Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?

Posted on May 21, 2015 by admin

எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?

”ஒரு ரூபாய் திருடினாலும், திருட்டு திருட்டுத்தான்…” -கருணாநிதி

இப்படி கூறுவதன் மூலம் இவர் என்ன சொல்ல வருகிறார்….? ஒரு ரூபாய் திருடனும், 1,76,000 கோடி  திருடனும் ஒன்றுதான் என்று சொல்லி 1,76,000 கோடி கொள்ளையை நியாயப்படுத்தப் பார்க்கிறாரோ…..!

[ இப்போது மக்களுக்கு 66 கோடி ஊழல் பெரிய எரிச்சல் இல்லை. சமீபத்தில் நடந்த 1,76,000 கோடி என்று சொல்லப்பட்ட ஊழல் வழக்கு, கலைஞர் டிவி வழக்கு ஆகியவைதான் எரிச்சல். சுதாகரன் திருமணத்தின்போது ஜெ எந்தளவுக்கு கூத்தடித்தாரோ அதைவிட பல மடங்கு கருணாநிதி குடும்பத்தினர் மாநிலத்திலும், மத்தியிலும் சக்க கூத்து அடித்தனர்.பேரன்கள் சினிமா எடுத்தனர், நடித்தனர், பல விதமான தொழில்களில் ஈடுபட்டனர்.

பல தொழில் அதிபர்களுக்கு போன் போட்டு கமிஷன் வாங்க மாவட்ட வாரியாக ஏஜண்டுகள் செயல் பட்டனர்.மதுரையில் ரவுடி சாம்ராஜ்யமே தலைவிரித்து ஆடியது. செம்மொழி மாநாட்டில் தமிழகத்தின் மாபெரும் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலர் கலர் உடைகளில் தோன்றி எரிச்சலடைய வைத்தனர்.குடும்ப பிரச்சனை முடிவுக்கு வந்ததால் 2ஜி பிரச்சனை முடிந்து விட்டது என தலைவர் அருள்வாக்கு சொன்னார்.

இப்போது ஜெ விடுவிக்கப்பட்டு தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், நீதி, சட்டம் இவைகளை முன்வைத்து திமுகவினர் பொங்குவதை பார்க்கையில்தான் காமடியாக உள்ளது. கலைஞர் டிவிக்கு 200 கோடி வந்த வழக்கில் சொல்கிறார்கள்- கனிமொழி இயக்குநர் இல்லை, கலைஞரும் இயக்குநர் இல்லை, ஸ்டாலின் இல்லை. பேர்தான் கலைஞர் டிவி! யார் இயக்குநர்? யார் மொதலாளி? டீ சப்ளை பண்றவனா?]

சுதாகரன் திருமணம் என்றெல்லாம் கூத்தடித்த அப்போதைய ஜெ ஆட்சி முடிந்த கையோடு, இந்த வழக்கில் ஜெ வுக்கு அப்போதே தண்டனை அளிக்கப்பட்டு இருந்தால் மொத்த தமிழகமும் கொண்டாடி இருக்கும். அப்போது அனைத்து மக்களும் ஜெ மீதும், அதிமுக ஆட்சி மீதும் அவ்வளவு வெறுப்புடன் இருந்தனர்.

அதற்குப்பிறகு திமுக அதிமுக என மாறி மாறி ஆட்சிகளைப் பார்த்த மக்கள், ஜெ ஆட்சி எவ்வளவோ மேல் என்ற முடிவுக்கு வந்ததே, தற்போது நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சி.

இங்கு எந்த அரசியல்வாதியையும் அப்சல்யூட் நல்லவர் என்ற முடிவுக்கெல்லாம் வரமுடியாது. ரிலேடிவ்தான். எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளிதான்.இப்போது ஜெவுக்கு குடும்பம் இல்லை, தற்போதைய ஆட்சியில் அவர் தனக்கென சொத்து சேர்க்கவில்லை. நல்லது செய்கிறாரோ இல்லையோ, நல்லது செய்ய வேண்டும் என்ற முனைப்போடாவது செயல்படுகிறார் என்ற எண்ணம் மக்களுக்கு இருக்கிறது. இலவசங்கள், அம்மா திட்டங்கள் – நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, ஓட்டுப்போடும் மக்களுக்கு பிடித்தே உள்ளது. இப்போதைய ஜெயலலிதாவிற்கு தண்டனை அளிப்பது மக்களுக்கு ரசிப்பாயில்லை.

ஜெயலலிதா நல்லவர், ஊழலே செய்யவில்லை என்றெல்லாம் யாரும் நம்பவில்லை. மற்ற அரசியல்வாதிகளில் யார் நியாயமாக இருக்கிறார்கள்?

உதாரணமாக வரப்போகும் தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் ஸ்டாலினின் சொத்து மதிப்பு 2 கோடியே பதினோரு லட்சம் என தேர்தல் கமிஷனில் தெரிவித்து உள்ளார். சென்னையில் ஒரு கடைக்கோடி கவுன்சிலரின் சொத்து மதிப்பே 10 கோடியைத் தாண்டும் என்பது நண்டு சின்டுக்கு கூடத் தெரியும்.ஸ்டாலின் சொத்து மதிப்பு வெறும் 2 கோடி ….பாவம். கோடி ரூபாய் ஹம்மர் காரில் வெளிப்படையாக பவனி வருவார், கார் வேறு யாரேனும் பினாமி பேரில் இருக்கும். உதயநிதி, அன்பு செழியனிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கித்தான் படம் எடுத்து காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார் , பாவம் !

கூர்கில் இருக்கும் டாட்டா பிளாண்டேஷன் எஸ்டேட்டுக்கு சென்றிருந்தேன். சுற்றிக்காட்டிய அந்த ஊர்க்காரர், இதான் உங்க ஊர் சிதம்பரத்தோட எஸ்டேட் என்றார். அது இருக்கும் போல 200 ஏக்கர். எவ்ளோ வெலை இருக்கும் என்றேன். இதெல்லாம் இப்ப வாங்க முடியாதுங்க, 500 – 1000 கோடி போகலாம் என்றார். சிதம்பரம் சொத்துக்கணக்கில் இதை 10 லட்சமோ 12 லட்சமோ எனக் குறிப்பிட்டு இருந்ததாக நினைவு.

இதைப்போல பழம் தின்று கொட்டைப் போட்ட எல்லா அரசியல்வாதிகளும், விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்து பக்காவாக செட்டில் ஆகி விடுகின்றனர். ஜெ, திடீரென முதல்வராகி , ஆர்வக் கோளாறில் வெளிப்படையாக ஓவர் ஆட்டம் போட்டு மாட்டிக்கொண்டார், அவ்ளோதான்.

இன்றைய சூழலே அபத்தமாக உள்ளது. திமுக ,அதிமுக என இரண்டு கட்சிகளுமே ஓட்டுக்கு பணம் கொடுக்கின்றன. மக்களும் இளித்துக்கொண்டே வாங்கிக்கொள்கின்றனர்.அரசு கொடுக்கும் இலவசத்துக்கு வெக்கமே இல்லாமல் , பணக்காரர்களும் , மிடில் க்ளாஸ் மக்களுமே வரிசையில் பிச்சைக்காரர்கள் போல நிற்கிறார்கள். காண்ட்ராக்டர்களிடம் இரண்டு கட்சியுமே ஆட்சியில் இருக்கையில் கமிஷன் பெறுகின்றன.

மக்களோடு டை அப் போட்டுக்கொண்டு அரசு ஊழலில் ஈடுபடுகிறது. மக்களுக்கு கமிஷனை இலவசம், விலையில்லா பொருள் என்ற வகையில் கொடுத்து விடுகிறது. அதனால் மக்களுக்கு ஊழல் ஒரு பிரச்சனையே அல்ல. ஏனெனில் அவர்களும் அதில் பங்குதாரர்கள். எப்போது கோபம் வரும் என்றால், அவர்கள் சக்திக்கு மீறி ,அவர்களுக்கு பங்கு கொடுக்காமல், அவர்கள் வயிறெரியும் அளவுக்கு ஊழல் செய்ய வேண்டும்.

இப்போது மக்களுக்கு 66 கோடி ஊழல் பெரிய எரிச்சல் இல்லை. சமீபத்தில் நடந்த 1,76,000 கோடி என்று சொல்லப்பட்ட ஊழல் வழக்கு, கலைஞர் டிவி வழக்கு ஆகியவைதான் எரிச்சல். சுதாகரன் திருமணத்தின்போது ஜெ எந்தளவுக்கு கூத்தடித்தாரோ அதைவிட பல மடங்கு கருணாநிதி குடும்பத்தினர் மாநிலத்திலும், மத்தியிலும் சக்க கூத்து அடித்தனர்.பேரன்கள் சினிமா எடுத்தனர், நடித்தனர், பல விதமான தொழில்களில் ஈடுபட்டனர்.

பல தொழில் அதிபர்களுக்கு போன் போட்டு கமிஷன் வாங்க மாவட்ட வாரியாக ஏஜண்டுகள் செயல் பட்டனர்.மதுரையில் ரவுடி சாம்ராஜ்யமே தலைவிரித்து ஆடியது. செம்மொழி மாநாட்டில் தமிழகத்தின் மாபெரும் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலர் கலர் உடைகளில் தோன்றி எரிச்சலடைய வைத்தனர்.குடும்ப பிரச்சனை முடிவுக்கு வந்ததால் 2ஜி பிரச்சனை முடிந்து விட்டது என தலைவர் அருள்வாக்கு சொன்னார்.

இப்போது ஜெ விடுவிக்கப்பட்டு தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், நீதி, சட்டம் இவைகளை முன்வைத்து திமுகவினர் பொங்குவதை பார்க்கையில்தான் காமடியாக உள்ளது. கலைஞர் டிவிக்கு 200 கோடி வந்த வழக்கில் சொல்கிறார்கள்- கனிமொழி இயக்குநர் இல்லை, கலைஞரும் இயக்குநர் இல்லை, ஸ்டாலின் இல்லை. பேர்தான் கலைஞர் டிவி! யார் இயக்குநர்? யார் மொதலாளி? டீ சப்ளை பண்றவனா?

உழலுக்கு எதிராகவும், அநியாயத்திற்கு எதிராகவும், நீதி செத்து விட்டது, சட்டம் தோற்றுவிட்டது என பொங்கினால் மக்களும் உணர்ச்சி வசப்பட்டு பொங்குவார்கள்தான். ஆனால் யார் பொங்குகிறார்கள் என்று பார்ப்பார்கள். இதை விட அநியாய ஊழல் செய்தவர்களும், இதைவிட மோசமாக சட்டத்தை வளைத்தவர்களும் திடீர் நீதி தேவன்களாக மாறி ஊளை சதையையும் தொப்பையையும் குலுக்கி குலுக்கி அழுதால் செம காமடி என சிரிப்புதான் வரும் மக்களுக்கு!

source: http://idlyvadai.blogspot.in/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 9 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb