இரு சக்கர வாகனம் நீங்கள் வைத்திருக்கிறீர்களா? (அதிர்ச்சியடையாமல் மேலே படியுங்கள்..)
1. இனிமேல் நீங்கள் உங்கள் வண்டிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எப்.சி.எடுக்க வேண்டும்.(டூ வீலருக்குத்தான் அய்யா..!)
2. உங்கள் வாகனத்திற்கு ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ் தான் மாற்ற வேண்டும்.
3. இவற்றை மீறினால் சிறைத்தண்டனையும் அபராதமும் உண்டு.
4. ரோட்டோரமாய் இருக்கும் வொர்க் ஷாப்பில் எல்லாம் இனி உங்கள் வாகனத்தை சர்வீஸ் செய்ய விட முடியாது.
5. அதற்கென்று கார்போரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் சர்வீஸ் ஸ்டேசனில் தான் விட வேண்டும்.
6. லைசென்ஸ் இனி தனியாரிடம் தான் எடுக்க வேண்டும்.
7. தற்போது உள்ள ஓட்டுனர் பயிற்சி நிலையங்கள் எல்லாம் இனி மூடப்படும்.
8. இனி இது போன்ற பயிற்சி நிறுவனங்கள் நிறுவ, ஒருவருக்கு குறைந்தது 10 முதல் 15 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். அங்கு உடல் பரிசோதனைக் கருவிகள், விடுதி வசதி போன்றவை இருக்க வேண்டும்.
9. வாகன உற்பத்தியாளர்கள் போன்றோருக்கு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி அமைக்க அனுமதி அளிக்கப்படும்.
10. சாதாரண போக்குவரத்து விதியை மீறினால், இனிமேல் இரண்டு தமிழ் நாளிதழிலும், ஒரு ஆங்கில நாளிதழிலும் போட்டோ போட்டு “நான் தவறு செய்தவன்.” என்று சொந்த செலவில் விளம்பரம் செய்ய வேண்டும்.
11. நடத்துனர் வேலை இனி கிடையாது. அந்த வேலையை டிரைவர் தான் பார்த்துக் கொள்ளவேண்டும். அவர்கள் கதி?
12. கடைசி வெடிகுண்டு…
இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய சட்டப் படி ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும். உங்கள் பழைய உரிமம் இனி செல்லாது. மறுபடி நீங்கள் எல்.எல்.ஆர். எடுக்க தனியாக தேர்வு எழுத வேண்டும். ஒரு வருடம் கழித்த பின்னரே ஓட்டுனர் உரிமம் வழங்கப் படும்.
13. உங்கள் வாகனம் சாலையில் ஓட்டத் தகுதியானதா இல்லையா என்பதை இனி டோல்கேட் வசம் ஒப்படைக்கப் படும். டோல்கேட் டை மீறி சென்றால், சிறைத் தண்டனை வழங்கப்படும்.
இதெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா ?
மோடி அரசு கொண்டு வர இருக்கும் “சாலைப் பாதுகாப்பு மசோதா -2015″ தான்.
இது பாராளுமன்றத்தில் நிறைவேறினால், உடனே அமுலுக்கு வந்து விடும்.
source: http://www.lalpettimes.com/2015/05/blog-post_77.html