Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நிஜத்தில் முத்தமிடும்போது விபச்சாரி; அதுவே திரையில் செய்யும்போது நடிகை! இதுவா சமுதாயம்?

Posted on May 30, 2015 by admin

நிஜத்தில் முத்தமிடும்போது விபச்சாரி; அதுவே திரையில் செய்யும்போது நடிகை! இதுவா சமுதாயம்?

நாம் அறிந்து ஒரு பெண் இன்று பக்கத்துவீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள். நாளை அடுத்த வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள், மறுநாள் எதிர் வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள் என்று வைத்துக்கொள்வோம். இவளை சமூகம்  என்னவென்று அழைக்கும்? விபச்சாரி என்றுதானே.

ஆனால் இதே காரியத்தை ஒரு பெண் திரையில் செய்தால் அப்பெண்ணிற்குப் பெயர் நடிகை. அது ஆணாக இருந்தால் அவன் நடிகன். அவர்கள் செய்வது கலைசேவை!

ஒரே காரியத்தை நிஜத்தில் செய்யும்போது பழிக்கும் சமுதாயம்; அந்த நிஜத்தையே காமெராவில் சுருட்டி நிழலாகக் காட்டினால் அதற்கு கைதட்டுகிறது. இவர்கள் போடும் எச்சங்களை உண்டு பிழைக்கும் அந்தக் கூத்தாடிகள் நாளடைவில் இந்த மக்களின் அன்புக்குரியவர்களாக… இஷ்ட தெய்வங்களாக…. மாறி விடுகிறார்கள்.

எந்த விபச்சாரத்தை தனது சகோதரியோ, மகளோ, மனைவியோ செய்யும்போது இவர்களுக்கு தலைவெடித்து விடுமோ அதே சமூகம் இந்த விபச்சாரிகளை தலையில் ஏற்றி வைத்துக் கொண்டு போற்றிப் புகழ்கிறது.

எந்த அளவுக்கென்றால் இவர்களுக்கென சிலைகள் வடிக்கப் படுகின்றன, கோவில்கள் கட்டப்படுகின்றன, வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சற்றும் பொறுப்புணர்வே இல்லாத சுரணையற்ற இந்த சமூகப் போக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் ஓரளவுக்குக் காணப்பட்டாலும் மிகமிகத் தீவிரமாக காணப்படுவது நம் தமிழகத்தில்தான் என்பதற்கு சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

இதை அறியாமையின் சிகரம் என்பதா? சமூக சீரழிவின் உச்சகட்டம் என்பதா?

சாந்தை இணையம் திரை மூலம் ஆபாசத்தையும் காமவெறியையும் கொலைவெறியையும் விதைத்து சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் வழிகெடுக்கும் இந்த திரைக் கூத்தாடிகளுக்கு பெரிய செயற்கரிய சாதனை செய்தது போன்று, மத்திய மாநில அரசுகளின் பாராட்டுக்கள்- விழாக்கள் -கேடயங்கள்- விருதுகள் .பல தரப்படுகின்றன. இவை அனைத்தும் நாட்டுக்காக உழைக்கும் மக்களின் வரிப்பணங்களில் இருந்து வழங்கப் படுபவை.

இது போக, வீர தீரர்களாக சாகச சூரர்களாக தியாகிகளாக பத்தினிப் பெண்களாக கற்புக்கரசிகளாக ‘நடிக்கும்’ இந்தக் கூத்தாடிகள் குவிக்கும் செல்வங்களுக்கு கணக்கும் இல்லை வழக்கும் இல்லை. இவர்களால் ஏமாற்றப்படும் சமூகம் இவர்களுக்குக் கொடுக்கும் அந்தஸ்த்தோ அளவிடமுடியாதது.

இந்த அநியாயத்திற்குத் தாரைவார்க்கும் சுயநலச் செய்தி ஊடகங்கள் சாந்தை இணையம் ஒருபுறம். இவர்களின் அந்தரங்க அசிங்கங்களை கிசுகிசுக்களாகப் பிரசுரித்து கொள்ளையடிக்கும் பிணந்தின்னி வல்லூறுகள் போன்றவர்கள் அவர்கள்!.

இந்தத் திரைக்கூத்தாடிகள்தான் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சாதனங்களுக்குத் தரக்கட்டுப்பாட்டு நிபுணர்கள்!சாந்தை இணையம் விளம்பரங்களில் இவர்கள் தலைகாட்டி சான்றிதழ் கொடுத்தால்தான் அவை விற்பனை ஆகுமாம்!

இந்த இழிபிறவிகளின் நடை உடை பாவனைகள்தான் வளரும் சமூகத்தின் முன்மாதிரிகளாம்! .இவர்கள் ஆதரவு கொடுத்தால்தான் நாட்டை ஆளும் மக்களின் பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப் படுவார்களாம்!

இவர்கள்தான் மாறிமாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஒருபுறம் இலவசங்களைக் காட்டி மறுபுறம் நாட்டுவளங்களை தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வார்களாம்! என்ன ஒரு அவமானம்!

source: http://naanparkumulakm.blogspot.in/2013/07/blog-post.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 6

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb