1. கணவனைப் பிடிக்காத பெண்கள் அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டுமா?
2. ஜமாஅத் தொழுகையில் கடைசி வரிசை பூர்த்தியாகிய பின் வருபவர் தனித்துத் தொழ வேண்டுமா? அல்லது வரிசையில் உள்ளவரை இழுத்து அருகில் நிறுத்திக் கொள்ள வேண்டுமா?
3. உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா?
4. இடது கையில் கடிகாரம் அணியலாமா?
Q. ஜமாஅத் தொழுகையில் கடைசி வரிசை பூர்த்தியாகிய பின் வருபவர் தனித்துத் தொழ வேண்டுமா? அல்லது வரிசையில் உள்ளவரை இழுத்து அருகில் நிறுத்திக் கொள்ள வேண்டுமா?
A. வரிசையில் சேராமல் தனியாகத் தொழுவது செல்லாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
ஒரு மனிதர் வரிசைக்குப் பின்னால் தொழுவதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்ட போது தொழுகையை மீண்டும் தொழுமாறு அவருக்குக் கட்டளையிட்டனர். (நூல் திர்மிதி 213)
இன்னும் பல நூல்களிலும் இது பதிவாகியுள்ளது.
இந்த ஹதீஸின் நம்பகத் தன்மையில் அறிஞர்கள் சந்தேகம் கொள்ளவில்லை. ஆயினும் இதை எப்படிப் புரிந்து கொள்வது என்பதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.
வரிசையில் சேராமல் தனியாகத் தொழுதால் தொழுகை செல்லாது என்பது தெளிவாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
முன் வரிசையில் இடம் இருக்கும் போது அதில் சேராமல் தனித்து நிற்பவரை இது குறிக்குமா?
அல்லது இடமிருந்தாலும் இடமில்லாவிட்டாலும் தனித்து நிற்பதைக் குறிக்குமா?
இதை நாம் முதலில் முடிவு செய்ய வேண்டும். இதைப் புரிந்து கொள்ள பின்வரும் ஹதீஸ் நமக்கு உதவுகிறது.
380 அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
என் (தாய்வழிப்) பாட்டி முலைக்கா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (வந்து) அதில்
சிறிதைச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர், எழுங்கள்! உங்களுக்காக நான் (உபரியானத் தொழுகையை) தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். நான் (தொழுவதற்காக) எங்களுக்குரிய பாயொன்றை (எடுப்பதற்காக அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்துப் போய்விட்டி ருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு (தமது இல்லம் நோக்கித்) திரும்பிச் சென்றார்கள். (புகாரி 380)
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் பெண் என்பதால் அவர்கள் ஆண்களுடன் சேரவில்லை. தனியாகத் தான் நின்றார்கள். அதாவது வரிசையில் சேர்வதற்கு வாய்ப்பு இல்லாத போது அவர்கள் தனியாக நின்றார்கள். தனியாக நிற்பவரின் தொழுகை செல்லாது என்றால் இதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதித்து இருக்க மாட்டார்கள்.
எனவே இதற்கு முரணில்லாத வகையில் புரிந்து கொள்வது அவசியம். வரிசையில் காலி இடம் உள்ள போது வரிசையில் சேர்வதை வெறுத்தோ அல்லது அந்த விஷயத்தில் அலட்சியம் காட்டியோ வரிசையில் சேராமல் ஒருவர் தனியாகத் தொழுதால் அவர் ஒழுங்கைக் கெடுத்தவராகிறார். இது போல் செய்தவரின் தொழுகை செல்லாது என்பதைத் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்க வேண்டும். இப்படி புரிந்து கொண்டால் தான் மேற்கணட் ஹதீஸுடன் ஒத்துப் போகும்.
நின்று தொழ வேண்டும் என்று கட்டளை இருக்கிறது. நிற்க முடியாதவருக்கு இந்தக் கட்டளை பொருந்தாது என்று நாம் புரிந்து கொள்கிறோம். இஸ்லாத்தின் எல்லாக் கட்டளைகளுமே இப்படித் தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அதாவது எந்தக் கட்டளையானாலும் இயலும் போது அதைக் கடைப்பிடிக்க .வேண்டும்.
இப்படி புரிந்து கொள்ளாமல் வரிசை முடிந்து விட்டாலும் தனியாகத் தொழக் கூடாது என்று கூறினால் மேற்கண்ட ஹதீஸுக்கு அது முரண்படுவதுடன் மேலும் பல குழப்பங்களையும் ஏற்படுத்தும்.
கடைசியில் ஒருவர் வருகிறார். அவருக்கு வரிசையில் இடம் இல்லை. இவருடன் துணைக்குச் சேர யாருமே வரவில்லை என்றால் இவர் ஜமாஅத்தில் சேர முடியாது. ஜமாஅத் முடியும் வரை காத்திருந்து தனியாகத் தான் தொழ வேண்டிய நிலை ஏற்படும். இதனால் ஜமாஅத் தொழுகையின் நன்மையை அவர் இழக்கும் நிலை ஏற்படும்.
அல்லது முன் வரிசையில் உள்ளவரை இழுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
முதல் வரிசையின் நன்மையை நாடி முன் கூட்டியே வந்தவரை இழுத்து அவருக்கு முதல் வரிசையின் நன்மையை இல்லாமல் ஆக்குவது மாபெரும் அநீதியாகும். மேலும் வரிசையைச் சீர்குலைக்கும் வேலையுமாகும்.
எனவே இடம் இல்லாவிட்டால் தனியாக நிற்கலாம்.
கணவனைப் பிடிக்காத பெண்கள் அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டுமா?
கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்று கூறிவருகின்றீர்கள். ஆனால் தஃப்ஸீர் இப்னு கஸீரில், தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்று திர்மிதி, அஹ்மத், அபூதாவூதில் இடம் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குல்உ பெற்று கணவனைப் பிரிந்த பெண்கள் நயவஞ்சகர்கள் ஆவர் என்று ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களின் படி குல்உ பெறும் பெண்கள் தகுந்த காரணத்தோடு தான் குல்உ பெற வேண்டும் என்று தெரிகின்றதே?
أَنْبَأَنَا بِذَلِكَ بُنْدَارٌ أَنْبَأَنَا عَبْدُ الْوَهَّابِ أَنْبَأَنَا أَيُّوبُ عَنْ أَبِي قِلَابَةَ عَمَّنْ حَدَّثَهُ عَنْ ثَوْبَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا مِنْ غَيْرِ بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَيُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي أَسْمَاءَ عَنْ ثَوْبَانَ وَرَوَاهُ بَعْضُهُمْ عَنْ أَيُّوبَ بِهَذَا الْإِسْنَادِ وَلَمْ يَرْفَعْهُ- ترمذي
حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ أَبِي قِلَابَةَ عَمَّنْ حَدَّثَهُ عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلَاقَ مِنْ غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ- احمد
தாங்கள் குறிப்பிடும் ஹதீஸ் திர்மிதீ 1108 மற்றும் அஹ்மத் 21345 ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஸவ்பானிடமிருந்து யார் அறிவிக்கிறாரோ அவர் அறிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது. அவரது பெயரோ நம்பகத்தன்மையோ குறிப்பிடப்படவில்லை. யாரென்று தெரியாதவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்பது ஹதீஸ் கலை அறிஞர்களின் ஒருமித்த முடிவு.
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا مُزَاحِمُ بْنُ ذَوَّادِ بْنِ عُلْبَةَ عَنْ أَبِيهِ عَنْ لَيْثٍ عَنْ أَبِي الْخَطَّابِ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَنْ ثَوْبَانَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُخْتَلِعَاتُ هُنَّ الْمُنَافِقَاتُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَلَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيِّ وَرُوِيَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ أَيُّمَا امْرَأَةٍ اخْتَلَعَتْ مِنْ زَوْجِهَا مِنْ غَيْرِ بَأْسٍ لَمْ تَرِحْ رَائِحَةَ الْجَنَّةِ
இதே கருத்தில் இடம் பெற்றுள்ள திர்மிதீ 1107 ல் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ்லின் அறிவிப்பாளர்களில் மூன்று அறிவிப்பாளர்கள் பலவீனர்களாக உள்ளனர். திர்மிதீ இமாம் அவர்களும் இது பலவீனமான ஹதீஸ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَنْبَأَنَا الْمَخْزُومِيُّ وَهُوَ الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ عَنْ أَيُّوبَ عَنْ الْحَسَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ الْمُنْتَزِعَاتُ وَالْمُخْتَلِعَاتُ هُنَّ الْمُنَافِقَاتُ قَالَ الْحَسَنُ لَمْ أَسْمَعْهُ مِنْ غَيْرِ أَبِي هُرَيْرَةَ قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ الْحَسَنُ لَمْ يَسْمَعْ مِنْ أَبِي هُرَيْرَةَ شَيْئًا
இதே கருத்தில் இடம் பெற்றுள்ள நஸயீ 3407, அஹ்மத் 8990 ஆகிய ஹதீஸ்களும் பலவீனமானவையாகும். இந்த ஹதீஸை அபூஹுரைராவிடமிருந்து அறிவிக்கும் ஹஸன் என்பார் அபூஹுரைராவிடம் இருந்து எதையும் செவியுற்றதில்லை.
இந்தக் கருத்தில் பல்வேறு பலவீனமான ஹதீஸ்கள் இடம் பெற்றிருந்தாலும் அஹ்மதில் 21404வது ஹதீஸ் மட்டும் சரியான அறிவிப்பாளர் தொடருடன் இடம் பெற்றுள்ளது.
தகுந்த காரணமின்றி விவாகரத்துக் கோரிய பெண்ணுக்கு சொர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
குல்உ சம்பந்தமாக காரணமே இல்லாமல் பெண் விவாகரத்து கோரலாம் என்று கூறவில்லை. கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்று தான் கூறி வருகிறோம். காரணம் சொல்ல வேண்டியதில்லை என்பதற்கும், காரணம் இல்லாமல் பெண் விவாகரத்து கோரலாம் என்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.
தகுந்த காரணமின்றி ஒரு பெண் விவாகரத்து கோரினால் அல்லாஹ்வின் பார்வையில் அவள் பாவியாகி விடுகின்றாள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது.
ஆனால் கணவனைப் பிடிக்காததற்கான காரணத்தை ஜமாஅத் தலைவரிடம் சொல்லித் தான் விவாகரத்து கோர வேண்டும் என்று கூறுவதற்கு இந்த ஹதீஸில் ஆதாரம் இல்லை.
காரணத்தைச் சொல்லத் தேவை இல்லை என்று நாம் குறிப்பிட்டதற்கு இந்த ஹதீஸ் முரணாக இல்லை.
ஒரு பெண் தன் கணவரை விட்டுப் பிரிவதற்காக விவாகரத்து கோருகிறாள் என்றால் அதற்குக் காரணம் இருக்கவும் செய்யலாம், இல்லாமலும் இருக்கலாம். தகுந்த காரணத்துடன் விவாகரத்து கோரியிருந்தால் அவள் மீது குற்றமில்லை. காரணம் இல்லாமல் விவாகரத்து கோரியிருந்தால் அவள் அல்லாஹ்விடத்தில் குற்றவாளியாகி விடுகின்றாள்.
அந்தக் காரணத்தை அவள் சொல்லித் தான் விவாகரத்து கோர வேண்டும் என்ற நிபந்தனை இந்த ஹதீஸிலோ அல்லது வேறு ஹதீஸ்களிலோ காணப்படவில்லை.
‘தகுந்த காரணமின்றி விவாகரத்து கோரினால் அந்தப் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கக் கூடாது’ என்று சொல்லாமல் ‘சொர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது’ என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதிலிருந்தே, அவள் அந்தக் காரணத்தை வெளியில் சொல்லத் தேவையில்லை என்பதை விளங்கலாம்.
நன்றி: ஏகத்துவம்
உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா?
A. தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவித் தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது. உளூச் செய்ய வேண்டும் என்ற சட்டம் தொழுகைக்கு மட்டும் உரியது.
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.” (அல்குர்ஆன் 5 : 6)
உளூ நீங்கியவர் உளூச் செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 135,, முஸ்லிம் 330, திர்மிதீ 71, அபூதாவூத் 55, அஹ்மத் 7732)
ஆயினும் கட்டாயம் என்ற அடிப்படையில் இல்லாமல் பல காரியங்களுக்கு உளூ விரும்பத்தக்கதாக மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.
படுக்கைக்குச் செல்லும் போது உளூவுடன் இருப்பது விரும்பத்தக்கது. (பார்க்க: புகாரி 247, 6311)
குளிப்பு கடமையாகி அதாவது இல்லறத்தில் ஈடுபட்ட பின் உறங்கினால் உளூ செய்து விட்டு உறங்குவது சுன்னதாகும். (பார்க்க: புகாரி 286, 267, 288, 289, 290)
கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கு முன் உளூ செய்வது நபிவழியாகும். (பார்க்க: புகாரி 248, 249, 260, 273, 281)
மாதவிடாய் நின்று குளிக்கும் போது உளூச் செய்வது சுன்னத்தாகும். (பார்க்க: புகாரி 315)
உளூ இருந்தாலும் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்வது சுன்னத்தாகும். (பார்க்க: புகாரி 214)
ஒரு தடவை உடலுறவு கொண்ட பின் மீண்டும் உடலுறவு கொள்ள விரும்பினால் அதற்காக உளூச் செய்வது சிறந்தது. (பார்க்க: முஸ்லிம் 518)
குளிப்பு கடமையான நிலையில் உண்ணவோ பருகவோ விரும்பினால் உளுச் செய்வது நல்லது. (பார்க்க முஸ்லிம் 512, 513)
இடது கையில் கடிகாரம் அணியலாமா?
A. இடது கையில் கைக்கடிகாரம் கட்டலாமா? உங்கள் பயானை ஒரு தரீக்காவாதியிடம் கொடுத்த போது தாங்கள் கடிகாரத்தை இடது கையில் கட்டியிருப்பதாகவும் ,வலதை முற்படுத்துவது நபிவழியென்றிருந்தும் பீஜே போன்றவர்கள் அதை மீறுவது ஏன்? என்றும் கேட்கின்றார். எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.கட்டாயம் பதிலை அனுப்பவும்?
அனைத்து நல்ல காரியங்களையும் வலது கரத்தால் ஆரம்பிக்க வேண்டும் என்பது நபி வழி தான். ஆனால் இதைச் சரியான முறையில் அவர் புரிந்து கொள்ளாததால் இப்படிக் கேட்டுள்ளார்.
எந்தக் காரியங்கள் வலது கையாலும் இடது கையாலும் செய்வது சமமான தரத்தில் உள்ளதோ அது போன்ற காரியங்களில் வலதைப் புறக்கணித்து விட்டு இடது கைக்கு முக்கியத்துவம் அளித்தால் தான் வலது பக்கக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று ஆகும்.
எந்தக் காரியம் வலது கையால் செய்வதை விட இடது கையால் செய்வது தான் அதிக வசதியானது என்று உள்ளதோ அந்தக் காரியத்தை இடது கையால் செய்வது நபிவழியைப் புறக்கணித்ததாக ஆகாது. வலது பகுதியைப் புறக்கணித்ததாகவும் ஆகாது.
பொதுவாக வலது கை தான் அனைத்துக் காரியங்களையும் செய்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளது. அந்தக் கையில் கடிகாரம் கட்டினால் கடிகாரத்துக்குச் சேதம் ஏற்படும். அல்லது சேதம் ஏற்படுமோ என்ற எண்ணம் காரணமாக இயல்பாக வேலைகளைச் செய்ய முடியாது
இடது கை அதிகம் பயன்படாத காரணத்தால் அதில் கடிகாரம் கட்டுவது தான் இயல்பாக உள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அணிந்த வெள்ளி மோதிரத்தை இடது கையில் அணிந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.
و حدثني أبو بكر بن نافع العبدي حدثنا بهز بن أسد العمي حدثنا حماد بن سلمة عن ثابت أنهم سألوا أنسا عن خاتم رسول الله صلى الله عليه وسلم فقال أخر رسول الله صلى الله عليه وسلم العشاء ذات ليلة إلى شطر الليل أو كاد يذهب شطر الليل ثم جاء فقال إن الناس قد صلوا وناموا وإنكم لم تزالوا في صلاة ما انتظرتم الصلاة قال أنس كأني أنظر إلى وبيص خاتمه من فضة ورفع إصبعه اليسرى بالخنصر
1124 ஸாபித் பின் அஸ்லம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மக்கள், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மோதிரம் தொடர்பாக வினா எழுப்பினார்கள். அதற்கு அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் “பாதி இரவுவரை’ அல்லது “பாதி இரவு கழியும்வரை’ தாமதப்படுத்தினார்கள். பிறகு அவர்கள் வந்து “மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருக் கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள் (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)” என்று சொன்னார்கள். (அப்போது அவர்களது விரலில் மோதிரத்தைப் பார்த்தேன்.) இப்போதும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வெள்ளி மோதிரம் மின்னுவதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இவ்வாறு கூறிய அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது இடக் கை சுண்டு விரலை உயர்த்திக் காட்டினார்கள். (நூல் முஸ்லிம் 1124)
4254 ஸாபித் அல்புனானீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த விரலில் மோதிரம் அணிந்திருந்தார்கள்” என்று கூறி, தமது இடக் கையின் சுண்டுவிரலை நோக்கி சைகை செய்தார்கள்.
و حدثني أبو بكر بن خلاد الباهلي حدثنا عبد الرحمن بن مهدي حدثنا حماد بن سلمة عن ثابت عن أنس قال كان خاتم النبي صلى الله عليه وسلم في هذه وأشار إلى الخنصر من يده اليسرى
(நூல் முஸ்லிம் 4254)
மேலும் இன்று செல்போனில் அடிக்கடி பேசுகிறோம். வலது கைக்கு பல வேலைகள் உள்ளதால் வலது கையில் செல்போனை வைத்து பேசிக் கொண்டிருந்தால் வலது காயால் பல வேலைகளைச் செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்தக் காரணத்துக்காக இடது கையில் செல்போனை வைத்துக் கொண்டு பேசினால் வலது கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று ஆகாது. மாறாக வலது கையால் மற்ற வேலைகளைச் செய்வதற்கு முக்க்கியத்துவம் கொடுத்ததாகவே ஆகும்.
பயணத்தில் வலது கையால் பொருட்களைத் தூக்கிச் செல்வதை விட இடது கையால் தூக்கிச் செல்வது அதிக பயனுள்ளது என்பதற்காக இடது கையில் தூக்கிச் சென்றால் வலதைப் புறக்கணிப்பதாக ஆகாது.
source: http://aleemqna.blogspot.in/