருந்தினர்கள் வருகை தந்தால் அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். இப்படிப்பட்ட உணவை அவர்கள் சாப்பட்டுப் பழகியே இருக்க போதுமென்ற மனப்பான்மை அவர்களிடத்தில் மிகவும் இருந்தது. ஆட்சிப்பொறுப்பேற்ற பின், பல மாதங்கள்வரை பொது நிதியில் இருநது யாதொரு ஊதியத்தையும் அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. வீட்டிலோ கஷ்ட ஜீவனம். ஸஹாபாக்கள் தாமாக அவர்களுடைய நிலையைப் புரிந்துகொண்டு சாதாரண மனிதர் ஒருவரின் வருமானம் அளவுக்கு மதிப்பூதியத்தை கலீ ஃபாவுக்கென நிர்ணயித்தார்கள். ‘ஓர் அநாதைக்கு பொது நிதி யிலிருந்து எவ்வளவு வழங்கப்படுகின்றதோ அதே அளவுதான் எனக்கும் பொது நிதியில் இருந்து பங்கிருக்கின்றது’ என உமரவர் கள் கூறுவது வழக்கம். (கன்ஸுல் உம்மால் பாகம் 6 பக்கம் 320)
தம்முடைய வீட்டுச் செலவினங்களுக்காக பொது நிதியில் இருந்து தினந்தோறும் இரண்டு திர்ஹம்களைப் பெற்றுக் கொள் வது வழக்கம். ஒருமுறை ஹஜ் காலத்தில் இவ்விரண்டு திர்ஹம்களும் செலவாகிவிட்டன, தேவையில்லாமல் செலவு செய்து விட்டோம், (இஸ்ராஃப்) வீண்செலவு செய்துவிட்டோம் என அவர்கள் வருந்தினார்கள். (அஸதுல் காபா, பா4
அணிந்திருக்கின்ற ஆடைகள் கிழிந்துவிட்டாலும் பொது நிதியிலிருந்து பெறக்கூடாது என்பதற்காக அதனைத் தைத்துப் போட்டுக்கொள்வார்கள். ஒட்டுக்கு மேல் ஒட்டுக்கள் காட்சி அளிக்கும்.
ஒருமுறை ஜும்ஆ உரையாற்றியபோது அவருடைய ஆடையில் பன்னிரெண்டு ஒட்டுக்கள் தென்பட்டன என ஹஸன் அவர்கள் அறிவிக்கிறார்கள். (கன்ஸுல் உம்மால் பாகம் 6 பக்கம் 347)
ஒருமுறை உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது தேனை அருந்துமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தார்கள். அச்சமயம் பொதுநிதி யில் தேன் இருந்தது. ஆயினும் மக்களுடைய அனுமதியைப் பெறாமல் அதனை எடுத்துப் பயன்படுத்த அவர்கள் முன்வரவில்லை. பள்ளிவாசலில் எல்லோரையும் ஒன்று கூட்டி அனுமதியைக்கோரினார்கள். அனுமதி கிடைத்தபிறகே தேனைப் பயன் படுத்தினார்கள். (தபக்காத் இப்னு சஅத் மூன்றாம் பாகம் பக்: 198)
தாம் உயிருக்கு உயிராக நேசித்த அண்ணல் நபிகளார் ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் உமரவர்களின் பெருவிருப்பமாக இருந்தது. அதற்காக அவர்கள் முன் கூட்டியே அன்னை ஆயிஷாவிடம் அனுமதியைப் பெற்றிருந் தார்கள். ஆயினும் கிலாஃபத் பொறுப்பில் உள்ளதால் அப்பொறுப்பை மனதில் கொண்டு ஆயிஷா அனுமதி வழங்கி யிருக்கலாம் எனத் தோன்றியதால், தன்னுடைய மகனிடம் மரணத்திற்குப் பிறகு மறுபடியும் ஒருமுறை ஆயிஷாவிடம் அனுமதியைக் கோர வேண்டும். அப்போது அனுமதி கிடைத்தால்தான் அங்கே அடக்கம் செய்யவேண்டும். இல்லையெனில் முஸ்லிம்களின் பொது மையவாடியிலேயே அடக்கம் செய்யவேண்டும் என உபதேசித்தார்கள். இறக்கும்போதும் இறையச்சத்தை அவர்கள் விட்டுவிட வில்லை.
பணிவும் தாழ்மையும்
ஒருபக்கம் உமரின் பெயரைக் கேட்டாலே சீசர் மற்றும் கைஸரு டைய அதிகாரிகள் நடுங்கினார்கள். அதேசமயம் இன்னொரு பக்கம் உமரவர்கள் படுஎளிமையாக காட்சியளித்தார்கள். தோள்களில் குடுவைகளைச் சுமந்துகொண்டு விதவைகளின் வீடுகளுக்கு தண்ணீர் கொண்டுபோய் சேர்ப்பது அவருடைய வழக்கமாக இருந்தது. முஜாஹிதீன்களுடைய வீடுகளுக்குத் தேவையான பொருட்களைத் தேமே கொண்டுபோய் கொடுப்பார்கள். சமயங்களில் களைத்துப்போய் மஸ்ஜிதுந் நபவியின் திண்ணை யில் உட்கார்ந்து விடுவார்கள்.
பல தருணங்களில் பயணம் கிளம்பும்போது படுக்கையையோ கூடாரத்தையோ கையில் கொண்டுபோக மாட்டார்கள். எங்கே யாவது கண்ணுக்குத் தென்படும் நிழலான இடங்களில் மரங்களின் கீழ் படுத்துக் கட்டாந்தரையில் உறங்கி விடுவார்கள்.
ஒருமுறை அரசாங்கப் பொது நிதியில் இருந்த ஒட்டகங் களுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார்கள். ‘அமீருல் முஃமினீன் அவர்களே! இப்பணியை வேறு யாரேனும் வேலைக்காரர் களிடம் அளிக்கக் கூடாதா?’ என்றொருவர் வின வினார்.
‘என்னைவிட சிறந்த அடிமை யார் இருக்க முடியும்? முஸ்லிம் களுக்கு தலைமைப் பொறுப்பு வகிப்பவன் அவர்களுடைய சிறந்த பணியாளாகவும் இருந்தாக வேண்டும்’ என அதற்கு பதிலளித்தார்கள். (கன்ஸுல் உம்மால் பாகம் 6 பக்கம் 353)
இரவுப் பொழுதுகளில் உறங்காடல் ஊர் சுற்றிவருவது உமரவர்களின் அன்றாட வழக்கம். அப்போதுதான் மக்களுடைய தேவைகளை அறிந்து அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்க முடியும். அவ்வண்ணம் ஒருநாள் உலா வந்து கொண்டிருந்தபோது கிராமவாசி ஒருவரின் கூடாரத்தில் இருந்து அழுகைச் சத்தம் வந்துகொண்டிருந்தது. உள்ளே அம்மனிதரின் மனைவி பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்தார். உடன் உமரவர் கள் தமது வீட்டிற்குத் திரும்பினார்கள். தம்முடைய மனைவி உம்மு குல்ஸூம் அவர்களை அழைத்துக்காண்டு அங்கு சென் றார்கள். உள்ளே நல்லபடியாக பிரசவம் நடைபெற்று முடிந்தது.
‘அமீருல் முஃமினீன் அவர்களே! தங்களுடைய நண்பருக்கு சுபச்செய்தி சொல்லிவிடுங்கள்’ என உள்ளில் இருந்து குரல் வந்தது.அமீருல் முஃமினீன் என்னும் சொல்லக் கேட்டதும் அந்த மனிதர் பதறியடித்துக் கொண்டு எழுந்து நின்றார்.
‘பயப்படாதீர்கள். ஒன்றும் ஆகவில்லை. நாளைக் காலையில் என்னிடம் வந்து குழந்தைக்கான உதவித் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என அமைதியாக உமர் கூறினார்கள். (கன்ஸுல் உம்மால் பாகம் 6 பக்கம் 343)
ஒரு சாதாரண குடிசை வீட்டிற்குள் அமீருல் முஃமினீன் ஒரு நாள் அதிகாலையில் போகக் கண்டேன். அங்கு இந்நேரத்தில் என்ன வேலை? என விசாரித்தபோது அவ்வீட்டில் வயதான பெண்மணி வசித்து வருவதாகவும் வாரத்தில் ஒருமுறை அவ ரைச் சந்தித்து நலம் விசாரித்து வேண்டியவற்றை தருவித்துக் கொடுப்பது வழக்கம் எனவும் அறியவந்தது என தல்ஹா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சிறப்புகளும் உயர்ஒழுக்கங்களும்
இஸ்லாமின் வருகைக்கு முன்பாக அரபுலகில் எழுதப்படிக்கத் தெரிந்தோர் மிகவும் குறைவாகவே இருந்தார்கள். இல்லை எனச் சொல்லும் அளவுக்கே நிலைமை இருந்தது. அண்ணலார் நபியாக அருளப்பட்டபோது கிட்டத்தட்ட பதினேழு நபர்களுக்குத் தான் எழுத்தறிவு இருந்தது. அக்காலத்திலேயே உமரவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தது. (பிலாதுரி)
கவிதைகளில் உமரவர்கள் கரை கண்டிருந்தார்கள். அரபு இலக்கியமும் யாப்புப் பாடல்களும் நன்றாக தெரிந்திருந்தன. ஆகையாற்றான், உமருடைய பல்வேறு சொற்றொடர்களும் உரைநடைகளும் மக்களிடையே புகழ்பெற்ற வழக்காட்டுச் சொற்களாக திகழ்ந்தன.
இயல்பாகவே மதிநுட்பமும் தொலைநோக்குப் பார்வையும் பெற்றவராக திகழ்ந்தார்கள். எத்தனையோ பல இஸ்லாமிய சட்டங்கள் உமரின் கருத்துகளுக்கு ஏற்றாற்போன்று இயற்றப் பட்டன.
பத்ருப்போரில் பிடிபட்ட கைதிகளைக் குறித்து உமர் கூறிய கருத்துக்கு ஒப்ப இறைவேதம் வஹி இறக்கியருளப்பட்டது. மதுவைத் தடை செய்வது, முஃமின்களின் அன்னையர் ஹிஜாப் அணிந்தாகவேண்டிய கட்டளை, மகாமே இப்ராஹீம் என்னுமிடத்தில் தொழுகும் ஆணை போன்ற இறைசட்டங்கள் யாவும் உமரின் கருத்துக்கு ஒப்பாகவே இறங்கின. அதாவது இறைவனி டமிருந்து இவை தொடர்பான வஹி இறங்கு முன்பாகவே உமரவர்கள் அண்ணலாரிடம் இவைகுறித்து கருத்து தெரிவித்திருந்தார்கள். (தாரீக்குல் வான்மறை குர்ஆனில் இருந்து சட்ட ஆதாரங்களை இனங்கண் டறிவதில் நிகரற்ற ஆற்றல் பெற்றவராக விளங்கினார்கள். இராக் வெற்றி கொள்ளப்பட்ட போது, அந்நிலப்பகுதிகள் யாவும் படைவீரர்களுக்கு உடமையாக்கப்பட வேண்டும், அங்கு வசிக்கும் மக்கள் யாவரும் படைவீரர்களுடைய அடிமைகளாகக் கருதப்பட வேண்டும் என்றொரு சர்ச்சை எழுந்தது. உமரவர்கள் ‘இல்லை, நிலபுலன்கள் எதுவும் படைவீரர்களுக்கு வழங்கப்பட மாட்டாது, அங்கு வாழும் மனிதர்கள் எவரும் அடிமைகளாக்கப்பட மாட்டார்’ என்றார்கள். அவை யாவும் பொதுச் சொத்துகள் என தீர்ப்பு வழங்கினார்கள். தமது கருத்துக்கு ஆதாரமாக கீழ்வரும் இறைவசனத்தை எடுத்தோ தினார்கள்.
مَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْ أَهْلِ الْقُرَى
“அவ்வூராரிடமிருந்து தனது தூதருக்கு இறைவன் மீட்டுக் கொடுத்தவை இறைவனுக்கும்அவனுடைய தூதருக்கும் உரியதாகும்” (அல்குர்ஆன்)
ஷஹாதத் – வீரமரணம்
முகீரா இப்னு ஷைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒரு பாரசீக அடிமை இருந்தான். அவனுடைய பெயர் பைரோஸ். அபு லுஃலுஃ என அவன் அழைக்கப்பட்டான். தன்னுடைய முதலாளியைப் பற்றி அவன் உமரிடம் முறையிட்டான். தன்னுடைய சக்திக்கு மீறிய வேலைகளை தன்னிடம் வாங்குவதாகக் கூறினான்.
உனக்கு என்னவெல்லாம் தெரியும்? என விசாரித்தார்கள்.தனக்கு பல்வேறு கைத்தொழில்கள் தெரியுமென அவன் கூறி னான். அவனுடைய குற்றச்சாட்டு பொருத்தமற்றதாகவும் முறை கேடானதாகவும் இருந்ததால் அதனை உமரவ்ரகள் தள்ளுபடி செய்துவிட்டார்கள்.
பழிவாங்கும் நோக்கில் மறுநாள் அவன் பள்ளிவாசலில் மறைந்திருந்து உமரை குறுவாளால் குத்தினான். உமரவர்கள் கீழே விழுந்தார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் அவர்கள் தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். (முஸ்தத்ரக் பா: 1பக் 91)
காயம் மிகவும் ஆழமானதாக இருந்தது. மக்களுடைய வற் புறுத்தலின் பேரில் ஆறுபேர் கொண்ட பட்டியல் ஒன்றை தயாரித்து உமரவர்கள் வழங்கினார்கள். அவ்வறுவரில் ஒருவரை கலீஃபாவாக நியமிக்குமாறு ஆலோசனை பகர்ந்தார்கள். மற்ற ஐவரும் ஒருமித்து யாரை ஏற்கிறார்களோ அவரை கலீஃபா ஆக்குமாறு கூறினார்கள். அவ்வறுவரின் பெயர்களாவன- அலீ ரழியல்லாஹு அன்ஹு, உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு, ஜுபைர் ரழியல்லாஹு அன்ஹு, தல்ஹா ரழியல்லாஹு அன்ஹு, சஅத் இப்னு அபீ வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு. அதன்பின்பு, அன்னை ஆயிஷாவிடம் அடக்கம் செய்வதற்கான அனுமதியைக் கோரி மறுபடியும் ஆளனுப்பினார்கள். (முஸ்தத்ரக் பா1 பக்:)
தேவையான முக்கியமான உபதேசங்களை அளித்தபிறகு, மூன்று நாள்கள் உயிரோடு இருந்தார்கள். முஹர்ரம் மாதம் முதல் நாள் சனிக்கிழமை அன்று ஹிஜ்ரீ 24ஆம் ஆண்டு ஷஹாதத் என்னும் உயர்நிலையை அடைந்தார்கள். தாம் வெகுவாக நேசித்த தன் தலைவர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
-சையத் அப்துர் ரஹ்மான் உமரி