[ நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு (முஃமின்களுக்கு) அருள் புரிந்திருக்கின்றான். அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை (தூதரை) அனுப்பி வைத்தான். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார். இன்னும் அவர்களைப் (பாவத்தை விட்டும்) பரிசுத்தமாக்குகிறார். மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (குர்ஆன் – ஆல இம்ரான்: 164)]
இறைத்தூதரைப்பற்றி இறைமறை
மௌலானா அபுல் அஃலா மௌதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி
தமிழில்: மௌலவி முஹம்மத் இக்பால் உமரி
மனிதர்கள் கடவுளாகக் கருதப்பட்ட விதம் இவ்வுலகில் மனிதர்களுக்கு நேர்வழி காட்ட எல்லாக் காலங்களிலும் தூய உள்ளம் கொண்டவர்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லாலும் செயலாலும் மனிதர்களுக்கு சத்திய வழியைக் காண்பித்து இருக்கிறார்கள். ஆனால் அதிகமான மனிதர்கள், அவர்களின் உபகாரத்திற்கு அக்கிரமங்களையே, துன்பங்களையே பதிலாக அளித்தார்கள்.
அவர்களை எதிர்த்தவர்கள் மட்டுந்தான் அவர்களின் பிரசாரத்தை விட்டும் திசை திரும்பிக் கொண்டார்கள்; அவர்களை நம்ப மறுத்தார்கள்; அவர்களின் அழைப்பை நிராகரித்தார்கள்; அவர்களுக்கு கஷ்டங்களையும் தொல்லைகளையும் கொடுத்து நேரிய வழியில் இருந்து திருப்பிவிட முயற்சி செய்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. மாறாக அவர்களை நம்பி ஏற்றுக் கொண்டவர்களும் அவர்களுக்கு மாறு செய்தார்கள். அவர்கள் காட்டிய நேர்வழியைத் திரித்தார்கள். அவர்களால் கொண்டு வரப்பட்ட வேதங்களில் கை வைத்தார்கள். தங்களிடம் வந்த இறைவனின் தூதர்களையே அற்புதப் பொருளாக்கி அவர்களையே கடவுளாகவும் மாற்றிவிட்டார்கள்.
முதலாம் வகை அநீதியோ அத்தூய பெருமக்கள் வாழ்ந்த நாள்வரை அல்லது பெரும்பாலும் அதற்குப் பிறகு சில வருடங்கள் வரை மட்டுமே காணப்பட்டது. ஆனால், இரண்டாவது வகை அநீதியோ அவர்களுக்குப் பிறகும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தொடர்கின்றது. ஏராளமான பெயர்களோடும் இது இன்றும் நடந்து வருகின்றது.
உலகில் இன்றுவரை எத்தனை சத்திய அழைப்பாளர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஏக இறைவனை விட்டு விட்டு மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட பொய்க் கடவுளர்களை ஒழிப்பதிலேயே தங்கள் வாழ்வைச் செலவழித்தார்கள். ஆனால், அவர்களுக்குப் பிறகு அவர்களைப் பின்பற்றியவர்களோ அத்தூதர்களையே பொய்க் கடவுளர்களின் பட்டியலில் சேர்த்து அவர்களையும் இறைவனின் கூட்டாளியாக ஆக்கிவிட்டார்கள்.
எந்தச் சிலைகளை உடைப்பதற்காக தம் வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்தார்களோ, அந்தச் சிலைகளில் ஒன்றாக அவர்களையும் சேர்த்து விட்டார்கள். உண்மையில் மனிதன் தன்னைப் பற்றி கொஞ்சம் தவறான நினைப்பில் இருக்கிறான். அவனுக்கு மனிதத்தில் தூய்மை, உடைமைத் தன்மை, இருப்பு போன்றவற்றில் குறைந்த நம்பிக்கையே ஏற்படுகிறது. அவன் தன்னைப் பற்றி பலவீனங்களின் மொத்த உருவம் என்று நினைக் கிறான். அவனது சிந்தனை மாபெரும் உண்மையில் இருந்து விலகி இருக்கிறது.
வல்ல அல்லாஹ் மனிதனை, படைப்பிலேயே அவன் மனிதனாகவும், மனிதத் தன்மை பொருந்தியவனாகவும் இருந்தும் கூட வானுலகின் நெருங்கிய வானவர்களை (மலக்குகளை) விடவும் உயர் நிலை அடைய முடியும் எனும் சக்தியை வைத்து விட்டான். இதன் காரணமாகவே இவ்வுலகில் எவனாவது ஒரு மனிதன் கடவுளின் அவதாரம் என்று தன்னை முன்னிறுத்தினான். அவனது உடன் சார்ந்த வர்களோ முதலில் இவன் நம்மைப் போன்றே சதைப்பிண்ட மனிதனாக இருக்கிறான். அவனைக் கடவுளாக ஏற்றுக் கொள்வதிலிருந்துநிராகரித்தார்கள்.
பிறகு அவனிடத்தில் அசாதாரணமான உயர் நல்லொழுக்கங்களைக் கண்ட பிறகு நிச்சயமாக இவன் மனிதனாக இருக்க முடியாது என்றார்கள்.
பிறகு ஒரு கூட்டம் அவனைக் கடவுளாக ஆக்கியது. பிறகு இன்னொரு கூட்டம் கடவுளின் அவதாரம் என்று கொண்டாடியது.
இன்னொரு கூட்டம் அவனிடம் கடவுள் தன்மையும் கடவுள் அதிகாரமும் இருப்பதாக எண்ணியது.
இன்னுமொரு கூட்டம் அவரைக் கடவுளின் குழந்தை என்று கூறியது.
தங்கள் மதத்தை நிறுவியவர்களைப் பற்றி அம்மதத்தைச் சேர்ந்தவர்களின் நிலைஉலகின் எந்தவொரு சமயத்தின் தோற்றுவித்தவரை எடுத்துக் கொண்டால், எல்லோரையும் விட மிக அதிகமாக அவரை நம்பியவர்களே அவர் மீது அக்கிரமம் புரிந்திருப்பதைக் காணலாம். அவர்கள் அவரின் உண்மையான தோற்றம் எது என்று அறிய முடியாதபடி அவர்தம் மீது கற்பனைகளை திரையாக இட்டுவிட்டார்கள். இது மட்டுமல்லாது அவரின் உண்மையான போதனைகள் எது என அறிய முடியாதபடி தங்கள் வேதங்களைத் திரித்து விட்டார்கள். எந்தளவுக் கென்றால் அவர் உண்மையில் என்னவாக இருந்தார் என்று தெரிவது கூட முடியாமற் போய்விட்டது.
அவரின் பிறப்பில் அதிசயம், அவ ருடைய குழந்தைப் பருவம் அதிசயம், அவருடைய வாலிபம் மற்றும் முதுமையில் அதிசயம். அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு விஷய மும் அதிசயம், அவருடைய இறப்பு கூட அதிசயம், ஆக ஆரம்பம் முதல் இறுதி வரை கதை கதையாகத்தான் தெரிகிறது. அவர் கடவுளாக இருந்தார். கடவுளின் குழந்தை அல்லது கடவுளின் அவதாரம் அல்லது குறைந்த பட்சம் கடவுட் தன்மையில் இவர் இணைந்து விட்டார் என்று முன்னிறுத்தப்படுகிறார்.
உதாரணத்திற்கு புத்த மதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். புத்த மதத்தை மிகவும் ஆழமாக படித்துப் பார்த்தால் அந்த உறுதியான மனிதர் பிராமணியத்தின் குறைபாடுகளைச் சீர்படுத்தினார். குறிப்பாக அக் காலத்தில் அவர்கள் வணங்கி வந்த எண்ணற்ற கடவுளர்களை பொய்ப் படுத்தினார். அவர் மறைவிற்குப் பிறகு ஒரு நூறாண்டு கூட கழியவில்லை. அதற்குள் வைசாலியில் கூடிய ஆலோசனைக் குழுவில் (கவுன்சிலில்) அவரைப் பின்பற்றியவர்கள் அவருடைய எல்லா போதனைகளையும் மாற்றி விட்டார்கள்.
உண்மையான சூத்திரங்களுக்குப் பதிலாக புதிய சூத்திரங்களை உருவாக்கினார்கள். அடிப்படை விதிகளையும் பிரிவு சார்ந்த விதிகளையும் தங்கள் சிந்தனைக்கேற்றவாறு விரும்பியபடி திருத்தி எழுதினார்கள். ஒருபுறம் புத்தமதம் எனும் பெயரில் கடவுள் என யாரும் கிடையாது என தங்கள் மதத்தின் கொள்கைகளை எழுதினார்கள். இன்னொரு புறம் புத்தரை அறிவின் முழுமதி, உலகத்தை இயக்குபவர் இன்னும் ஒவ்வொரு கால கட்டத்திலும் உலகத்தைச் சீர்படுத்த புத்தராகப் பிறந்து வருகிறார் என்று எழுதினார்கள். அவருடைய பிறப்பு வாழ்வு, முதல் பிறப்பு, முன்பிறப்பு (ஜென்மங்கள்) பற்றி அதிசயக்கதைகள் உருவாக்கப்பட்டன.
இவற்றை யெல்லாம் படித்துவிட்டுத்தான் பேராசிரியர் வில்சன் போன்றோர் உண்மையில் புத்தர் என்ற ஒருவர் இருந்ததேயில்லை என்று கூறுகிறார்.
மூன்று நான்கு நூற்றாண்டுகளில் இந்தக் கதைகளே அவை புத்தரை கடவுட்தன்மை கொண்டவராக மாற்றின. கனிஷ்கர் காலத்தில் புத்த மதத்தின் தலைவர்களும் ஆதரவாளர்களும் மாபெரும் குழுவில் (கவுன்சிலில்) ஒன்றுகூடி புத்தர் உண்மையில் கடவுளாக வந்தார் அல்லது ஏனைய கடவுள்கள் அவரினுள் இறங்கி விட்டனர் என்று தீர்மானித்தனர்.
இது போன்ற நிலைதான் ராமருக்கும் ஏற்பட்டது. ராமாயணத்தைப் படித்துப் பார்ப்போமேயானால் நமக்கு இது தெளிவாக விளங்கும். ராமர் ஒரு மனிதராக இருந்தார். நல்லுள்ளம் நீதி, வீரம், கொடை, பணிவு, அர்ப்பணிப்பு போன்ற உயர் நற்பண்புகள் உடையவராக இருந்தார். அவரிடம் கடவுள் தன்மையின் சாயலே இருந்ததில்லை. ஆனால் மனிதனாகவும், கூடவே உயர்ந்த நற்பண்புகள் கொண்டவராகவும் இருந்தது இந்து மக்களை அவர் மனிதர் என்று நம்ப செய்து விட்டது. எனவே ராமர் மறைவிற்குப் பின் அவர் விஷ்ணுவின் அவதாரம் எனும் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. விஷ்ணு உலகைச் சீர்படுத்த அவ்வப்போது அவதாரம் எடுக்கிறார் என்று நம்பினார்கள்.
கிருஷ்ணன்
இவ்விஷயத்தில் ஸ்ரீ கிருஷ்ணன், இவர்கள் இருவரைக் காட்டிலும் அதிகம் அநீதம் இழைக்கப்பட்டவராக இருக்கிறார். பல்வேறு மாறு தல்களுக்கும், திருத்தத்திற்கும் ஆட்பட்டு நம்மிடம் காணப்படும்பகவத் கீதையை ஆழ்ந்து படித்தோம் என்றால் குறைந்தபட்சம் கிருஷ்ணன் ஓர் ஏகத்துவவாதி என்பதை அறிந்து கொள்ளலாம். அவர் வல்ல இறைவனை மாபெரும் வல்லமை மிக்கவன் மிகுந்த சக்தியாளன் என்று மக்களிடம் எடுத்துரைத்தார். ஆனால், மஹாபாரதம், விஷ்ணு புராணம், பகவத் புராணம் போன்ற புத்தகங்களிலும் கீதாவிலும் கூட அவரின் உடலின் தோற்றம் இன்றைய உலகின் படைப்பாளன், உலகத்தை நிர்வகிப்பவர் என்றே முன்னிறுத்தப்படுகிறார். அவர் கடவுளாகச் சித்தரிக்கப்படும் அதே சமயம் மறுபுறம் ஒரு தூய மனிதர் அவர் என்று நம்பக்கூட முடியாத அளவிற்கு அவரோடு பல்வேறு பலவீனங்கள் தொடர்புபடுத்தப்பட்டன.
கீதையில் கிருஷ்ணரின் கூற்றுகளாக நாம் எவற்றைக் காண்கிறோம்? இவ்வுலகத்தின் தந்தையும், தாயும், தாங்குபவனும் நானே! தூய்மை, அறிவதற்கு தகுதியானவை என எல்லாவற்றையும் செய்பவன் நானே தான்! யஜுர் வேதமும், சாம வேதமும், ரிக் வேதமும் நான்தான்! எல்லோரையும் பரிபாலிப்பவன், அதிபதி, சாட்சி, தங்கச் செய்பவன், அடைக்கலம் தருபவன் பிறக்கக் காரணமானவன் மரணிக்கச் செய் பவன், வாழ்வதற்கு காரணமானவன், பொக்கிஷங்கள், பிறப்பின் முடிவுறாத விதையும் நான்தான்.
“ஓ! அரிஜன், நான் வெயிலைத் தருகிறேன், மழையை நிறுத்துகிறேன், பொழிவிக்கிறேன். நான் நிரந்தரமானவன், மரணம், உண்மை, பொய் எல்லாமே நானேதான்.” (9-17,18,19)
எல்லா தேவர்களும், மகரிஷிகளும் என் பிறப்பை அறிய மாட்டார்கள். ஏனென்றால் தேவர்கள், மகரிஷிகளின் ஆரம்பம் எப்படி இருந்தாலும் என்னிடமிருந்துதான் இருக்கிறது. ‘நான் பூமி மற்றும்இதர ரோகங்களின் பெரிய ஈஷ்வராக இருக்கிறேன். என்னுடைய பிறப்பின் ஆரம்பம் என்று எதுவும் இல்லை’ என்று எவனொருவன் அறிகிறானோ அவனே உலக இன்பங்களிலிருந்து விடுபட்டு அனைத்து பாவங்களிலிருந்து விலகியவன் ஆவான். (10 – 2,3)
அரிஜனே! எல்லா உயிரினங்களின் ஆத்மாவாக இருக்கிறேன். எல்லா உயிர்களின் ஆரம்பமும், மத்தியும், முடிவும் நானாக இருக்கிறேன். பன்னிரண்டு ஆதித்தியர்களில் நான் விஷ்ணுவாக இருக்கிறேன். தேஜஸ்விகளின் கதிர்களில் சூரியனாக, முன்னோர்களின் மரிச்சியாக, நட்சத்திரங்களில் (தாரகைகளில்) சந்திரனாக இருக்கிறேன். (10 – 20,21)
1. எல்லா தேவர்களையும் விட பெரிய தேவரை ஆதித்தியர் என்பர். இதில் விஷ்ணு மிகப்பெரிய தேவர்.
2. தேஜஸ்வியர்கள் = ஜொலித்து ஒளி வீசும் கதிர்கள்.
3. காற்றை நிர்வகிக்கும் தேவர்களை முன்னோர்கள் என்பது அதில் தலைவராக இருப்பவர் மரிச்சியாவர்.
அசையும், அசையாத எந்தவோர் உயிரினமும் என்னை விட்டுத் தனியாக இல்லை. எனது ஒரு பகுதியை மட்டும் கொண்டு நான் எல்லா இடத்திலும் பரவி இருக்கிறேன். (10 – 29-44)
ஓ பாண்டு! எவனொருவன் இந்தக் காரியங்கள் எனக்காக (பரமேஷ்வருக்காக) என்கிற உணர்வோடு செயல்புரிகிறானோ (இன்னும்) எல்லா தொடர்புகளையும் விட்டுவிட்டு எல்லா உயிரினங்களின் பகைமையிலிருந்து விலகி இருக்கிறானோ அவன் எனக்குள் ஐக்கியமாகி விடுகிறான். (11 – 55)
நான் எல்லா உயிரினங்களுக்கும் அதிபதி, பிறப்பை விட்டும் மேலானவன், இருப்பினும் என்னுள் எவ்வித மாறுதலும் ஏற்படுவதில்லை. எனது தனித்துவத்தில் நிலையாக இருந்து என்னுடைய சக்தியில் பிறந்து கொள்கிறேன்.
நன்மையே! தர்மத்தில் இறங்குதலும் அதர்மத்தின் பரவுதலும் நடைபெறும்போது நானே பிறந்து விடுகிறேன். நன்மையைப் பாதுகாக்கவும், தீமையை அழிக்கவும், ஒவ்வொரு காலத்திலும் தர்மத்தை நிலை நிறுத்தவும் நான் பிறப்பு எடுக்கிறேன். (4-6,7,8)
மேற்கண்ட கூற்றுகள் வாயிலாக கீதை கிருஷ்ணனை கடவுளாக எடுத்தியம்பிவிட்டது. ஆனால் இன்னொருபுறம் பகவத் புராணம் கிருஷ்ணரை இவ்வாறு நமக்குக் காட்டுகிறது. அவர் பெண்கள் குளத்தில் குளிக்கும்போது அவர்களின் ஆடைகளை மறைத்துக் கொள்கிறார். இன்னும் அவர்கள் மூலம் சந்தோஷம் பெற எத்தனை பெண்கள் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு தன் உடலையும் அதிகரித்துக் கொள்கிறார்.
இது பற்றி பிராகாஷ்த் ராஜா ஷீக் ரஷ்ஷிடம் வினவுகிறார் – கடவுளோ அவதாரமெடுத்து தர்மத்தைப் பரப்புவதற்காக வருகிறார். பிறகு இது எப்படி தர்மத்தின் அடிப்படை விதிகளுக்கு முரணாக பிற பெண்களிடம் தவறான முறையில் தொடர்பு வைக்கிறார்.
இந்த ஆட்சேபனையைப் போக்குவதற்காக ‘ரஷ்ஷி’ என்பவர் சில நேரம் தேவிகள் கூட நல்வழியில் இருந்து விலகி விடுகிறார்கள். ஆனால் எப்படி நெருப்பு எல்லாவற்றையும் எரித்த பிறகும் குற்றவாளியாவதில்லையோ அது போல் அவர்களின் பாவங்கள் அவர்களிடம் எந்தக் களங்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.
சரியான அறிவு பெற்ற எவரும் மதத்தைக் கற்பிற்கும் மிகப்பெரிய ஒருவரின் வாழ்க்கை இவ்வளவு அசுத்தமானதாக இருக்கும் என்று நம்பமாட்டார். மேலும் உண்மையாக மார்க்க விற்பன்னர் தன்னை மனிதர்கள், உலகங்களின் அதிபதி என்கிற விதத்தில் சொல்லி இருப்பார் என்று அவர் நம்பமாட்டார். ஆனால் குர்ஆனையும், பைபிளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் ஓர் உண்மை நமக்குத் தெரியும். ஒவ்வொரு சமுதாயமும் தங்களின் குறுகிய சிந்தனை, ஒழுக்க வீழ்ச்சி உடைய காலத்தில் உலகத்தின் தூய மனிதர்களின் வரலாற்றை மிகவும் அசுத்தமானதாக ஆக்கிவிட்டார்கள். இதன் வாயிலாக தங்களின் பலவீனங்களுக்கு காரணங்களைத் தேடிக் கொண்டார்கள். இன்னொரு புறம் அத்தகைய நபர்களைப் பற்றி கற்பனைக் கதைகளையும் கட்டி இதன் காரணமாகவே நாம் கிருஷ்ணரிடமும் இதுவே நடந்துள்ளது என்று எண்ணுகிறோம்.
ஹிந்து வேதங்கள் சொல்வதுக்கு நேர் எதிராக அவருடைய உண்மையான போதனைகள், உண்மையான வரலாறு முற்றிலும் வேறு மாதிரி. நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் நபித்துவம் கொடுக்கப்பட்டவர்கள் எனத் தெளிவாக அறியப்பட்டவர்களில் எல்லோரையும் விட மாபெரும் அநீதம் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு இழைக்கப்பட்டது. மற்றவர்கள் மனிதர்களாக இருப்பது போல் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் ஒரு மனிதராகத்தான் இருந்தார். ஒவ்வொரு மனிதனிடம் இருப்பது போல் ஒட்டுமொத்த இயல்பான தன்மைகள் ஈஸா அவர்களிடம் குடி கொண்டிருந்தன.
அல்லாஹ் அவருக்கு வழங்கிய நபித்துவம், சில அற்புதங்கள் மட்டுமே ஒரு வித்தியாசமாக இருந்தது. இதன் வாயிலாக வழிகெட்டுப் போன ஒரு சமுதாயத்தைச் சீர்திருத்துவதற்கு கட்டளையிடப்பட்டிருந்தார்கள். ஆனால் முதலில் அவரை அவருடைய சமுதாயம் பொய்ப்பித்தது; அல்லது முப்பது வருடங்கள் முழுக்கக் கூட அவர் உயிரோடு இருப்பதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இளைஞர்கள் வட்டா ரத்தில் அவரைக் கொலை செய்யவும் முற்பட்டார்கள். பிறகு அவருக்குப் பின் அவரின் சிறப்பை ஏற்றுக் கொண்டவர்கள் மிகவும் வரம்பு கடந்து சென்று விட்டார்கள். அவரை கடவுளின் குழந்தை என்றும், கடவுளே அவர்தான் என்றும் ஆக்கி விட்டார்கள். மேலும், சிலுவையில் அறையப்பட்டு பாவங்களை இரட்சிக்க இறைவன் ஈஸா மஸிஹாக தோன்றியிருக்கிறான். இது ஏனென்றால் மனிதன் பிறப்பி லேயே பாவியாக இருக்கிறான். தன் செயலால் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவனாக இருக்கிறான். ஒரு புதிய உண்மையாளர் தன் இறைவனைப் பற்றி இவ்வளவு பெரிய அவதூறை எவ்வாறு கூற முடியும். ஆனால் அவரது நம்பிக்கையாளர்கள் அவர் கூறியதாக இந்த அவதூறை அவர் மீது சுமத்தினார்கள்.
இன்று உலகில் உள்ள எந்த புத்தகத்திலும் குர்ஆனைத் தவிர அவரின் உண்மையான போதனைகள் திரிக்கப்பட்டே அல்லாமல் நமக்குக் கிடைப்பதில்லை. பைபிளின் புதிய ஏற்பாட்டில் உள்ள நான்கு சுவிஷேசங்களை எடுத்துப் பாருங்கள். அவர் கடவுளின் அவதாரம், அவர் கடவுளின் குமாரன், அவர்தான் உண்மையான இறைவன் போன்ற தவறான கருத்துகளைக் கொண்டு நிறைந்து உள்ளது.
உனது கடவுளின் குமாரர் என்று இனி அழைக்கப்படுவர் என் மர்யம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு நற்செய்தி அளிக்கப்படுகிறது. (லூக்கா – 1-35)
சில சமயம் கடவுளின் ரூஹ் புறாவாக யேசுவின் மீது இறங்கி இப்படி அழைக்கிறது: “இவர் எனது குமாரர் ஆவார்.” (மத்தேயு 16-மர்கஸ் – 14-62 மஸிஹே கூறுகிறார்:
“நான் கடவுளின் குமாரனாகவும் இருக்கிறேன். நீங்கள் என்னை வல்லமை மிக்கவனின் வலது கோடி இருப்பதை காண்பீர்கள்.” (மத்தேயு 25 –
நியாயத் தீர்ப்புநாளில் மாட்சிமை மிக்க அர்ஷில் யேசு இருப்பார். அவர் தண்டனையையும், நற்கூலியையும் வழங்குவார்.
யேசு கூறுகிறார்: தேவன் என்னுள் இருக்கிறார். நான் தேவனுள் இருக்கிறேன். (யூஹன்னா 1-38)
‘நான் தேவனிடமிருந்து வெளியாகி இருக்கிறேன்’ சிலநேரம் அவரையும், தேவனையும் ஒன்றாக்கப்படுகிறது. கீழ்வரும் கூற்று அவர் பால் இணைக்கப்படுகிறது. (யூஹன்னா 8-42)
எவன் என்னைப் பார்த்தானோ அவன் திண்ணமாக கடவுளைப் பார்த்து விட்டான். தந்தை என்னுள் இருந்து கொண்டு தன் வேலையைச் செய்கிறார். (யுஹன்னா – 14 – 9,10)
கடவுளின் எல்லா அம்சங்களும் யேசுவின் பால் திரும்பி விடுகிறது. (யூஹன்னா – 3 – 35)
கடவுள் தன் இறைத்தன்மையின் எல்லாக் காரியங்களையும் யேசுவின்பால் சாட்டிவிடுகிறார். (யூஹன்னா – 5 – 2-22)
பல்வேறு சமுதாயங்கள் தங்கள் அறிஞர்களை, நல்வழி காட்டக் கூடியவர்கள் மீது இந்தளவிற்கு பொய்களைச் சுமத்துவதற்குக் காரணம், அவர்களை வரம்பு கடந்து புகழ்ந்ததே ஆகும். இதை நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டு இருக்கிறோம். அவர்களின் வழிகாட்டுதல்களையும், போதனைகளையும் உடனடியாக எழுதி வைக்காமல் இருந்ததே உதவி யாக இருந்தது. அப்படி எழுதி வைத்தல் எனும் செயலில் முற்பட்டாலும் எந்த ஒரு கவனமும், பேணுதலும் கடைபிடிக்கப்படவில்லை. இதனால் சில காலம் கழிந்த பிறகு அவற்றில் கலப்படம், திரித்தல், கழித்தல் தாராளமாக ஏற்பட்டது. உண்மை எது, உருவாக்கப்பட்டது எது? என்று அறிய சாத்தியமில்லாமல் போய்விட்டது.
இவ்வாறாக எந்த ஒரு தெளிவான வழிகாட்டுதல்களும் (இன்று) இல்லாமல் போனதற்கு காலம் ஆக ஆக அதன் உண்மையானவடிவம் மீது பொய்களும், கற்பனைகளும் மேலோங்கிவிட்டன. சில நூற்றாண்டுகளில் முழு உண்மைகளும் மறைந்து விட்டன. வெறும் கதைகளே எஞ்சிவிட்டது.
முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
உலகத்திற்கு நேர்வழிகாட்ட வந்தவர்களில் முக்கியமானவராக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திகழ்கிறார்கள். இவருடைய போதனைகள் 13 நூற்றாண்டுகளாக அப்படியே உள்ளன. இவற்றை மாற்றுவது என்பது இயலாத காரியமாகி விட்டது. மனிதனின் கற்பனை வழிபாடும் அதிசயத்தை விரும்புவதும் சாதனைகளில் சிகரத்தை எட்டிய இந்த நல்லடியாரையும் சிக்க வைக்க முற்பட்டது. கதைகள் புனையப்பட்டு எப்படியேனும் கடவுட்தன்மை கொண்டவராக ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்பற்றுவதற்குப் பதிலாக வெறுமனே ஆச்சரியத்திற்கும் அதிசயத்திற்கும் வழிபாட்டுக்கும் உரிய செய்தியாக அவருடைய வரலாறு ஆக்கப்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அகிலத்திற்கு ஒளி விளக்காகவும், நேர்வழிக்காட்டியாகவும் மனித சமுதாயத்திற்கு நிரந்தர முன்மாதிரியாகவும் இருக்க நபிமார்கள் அனுப்பப்பட்டதில் இறுதியாக முஹம்மத் பின் அப்துல்லாஹ் அவர்களை அனுப்ப அல்லாஹ் தேர்வு செய்தான். மற்ற நேர்வழி காட்டியவர் களுக்கு இழைக்கப்பட்டு வந்த மேற்கண்ட அநியாயமான மூட நம்பிக்கைகளிலிருந்தும் அல்லாஹ் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காப்பாற்றினான்.
முதலில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களும், தாபியீன்களும், அடுத்து வந்த நபிமொழித் தொகுப்பாளர்களும் (முஹத்தீஸீன்) முன் சென்ற சமூகங்களுக்கு நேர்மாற்றமாக தங்கள் நபியின் வரலாற்றைப் பாதுகாக்க அசாதாரணமான முயற்சிகளை மேற்கொண்டார்கள். இதன் காரணத்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவர்கள் காலத்து மக்கள்அருகில் கண்டார்களோ ஏறத்தாழ அதேபோல் இன்று நாமும் பார்க்க (உணர) முடியும்.
ஆனால் ஒருவேளை, வருடக்கணக்கில் பாடுபட்டு தொகுத்தளித்த புத்தகங்களில் உள்ள அவை எல்லாமே அழிந்து விட்டாலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்வை பற்றி அறியும் ஹதீது – ஸீரா உடைய ஒரு பக்கம் கூட இவ்வுலகில் இருந்து வருகிறது. தன்னைக் கொண்டு வந்தவரைப் பற்றி ஒரு மாணவரின் சிந்தனையில் ஏற்படும் அடிப்படை கேள்விகளுக்கான பதிலை நாம் அதிலிருந்து (குர்ஆன்) வாருங்கள்! நாம் குர்ஆன் தன்னை கொண்டு வந்தவரைப் பற்றி எப்படி விவரிக்கிறது, பார்க்கலாம்!
தூதரின் மனிதத்தன்மை:
குர்ஆன் தூதுத்துவ விஷயத்தில் முதலாவதாக ஒரு தூதர் தான் என்பதை அழுத்தந்திருத்தமாக எடுத்துரைக்கிறது. குர்ஆன் இறங்குவதற்கு முன்னர் கடந்த கால நம்பிக்கைகள் ‘மனிதன் ஒரு போதும் அல்லாஹ்வின் தூதராக, அவன் பிரதிநிதியாக ஆக முடியாது’ என்று இருந்தன.
உலகத்தைச் சீர்படுத்த அவசியமேற்பட்டால் இறைவன் மனிதன் வடிவில் வெளியாகிறான் அல்லது எந்த ஒரு வானவரையோ, தேவரையோ அனுப்பி விடுகிறான். சீர்திருத்தத்திற்காக உலகிற்கு வந்த அத்தனை பேரும் மனிதத் தன்மையை விட்டும் உயர்வானவர்களாக இருந்தார்கள். இந்த நம்பிக்கை மனித உள்ளத்தில் ஆழமாய் வேரூன்றி விட்டிருந்தது. இதனால் எப்பொழுதேனும் ஓர் இறை நல்லடியார் அல்லாஹ்வின் செய்தியைக் கொண்டு வரும் போது மக்கள், ‘இவர் எப்படி ஒரு நபியாக இருக்கிறார்? நம்மைப் போன்று உண்கிறார், குடிக்கிறார், தூங்குகிறார், நடக்கிறார்’ என்று ஆச்சரியமாக… நம்மைப் போன்றே எல்லா உறுப்புகளும் அவருக்கும் இருக்கின்றது; இன்பத்திலும், துன்பத்திலும் வாடுகிறார்; துக்கத்திலும், சந்தோஷத்திலும் பீடிக்கப்படுகிறார்; அல்லாஹ்விற்கு நாம் நேர்வழி அடைவது நோக்கமாக இருந்தால் நம்மைப் போன்ற ஒரு பலவீனமான மனிதனை ஏன் அனுப்ப வேண்டும்? இறைவன் அவனாக வரமுடியாதா என்ன?
இக்கேள்விகள் ஒவ்வொரு நபி அனுப்பப்பட்ட போதும் கேட்கப்பட்டது. அதையே ஒரு காரணமாக்கி மக்கள் நபிமார்களை நிராகரித்தனர்.
நபி நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) தம் சமூகத்தின்பால் தூதுச் செய்தியை கொண்டு வந்தபோது “அவரை நிராகரித்து விட்ட அவருடைய மக்களில் உள்ள தலைவர்கள் இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை. எனினும் அவர் உங்கள் மீது மேலான பதவியை வகிக்கவே நாடுகிறார். (உண்மையில்) அல்லாஹ் நம்மிடம் ஒரு தூதரை அனுப்ப நாடியிருந்தால் வானவர்களையே அனுப்பி யிருப்பான்!” (குர்ஆன் – அல்முஃமினூன்: 24)
நபி நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) நேர்வழியைக் கொண்டு தமது சமூகத்தின் பால் அனுப்பப்பட்ட போது முதலாவதாக இந்த ஆட்சேப னையைத்தான் அச்சமூகம் முன்வைத்தது. (குர்ஆன் -அல்முஃமினூன்: 33-34)
ஆனால், அவருடைய சமூகத்தாரில் ஓரிறை நிராகரிப்பாளர்களாய் (காஃபிர்) இருந்த தலைவர்களும், இன்னும், இறுதித் தீர்ப்பு நாளைச் சந்திப்பதைப் பொய்ப்படுத்த முற்பட்டார்களே அவர்களும், நாம் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் விசாலமான (சுகானுபவங் களை) கொடுத்திருந்தோமே அவர்களும், (தம் சமூகத்தாரிடம்) ‘இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை. நீங்கள் உண் பதையே அவரும் உண்கிறார். நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.’ எனவே உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே! (குர்ஆன் அல்முஃமினூன்: 33,34)
மூஸா (அலைஹிஸ்ஸலாம்) ஹாருன் (அலைஹிஸ்ஸலாம்) இருவரும் பிர்அவ்னிடம் தூதுச் செய்தியை கொண்டு சென்றபோது இதனடிப்படை யிலேயே நிராகரித்தான். (குர்ஆன் – அல்முஃமின்: 47)
எனவே ‘நம்மைப் போன்ற இவ்விருமனிதர்கள் மீதா நாம் நம்பிக்கை (ஈமான்) கொள்வது? (அதிலும்) இவ்விருவரின் சமூகத்தாரும் நமக்கு அடிபணிந்து (தொண்டூழியம் செய்து) கொண்டிருக்கும் நிலையில்’ எனக் கூறினர். எனவே சரியாக இதே கேள்வி அந்நேரத்திலும் எழுந்தது. படிக்காத ஒரு மனிதர் நாற்பது வருடங்கள் அமைதியாக வாழ்ந்துவிட்டு திடீரென்று ஒருநாள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து தூதராக நியமிக்கப்பட்டிருக் கிறேன் என்று அழைப்பு விடுக்கிறார். ‘ஒரு மனிதர் நம்மைப் போன்றே கைகள், கால்கள், கண், மூக்கு, உயிர், உடல் கொண்டிருக்கிறார்’ அல்லாஹ்வுடைய தூதராக எவ்வாறு ஆகமுடியும் மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆச்சரியப்பட்டு அவர்கள் கேட்கிறார்கள். (குர்ஆன் – அல்புர்கான்: 7,8)
“மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: ‘இந்தத் தூதருக்கு (ரஸூலுக்கு) என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார். கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற் காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழ) தோட்டம் உண்டாகி யிருக்க வேண்டாமா?’ (என்றும் கூறுகின்றனர்) அன்றியும், இந்த அநியாயக்காரர்கள் நம்பிக்கையாளர்களை (முஃமின்களை) நோக்கி ‘சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை’ என்றும் கூறுகிறார்கள். (குர்ஆன் அல்ஃபுர்கான்)
இந்தத் தவறான புரிதலே தூதுத்துவத்தை ஏற்றுக் கொள்வதில் முதல் தடைக்கல்லாக இருந்து வந்தது. இதன்பின் குர்ஆனில் ஒரு விஷயம் மிகவும் வலியுறுத்திச் சொல்லப்பட்டது. மனிதனுக்கு நேர்வழி காட்ட ஒரு மனிதன்தான் வரமுடியும். இது ஏனென்றால், தூதுத்துவத்தின் நோக்கம் வெறும் செய்தியை எடுத்துரைப்பது மட்டுமன்றி மாறாக தானே அதை நடைமுறைப்படுத்திக் காட்டுவதும் பின்பற்றுவதற்கான ஒரு முன்மாதிரியை விட்டுச் செல்வதும் சேர்ந்து இருந்தது. மேலும் மனித பலவீனங்கள், மனித குணங்கள் அல்லாத மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவரை அனுப்பி இருந்தால் மனிதன் இவ்வாறு கூறலாம்.
நாங்கள் ஏன் அவரைப் பின்பற்ற வேண்டும். அவர் எங்களைப் போன்று மன இச்சைகளை உடையவராக இல்லை.
மனிதனை தவறின்பால் இழுத்துச் செலுத்தும் பலவீனங்கள்:
அவரிடம் “(நபியே!) நீர் கூறும் ‘பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்தி லிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்’ என்று. (குர்ஆன் – பனீ இஸ்ராயில்: 95)
பிறகு குர்ஆன் முன்சென்ற சமுதாயங்களில் அனுப்பப்பட்ட நபிமார்களும், நேர்வழிகாட்டிகளும் முஹம்மத் நபி போன்றே அவர்களும் மனிதர்களாகத்தான் இருந்தார்கள் என்பதை தெளிவாக எடுத்து வைத்தது. இன்னும் அதைப்போன்றே ஒவ்வொரு மனிதனும் சாப் பிடுவது, நடப்பது, குடிப்பது மாதிரி அவர்களும் நடந்தார்கள், குடித் தார்கள், உண்டார்கள். (குர்ஆன் – அன்பியா: 7,8)
“(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறு எவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை. அவர்களுக்கே நாம் இறைவெளிப்பாடு (வஹீ) அறிவித்தோம். எனவே, ‘(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டு (தெரிந்து) கொள்ளுங்கள்’ (என்று நபியே! அவர்களிடம் கூறும்).” “அன்றியும் நாம் அவர்களுக்கு உணவு அருந்தாத உடலை அமைக்கவில்லை. மேலும், (பூமியில்) நிரந்தரமானவர்களாக வும் அவர்களிருக்கவில்லை.” (குர்ஆன் – அல்அன்பியா: 38)
“(அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி எவருமில்லை. அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப்படி அமைத்தான்.” (குர்ஆன் அல்ஃபுர்கான்: 2)
“(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம். அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததி களையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம். மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை. ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது. பிறகு முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு, தான் ஒரு மனிதன்தான் என்பதை தெளிவாக எடுத்துக் கூறுமாறு கட்டளையிடப்பட்டது. இது ஏனென்றால் முன்சென்ற நபிமார்களுக்கு நேர்ந்த மாதிரி உங்கள் மீது இறைத்தன்மை வாய்ந்தவர் என்று மக்கள் கருதிட வேண்டாம். (குர்ஆன்: அல்சஹீப்)
இந்தத் தெளிவுரைகள் எல்லாமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பற்றிய தவறான நம்பிக்கைகளை மட்டும் களையவில்லை, மாறாக எல்லா நபிமார்கள், நல்லடியார்களைப் பற்றிய தவறான புரிதலையும் தூதருடைய ஆற்றலும், சக்தியும்இன்னொரு விஷயம் குர்ஆனில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. அது தூதருடைய சக்தியும், ஆற்றலுமாகும். இறைவனின்பால் வழிகாட்டக் கூடியவர்களையே இறைத்தன்மையில் சமமாக்கி விட்டது; இந்த அறியாமை கூடவே இந்த நம்பிக்கையில் ஏற்பட்டு விட்டது.
இறைவனின்பால் வழிகாட்டக் கூடியவர்களுக்கு அசாதாரணமான ஆற்றல்கள் இருக்கின்றது; அவர்கள் இறைவனின் வல்லமை யில் குறிப்பிட்ட சில அதிகாரங்களைக் கொண்டவர்களாக இருக்கிற கூலியும் தண்டனையும் கொடுப்பதில் அவர்களுக்கும் பங்கு உண்டு; வெளிப்படையானவை, மறைவானவை என எல்லாமே அவர்களுக்குத் தெரிகிறது; அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் அவர்களின் மன விருப்பப்படி அவை மாறுபடுகிறது. இன்ப, துன்ப விஷயங்களில் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. நன்மை தீமைகளின் அதிபதிகளாக இருக்கிறார்கள்; உலகத்தின் அனைத்து சக்திகளும் அவர்களுக்கு கட்டுப் படுகின்றன; ஒரே பார்வையில் மக்களின் உள்ளங்களை மாற்றி அநியா யங்களையும், வழிகேடுகளையும் அகற்ற முடியும்; இதுபோன்ற
எண்ணங்களால் தான் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஓர் அதிசய வேண்டலை முன்வைத்தார்கள். குர்ஆன் கூறுகிறது: பனி இஸ்ராயில் 90-93
“இன்னும் அவர்கள் கூறுகிறார்கள் – ‘நீர் எங்களுக்காகப் பூமி யிலிருந்து ஒரு நீர் ஊற்றைப் பீறிட்டு வரும்படி செய்யும் வரையில், உம் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.அல்லது பேரீச்சை மரங்களும், திராட்ரைக் கொடிகளும் (நிரப்பி) உள்ள தோட்டம் ஒன்று உமக்கு இருக்க வேண்டும். அதன் நடுவே ஆறுகளை நீர் வழிந்தோடச் செய்ய வேண்டும். அல்லது நீர் எண்ணுவது போல் வானம் துண்டு துண்டாக இடிந்து எங்கள் மேல் விழச் செய்யும் வரை, அல்லது அல்லாஹ் வையும் மலக்குகளையும் (நமக்கு முன்) நேருக்கு நேராகக் கொண்டு வந்தாலன்றி. அல்லது ஒரு தங்க மாளிகை உமக்கு இருந்தாலன்றி (உம் மீது நம்பிக்கை கொள்ளோம்.) அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும். (அங்கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும் வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்ப மாட்டோம்’ என்று கூறுகின்றனர். ‘என் இறைவன் மிகத் தூயவன். நான் (இறைவ னுடைய) தூதராகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?’ என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக.
அல்லாஹ்வின் பால் வழிகாட்டக் கூட்டியவர்களுக்கு இப்படிப் பட்ட ஆற்றல்கள் இருக்கும் என்று மக்களிடம் காணப்பட்ட தவறான கருத்துகளைப் பின்னால் அல்லாஹ் மறுத்துரைத்து விட்டான். இன்னும் இவர்களுக்கு இறைவனின் அதிகாரத்தில் எள்ளளவும் பங்கில்லை எனத் தெளிவாக எடுத்துரைத்து விட்டான். எனவே நபியே! நம்முடைய அனுமதி இல்லாமல் மற்றவர்களை தீமைகள் ஏற்படாது தடுப்பது இருக்கட்டும், உம்மை நீரே தடுத்துக் கொள்வதற்கு உனக்கு சக்தி கிடையாது. (குர்ஆன் – அன்ஆம்: 17)
(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்தி விட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கி விட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (குர்ஆன் – யூனுஸ்: 49)
(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடியதைத்தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையோ, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை. ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பிட்ட கால) தவணையுண்டு. அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.’ (குர்ஆன் – அன்ஆம்: 50)
(நபியே!) நீர் கூறும் – ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவராக (மலக்காக) இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை. எனக்கு (வஹீயாக) அறிவிக்கப் பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை. இன்னும் நீர் கூறும் – ‘குருடனும், பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?’ (குர்ஆன் – அஃராப்: 188)
(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்துகொள்ள சக்தியில்லாதவன். மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக் கொண்டிருப் பேன். (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டி யிராது – நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நற்செய்தி கூறுபவனுமேயன்றி வேறில்லை.’ (குர்ஆன் அஃராப்: 188)
பிறகு கூறி விட்டான் – கூலி கொடுப்பதில் தண்டனை அளிப்பதில் நபிக்கு எவ்வித பங்கும் இல்லை. அவர் வேலை வெறும் செய்தியை எடுத்துரைப்பதும் நேர்வழிகாட்டுவதும்தான். பின்னால் கணக்கு கேட்பதும், அவர்களை பிடிப்பதும், மக்களுக்குத் தண்டனை வழங்குவதும் இறைவனின் செயல். பிறகு கூறினான்:
மக்களின் உள்ளங்களை மாற்றுவதும், எவர்களிடம் நம்பிக்கையை (ஈமானை) ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லையோ அவர்களிடம் ஈமானை ஏற்படுத்துதல் உங்களால் முடிகிற காரியமல்ல. நேர்வழி காட்டுவது என்பது அறிவுரையும், நல்லுரையையும் எடுத்துரைப்பது தான். இதை அவர் முழுக்க முழுக்க நிறைவேற்ற வேண்டும். எவன் நேர்வழி அடைய வேண்டும் என்று விரும்புகிறானோ அவனுக்கு வழியை காட்டி விடுவார். (குர்ஆன் – அந்நம்லு: 80,81)
நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது. – அவ்வாறே செவிடர்களையும் – அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும் போது – (உம்) அழைப்பைக் கேட்கும்படிச் செய்ய முடியாது. இன்னும் நீர் குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து (அகற்றி) நேர் வழியில் செலுத்த முடியாது – எவர்கள் நம் வசனங்களை நம்புகிறார்களோ அவர்களைத் தான் (அவற்றை) கேட்கும்படி நீர் செய்ய முடியும். ஏனெனில் அவர்கள் (அவற்றை) முற்றிலும் ஏற்றுக் கொள்வர். (குர்ஆன் அந்நம்ல்: 80,81)
அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான். மண்ணறை(கப்ரு)களில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை. நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர். நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.” (குர்ஆன் – பாதிர்: 22-24)
அவர் மீது அல்லாஹ் இறக்கி வைத்ததை அப்படியே அல்லாஹ் வுடைய அடியார்களுக்கு எடுத்துரைக்கிறார். அல்லாஹ்வுக்கு வழிபடு வதிலிருந்து அவர் முகம் திருப்பிக் கொள்வாரேயானால் இன்னும் அல்லாஹ்வுடைய வார்த்தைகளில் (கலாமில்) தன் இஷ்டப்படி இட்டுக் கட்டுவாரேயானால் அவருக்கு எந்தச் சிறப்பும் இல்லை. மாறாக அவர் இறைவனின் பிடியிலிருந்து தப்பிக்கவும் முடியாது. (பகரா – 145)
வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டு வந்த போதிலும் அவர்கள் உம் கொள்கையை (கிப்லாவை) பின்பற்ற மாட்டார்கள். நீரும் அவர்களுடைய கொள்கையை (கிப்லாவை) பின்பற்றுபவர் அல்லர். இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர். எனவே, (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப் பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக் காரர்களில் ஒருவராக இருப்பீர்.” (குர்ஆன் – பகரா: 120)
“அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், ‘இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும், அல்லது இதை மாற்றிவிடும்’ என்று கூறுகிறார்கள். அதற்கு ‘என் மனப் போக்கின் படி அதை நான் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது இறைவெளிப்பாடாக (வஹீயாக) அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறை வனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாகப் பயப்படுகிறேன்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக.” (குர்ஆன் – யூனுஸ்: 15)
அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும். இதுவெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அல்லாஹ்வுக்காக மாறு செய்தல், அவன் வார்த்தைகளை மாற்றி விடுதல் அல்லது இன்னொன்றுடன் கலந்து விடுதல் போன்ற எள்ளளவு சந்தேகத்தின் அடிப்படையில் சொல்லப் பட்டதல்ல. உண்மையில் இதன்மூலம் ஒரு செய்தியைத் தெளிவுபடுத்த வேண்டும் எனும் ஒரே காரணம்தான். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உள்ள மிகுந்த நெருக்கம் என்பது அவரது பௌதீக அமைப் பிற்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள தொடர்பினால் அன்று. மாறாக இந்நெருக்கத்திற்குக் காரணம் அவர் அல்லாஹ்விற்கு ரொம்பவும் கீழ்ப்படிபவராகவும் அவனுடைய உயிருக்கு உயிரான அடியாராகவும் இருப்பதாலாகும்.
நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பி உள்ளோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை. (குர்ஆன் – பாதிர்: 24)
மெய்யாக நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ‘அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்’ என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். எனவே அ(ந்த சமூகத்த)வர் களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள். வழிகேடே விதிக்கப் பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனி யுங்கள். (குர்ஆன் – அந்நஹ்ல்: 36)
அந்நாளில் எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்குத் தான். அவன் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான். ஆகவே ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்பவர்கள் பாக்கியம் மிக்க சுவர்க்கங்களில் இருப்பார்கள்.நம்பிக்கையாளர்களே! (முஃமின்களே) உங்கள் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்தபோது (புயல்) காற்றையும்,
நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம். மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான். (குர்ஆன் – அஹ்ஸாப்: 9)
முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) (இறைவனின்) தூதரே அன்றி (வேறு) அல்லர். அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்று விட்டார்கள். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால், நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறமுதுகு காட்டி) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள் மேல் (புறமுதுகு காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது. அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதி சீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (குர்ஆன் – ஆலஇம்ரான்: 144)
(முஃமின்களே!) ‘நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப் பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்ட தையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறை வனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம். அவர் களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம். இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்’ என்று கூறுவீராக. (குர்ஆன் – அல்பகரா: 136,137)
ஆகவே, நீங்கள் நம்பிக்கை (ஈமான்) கொள்வதைப் போல் அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர் வழியைப் பெற்றுவிடுவார்கள். ஆனால் அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன். அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கின்றான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்கு முன்னால் அனுப்பப்பட்ட நபி மார்களில் எவரையும் பொய்ப்பிக்கவோ மறுக்கவோ வரவில்லை. மாறாக முதல் நூல் முதற்கொண்டு அனைத்துச் சமுதாயங்களின் தூதர்களும் எதை எடுத்துரைத்தார்களோ அந்த உண்மையான மார்க்கத்தைப் பின்னால் வந்த மக்களின் கலப்படத்தை விட்டும் தூய்மைப்படுத்தி எடுத்துரைக்கவே வருகை தந்தார்கள்.
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பப்பட்டதன் நோக்கம்
1. போதனை அடிப்படையிலான பணிகள்:
குர்ஆன் தன்னை கொண்டு வந்தவரைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்த பிறகு அவரை அல்லாஹ் எதற்காக அனுப்பினானோ அப்பணிகள் பற்றியும் உரைத்துக் காட்டுகிறது.
இந்தப் பணி பொதுவாக இரண்டு கூறுகளைச் சார்ந்தது. ஒன்று – போதனை அடிப்படையில் இரண்டாவது – செயல் அடிப்படையில்.
நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு (முஃமின்களுக்கு) அருள் புரிந்திருக்கின்றான். அவன் அவர்களுக்கு அவர்களி லிருந்தே ஒரு ரஸூலை (தூதரை) அனுப்பி வைத்தான். அவர் அவனுடைய வசனங்களை அவளுக்கு ஓதிக் காண்பிக்கிறார். இன்னும் அவர்களைப் (பாவத்தை விட்டும்) பரிசுத்தமாக்கு கிறார். மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (குர்ஆன் – ஆல இம்ரான்: 164)
இங்கே வசனங்களை ஓதிக் காட்டுவது என்பது அவனது கட்டளை களை, அறிவுரைகளை அப்படியே எடுத்துக் கொள்வதாகும். தஸ்கியா என்பது – மக்களை அவர்களின் ஒழுக்கங்கள், வாழ்க்கை முறைகளி லிருந்தும் தீமையான பண்டிகை, தவறான பழக்க வழக்கங்களை, சடங்குகளை விட்டும் தூய்மைப்படுத்துவதற்கும், வசனங்களைக் கற்றுக் கொடுத்தல், ஞானம் (ஹிக்மத்) – என்பது மக்களுக்கு வேதத்தின் சரியான நோக்கத்தையும், அழைப்பையும் புரிய வைப்பதாகும். அவர்களிடம் குர்ஆனின் அடிப்படை விஷயத்தின்பால் ஒரு தெளிவை ஏற்படுத்துவதாகும். அவர்களுக்கு தமது வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் அவன் வேதத்தின்படி அமைத்துக் கொள்வதற்கான ஞானத்தை (ஹிக்மத்தை) கற்றுக் கொடுப்பதாகும்.
2. நெறியை (தீனை) முழுமைப்படுத்துதல்:
(தானாக) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப் பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப்பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள்மீது விலக்க(ஹராமாக்க)ப்பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காக) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) – இவை யாவும் (பெரும்) பாவங்களாகும். இன்றைய தினம் ஓரிறை நிராகரிப்பாளர்கள் (காஃபிர்கள்) உங்களுடைய மார்க்கத்தை (அழித்துவிடலாம் என்பதை) பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள். எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சா தீர்கள். எனக்கே அஞ்சி நடப்பீர்களாக. இன்றை தினம் உங்க ளுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசை வானதாக) தேர்ந்தெடுத்துள்ளேன். ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோ னாகவும் இருக்கின்றான். (குர்ஆன் – அல்மாயிதா: 3)
வேறொரு வார்த்தையில் குர்ஆனை அனுப்பியவன் அதை கொண்டு வந்தவரிடம் அதன் வசனங்களை ஓதிக் காட்டுதல், உள்ளங்களைத் தூய்மைப்படுத்துதல் வேதத்தையும், ஞானத்தையும் (ஹிக்மத்தையும்) கற்றுக் கொடுத்தல் போன்ற பணிகளை மட்டும் நோக்கமாகக் கொள்ள வில்லை. மனித சமுதாயத்திற்கு எதை எடுத்துரைக்க வேண்டுமோ அதை இவரைக் கொண்டு முழுமைப்படுத்தினான். எந்தத் தீமைகளை விட்டும் மனித வாழ்வை தூய்மைப்படுத்த வேண்டுமோ அதையெல்லாம் இவரின் வாயிலாக அப்புறப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டான். எந்தெந்த சிறப்புகளெல்லாம் தனிமனித மற்றும் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டுமோ அவற்றின் முன்மாதிரியை இவரின் மூலமாக நடத்திக் காட்டினான். வரக்கூடிய எல்லாக் காலங்களிலும் குர்ஆன் படி மனித வாழ்வு அமைய வேண்டும்.
கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய ‘ரஹ்மத்’ என்னும் அருள்மாரிக்கு முன்னே நற்செய்தி (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கிறானா? – அவர்கள் இணை வைப்ப வற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக. ‘நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.’ (குர்ஆன் – அந்நஹ்லு: 63,64)
3. கருத்துவேறுபாடுகளைக் களைவது:
3. இது மட்டுமல்லாது நபிமார்களின் பணி முன்சென்ற சமுதா யங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைக் களைவதும், எல்லா மூடு திரைகளையும் அகற்றி அனைத்து கலப்படங்களையும் துடைத்தெறிவதாகும். எந்த வழியை பின்பற்றுவதால் அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்குமோ அந்த வழியில் எல்லாத் தடைகளையும் ஒழித்து அந்த ஒரே வழியை சிறப்பாக்கி வைத்துத் தருவதும், இதனைக் கொண்டு வந்தவரிடம் அல்லாஹ் மேற்கொண்ட பணியாகும் என்பதை இவரின் வாயிலாக வழிகாட்டினான்.
அன்றியும் எவர்கள் தங்களை, ‘நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்’ என்று கூறிக் கொள்கிறார்களோ அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம். ஆனால் அவர்களும், அவர் களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள். ஆகவே, இறுதிநாள் வரை அவர் களிடையே பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம். இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான்.
வேதமுடையவர்களே! மெய்யாகவே உங்களிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார். வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ் விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக்குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. (குர்ஆன் – அல்மாயிதா – 14,15)
4. நிராகரிப்பாளர்களை அச்சமூட்டுவதும் கீழ்ப்படிபவர்களுக்கு நற்செய்தி கூறுவதும்,அவன் மார்க்கத்தைப் பரப்புவதும்:
நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம். (குர்ஆன் – அஹ்ஸாப்: 45)
செயல் அடிப்படையிலான பணிகள்
1. நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும், விலக்கப்பட்ட – அனுமதிக்கப்பட்ட (ஹராம், ஹலால்) சட்டத்தை நிறுவுதல், இறைவன் தவிர மற்றவர்கள் கொண்டுவந்த கட்டுப்பாடுகளை விட்டும் அவர் களைக் காப்பாற்றுதல்.
2. இறை அடியார்கள் மத்தியில் சத்தியம் மற்றும் நீதியின் அடிப்படையில் தீர்ப்பளித்தல்.
3. மனித வாழ்வின் முழு வடிவமும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தைத் தழுவியதாகவும் மற்ற எல்லா வழிமுறைகளும் இதன் முன்னால் அடங்கிப் போகுமாறு செய்தல் வேண்டும்.
அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பியருளினான். சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது. (குர்ஆன் – அல்பத்ஹ்: 28)
இவ்வாறாக அரசியல் நீதி பரிபாலனம், பண்பாடு மற்றும் ஒழுக் கத்தின் சீர்திருத்தம், நாகரிகத்தை நிர்மாணித்தல் போன்ற எல்லாத் தளங்களிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய பணி படர்ந்து விரிகிறது.
4. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய இந்தப் பணி வெறுமனே ஒரு சமுதாயம், ஒரு நாடு, ஒரு காலத்திற்கு மட்டும் சார்ந்ததன்று, மாறாக மனித சமுதாயத்தின் எல்லா மக்களுக்கும் எல்லா காலங்களுக்கும் உரியதாகும்.
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனிதகுலம் முழுமைக்கும் நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி (வேறெதற்காகவும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள். (குர்ஆன் – அஸ்ஸபா: 28)
இது அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்). (குர்ஆன் – அத்தக்வீர்: 27,28)
5. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூதுத்துவத்தின் (நுபுவத்) சிறப்பம்சமாக குர்ஆன் ‘இத்தோடு தூதுத்துவம் முடிவடைகிறது. இனி உலகில் மீண்டும் ஓர் நபி அனுப்பப்பட வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டது’ என்று கூறுகிறது.
முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை) யாகவும் இருக்கின்றார். மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள் கள் பற்றியும் நன்கறிந்தவன். (குர்ஆன் – அஹ்ஸாப்: 40)
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூதுத்துவம்
உண்மையில் உலகளாவிய அளவில் மார்க்கத்தை முழுமைப்படுத்துவதாக இருந்தது. மேற்கண்ட கருத்துகள் மூலம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய தூதுத்துவம் உலக மாந்தர்கள் அனைவருக்குமானது. இது ஒரு தனிப்பட்ட ஒரு சமுதாயத்திற்கானது கிடையாது. (அவர்களுக்கு பிறகு வரும்) எல்லா காலத்திற்கும் உரியது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமன்று. எந்தக் காரியத்திற்காக நபிமார்கள் வரவேண்டிய அவசியம் இருந்ததோஅது இவர்கள் மூலம் முழுமையடைந்து விட்டது. ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு தூதுத்துவம் (நுபுவ்வத்) முடிவுபடுத்தப்பட்டது என்பதை முழுக்க முழுக்க ஒப்புக் கொள்ளப்பட்ட செய்தி.
இச்செய்தியை ஒரு நபிமொழியின் வாயிலாக நமக்கு அழகாக தெளிவு படுத்துகிறார்கள்.
நபிமார்களில் என்னுடைய உதாரணம் என்பது ஒரு மனிதர்ஒரு அழகான ஒரு வீடு கட்டினான். எல்லாக் கட்டடங்களும் கட்டி ஒரே ஒரு செங்கல் அளவு இடத்தை மட்டும் விட்டு விட்டான். அப்போது மக்கள் அவ்வீட்டைச் சுற்றிப் பார்த்தனர். அந்த ஒரு செங்கல் அளவு இடம் அவர்களுக்கு உறுத்தியது.இந்தக் கடைசி செங்கல்லையும் வைத்து விட்டால் வீடு முழுமையடைந்து விடும் என்று கூறினார்கள். தூதுத்துவ (நுபுவ்வத்) வீட்டின், அந்த கடைசி செங்கல் நான்தான். எனக்குப் பிறகு எந்த ஒரு நபியும் வருவது கிடையாது. இவ்வுதாரணம் மூலம் நமக்கு தூதுத்துவத்தின் (நுபுவ்வத்) முடிவிற்கான காரணம் நமக்கு தெளிவாகப் புரிகிறது.
மார்க்கம் முழுமையடைந்து இறைவசனங்கள் முழுமையான அளவில் விளக்கப்பட்ட பிறகு ஏவல்கள், விலக்கல்கள், கொள்கைகள், வணக்க வழிபாடுகள், பண்பாடு, சமூகம், ஆட்சி, அரசியல் ஆக மனித வாழ்வின் எல்லாத் துறைகளைப் பற்றியும் முழுமையாக சட்டங்கள் விளக்கப்பட்டுவிட்டன. எவ்வித கலப்படமும், திரிபும் இல்லாமல் அல்லாஹ்வுடைய வாக்கும், அவன் தூதரின் முன்மாதிரியும் எடுத்துச் சொல்லப்பட்டு விட்டது. எல்லாக் காலகட்டத்திலும் அதிலிருந்து வழிகாட்டுதல்கள் பெற முடியும்போது (இனி) தூதுத்துவத்தின் (நுபுவ்வத்) அவசியம் இல்லாமற் போய் விட்டது. இப்பொழுது
ஞாபக மூட்டுதலும், சீர்திருத்தம், (புனர் நிர்மானம் – புதுமைப்படுத்துதல்) செய்வதும் மட்டும் எஞ்சி உள்ளது. இதற்கு சத்திய அறிஞர்களும் உண்மை விசுவாசிகள் உடைய ஒரு கூட்டம் போதுமானது.
6. இப்பொழுது கேட்கப்பட வேண்டிய கடைசிக் கேள்வி ஒன்று உள்ளது. குர்ஆனைக் கொண்டு வந்தவர் மனிதன் எனும் அடிப்படையில் எத்தகைய பண்பு நலன்களைக் கொண்டவர்? இதற்கான பதிலில் குர்ஆன் மற்ற நூற்களைப் போன்று புகழ்மாலை (மணி) கட்டுவதில்லை. அதே போல் அவர்களது புகழ் பற்றி ஒரு தனித்தலைப்பிட்டுப் பேசவும் இல்லை. மாறாக, இரத்தினச் சுருக்கமாக அவர்களிடம் மனிதத்தின் உயர்பண்புகள் குடி கொண்டிருந்தன என்று ஒழுக்க மாண்பை எடுத்துரைக்கிறது.
அ. தன்னைக் கொண்டு வந்தவர் ஒழுக்கத்தின் உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்று கூறுகிறது. (குர்ஆன் – அந்நூர்: 3)
தன்னைக் கொண்டு வந்தவர் மிக்க உறுதியான உள்ளம் கொண்டவர், அல்லாஹ்வின் மீது எல்லா நிலைகளிலும் நம்பிக்கை கொண்டவர் என்று பறைசாற்றுகிறது. அவரை அவரது சமுதாயம் அழிக்க முற்பட்டபோது ஒரே ஒரு உதவியாளருடன் ஒரு குகையில் பதுங்க நேரிட்டது. அந்த இக்கட்டான நேரத்திலும் தைரியத்தை இழக்காமல் இருந்தார். தன் உறுதியில் மேல் நிலையாக இருந்தார். (குர்ஆன் – தவ்பா: 40)
ஆ. (நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றிய போது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கிறான். குகையில் இருவரில் ஒருவராக இருந்தபோது, (நம் தூதர்) தம் தோழரிடம், ‘கவலைப்படாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்’ என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான். மேலும் நீங்கள் பார்க்க முடியாத படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான். நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான். ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குதான் (எப்போதும்) மேலோங்கும் – அல்லாஹ் மிகைத்தவன். ஞானம் மிக்கவன். (குர்ஆன் – தவ்பா: 40)
3. மேலும், குர்ஆன் தன்னைக் கொண்டு வந்தவர் விசாலமான, பரந்த மனம், தயாளத்தன்மைக் கொண்டவர் என்றும் சுட்டிக் காட்டுகிறது. தன்னு டைய விரோதிகளை மன்னிக்க வேண்டி பிரார்த்தித்து அதனை அல்லாஹ் தன் மாற்ற முடியா முடிவால் நான் அவர்களை மன்னிக்க மாட்டேன் என்று கூறிவிட்டான். பலவீனங்களைச் சுமத்தவில்லை. குர்ஆன் மட்டுமே எஞ்சி இருக்க இஸ்லாமிய இலக்கியத்தின் ஏனைய எல்லா நூல்களும் இவ்வுலகத்தில் அழிந்துபோனாலும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றி எவ்வித தவறான புரிதல்களும், சந்தேகமும், அகிதாவில்(கொள்கையில்) எவ்வித சறுக்கல்களும் ஏற்படாது.
இவ்வேதத்தைக் கொண்டு வந்தவர் ஒரு முழு மனிதராக இருந்தார். உயர் நற்பண்புகள் உடையவராக இருந்தார் என்று நாம் நன்கு அறிந்துகொள்ள முடியும். முன்சென்ற நபிமார்களை உண்மைப்படுத்துகிறார். புதிய மதத்தையும் நிறுவியவர் இல்லை. தான் மனிதத் தன்மைக்கு மேற்பட்டவர் என்று கூறியது கிடையாது. அவரது அழைப்பு அனைத்து மனிதர்களுக்கும் உரியதாக இருந்தது. அல்லாஹ்வின் புறத்திலிருந்து சில குறிப்பிட்ட காரியங்கள் ஆற்றுவதற்காக கட்டளையிடப்பட்டவராக இருந்தார். அக்காரியங்களை அவர் முழுமையாக ஆற்றிய பிறகு அவரோடு தூதுத்துவம் (நுபுவ்வத்) முடிக்கப்பட்டுவிட்டது.
(நபியே!) நீர் இவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோரினாலும் அல்லது இவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோரா விட்டாலும் சரியே! மன்னிப்புக் கோரினாலும் – நிச்சயமாக அல்லாஹ் இவர்களை மன்னிக்க மாட்டான். ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள். – இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (குர்ஆன் – தவ்பா: 80)
ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந் திருந்தி), தவ்பா செய்து (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கைக் கொண்டால் – நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான். (குர்ஆன் – அஃராப்: 19)
(நபியே!) ‘சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?’ எனக் கேளும்; அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான். இந்த குர்ஆன் எனக்கு இறைநற்செய்தியாக (வஹீயாக) அருளப்பட்டுள்ளது. (குர்ஆன் – அன்ஆம்: 19)
4. அது மேலும் கூறுகையில், தன்னைக் கொண்டுவந்தவர் மிகவும் இளகிய மனம் படைத்தவர். எவருடனும் கடின சித்தமுடையவராக நடந்து கொண்டதில்லை என்றும் கூறுகிறது. இதனால் உலகம் இவரைச் சுற்றிவரக் கூடியதாகி விட்டது. (குர்ஆன் 3:159)
5. மேலும், தன்னைக் கொண்டுவந்தவர் அடியார்களை இறை வழியின்பால் அழைப்பதில் மிகவும் துடிப்பானவராக இருந்தார். தங்கள் வழிகேட்டின்பால் மக்கள் வம்படியாக இருந்தபோது அவருக்கு மாபெரும் வலியாக இருந்தது. அதன் கவலையில் துவண்டு கிடந்தார் என்று குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.
6. தன்னைக் கொண்டு வந்தவரைப் பற்றி அவர் தன் சமூகத்தின் மீது பேரன்பு கொண்டிருந்தார். அவர்கள் நலனில் பேராசையோடு இருந்தார். அவர்கள் துன்பப்படுவதிலிருந்து துடிதுடித்துப் போனார். அவர்கள் விஷயத்தில் முழுக்க முழுக்க இரக்கப்படுபவராகவும், கருணையாளராகவும் இருந்தார் என்று குர்ஆன் மேலும் கூறுகிறது.
(நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது. அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்பு கிறார். இன்னும் நம்பிக்கையாளர்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார். (குர்ஆன் – தவ்பா: 128)
7. தன்னைக் கொண்டு வந்தவரை தன் சமூகமட்டுமல்லாது அனைத்துலகிற்கும் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தாக — அருட்கொடை யாக இருந்தார் என்று கூறுகிறது.
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (குர்ஆன் – அன்பியா)
8. குர்ஆன் தன்னைக் கொண்டு வந்தவர் இரவில் மணிக்கணக்கில் அல்லாஹ்வை வழிபடுகிறவர், இறை நினைவில் எழுந்து நிற்பவர் என்று சொல்லிக் காட்டுகிறது.
நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான். அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான். அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகின்றான். ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகின்றான். ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள். தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாகக் கடன் கொடுங்கள். நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காகச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள். அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (குர்ஆன் – முஜம்மில்: 20)
9. தன்னைக் கொண்டு வந்தவரைப் பற்றி ‘அவர் உண்மை மனிதராக இருந்தார். எந்நேரத்திலும் நேர்வழியை விட்டும் வழி தவறிடவில்லை. தவறான சிந்தனைகளால் ஆட்பட்டது கிடையாது. மன இச்சைக்கு கட்டுப்பட்டு சத்தியத்திற்கு எதிராக ஒரு சொல் கூறியதில்லை’ என்று அறிவிக்கிறது.
உங்கள் தோழர் வழிகெட்டுவிடவுமில்லை. அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. (குர்ஆன் – அந்நஜ்ம்: 2,3)
10. ‘அகிலத்தாரும் பின்பற்றத்தக்க ஒரு முன்மாதிரியாக அவர் இருக்கிறார்; அவரது முழு வாழ்வும் நற்குணங்களின் சரியான தளத்தில் இருந்தது’ என்று குர்ஆன், தன்னைக் கொண்டு வந்தவரைப் பற்றி கூறுகிறது.
குர்ஆன் மஜீதை ஆழ்ந்து நோக்கும்போது அக்குர்ஆன் உடைய சொந்தக்காரரைப் பற்றி மேலும் சில தனிச் சிறப்பம்சங்கள் பற்றி நமக்குப் புலப்படுகிறது. ஆனால் இச்சிறு நூலில் இதைப் பற்றி விரிவாக கூற இடம் இல்லை. குர்ஆனை நன்கு வாசிப்பவர் தற்போது இருக்கும் ஏனைய சமய நூல்களுக்கு மாற்றமாக அது தன்னைக் கொண்டு வந்தவரைப் பற்றி எவ்வித கையாடலுக்கும் இடமின்றி தெளிவாக எடுத்தியம்புகிறது என்பதை நன்கு அறிந்துகொள்வார்.
அவரிடம் கடவுட்தன்மையின் எவ்வித சாயலும் இருந்ததில்லை. அவரைப் புகழ்வதில் எவ்வித வரம்பு மீறலும் இல்லை. அசாதாரணமான ஆற்றல்கள் அவரிடம் இருந்தன என்று கூறவில்லை. இறைவனின் அதிகாரத்தில் அவருக்கு எவ்வித பங்கும், உதவியும் (துணை) இல்லை.
குர்ஆனின் மேற்கண்ட கூற்றுக்கு மாறாகக் கூறுவது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சத்திய அழைப்பாளர், சத்திய வழிகாட்டி எனும் நிலைக்கு (தகுதிக்கு) களங்கம் கற்பிக்கும்.
மௌலானா அபுல் அஃலா மௌதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி
தமிழில்: மௌலவி முஹம்மத் இக்பால் உமரி