விஞ்ஞானத்தின் வாலில்
ஜியாவுத்தீன் சர்தார்
Don’t Miss it, MUST READ
[ முஸ்லிம் விஞ்ஞானிகளின் ஒரு தலைமுறையே அறிவியல் சொல்வது அனைத்தும் உண்மையோ உண்மை என்று நம்புகிறது. அதே நேரத்தில் யாராவது அறிவியலை விமர்சித்தாலோ, சீர்படுத்த நினைத்தாலோ அவர் மீது கேள்விக் கணைகளை தொடுக்கின்றது.
அறிவியல் அனைத்தும் நன்மைக்கே என்று நம்புவதானது, அறிவியல் மனித குலத்துக்கே சேவை செய்கின்றது. எனவே முஸ்லிம் சமூகத்தின் தேவைகளையும் அது பூர்த்தி செய்து தனதாக்கிக் கொள்ளும் என்கிற தீய முடிவின் பால் இட்டுச் செல்லும்.
இறைவனின் வஹியை நீரூபிக்க அறிவியலின் அவசியம் எல்லாம் தேவையில்லை. ஒரு வேலை ஏதேனும் ஒரு அறிவியல் உண்மை குர்ஆனோடு ஒத்துப் போகவில்லை என்றால், அல்லது குர்ஆன் குறிப்பிடுகின்ற ஒன்றை நவீன அறிவியல் தவறு என்று நிரூபித்து விட்டது என்றால் குர்ஆன் ‘பாதில்’ (நஊதுபில்லாஹ்) ஆகிவிடுமோ?
இப்போது குர்ஆனில் கூறப்பட்டுள்ள, தற்கால அறிவியலால் நிரூபிக்கப்பட்ட ஒரு கருத்து, நாளை தவறு என்று ஒதுக்கப்பட்டு அவ்விடத்தை வேறொரு கருத்து பிடித்துக் கொண்டால் – என்ன ஆகும்?
உண்மைக்கான ஒரு தேடலே அறிவியல். அதனுடைய கண்டுபிடிப்புகளும், உண்மைகளும் குர்ஆனுடைய வசனங்களை போன்று சரியானவையும் அல்ல. ஆகவும் முடியாது.
“இல்ம்” குர்ஆனோடு முடிந்துவிடுவதில்லை, குர்ஆனில் இருந்து தொடங்குகின்றது.]
விஞ்ஞானத்தின் வாலில்
ஜியாவுத்தீன் சர்தார்
நவீன அறிவியலின் வனப்பையும், பகட்டையும் கண்டு பயங்கரமாக பீதியடைந்து, கதிகலங்கிப்போன முஸ்லிம்கள் சிலர் குர்ஆனுல் கரீம் உண்மையான இறைவேதம் தான் என்பதை நிரூபிப்பதற்காக அறிவியல் ஆதாரங்களைத் தேடி ஓடுகின்றனர். இது மிகவும் அபாயகரமான ஒரு முயற்சியாகும்.
இத்தகைய கண்ணோட்டத்தில் குர்ஆனைப் படிப்பதானது, எல்லா அறிவியல் உண்மைகளும் குர்ஆனில் பொதிந்து உள்ளன என்கிற தவறான கருத்தோட்டத்தை உருவாக்கிவிடும். சில இயற்கையான உண்மைகளை குர்ஆன் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது என்பது என்னவோ மெய்தான். ஆனாலும் குர்ஆன் ஓர் அறிவியல் பாடப்புத்தகம் அல்ல! மாறாக அது நேர்வழி காட்டும் இறைமறை.
இன்னும், இத்தகைய கண்ணோட்டம் அறிவியலுக்கு ‘புனித’ அந்தஸ்த்தைக் கொடுப்பதாகவும், அதன் பொருந்திவராத கொள்கைகளுக்கு போக்கிடம் அளிப்பதாகவும் அமைந்துவிடும். நவீன அறிவியல் (Objective) ஆனதோ, எப்புறமும் சாராது நடுநிலையானதோ அல்ல! அதற்குக் கீழ் ஒரு குறிப்பிட்ட பண்பாடு, கலாச்சாரம், ஒரு குறிப்பிட்ட வாழ்வியல் கொள்கை வளர்ந்து பெருகும் வண்ணம் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அறிவியலையும், குர்ஆனையும் இணைத்துப் படிக்கும் இத்தகைய முறையில் நவீன அறிவியலுக்கு நாமறியா வண்ணம், வான்மறை வேதங்களின் உயர்வும், நீடித்த நிலைத்தன்மையும் சிடைக்கின்றது, நன்மையையும், தீமையையும் தெளிந்து தெரிவிக்கின்ற நடுநாயகமான அந்தஸ்த்து அதற்குக் கிடைத்து விடுகின்றது, இன்னொரு புறமோ, அதன் பின்னால் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு இறையவேதம் தள்ளப்படுகின்றது. உண்மை என்னவென்றால், குர்ஆனை நிரூபிப்பதற்கு நவீன அறிவியலின் அவசியம் ஒன்றும் தேவையில்லை.
மனிதக் கருவியல் குறித்து குர்ஆன், ஹதீஸ் கூறும் உண்மைகளைப் பற்றி கனடா அறிவியல் துறையைச் சேர்ந்த டாத்டர் கீத்மூர் என்பவர் கூறியுள்ளதை இங்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.ஏழாம் நூற்றாண்டில் அளிக்கப்பட்ட இவ்விளக்கங்களைக் கண்டு நான் வியந்து போயுள்ளேன். இவ்வசனங்கள் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டவை என்று முஸ்லிம்கள் நம்புவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை’ என்று அவர் கூறுகிறார்.
முஸ்லிம் டாக்டர்களையும், விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் துள்ளிக்குதிக்கச் செய்யும் அளவுக்கு அப்படி என்ன தான் கீத்மூர் கண்டுபிடித்துவிட்டார்?
குர்ஆனிலும், ஹதீஸிலும் விளக்கப்பட்டள்ள மனிதக் கருவியல் உண்மைகள்’ என்ற தலைப்பில் அவருடைய கட்டுரை முதன்முறையாக ஏழாம் சவூதி மெடிக்கல் கான்ஃபரன்ஸ்சில் சமர்ப்பிக்கப்பட்டது. இது வரைக்கும் அக்கட்டுரை பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டு விட்டது. அதில் நவீன மருத்துவம் கூறும் கருவியல் உண்மைகளை குர்ஆன் வசனங்களின் பார்வையில் கரு வளர்ச்சிப் படித்தரங்களின் மருத்துவப் படங்களோடு, சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்களின் விளக்கங்களோடும் கூறப்பட்டுள்ளது.
உதாரணமாக,
நாம் மனிதனை கலக்கப்பட்ட ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம். (அத்தஹ்ர் 2)
பெண்ணின் சினை முட்டையோடு ஆணுடைய இவ்விந்துத்துளி இரண்டறக் கலந்து விடுவதைத் தான் நுத்ஃபத்துன் அம்ஷாஜ்’ குறிக்கின்றது என்று மூர் கூறுகிறார். பெண்ணின் சினைமுட்டையோடு ஆணுடைய விந்தின் நுண்ணிய நீர்த்துளி இணைவதால் உருவாகும் ‘நுத்ஃபா’ பிறகு ‘அல்க்கா’வாக மாறுகிறது என்று அவர் மேலும் கூறுகிறார். அதற்கு உதாரணமாக கீழ்வரும் இயைவசனத்தை முன் வைக்கிறார்.
மனிதனை நாம் களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம். பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் (செலுத்தப்பட்ட) விந்தாக ஆக்கினோம். பிறகு அந்த விந்தினை இரத்தக்கட்டியின் வடிவத்தில் அமைத்தோம். பின்னர் அந்த இரத்தக் கட்டியை சதைக்கட்டியாய் ஆக்கினோம். பிறகு அச்சதைக்கட்டியை எலும்புகளாய் ஆக்கினோம். பிறகு அவ்வெலும்புகளைச் சதையில் போர்த்தினோம். பிறகு அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளரச் செய்தோம். பெறும் அருட்பேறுகள் அடையவன் ஆவான் அல்லாஹ். படைப்பாளர்களில் எல்லாம் மிக அழகான படைப்பாளன். (அல்முஃமினூன் 1214)
இந்த வசனங்களில் தனது கவனத்தைச் செலுத்திய மூர் ஒரு மென்மையான, பசை தடவப்பட்ட பிலாஸ்டிக்கை இருபத்தெட்டு நாட்கள் வளர்ச்சி கொண்ட ஒரு சிசுவைப் போல் மாற்றினார். அதனைத் தம் பற்களால் மென்று அடையாளங்களை ஏற்படுத்தினார். மெல்லப்பட்ட பிலாஸ்டிக், கருச்சிசுவின் கார்பன் காப்பி போல இருந்தது. அதில் சிசுக் குழந்தையின் மூட்டு இணைப்புகள் போன்று பற்களாலிடப்பட்ட அடையாளங்கள் தென்பட்டன.
மேலும் ஆராய்ந்ததில் ஆறு வாரங்களில் எலும்புகள் உருவாவதும், அதன் மேல் சதை போர்த்தப்படுவதும் துவங்குவதாக அறியப்பட்டது. ஏழாவது வார முடிவில் இவ்வெலும்புகள் கருவிலுள்ள சிசுவை மனித வடிவத்தில் மாற்றுகின்றன. நான்காவது வாரத்திலேயே கண்கள், காதுகள் உருவாகும் பணி துவங்கி விடுகின்றது.
ஆறாவது, வாரத்தில் அல்லது நாற்பத்தி இரண்டு நாட்களுக்குப் பிறகு ‘அலக்கா’வின் நிலை முற்றுப் பெற்ற பிறகு அவை (கண்ணுக்குத்) தென்படத் தொடங்குகின்றன. மூர் என்ன சொல்கிறார் என்றால், ‘இந்த படித்தரங்கள்’ எல்லாம் குர்ஆனுடைய விளக்கங்களோடு ஒத்துப்போகின்றன!.
கடைசியில் இதிலிருந்து நமக்கு என்ன தெரிகின்றது?
குர்ஆன் அறிவியல் உண்மைகளின் களஞ்சியம் என்றா?
இத்தகைய முயற்சிகளின் இலக்கு தான் என்ன?
வெளிப்படையாகப் பார்க்கும் போது குர்ஆன் கூறும் உண்மைகளோடு இணைத்து நவீன அறிவியலை மெய்ப்படுத்துவதோ அல்லது அறிவியல் உண்மைகளை முன்னிலைப் படுத்தி குர்ஆன் அல்லாஹ்வுடைய அருள்வாக்கு தான் என்று நிரூபிப்பதோ தீமையற்றதாகவும், அழகானதாகவும் தெரிகின்றது. அப்பாவித்தனமாக முஸ்லிம் ஆராய்ச்சியாளர்கள் இந்த வழிமுறையைப் பின்பற்றத் தொடங்கும் போது தான் அபாயகரமானதாக மாறிப்போகின்றது.
முஸ்லிம் அல்லாத ஆராய்ச்சியாளர்கள் இதை ஒப்புக்கொண்டு தூய உள்ளத்தோடு ஆய்வு செய்தால் பல தீயகரமான விளைவுகள் ஏற்படலாம். குர்ஆனையும், அறிவியலையும் ஒப்பிடுவதன் மூலம் பல குளறுபடிகள் ஏற்படலாம். பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு இறக்கி அருளப்பட்ட குர்ஆனில் உள்ள உண்மைகள் எல்லாம் சரியானவையே என்று நவீன அறிவியல் நிரூபித்தால்தான் குர்ஆன் இறைவனின் (வஹி) வேதம் என்பது நிரூபணமாகும். (தேடுவது தான் கிடைக்கும். கிடைப்பது தான் நிரூபணமாகும்) அதற்கு நேர் எதிராக நவீன அறிவியலுடைய கண்டுபிடிப்புகள் திருக்குர்ஆனில் பிரதிபலிப்பதைப் பார்க்கும் போது இயல்பாகவே நவீன அறிவியலுக்கு வான்மறையின், நீடித்து நிற்கும் வேதத்தின் அந்தஸ்தும் கிடைக்க வேண்டும்.
குர்ஆனைப் போலவே என்னுடைய வாதம் எளிமையானது. எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடியது. இதைப் பற்றி பிறகு விளக்கமாகக் காண்போம். இங்கே நாம் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். குர்ஆன் ஹிதாயத் நேர்வழி காட்டும் ஒரு நூல். அதை வேறு ஒன்றின் மூலம் நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை. முஸ்லிம்களைப் பொறுத்தவரை அது ஏற்கனவே வாய்மையானது. பாதுகாக்கப் பட்டது. நிலைத்த தன்மை உடையது.
அறிவியல் கண்ணோட்டத்தோடு குர்ஆனை அணுகுகின்ற எந்த ஒரு முயற்சியும், அறிவியலைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு இறைவனின் வேதத்தைத் தள்ளி விடும்!. சரியையும், தவறையும் தீர்மானிக்கக் கூடிய அளவுகோலாக அறிவியலை மாற்றி விடும். அத்தோடு அறிவியல் கருத்துக்கள் நடுநிலையானவை. வான்மறை அளவு நிலைத்த தன்மை கொண்டவை என்பதையும் நம் மூளைக்குள் திணித்துவிடும். குர்ஆனுடைய குறியீடுகளில், சைகைகளில், உவமான வசனங்களில் அறிவியலைத் தேடும் முயற்சியானது சில நேரங்களில் எல்லை மீறிச் சென்று விடும். அறிவுக்கு பொருந்தாது. சில நேரங்களில் குர்ஆனுக்கு நேர்எதிரான முடிவுகள் கூட எடுக்கப்படுகின்றன. இது தவறான, காரணங்களுக்குப் பின்னால் ஒளிகின்ற, குருட்டுத் தைரியம் ஆகும்!.
காரணங்களை முன்னிலைப்படுத்துகின்ற முஸ்லிம் ஆய்வாளர்கள் குர்ஆன் ஓர் அறிவியல் பெட்டகம் என்று தங்களுடைய வாதத்தைத் தொடங்குவதற்கு முன்னால், குர்ஆன் அறிவைப் போற்றுகின்றது. அறிவைத் தேடச்சொல்லி ஆர்வமூட்டுகின்றது, என்றெல்லாம் சொல்லிக் கொண்டு போவார்கள். உண்மைதான்!.
இறை நம்பிக்கையாளர்களிடம் இயற்கையைப் பற்றி சிந்திக்கத் தூண்டுகின்ற, அறிவியலை சரியாகப் பயன்படுத்துமாறு ஊக்கப்படுத்துகின்ற வசனங்கள் குர்ஆனில் 750 மொத்த வசனங்களில் எட்டில் ஒரு பாகம் உள்ளன. ஆனால் சட்டங்களைப் பற்றிய வசனங்களோ 250 தான்! தற்காலத்தில் நிரூபிக்கப்பட்ட பல்வேறு அறிவியல் உண்மைகளைப் பற்றியும் குர்ஆன் குறிப்பிடுகின்றது என்றெல்லாம் கூறுவார்கள்!
இது போன்ற காரணங்களை முன்னிலைப்படுத்தி குர்ஆனை அறிவியல் நூலாக ஆக்கும் முயற்சி 1960 க்குப் பிறகு தான் தொடங்கியது. ஆரம்ப காலத்தில் ‘குர்ஆனில் அகிலத்தைப் பற்றிய வசனங்கள்’ என்ற தலைப்பில் சிற்றேடு ஒன்று எகிப்பில் வெளியானது. (1961) அதைத் தொகுத்தவர் முஹம்மது ஜமாலுத்தீன் அல்ஃபதீ என்பவர், அந்நூலைப் படிக்கையில் ‘அல்ஃபன்தீ’க்கு கடுமையான தாழ்வு மனப்பான்மை என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதனால் தான் அவர் தற்காலத்தில் (1950 முதல் 1960 வரை) கண்டுபிடிக்கப்பட்டுள்ள எல்லா விண்ணியல் உண்மைகளும், கருத்துகளும் ஏற்கனவே குர்ஆனில் கூறப்பட்டுள்ளன’ என்று கூறுகிறார்.
குர்ஆனை அவர் மிகச் சிறந்த அறிவியல் வெளிப்பாடாகக் கருதுகிறார். (இது ஒரு ஆதாரமற்ற வாதம் ஆகும். ஏனெனில் அறிவியலில் வெளிப்பாடின் ஐனநயட வடிவமே பௌதீக ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. குர்ஆனில் இத்தகைய எந்த நஙரயவழைn னும் கிடையாது) இவ்வாறு குர்ஆனில் விண்வெளியைப் பற்றி வந்துள்ள எல்லா வசனங்களிலிருந்தும் அவர் நவீன விண்ணியல் உண்மைகளை விளக்கிக் காட்டுகிறார்.
உதாரணமாக,
‘அவன் உங்கள் பார்வையில் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி வானங்களைப் படைத்துள்ளான்.’ (லுக்மான் 10)
‘இரவு பகலை முந்திவிட முடியாது. ஒவ்வொன்றும் தத்தமது மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன.’ (யாஸீன் 40)
இவ்வசனங்களிலிருந்து அவர் எடுத்து உள்ள முடிவுகளாவன;
நம் தலைக்கு மேல் உள்ளது தான் வானம் என்பதை நாம் ஒப்புத் கொண்டால், நம்மைச் சூழ்ந்துள்ள முழு அகிலமும் வானம் என்றே பொருள்படும். பூமியை நாற்புறமும் சூழ்ந்துள்ள வெற்றிடத்தில் தொடங்கி கோள்கள், சூரியன், வேறு அண்ட வெளிகளில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்தும் அடங்கும். இவை அனைத்தும் தத்தமது பாதைகளில் இயங்குகின்றன. இதுதான் ‘வானம்’ ஆகும். இதனைப் படைத்தவன் அல்லாஹ்!
விண்ணில் இயங்கும் ஒவ்வொன்றும் தத்தமது பிரம்மாண்டமான அமைப்போடு செங்கற்களைப் போல் உள்ளன. ஒன்றன் பின் ஒன்றாக அவை உடைந்து கொண்டே செல்கின்றன. சுய ஈர்ப்பு, மற்றும் விண்வெளியின் மைய ஈர்ப்பு விசையின் காரணமாக அவை தமது பாதைகளில் துல்லியமாக இயங்கி வருகின்றன.
அரைக்கோள வடிவப் பாதையிலும், கோளவட்டப் பாதையிலும் அவை சுற்றிவருவதால் ஏற்படும் ‘ஈர்ப்புவிசை’யையும், ‘இழுவைவிசை’யையும் ‘நிலைநாட்டப்பட்ட தும்ண்களாக’ நாம் கருதலாம். நம்மால் அதை காணமுடியாததால் அது அடியோடு இல்லை என்று கூறிவிடமுடியாது. நம்மால் அதன் அளவையும், வேகத்தையும், விளக்கத்தையும் தர முடியும்! நம்மில் யாருக்காவது சாதாரண பார்வைப் புலனைவிட அற்புதமான பார்வைத் திறன் கிடைக்குமானால், மற்ற பொருட்களைப் பார்ப்பது போல அதையும் பார்க்கலாம்!’. (பக்கம் 21 22)
அத்தோடு நின்றுவிடவில்லை. சூழலையும் ஒரு தூணாக அல்ஃபன்தீ குறிப்பிடுகிறார். சூரிய ஒளிக்கதிரையும் (தனித் தனி ஒளிக் கதிர்களும் குட்டி குட்டித் தூண்கள் போன்றவை) ஒரு தூணாகக் கூறுகிறார். குர்ஆனுடைய வேறு பல வசனங்களிலிருந்து வெள்ளை அணுக்கள், ஹீமோகுலோபின், ஈத்தரின்இருப்பு, நட்சத்திரங்களின் பரிணாமம், மோதல் ஆகியவற்றையும் மெய்ப்படுத்துகிறார். பூமியல்லாத வேறு கோள்களிலும் படைப்பினங்கள் உள்ளன என்று குர்ஆன் கூறுவதையும் அறிவியல் ஆதரிக்கின்றது என்று அவர் மேலும் கூறுகிறார். அதற்கு ஆதாரமாக வேறு பல ஆவணங்களோடு இவ்வசனத்தையும் அவர் எடுத்துரைக்கிறார்.
‘உம் இறைவன் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள படைப்புகள் பற்றி அதிகம் அறிந்திருக்கிறான்.’ (பனுஇஸ்ராயீல் 55)
‘வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வையே துதி செய்து கொண்டிருக்கிறன.’ (ஹஷர் 1)
இவ்வசனங்களை எடுத்துக் காட்டிய பிறகு அவர் வேற்றுக் கிரகவாசிகளைப் பற்றி வர்ணிக்கத் தொடங்கி விடுகிறார். (இந்த வர்ணனைகளையெல்லாம் அவர் எங்கிருந்து பெற்றார்? குர்ஆனிலிருந்தா? அறிவியலில் இருந்தா? தெரியவில்லை)
இவ்வாறெல்லாம் ‘சிந்திப்பது’ அறிவியலைக் குதறித் தள்ளுவது மட்டுமல்ல, குர்ஆனையும் கேவலமாக கிண்டல் அடிப்பது ஆகும்.
ஃபன்தி யாவது பரவாயில்லை! பாகிஸ்தானைச் சேர்ந்த அஜீஸ{ல் ஹஸன் அப்பாஸி என்பவர் ”குர்ஆனும் உடல்நலக் கருத்துகளும்” என்கிற நூலை எழுதியுள்ளார். டயாபடீஸ், ஆஸ்துமா, குடற்புண், மூட்டுவலி, பிளட்பிரஷர், மூச்சுத்திணறல், பேதி மற்றும் வாத நோய்களுக்கான நவீன மருத்துவமுறைகள் குர்ஆனில் உள்ளதாம். அது அவருடைய ஆழமான ஆராய்ச்சி!.
அண்மையில் பிரான்ஸ் நாட்டு மருத்துவர் Dr. மாரிஸ்புகைல் இத்தகைய ஒப்பீட்டு ஆராய்ச்சிக்கு நம்பகத்தன்மையை வழங்கியுள்ளார். அவருடைய ‘விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும்’ (தமிழ் பதிப்பு மில்லத் பப்ளிஷர்ஸ் வெளியீடு 1982) என்ற நூலைப் படிக்கும் எல்லா முஸ்லிம்களும் கடுமையான தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகியே தீருவார்கள்.
அரபு, ஃபார்ஸி, உருது, துருக்கி, தமிழ் என்று எல்லா மொழிகளிலும் அதனுடைய மொழி பெயர்ப்பு வெளியாகிவிட்டது. நவீன அறிவியல் வெளிச்சத்தில் வான்மறை வேதங்களை அவர் ஆய்வுக்கு உட்படுத்தகிறார். நான்கு தலைப்புகளில் அவர் தனது ஆராய்ச்சியை அமைத்துக் கொண்டுள்ளார்.
விண்ணியல், மற்றும் தாவரங்களின் உயிர்வாழ்க்கை, மனிதப் படைப்பு, இந்நூலில் அவர் முஸ்லிம் நூலாசிரியர்களின் வழிமுறையை கையாண்டுள்ளார். அதாவது, முதலில் குர்ஆன் வசனத்தைக் கூறி பிறகு அதற்கான அறிவியல் விளக்கத்தைக் கூறுவது. புறநோக்கு முறையை அவர் கையாண்டுள்ளார்.
குர்ஆனில் கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மைகள் குர்ஆன் இறங்கிய காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்படாதவை என்பதை அரும்பாடுபட்டு நிரூபிக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவற்றில் பல, இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் நிலவிவந்த கருத்துகளுக்கு நேர்மாற்றமானவை என்றும் கூறுகிறார்.
குர்ஆனிய வசனங்களின் கீழ் சூரிய, சந்திர சுழற்சி, நீரோட்டங்கள், கருப்படித்தரங்கள் போன்றவற்றை விளக்கமாக ஆராய்ந்த பிறகு இவ்வாறு கூறுகிறார்தற்காலத்தில் நவீன அறிவியலால் நிரூபிக்கப்பட்ட எந்த உண்மையும் குர்ஆனோடு முரண்படவில்லை. அது போன்றே அது சம்பந்தமாக அக்காலகட்டத்தில் நிலவிவந்த கருத்துகளில் எதுவும் குர்ஆனில் இடம் பெறவில்லை.
அத்தோடு இது வரைக்கும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ விஷயங்கள் குர்ஆனில் உள்ளன. அடியேன் அது சம்பந்தமான கட்டுரை ஒன்றை குர்ஆன் கூறும் உடல் உறுப்புகள், கருப்படித்தரங்கள் பற்றிய உண்மைகள் என்ற தலைப்பில் 1976 நவம்பர் 9ம் நாள் ; French Academy of Medicine ல் வாசித்தேன்.
அறிவியல் தவறுகள் இல்லாத நிலையில் மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள், குர்ஆன் இறைவனால் இறக்கியருளப்பட்ட வேதம் என்கிற குர்ஆன் முஃபஸ்ஸிரீன்களின் கருத்தோடு பொருந்திப் போகின்றன! இறைவன் தவறான ஒன்றைக் கூற மாட்டான் என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!
நவீன அறிவியலின் அளவுகோலில் பைபிள் நிலைக்கவில்லை. விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடு ஆராயும் போது (பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்ற) இரண்டு சுவிசேஷக்காரர்களின் வாதங்களும் நிற்கவில்லை!
இது புகைலுடைய தீர்ப்பு! ஆக, இறைவேதம் குர்ஆனில் எவ்வித குறைபாடுகளும் கிடையாது. ‘தற்போதைய பைபிள் இறைவேதமே அல்ல!’ என்கிற முஸ்லிம்களின் கொள்கைக்கு இது வலு சேர்க்கின்றது.ஆனால் எங்கே புகைல் தனது பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரோ, அங்கே
‘புகைலிசம்’ தொடங்குகின்றது. குர்ஆனில் மென்மேலும் அறிவியல் உண்மைகளைத் தேடிப்பயணிக்கும் முயற்சிகள் தற்காலத்தில் வேகமாகத் தொடர்கின்றன.உதாரணமாக பாக்கிஸ்தானைச் சேர்ந்த ஷம்சுல் ஹக் குர்ஆனில் சுநடயவiஎவைல கொள்கையையும் ஞரயவெரஅ ஆநஉhயniஉள கொள்கையையும் கண்டுபிடிப்பதில் வெற்றி கண்டுவிட்டார். இதற்கான குர்ஆனிய ஆதாரங்களையும் அவர் முன் வைக்கிறார். (இஸ்லாமிய உலகில் அறிவியலும், தொழில் நுட்பமும் என்பது அவருடைய நூல்)
அவ்வாறே மன்ழூர் குதா என்பவர் குர்ஆனில் விண்பொருட்களின் இயக்கம், பரிணாமக் கொள்கை, புவியின் மீதான வாழ்வின் சுழற்சி, நீர், நிலத்தின் மீதான புறநோக்கு படித்தரம் போன்றவற்றைத் தேடி அடைந்துள்ளார். (இஸ்லாமிய சிந்தனை மற்றும் அறிவியலில் முஸ்லிம்களின் சாதனைகள் இஸ்லாமாபாத் 1983)
ஹாருன் யஹ்யா போன்றவர்கள் நெட்டிலும் எழுத்திலும் டார்வினிசத்தை கிழிகிழியென்று கிழித்துக் கொண்டிருக்கின்றனர்.
கருவியல் பற்றிய குர்ஆனிய உண்மைகளைப் பற்றி இதுவரைக்கும் ஏராளமானவர்கள் சொல்லி விட்டார்கள். இன்னும் சொல்லிக்கொண்டே உள்ளார்கள்.
இவ்வனைத்து ஆராய்ச்சிகளையும் பார்க்கும் போது நமக்கு என்ன விளங்குகின்றது என்றால் எந்த ஒரு அறிவியல் உண்மையையும் குர்ஆன் விட்டு வைக்கவில்லை என்பது தான்!!.
உருவாக்குவது. இப்போது செய்ய வேண்டிய அடுத்த வேலை என்னவென்றால் இவற்றை ஒரு அமைப்பாக முறைப்படுத்தி பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்வது. அந்தக் காரியத்தை முஹம்மது அப்துல் ஸமீஃ, முஸ்லிம் ஸஜ்ஜாத் ஆகிய இருவரும் ஓர் அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். (இஸ்லாமியப் பார்வையின் அடிப்படையிலான அறிவியலை பாடத்திட்டத்தில் வகைப்படுத்துவது ஐளெவவைரவந ழக ளஉநைnஉந ளுவரனநைள ஐளடயஅயடியன 1983) அதன்படி இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் என்று எல்லாப் பாடங்களிலும் அது தொடர்பான குர்ஆனிய வசனங்களை இணைப்பது.
அஃப்ஸாலுர் ரஹ்மானுடைய பார்வைக்கும் இவ்விரண்டு பாகிஸ்தான் அறிவியலாளர்களின் ஆலோசனைக்கும் பாராட்டத்தக்க ஒரு வித்தியாசம் உள்ளது. உதாரணமாக பரிணாம வளர்ச்சிக் கொள்கையை எவ்வாறு சேர்க்க முடியும்? அது இறைவன் இல்லை என்று கூறுபவர்களுக்கு அல்லவா சாதகமாக முடியும்? மூ இது தவிர இஸ்லாத்திற்கு ஒத்துவராத இன்னும் பல விஷயங்களும் இருக்கலாம் என்று இவர்கள் கூறுகின்றனர்.
உளவியல் ரீதியாக முஸ்லிம் விஞ்ஞானிகளையும், அறிவு ஜீவிகளையும், அணுகுகின்றது. ஒரு புறம் குர்அன் மீதான, இஸ்லாத்தின் மீதான அவர்களுடைய ஈமானை அதிகரிக்கச் செய்கின்றது. மறுபுறம் மேற்குலக அறிவியலின் உயர்வு அதனுடைய உச்சபட்ச ஏற்பின் மீது அவர்களுடைய நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றது.
எப்படியோ, புகைலிசத்தினால் ஏற்படக் கூடிய தீமைகள் மிகவும் அபாயகரமானவையாகவே உள்ளன. குர்ஆனில் எல்லா வகையான அறிவியலும் உள்ளது. அறிவியல் நோக்கில் குர்ஆனைப் படிப்பதால் எல்லா வகையான அறிவையும், புதுப்புது கருத்துக்களையும் கண்டுபிடிப்புகளையும் சென்றடையலாம் என்பது போன்ற அறிவையும் உணர்வையும் மயக்கிவிடுகின்ற மார்க்கக் கண்ணோட்டத்தை இவ்விநோதமான வழிமுறை வழங்குகின்றது.
இயற்பியல் உண்மைகளைப் பற்றிய சில அடையாளக் குறியீடுகளை குர்ஆன் தெரிவிப்பது என்னவோ உண்மை தான். ஆனால், குர்ஆன் ஒரு போதும் அறிவியல் நூல் ஆகிவிடாது. இது ஹிதாயத்திற்கான நூல். அறிவைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று மட்டுமே இது வலியுறுத்துகின்றது. இலம் குர்ஆனோடு முடிந்து விடுவதில்லை. குர்ஆனில் இருந்து தொடங்குகின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக புகைலிசம் குர்ஆனையும் அறிவியலையும் ஒன்று சேர்த்து அறிவியலுக்கு புனித அந்தஸ்த்தை வழங்கிவிடுகின்றது. இறைவனின் வஹியை நீரூபிக்க அறிவியலின் அவசியம் எல்லாம் தேவையில்லை.
ஒரு வேலை ஏதேனும் ஒரு அறிவியல் உண்மை குர்ஆனோடு ஒத்துப் போகவில்லை என்றால், அல்லது குர்ஆன் குறிப்பிடுகின்ற ஒன்றை நவீன அறிவியல் தவறு என்று நிரூபித்து விட்டது என்றால் குர்ஆன் பாதில் (நஊதுபில்லாஹ்) ஆகிவிடுமோ?
அப்போது பைபிளை உதவாக்கரை என்று புகைல் புறக்கணித்து விட்டது போன்று குர்ஆனும் புறக்கணிக்கப்பட்டு விடுமோ?
இப்போது குர்ஆனில் கூறப்பட்டுள்ள, தற்கால அறிவியலால் நிரூபிக்கப்பட்ட ஒரு கருத்து, நாளை தவறு என்று ஒதுக்கப்பட்டு அவ்விடத்தை வேறொரு கருத்து பிடித்துக் கொண்டால் என்ன ஆகும்? இன்று குர்ஆன் சரி, நாளை தவறாகவும் ஆகலாம் என்று அர்த்தமா?
அதுமட்டுமல்ல, புகைலிசம் அறிவியலுக்கு புனித அந்தஸ்த்தை தந்து விடுவதால் அறிவியல் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஆரோக்கியமான விமர்சனங்களைக் கூட நீர்த்துப் போகச் செய்துவிடுகின்றது. எப்படி என்றால், குர்ஆன் அறிவுத்தேடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் ஏற்கனவே முஸ்லிம் விஞ்ஞானிகள் பெரும்பாலோர் அறிவியலை மதிப்போடும், மரியாதையோடு அணுகுகின்றனர்.
புகைலிசம் வேறொரு புதிய கோணத்தில் இதனை மென்மேலும் மெருகேற்றி விடுகின்றது. முஸ்லிம் விஞ்ஞானிகளின் ஒரு தலைமுறையே அறிவியல் சொல்வது அனைத்தும் உண்மையோ உண்மை என்று நம்புகிறது. அதே நேரத்தில் யாராவது அறிவியலை விமர்சித்தாலோ, சீர்படுத்த நினைத்தாலோ அவர் மீது கேள்விக் கணைகளை தொடுக்கின்றது. அறிவியல் அனைத்தும் நன்மைக்கே என்று நம்புவதானது, அறிவியல் மனித குலத்துக்கே சேவை செய்கின்றது. எனவே முஸ்லிம் சமூகத்தின் தேவைகளையும் அது பூர்த்தி செய்து தனதாக்கிக் கொள்ளும் என்கிற தீய முடிவின் பால் இட்டுச் செல்லும்.
உண்மைக்கான ஒரு தேடலே அறிவியல். அதனுடைய கண்டுபிடிப்புகளும், உண்மைகளும் குர்ஆனுடைய வசனங்களை போன்று சரியானவையும் அல்ல. ஆகவும் முடியாதுஸ ஏற்கனவே உலகத்தைப் பற்றி ஏற்றுக் கொண்டுள்ள ஒரு கொள்கைக்கு ஒப்ப, கொடுக்கப்பட்ட பார்முலாக்களைப் இவர்கள் இன்னும் ஒருபடி மேலேறிப் போய் ‘குர்ஆனை ஓர் அறிவியல் பாடநூலாக ஆக்குங்கள்!’ என்றும் கூறலாம். அஃப்ஸலுர் ரஹ்மான் இதைத்தான் கூறியுள்ளார் ; (Quranic Science. The Muslim School Trust, London 1981)
அவருடைய ஆராய்ச்சி நர்சரி ஸ்கூல் லெவலில் உள்ளது.
பௌதீக உலகம் மற்றும் புலன்களுக்கு அப்பாற்பட்ட எல்லாவற்றையும் குர்ஆன் அறிவுபூர்வமாகவும், முழுமையாகவும் கூறியுள்ளது.
பாமரமக்கள் முதற்கொண்டு படித்தோரும் அதனால் பயன் பெறுவர்!.
வெப்பம், ஒளி, ஓசை இவ்வாறாக இடி மின்னல் வரை எல்லா இரண்டாங்கட்ட அறிவியல் தகவல்களையும் குர்ஆனில் அவரால் காணமுடிகிறது!
ஒரு நீண்ட பட்டியலை குர்ஆனின் மேற்கோள்களோடு அவர் வாசிக்கிறார். நூலின் நோக்கம் என்ன தெரியுமா?
பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் இடம் பெறுவது மற்றும் எதிர்கால முஸ்லிம் விஞ்ஞானிகளை உருவாக்குவது!.
இப்போது ‘புகைலிசம்’ செய்யவேண்டிய அடுத்த வேலை என்னவென்றால் இவற்றை ஒரு அமைப்பாக முறைப்படுத்தி பாடத்திட்டத்தில் இடம் பெறச்செய்வது. ஒருசில இடங்களில் அதில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்னர். பரிமாணவளர்ச்சிக் கொள்கையை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? அது இறைமறுப்பாளர்களுக்கல்லவா சாதகமாக அமையும்? என்று கூறி டார்வினை நாசூக்காக வெளியேற்றி விட்டார்கள். பெரிய பெரிய அறிவியலாளர்களே டார்வின் கொள்கையை புறக்கணித்து உள்ளார்கள் இவர்கள் கூறுவது கூட சமாதானத்துக்கான ஒரு வாதமாகத்தான் படுகின்றது.
வன்முறையினாலும் கட்டாயப்படுத்தப்படுவதாலும் இயற்கை தனது ரகசியங்களை உமிழ்ந்து விடுகின்றது!’ என்று பேகன் கூறியுள்ளார்.
இந்த அடிப்படையில் பார்த்தால் வன்முறையும், பலாத்காரமும் கட்டாயப்படுத்துவதும் நவீன அறிவியலிலிருந்து பிரிக்கவே முடியாத பகுதிகள் ஆகும். தற்போது வளர்ந்து வரும் நவீன அறிவியல் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்றால் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம், ஒரு குறிப்பிட்ட உலகியல் பார்வை மட்டுமே அதன் கீழ் வளர்ந்து செழிக்க முடியும்.
நவீன அறிவியலைப் பொறுத்தவரை ‘குர்ஆன் திலாவத்’ அதனுடைய அடிப்படைப் பண்புகளையோ, அணுகுமுறையையோ ஒரு போதும் மாற்றி விடாது. அறிவியலின் அணுகுமுறை நடுநிலையானது. புறநோக்கு கொண்டது என்பதெல்லாம் நம்பவே முடியாத மாயை. யாரையும் சாராத எவ்வித வெறியுமற்றது என்பதெல்லாம் கட்டுக்கதை!
நாம் நம்முடைய உலகியல் கொள்கை, நம்முடைய பண்பாட்டைக் கொண்டு அதனைப் பரிசுத்தப் படுத்தாதவரை அதனைக் கொஞ்சங்கூடப் புரிந்து கொள்ள முடியாது. விஞ்ஞானிகள் பெரும்பாலும் தங்களுடைய கருத்துகளை தங்களுடைய சார்பு, சுயபற்று, தம்முடைய நியதிகளுக்கு தகுந்தவாறு புகுத்தியே கூறுகிறனர்.
பண்பாட்டு இடைவெளி உள்ள இடத்தில் வெறும் பார்வை மட்டுமல்ல, அனுபவமும் சாத்தியமில்லாததே! அனுபவம் கூட ஏதேனும் ஒரு குறிப்பிட்ட உலகியல் கொள்கையோடு பொருந்தியிருந்தால் தான் பொருள் செறிந்ததாக இருக்க முடியும்.
இயற்கையைப் பற்றிய சட்டங்கள், கொள்கைகள் கணிதச் சமன்பாடுகளின் அடிப்படையில் நிறுவப்படுவதில்லை. மாறாக அவை சோதனைக் கூடங்களிலும், நிறுவனங்களிலும் ‘மை’ ஊற்றப்பட்ட எழுதுகோல்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட கொள்கைகளில் ஒரு சில குர்ஆனிய விளக்கங்களோடு ஒத்துப்போகின்றன என்றால் அது ஒரு சாதாரண, முக்கியத்துவம் இல்லாத விஷயம் தான். சில ‘நியதிகளின் அடிப்படையில் தான் குர்ஆன் அறிவைப் பெறச்சொல்லி ஊக்கப்படுத்துகின்றது.இந்த
‘நியதிகள்’ தாம் நம்முடைய கவனத்திற்கு உரியவை!. அவற்றை நோக்கித்தான் நாம் நமது அறிவியல் முயற்சிகளை செலுத்த வேண்டும். அந்த நியதிகளுக்கு அறிவியல் வடிவம் கொடுத்தால் தான் நம்மால் குர்ஆனுக்கு ‘முஃக்லிஸ்’ ஆக விசுவாசமானவர்களாக இருக்க முடியும். நம்முடைய கடமைகளையும் அதன் கீழிலிருந்து நிறைவேற்ற முடியும்!!!
The Future of Muslim Civilization என்ற புகழ்பெற்ற நூலை எழுதியுள்ள இந்திய முஸ்லிம் விஞ்ஞானி ஜியாவுத்தீன் சர்தார் Ziauddin Sardar முன்பொருமுறை எழுதியிருந்த கட்டுரை ஒன்றைத் தழுவி எழுதப்பட்டது இக்கட்டுரை.