Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

30 கிறித்தவர்கள் தலையை துண்டித்து படுகொலை: ISIS ஐ அழித்து ஒழிக்காமல் விட்டு வைத்திருப்பது ஏன்?

Posted on April 23, 2015 by admin

03 கிறித்தவர்கள் தலையை துண்டித்து படுகொலை:  ISIS ஐ அழித்து ஒழிக்காமல் விட்டு வைத்திருப்பது ஏன்?

ISIS தீவிரவாதிகள் கடற்கரை பொதுவெளியில் 30 கிறித்தவர்களை தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளதாக அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளது.

30 கிறித்தவர்களும் முஸ்லிமாக மாற மறுத்த காரணத்தினால் ISIS தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளதாக ஊடகங்கள் கூறுகிறது.

தினகரன் உள்ளிட்ட தமிழ் ஊடகங்களில் வெளியாகியுள்ள இந்த செய்தியில் அங்கே கருத்து பதிவிடும் உங்களுடைய உள்ளக்குமுறல்களை வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை.

உங்களுடைய உள்ளக்குமுறல்களுக்கும், இரத்தக்கண்ணீருக்கும் எதை பதிலாக கொடுக்க போகிறோம் என்று தெரியவில்லை.

இருப்பினும் எங்களுடைய உள்ளக்குமுறலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்….

உலகிலுள்ள 57 முஸ்லிம் நாடுகளில் சவூதி அரேபியாவை தவிர்த்து மீதமுள்ள 56 முஸ்லிம் நாடுகளில் கிறித்தவர்கள் சிறுபான்மை மக்களாக வாழ்கிறார்கள்.

அந்த 56 நாடுகளில் எந்த நாட்டிலாவது ஒரு கிறித்தவரையாவது முஸ்லிமாக மாற வேண்டும், இல்லையென்றால் படுகொலை செய்வோம் என்று ஏதவாது ஒரு நாட்டில் இதுப்போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதா ?

மீதமுள்ள ஒரு நாடான சவூதி அரேபியாவில் 100 சதவீதம் முஸ்லிம்கள் மட்டுமே வாழ்கிறார்கள், 100 சதவீதம் முஸ்லிம்களை மட்டுமே கொண்ட சவூதி அரேபியாவில் பல நாடுகளை சேர்ந்த கிறித்தவர்கள் பணி புரிகிறார்கள், அவர்களில் யாரையாவது முஸ்லிமாக மாறாவிட்டால் படுகொலை செய்ததாக வரலாறு இருக்கிறதா ?

உலகிலுள்ள 57 முஸ்லிம் நாடுகளில் எங்கும் காணாத ஒரு சம்பவம், ISIS கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும் இதுப்போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக செய்திகள் வருகிறதே அது எப்படி ?

உலகிலுள்ள 200 கோடி முஸ்லிம்களும் இப்படி இஸ்லாமிய மார்க்கம் சொல்லவே இல்லை என்று சொல்லும்போது ISIS மட்டும் இப்படி செய்வது தான் இஸ்லாம் என்று சொல்வதிலிருந்து….

ISIS இயக்கம் இப்படி செய்வதாக யூத மீடியாக்கள் போலியான வீடியோவை தயாரித்திருக்க வேண்டும் அல்லது ISIS என்ற அமைப்பே யூதர்களின் அமைப்பாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் உலகிலேயே ஈவு இரக்கம் இல்லாத மனித மிருகங்கள் யூதர்கள் மட்டுமே…

இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரை யார் ஒரு மனிதரை கொல்கிறாரோ அவர் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கொன்றதற்கு சமம் என்று திருக்குர்ஆன் சொல்கிறது.

உங்கள் மார்க்கம் உங்களுக்கு, அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு, இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமும் இல்லை என்று திருக்குர்ஆன் சொல்கிறது.

அப்படியிருக்கையில் மதம் மாற்றுவதற்காக முஸ்லிம்கள் பிறமதத்தினரை கொல்வதாக கூறுவது 100 சதவீதம் பொய்யானது.

30 கிறித்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று தான் செய்தி வருகிறதே தவிர அவர்கள் 30 பேரும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் ? அவர்களின் குடும்பத்தினர் யார் என்பன போன்ற செய்திகள் வருவதில்லை, அவற்றை மறைக்க வேண்டிய அவசியம் என்ன ?

இது முதல் முறையல்ல, பலமுறை இதுப்போன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

இதை வீடியோவாக எடுத்தது யார் ? அதை முதன் முதலாக வெளியிட்டது யார் ? என்பன போன்ற அனைத்து கேள்விகளும் மறைக்கப்படுகிறது.

எந்த ஆதாரமும் இல்லாமல் இஸ்லாத்தின் நற்பெயரை கெடுப்பதற்காக யூத மீடியாக்களால் இதுப்போன்ற போலியான வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு விஷமப்பிரச்சாரம் செய்யப்படுகிறது.

சரி இவ்வளவு கிறித்தவர்களையும் ISIS தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளார்கள் என்றால் அமெரிக்கா உள்ளிட்ட கிறித்தவ நாடுகள் ISIS தீவிரவாதிகளை அழிக்காமல் விட்டு வைத்திருப்பது ஏன் ? அல்லது அழிப்பதாக கூறிக்கொண்டு ஒன்றரை வருடமாக காலம் கடத்துவது ஏன் ?

சதாம் ஹுசைன் தலைமையிலான ஈராக் அரசையே அழிக்க தெரிந்த அமெரிக்கா மற்றும் கிறித்தவ நாடுகளுக்கு ISIS என்ற ஒரு தீவிரவாத இயக்கத்தை அழிப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது ?

ISIS என்ற அமைப்பே முஸ்லிம்களின் அமைப்பு அல்ல, யூதர்களின் கை கூலிகள் என்று அனைத்து முஸ்லிம் நாடுகளும் அறிவித்து, ISIS அமைப்பை தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

ஐநா சபையும் ISIS அமைப்பை தீவிரவாத நாடாக அறிவித்துள்ளது, அப்படியிருக்கையில் ISIS ஐ அழித்து ஒழிக்காமல் விட்டு வைத்திருப்பது ஏன்?

ISIS யூதர்களின் அமைப்பாக இருப்பதால் தான் ISIS ஐ அழிக்க முடியாமல் மேற்கத்திய உலகம் திணறி வருகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒருவர் ஒரு தாய் பறவையை அன்பளிப்பாக கொடுக்கிறார், குஞ்சியையும், தாயையும் பிரித்து எனக்கு கொடுக்கும் அன்பளிப்பு எந்த தேவையும் இல்லை, தாயையும் குஞ்சியையும் சேர்த்து வையுங்கள் என்று ஒரு பறவையின் உள்ளக்குமுறளுக்கு முக்கியத்துவம் கொடுத்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
காட்டி தந்த மார்க்கத்தில்….

விலைமதிப்பற்ற ஒரு உயிரை கொல்வதற்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதியில்லை.

நம்முடைய 30 கிறித்தவ சகோதரர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை, கிறித்தவர்களை கொல்வது போல் போலியாக தயாரிக்கப்பட்ட வீடியோ தான் அது…

மேலும் அவர்களின் முகத்தை நன்றாக உற்று கவனியுங்கள், அது கிறித்தவ முகம் போல் தெரியவில்லை, மாறாக முஸ்லிமின் முகம் போல் காட்சியளிக்கிறது.

ஒருவேளை மீடியாக்கள் சொல்வதுபோல் ISIS தீவிரவாதிகள் கிறித்தவ சகோதரர்களை படுகொலை செய்திருந்தால் ISIS தீவிரவாதிகளுக்கு சாவு உண்மையான முஸ்லிம்களின் கைகளாலே என்பது மட்டும் நிச்சயம்.

அதுப்போல் உலகம் முழுவதும் வாழும் தொப்புள் கொடி உறவுகளான இந்து, கிறித்தவ சகோதரர்கள் மீது தீவிரவாதிகள் சிறு கீறளை போட நினைத்தாலும் அவர்களை முஸ்லிம்கள் நிர்மூலமாக்குவார்கள்.

இஸ்லாத்திலேயே இல்லாத ஒரு கருத்தை இஸ்லாத்தில் இருப்பதாக பரப்பும் யூத மீடியாக்களுக்கு தக்க பதிலடி கொடுக்கக் வேண்டுமென்றால் முஸ்லிம்கள் மீடியாக்களில் கால் பதிக்க வேண்டும்.

அப்போது தான் உண்மை வெளிச்சத்திற்கு வரும்…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

51 − = 41

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb