உயிரினும் மேலான ஒழுக்கம்
[ கறைபடிந்த ஆசிரியர்கள் உருவாவதற்கு, ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதும் அக்கறை அற்றுப்போனதுதான் காரணம் என்று சொல்லும் அதே வேளையில், வக்கிரமத்தையும் செக்ஸையும் கட்டவிழ்த்து காமவெறியை மக்களிடம் ஊட்டிவளர்க்கும் டி.வி., சினிமாக்களே முக்கிய காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.]
மகன் அல்லது மகள் மதிப்பெண்களை அள்ளிக் குவிக்க வேண்டும். பள்ளி மற்றும் ஆசிரியர், இந்த மாயாஜாலத்தை நிகழ்த்த வேண்டும் என்பதே பெற்றோர் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு.கடந்த காலங்களில், மதிப்பெண்களுக்காக மட்டுமே பாடங்களைக் கற்றுத்தருபவர்களாக ஆசிரியர்கள் இருந்ததில்லை. பாடத்திட்டங்களைக் கூட முழுமையாக முடிக்க சிரமப்பட்டிருக்கின்றனர்.
பாடங்கள் இடையே இவர்கள் தரும் போதனைகள், சுவாரசியமானதாக இருக்கும். அதற்குள் நீதிநெறி ஒளிந்திருக்கும். அது பசுமரத்தாணி போல் மாணவர் மனதில் பதிந்துவிடும்.பாடங்களை விரைவாக முடித்து, மாணவர்களை மதிப்பெண் குவிக்க வைக்கும் இயந்திரங்களாக மாறிப்போனதால், ஆசிரியர்கள் மனரீதியான நெருக்கடியைச் சந்திக்கின்றனர்.
மாணவர்களுக்கு ஒழுக்கம், வாழ்க்கை நெறிகள் குறித்து விளக்கிக்கூற, ஆசிரியர்களுக்கு நேரமும் இல்லை. அதற்கான தகுதியைக் கூட ஆசிரியர்கள் பலர் பெற்றிருக்கவில்லை என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆசிரியர்கள் கற்றுத்தருபவர்களாக மட்டும் இல்லாமல், அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்பவர்களாக இருக்க வேண்டும். ஆனால், மாணவர்களின் பெற்றோரே கூட, தற்போது ஆசிரியர்களிடம் இருந்து இதை எதிர்பார்ப்பதில்லை.
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி கண்டியூர் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 3 பேர், சக ஆசிரியைக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளனர். தட்டிக்கேட்ட ஆசிரியையின் கணவர் மிரட்டப்பட்டுள்ளார். புகாருக்குப் பின், ஆசிரியர்கள் மூவரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த குறிச்சிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர், மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். மாணவிகள் தெரிவித்த புகார்கள் மதிப்பிழந்ததால், ஆசிரியரின் துணிச்சல் தொடர்ந்தது. கொதித்தெழுந்த பெற்றோர், வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதற்குப் பின் கல்வித்துறை விழித்துக்கொண்டது. அந்த ஆசிரியரும், புகாரை அதிகாரிகளிடம் தெரிவிக்காத தலைமையாசிரியையும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்தச் சம்பவங்கள் நடந்தவை அரசுப்பள்ளிகள். ஏழை மாணவ, மாணவிகள் கல்வி கற்க அரசுப்பள்ளிகள் தான் ஒரே துணை. பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளும் தற்போது சாதித்து வருகின்றன. இதற்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு பிரதானக் காரணம். ஆனால், எந்தச் சமூகத்திலும் கருப்பு ஆடுகள் நுழைந்துவிட்டால், அந்தத் துறையே களங்கமாகிவிடுகிறது.
ஒழுக்க நெறி உள்ள ஆசிரியரைத் தகுதித்தேர்வு வைத்து நியமிக்க முடியாதுதான். மாணவர்களின் ரோல் மாடலாகத் திகழ வேண்டிய ஆசிரியர்கள் குறித்த மதிப்பீடு, மதிப்பெண் எடுக்க வைக்கும் திறமையை வைத்து அளவிடப்படுவதே தவறு. பாலியல் ரீதியான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்போது, ஆசிரியர்களைப் பணிநீக்கம் செய்ய முடியும். இருப்பினும், கறைபடிந்த ஆசிரியர்கள் உருவாவதற்கு, ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதும் அக்கறை அற்றுப்போனதுதான் காரணம்.
ஆசிரியர்களின் ஒழுக்கம் எந்த அளவுக்கு கீழிறங்கிவிட்டது என்பதற்கு இதோ இன்னொரு சாம்ப்பிள்…
வகுப்பறையிலேயே மாணவனுடன் காதல் லீலையில் ஈடுபட்ட ஆசிரியை – 16 வயது மாணவனுடன் 26 வயது டீச்சர் எஸ்கேப்!
கடையநல்லூரில் 10ம் வகுப்பு மாணவனுடன் மாயமான ஆசிரியை, பள்ளிக்கூட வகுப்பறையிலேயே மாணவனை தனது காம லீலைக்கு பயன்படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன்
சிவசுப்பிரமணியன் (15). அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 31ந் தேதி வீட்டை விட்டு சென்ற சிவசுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் அவரது
பெற்றோர் புகார் செய்தனர். சப்இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியன் குறித்து விசாரணை நடத்தி தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது
சிவசுப்பிரமணியன் அவர் படித்து வந்த பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை அருகே காலாங்கரையை சேர்ந்த கோதை (23) என்பவருடன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்தது.
10ம்வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு ஆசிரியை கோதை பாடம் கற்று கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவரும் நெருங்கி பழகினர். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. சில சமயங்களில் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் பள்ளி மாணவனை தனது இச்சைக்கு ஆசிரியை பயன்படுத்தி உள்ளார்.
ஆசிரியையின் கவனிப்பில் அசந்து போன மாணவன் தன் வயதையும் பொருட்படுத்தாது ஆசிரியையுடன் நெருக்கமாக பல சமயங்களில் இருந்துள்ளான். இந்த விவகாரம் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்தால் விளைவுகள் மோசமாகிவிடும், எனவே நாம் இருவரும் எங்காவது சென்று விடலாம் என்று ஆசிரியை மாணவனிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கு சிவசுப்பிரமணியனும் சம்மதம் தெரிவித்தான். இதனைத்தொடர்ந்து நாம்
வெளியூர் சென்றால் செலவுக்கு பணத்துக்கு என்ன செய்வது என்று யோசிக்கையில், மாணவன் சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை எடுத்து வந்து விடுகிறேன் என்றுகூறினானாம்.
அதன்படி கடந்த 31ந்தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடித்தனர். போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் நகை மற்றும்
ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து சென்றுள்ளான். போலீசார் இருவரும் எங்கு சென்றார்கள் என்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.
10ம்வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற ஆசிரியைகளை பள்ளியில் பாடம் எடுக்க வைத்தால்
இன்னும எத்தனை மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை சீரழிப்பார்களோ என்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கேள்விகளை எழுப்புகிறார்கள்.
கறைபடிந்த ஆசிரியர்கள் உருவாவதற்கு, ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதும் அக்கறை அற்றுப்போனதுதான் காரணம் என்று சொல்லும் அதே வேளையில், வக்கிரமத்தையும் செக்ஸையும் கட்டவிழ்த்து காமவெறியை மக்களிடம் ஊட்டிவளர்க்கும் டி.வி., சினிமாக்களே முக்கிய காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
source: http://zubairsiraji.com/?p=1796