M U S T R E A D
மெய் சிலிர்க்க வைக்கும் இக்கட்டுரையின் ஒவ்வொரு பகுதியும் முஸ்லிம்கள் அனைவரும் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டிய வரலாற்றுப் பொன்னேடு.
அஹ்ஸாப் அகழ்ப்போர்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
[ ‘பகைவர்களைப் பற்றி உளவறிந்து சொல்ல யாரேனும் தயாரா? அப்படிச் செல்பவருக்கு சொர்க்கம் கிடைக்கும்!’ என்று இறைத்தூதர் கேட்டார்கள்.
அகழைத் தாண்டிச் ஸெல்வது என்பதை யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. என்ன நடக்குமோ என்கிற பீதி வேறு அவர்களைப் பிடித்துக் கொண்டிருந்தது.
வெளியிலோ குளிர் கொட்டிக் கொண்டிருந்தது. உடம்பெல்லாம் விறைத்துப் போய் பற்கள் ஆடிக் கொண்டிருந்தன. சில்லிட்ட தரையில் அமர்ந்திருந்த ஸஹாபாக்கள் யாருமே வாயைத் திறக்கவில்லை.
இறைத்தூதர் சென்றார்கள். இரண்டு ரக அத் தொழுது இறைவனிடம் துஆ கேட்டார்கள். மீண்டும் திரும்பி வந்தார்கள்.
‘பகைவர்களைப் பற்றி உளவறிந்து சொல்ல யாரேனும் தாயரா? அப்படி செல்பவருக்கு சொர்க்கம் கிடைக்கும்!’ என்று இறைத்தூதர் கேட்டார்கள். அவையில் ஒரு சின்ன அசைவு கூட இல்லை.
திரும்பவும் சென்று தொழுது துஆச் செய்தவர்களாக இறைத்தூதர் திரும்பி வந்தார்கள். ‘பகைவர்களைப் பற்றி உளவறிந்து வந்து சொல்ல யாரேனும் தயாரா? அவர் நாளை சொர்க்கத்தில் என்னோடு இருப்பார்!’ என்று கேட்டார்கள்.
சப்த நாடி கூட ஒடுங்கிப் போனவர்களாக சஹாபாக்கள் அமர்ந்திருந்தார்கள்.
“அண்ணலே, தாங்கள் கடலில் குதிக்கச் சொன்னாலும் தயங்காமல் குதிப்போம். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இஸ்ரவேலர்கள் சொன்னது போல சாக்குப் போக்கு சொல்ல மாட்டோம்!” என்ற அறிவித்த, அதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே அமுல்படுத்திய சஹாபாக்களே வாய்மூடி மௌனமாக உட்கார்ந்து இருந்தார்கள் என்றால், நிலைமை எவ்வளவு படு மோசம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்!
உண்மையில் இதற்கு முன் எந்தப் போரிலும் சந்திக்காத அளவு கடுந்துன்பத்தில் முஸ்லிம்கள் இருந்தார்கள்.
“யார் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயப்படுகின்றார்களோ, அல்லாஹ் அவருக்கு ஏதேனும் வழியை ஏற்படுத்துவான். அவர் நினைத்துக் கூடப்பார்க்காத இடத்திலிருந்து அவருக்கு உணவு (வாழ்வாதாரம்) வழங்குவான். யார் அல்லாஹ்வையே முழுக்க சார்ந்துள்ளாரோ அவருக்கு அல்லாஹ்வே போதுமானவ!” அவையனைத்தையும் அஹ்ஸாப் போரில் நம்மால் பார்க்க முடிகின்றது. எல்லாமே அல்லாஹ் தான் என்றாகிப் போன ஈமானிய உத்வேகங் கொண்ட நம்பிக்கையாளர்கள், பசியோடும், பட்டினியோடும் பணி விழும் இரவுகளில் பார்வைகளில் பயத்தோடும் இருந்தார்கள். ஆனால் உள்ளங்களில் கலக்கமில்லை. விரக்தியடைந்து பழக்கமில்லை.
“அந்த(க் கடுமையான) நேரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் நன்கு சோதிக்கப்பட்டார்கள். மேலும் கடுமையாக அலைக்கழிக்கப்பட்டார்கள்.” (அல்குர்ஆன் – அல் அஹ்ஸாப் : 11)
இஸ்லாமிய வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய போரில் ஒன்றான அஹ்ஸாப் அகழ்ப் போரைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது தகுமா…?]
அஹ்ஸாப் அகழ்ப்போர்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
முக்கியமான திருப்புமுனை என்று இஸ்லாமிய வரலாற்றில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட நினைத்தால் அஹ்ஸாப் போரைக் குறிப்பிடலாம். இறை நம்பிக்கையாளர்களின் ஈமானிற்கு எதிரிகள் கூட உரைகல்லாக மாறிப்போன அற்புதத்தை அகழ் போரில் நாம் காணலாம்.
பகைவர்களைக் கண்டு, அவர்களுடைய பிரம்மாண்டமான படைகளைக் கண்டு பயப்படாமல், பீதி அடையாமல் பொங்கிப் பொங்கி ஈமான் பிரவாகம் எடுப்பது. உண்மையான இறை நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் தான் என்கிற பேருண்மையும் அங்கே புலப்பட்டது! வாருங்கள், கொஞ்ச நேரம் நாமும் அந்த அகழைச் சுற்றி வருவோம்.
நம்மை சுற்றியும் இன்று அஹ்ஸாபுகள் இருக்கின்றார்கள். அல்லவா? இறை நம்பிக்கையாளர்களின் ‘இதாஅத்’ சற்று சுணங்கிப் போனதால் உஹதுப் போரில் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியை நாம் நன்கு அறிவோம். ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு – ஷவ்வால் மாதம் நடந்த) உஹதுப் போருக்குப் பிறகு ஏற்பட்ட நிகழ்ச்சிகளை நாம் கவனத்தில் கொண்டால் தான் அஹ்ஸாப் போரின் பின்னணியைப் புரிந்து கொள்ள இயலும்.
உஹதுப் போர் முடிந்தவுடன் குறைஷிப் படைத்தளபதியான அபு சுஃப்யான், இறைத்தூதர் அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையும், முஸ்லிம்களையும் பார்த்தது, “அடுத்த வருடம் பத்ரில் நாம் சந்திப்போம்” என்று கூறினார். ஒரு சஹாபியிடம் சொல்லி அதற்குப் பதில் தந்தார்கள் இறைத்தூதரும்.
“நல்லது. இது எங்களுக்கும், உனக்குமிடையே உறுதியாகி உஹதுப் போர் முடிந்து மதீனா திருப்பி வந்த பின்பும் இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மனதில் ஒரு சிறு நெருடல் இருந்தது.
பகைவர் மீண்டும் திருப்பி வந்து தாக்கக் கூடும் என்பதே அது!
எனவே இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பகைவரைப் பின் தொடர்ந்து செல்வது நல்லது என்று கருதினார்கள். அது போர் நடந்த மறுநாள். பெரும்பாலான முஸ்லிம்கள் காயமடைந்து இருந்தார்கள். நிறைய வீடுகளில் நெருங்கிய உறவினர்கள் ஷஹீதான சோகம் அகலாமல் இருந்தது. உயிருக்குயிரான தோழர் ஹம்ஸா (ரழியல்லாஹு அன்ஹு) ஷஹீதான தழும்பு இறைத்தூதரின் மனதிலும், அது போக பல காயங்கள் உடலிலும் இருந்தன!
ஈமானிய செல்வத்தை உள்ளங்களில் குறைவின்றி கொண்டிருந்த அந்த தியாக சீலர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் (அவர்கள் எத்தகைய நம்பிக்கையாளர்கள் என்றால், போரில்) “தமக்குக் காயங்கள் ஏற்பட்ட பின்னரும், அல்லாஹ்வு(டைய அழைப்பு)க்கும், தூத(ருடைய அழைப்பு)க்கும் அவர்கள் பதில் அளித்தார்கள்.” (ஆல இம்ரான் 172)
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நினைத்தது அப்படியே நடந்தது. போர்க்களத்தை விட்டு திரும்பிச் சென்ற காஃபிர்கள் “அடடா! என்ன காரியம் செய்து விட்டோம்!” என்று நொந்து கொண்டார்கள். மீண்டும் திரும்பிச் சென்று மதீனாவைத் தாக்க விரும் பினார்கள். இங்கே இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 630 தியாக நெஞ்சங்களோடு புறப்பட்டு வந்து ஹம்ராவுல் அஸத் என்ற இடத்தில் முகாமிட்டார்கள்.
மதீனாவைத் தாக்க திரும்பி வந்த அபுசுஃப்யான் மதீனாவுக்கு 36 மைல் தொலைவில் தௌருர் ரவ்ஹா எனும் இடத்தில் தன்னுடைய 2978 போர் வீரர்களோடு தங்கியிருந்தார். இறைத்தூதர் (ஸல்லல்லாஹு வஸல்லிம்) விவேகத்துடன் பின் தொடர்ந்து வந்ததால் எதிரிகள் மக்காவிற்று திரும்பி விட்டனர். அது மட்டுமல்லாமல், இஸ்லாமிய அமைப்பை வழிநடத்துபவர் கூர்ந்த மதி படைத்த ஓர் ஒப்பற்ற தலைவர் என்பதும், அவர் சொன்னால், அதை அப்படியே செய்து காட்டும் செயல் வீரர்கள் முஸ்லிம்கள் என்பதும் சுற்றியுள்ள பகைவர்கள் அனைவருக்கும் புரிந்து போனது.
உஹதுப் போருக்கு பின் மதீனாவைச் சுற்றியுள்ள கோத்திரத்தார் அனைவர் உள்ளங்களிலும் மதீனாவில் புதிதாய் வேரூன்றி உள்ள இஸ்லாமிய அமைப்பை அடியோடு அழித்திட வேண்டும் என்கிற வெறி வளர்ந்து கொண்டே போனது. உஹது போர் நடந்த இரண்டு மாதங்களுக்குள் ‘நஜ்த்’ பகுதியைச் சேர்ந்த பனூ அஸத் குலத்தினர் மதீனாவின் மீது தாக்குதல் தொடுக்க உள்ளதாக இறைத்தூதர் (ஸல்லல்லாஹு வஸல்லிம்) அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்களை அடக்க இறைத்தூதர் நபி (ஸல்லல்லாஹு வஸல்லிம்) அவர்கள் அபுஸல்மா (ரழியல்லாஹு அன்ஹு)* தலைமையில் 150 பேர் கொண்ட ஒரு *உம்முல் முஃமினீன் அன்னை உம்மு ஸல்மா (ரழியல்லாஹு அன்ஹா)வின் முதல் கணவர்(ஸரிய்யா)** அனுப்பினார்கள். திடீரென்று இப்படையைக் கண்டதும் கதி கலங்கிப் போன பனூ அஸத் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடோடிப் போனார்கள். அவர்களுடைய அனைத்து செல்வமும் முஸ்லிம்களுக்கு கிடைத்தது.
ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு சஃபர் மாதம் ‘அழல்’ மற்றும் ‘காரஹ்’ குலத்தினர் தமது பகுதியில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய சில பேர்களை அனுப்பி வைக்குமாறு இறைத்தூதரிடம் கேட்டுக் கொண்டனர். இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆறு பேர்களை அவர்களோடு அனுப்பி வைத்தார்கள். ஆனால் ரஜீஃ என்ற இடத்தை அடைந்ததும் ஹூஸைல் குலத்து காஃபிர்கள் அந்த அப்பாவி அழைப்பாளர்களை தாக்கும் படி இவர்கள் ஆறு பேர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் (ஃகுபைப் இப்னு அதி மற்றம் ல்:ஜத் இப்னு அத்தஸினா) கைது செய்யப்பட்டு மக்கத்து காஃபிர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பிறகு அதே சஃபர் மாதம் பனூ ஆமிர் குலத்து தலைவர் ஒருவரின் கோரிக்கையை ஏற்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தப்லீக்கிற்காக அன்ஸாரிகள் 70 பேர்களை (ஓர் அறிவிப்பின் படி 40 பேர்) அனுப்பி வைத்தார்கள். நஜ்த்-ஐ நோக்கி அவர்கள் புறப்பட்டார்கள். ஆனால் அவர்களும் ஏமாற்றப்பட்டார்கள். பிஃரு மஊனா என்ற இடத்தை அடைந்ததும் உய்யா, ரிஃல் மற்றும் திக்வான் குலத்தினர் திடீரென்று தாக்கி அவர்கள் (இரண்டு பேரைத் தவிர மற்ற) அனைவரையும் கொன்று இதே கால கட்டத்தில் (ரபீவுல் அவ்வல், ஹிஜ்ரி4) மதீனாவில் வசித்து வந்த யூதர்களான பனூநளீர் குலத்தினர் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர். இதை அறிந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ‘பத்து நாட்களுக்குள் மதீனாவை விட்டு சொத்து, பத்துக்களோடு வெளியேறி விட வேண்டும். இல்லையென்றால், எங்கே கண்டாலும் கொல்லப்படுவீர்கள்’ என்று காலக்கெடு நிர்ணயித்து அறிவித்தார்கள்.
மதீனா முனாஃபிக்குகளின் ‘மாபெரும்’ தலைவரான அப்துல்லாஹ் இப்னு உபை, அந்த யூதர்களிடம் ‘என்ன ஆனாலும் சரி, தைரியமாக இருங்கள்! மதீனாவை விட்டு ஒரு போதும் சென்று விடாதீர்கள். நாங்கள் இரண்டாயிரம் பேர் உங்களுக்கு உதவவே உள்ளோம். அது மட்டுமல்லாமல் பனூ குறைழா **இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நேரடியாகப் பங்கு பெறாத போர்கள் ‘ஸரிய்யா’ என்று அழைக்கப்படும். இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கலந்து கொண்டிருந்தால் ‘கஸ்வா’ என்று மற்றும் நஜ்த்பகுதியைச் சேர்ந்த பனு கத்ஃபான் உங்களுக்கு உதவ வருவார்கள்’ என்று கூறினான். அதை நம்பிய பனூ நளீர், “நாங்கள் மதீனாவை விட்டுப் போக தயாரில்லை. உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்” என்று இறைத்தூதருக்கு சொல்லி அனுப்பினர்.
காலக்கெடு முடிந்தவுடன் இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முற்றுகையிட்டார்கள். ‘உதவ வருவோம் கண்டிப்பாக’ ‘ஓடிப்போய் விடாதே’ என்றெல்லாம் வக்கணை பேசியவர்களுக்கு துணிச்சல் வரவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் பனூ நளீர் ஆயுதங்களை கீழே போட்டார்கள். மூன்று நபர்களுக்கு ஓர் ஒட்டகை வீதம், அதில் எவ்வளவு சாமான்களை ஏற்ற முடியுமோ, ஏற்றிக் கொண்டு ஊரைக் காலி செய்து விடுவதாக ஒப்புக் கொண்டார்கள். இவ்வாறு பனூ நளீர் வசித்து வந்த மதீனாவின் புற நகர்ப் பகுதிகள் தோட்டம், துரவுகளோடு, அவர்கள் விட்டுச் சென்ற செல்வத்தோடு முஸ்லிம்களின் கைகளில் வந்து சேர்ந்தன. ஒப்பந்தத்தை மீறி நடந்த இந்த நம்பிக்கைத் துரோகிகள் ஃகைபர், வாதியுல்குரா மற்றும் சிரியா பகுதிகளில் சிதறிப் போனார்கள்.
அதே போன்று பனூ கக்ஃபானைச் சார்ந்த பனூ ஃதஃலகா, பனூ முஹாரிப் என்ற இரு கோத்திரத்தாரும் மதீனாவின் மீது தாக்குதல் தொடுக்க தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். இது ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு ஜமாதுல் அவ்வல் வாக்கில்! அவர்களுக்கு எதிராகப் புறப்பட்ட படையில் இறைத்தூதரும் கலந்து கொண்டார்கள். தாதுர் ரிகாஃ என்ற இடத்தில் முகாமிட்ட இஸ்லாமிய படை திடுதிடுப்பென்று பனூகத்ஃபானுக்கு முன்னால் சென்று இறங்கியது. அரண்டு போன எதிரிகள் தங்களுடைய சொத்து சுகங்களை எல்லாம் விட்டு விட்டு மலைகளின் பின்னால் ஓடி ஒளிந்தனர்.
ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு ஷஃபான் மாதம் ஏற்கனவே உஹதுப் போரில் அபுசுஃப்யான் விட்ட சவாலை எதிர்கொள்ள தயாரிப்புப் பணிகளில் இறங்கினார்கள் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆனால் அக்கால கட்டத்தில் மக்காவில் கடும் பஞ்சம் நிலவியது. எனவே தந்திரமாகச் சிந்தித்த அபு சுஃப்யான் ஓர் ஆளை மதினாவிற்கு அனுப்பி வைத்தார்.
‘முஸ்லிம்களைத் தாக்கி அடியோடு இல்லாது ஒழிக்க குறைஷிகள் மிகப் பெரிய படை ஒன்றைத் திரட்டுகின்றார்கள்’
‘அரபுலகில் யாரும் அப்படையை எதிர்த்து நிற்க முடியாது’, என்பது போன்ற வதந்திகளை அவன் மதீனாவில் பரப்ப ஆரம்பித்தான். இதனால் முஸ்லிம்கள் பயந்து போய் வீடுகளுக்குள் முடங்கிக் கொள்வார்கள். சவாலைச் சந்திக்க வராத கோழைகள் என்று பழியை அவர்கள் மீது போட்டு விடலாம் என்று எதிரிகள் திட்டமிட்டனர். அவர்களுடைய திட்டம் ஓரளவு வெற்றியும் பெற்றது. எதிரிகளைச் சந்திக்க எழுச்சியோடு கிளம்புங்கள் என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அறைகூவல் விடுத்தபோது முஸ்லிம்களிடமிருந்து ஆதரவுக் குரல்கள் எழவில்லை.
‘யார் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி. தனியாளாகச் சென்று நானே எதிரிகளைச் சந்திப்பேன்.’ என்று பொது மக்கள் மத்தியில் பகிரங்கமாக இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) புறப்பட்டு நின்றார்கள். அதைக் கேட்டதும் உயிரைத் துச்சமென மதித்து ஆயிரத்து ஐநூறு தோழர்கள் தோள் தட்டிப் புறப்பட்டார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பத்ரை நோக்கிக் கிளம்பினார்கள். அங்கே அபு சுஃப்யானும் இரண்டாயிரம் வீரர்களோடு கிளம்பி வந்தார். ஆயினும் மர்ருழ் ழஹரான் (தற்போதைய ஃபாத்திமா பள்ளத்தாக்கு) என்ற இடத்தை அடைந்ததும் மேலே முன்னேற விரும்பாமல் திரும்பி விட்டார். இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எட்டு நாட்கள் பத்ரில் காத்திருந்தனர். அந்நாட்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முஸ்லிம்கள் வியாபாரக் குழுக் களோடு வியாபாரம் செய்தனர்
“உங்களுக்கு எதிராகப் பகைவர்கள் (பெரும்படையாகத்)திரண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு பயப்படுங்கள்” என்று மக்கள் அவர்களிடம் கூறினார்கள். அதனைக் கேட்டு அவர்களின் இறை நம்பிக்கை இன்னும் அதிகமாகி விட்டது. அது மட்டுமல்ல, “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்” என்றும் கூறினார்கள். இறுதியில் அவர்கள் அல்லாஹ்வின் பெருங் கொடைகளையும், அருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. இன்னும் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தின் படி நடந்தார்கள் (என்ற சிறப்பும் அவர்களுக்குக் கிடைத்தது). மேலும், அல்லாஹ் மகத்தான கொடையாளனாக இருக்கிறான். தன் நண்பர்களைக் கொண்டு உங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தவன் ஷைத்தானே! (என்பது இப்போது உங்களுக்குப் புரிந்து விட்டது.) எனவே நீங்கள் உண்மையிலேயே இறை நம்பிக்கை உடையவர்களானால் (இனி) அம்மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்!” (ஆக உஹதில் ஏற்பட்டிருந்த பீதியை இச்சம்பவம் இன்னும் ஊதிப் பெரிதாக்கியது. இனிமேல் குறைஷிகளால் தனித்து நின்று முஹம்மதை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சமாளிக்க இயலாது என்கிற எண்ணத்தை அரபுலகில் இது வளர்த்தது.
பிறகு நடந்த இன்னொரு நிகழ்ச்சி இந்த எண்ணத்தை மேலும் வலுவாக்கியது. அரபுக்கும், சிரியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் தூமத்தல் ஜன்தல் (தற்போதைய அல்ஜவ்ஃப்) என்ற முக்கியமான இடம் இருந்தது. இராக், சிரியா மற்றும் எகிப்துக்கு செல்லும் அரபு வாணிபக் குழுக்கள் இவ்வழியாகத் தான் சென்று வந்தன. வியாபாரக் குழுக்களை குறுக்கிட்டுத் தடுத்தும், கொள்ளையடித்தும் இப்பகுதி மக்கள் பெரும் தொந்தரவு கொடுத்து வந்தனர். அவர்களை அடக்கி ஒடுக்குவதற்காக ஆயிரம் படைவீரர்களோடு ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் தாமே தலைமையேற்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) புறப்பட்டார்கள். இறைத்தூதரை எதிர்க்கும் துணிவு அவர்களுக்கு வரவில்லை. ஊரைக் காலி செய்து ஓடி விட்டனர்.
இதன் காரணமாக வடக்கு அரேபியாவை மதீனாவைப் பற்றிய பயம் கவ்விக் கொண்டது. மதீனாவை மையங்கொண்டு ஆண்டு வரும் இஸ்லாமிய அரசமைப்பை ஒன்றிரண்டு அரபுகுலங்கள் எதிர்த்து நின்று ஜெயிக்க முடியாது என்ற எண்ணம் வலுப்பெற்று வந்தது.
“குறைஷிகளுக்கும், முஸ்லிம் அமைப்புக்கும் இடையே ஒரு மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. ‘ஜாஹிலிய்யா’ அமைப்பு என்பது இயல்பாகவே வளர்ச்சியடைய முடியாத, தேங்கிப் போன ஓர் அமைப்பு. ஆரோக்கியமான எந்த முன்னேற்றமும் இல்லாமல் அது நாளுக்கு நாள் இளைத்துக் கொண்டே போகும் தன்மை உடையது. குறைஷிகளிடம் அது அப்பட்டமாக வெளிப்பட்டது.
அது மட்டுமல்லாமல் மக்காவிலிருந்து ஒருவரோ, இருவரோ மதீனாவுக்கு ஸெல்வது தினந்தோறும் தொடர்ந்தது. மதீனாவில் உள்ள அமைப்போ ஒரு கொள்கை அமைப்பு. வாய்மையை நோக்கி மக்களை அழைக்கும் மக்கள் அழைப்பு. ஆரோக்கியமாக வளர்ந்து வரும் வாழ்வு நெறி. எனவே அது செயல் படுகின்ற, இயங்குகின்ற ஓர் இயக்கம். ஆகையால் காலங்களை கடந்து முன்னேறிச் செல்வது என்பது அதற்கு இலகுவாக இருந்தது. ஆட்களின் எண்ணிக்கையிலும், ஒழுக்கப் பயிற்சி அளிப்பதிலும், ஒப்பந்த உறவு களை மேம்படுத்துவதிலும், தற்காப்புக்கலையை வளர்த்துக் கொள் வதிலும், எல்லைப் பகுதிகளை விரிவாக்குவதிலும் மதீனா நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் முன்னேறிக் கொண்டே இருந்தது. குறைஷிகளுடைய வியாபாரக் குழுக்களைத் தடுத்து பொருளாதார ரீதியாக முட்டுக்கட்டை போடுவதில் இஸ்லாமிய அரசு ஆளுமை பெற்று விளங்கியது.
மக்கா பொருளாதார சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் அபாயம் (நயீம்சித்தீக்கி. ‘முஹ்ஸினே இன்ஸானிய்யத்’ பக்கம் – 457)உஹதுக்குப் பிந்தைய இரண்டு வருடங்களில் (சவால் விட்டபடி போரிடாமல் போனதால் இரண்டு வருடங்கள்) எத்தனையோ இடர்ப் பாடுகள். சோதனைகளுக்கு இடையிலும் இறைத்தூதரையும் அருமை சஹாபாக்களையும் கொண்ட மதீனாவின் இஸ்லாமிய அரசு எழுச்சி யோடு நிமிர்ந்து நின்றது. குறைஷிகள் ஒரு வருடம் தள்ளிப் போட்டதால் மதீனாவை எதிர்க்க அவர்கள் மேற்கொண்டு இன்னும் வலிமையை திரட்ட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். தனித்து நின்று அவ் வலிமையை அடைய அவர்களால் இயலவில்லை. எனவே, இஸ்லாமிய அரசை விரோதியாக நினைக்கும் பல தரப்பட்ட குலங்களையும், பகைவர்களையும் ஒன்று திரட்டி ஒரு ‘கூட்டணி’ அமைக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது.
மதீனாவிலிருந்து துரத்தி அடிக்கப்பட்டு ஃகைபர், வாதியுல்குரா போன்ற பகுதிகளில் வசித்து வந்த பனூ நளீர் யூதத் தலைவர்கள் இக் கூட்டணியை அமைப்பதில் பெரும் பங்கு ஆற்றினர். சலாம் பின் அபி ஹூகைக், மற்றும் ஹவ்ஸா பின் கைஸ், அபு அம்மார் (பனூ வாயில்), சலாம் பின் முஷ்கிம், கினானா பின் ரபீ (பனூ நளீர்) போன்ற யூதத்தலை வர்கள் ஒரு குழுவாகச் சென்று குறைஷியரை சந்தித்தனர். அவர்களுக் கிடையில் உறுதியான ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டது. அதன் அடிப் படையில் குறைஷிகள் போருக்குத் தேவையான ஆயுதங்களையும், தளவாடங்களையும் ஏராளமாக சேகரிப்பதில் இறங்கினர். பிறகு ஹூதய்ல் குலத்தாரையும் சந்தித்து இஸ்லாமிய அரசுக்கு எதிராக அவர்களைத் தூண்டி விட்டனர். இவ்வாறாக ஆசை காட்டியும், லஞ்சம் கொடுத்தும் பலதரப்பட்ட அரபுக் குலத்தினரையும் முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்று திரட்டுவதில் இந்த யூதர்கள் முனைந்து செயல்பட்டனர்.
இறுதியில் அபுசுஃப்யான் தலைமையில் குறைஷிகள் நான்காயிரம் வீரர்களோடு கிளம்பினர். ழஹ்ரான் பனூ சலீம் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். அது தவிர பனூ அஸத், ஃபுஸாரா, அஷ்ஜஃ மற்றும் பனூ* முர்ரா – வும் சேர்ந்து கொண்டனர். உஜய்னா பின் ஹசன் தலைமையில் கத்பான்களும் வந்து சேர்ந்தனர். இவ்வாறாக படையினரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கியது.
ஹஸன் தலைமை தாங்கினார். ஹாரிஸ் பின் அவ்ஃப், பனூ முர்ராவுக்கும், மிஸ் அர் இப்னு ருஃகய்லா, பனூ அஷ்ஜஃ – வுக்கும் தலைமை தாங்கினார். படைத்தளபதியாக அபுசுஃப்யான் இப்னு ஹரப் திகழ்ந்தார். கத்ஃபான் படைக்கு உஜய்னா பின் ஹசன் ஃபுஸாரியும், பனூ அஸதுக்கு தல்ஹாவும் தலைமை தாங்கியதான இப்னு சஅத் கூறுகிறார். ஒட்டு மொத்தமாக இவ்வளவு பெரிய படை ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் குட்டி நகரமான மதீனாவின் மீது தாக்குதல் தொடுத்தது. இதற்கு முன்பு இது போன்றதொரு வெறிகொண்ட படையை, தாக்குதலை அரபுலகமே கண்டதில்லை என்றும் கூறலாம்.
மதீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, ஃகைபர் வாதியுல், குரா பள்ளத்தாக்குகளில் வசித்து வந்த பனூ நளீர், பனூ கைனுகா யூதர்கள் வடக்குப் புறமாக வந்தனர். கிழக்கிலிருந்து கத்ஃபான் தலைமையிலான படையினர் (இதில் பனூ சலீம், ஃபுஸாரா, முர்ரா, அஷ்ஜஃ, சஅத், மற்றும் பனு அஸத் குலத்துப் படையினர் அடங்குவர்) தாக்க வந்தனர். மேற்கிலிருந்து குறைஷிகள் தங்கள் தோழமை அணியினரோடு திரண்டு வந்தனர்.
இங்கே குறிப்பிட்டுள்ள இவர்கள் அனைவரும் அரபு குலங்கள் ஆவர். எந்த விதமான தகவலும் முன் கூட்டியே தெரியாத நிலையில் இவ்வளவு பெரும்படை திடுதிடுபென்று வந்து தாக்கினால் என்ன ஆகும்? ஆனால், அப்படி ஒன்றும், உமதீனாவில் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை. தூமத்துல் ஜன்தல் பயனத்தின் போதே இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு குறைஷிகள் படைதிரட்டுவதைப் பற்றிய தகவல் குறைஷியரிடம் இருந்தே வந்து சேர்ந்து விட்டது. அதன் காரணமாகவே இறைத்தூதர் பயணத்தை விரைவில் முடித்துக் கொண்டு ஊர் திரும்பி விட்டார்கள்.
“தேசிய வாதத்தை பற்றிப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் கொள்கைகளுக்கும், கொள்கை அடிப்படையில் அமைந்த ஓர் இயக்கத்திற்கும் உள்ள வித்தியாசம் இது தான்! எது நடந்தாலும், என்ன ஆனாலும் தனது சமுதாயத்தையே ஆதரிக்க வேண்டும் என்ற விதியோடு இனவெறிக் கொள்கைகள் இயங்குகின்றன. ஆனால் அற்புதமான அடிப்படையைக் கொண்ட ஒரு கொள்கை தனக்கு ஆதரவாளர்களை *‘பனூன்’ என்பது சந்ததியை தலைமுறையை குறிக்கும் சொல். ஒரு பெருந்தலைவரின் சந்ததியினர் அவர் பெயரால் அழைக்கப்படுவது வழக்கம்! குர்ஆனிலும் ‘பனூ இஸ்ராயீல்’ என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்க!
நாலாபுறங்களிலும் பெற்றிருக்கும். எதிராளிகளிலிருந்து சில நல்ல உள்ளங்களை தனக்கு சாதகமானவர்களாக பெற்றிருக்கும்.” (மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி, தஃப்ஹீமுல் குர் ஆன், பாகம் – 4 பக்கம் – 58)
பகைவர் படையை எப்படி சமாளிப்பது என்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மதீனாவில் நடந்தது. ஸல்மான் ஃபார்ஸி (ரழியல்லாஹு அன்ஹுயல்லாஹு அன்ஹு)யின் ஆலோசனையின் படி மதீனாவைச் சுற்றிலும் தற்காப்புக்காக அகழ்க்குழிகள் தோண்டலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.
‘அகழ்’* என்பது அராபியர்களுக்கு முன்பின் அறிமுகமாகாத ஒன்று! அகழைத் தோண்டும் தற்காப்புக் கலையால் குறைந்த எண்ணிக்கையிலான படையைக் கொண்டே மிகப் பெரிய எதிரிப்படையைச் சமாளிக்கும் வாய்ப்பு இருந்தது. உயிரிழப்பும் மிகவும் குறைவாகவே ஏற்படும்.
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குதிரை மீதேறி சுற்றிப் பார்த்து அகழ் வெட்ட வேண்டிய பகுதிகளைக் குறித்தார்கள்.
நகரம் மூன்று புறத்திலும் குன்றுகள் மற்றும் தோட்டங்காடுகளால் சூழப்பட்டிருந்தது. ஆதலால் வடக்கு பகுதியில் மட்டும் அகழ் வெட்டினால் போதும். இரு புறமும் உள்ள லாவே பாறைகளை இணைக்கும் விதத்தில், சலஃ குன்றின் மேற்கோரமாக சென்று முடியுமாறு அகழ் வெட்டப்பட வேண்டும்.
இராணுவ நடவடிக்கை ரீதியில் மளமளவென்று வெட்டும் பணி தொடங்கியது.
10 முழ அகலம், 8 முழம் ஆழமுள்ள அகழ் மூன்றரை மைல் நீளத்துக்கு வெட்டப்பட்டது. ஆறு நாட்களுக்குள் இரவும், பகலுமாக வேலை செய்து பணி முடிக்கப்பட்டது. (பனூ குறைழாக்களிடமிருந்து வெட்டுவதற்குத் தேவையான எல்லா உபகரணங்களும் வந்து சேர்ந்தன.)
ஆறு நாட்களில் ஏறக்குறைய ஆறரை கிலோ மீட்டர் தூரம் அகழ் வெட்டுவது என்பது சாதாரண காரியமல்ல. சில பகுதியினர் தங்களுடைய சொந்த பாதுகாப்புக்காக மேலும் நீட்டி தங்கள் பகுதியில் குழி வெட்டிக் கொண்டார்கள்.
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் ஸஹாபாக்களோடு சேர்ந்து இப்பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். மண் சுமந்தும், குழி வெட்டியும் இரவு பகலாக அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பாடுபட்டார்கள்.
போரில் கலந்து கொள்ள வேண்டிய அதே மூவாயிரம் தியாக சீலர்கள் தாம் அகழ் வெட்டும் பணியிலும் ஈடுபட்டார்கள். பத்துப் பத்துப் பேர் கொண்ட குழுக்களாக அவர்கள் பிரிக்கப்பட்டார்கள்.
*ஃகன்தக் என்றால் அகழ். இது ஃபார்ஸி வார்த்தையான ‘கஸ்தர்’ என்பதன் அரபாக்கம்.
குழியும் 20 முழம் (40 சாண் – 9.2 மீட்டர்) அளவுக்கு வெட்ட வேண்டும். குழியின் ஆழமோ 4 3.4 மீட்டர். அப்போது கூட 30,800 சதுர முழம் அளவு குழி வெட்டி, மண்ணை அப்புறப்படுத்துவதென்பது மலைக்க வைக்கும் காரியம்! விளையாட்டு அல்ல!!
மண்ணை அள்ளுவதற்குக் கூட போதுமான அளவு கூடைகள் இல்லை. குறைழா – விலிருந்து வந்தவை எல்லாம் பத்தாது. எனவே அபுபக்ரு, உமர் போன்றவர்கள் எல்லாம் கூட கைகளால் மண்ணை அள்ளி, அள்ளி துண்டுகளிலும், துணிகளிலும் கொட்டி எடுத்துச் சென்று அப்புறப்படுத்தினார்கள்.
வேலையை விரைவாக முடுக்கிட மேடைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே கண்காணிப்பாளர்கள் வேறு, பணியில் இருந்தார்கள். வானத்திலிருந்து வந்து குதித்த ஜின்களைப் போன்று பம்பரமாகச் சுழன்று அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அண்ணலும், ஸஹாபாக்களும் பாட்டுப் பாடியும், கவி புனைந்தும் தங்கள் களைப்பைப் போக்கிக் கொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அகழ் (வெட்டும் பணியைப் பார்வையிடுவதற்காக அந்த இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது குளிரான காலை நேரத்தில் முஹாஜிர்களும், அன்சாரிகளும் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தனர். அவர்களுக்காக அந்தப் பணியைச் செய்வதற்கு அவர்களிடம் அடிமை (ஊழியர்)கள் எவரும் இருக்கவில்லை. அவர்கள் படும் பசியையும், பாட்டையும் கண்ட போது, இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “இறைவா!! வாழ்க்கை என்றால் அது மறுமை வாழ்க்கை தான்! (குறைகளிருந்தால்) மன்னித்து விடு முஹாஜிர், அன்சாரிகளையுந்தான்!” – என்று பாடிய வண்ணம் கூறினார்கள்.
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் ஸஹாபாக்களும், “வாழும் காலமெல்லாம் ஜிஹாதில் நிலைத்திருப்போம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளோமே முஹம்மதுவிடம் அன்று!” (புஃகாரி – கிதாபுல் பராவு (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள் – அகழ்ப் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அகழ் தோண்டினார்கள். அப்போது அவர்கள் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்று கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்களது வயிற்றின் (வெண்மையான) தோலை என்னை விட்டும் மண் மறைத்து விட்டிருந்தது. இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நிறைய உரோமம் உடையவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்கள் மண் சுமந்து கொண்டே இப்னு ரவாஹா அவர்களின் யாப்பு வகைப் பாடல் வரிகளைப் பாடிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன் –
“இறைவா! நீ இல்லையென்றால் எமக்கு நேர் வழி என்பதேது?
தானதர்மம் என்பதேது? தொழகை தான் ஏது?
நிம்மதியைத் தந்தருள் பகைவரைச் சந்தித்து போரிடும் போது!
நிலைத்த உறுதியையும் கற்றுக் கொடு எம் கால்களுக்கு!
வதைத்து அநீதியிழைத்தார்கள் இப்பாவிகள் எமக்கே!
சோதனையில் சிக்க வைக்க நினைத்தால் விடமாட்டோமே ஒரு
‘அபய்னா’, ‘அபய்னா’, (நாங்கள் இடம் தரமாட்டோம் நாங்கள் இடம் தர மாட்டோம்) என்ற கோரஸ் முழக்கம் எதிரொலித்தது கூடவே!
அந்த முழக்கங்களில், பாடல்களில் உயிரோட்டம் தெறித்தது. மதீனாவின் இஸ்லாமிய அரசை அவர்கள் உயிருக்குயிராய் நேசித்தார்கள். மனித குல வெற்றிக்கான இவ்வியக்த்தின் மீது அவர்களுக்கு ஆழமான பற்று இருந்தது. இத்தோடு இன்னொரு முக்கியமான காரணம் அவர்களுடைய ஆசான். இயக்கத் தலைவர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸஹாபாக்களுக்கு இணையாக புழுதியில் நின்று, மண் அள்ளி, கல் சுமந்து வேலை செய்து கொண்டிருந்தார். வேலை துவங்கியவுடன் வீட்டை விட்டு வெளியேறி இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அருகிலுள்ள பாறையின் மீது கூடாரமடித்துத் தங்கினார்கள். (இன்று அவ்விடத்தில் மஸ்ஜிதுத் துபாப் உள்ளது)
பத்து நபர் கொண்ட குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்கள். ஸல்மான் ஃபார்ஸி (ரழியல்லாஹு அன்ஹு) பத்து நபர்களின் வேலையை தனியாளாக செய்து கொண்டிருந்தார்கள். அவர் தமது குழுவில் தான் இடம் பெற வேண்டும் என்று எல்லாக் குழுக்களும் போட்டி போட்டன. எனவே, அதை முடிவுக்குக் கொண்டு வர இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) “ஸல்மான் எங்கள் அஹ்லுல்பைத் குழுவைச் சார்ந்தவர்!!” போட்டியும் குறைந்தது.
ஸல்மானின் பெருமையும் உயர்ந்தது! எந்த விதமான வசதி வாய்ப்பும் இல்லாமல் அல்லாஹ்வின் மீது கொண்டிருந்த ஈமானை மட்டுமே பற்றிப் பிடித்துக் கொண்டு அந்த நம்பிக்கையாளர்கள் காரிருளிலும், கடுங்குளிரிலும் கலங்காது பணி செய்து கொண்டே இருந்தார்கள். பசி அவர்களின் வயிற்றைப் பிசைந்து கொண்டிருந்தது. கெஞ்சிக் கெஞ்சி ஓய்வை கேட்டுக் கொண்டிருந்தன கால்கள். இறைவன் மாபெரும் கருணையாளன். அவனுடைய கருணை பொங்கிக் கொண்டே உள்ளது “கருணை புரிவதை அவன் தன் மீது கடைமை ஆக்கிக்கொண்டான்.” (அல்அன்ஆம்)
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) கூறுவதைக் கேளுங்கள்..
“அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்த போது இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, ‘இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப் போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உணவு) இருக்கிறதா?’ என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதில் ஒரு ‘ஸாவு’ அளவு வாற்கோதுமை இருந்தது. வீட்டில் ஓர் ஆட்டுக்குட்டியை வளர்த்து வந்தோம். அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தாள். நான் (அறுத்து) முடிக்கும் போது அவளும் (அரைத்து) முடித்து விட்டாள். மேலும் அதைத் துண்டுகளாக்கி அதற்கான சட்டியில் போட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் திரும்பி வந்தேன். (நான் புறப்படும் போது என் மனைவி ‘அல்லாஹ்வின் தூதர் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும், அவர்களடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப்படுத்தி விட வேண்டாம். “உணவு கொஞ்சம் தான் இருக்கின்றது’ என்று கூறி விடுங்கள்” என்று சொன்னாள். நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து ரகசியமாக “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்து, எங்களிடம் இருந்த ஒரு ‘ஸாவு’ அளவு வாற் கோதுமையை அரைத்தும் வைத்துள்ளோம். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள்” என்று அழைத்தேன்.
அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உரத்த குரலில், “அகழ் தோண்டுபவர்களே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே விரைந்து வாருங்கள்” என்று அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம்) “நான் வரும் வரை நீங்கள் சட்டியை (அடுப்பி லிருந்து) இறக்க வேண்டாம். உங்கள் குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம்”, என்று கூறினார்கள். நான் திரும்பி வந்தேன். அல்லாஹ்வின் தூதர் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தார்கள். நான் மனைவியிடம் வந்து சேர்ந்தேன். இறைத்தூதர் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி (கோபமுற்று) என்னைக் கடிந்து கொண்டாள். உடனே நான், இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன் என்று கூறினேன். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தாள். இறைத்தூதர் (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதில் (தமது திரு வாயினால்) உமிழ்ந்தார்கள். மேலும், மாவில் பரக்கத் – வளம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள்.
பிறகு இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (என் மனைவியிடம்) “ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழைத்துக் கொள்! அவள் உன்னோடு ரொட்டி சு,டட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொண்டிரு! பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே!” என்று கூறினார்கள். அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர்.
ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள் – “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் அந்த உணவை சாப்பிட்டு விட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போதும் எங்கள் சட்டி நிறைந்தவாறு சப்தமெழுப்பி கொதித்துக் கொண்டிருந்தது! அது (கொஞ்சங்கூட குறையாமல்) முன்பிருந்தது போலவே இருந்தது! மேலும் எங்களுடைய குழைத்த மாவும் (கொஞ்சமும்) குறைந்து விடாமல் முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது.” (புஃகாரி – கிதாபுல் மகாஸி)
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மண் சுமந்தார்கள். உடைக்க முடியாத பாறை தென்பட்ட போது அதை உடைத்தும் தந்தார்கள். “நாங்கள் அகழ்ப்போரின் போது அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம். அப்போது கெட்டியான பாறாங்கல் ஒன்று வெளிப்பட்டது. (எவ்வளவோ முயன்றும் எங்களால் அதை உடைக்க முடியவில்லை. உடனே இது பற்றித் தெரிவிக்க) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சென்று ‘இதோ ஒரு பாறாங்கல் அகழில் காணப்படுகின்றது’ என்று கூறினோம். அதற்கு இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘நான் இறங்கிப் பார்க்கிறேன்’ என்று கூறி விட்டு எழுந்தார்கள். அப்போது அவர்களது வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டிருந்தது. (ஏனெனில்) நாங்கள் மூன்று நாட்கள் எதையும் உண்ணாமலிருந்தோம். பிறகு இறைத்தூதர் அவர்கள் குத்துக் கோடாரி (ணீடிஞிடுச்துஞு) எடுத்து பாறை மீது அடித்தார்கள். அது குறுமலைகளாக மாறியது.” என்று ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள். (புஃகாரி – கிதாபுல் மகாஸி)
இஸ்லாமியப் பணிகளைச் செய்யும் போது யாரேனும் ஒருவர் சிறப்புச் சலுகையை எதிர் பார்ப்பதோ, அந்தஸ்த்துக்கு ஆசைப்படுவதோ கூடாது. அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) – இஸ்லாமியத் தலைவர் – அவர்களே களத்தில் தோழர்களோடு தோழராக நின்று பணிபுரிந்ததால் இந்த நிலைமை ஏற்படவில்லை. இறைத்தூதர் தானே அழகிய முன் இராணுவத் தளபதியாக படையை சீர்படுத்தி வழிநடத்துவதில் நிகரற்றவர் என்பதை ஏற்கனவே இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நிரூபித்துக் காட்டியிருந்தார்கள்.
இப்போது இங்கு அகழ் தோண்டும் போதும் அற்புதமான ஒழுங்கு முறையை கைக் கொண்டார்கள். கண்காணிப்பு மேடைகள் ஆங்காங்கு அமைக்கப்பட்டிருந்தன. வார்டர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். ஆள் மாறி ஆள்மாறி அவர்கள் கண்காணித்தனர். முஸ்லிம் சிப்பாய்களுக்கென இரகசிய சங்கேத வார்த்தைகள் உருவாக்கப்பட்டன. இவ்வளவு இருந்த போதிலும் ஓர் இரவு இரண்டு முஸ்லிம் குழுக்களிடையே கைகலப்பு ஏற்பட்டு ஓர் உயிர் பலி கொடுக்க நேர்ந்தது. அகழ் தோண்ட ஆரம்பித்த பின் முடியும் வரை எந்த ஒரு முஸ்லிம் வீரரும் இறைத்தூதரின் அனுமதி யைப் பெறாமல் வெளியே ஸெல்லவில்லை. ஸஹாபாக்களின் ஒரு குழுவின் வேலை முடிந்து விட்டால் நம்முடைய ‘டியூட்டி’ முடிந்து விட்டது என்று அவர்கள் கைகளை உதறி விட்டுச் சென்று விடுவ தில்லை. மாறாக, அடுத்தவருடைய குழுவின் பங்குப் பகுதியில் சென்று அவர்களுக்கு உதவி செய்து, வேலையை விரைவாக முடித்து வைத்தார்கள்.
அகழ் வெட்டும்போது இன்னொரு சம்பவமும் நடந்தது.
முஹாஜிரீன்கள் (உதா – அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்) மற்றும் அன்சார்கள் (உதா – சஅத்பின் உபாதா) கலந்திருந்த ஒரு குழுவின் ஸல்மான் பணியாற்றிக் கொண்டிருந்தார். பெரும் பாறையொன்று எதிர்ப்பட்டது. தகர்க்கவே இயலவில்லை. கோடாரிகளின் கூர் மழுங்கிப் போனது தான் மிச்சம். பாறையைச் சுற்றிக் கொண்டு அகழை வெட்டிக் கொண்டு செல்லவும் மனமில்லை.
இறைத்தூதர் வகுத்துத் தந்த பாதை ஆயிற்றே! எனவே, ஓடோடிச் சென்று இறைத்தூதரையே உதவிக்கு அழைத்து வந்தனர். அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வந்து பார்த்தார்கள். கோடாரியை கையில் வாங்கி (“உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மை….. முழுமையாக உள்ளது”) என்று கூறிக் கொண்டே ஒரே போடாய் போட்டார்கள். மின்னலென ஓர் ஒளிக்கீற்று தெறித்தது. பாறையின் கால்பாகம் பிளந்து போனது.
(“உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும், நீதியும் உள்ளது”) என்று கூறியவாறு மீண்டும் அடித்தார்கள். இன்னொரு பாகம் கழன்று போனது. பிறகு மூன்றாம் முறையாக (“உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும் நீதியும் உள்ளன. அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் யாரும் இல்லை!”) என்று கூறினார்கள். பாறை முழுவதுமாய் தூள் தூளானது. பிறகு, அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஸல்மான் (ரழியல்லாஹு அன்ஹு) இறைத்தூதரை அணுகி, ‘அண்ணலே! தாங்கள் ஒவ்வொரு முறை அடிக்கும் போதும் ஓர் ஒளிக் கீற்று வெளிப்பட்டதே! என்ன அது?’ என்று கேட்டார்.
அதற்கு இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘ஸல்மானே!’ நீங்கள் கவனிக்கவில்லையா? முதல் ஒளிக் கீற்றில் யமன், மாளிகைகளை நான் பார்த்தேன். (அவற்றை முஸ்லிம்கள் வெற்றி கொள்வர்!) இரண்டாவது ஒளிக்கீற்றில் ரோமானியர்களின் சிவப்பு அரண்மனையைக் கண்டேன். (அவற்றையும் வெற்றி கொள்வர்!) மூன்றாவது ஒளிக்கீற்றில் மதாயின் (கிஸ்ராவின்) மாளிகைகளைக் கண்டேன்!’ என்று கூறினார்கள். இறைவனுடைய, இறைத் தூதருடைய வாக்குறுதியாகும் இது! இவை உண்மையென காலம் நிரூபித்தது.
ஆறு நாட்களில் அகழ் வெட்டும் வேலை முடிவடையுவும், எதிரிகளின் படை ஆரவாரத்தோடு வந்து சேரவும் சரியாக இருந்தது. மதீனாவின் பெண்களும், குழந்தைகளும் நகருக்குள்ளே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை மதீனாவின் பிரதியாக இறைத்தூதர் நியமித்திருந்தார்கள். பெண்களுக்குப் பொறுப்பாளராக ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் (ரழியல்லாஹு அன்ஹு) நியமிக்கப் பட்டிருந்தார்.
எதிரிகளின் எண்ணிக்கை மலைக்க வைக்கும் அளவு இருந்தது. ஏறக்குறைய பத்தாயிரம், பன்னிரண்டாயிரம் பேர்கள், குதிரைகளோடு ஏராளமான ஆயுதங்கள். ஏற்கனவே அகழ் வெட்டிக் களைத்துப் போயிருந்த முஸ்லிம் வீரர்கள் எதிரிகளைப் பார்த்தவுடன் திகைத்துப் போனார்கள். பசியும், பட்டினியும் தவிர அவர்களிடம் வேறு எந்த ஆயுதமும் இல்லை. ஒரு புறம் எதிரிகள் குவிந்து கிடக்கின்றார்கள். இன்னொரு புறமோ கட்டுச் சோத்துக்குள் எலிகளாக உள்ளுக்குள்ளேயே இருக்கின்ற முனாஃபிக்கீன்கள் வீண் பயத்தையும், வதந்திகளையும் கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.
மனங்களில் ஈமானுக்கு பதிலாக கோழைத்தனத்தையும், சந்தர்ப்பவாதத்தையும் நிரப்பியிருந்த இரட்டை வேட முனாஃபிக்கீன்கள் இறை நம்பிக்கையாளர்களின் ஈமானுக்குள் இன்னொரு அகழை வெட்ட முயற்சித்துக்
“அந்த(க் கடுமையான) நேரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் நன்கு சோதிக்கப்பட்டார்கள். மேலும் கடுமையாக அலைக்கழிக்கப்பட்டார்கள்.” – அல் அஹ்ஸாப் – 11)
ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு ஷவ்வால் மாதம் எதிரிப்படைகள் வந்து சேர்ந்தன. குறைஷிகள், பனூ கினானா மற்றும் அஹாபீஷ் (அல்லது அஹ்பாஸ்) ‘அதீக் பள்ளத்தாக்கு’க்கு அருகில் ‘பிஃரு ரோமா’ என்ற இடத்தில் முகாமிட்டார்கள். பனூகத்ஃபான் மற்றும் பனூ அஸஃத் கிழக்குப் புறமாக நுஃமான் பள்ளத்தாக்குக்கு அருகில் ‘ஃதன்புந் நுஃமா’ என்ற இடத்திலிருந்து உஹது மலைக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் கூடாரமடித்தார்கள். இங்கே இஸ்லாமியப் படையினர் ஸல்ஃ குன்றுக்கு முன்பாக அணி திரண்டு நின்றார்கள். (படையினரைக் கண்காணிக்க இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூடாரமடித்துத் தங்கிய இடத்தில் இன்று ஃபதஹ் பள்ளி வாஸல் உள்ளது.)
எண்ணிக்கையில் பெருமளவு இருந்து என்ன பயன்? எதிரே இதற்கு முன்பு எங்கேயும் பார்த்திராத பெரும் அகழ்க்குழியைக் கண்டவுடன் ‘இதோட வம்பு’ என்றவாறு திகைத்துப் போய் குதிரைகளிலிருந்து குதித்து இறங்கினர் எதிரிகள். சுற்றிச் சுற்றி வந்தனர். தாண்டிச் ஸெல்லவோ தாக்கவோ எந்த வழியும் புலப்படவில்லை அவர்களுக்கு! குதிரைகள் குழியைக் கண்டு மிரண்டு போய் பின் வாங்கின. அப்படியும் மீறி ஒரு சிலர் வேகமாக வந்து அகழைக் கடக்க நினைத்து தவறி விழுந்து இறந்து போயினர். ஒரு சில இடங்களில் அகழைக் கடக்க முயற்சி செய்யும் போது முஸ்லிம் படையினரிடமிருந்து சராமாரியாக அம்புகள் பாய்ந்து வந்தன. நாள்தோறும் இங்கிருந்தும், அங்கிருந்தும் அம்புகள் மட்டுமே பறந்து, பறந்து வந்தன. ஒரு வகையான ‘விநோதமான’ முற்றுகை நீடித்துக் கொண்டிருந்தது.
அபுசுஃப்யான், ஃகாலித் பின் வலீத், அமரிப்னுல் ஆஸ், ழிரார் பின் அஃக்தல், மற்றும் ஹூபைறா போன்ற பெரும் பெரும் குறைஷித் தளபதிகள் தினந்தோறும் ஒருவராக படைத்தலைமை ஏற்பது என்று முடிவானது. ஒவ்வொருவரும் புதுப் புது உத்திகளைக் கையாண்ட போதும் எதுவும் வெற்றி பெறவில்லைஸ வெறுத்துப் போன் எதிரிகள் ஒரு நாள் இங்கிருந்தும், அங்கிருந்துமாய் தீவிரமாக தாக்குதலைத் தொடுத்தனர். அப்படியும் பெரிதாய் ஏதும் செய்து விட முடியவில்லை அவர்களால்! கடைசியில் குறைஷிகளின் புகழ்பெற்ற வீரரான உமர் இப்னு அப்துவுத்-துக்கு ரோஷம் பொங்கியது. இக்ரிமா பின் அபுஜஹ்ல், ஹீபைரா பின் அபுவஹப், மற்றும் ழிரார்பின் அல்ஃகத்தாப் போன்றவர்களை அவர் தூண்டி விட்டார். பனூ கினானாவைச் சேர்ந்த சிலரையும் துணைக்கு அழைத்துக் கொண்டார். தோதான இடமாகப் பார்த்து அகழில் குதித்து அந்தப் புறமாய் மேலேறி நின்றார். கொக்கரித்துக் கூவி அழைத்தார் முஸ்லிம்களை!
சவாலுக்கு பதிலளிக்க இங்கிருந்து அலி (ரழியல்லாஹு அன்ஹு) கிளம்பிச் சென்றார். கொஞ்ச நேரம் ஒரே புழுதிப்படலமாய் இருந்தது. இறுதியில் ‘அல்லாஹு அக்பர்’ என்றொரு சப்தம் கேட்டது! அல்ஹம்து லில்லாஹ்!! அப்துவுத்-தின் வாள்பட்டு அலியின் நெற்றியில் வெட்டுக்காயம் ஒன்று ஏற்பட்டு விட்டது. “துல் கர்னைன்” என்ற பெயரும் (இரு கொம்புக்காரர் என்ற பெயர்) இதனால் தான் அவர்களுக்கு ஏற்பட்டது. இன்னொரு காயம் இப்னுமுல் ஜிமானால் ஏற்பட்டது.
தொடர்ந்து அலி அவர்களின் “துல்ஃபிகார்” வீரவாள் ழிராரையும் ஹூபைறாவையும் பின்னுக்கு விரட்டியடித்தது. அன்றைய தினம் பெரும் பரபரப்பிலும், களேபரத்திலும் கழிந்தது. முஸ்லிம்களுக்கு பல நேரத்தொழுகைகள் களாவாகிப் போயின.
அகழ்ப்போரின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “எதிரிகளுடைய வீடுகளையும், புதைகுழிகளையும் அல்லாஹ் நெருப்பினால் நிரப்புவானாக ஏனெனில், அவர்கள் சூரியன் மறையும் வரை நடுத் தொழகை – அசர் தொழுகையிலிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள் என்று கூறினார்கள்.” (புஃகாரி :கிதாபுல் மகாஸி)
“பின்னர் ‘புத்ஹான்’ பள்ளத்தாக்குக்கு இறைத்தூதர் அவர்களுடன் நாங்கள் சென்றோம். அங்கே தொழுகைக்காக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒழு செய்தார்கள். நாங்களும் ஒழு செய்தோம். சூரியன் மறைந்த பிறகு அஸரையும், அதன் பின்னர் மக்ரிபையும் நபியவர்கள் தொழுதார்கள்.” (புஃகாரி, கிதாபுல்)
முற்றுகை இரண்டு தரப்பாருக்கும் கடினமாகவே கழிந்தது. எனவே, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு குறைஷிகள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். மதீனாவுக்குள்ளேயே வசித்து வரும் யூதர்களான பனூ குறைழா – வை எப்படியாவது முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி விடுவது என்பது தான் அது! பனூ குறைழா – க்கள் முஸ்லிம்களோடு ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ‘முஸ்லிம்களோடு சமாதானமாய் இருப்போம். பொது எதிரிகளை எதிர்ப்போம். முஸ்லிம்களுக்கு எதிராக எந்த ஒன்றையும் செய்ய மாட்டோம்.’ என்ற ஒப்பந்தம். இப்போது அந்த ஒப்பந்தத்தை மீறி நடக்குமாறு அவர்களைத் தூண்டி விட வேண்டும். யூதத் தலைவரான ஹூயை இப்னு அஃக்தப்* இந்தப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.
பனூ குறைழாவின் தலைவர்களோடு போய்ப் பேசினார். ஒப்பந்தத்தை எந்த வகையிலும் மீற மாட்டோம் என்று அவர்கள் நிராகரித்து விட்டார்கள். ‘அரபுலகமே முஹம்மதுவுக்கு எதிராக திரண்டு வந்திருக்கின்றது. இஸ்லாத்தை அடியோடு ஒழித்துக் கட்ட இது மாதிரி ஒரு பொன்னான வாய்ப்பு எப்போதும் கிடைக்காது’ என்றெல்லாம் தேனொழுகப் பேசி அவர்களை தனது சூழ்ச்சி வலையில் சிக்க வைத்தார் ஹூயை இப்னு அஃக்தப்!
பனூ குறைழா – வினரின் நிலை எப்படி உள்ளது? அவர்கள் எந்த எண்ணத்தில் உள்ளார்கள் என்பதை அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிந்து கொள்ள அகழ் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘எதிரி(களான பனூகுறைழா யூதர்)களின் செய்தியை (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்?’ என்று கேட்டார்கள்
ஸூபைர் பின் அவ்வாம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் முன் வந்து “நான்” என்று கூறினார்கள். மீண்டும் “எதிரிகளின் செய்தியை அறிந்து நம்மிடம் கொண்டு வருபவர் யார்?” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். “நான்” என்று கூறினார்.
பிறகு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “ஒவ்வொரு இறைத்தூதருக்கும் தூய தோழர் ஒருவர் உண்டு. எனது தூய தோழர் (ஹவாரி) ஸூபைர் ஆவார்!” என்று கூறினார்கள். (புஃகாரி கிதாபுல்)
பனூ குறைழாவினரின் நிலையை அறிய இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வேறு சிலரையும் அனுப்பி வைத்தார்கள். ஒரு வேளை அவர்கள் முஸ்லிம்களோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறத் தாயாராக இல்லை என்ற நிலையிலிருந்தால் திரும்பி வந்து மக்கள் முன் பகிரங்கமாகக் கூறி விடும்படியும், நிலைமை அப்படி இல்லை. முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுக்க, நம்பிக்கைத் துரோகமிழைக்க தயாராகி விட்டார்கள் என்பது திட்டவட்டமாகத் தெரிந்து போனால் பகிரங்கமாக அறிவிக்க வேண்டாம் என்றும் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். அதற்கு பதிலாக ஒரு குறியீட்டுச் சொல்லை (இணிஞீஞு தீணிணூஞீ) கூறுமாறு சொன்னார்கள். (அழல், காரஹ்) அதாவது அழல், காரஹ் குலத்தினர் ஏமாற்றியது போல இவர்களும் ஏமாற்ற உள்ளனர் “பகைவர்கள் மேலிருந்தும், கீழிருந்தும் உங்கள் மீது படையெடுத்து வந்தபோது உங்கள் கண்கள் பீதியினால் மருண்டு விட்டன. இதயங்கள் தொண்டைகளை அடைத்துக் கொண்டன! மேலும், நீங்கள், அல்லாஹ்வைப் பற்றி விதவிதமான சந்தேகங்கள் கொள்ளத் தலைப்பட்டீர்கள்.” – அல் அஹ்ஸாப் – 10
குறைஷிகள் மேற்கிலிருந்தும், கத்ஃபான்கள் கிழக்கிலிருந்தும் படையெடுத்து வந்தனர். இவ்வசனம் அதைத்தான் குறிக்கின்றது என்று தான் பெரும்பாலான விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஒரு புறம் குறைஷிகள் தலைமையிலான அஹ்ஸாபும், இன்னொரு புறம் நம்பிக்கைத் துரோகம் செய்யத் துணிந்து விட்ட பனூ குறைழா யூதர்களும் படையெடுத்ததைத் தான் இவ்வசனம் சுட்டிக்காட்டுகின்றது என்று கூறுவோரும் உண்டு.
இரண்டாவது கருத்துதான் சரி என்று நாம் கருதுகின்றோம். இஸ்லாமின் மீதான வெறுப்பும், முஸ்லிம்களுக்குக்கெதிராக எதையும் செய்ய முடியாத கோழைத்தனமும், ஆற்றாமையும், ஒரு வேளை இஸ்லும்ம் வெற்றி பெற்றுவிட்டால் கிடைக்கும் பலனை அனுபவித்துக் கொள்ளலாமே, என்கிற நப்பாசையும், சந்தர்ப்பவதாதமும் தான் (இரட்டை வேட) நயவஞ்சகர்களை உருவாக்குகின்றன! ஈமானில் பலவீனமானவர்களும் முனாஃபிக்கீன்களும் அல்லாஹ்வைப் பற்றியே சந்தேகங்கொள்ளத் தொடங்கி விட்டார்கள். ஈமானே இல்லாதவர்களுக்கு இப்போது இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் எங்கிருந்து வரும் நம்பிக்கை? உள்ளத்தின் ஓரத்தில் கொஞ்ச நஞ்சமாய் சில பேருக்கு ஒட்டிக் கொண்டிருந்த ஈமானும் துடைத்து வழித்தாற் போன்று “குறைஷிகள் மேற்கிலிருந்தும், கத்ஃபான்கள் கிழக்கிலிருந்தும் படையெடுத்து வந்தனர். இவ்வசனம் அதைத்தான் குறிக்கின்றது” என்று தான் பெரும்பாலான விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஒரு புறம் குறைஷிகள் தலைமையிலான அஹ்ஸாபும், இன்னொரு புறம் நம்பிக்கைத் துரோகம் செய்யத் துணிந்து விட்ட பனூ குறைழா யூதர்களும் படையெடுத்ததைத் தான் இவ்வசனம் சுட்டிக்காட்டுகின்றது என்று கூறுவோரும் உண்டு.
உள்ளத்தின் ஓரத்தில் கொஞ்ச நஞ்சமாய் சில பேருக்கு ஒட்டிக் கொண்டிருந்த ஈமானும் துடைத்து வழித்தாற் போன்று
“அந்த நேரத்தை நினைவு கூறுங்கள் -“அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் செய்திருந்த வாக்குறுதிகள் யாவும் ஏமாற்று வேலையே தவிர வேதறொன்றும் இல்லை!” என்று நயவஞ்சகர்களும், மற்றும் உள்ளங்களில் நோய் இருந்தவர்களும் வெளிப்படையாகக் கூறிக் கொண்டிருந்தார்கள்.” –
“அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டால் அது கிடைக்கும், இது கிடைக்கும். அதிகாரம் கிடைக்கும். அமைதியான வாழ்வு கிடைக்கும் என்றெல்லாம் உங்கள் ஆள் கதை விட்டுக் கொண்டிருந்தாரே, அவையெல்லம் எங்கே போயின?” என்று அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
‘யமன் தேசத்து மாளிகைகளை வெற்றி கொள்வோம். ரோம தேசத்து வீதிகளில் வீர நடை போடுவோம். கிஸ்ராவின் அரண்மனைகளை கைக் கொள்வோம் என்றெல்லாம் இந்தத் ‘தூதர்’ பாறைமின்னலில் பகல் கனவு கண்டாரோ, அதெல்லாம் எங்கே?’
நிலைமையோ படு மோசம் என்ன நடக்குமோ, என்ன ஆகுமோ என்று ஒன்றும் புரியாத நிலை. தேக்கு மரங்களே கலங்கி நிற்கும் போது, வைக்கோல் குப்பைகள் என்ன செய்யும்? பின்னங்கால் பிடறியில் பட தலை தெறிக்க உஹதிலிருந்து திரும்பி ஓடி வந்தவர்கள் தானே இவர்கள்! ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி போர்க்களத்திலிருந்து திரும்பிப் போக ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று காத்துப் பூத்துக் கிடந்தவர்களுக்கு கட்டிச் சர்க்கரையாய் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ‘பனூ குறைழா – யூதர்கள் பின்புறமாய் வந்து எங்கள் வீடுகளைத் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே எங்களுக்கு அனுமதி கொடுங்கள்’ என்று விண்ணப்பித்தனர்.
ஓர் உண்மையான இறை நம்பிக்கையாளன் அல்லாஹ்வுக்காக, நாளை மறுமையில் நிலைத்த சுவன வாழ்வைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் இஸ்லாமிய இயக்கத்தில் பாடுபடுகின்றான். போராடுகின்றான். இஸ்லாமிய அமைப்புக்கு ஓர் இன்னல் நேரப்போகின்றது என்றால் அதற்காக அவன் தனது சுக, துக்கங்களைத் துறந்து விட்டு, தான் வீட்டில் இருந்தால் கிடைக்கும் இன்பங்களை மறந்து விட்டு இஸ்லாத்திற்கு தியாக உணர்வோடு புறப்படுகின்றான். அத்தகைய அடியானை அல்லாஹ்வும் நேசிக்கிறான். அவன் மீது அருள் மழை பொழிகின்றான்.
“அல்லாஹ் அவர்களை நேசிப்பான், அவர்களும் அல்லாஹ்வை நேசிப்பார்கள்” – அல்மாயிதா – 54
ஒரு வேளை உண்மையிலேயே அவன் வீட்டில் பிரச்சனை என்றால், பாதுகாப்பு இல்லை என்றால் அல்லாஹ் அந்தப் பிரச்சனையை இலேசாக்குவான். ஈமானே இல்லாத முனாஃபிக்கீன்களிடம் இந்த அசைக்க முடியாத உறுதியை எதிர்பார்க்க முடியுமா? தவக்குலை எதிர்பார்க்க முடியுமா? அவர்கள் குழம்பிப் போனார்கள். குழப்பத்தை ஏற்படுத்தவும் தயரானார்கள். தங்களோடு வந்து விடும்படி அவர்கள் மதீனாவாசிகளையும் அழைத்தார்கள். கொடுமை!
‘வெட்டியாக இங்கே பொழுதைக் கழிக்காதீர்கள். வந்து உருப்படியான வேலையைப் பாருங்கள்’ என்று உசுப்பேற்றினார்கள்.
“அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் “யஃத்ரிப் வாசிகளே! இனி, நீங்கள் இங்கு தங்கியிருக்க உங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. திரும்பிச் சென்று விடுங்கள்!” என்று கூறினார்கள்.
மேலும், அவர்களில் மற்றொரு பிரிவினர் ‘எங்களுடைய வீடுகள் ஆபத்தக்குள்ளாகி இருக்கின்றன’ என்று கூறி நபியிடம் அனுமதி கோரிக் கொண்டிருந்தனர். ஆனால், அவை ஆபத்துக்குள்ளாகி இருக்கவில்லை. உண்மையா தெனில், அவர்கள் (போர்க்களத்திலிருந்து) ஓடிவிடவே விரும்பினார்கள்.” – அல் மதீனாவின் சுற்றுப் புறங்களில் வசித்து வந்தவர்களில் பயங்கரமான பொறாமையும், குரோதமும் கொண்ட முனாஃபிக்கீன்கள் இருந்தனர். சூரத்துத் தவ்பாவில் அல்லாஹ் இவர்களை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறான்.
“இந்த நாட்டுப்புற அரபிகள் இறை நிராகரிப்பிலும், நயவஞ்சகத்திலும் மிகவும் கடுமையானவர்கள் ஆவர்.” – எந்த அளவுக்கு அவர்கள் உள்ளங்களில் ‘நிஃபாக்’ ஊடுருவி இருந்தது என்றால், அவர்கள் ‘மதீனத்துத் நபி’யை ‘மதீனா’ என்று அழைக்கக் கூட தயாராக இல்லை. பழைய பெயரான ‘யஃத்ரிப்’ என்றே அழைத்து வந்தனர்.
“நகரின் நாற்புறங்களில் இருந்தும் எதிரிகள் ஊடுருவி, பிறகு குழப்பம் விளைவிக்குமாறு இவர்கள் அழைக்கப்பட்டிருந்தால், அதற்கு இவர்கள் தயாராக இருந்திருப்பார்கள். குழப்பத்தில் பங்கு பெறுவதில் அவர்களுக்கு தயக்கம் ஏற்பட்டிருக்காது, சிறிதளவே தவிர!” – அல் அஹ்ஸாப் – 14
‘இஸ்லாத்தைக் கைகழுவி விடுவது’ முஸ்லிம்களுக்கு எதிராக அணி திரள்வது என்பதைத் தான் அல்லாஹ் இங்கே ‘ஃபித்னா’ என்று – ‘கஷ்ஷாஃப்’ – பை மேற்கோள் காட்டி மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி ரஹ்மதுல்லாஹி அலைஹி, ‘ததப்புருல் குர்ஆன்’ பாகம் – 6 பக்கம்
“இதற்கு முன்னரோ ‘புறங்காட்டி ஓட மாட்டோம்’ என்று அல்லாஹ்விடம் இவர்கள் வாக்குறுதி தந்திருந்தார்கள். மேலும், அல்லாஹ்விடம் அளித்திருந்த வாக்குறுதி விசாரிக்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது.” – அல் அஹ்ஸாப் – 15
இறைவனையும் இறைத்தூதரையும் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் என்றால், இஸ்லாத்திற்காக உங்கள் பொருட்களையும், உயிர்களையும் செலவளிக்கத் தயார் என்று ஒப்புக் கொண்டதாகப் பொருள். அப்புறம், புறமுதுகு காட்டி ஓட முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்? அதுவும், இந்த முனாஃபீக்கின்கள் ஏற்கனவே பல முறை போர் முனையிலிருந்து புறமுதுகு காட்டியவர்கள்.
ஒவ்வொரு முறை ஓடி வந்த பின்பும், ‘இனி மேல் நாங்கள் வாக்கு மீற மாட்டோம். ஓடி வர மாட்டோம். நிலைத்து நின்று போராடுவோம்’ என்று காது வரைக்கும் வாயைத் திறந்து வாக்குறுதி கொடுத்திருந்தார்கள்.
இவர்களுடைய நிலையை திருமறை குர்ஆன் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகின்றது…..
“(நபியே) நீர் இவர்களிடம் கூறும் – ‘நீங்கள் மரணத்திலிருந்து அல்லது கொல்லப்படுவதிலிருந்து ஓடினால் – அவ்வாறு ஓடுவது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. அதன் பின்னர் வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்க சிறிதளவு சந்தர்ப்பமே உங்களுக்குக் கிடைக்கும். மேலும், இவர்களிடம் கேளும் – “அல்லாஹ் உங்களுக்குத் தீங்களிக்க நாடினால் அவனிடமிருந்து உங்களைக் காப்பாற்றுபவர் யார்? அவன் உங்கள் மீது கருணை பொழிய நாடினால் அவனுடைய கருணையைத் தடுக்க யாரால் அல்லாஹ்வுக்கு எதிராக எந்த ஆதரவாளரையும் உதவியாளரையும் இவர்கள் காணமாட்டார்கள். உங்களில் எவர்கள் (போர்ப் பணிகளில்) இடையூறு விளைவிக்கின்றார்களோ அவர்களையும், மேலும் ‘எங்களிடம் வந்து விடுங்கள்’ என்று தங்களின் சகோதரர்களிடம் கூறுகின்றவர்களையும் அல்லாஹ் நன்கறிவான். மேலும், அவர்கள் போரில் பங்கு கொண்டாலும், பெயரளவுக்குத் தான் பங்கு பெறுவார்கள். உங்களுக்கு உதவுவதில் அவர்கள் கடும் கஞ்சத்தனம் உள்ளவர்களாய் இருப்பார்கள். ஆபத்தான நேரம் வந்து விட்டாலோ, மரணத்தருவாயில் இருப்பவனுக்கு மயக்கம் வருவது போன்று கண்களைச் சுழற்றியவாறு உம் பக்கம் பார்ப்பார்கள். ஆனால், ஆபத்து நீங்கி விட்டாலோ, இதே மக்கள் ஆதாயங்களின் மீது பேராசை கொண்டவர்களாய் (கத்திரித்கோலைப் போன்று) கூர்மையான நாவுகளோடு உங்களை வரவேற்க வந்து விடுகின்றார்கள். இத்தகையவர்கள் அறவே நம்பிக்கை கொள்ளவில்லை. எனவே, அல்லாஹ் இவர்களுடைய செயல்கள் அனைத்தையும் வீணாக்கி விட்டான். மேலும், இவ்வாறு செய்வது அல்லாஹ்வைப் பொறுத்து மிகவும் எளிதானதாகும். இவர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். தாக்க வந்த கூட்டத்தார் இன்னும் திரும்பிச் செல்லவில்லை என்று! அவர்கள் மீண்டும் தாக்க வந்து விட்டாலோ, அப்போது எங்கேனும் (பாலைவனத்தில்) நாட்டுப்புற அரபிகளுடன் சேர்ந்து உட்கார்ந்து விட வேண்டும். அங்கிருந்தவாறே உம்முடைய நிலைமைகளைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும், என அவர்கள் ஆசைப்படுகின்றார்கள். ஒரு வேளை இவர்கள் உங்கள் மத்தியில் இருந்தாலும் போரில் குறைவாகவே பங்கு பெறுவார்கள்.” – அல் அஹ்ஸாப் – 16-20
முனாஃபிக்கீன்களை அற்புதமாக படம் பிடித்துக் காட்டிய குர்ஆன், துன்பச் சூறாவளி சுழன்று, சுழன்று வீசிய சமயத்தில் நிலைகுலையாமல் நின்ற, நெஞ்சுரம் பெற்ற நம்பிக்கையாளர்களின் நிலையையும் வர்ணிக்கிறது.
அவர்கள் ‘ஈமான்’ கொண்டவர்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் என்ன நடக்கும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவர்கள், அடிக்கப்படுவோம், சித்திரவதை செய்யப்படுவோம். ஊரை விட்டுத் துரத்தப்படுவோம். உயிருக்கு உலை வைக்கப்படுவோம் என்பதையெல்லாம் நன்றாகத் தெரிந்தே ‘அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கலிமா சொன்னவர்கள்.
அந்தக் கட்டடங்களையெல்லாம் தாண்டித்தான் இன்று முஹாஜிரீன்களாகவும், அன்சார்களாகவும் அந்த முஸ்லிம்கள் அகழுக்கு முன்னே நிற்கின்றார்கள். எதிரிப் படைகளைப் பார்த்தவுடன் ஈமானுக்கு சோதனை வந்து விட்டது என்பது அவர்களுக்குப் புரிந்து போனது.
“உங்களுக்கு முன் சென்ற (நம்பிக்கையுடைய)வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? இன்னல்களும், இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன. (அன்றைய) இறைத்தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் “அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது வரும்?” என்று (புலம்பிக்) கேட்கும் வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். (அப்பொழுது அவர்களுக்கு இவ்வாறு ஆறுதல் கூறப்பட்டது) “இதோ! அல்லாஹ்வுடைய உதவி சமீபத்தில் இருக்கிறது.” -அல்பகறா – 214
இன்னொரு திருமறை வசனத்தையும் பாருங்கள்!…….
“நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று மட்டும் கூறுவதனால் விட்டு விடப்படுவார்கள். சோதனைக்குள்ளாக்கப் பட மாட்டார்கள் என்று மக்கள் எண்ணிக் கொண்டார்களா? என்ன? உண்மையில், இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் சோதித்திருக்கிறோம். அல்லாஹ் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது, உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார்? என்பதை!” – அல் அன்கபூத் – 2,3
நம்முடைய ஈமான் எந்தளவு உள்ளதோ, அதே அளவு நமக்கு சோதனையும் வந்தே தீரும்.இதை நன்றாக அந்த அற்புத முஃமின்கள் புரிந்து வைத்திருந்தார்கள். எதிரே திரள், திரளாக பகைவர் படைகளைக் கண்டதும் அவர்களுடைய ஈமான் அதிகரித்துக் கொண்டே போனது. அல்லாஹ்வும், அவன் தூதரும் வாக்களித்தது வந்தே விட்டது என்று அவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். அல்லாஹ்வும், அவன் தூதரும் வெற்றிக்கு வாக்களித்துள்ளார்கள் என்றால் அந்த வெற்றி ‘உரித்த வாழைப்பழமாக’ கையில் கொடுக்கப்பட மாட்டாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதற்கும் ஒரு விலை இருக்கின்றது. யார் அந்த விலையைத் தரத் தயாராய் இருக்கின்றார்களோ அவர்களுக்குத் தான் ‘பொருள்’ கிடைக்கும்.
“உண்மையாக, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் சுவனத்திற்குப் பகரமாய் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் போர் புரிகின்றார்கள்; கொல்கின்றார்கள்; கொல்லப்படுகின்றார்கள்.” – அத்தவ்பா – 111
ஆகையால், தீர்க்கமாக அவர்கள் கூறினார்கள் – “உண்மையான நம்பிக்கையாளர்கள் தாக்க வந்த கூட்டத்தாரை பார்த்த உடன் உரக்கக் கூறினார்கள். ‘அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நம்மிடம் வாக்களித்தது இது தான்.’ அல்லாஹ்வுடைய, அவன் தூதருடைய வாக்கு முற்றிலும் உண்மையாக இருந்தது. இது அவர்களுடைய ஈமானையும், கீழ்படிதலையும் அதிகப்படுத்தி விட்டது.” – அல் அஹ்ஸாப் – 22
உண்மையில் இதற்கு முன் எந்தப் போரிலும் சந்திக்காத அளவு கடுந்துன்பத்தில் முஸ்லிம்கள் இருந்தார்கள். உஹதுப்போரில் ஒரு பெரிய துன்பமலையே வந்து தாக்கியது, என்றாலும், அது ஒரு நாளிலேயே முடிந்து விட்டது. இப்போது ‘முற்றுகை’ பல நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருந்தது. அதே போல எதிரிகள் வெறும் குறைஷியர் மட்டும் அல்லர். மாறாக ஒட்டு மொத்த அரபுலகமே திரண்டு அஹ்ஸாபாக வந்திருந்தனர்.எனவே, முஸ்லிம்களுடைய துன்ப நிலையைக் கண்ட அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) அவர்கள் எதிரிகளிடையே பிளவை ஏற்படுத்துவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா? என்று ஆராய்ந்தார்கள். எதிரிகளில் ஏதேனும் ஒரு பிரிவினருக்கு சமாதானத் தூது விடலாம் என்று பனூ கத்ஃபான்களின் தலைவர்களான உயைனா பின் ஹசன் மற்றும் ஹாரிஸ் பின் அவ்ஃப் இருவரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்கள்.
பனூ கத்ஃபான்களைப் பொறுத்த வரைக்கும் அறுவடைக் கால விளைச்ஸல் கிடைக்கும் என்ற ஒப்பந்தத்தின் பேரில் தான் அவர்கள் குறைஷிகளோடு கூட்டு சேர்ந்திருக்கின்றார்கள். அதே போன்று மதீனாவின் மொத்த விளைச்சலில் மூன்றில் ஒரு பாகத்தைக் கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பனூகத்ஃபான்கள் போரிலிருந்து ‘கழன்று’ கொள்ள ஒப்புக் கொண்டார்கள். ஒப்பந்தம் கையெழுத்ததாகும் முன் (அவ்ஸ், கஜ்ரஜ் தலைவர்களான) சஅத்பின் முஆத் மற்றும் சஅத் பின் உபாதா ஆகியோரோடு ஆலோசனை செய்து கொண்டால் நல்லது என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கருதினார்கள்.
‘எதிரிகளின் இவ்வளவு பெரிய படையை உங்களால் சமாளிப்பது சிரமம் என்பதால் தான் நான் இந்த உடன்பாட்டுக்கு ஒப்புக் கொண்டேன்’ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) அவர்கள் இருவருக்கும் விளக்கினார்கள். இதைக் கேட்டவுடன் அவர்கள் இருவரின் ஈமானிய உத்வேகம் பொங்கியது. “நாங்கள் காஃபிர்களாக இருந்த போது கூட இவர்களால் எங்கள் பொருட்களில் இருந்து ஒன்றையும் எடுத்துச் ஸெல்ல முடியவில்லை. இப்போது நாங்கள் ஈமானிய ஸெல்வம் வழங்கப்பட்டுள்ளோம். இப்போது இவர்கள் நம்மிடமிருந்து பொருளைப் பெற்றுக் கொண்டு செல்வதை அனுமதிப்பதா? அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஒருக்காலும் முடியாது! இத்தகைய ஒப்பந்தம் தேவையே இல்லை!” என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) அவர்கள் இதைக் கேட்டு நிறைவடைந்தார்கள். ஒப்பந்தப் பிரதியை முஆதிடம் கொடுத்தார்கள். அவர் அதைக் கிழித்துக் காற்றில் பறக்க விட்டார்.
எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் அல்லாஹ் நினைத்தால் ஓர் அற்புதமான வழியை ஏற்படுத்தித் தருவான்.
“யார் அல்லாஹ்வுக்கு அஞ்சிய(ய வண்ணம் செயல்படுவரா)னால் அல்லாஹ் அவருக்குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழிவகையை ஏற்படுத்துவான்.”
கியாமத் நாளைப் போல இருந்த அந்த நாளில் வசந்த மழையைப் போல ஒரு வாய்ப்பு வந்தது. கத்ஃபான் தலைவர்களில் அஷ்ஜஃ கோத்திரத்தைச் சேர்ந்த நுஐம் பின் மஸ்வூத் என்பவர் இஸ்லாத்தைத் தழுவி இறைத்தூதரிடம் வந்து சேர்ந்தார்.
“அண்ணலே! நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். ஆயினும், என் சமுதாயத்தில் யாருக்கும் நான் முஸ்லிம் ஆனது தெரியாது. எனவே, நீங்கள் விரும்பினால் என்னை பயன்படுத்திக் கொள்ளலாம்!” என்று அவர் கூறினார். குறைஷிகளுக்கும், பனூ குறைழா – வுக்கும் இடையே பிளவை ஏற்படுத்துமாறு அவரை இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) கூறினார்கள். (போர் என்பதே ஒரு சூழ்ச்சியாகும்..) அதன் பின்பு முதலில் பனூகுறைழாவை நோக்கி நுஐம் சென்றார். அவர்களோடு அவருக்கு நல்ல போக்குவரத்து இருந்து வந்தது.
“ஒரு வேளை குறைஷிகள் வெற்றி பெற்று விட்டால் எந்த விதப் பிரச்சனையும் இல்லை. முற்றுகையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவர்கள் பின்வாங்கிச் சென்று விட்டாலும் அவர்களுக்கு ஒரு நஷ்டமும் ஏற்படப் போவதில்லை! ஆனால் உங்கள் கதையோ கந்தலாகி விடும். ஏனெனில் நீங்கள் முஸ்லிம்களோடு இங்கேயே தான் இருக்க வேண்டும். பொழுதன்னைக்கும் நீங்கள் முஸ்லிம்களோடு சேர்ந்து தான் பொழைப்பை ஓட்ட வேண்டியிருக்கிறது. எனவே, என்னுடைய ஆலோசனை என்னவென்றால், வெளியிலிருந்து வந்துள்ளவர்களில் முக்கியமான சில பேர்களை நீங்கள் பணயமாக வரவழைத்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் அவர்கள் திரும்பிச் ஸெல்ல நினைக்காமல் துணிந்து தாக்குவார்கள்!” என்று மிகவும் வினயமாகக் கூறினார். இந்த யோசனை அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. உள்ளங்களில் பதிந்தும் போனது.
அவர்கள் குறைஷி, கத்ஃபான் தலைவர்களில் சில பேரை அழைத்து பணயமாக வைத்துக் கொள்வது என்ற முடிவுக்கும் வந்து பிறகு நமது ஆள், குறைஷ், கத்ஃபான் தலைவர்களிடம் சென்றார்.
அங்கு போய், ‘பனூகுறைழா பயந்து தளர்ந்து போய் விட்டார்கள் போல் தெரிகிறது. சீக்கிரத்திலேயே அவர்கள் உங்களில் சில பேரை பணயமாக அழைப்பார்கள் போலவும் தெரிகிறது. அவ்வாறு சிலபேரை வரவழைத்து அவர்களை முஹம்மதுவிடம் ஒப்படைத்து தங்களுடைய கணக்கை நேர் செய்து கொள்ளலாம் என்பது அவர்களுடைய திட்டம்ஸ எனவே எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்.
இதனால் ‘ஒன்றிணைந்த போர்த்’ தளபதிகள் வெகுண்டு போனார்கள். “தொடர்ந்த முற்றுகையினால் நாங்கள் நெருக்கடிக்கு ஆளாகி விட்டோம். எனவே, தாக்குதலை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளோம். நாளை நாங்கள் இந்தப் புறமாகத் தாக்குகிறோம். நீங்கள் அந்தப் புறமாகத் தாக்குங்கள்” என்ற செய்தியைச் சொல்லி அனுப்பினார்கள்.
‘நீங்கள் உங்களில் சிலபேரை பணயமாக அனுப்பி வைக்கும் முன் நாங்கள் எத்தகைய போர் நடவடிக்கைகளிலும் ஈடுபட, பங்கு பெற மாட்டோம்’ என்று இவர்கள் பதில் தகவல் தந்தார்கள்.
“ஆஹா! நுஐம் காப்பாற்றினார். இல்லாவிட்டால் நம்மை சிக்க வைத்திருப்பார்கள்.” என்று பனூகுறைழா குலத்தினர் நுஐமுடைய ஆலோசனையை மெச்சினார்கள்.
இஸ்லாமியப் படையின் இணையற்ற தளபதி அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) அவர்கள் தொடர்ந்து இறைவனிடம் உதவி கேட்டு மன்றாடியவர்களாகவே
வேதத்தை அருள்பவனே!
வேகமாகக் கணக்கை முடிப்பவனே!
இவர்களைத் தோற்கடித்து விடு!
இவர்களைத் தோற்கடித்து விடு!
நடுநடுங்கச் செய்து விடு!”
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) அவர்கள் நிம்மதி அற்ற நிலையிலேயே இரவு நேரங்களைக் கழித்தார்கள்.
வெளியே ஒரு சிறு சப்தம் கேட்டாலும் உடனே வாரிச் சுருட்டிக் கொண்டு வெளியே எழுந்தரித்து ஓடுவார்கள். பிறகு மீண்டும் வந்து தூங்க ஆரம்பிப்பார்கள். திரும்பவும் ஏதேனும் சப்தம் கேட்டால் திரும்பவும் ஓடுவார்கள்.
“நான் பல போர்களில், முர்யஸீஃ, ஹீதைபிய்யா, ஃகைபர், ஹூனைன் போன்ற போர்களில் இறைத்தூதரோடு இருந்துள்ளேன். ஆனால் எந்தப் போரிலும் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) அகழ்ப் போரைப் போல துன்பப்பட்டதில்லை. துயரம் அடையவில்லை. அப்போரில் முஸ்லிம்கள் மிகவும் காயப்பட்டார்கள். குளிரின் கடுமை வேறு அவர்களை வாட்டியது. அத்தோடு பசிக் கொடுமை வேறு அவர்களை பிடித்தாட்டியது” என்று அன்னை உம்முசலமா ரழியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்.
அகழ்ப் போரின் போது அப்துல்லாஹ் பின் :ஸூபைரூம், உமர் பின் அபுசலமாவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்களின் வீட்டுப் பெண்களிடையே (பாதுகாப்புப் பணியில்) அமர்த்தப்பட்டிருந்தனர். – புஃகாரி :கிதாபுல் மகாஸி.
ஏற்கனவே பாதுகாப்பான இடத்தில் பெண்களும், குழந்தைகளும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குப் பாதுகாப்பாக ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் (ரழியல்லாஹு அன்ஹு)தை பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) அவர்கள் நியமித்திருந்தார்கள். பனூ குறைழா யூதர்களின் நம்பிக்கைத் துரோகம் வெளிப்பட்டவுடன் இறைத்தூதர் அவர்கள் முன்னூறு பேர் கொண்ட ஒரு படைப்பிரிவை மதீனா நகரின் ரோந்துப் பணிக்காகப் பணித்தார்கள்.
அகழ்ப்போரின் போது ஸஹாபாப் பெண்மணிகளில் மூன்று பேர் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்தார்கள்.
ரஃபீதா எனும் பெண்மணி மருந்து, மாத்திரைகளோடும், முதலுதவிப் பொருட்களோடும் போர் முனையை அடைந்து காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் பெரும் பங்காற்றினார். சஅத் பின் முஆதுக்கும் அவரே முதல் உதவி பெண்கள் தங்கியிருந்த பகுதியை ஒரு யூதன் சுற்றிச் சுற்றி வந்தான். அவனால் ஏதும் அபாயம் ஏற்படலாம் என்று பயப்பட்ட ஸஃபிய்யா ரழியல்லாஹூ அன்ஹா* பாதுகாப்புக்கு இருந்த ஹஸ்ஸானிடம் அவனைத் துரத்தியடிக்குமாறு கூறினார். அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அவர் மறுத்து விட்டார். ஆயினும் மனம் சாந்தியடையாத ஸஃபிய்யா அவனை எதிர் கொண்டு தீர்த்துக் கட்டி விட்டார். இதனால் பெரியதொரு நல் விளைவு ஏற்பட்டது. பெண்கள் பகுதி மீது தாக்குதல் தொடுத்து பீதி ஏற்படுத்தலாம் என்று நினைத்திருந்த யூதர்கள் உளவு பார்க்க தாங்கள் அனுப்பிய ஆள் உயிரோடு திரும்பி வராததால் ‘ஆண்களின் படைப்பிரிவொன்று’ பாதுகாப்புக்கு உள்ளது என்று எண்ணிக் கொண்டு தங்கள் எண்ணத்தைக் கைவிட்டு விட்டார்கள்!
*ஸஃபிய்யா ரழியல்லாஹி அன்ஹா இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) அவர்களுடைய அத்தை (மாமி) அமீர் ஹம்ஸா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய கூடப்பிறந்த சகோதரி; முதல் கணவர் இறந்து விடவே இரண்டாவதாக அவாம் பின் ஃகுவைலித் பின் அஸத் அவர்களை திருமணம் முடித்துக் கொண்டார். அவாம், அன்னை கதீஜா (ரழியல்லாஹு அன்ஹு) உடைய சொந்தச் சகோதரர் ஆவார். :ஸூபைர் பின் அவாம் (ரழியல்லாஹு அன்ஹு) இவர்களுடைய மகன் ஆவார். ‘பத்துப் பேரில்’ அவரும் ஒருவர்.
ஸஃபிய்யா எத்தனை வீரமுஜாஹிதாஹ் என்பதை உஹதிலேயே நாம் பார்க்கலாம். கர்ண கொடூரமாக ஹம்ஸா கொல்லப்பட்டுக் கிடந்ததைப் பார்த்த போதும் அழுகவில்லை; அரற்றவில்லை; அமைதியாக துஆச் செய்து திரும்பி வந்து விட்டார். ஹம்தன் அன்னை ஆயிஷா கோட்டையை விட்டு வெளியே வந்தார். யாரோ இருவர் பேசிக் கொள்ளும் சப்தம் கேட்டது. பார்த்தால் சஅத் பின் மஆதும் அவருடைய அன்னையும்ஸ சஅத் கீழ்வரும் கவிதையை சொல்லியவாறு இருந்தார்.
“நில்லுங்களேன்! இன்னுமோர் இளைஞன் வருகிறான் போர்முனை நோக்கி, மெல்லப் பயப்பட்டு என்னவாகும்? மௌத் அவருடைய அன்னை கூறினார்கள், “ஏன் இன்னும் தாமதிக்கின்றாய் மகனே, விரைவாகச் செல் ஷஹாதத்தை நோக்கி!’ எப்பேற்பட்ட இஸ்லாமிய அன்னை!!
முற்றுகை நீடித்துக் கொண்டே சென்றது. எதிரிகளின் ஆர்வமும் உற்சாகமும் குறைந்து கொண்டே வந்தன. அகழைக் கடக்க முடியவில்லையே என்ற கையாலாகாத்தனமும், பனூகுறைழாக்கள் கைவிரித்து விட்டதனால் ஏற்பட்ட இயலாமையும், அரபுலகில் தங்கள் மானமும், மரியாதையும் காற்றில் பறக்கின்றதே என்ற அவமானமும், சத்தியத்தின் வளர்ச்சியையும், வெற்றியையும் சகித்துக் கொள்ளாத அவர்களுடைய மனப் புழுக்கமும், ஆற்றாமையும் அவர்களை நாளுக்கு நாள் சோர்வடையச் செய்தன. முற்றுகை நீடித்து ஏறத்தாழ முப்பது நாட்கள் ஆகிவிட்டி விட்டிருந்தன. படையினை பராமரிப்பதும் சாதாரணமான காரியமாக இருக்கவில்லை. ஏறக்குறைய 10,000 பேர்; கடுமையான பனி; பயங்கரமான குளிர்; பாலைவனத்து வாடைக்காற்று வேறு உயிர் குத்தி அம்பாய் விசுவிசுவென்று வீசிக் கொண்டிருந்தது. கூடாரங்களை இழுத்துக் கட்டுவதும், பானைகள் கவிழாது பார்த்துக் கொண்டு சமைப்பதுமே பெரும் போராட்டமாக ஆகி விட்டிருந்தது. உணவு
இருப்பும் குறைந்து கொண்டே சென்றது! ஒருங்கிணைந்த படையின் தலைமைத் தளபதியான அபுசுஃப்யான் திரும்பிச் சென்று விடலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தார். சமாளிக்க முடியாமல் இவர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள் என்று இறைத்தூதர் அவர்கள் சரியாகக் கணித்து வைத்திருந்தார்கள். இருந்த போதிலும் அல்லாஹ் ஜல்ல ஷானஹூத் தஆலாவிடம் இரு கரம் கூப்பி இறைஞ்சிக் கொண்டே இருந்தார்கள். யாரேனும் ஒருவரை அகழைத் தாண்டி அனுப்பி உளவறிந்து வரச் செய்யலாம் என்று நினைத்தார்கள்.
‘பகைவர்களைப் பற்றி உளவறிந்து சொல்ல யாரேனும் தயாரா? அப்படிச் செல்பவருக்கு சொர்க்கம் கிடைக்கும்!’ என்று இறைத்தூதர் கேட்டார்கள். அகழைத் தாண்டிச் ஸெல்வது என்பதை யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. என்ன நடக்குமோ என்கிற பீதி வேறு அவர்களைப் பிடித்துக் கொண்டிருந்தது.
வெளியிலோ குளிர் கொட்டிக் கொண்டிருந்தது. உடம்பெல்லாம் விறைத்துப் போய் பற்கள் ஆடிக் கொண்டிருந்தன. சில்லிட்ட தரையில் அமர்ந்திருந்த ஸஹாபாக்கள் யாருமே வாயைத் திறக்கவில்லை.
இறைத்தூதர் சென்றார்கள். இரண்டு ரக அத் தொழுது இறைவனிடம் துஆ கேட்டார்கள். மீண்டும் திரும்பி வந்தார்கள். ‘பகைவர்களைப் பற்றி உளவறிந்து சொல்ல யாரேனும் தாயரா? அப்படி செல்பவருக்கு சொர்க்கம் கிடைக்கும்!’ என்று இறைத்தூதர் கேட்டார்கள். அவையில் ஒரு சின்ன அசைவு கூட இல்லை.
திரும்பவும் சென்று தொழுது துஆச் செய்தவர்களாக இறைத்தூதர் திரும்பி வந்தார்கள். ‘பகைவர்களைப் பற்றி உளவறிந்து வந்து சொல்ல யாரேனும் தயாரா? அவர் நாளை சொர்க்கத்தில் என்னோடு இருப்பார்!’ என்று கேட்டார்கள். சப்த நாடி கூட ஒடுங்கிப் போனவர்களாக சஹாபாக்கள் அமர்ந்திருந்தார்கள்.
‘அண்ணலே, தாங்கள் கடலில் குதிக்கச் சொன்னாலும் தயங்காமல் குதிப்போம். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இஸ்ரவேலர்கள் சொன்னது போல சாக்குப் போக்கு சொல்ல மாட்டோம்!’ என்ற அறிவித்த, அதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே அமுல்படுத்திய சஹாபாக்களே வாய்மூடி மௌனமாக உட்கார்ந்து இருந்தார்கள் என்றால், நிலைமை எவ்வளவு படு மோசம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்!
இப்போது இறைத்தூதர் அவர்கள் சபையினரை நோட்டமிட்டார்கள். ஹூதைஃபா இப்னு யமான் (ரழியல்லாஹு அன்ஹு)-ஐ அழைத்தார்கள். “நீ சென்று வா! இறைவன் உனக்கு வெற்றியைத் தருவான்” என்று கூறி புறப்படச் சொன்னார்கள்.
ஹூதைஃபா (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார் – “இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என் பெயரை அறிவித்தவுடன் கீழ்படிய – இதா அத் செய்ய வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. கடுங்குளிரில் குழியைத் தாண்டி எப்படி செல்வது என்கிற பயம் என்னையும் பீடித்துத் தான் இருந்தது. உளவறிந்து வந்தால் மட்டும் போதும். வேறு எந்த வேலையும் என் அனுமதியின்றி நீ செய்து விடக் கூடாது என்றும் அண்லார் கூறினார்கள். கூடாரத்தை விட்டு வெளியே வந்ததும் எந்தக் குளிரை எண்ணி நான் பயந்து கொண்டிருந்தேனோ, அந்த குளிர் கொஞ்சம் கூட உறைக்கவில்லை. சூடான ஒரு குளியலறையில் இருக்கும் உணர்வே எனக்கு ஏற்பட்டது.”
அங்கே எதிரிகளின் நிலை அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.
“நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்குச் செய்திருக்கிற பெரிய உதவியை நினைவு கூறுங்கள். எதிரிப்படையினர் உங்களைத் தாக்க வந்த போது, நாம் அவர்கள் மீது ஒரு கடும் புயல்காற்றை ஏவினோம். உங்கள் கண்களுக்குத் தென்படாத படைகளையும் அனுப்பினோம்!” – அல் அஹ்ஸாப் – 9
கடுமையான சூறாவளிக் காற்று வீசிக் கொண்டிருந்தது. கூடாரங்கள் எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் ஒரே பேரிரைச்சல். வாகனக் குதிரைகள் எல்லாம் மிரண்டு போய் அங்குமிங்கும் தாறுமாறாக ஒடிக் கொண்டடிருந்தன. காரிருள், இவையெல்லவற்றையும் விட குளிர், கடுங்குளிர்! உடம்பிலிருந்து உயிரை உருவி எடுத்து விடும் போல் இருந்தது. குளிரைச் சமாளிக் கற்களை குவித்து நெருப்பு மூட்டலாம் என்பதை, நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.
சுழன்று சுழன்று காற்று அடித்துக் கொண்டிருந்தது. திரும்பிச் செல்வது ஒன்றே வழி என்று அபுசுஃப்யான் முடிவெடுத்து விட்டார். அதை விட்டால் எதிர்த்து நிற்க வேறு வழி எதுவும் அவருக்கு புலப்படவில்லை.
ஹூதைஃபா தொடர்கிறார் – “குளிர் காய்வதற்காக தனியே தணல் அருகில் ஓர் ஆள் உட்கார்ந்திருந்தார். யாரென்று உற்றுப் பார்த்தேன். பார்த்தால், அது அபுசுஃயான்! ஆஹா, நல்ல வாய்ப்பு என்று எண்ணியவனாக அம்பை உருவ முதுகின் பின்னால் கைகளைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர் எச்சரித்தது ஞாபகத்திற்கு வரவே, பேசாமல் இருந்து விட்டேன்!”
தமது படையில் எதிரியான் ஒருவன் நுழைந்து விட்டானோ, என்று அபுசுஃப்யானுக்கு சந்தேகம் வந்து விட்டது. வீரர்களையெல்லாம் அழைத்து அவர் கூறினார் – “குறைஷித் தோழர்களே! யாரோ உளவாளி வந்துள்ளான் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரும் உங்களுக்கு அருகில் உள்ள ஆளின் கையைப் பிடித்து விசாரித்து கொள்ளுங்கள்!” என்று பகீரென்று ஹூதைஃபாவிற்கு! ஒரே வினாடியில் சுதாரித்துக் கொண்ட ஹூதைஃபா, பக்கத்தில் உட்கார்ந்தவனின் கையைப் பிடித்தார். “டேய்! யார்ரா நீ?” அவன் வெலவெலத்துப் போனான்.
“என்னைத் தெரியவில்லையா! நான் தான் இன்னாருடைய மகன்!” நிலைமையின் பயங்கரத்தை வீரர்களுக்கு விளக்கிய பிறகு அபுசுஃப்யான் கூறினார். “இனிமேலும் இங்கே வெட்டியாய் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை! நான் ஒட்டகத்திக் கட்டுகின்றேன். வருகின்றவர்கள் வரலாம்!” மளமளவென்று கிளம்ப ஆயத்தமானார்கள் அனைவரும்!
அல்ஹம்துலில்லாஹ் என்றவாறு சந்தடியில்லாமல் திரும்பலானார் ஹுதைஃபா (ரழியல்லாஹு அன்ஹு).
இறைத்தூதரின் கூடாரத்தை அடைந்த ஹுதைஃபா, இறைத்தூதர் தொழுது கொண்டிருப்பதைக் கண்டார். பயங்கரமான குளிர் அவரை வதைத்தது! இறைத்தூதரின் காலடியிலேயே சுருண்டவாறு படுத்துக் கொண்டார். சுபுஹ் நேரம் நெருங்கிய போது “யா நவ்மான்!” (தூங்குமூஞ்சியே) என்று அவரை இறைத்தூதர் எழுப்பினார்கள். நடந்த விஷயங்கள் அனைத்தையும் அவர் இறைத்தூதரிடம் கூறினார்.
“நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) அவர்கள் (அகழ்ப் போரின் வெற்றிக்குப் பிறகு) கூறினார்கள். நான் (‘சபா’ என்னும்) கிழக்குக் காற்றின் மூலமாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன். ‘ஆது’ சமூகத்தார் (‘தபூர்’ என்னும்) மேலைக் காற்றினால் அழிக்கப்பட்டனர்.ஞ புஃகாரி, கிதாபுல் மகாஸி, அகழ்ப்போர் மனிதன் வெளிப்படையாக கண்ணுக்குத் தெரிகின்ற விஷயங்களை வைத்துத் தான் கணக்கு போடுகின்றான். ஆனால் எத்தனையோ சமயங்களில் மனிதனுடைய அறிவுக்கே புலப்படாத விஷயங்களை வைத்து அல்லாஹ் காரியத்தை முடித்த விடுகிறான். ‘கண்ணுக்கு புலப்படாத படைகள்’ என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் கூறுவது வானவர்களுக்குக் கட்டுப்பட்ட வையகத்தை இயக்கும் சக்திகளாக இருக்கலாம். வானவர்கள் முஸ்லிம்களின் படைக்குள் வந்திறங்கி எதிரிகள் பார்க்கும் போது ஏராளமான பேர்கள் முஸ்லிம்களின் படையில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியதாக அல்லாஹ் அத்தியாயம் அன்ஃபாலில் கூறுகிறான்.
திரும்பிச் சென்று விடுவது என்று ஒன்று பட்டு முடிவெடுத்த எதிரிகள் கூடாரங்களைக் காலி பண்ணத் தொடங்கினார்கள். “அல்லாஹ் நிராகரிப்பாளர்களைத் திருப்பி விட்டான். அவர்கள் எந்தப் பயனும் அடையாமல் தம் மன எரிச்சலுடனேயே அப்படியே திரும்பி விட்டனர். நம்பிக்கையாளர்களின் சார்பில் போரிடுவதற்கு அல்லாஹ்வே போதுமாகி விட்டான். அல்லாஹ் பேராற்றல் உடையவனாகவும் யாவற்றையும் மிகைத்தவனாகவும் இருக்கிறான்.” – அல் அஹ்ஸாப் – 25
முகத்தில் கரிபூசிக் கொண்டவர்களாக, மூக்குடைப்பட்டு, தோற்றுத் தளர்ந்து போய், நம்பிக்கையின் கடைசிப் பிடிமானத்தையும் தொலைத்து விட்டவர்களாக, முகங்களைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள்….. இஸ்லாத்தை, இறைவனின் வழிமுறையை எதிர்க்க நினைக்கின்ற எல்லோர்க்கும் இந்த கதி தான் ஏற்படும் என்பதை இறுதித் தீர்ப்பு நாள் வரை இது போன்ற வரலாறுகள் உணர்த்திக் கொண்டே உள்ளன!
“அவர்களுக்கு இவ்வுலகத்திலும் இழிவு உண்டு. மறுமையிலும் பெரும் வேதனை உண்டு” அகழ்ப்போர் (முடிந்து குறைஷிகள் தோல்வியுற்றுத் திரும்பிச் சென்ற தினத்தன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “(இனி போர் தொடுப்பதானால்) நாம் தான் அவர்களின் மீது போர் தொடுக்க வேண்டும். அவர்கள் நம்மீது (இனி) போர் தொடுக்க மாட்டார்கள்.” என்று கூறினார்கள்.
இப்போரில் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து ஐந்து பேர்
1. அனஸ் பின் அவ்ஸ் பின் அதீக் (ரழியல்லாஹு அன்ஹு)
2. அப்துல்லாஹ் பின் சஹ்ல் பின் ஜய்த் (ரழியல்லாஹு அன்ஹு)
3. ஃதஃலா பின் அதமா பின் அதீ (ரழியல்லாஹு அன்ஹு)
4. துஃபய்ல் பின் மாலிக் பின் நுஃமான் (ரழியல்லாஹு அன்ஹு)
5. கஅப் பின் ஜய்த் பின் நஜ்ஜார் (ரழியல்லாஹு அன்ஹு) – இவர் ‘பிஃருமவானா’வில் சென்ற எழுபது பேர்களின் ஒருவர்.
அவ்வெழுவது பேரும் கொல்லப்பட்டு விட்ட நிலையில் குற்றுயிரும் குலையுயிருமாக ஷள்ஹதாக்களிடையே கிடந்த இவர் தப்பிப் பிழைத்து “அஹ்ஸாப்” – பில் ஷஹாதத்தை அடைந்தார்.
சஅவுத் பின் மஆத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அகழ்ப்போரில் படுகாயம் அடைந்தார்கள். சிகிச்சைச்காக இறைத்தூதரால் பள்ளி வாசலிலேயே தங்க வைக்கப்பட்டார்கள். முஷ்ரிக்கீன்களில் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள்.
“நிச்சயமாக, இறுதி வெற்றி இறையச்சமுடையவர்களுக்கே!” -இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலையி வஸல்லம் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்தவுடன் முஹாஜிரீன்களுக்கும், அன்சார்களுக்கும் இடையே ‘சகோதரத்துவத்தை’* (முவாஃகாத்) ஏற்படுத்தினார்கள். அத்தோடு மதீனாவிற்கு சுற்றுப் புறத்தில் வசித்து வந்த யூதர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
*இந்த சகோதரத்துவ உறவை மதீனா சென்ற பின்பு தான் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அறிமுகப்படுத்தினார்கள் என்றே பலரும் கூறுகிறார்கள். ஆனால், மக்காவிலேயே அதனை செயற்படுத்தினார்கள் என்பதே நம் நிலைப்பாடு!
“ஒப்பந்தம் செய்து கொள்ளும் யூதர்களோடு நன்முறையில் நடந்து கொள்ளப்படும். உதவி ஒத்தாசை செய்யப்படும். அநீதி இழைக்கப்பட மாட்டாது. அவ்வாறே யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக எந்த முஷ்ரிக்-கிற்கும், குறைஷ்களுக்கும் அடைக்கலமோ, ஆதரவோ தரக் கூடாது. போரில் உதவக் கூடாது. முஸ்லிம்களோடு யூதர்களும் போரில் கலந்து கொண்டால் செலவுகளையும் ஏற்றுக் கொள்வர். யூதர்களும் முஸ்லிம்களோடு ஒரு சமூகத்தைப் போல இருப்பர். அவர்களுக்கு, தங்களுடைய மதத்தைப் பின்பற்றும் உரிமை உண்டு. அவர்களுக்கு, தங்களுடைய செயற்பாடுகள், அடிமைகளைப் பொறுத்த வரை அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு”.
இவ்வொப்பந்தத்தில் பனூ நளீர் பனூ குறைழா யூதர்களோடு பின்வரும் யூதகுலங்களின் பெயர்களும் குறிப்பிடப் பட்டிருந்தன. பனூ அவ்ஃப், பனூ ஸாஇதா, பனூஜஷ்ம், பனூ அல் அவ்ஸ் மற்றும் பனூஃதஃலபா.
மதீனாவின் மீது யாரேனும் படையெடுத்து வந்தால் அவர்களுக்கு எதிராக போரில் பங்கேற்பது ஒவ்வொருவர் மீதும் கடமையாகும் என்பதும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருந்த போதிலும் பனூநளீர் யூதத் தலைவரான ஹுயை இப்னு அஃக்தப், முஸ்லிம்களுக்கெதிரான பனூகுறைழாக்களை திசை திருப்புவதில் வெற்றி பெற்று விட்டார். ஆரம்பத்தில் பனூகுறைழா தலைவரான கஅப் பின் அஸத் முஸ்லிம்களுக்கெதிராக செயல்பட முடியாது. முஹம்மதுவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீற இயலாது என்றெல்லாம் கூறி மறுத்துக் கொண்டே இருந்தார்.
லேசில் மசியவில்லை. ஆனால் இதைவிடப் பொன்னான வாய்ப்பு பிறகு கிடைக்கவே கிடைக்காது, என்று கூறி அவரை எப்படியோ ஹுயை சம்மதிக்க வைத்து விட்டார். ஏற்கனவே ஒரு முறை இவர்கள் ஒப்பந்தத்தை மீறி நடந்தார்கள். இனிமேல் இவ்வாறெல்லாம் செய்ய மாட்டோம் என்று வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.
மதினாவுக்கு வந்ததும் இவர்களுடன் ஒப்பந்தத்தை செய்து கொண்டதோடு நில்லாமல் இவர்களுக்கு மிகுந்த மரியாதையையும் இறைத்தூதர் ஏற்படுத்தித் தந்திருந்தார்கள். அது வரையிலும், யூதர்களிலேயே மிகவும் கீழ்த்தரமானவர்களாக இவர்கள் கருதப்பட்டு வந்தார்கள். பனூ நளீர் போன்ற வேறு குல யூதர் யாரேனும் இவர்களில் ஒருவனைக் கொன்று விட்டால் நஷ்ட ஈட்டில் பாதி தந்தால் போதும். அதே சமயம் இவர்களில் ஒருவன் யாரையேனும் கொன்றால் முழு நஷ்டஈட்டையும் வழங்க வேண்டும் என்ற நிலை நிலவியது! இறைத்தூதர் அதை மாற்றியமைத்து இவர்களுக்கும் சம உரிமையை பெற்றுத் பனூ குறைழா ஒப்பந்தத்தை மீறத் துணிந்து விட்டார்கள் என்கிற செய்தி இறைத்தூதருக்கு எட்டியவுடன் அதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதற்காக பனூகுறைழாக்களோடு முன்பு நட்போடு இருந்த அவ்ஸ்குலத் தலைவரான சஅத் இப்னு முஆத் மற்றும், சஅத் பின் உபாதா, அப்துல்லாஹ் பின் ரவாஹா, ஃகவ்வாத் பின் ஜுபைர் (ரழியல்லாஹு அன்ஹுயெல்லாஹு அன்ஹும்) போன்றவர்களை அனுப்பி வைத்தார்கள்.
“ஒப்பந்தத்தை அவர்கள் மீறவில்லை என்றால் விஷயத்தை பகிரங்கமாக மக்கள் முன்பு அறிவித்து விடவும், இல்லையென்றால் மறைவாக (ரகசியமாக குறியீட்டு வார்த்தையான “அழல்காரஹ்” என்று) கூறவும் என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) கூறி அனுப்பினார்கள். இதை நாம் முன்பே பார்த்தோம்.
அவர்கள் அங்கே சென்ற போது பனூ குறைழாக்கள் இறைத்தூதரை மிகக் கேவலமாக எல்லாம் திட்டினார்கள்.
“அல்லாஹ்…….வுடைய ரஸுலா? அது யார்?” என்றெல்லாம்!
“நமக்கும் முஹம்மதுவுக்கும் இடையே ஒப்பந்தம், கிப்பந்தம் எல்லாம் கிடையாது” – என்று கூறி விட்டார்கள். ஸஹாபாக்கள் அனைவரும் பல்….லைக் கடித்துக் கொண்டு திரும்பி விட்டார்கள்.
“மதீனாவில் எஞ்சியிருந்த மிகப் பெரிய யூதகுலம் பனூகுறைழா மட்டுமே! முஷ்ரிக்கீன்கள் மதீனாவின் மீது படையெடுக்கும் போது இவர்கள் முஸ்லிம்களோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் உறுதியாகத்தான் இருந்தார்கள். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல முஷ்ரிக்கீன்களோடு திரைமறைவில் ஓர் உடன்பாட்டினை செய்து கொண்டார்கள்.
புறக்கடை (கொல்லைப்புறம்) வழியாக எதிர்பாராத நேரத்தில் முஸ்லிம்களை தாக்குவதற்காக தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.” – என்று இச்ட்ஞணூடிஞீஞ்ஞு ஏடிண்tணிணூதூ ணிஞூ ஐண்டூச்ட் என்ற நூலில் மவுண்ட் கம்ரிவாட் கூறுகிறார். மேற்கோள் – மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹ்) – நபி-யே-ரஹ்மத்ங பாகம் – 1
பனூ குறைழாக்களின் நம்பிக்கைத் துரோகத்தினால் முஸ்லிம் ஐக்கியம் எந்தளவு சிதைந்து போனது? முனாஃபிக்கீன்கள் இந்த வாய்ப்பினை தங்களுக்கு சாதகமாக எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்கள்? என்பதையெல்லாம் முன்பே “அகழ்போர் முடிவடைந்தவுடன் அண்ணலல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்கள் வீடு திரும்பி தமது ஆயுதங்களை எல்லாம் கீழே இறக்கி வைத்து விட்டு குளித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘தாங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டீர்களா? (வானவர்களாகிய) நாங்கள் இன்னும் ஆயுதங்களைக் கீழே இறக்கவில்லை! எனவே புறப்படுங்கள்!’ என்று கூறிக்கொண்டே வந்தார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘எங்கே?’ என்று கேட்டார்கள்.
பனூ குறைழா வசிக்கும் திசையைச் சுட்டிக் காட்டி ‘அங்கே’ என்று ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) கூறினார்கள்.
எனவே இறைத்தூதரும் வரிந்து கட்டிக் கொண்டு புறப்படத் தயாரானார்கள்.
‘சமிஃனா வ அதஃனா’ (கேட்டோம்! கீழ்படிந்தோம்) என்பது யாருடைய இலக்கணமாக உள்ளதோ அவர்கள் எல்லாம் பனூகுறைழாவை நோக்கிப் புறப்படட்டும். நாமெல்லாம் அசர் தொழுகையை அங்கு சென்று தான் தொழுக வேண்டும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
முன்பாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்கள் அலி (ரழியல்லாஹு அன்ஹு)யுடைய தலைமையில் ஒரு சிறு படையை அனுப்பி வைத்தார்கள். அப்படையைக் கண்ட பனூ குறைழாக்கள் ‘சும்மாவேனும் நம்மை மிரட்டி வைப்பதற்காக வந்த படையாக்கும்’ என்று நினைத்துக் கொண்டார்கள்.
அப்படையை அலட்சியப்படுத்தியதோடு இறைத்தூதரைஇல்லாததும், பொல்லாததும் சொல்லிக் கேவலப்படுத்தவும் செய்தார்கள். ஆனால், புழுதி பறக்க இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தலைமையில் முஸ்லிம்களின் படைவருவதைப் பார்த்ததும் அவர்களின் கண்களில் நட்சத்திரங்கள் தெறித்தன. கதவுகளை சாத்தி விட்ட கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டார்கள்.
பனூகுறைழாக்களின் வசிப்பிடத்தை அடைந்ததும் ‘இறைத்தூதரின் கவிஞர்களுள்’ ஒருவரான ஹஸ்ஸான் இப்னு ஃதாபித்-தை அழைத்து “இணைவைப்பர்களைத் தாக்கி வசைக்கவி பாடுங்கள்! வானவர் கோமான் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) உங்களுக்கு உறுதுணை புரிவார்,” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் கூறினார்கள். அவ்வாறே ஹஸ்ஸானும் கவிதை புனையத் தொடங்கினார்.*
*இஸ்லாத்தில் கவிதைக்கென்றே ஒரு சிறப்பிடம் இருக்கின்றது. ‘கவிதைக்குப் பொய் அழகு’ – என்பது பொதுவான இலக்கணமாக இருப்பதால் பெரும்பாலோர் கவிதைக்கு ‘தலாக்குல் பாயின்’ கொடுத்து விடுகின்றார்கள். ஆனால் உண்மை நிலை அதுவல்ல!
கவிதை என்பதொரு கருவி. பயன்படுத்துபவனைப் பொறுத்தே பயன்பாடும்! அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எராளமான கவிதைகளை அறிந்து இருக்கிறார்கள். பல நேரங்களில் கவிதைகளைப் பயன்படுத்தியும் உள்ளார்கள். அஹ்ஸாப் போரிலும் அகழை வெட்டுகையில் களைப்பைப் போக்க ‘களப்பாட்டு’ பாடியதை அறிவோம்.
‘இறைத் தூதரின் கவிஞர்கள்’ என்று மூன்று சஹாபாக் கவிஞர்கள் அறியப்பட்டார்கள். ஜாஹிலிய்யா காலத்து புகழ் பெற்ற கவியான இம்றாவுல் கய்ஸ்ஸைப் பற்றி ‘நரகத்தின் ஆஸ்தான கவி’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கிறார்கள். அப்படியென்றால் அவனுடைய கவிதைகளில் இறைத்தூதருக்கு பரிச்சயம் இருந்திருக்க வேண்டும்.
இஸ்லாமிய உலகில் இணையற்ற பல கவிஞர்கள் இருந்துள்ளார்கள். இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த இஸ்லாமியப் பேரறிஞர்களுள் ஒருவரான அல்லாமா இக்பால் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) ஒப்பற்ற கவிஞர் என்பதை உலகு அறியும்!
எனவே கவிதை என்பதே கூடாது. கவிதை இயற்றக் கூடாது. கவிதையின் பக்கம் நெருங்கவே கூடாது என்பதெல்லாம் தவறானது.
ஏறக்குறைய 25 நாட்கள் முற்றுகை தொடர்ந்தது வேறு வழி எதுவும் இல்லை. முஹம்மதுவுடைய பேச்சைக் கேட்பது ஒன்றே வழி என்று அவர்களுக்கு திட்டவட்டமாகத் தெரிந்து போனது. ஜாஹிலிய்யாவில் தங்களோடு தோழமை கொண்டிருந்த அவ்ஸ் கோத்திரத் தலைவர் சஅத் பின் முஆதை நடுவராக ஏற்றுக் கொண்டால் அவர் நமக்கு ஏதேனும் சலுகைகள் அளிப்பார். மன்னித்து விடுவார் என்று அவர்கள் நினைத்தார்கள். இதற்கு முன்னால் பனூகைனுகா யூதர்கள் அழிச்சாட்டியம் செய்த போது அவர்களையும் முஸ்லிம் படை சுற்றி வளைத்து முற்றுகையிட்டது. அப்போது ஜாஹிலிய்யா காலத்தில் அவர்களோடு நட்பு கொண்டிருந்த ஃகத்ரஜ் குலத்தினரின் பரிந்துரையை ஏற்று அவர்களை தண்டிக்காமல் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நாடு கடத்தினார்கள். எனவே சஅத்தும் தம்மீது பரிதாபப்பட்டு விட்டு விடலாம் என்று இவர்கள் எதிர்பார்த்தார்கள்.
சஅத் இப்னு முஆத் (ரழியல்லாஹு அன்ஹு) அகழ்ப்போரின் போது கையிலுள்ள நரம்பில் அம்ஸபு தாக்கியதால் பலத்த காயமேற்பட்டு மஸ்ஜிதுந்நபவியில் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டிருந்தார். ‘ஷஹாதத் அடைய விரைந்து ஸெல்!’ என்று அவருடைய அன்னை அவரை விரைந்து அனுப்பிய வீர நிகழ்ச்சியை முன்பே கண்டோம். ஷஹாதத் வேட்கையுடன் களம் புகுந்த சஅத் ஒழுங்கான போர்க்கவசத்தைக் கூட அணிந்திருக்கவில்லை.
‘மிகச் சிறிய கவசத்தையே அணிந்திருந்தார். அவருடைய கைகளைக் கூட அது மறைக்கவில்லை’ என்று ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) குறிப்பிடுகிறார். திறந்திருந்த அக்கைகளில் ஒன்றில் தான் இப்னுல் அரிகா எய்த அம்பொன்று தைத்தது. சஅத் படுகாயமடைந்த நிலையில் அல்லாஹ்விடம், “இறைவா! குறைஷிகளோடு மீண்டும் ஒரு போர் நிகழும் என்று இருந்தால் என்னை உயிரோடு விட்டு வை! நான் அப்போரில் கலந்து கொண்டு வீர மரணம் அடையவே விரும்புகிறேன். இல்லையென்றால், இப்போதே என் உயிரை எடுத்துக் கொள்.” என்று துஆ செய்தார். “இறப்பதற்கு முன் பனூ குறைழாக்களிடமிருந்து நிம்மதி அடையவே நான் விரும்புகிறேன்.” என்றும் அவர் துஆ செய்தார்.
நடுவராக நின்று தீர்ப்பு கூற அவரை அழைத்து வருமாறு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். கழுதையின் மீது உட்கார வைக்கப்பட்டு அவர் அழைத்து வரப்பட்டார்.
‘அவ்ஸ்’ குலத்துப் பிரமுகர்கள் அவரை அணுகி, ‘பனூகைனுகா’வோடு கத்ரஜ் குலத்தினர் நடந்து கொண்ட முறையை ஞாபகப்படுத்தினார்கள். சற்று அனுசரணையோடு நடந்து கொள்ளும் படி கேட்டுக் கொண்டார்கள். மீண்டும் மீண்டும் அவர்கள் வலியுறுத்தவே சஅத் கூறினார் –
“அல்லாஹ்வுடைய காரியத்தில் இந்த சஅத் யாருடைய அவப்பேச்சையும் பொருட்படுத்த மாட்டான்!”
இறைத்தூதரும், முஸ்லிம்களும் தங்கியிருந்த இடத்தை அணுகியதும் மிகுந்த மரியாதையோடும், கண்ணியத்தோடும் உள்ளே அழைத்துச் ஸெல்லப்பட்டார். இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பனூகுறைழாக்ளை சுட்டிக் காட்டி “இவர்கள் உங்களுடைய தீர்ப்பை ஒப்புக் கொள்ள முன் வந்திருக்கின்றார்கள். எனவே இவர்களுடைய விஷயத்தில் தீர்ப்பு அளியுங்கள்ஸஞ என்று கேட்டுக் கொண்டார்கள்.
“என்னுடைய தீர்ப்பை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? – வினவினார் சஅத்.நிலங்களுக்கும், அவர்களுடைய இல்லங்களுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும் உங்களை வாரிசுகளாக்கினான். நீங்கள் கால் வைக்காதிருந்த பூமியையும் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவனாக இருக்கிறான்.” – அல் அஹ்ஸாப் – 26,27-
“யூதர்களின் வேதமான தவ்ராத் இது போன்ற குற்றங்களுக்கு என்ன தீர்ப்பு வழங்குமோ, அதைத்தான் சஅத் இப்னு முஆது வழங்கினார்” என்று மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி ரஹ்மதுல்லாஹி அலைஹி குறிப்பிடுகின்றார். (நபி-யே- ரஹ்மத். பா – 1 பக் – 268)
கீழ் வரும் வசனங்களை அதற்கு ஆதாரமாக அவர் “ஒரு நகரோடு போரிட நீ அதை நெருங்கும் போது, அது சரணடையுமாறு முயற்சி செய். அது சரணடைந்து, தன் வாயில்களை உனக்குத் திறந்தால், அதிலுள்ள மக்கள் எல்லோரும் உனக்கு அடிமைகளாகி உனக்குப் பணிவிடை செய்வர். அது உன்னிடம் சரணடையாது உனக்கு எதிராகப் போர் தொடுத்தால், நீ அதை முற்றுகையிடு! உன் கடவுளாகிய ஆண்டவர் அதை உன் கையில் ஒப்படைக்கும் போது, அதிலுள்ள எல்லா ஆண்களையும் வாளால் கொன்று விடு! ஆனால், பெண்களையும், சிறுவர்களையும், ஆடு மாடுகளையும் நகரிலுள்ள அனைத்தையும் உன் கொள்ளைப் பொருளாகக் கொள்! உன் கடவுளாகிய ஆண்டவர் எதிரியிடமிருந்து உனக்குக் கொடுத்துள்ள கொள்ளைப் பொருளாகக் கொள்! உன் கடவுளாகிய ஆண்டவர் எதிரியிடமிருந்து உனக்குக் கொடுத்துள்ள கொள்ளைப் பொருள்களை நீ அனுபவிக்கலாம்.!!(இணைச்சட்டம் – அத்-20 வசனம் – 10-14) (மேலும் பார்க்க – எண்ணிக்கை – அத்-31 வச 7-10 மற்றும் 13-15) திருவிவிலியம் (பொது மொழி பெயர்ப்பு)
இந்த சம்பவத்தைக் கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாமிய விரோதிகள் இஸ்லாமின் மீதும் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீதும் பயங்கரமான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர்.
(அ) இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒப்பந்தத்தை மீறி நடந்தார்கள்.
(ஆ) கொடூரமாக நடந்து கொண்டார்கள். என்பன முக்கியமான மதீனா வந்து சேர்ந்தவுடன் யூதர்களோடு இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஓர் உடன்பாடு செய்து கொண்டார்கள் என்பதை முன்னரே பார்த்தோம்.
பனூ நளீர் யூதர்களோடு போர் நடைபெற்றபோது பனூகுறைழா யூதர்களோடு மீண்டும் ஒரு முறை இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டார்கள். இவ்வாறாக அவர்களோடு இரண்டு முறை ஒப்பந்தம் அகழ்ப் போர் நடந்து கொண்டிருக்கும் இக்கட்டான தருணத்தில் கொஞ்சம் கூட தயவு, தாட்சண்யமே இல்லாமல் சகட்டுமேனிக்கு ஒப்பந்தத்தை முறித்துப் போட்டார்கள். போரில் பங்கு பெறவும் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சஅத் பின் முஆதையும் சஅத் பின் உபாதாவையும் அனுப்பி விசாரித்த போது ‘போய்யா! ஒப்பந்தமாவது, மண்ணங்கட்டியாவது?’ என்று கூறி போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கூடவே இருந்தவன் குழி பறித்தால் என்ன ஆகும்? அந்த நிலைமையை நம்மால் கற்பனை எல்லாம் பண்ணிப் பார்க்க முடியாது.
வேறு வழியில்லாமல், பனூகுறைழாக்களை சமாளிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) முன்னூறு பேர் கொண்ட ஒரு சிறு படையை மதீனாவுக்கு திருப்பி அனுப்பினார்கள். அத்தோடு நின்று விடாமல் மதீனாவின் ஒட்டு மொத்த வெள்ளாமையில் மூன்றில் ஒரு பங்கை கொடுத்தாவது கத்ஃபான்களோடு சமாதானமாகிப் போய்விடலாம். “ஒரு பக்கம் அபு சுஃப்யானும், அவருடைய தோழர்களும் பிரம்மாண்டமான படைகளோடு அணி வகுத்து உள்ளார்கள். இன்னொரு பக்கமோ பனூகுறைழாக்கள் எந்நேரமும் படையெடுக்கலாம். பெண்கள், குழந்தைகளை தாக்கலாம்.
இந்த மாதிரி படு மோசமாக நடந்து கொண்டவர்களோடு நல்ல முறையில் நடந்து கொள்ள எல்லாம் முடியாது. இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒப்பந்தத்தை மீறி நடந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடுகு அளவும் உண்மையில்லை என்பது உங்களுக்குப் புரிந்து போயிருக்கும்.
15 நாள் அல்லது 25 நாள் முற்றுகையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவர்களாகவே சஅத் பின் முஆதைத் தங்கள் நடுவராக தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஜாஹிலிய்யா காலத்தில் அவர்களுக்கும் அவ்ஸ் குலத்தாருக்கும் நெருங்கிய தோழமை இருந்தது. தோழமை உறவு என்பது அந்தக் காலத்தில் கூடப்பிறந்த சகோதர உறவுக்குச் சமமானதாகவும், அதை விட மேலானதாகவும் கருதப்பட்டது. அந்த நடுவரின் தீர்ப்பு தான் அமுல்படுத்தப்பட்டது.
1. பனூநளீரை மன்னித்து விட்டதனால் ஏற்பட்ட நிலைமையைப் பார்த்த பின்பும், பனூகுறைழாவை மன்னித்து மீண்டும் புது ஒப்பந்தம் போட முடியாது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் ஙகைங கொடுத்து விடுவார்கள்.
2. அவர்களுடைய கோட்டைகள் மதீனாவுக்கு மிகவும் அருகாமையில் இருந்தன. கட்டுச் சோற்றில் எலியை வைத்துக் கட்டுவது மாதிரி நம்பிக்கைத் துரோகிகளை இவ்வளவு பக்கத்தில் வைத்துக் கொள்ள முடியாது.
3. நாடு கடத்தவும் முடியாது. முன்பு ஒரு முறை பனூநளீர் நாடு கடத்தப்பட்டு இருந்தனர். முஸ்லிம்களுக்கு எதிரான பகைமைத் தீயை மூட்டி “பன்னாட்டுப்படை” மதீனாவின் மீது படையெடுத்ததற்கே அவர்கள் தாம் காரணம்.
4. இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தாமாக ஏதும் தீர்ப்பளிக்கவில்லை. அவர்களாக விரும்பி ஏற்றுக் கொண்ட நடுவர் தான் தீர்ப்பளித்தார்.
5. மூன்றாம் தரப்பை பஞ்சாயத்து பண்ணக் கூப்பிட்டால் அவர் சொல்லுகின்ற தீர்வு எதுவாக இருந்தாலும் இரண்டு தரப்பாரும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். இது தான் நியதி.
6. (ஏற்கனவே பார்த்தது போல) சஅத் தவ்ராத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கினார். எனவே தான் பனூ குறைழாக்கள் மறு பேச்சு பேசாமல் ஏற்றுக் கொண்டார்கள்.
7. போராடும் திறன் கொண்ட ஆண்கள் தாம் கொல்லப்பட்டார்கள். பெண்களையும், குழந்தைகளையும் முஸ்லிம்கள் தங்கள் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார்கள். மௌலானா சய்யித் அபுல் அஃலா மௌதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி, தஃப்ஹீமுல் குர்ஆன், பாகம் – 4 பக் – 62,6
பனூகுறைழாக்களை முஸ்லிம்கள் கொன்று விட்டதால், நம்பிக்கைத் துரோகம் செய்தால், ஒப்பந்தத்தை இஷ்டத்துக்கு மீறி நடந்தால் என்ன ஆகும்? என்பது அரபுலகுக்கு புரிந்து போனது.
எனவே ஒப்பந்தத்தை போட்டு விட்டு அதை மீறி நடக்கும் எண்ணமே எதிர்காலத்தில் யாருக்கும் எழாமல் போனது. முனாஃபிக்கீன்களின் கூடாரம் சோர்ந்து சோகையிழந்து போனது. அவர்களுக்கு இருந்த கடைசி நம்பிக்கையும் பொய்த்துப் போனதால் அவர்கள் மிகவும் மன அதிர்ச்சிக்கு ஆளாயினர். எனவே அகழ்ப்போருக்குப் பிறகு அவர்கள் ஸெல்லாக்காசாகிப் “இவை சில ஊர்களைப் பற்றிய வரலாறுகள் ஆகும்; அவற்றை நாம் உமக்கு எடுத்துச் சொல்கிறோம். அவற்றில் சில இன்றும் இருக்கின்றன; சில முற்றிலும் அழிந்து விட்டன. நாம் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை; மாறாக, அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.; -ஹுத் – 100-101
“இச்சம்பவங்களை நீர் இவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருப்பீராக! அதன் மூலம் இவர்கள் சிந்தித்து உணரக் கூடும்!” -அல்அஃராஃப் 176
சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான போராட்டத்தின் தொகுப்பாகத்தான் மனித வரலாறு உள்ளது. ஹக்கிற்கும் பாத்திலுக்குமான போர்க்களமே இது! எந்தக்கால கட்டத்திலும் அறிமுகமானவுடனேயே ஹக்கிட்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்ததாகக் காண முடியவில்லை. கஷ்ட நஷ்டங்களின் துன்பப் பள்ளத்தாக்கை கடக்காமல் யாரும் வெற்றிச் சிகரத்தை தொட்டு விட முடியாது. அல்லாஹ் ஜல்ல ஷானஹுத் தஆலாவும் அப்படியொன்றும் வெற்றிக் கனியைப் பறித்து முஃமின்களின் கைகளில் எளிதாக ஒப்படைப்பதில்லை. அதற்குரிய தகுதி அவர்களிடம் இருக்கின்றதா? என்பதை சோதித்துப் பார்க்கிறான்.
ஒன்றுக்குப் பல முறைஸ அதுவே அவனுடைய வழிமுறை “நாங்கள் நம்பிக்கை – ஈமான் – கொண்டோம்ங என்று கூறுவதனால் மட்டும் விட்டவிடப் படுவார்கள்; சோதனைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று மக்கள் எண்ணிக் கொண்டார்களா, என்ன? உண்மையில், இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் சோதித்திருக்கிறோம்.
உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார்? என்பதை அல்லாஹ் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது.” (அன்கபூத் – 23)
முஃமின்களுடைய உயிர்களையும், உடைமைகளையும் விலைக்கு வாங்கிக் கொண்டு தான் அல்லாஹ் சொர்க்கத்தைத் தருகிறான். (தவ்பா – 111) அப்படியிருக்கையில் விலையைக் கொடுக்காமல் நமக்கு முன் சென்றவர்களின் துன்பங்களையெல்லாம் அடையாமல் (2-214) ஐங்காலத் தொழுகையின் இலவச இணைப்பாக சொர்க்கம் கிடைத்து விடும் என்று மனப்பால் குடிக்கக் கூடாது!
சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்று ஆசைப்படுகின்றவன், அதையே தனது வாழ்க்கையின் குறிக்கோளாக ஆக்கிக் கொண்டவன், அதற்குரிய விலையைத் தருவதற்கு எந்நேரமும் தயாராகவே இருக்கிறான். பொருளை வாங்கப் பேரம் பேசிய பின் விலை கொடுக்கத் தயங்கி நிற்பவன் நேர்மையானவன் அல்ல. அதுவும் எப்படிப்பட்ட “என்றைக்கும் நஷ்டமடையாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்த்திருக்கின்றார்கள்!” (ஃபாத்திர் – 29)
எதிரிப்படைகளை கண்டவுடன் இந்த சஹாபாக்கள் ——– என்று கூறவில்லையா? அவர்கள் எதிர்பார்த்திருந்தது இலேசான வெற்றியையும், சுகமான வாழ்வையும் அல்ல! மாறாக, சித்திரவதைகளையும், அடி உதைகளையும் தான்! அதைத்தான் இறைவனும், இறைத்தூதரும் வாக்களித்திருந்தார்கள்.
“வெறுப்புக்குரிய செயல்களினால் சொர்க்கம் சூழப்பட்டுள்ளது”போர்க்களத்தில் எதிரிகளோடு போரிட்டு மடிவதும், சிறைக் கூடங்களில் துன்பப்பட்டு வாடி வதங்குவதும் யாருக்குத்தான் பிரியமானதாக இருக்க முடியும்! இறை நம்பிக்கையாளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். தங்கள் குறிக்கோளிலும், வாழ்விலக்கிலும்! அதனை அடைய எத்தனை எத்தனை இடர்பாடுகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அவர்கள் அறிந்தே உள்ளார்கள்.
ஜமா அத்தே இஸ்லாமி இயக்கம் தோற்றுவிக்கப்படும் போது ஆற்றிய உரையில் மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) கூறினார்கள். “நீங்கள் இந்தப் பாதையில் எண்ணற்ற துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறி உங்களை எச்ரிக்க நான் விரும்பவில்லை. மாறாக, நீங்கள் அவற்றை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருங்கள் என்றே துன்பங்களைக் கண்டு முஃமின்கள் கொள்கையில் தளர்ந்து போனதாக வரலாற்றில் ஒற்றைச் சம்பவத்தைக் கூட நம்மால் பார்க்க இயலாது. ஆறு மாதங்கள் இருந்தாலே பைத்தியமாகி விடுவான் என்கிற பாதாளச் சிறைகளில் மாதக் கணக்கில் அல்ல. ஆண்டுக் கணக்கில் முஃமின்கள் இருந்திருக்கிறார்கள். ஈமானிய ஒளி வீசும் பிரகாசமான முகங்களோடு விடுதலையாகி வெளியே மனிதனை எதிர்பாராத விஷயங்கள் அடையும் போது சோர்வும், விரக்தியும் அவனைச் சூழ்ந்து கொள்கின்றன. அவநம்பிக்கையே விரக்தியைத் தோற்றுவிக்கின்றது. இலட்சியமும், நம்பிக்கையும் உள்ள உள்ளங்களில் விரக்தியோ, அவநம்பிக்கையோ பிறப்பதே “வழிபிறழ்ந்தவர்கள் தாம், தம் இறைவனின் கருணை குறித்து நம்பிக்கை இழப்பார்க!” (ஹிஜ்ர் – 56)
துன்பத்தோணிகளில் அவர்கள் என்றைக்கும் ஒற்றை ஆட்களாய் துடுப்பு வலிப்பதில்லை. தனிமைச் சிறைகளில் அவர்கள் காயங்களுக்கு மருந்திட்டு ஆறுதல் கூற வானவர்கள் வருகை “எவர்கள் ‘அல்லாஹ்வே எங்கள் இறைவன்’ என்று கூறி பின்னர், அதில் உறுதியாக நிலைத்து நின்றார்களோ, திண்ணமாக அவர்கள் மீது வானவர்கள் இறங்குகிறார்கள். ‘பயப்படாதீர்கள்! கவலையும் அடையாதீர்கள்!’ என்று ஆறுதல் கூறுகிறார்கள். உங்களுக் வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தைப் பற்றிய நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்.’ (என்றும் கூறி தேற்றுகிறார்கள்)” (ஹாமீம் ஆறுதல் மட்டுமல்ல, அறுசுவை உணவும் கூட கிடைக்கும். சிந்தை, செயல் எல்லாம், வல்ல அல்லாஹ் தான் என்றாகிப் போனவர்களுக்கு அவனை விட சிறந்தது பாதுகாவலன், பராமரிப்பாளன் யார் இருக்க முடியும்?
“யார் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயப்படுகின்றார்களோ, அல்லாஹ் அவருக்கு ஏதேனும் வழியை ஏற்படுத்துவான். அவர் நினைத்துக் கூடப்பார்க்காத இடத்திலிருந்து அவருக்கு உணவு (வாழ்வாதாரம்) வழங்குவான். யார் அல்லாஹ்வையே முழுக்க சார்ந்துள்ளாரோ அவருக்கு அல்லாஹ்வே போதுமானவ!” (தலாக் – அவையனைத்தையும் அஹ்ஸாப் போரில் நம்மால் பார்க்க முடிகின்றது. எல்லாமே அல்லாஹ் தான் என்றாகிப் போன ஈமானிய உத்வேகங் கொண்ட நம்பிக்கையாளர்கள், பசியோடும், பட்டினியோடும் பணி விழும் இரவுகளில் பார்வைகளில் பயத்தோடும் இருந்தார்கள். ஆனால் உள்ளங்களில் கலக்கமில்லை. விரக்தியடைந்து பழக்கமில்லை.
சகோதரர்களே! ‘அஹ்ஸாப்’கள் சென்று விடவில்லை. ஒரேயடியாக ஒரு போதும் சென்று விட மாட்டார்கள். வருவார்கள். பலத்தை திரட்டிக் கொண்டு மீண்டும், மீண்டும் வருவார்கள். உலகளாவிய ஆட்சிக் கடிவாளம் ‘தாகூத்திய அஹ்ஸாப்’களின் கரங்களில் தான் உள்ளது.
“ஒரு காலம் வரும், அப்போது இரையை நோக்கிப் பாயும் வெறி கொண்ட கொடிய விலங்குகளைப் போல பிற சமூகங்கள் முஸ்லிம்களின் மீது பாய்வர்” என்று அருமைத் தலைவர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) முன் கூட்டியே எச்சரித்துச் சென்றுள்ளார்கள்.
வெறிக்கொண்ட ஓநாய்களாக ஏகாதிபத்திய வல்லரசுகளின் பன்னாட்டுப் படைகள் அப்பாவி முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல்கள் நடத்துகின்றன. தங்கள் மீது எப்படியெல்லாம் தாக்குதல் தொடுக்கப்படுகின்றது என்பதைக் கூட தெரியாமல் முஸ்லிம்கள் பலியாகிப் போகிறார்கள். விரிக்கப்படும் வலையின் விபரீதத்தைக் கூட செத்துப் போகும் மீன்களால் உணர முடிவதில்லை. நவீன கால ஃபிர் அவ்ன்களின் கூர்மையான சிந்தனையில் உதிக்கும் திட்டங்களுக்கு பிஞ்சுத் தளிர்கள் கூட “அல்லாஹ்வின் கட்சியினர் தாம் வெற்றியாளர்கள்!” (5-56) என்பது மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்றால், நாம் இந்தச் சஹாபாக்களைப் போன்ற ஈமானை தவக்குலை, தக்வாவைப் பெற வேண்டும்.
“நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்! கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறை நம்பிக்கை உடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்!” (ஆல இம்ரான் 139)
“நீங்கள் இறை நம்பிக்கை உடையோராக இருந்தால்!” நாம் அஹ்ஸாப் போரிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினையே அது தான்!
இந்தச் சிறு நூலைப் படிப்பதன் மூலம் உங்களுடைய ஈமானில் ஒரு சுற்று கூடிப்போகுமென்றால், அதுவே இந்நூலுக்கு கிடைக்கும் வெற்றியாகும். ஹன்ழலா, அபுபக்கரைப் போன்றவர்களே ஈமானைப் பற்றி கவலைப்படும் போது நாம் நிம்மதியாக வீட்டில் உட்கார்ந்திருப்பதில் அர்த்தமிருக்காது.
இந்நூல் உங்கள் ஈமானில் ஒரு நூலிழையையாவது அதிகரித்துச் செய்யும் என்று அல்லாஹ்வின் மீது தவக்குல் கொண்டு இந்நூல் வெளிவர பெரிதும் உறுதுணையாகத் திகழ்ந்த சகோதரர்கள், வெளியிடும் திண்ணைத் தோழர், வாழ்வின் இன்பதுன்பங்களை பகிர்ந்து கொண்டு எனக்கு ஊக்கத்தை அளித்து வரும் என் இல்லத் துணைவி உட்பட அனைவருக்கும் அளவில்லாத நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
அனைத்துக்கும் மேலாக துஆக்களை வேண்டி நிற்கும்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி