இறைநெருக்கத்தின் முக்கியத்துவம்
குர்ரம் முராத்
தமிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
[ அல்லாஹ்வை நேசிப்பது, அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுக் கொள்வது, அவனுடைய நெருக்கத்தை அடைவது – வாழ்க்கையில் இவற்றை விடமும் பெரும்பேறு வேறு ஏதேனும் உண்டா?. இது ஒர் உயர்ந்த இலக்கு, உன்னதமான பேறு. அதற்கேற்றாற்போல முயற்சியும் நாம் செய்ய வேண்டியிருக்கும்.
“இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை எல்லாவற்றுக்கும் மேலாக அளவு கடந்து நேசிப்பார்கள்’ (அல்குர்ஆன் 2 : 265)
“நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ்வும் உங்களை நேசிப்பான். உங்களுடைய குற்றங்களை மன்னிப்பான்’ (அல்குர்ஆன் 3:31).
சொர்க்கப்பயணம் (மிஃராஜ்) சென்ற இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொர்க்கத்தில் நபித்தோழர் பிலால் அவர்களின் காலடியோசையைக் கேட்டு வந்தார்கள். இறைத்தூதருக்கு முன்னால் சொர்க்கத்தில் நடந்து செல்ல வேண்டுமென்றால் அவர் எத்தகைய நற்காரியங்களை புரிந்திருப்பார்?
பிலால் என்ன ஓர் அறிவாளியா? முஜாஹிதா? செல்வந்தரா?. எதுவுமே இல்லையே!. அப்படியயன்றால் அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றது அதுவும், இறைத்தூதருக்கு முன்னால் செல்லும் நற்பேற்றை வழங்கியது அல்லாஹ்வின் மீதான அசைக்கமுடியாத ஈமானும் இறைத்தூதர் மீதான ஆழமான நம்பிக்கையும்தான்!.
இறைவனும் இறைத்தூதரும் ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள் என்றால் அதை அப்படியே ஆணித்தரமாக நம்பவேண்டும்.
“அந்தத் தோட்டக் கிணற்றை வாங்கி இறைவனின் பாதையில் வக்ஃப் செய்தால் சொர்க்கத்தில் ஒரு கிணறு கிடைக்கும்!’ என்று இறைத்தூதர் சொன்னவுடன் ஓடிச்சென்று பேரம்பேசாமல், இருந்த பணத்தையெல்லாம் கொட்டி வாங்கினாரே, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவரிடம் இருக்கின்றது அந்த நம்பிக்கை!.
“சொர்க்கத்து வாடை வரவில்லையா?’ என்ற வினா இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாயிலிருந்து புறப்பட்டவுடன் கையில் இருந்த பேரீச்சம் பழங்களைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு வாளை ஏந்திக்கொண்டு களத்தில் பாய்ந்து ஷஹீதானாரே, அந்த ஸஹாபியிடம் இருக்கின்றது நம்பிக்கை!.
இறைவனின் நெருக்கத்தை அடையும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும்போது ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. இறைநெருக்கத்தை அடைய மிகச்சிறந்த வழி இறைவனின் பாதையில் மக்களை அழைப்பதே!.]
இறைநெருக்கத்தின் முக்கியத்துவம்
குர்ரம் முராத்
தமிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
(‘தொடர்பு’தான் மனிதர்களை ஒன்றிணைத்து ‘சமூகமாக’ ஆக்குகின்றது. மனிதர் தொடர்புகளைப் பற்றி விலாவாரியாகப் பேசும் நாம் நம்மைப்படைத்த இறைவனோடு வைத்துக் கொள்ளவேண்டிய தொடர்பைப் பற்றி கவலையே இறைவனோடு கொள்ளவேண்டிய தொடர்பும் (தஅல்லுக் பில்லாஹ்) இறைவனை நெருங்கி நிற்பதும் (தகர்ருப் இலல்லாஹ்) இஸ்லாமில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
“இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள்; அவனை நெருங்குவதற்கான வழிகளை தேடிக் கொள்ளுங்கள்; அவன் பாதையில் ஜிஹாத் செய்யுங்கள். வெற்றிபெற்ற மக்களாக நீங்கள் ஆகக்கூடும்!’ (அல் குர்ஆன் 5:35).
யாராவது ஒருவருடைய நெருக்கத்தை நீங்கள் பெற் றிருந்தால் அவரிடம் மற்றவர்களை விட உங்களுக்கு செல்வாக்கு அதிகம் எனப்பொருள். மற்றவர்களைவிட அதிக உரிமை அவரிடத்தில் உங்களுக்கு உண்டு. அல்லாஹ்வுடைய நெருக்கத்தை நீங்கள் பெற்றாலும் அவ்வாறே.
“இறைநெருக்கத்தை பெற்றவர்கள் முந்திக் கொண்டார்கள்’ “இறைநெருக்கத்தை பெற்றவர்கள் நீரருந்துவதற்கென்றே தனி ஓடைகள் சொர்க்கத்தில் உண்டு’ என்றெல்லாம் குர்ஆன் பேசுகின்றது.
இறைநெருக்கத்தைப் பெற்ற முகர்ரபூன்களுக்கென்றே தனி இடமும் தனிப் பங்கீடும் சொர்க்கத்தில் உண்டு. நாம் அண்ணாந்து பார்க்கும் நிலையிலுள்ள இறைத்தூதர்கள் அனைவரும் முகர்ரபூன்களோடுதான் இருப்பார்கள்.
த:ஜ்கியா (உளத்தூய்மை) நூற்கள் யாவும் அந்தச் சிறப்பிடத்தை அடைவது எப்படி எனப் பேசுகின்றன. அவை சுட்டிக்காட்டும் வழிகள் யாவும் கடினமானவை. அதாவது, நம்மைப்போன்ற வெகுபலவீன முஸ்லிம்களுக்கு கடினமானவை. உள்ள உறுதி கொண்ட கொள்கைத் திலகங்களுக்கு வழிகாட்ட மட்டும் இஸ்லாம் உதிக்கவில்லையே!. சாதாரணர்களுக்கும் அது வெற்றிப் பாதையை சுட்டிக் காட்டுகின்றதே!.
அறிவில் கரைகண்ட அறிஞர்களும் வீரம் குடிகொண்ட மறவர்களும் செல்வம் குவிந்துள்ள தனவந்தர்களும்தான் இஸ்லாமுக்காக தங்களுடைய அருட்கொடைகளை செலவு செய்து சிறப்பிடங்களை சம்பாதிக்க முடியும் என்றிருந்தால் பெரும்பான்மை மக்கள் சொர்க்கத்திலும் கீழ்த்தரத்தில்தான் இருப்பார்கள். ஆனால் அப்படி அல்ல.
சொர்க்கப்பயணம் (மிஃராஜ்) சென்ற இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொர்க்கத்தில் நபித்தோழர் பிலால் அவர்களின் காலடியோசையைக் கேட்டு வந்தார்கள். இறைத்தூதருக்கு முன்னால் சொர்க்கத்தில் நடந்து செல்ல வேண்டுமென்றால் அவர் எத்தகைய நற்காரியங்களை புரிந்திருப்பார்?
பிலால் என்ன ஓர் அறிவாளியா? முஜாஹிதா? செல்வந்தரா?. எதுவுமே இல்லையே!. அப்படியயன்றால் அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றது அதுவும், இறைத்தூதருக்கு முன்னால் செல்லும் நற்பேற்றை வழங்கியது அல்லாஹ்வின் மீதான அசைக்கமுடியாத ஈமானும் இறைத்தூதர் மீதான ஆழமான நம்பிக்கையும்தான்!. இறைவனும் இறைத்தூதரும் ஒரு வியத்தைச் சொல்கிறார்கள் என்றால் அதை அப்படியே ஆணித்தரமாக நம்பவேண்டும்.
நம்பிக்கை உண்மையிலேயே இருந்தால் அதை உடனே நாம் செய்துமுடிப்போம். நம்பிக்கையில் பழுது இருந்தால் சந்தேகம் கொண்டு விட்டுவிடுவோம் அல்லது அலட்சியப் படுத்துவோம்.
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைவனின் தூதர் என்றால் இறைவன் சொல்வதைத்தன் நமக்கு அவர்கள் தெரியப்படுத்துவார்கள். இறைவனை நாம் நம்புகிறோம் எனில், இறைத்தூதரின் வார்த்தைகளுக்கு மிகவும் மரியாதை அளிக்கவேண்டும்.
சொல்வதைக் கேட்பது தானே
‘அலீஃப்’ என ஓதினால் பத்து நன்மை ‘லாம்’ என ஓதினால் பத்து நன்மை என்றால் அதை நம்பி ஓதினால் கண்டிப்பாக கிடைக்கும் நன்மை. “அந்தத் தோட்டக் கிணற்றை வாங்கி இறைவனின் பாதையில் வக்ஃப் செய்தால் சொர்க்கத்தில் ஒரு கிணறு கிடைக்கும்!’ என்று இறைத்தூதர் சொன்னவுடன் ஓடிச்சென்று பேரம்பேசாமல், இருந்த பணத்தையெல்லாம் கொட்டி வாங்கினாரே, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவரிடம் இருக்கின்றது அந்த நம்பிக்கை!.
“சொர்க்கத்து வாடை வரவில்லையா?’ என்ற வினா இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாயிலிருந்து புறப்பட்டவுடன் கையில் இருந்த பேரீச்சம் பழங்களைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு வாளை ஏந்திக்கொண்டு களத்தில் பாய்ந்து ஷஹீதானாரே, அந்த ஸஹாபியிடம் இருக்கின்றது நம்பிக்கை!.
நாம் செய்யும் செயல்கள் அல்ல, நாம் வைத்திருக்கும் நம்பிக்கைதான் வெற்றிப்பாதையை தீர்மானிக்கின்றது. நம்பிக்கையோடு நாம் செய்யும் சிறுசெயல்களும் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு பயன்களை வாரிக் கொண்டு வருகின்றன. அந்த நம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் “சிகரத்தைத்’ தொடமுடியும். எளிதாகத் தொடுவது எப்படி என இங்கு குர்ரம் முராத் விளக்க உள்ளார். ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முதன்மை வழிகாட்டிகளுள் ஒருவரான அவர் பிரிட்டனில் ஜமாஅத்தின் பொறுப்பாளராகவும் இஸ்லாமிய அமைப்பு வேரூன்றவும் காரணமாக இருந்தார். இறைவன் அவருடைய கபுறை ம:க்ஃபிரத் பூக்களால் நிரப்பட்டும்!)
அல்லாஹ்வை நேசிப்பது, அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுக் கொள்வது, அவனுடைய நெருக்கத்தை அடைவது – வாழ்க்கையில் இவற்றை விடமும் பெரும்பேறு வேறு ஏதேனும் உண்டா?. இது ஒர் உயர்ந்த இலக்கு, உன்னதமான பேறு. அதற்கேற்றாற்போல முயற்சியும் நாம் செய்ய வேண்டியிருக்கும்.
“இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை எல்லாவற்றுக்கும் மேலாக அளவு கடந்து நேசிப்பார்கள்’ (அல்குர்ஆன் 2 : 265)
“உங்களுடைய இறைவனுக்கு சிரம்தாழ்த்தி ஸஜ்தா செய்வீராக; அவனை நெருங்குவீராக!’ (அல்குர்ஆன் 96:19)
இநைம்பிக்கைகொண்ட ஒவ்வொருவரும் இறைவனை நெருங்க நினைக்கவேண்டும், அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றால் அவை எல்லாராலும் இய லும் முயற்சிகளாக எல்லோராலும் சாத்தியப்படக் கூடிய முயற்சிகளாக இருந்தாக வேண்டும் அல்லவா?. மார்க்கம் எளிதானது என்பது அப்போதுதானே உண்மையாகும்?.
இறைவனை நெருங்குவதற்கு எளிய வழிதான் என்ன?.
இறைத்தூதரை அப்படிக்கு அப்படியே பின்பற்றுவது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தனவற்றை அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அவ்வாறே அதே அளவில் அதே முறையில் செய்வதும் அவர்களுடைய வாழ்க்கையைப் போன்றே நம் முடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முயற்சிப்பதும் தான் அவ்வெளிய வழி ஆகும்.
“நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ்வும் உங்களை நேசிப்பான். உங்களுடைய குற்றங்களை மன்னிப்பான்’ (அல்குர்ஆன் 3:31).
அல்லாஹ்வின் செய்தியை மக்களிடம் சேர்ப்பதிலும் அவர்களை அவன் பக்கம் அழைப்பதிலும் அல்லாஹ்வுடைய பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு மக்களை அழைத்து அவர்களை அப்பாதையில் ஒன்று கூட்டுவதிலும் தம்மோடு அவர்களை அழைத்துக் கொண்டு அப்பாதையில் செல்வதையுமே தம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளாக அவர்கள் ஆக்கிக் கொண்டார்கள். இறைவனின் நெருக்கத்தை அடைவதற் கான உத்தரவாதமுள்ள மிகமிக எளிய பாதை இதுவே!. இப்பணியை விட்டுவிடவும் கூடாது. அலட்சியப்படுத்தி விடவும் கூடாது. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப்போடவும் கூடாது.
இப்பணியை முறையாக நிறைவேற்றவேண்டும் என நினைப்பவர்கள் ஒரு மிகமுக்கியமான விஷயத்தை மறந்து விடக்கூடாது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டு வழிநடப்பவர், மற்றமக்களை அழைக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டு அதிலேயே கவனம் செலுத்தி தன்னை மறந்துவிடக் கூடாது. அவ்வாறே இப்பாதையில் பயணிப்பதற்கான வழிப்பொருளை சேகரித்துக் கொள்ளவும் மறந்துவிடக் கூடாது. மற்றவர்களை அழைத்துக் கொண்டேயிருந்து தன்னை “அழைக்க’ மறந்து விடக் கூடாது. தன்னுடைய நஃப்ஸை அழைக்காமல் விட்டுவிட்டு மற்றவர் களை மட்டும் அழைத்துக் கொண்டுசெல்ல முயற்சிக்கக் கூடாது. ஏனெனில், இறைவனின் படைப்பினங்களுக்கு ஹிதாயத் வழங்குவதென்பது மிகவும் கடினமான பணியாகும். “தாங்க இயலா பணி’ என வர்ணிக்கப்பட்டுள்ளது. “முதுகெலும்பை முறிக்கும் பணி’ எனவும் உருவகப்படுத்தப் பட்டுள்ளது.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாதையில் பயணிக்கத் தொடங்கும் முன், நாம் சேகரித்துக் கொள்ளவேண்டிய “கட்டுச்சாதம்’ எது?. இப்பணியை நாம் சிறப்பாக நிறைவேற்ற வேண்டுமானால் எப்பொருளை கண்டிப்பாக கைக்கொள்ள வேண்டும்?.
நம்மால் முடிந்த அளவு முடிந்தமட்டில் எல்லா உறவுகளின் பற்றையும் துறந்துவிட்டு அல்லாஹ்வுக்கென்றே ஆகிவிடுவது (ஹனீஃபிய்யத்). எல்லா செயல்களையும் அல்லாஹ்வுக்கென்றே செய்வது (இஃக்ளாஸ்). ஹுனஃபாக்கள், முஃக்ளிஸீன்களுடைய நிலையை அடைய வேண்டும் எனும் ஆர்வத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பணியை செய்யவேண்டும் என்ற ஆசையோடு இத்தகையோரின் இடத்தை அடைய வேண்டும் என்பதையும் இலக்காக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
“கலப்பற்ற மனதோடு முற்றிலும் அல்லாஹ்யை சார்ந்து அவனை மட்டுமே வணங்கவேண்டும் என்பதைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு கட்டளையிடப்படவில்லை!’ (அல்குர்ஆன் 98:5)
இறைமார்க்கத்தின் சாராம்சமாக இதுவே விளக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தொழுகையும் ஜகாத்தும் கூறப்பட்டுள்ளன. இறுதியில் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதல்முதலில் இறக்கியருளப்பட்ட இறைச்செய்தி (வஹி)யில் “உங்களுடைய இறைவனின் பெயர் கூறியவாறு (மக்கள் கேட்கும்வகையில்) படியுங்கள்’ என மனிதர்களிடம் இறைவனின் செய்தியை கொண்டுபோய் சேர்த்திடுமாறு ஆணையிடப்பட்டது. அத்தோடு கூடக்கூட “ஸஜ்தா செய்யுங்கள், உம் இறைவனின் நெருக்கத்தை அடைந்து கொள்ளுங்கள்’ என்ற வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது.
“எழுந்து நில்லுங்கள். மக்களுக்கு செய்தியை சமர்ப்பித்திடுங்கள்’ என்று இறைச்செய்தியின் துவக்க காலத்திலேயே கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அத்தோடு அதற்குத் தேவையானது எது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
“இரவுத் தொழுகையை பேணி வாருங்கள். நிறுத்தி நிறுத்தி நிதானமாக குர்ஆனை ஓதி வாருங்கள். உங்கள் இறைவனை அதிகமதிகம் நினைவு கூறுங்கள். எல்லோரையும் விட்டுவிட்டு அவனுடையவர்களாக மாறி விடுங்கள்’. (முத்தஸ்ஸிர், முஸ்ஸம்மில்).
“உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளை (வழிகாட்டுதலை) பறை சாற்றுங்கள்’ என்ற ஆணையோடு, “நிறைவேற்றிய பிறகு, இறைவணக்கத்திற்காக கச்சை கட்டிக் கொண்டு நின்றுவிடுங்கள். உங்கள் இறைவனை மட்டுமே நேசிக்கத் தொடங்குங்கள்’ என்பதும் வலியுறுத்தப்படுகிறது.
“அல்லாஹ்வுடைய பாதையில் முனைந்துநின்று ஜிஹாத் செய்’வதற்கான உத்தரவு வந்ததோடு, “தொழுகையை நிலை நாட்டுங்கள், ஜகாத் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வோடு உறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று அதற்கான ஆன்மவளத்தை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையும் கற்றுக் கொடுக்கப்பட்டது.
“படைபடையாக மக்கள் இறைமார்க்கத்திற்குள் நுழைவார்கள்’ என்று வெற்றியின் சுபச்செய்தி கூறப்பட்ட போதே, அதிகமதிகம் இறைவனின் பெருமையைப் பறைசாற்றுமாறும் அவனுடைய வழிபாட்டிலேயே லயித்துப் போகுமாறும் வலியுறுத்தப்பட்டது. மக்கள் கூட்டத்தைக் கண்டவுடன் தடுமாற்றம் ஏற்படக்கூடும் என்பதால் பாவமன்னிப்பு கோரிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. (அத்தியாயம் அந்நஸ்ர்)
இறை அழைப்புப் பணியையும் இறைவழியில் போராட்டத்தையும் மேற்கொள்ள வேண்டுமென்றால் இத்தகைய சிறப்புக் கூறுகளெல்லாம் கண்டிப்பாக தேவை என்று இவ்வளவு தூரம் இறைவன் வலியுறுத்தியுள்ளபோது, இவை எதுவும் இல்லாமல் இப்பணியை செய்துமுடிக்கலாம் என்று எண்ணுவது மிகப்பெரிய முட்டாள்தனம்!. முடியாத காரியம்!.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறை அழைப்புப் பணியிலும் இறைவழிப் போராட்டத்திலும் தங்களை ஆழ்ந்து ஈடுபடுத்தி வந்தார்கள். தம்மால் முடிந்த அளவு ஏராளமான மனிதர்களை ஏன், எல்லா மனிதர்களையும் இறைமார்க்கத்தில் இணைத்து தனது தோழர்களாக மாற்றிவிடவேண்டும் எனும் தீராத தாகம் அவர்களுக்கு இருந்தது.
மக்கள் அவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்தபோது அவர்கள் மீளா சோகத்தில் ஆழ்ந்தார்கள். அவர்களைச் சுற்றி எல்லா தரப்பட்ட மக்களும் இருந்தார்கள். சமூகத்தைக் கட்டமைப்பது, அரசு பணிகள், மக்கள் மனங்களை “தஸ்கியா’ செய்து தூய்மைப்படுத்துவது, மக்களை வழிப் படுத்துவது, நேர்வழியில் அவர்களை நிலைத்திருக்கச் செய்வது, நீதி வழங்குவது, மனித உறவுகளிலான சிக்கல் களை சமாளிப்பது என்று ஏராளமான காரியங்களில் தங்களை ஈடுபடுத்தி வந்தார்கள்.
இருந்தபோதிலும் அவர்கள் இரவுப் பொழுதுகளை தொழுகையில் நின்று கழித்தார்கள். ஒரே அமர்வில் நூறு நூறு முறை பாவமன்னிப்பு கோரிக் கொண்டிருந்தார்கள். எந்நேரம் பார்த்தாலும் இறை நினைவிலேயே திளைத் திருந்தார்கள். முழுமுனைப்போடும் திசை திரும்பாத உள்ளத்தோடும் இறைவனின் புறம் மனம் செலுத்தியவர்களாகவே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போன்று யாராலும் ஆகமுடியாது. மக்களை இறைவனின் பக்கம் அழைக்கும் பணியை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியாக அல்லாஹ் நம் மீது கடமையாக்கி உள்ளான்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பணியை செய்யும் எண்ணம் கொண்டவர்களும், அதற்கான பாதையில் காலடி வைத்து விட்டவர்களும் இறைத்தூதருக்கு இறக்கப்பட்ட இறைவசனங்களை பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம்.
இன்னும் சொல்லப்போனால் இறைத்தூதரைவிட அவ்வசனங்களை நாம் தான் அதிகமாகப் பின்பற்றவேண்டும். எந்நேரமும் சதா சர்வகாலமும் இறைவசனங்களை பின்பற்றுவதிலும் இறைத்தூதரின் வாழ்க்கையை கடைப்பிடிப்பதிலும் நாம் ஈடுபட்டு வரவேண்டும். இல்லையென்றால் நம்மால் இப்பாதையில் பயணிக்கவும் முடியாது; தொடர்ந்து நிலைத்திருக்கவும் தன்னால் முடிந்த அளவுக்குத்தான் ஒரு மனிதன் முயற்சி செய்யமுடியும்.
அதற்கேற்ற அளவுதான் அவனால் இறை வழிகாட்டுதலையும் இறை நெருக்கத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனாலும் இங்கு, ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். இறைவனின் பக்கம் மீளுகின்ற இறைவனின் நெருக்கத்தை அடைவதற்கான வழிகள் எல்லாம் கடினமானவை என நினைத்து விடக்கூடாது. எல்லோராலும் முடியாது; ஏதோ ஒரு சிலரால் மட்டுமே சாத்தியம்; அவர்களால் மட்டுமே இப்படித்தரங்களை அடையமுடியும் என்றெல்லாம் நினைத்து விடக்கூடாது. எந்தவொரு செயலும் எந்தவோர் அமலும் அது எப்படித்தரத்தில் அமைந்திருந்தாலும் சாதாரண மனிதன் ஒருவனால் செய்ய முடியாததாக இல்லவே இல்லை!. சொர்க்கமும் இறைநெருக்கமும் “எளிதானவை’ என்றே வர்ணிக்கப் பட்டுள்ளன!.
“எளிமையான மார்க்கம்’ என்றுதான் நற்செய்தி வழங்கப்பட்டுள்ளது!. இறைநெருக்கத்தை பெறவேண்டும் எனும் ஆர்வமும் அதற்கான செயல்களில் ஈடுபடுவதும் அல்லது அதற்காக முயற்சி செய்துவருவதும் எந்நேரமும் செய்தாகவேண்டிய பணிகள். எனினும் ஒருசில சமயங்களில் அச்செயல்களில் ஈடுபடுவதும் அவற்றை அடைந்து கொள்வதும் எளிமையானவையாக மாறிவிடுகின்றன. அவற்றின் பலாபலன்களும் வியக்கத்தக்க அளவு வீரியமிக்கதாய் உள்ளன. நாள் தோறும் இத்தகைய தருணங்கள் வந்துபோகின்றன. எனினும், இரவுப் பொழுதுகள் முக்கியமானவை!.
வருடச் சுழற்சியில் ரமழான் மாதம் இத்தகையதே!. ஒவ்வொரு நாளும் இரவுப் பொழுதின் ஒரு தருணத்தில் வல்ல இறைவன் வானத்தின் கீழ்க்கோடியில் இறங்கி தனது அருட்கரங்களை விரியத் திறந்து வைக்கிறான். இரவுப் பொழுதின் மேன்மையை இரவைப் பயன்படுத்தியாக வேண்டியதன் முக்கியத்துவத்தை இது விளக்கிவிடுகின்றது. ரமழான் மாதத்திலோ ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு விடுகின்றன. தீய சக்திகள் கட்டப்பட்டு விடுகின்றன. சொர்க்கக் கதவுகள் அகலமாய் திறந்து வைக்கப் படுகின்றன. சொர்க்கம் செல்வதற்கான பாதை அப்போது எளிதாகி விடுகின்றது. கடமையாக்கப்பட்ட செயல்களுக்கான கூலியோ எழுபது மடங்கு அதிகமாய் கிடைக்கின்றது. உபரியாய் செய்யும் ஒவ்வெரு நற்காரியமும் கடமையாக்கப்பட்ட செயலொன்றின் கூலியைப் பெற்றுத் தருகின்றது. ரமழான் மாதத்தின் அருமை பெருமைகள் இப்போது புலப்படுகின்றனவா?.
நாள்தோறும் இரவு வருகின்றது. வருடந்தோறும் ரமழான் மாதம் வருகின்றது. பொன்னற்கரிய இப்பொழுது களை முடிந்தமட்டிலும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள என்ன தடை இருக்கின்றது?. எந்நேரமும் முடிந்து விடக்கூடிய வாழ்க்கை இது!. இப்போது கைவசமுள்ள தருணங்களை இழந்துவிட்டால் அப்புறம் என் செய்வது?.
ஆகையால், இப்போதே இந்தப் பொழுதையே தகுந்த தருணமாக எண்ணி கச்சைகட்டிக் கொண்டு இறங்கிவிட வேண்டும். அல்லாஹ்வின் பாதையில் மக்களை அழைப் பதற்குத் தேவையான சாதனங்களை சேகரிக்கத் துவங்கி விடவேண்டும்.
நீங்கள் முஸ்லிமாக இருந்தால் இப்பாதையை புறக்கணித்துவிட முடியாது. ஏனெனில், இதுவோ இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பாதை!. நன்மையின் பாதையில் நாமும் நடக்க வேண்டும். மற்ற மக்களையும் அழைக்கவேண்டும். இறைவனின் நெருக்கத்தை அடையும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும்போது ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. இறைநெருக்கத்தை அடைய மிகச்சிறந்த வழி இறைவனின் பாதையில் மக்களை அழைப்பதே!.
நீங்கள் செய்யத் தொடங்கியுள்ள நற்காரியங்கள் அனைத்தையும் அப்பணிக்காக வேண்டியே, அப்பணியைச் செய்வதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவே செய்யப் போகிறீர்கள்.
வாழ்க்கையின் முக்கியமான செயல்கள் ஒன்றிரண்டை கைவிட்டு விட்டுத்தான் அல்லது தள்ளிப்போட்டுவிட்டுத் தான் இச்செயல்களை நம்மால் செய்யமுடியும், கொஞ்சமாவது மற்ற காரியங்களை அனுசரித்தால்தான் இந்த காரியங்களைச் செய்யமுடியும் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். மாறாக, உங்களுடைய கவனம் மட்டுமே தேவை. கவனம் மட்டும் இருந்துவிட்டால் வாழ்க்கைப் பாதையின் அன்றாடச் செயல்களையே இறை நெருக்கத்தை அடைவதற்கான வழிவகைகளாக மாற்றிக் கொள்ள நம்மால் முடியும்.
மனித செயல்களோ குறைவானவை, குறைவான நேரத்திலேயே முடியக்கூடியவை. உண்மையிலேயே அதிக நேரம் தேவைப்படும் இரவுத் தொழுகை போன்றவற்றை எளிதாக செய்து முடிக்க வசதியான வழிமுறைகள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.