அல்குர்ஆன் அறிமுகப்படுத்தும் இளம் அடையாள புருஷர்கள்
[“மார்க்கத்தின் அரணாகத் திகழும் வலிமைமிகு இளமைப் பருவம்!” கட்டுரையின் தொடர்ச்சி]
01. இளைஞன் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்
சத்தியத்தைத் தேடிப் புறப்பட்ட இளைஞன் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் நான் யார், நான் எங்கிருந்து வந்தேன், நான் என்ன செய்ய வேண்டும், நான் எங்கு செல்ல இருக்கிறேன், எனது வாழ்வின் இலட்சியம் என்ன, என்னைப் படைத்தவன் யார்? போன்ற வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடை தேடுகிறார். ஈற்றில் அவர் சத்தியத்தைக் கண்டறிந்து அல்லாஹ்வுக்கு தலைவணங்குகிறார். பின்னர் பதினான்கு வயதுடைய இளைஞன் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் தனது தந்தையிடம் சத்தியத்தை எடுத்துச் சொல்கிறார்.
உணர்வுகள் பூத்துக் குலுங்கும் இளமைப் பருவத்தில் உலகில் சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் பல சவால்களுக்கு முகங்கொடுத்தார்கள். ஒருபக்கம் தீவிர சிலை வணங்கியாக இருந்த அவரது தந்தை ஆஸர் இளைஞன் இப்ராஹீமை அச்சுறுத்துகிறார். மறுபக்கம் அன்றைய எகிப்தின் கொடுங்கோல் மன்னன் நம்ரூத் சத்தியத்தை எடுத்துச் சொன்ன ஒரே காரணத்திற்காக நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நெருப்புக் குண்டத்திலே தூக்கி எறிகின்றான். அப்போது அவருக்கு வயது பதினாறு. கொள்கை ரீதியாக முரண்பட்ட முஷ்ரிக்குகளும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் இவ் வத்தனை அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து உலகில் சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக இளம் பராயத்திலேயே ஷாம், எகிப்து, பலஸ்தீன், மக்கா ஆகிய நான்கு பகுதிகளுக்கு ஹிஜ்ரத்துக்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
02. இளைஞன் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்
ஒழுக்கத்துக்கும் பண்பாட்டுக்கும் நம்பிக்கைக்கும் நாணயத்துக்கும் இறையச்சத்துக்கும் மிக உயர்ந்த முன்மாதிரிமிக்க மற்றோர் இளைஞனை அல்குர்ஆன் அறிமுகப்படுத்துகிறது. அந்த இளைஞனின் ஒழுக்கப் பண்பாட் டைச் சொல்வதற்கு அவரது பெயரிலேயே ஓர் அத்தியாயத்தையே அல்லாஹ் இறக்கி வைத்தான். அவர்தான் இளைஞன் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
இளைஞன் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள வீட்டில் தனது உடன்பிறந்த சகோதரர்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள். இரக்கமுள்ள தந்தையையும் குடும்பத்தையும் பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. தனது சகோதரர்களாலேயே கிணற்றிலே தூக்கி எறியப்படுகிறார். அப்போது அவருக்கு வயது பன்னிரண்டு. கிணற்றிலிருந்து மீட்டெடுக்கப்படும் சிறுவன் யூஸுப் பின்னர் அடிமையாக விற்கப்படுகிறார்.
பின்னர் எகிப்தின் அரச மாளிகையில் வளர்கிறார். அரச மாளிகையின் இளவரசியினால் இளைஞன் யூஸுபின் கற்புக்கு விலை பேசுகிறார். அவரது கற்புக்கும் ஒழுக்கத்துக்கும் சவால் விடுக்கப்படுகிறது. இறுதியில், இளவரசி அவரது கற்புக்கு களங்கம் கற்பித்து அவரை சிறைபிடிக்கிறாள். இவ் அத்தனை சவால்களுக்கும் இளைஞன் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் வெற்றிகரமாக முகங்கொடுக்கிறார்.
நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறுபராயம் முதல் தொடர்ந் தோச்சையாக கவலைகளைச் சுமர்ந்து பொறுமையாக வாழ்ந்தார்கள்.
எவ்வகையான துன்ப, துயரங்களை, சோதனைகளை எதிர்கொண்ட போதும் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பொறுமையாக இருந்தார்கள். பாவம் செய்வதற்கான, வாலிப இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் அவரைத் தேடிவந்த போதும் அதற்கான சூழல் அமைந்தபோதும் அவர் அத்தகைய மானக்கேடான செயலைச் செய்யாமல் பொறுமையைக் கடைபிடித்தார்கள் அல்லாஹ்வுக்கு வழிபடும் விடயத்தில் பொறுமையாக இருந்தார்கள்.
அல்லாஹ் எல்லா வகையான பொறுமையும் இளைஞன் யூஸுஃபிடம் இருக்கின்றதா என்று பரீட்சித்துப் பார்த்தான். ஒவ்வொரு பரீட்சையிலும் இளைஞன் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் வெற்றி பெறுகிறார். இதன் காரணமாகவே அல்லாஹுத்தஆலா அவரது பெயரிலேயே ஓர் அல்குர்ஆன் அத்தியாயத்தை இறக்கி மறுமைநாள் வரை அவரது வாழ்க்கையை நினைவுகூர்கிறான்.
ஸூரா யூஸுஃபின் சிறப்பு குறித்துச் சொல்லும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்,
“கவலையைச் சுமந்திருக்கின்ற நிலையில் யார் ஸூரா யூஸுஃபை ஓதுகின்றாரோ அல்லாஹ் அவருடைய கவலையை நீக்கி வைப்பான்” எனக் குறிப்பிடுகிறார்கள்.
03. இளைஞன் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம்
ஆல்குர்ஆன் பலம்வாய்ந்த, அபார திறமைமிக்க, அற்புதமான ஆற்றல்ப டைத்த மற்றுமோர் இளைஞனை அறிமுகப்படுத்துகிறது. அவர்தான் முழு உலகையும் ஆட்சிசெய்த பேரரசன் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
எந்தளவுக்கு அவரிடம் அறிவும் ஆற்றலும் இருந்தது என்றால், அவர் பறவை கள், விலங்குகள், ஊர்வன, மரம், செடி, கொடிகளின் மொழியை அறிந்திருந் தார். ஜின்கள் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. காற்றும் தீயும் அவரது கட்ட ளைக்குக் கீழ்ப்படிந்தன. அந்தளவுக்கு அறிவும் ஆற்றலும் அவரிடம் இருந் தன. எந்த ஒரு பிரச்சினைக்கும் சரியாகவும் துல்லியமாகவும் தீர்வு சொல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தவர் அவர். உலகில் வேறு எவருக்கும் கொடுக்காத ஆட்சி, அதிகாரத்தை அல்லாஹ் ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு வழங்கியிருந்தான். எல்லா வகையான அறிவையும் அல்லாஹ் அவருக்குக் கொடுத்திருந்தான்.
“தாவூதுக்கும் ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம். அதற்கு அவ்விருவரும், புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன்தான், முஃமின்களான தன் நல்லடியாரகளில் அநேகரை விட நம்மை மேன்மையாக்கினான் என்று கூறினார்கள்.” (ஸூரதுந் நம்ல்: 15)
அந்த அறிவை, ஆற்றலை வைத்து அவர் உலகத்தில் அராஜகம் புரியவில்லை அட்டகாசத்தில் ஈடுபடவில்லை எவருக்கும் அநியாயம் இழைக்கவில்லை. அவர்களது மனோநிலை எப்படி இருந்தது என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
“இது எனது இறைவன் நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா? இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக எனக்குப் புரிந்த பேரருளாகும்.” (27: 40)
ஈமானிய உள்ளத்திலிருந்து உதித்த வார்த்தைகள் இவை.
04. இளைஞன் துல்கர்னைன்
உலகில் பல அற்புதமான சாதனைகளை நிலைநாட்டிய துல்கர்னைன் எனும் ஸாலிஹான ஓர் இளைஞனை அறிமுகப்படுத்துகிறது அல்குர்ஆன். அவர் ஒரு பொறியியல் துறை விஞ்ஞானியாக இருந்தார். அதனை வைத்து அவர் ஓர் அநியாயக்கார சமூகத்திடமிருந்து மற்றோரு சமூகத்தைக் காப்பாற்றுவதற் காக ஒரு பெரும் மதிலைக் கட்டினார். அவரது அறிவையும் ஆற்றலையும் திறமையையும் பார்த்த மக்கள் அவரை மெச்சிப் பாராட்டினார்கள். அப்போது அவர் மொழிந்த ஈமானிய வார்த்தைகளை அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறது:
“இது என்னுடைய இறைவனின் அருள்தான். எனது இறைவனின் வாக்குறுதி (யுக முடிவு) வரும்போது இதனைத் தூள் தூளாக்கி விடுவான். மேலும் எனது இறைவனின் வாக்கறுதி உண்மையானதே!” (18: 98)
இன்றைய எமது இளைஞர்கள், யுவதிகள் இந்த ஈமானியப் பின்புலத்தில் வளர்க்கப்படுகின்றார்களா? புடம் போடப்படுகின்றார்களா?
05. இளைஞன் மூஸா அலைஹிஸ்ஸலாம்
அல்குர்ஆன் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) என்ற ஓர் இளைஞனைப் பற்றியும் சொல்கிறது. அவர் நம்பிக்கைக்குரியவர், நேரமைமிக்கவர். வீரத்துக்கம் வல்ல மைக்கும் பேர்போன ஒரு பலசாலி அவர்.
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வீரத்தைப் பற்றி ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மகள் சொல்வதை அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறது.
ஞ்சூஹளசூ றரிந்டீசூஹநண்ஹ்சூஹ கூசூஹ பசூசூரி ஹளுசூபனீரிழீநண் றரிஹுசூ ஒசூகூழீசூ ஹ்சூரி ஹளுசூபனீசூழீசூ ஹளஞ்சூசீரிகூஹுண் ஹளபசூஹ்ரிகூண்
“அத்தருணத்தில் அவ்விரு பெண்களில் ஒருத்தி தன் தந்தையை நோக்கி) என் தந்தையே நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக (இந்த) நம்பிக்கையுள்ள பலசாலியை நீங்கள் கூலிக்கு அமர்த்திக் கொள்வது மிக்க நல்லது என்று கூறினாள்.” (ஸூரதுல் கஸஸ்: 26)
இளைஞன் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடன் இலட்சிய வேட் கையோடு தஃவாப் பணி புரிந்த மற்றுமோர் இளைஞனான ஹாரூன் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் பற்றியும் அல்குர்ஆன் பேசுகிறது.
06. குகைவாசிகளான இளைஞர்கள்
ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அதற்காக வாழ்ந்து பல நூற்றாண்டு காலம் தூக்கத்திலிருந்து கண் விழித்து இறுதி வரைக்கும் ஏகத்துவத்திலே வாழ்ந்து மரணித்த இளைஞர் கூட்டத்தினரை அல்குர்ஆன் படிப்பினைக்காக வர்ணிக் கின்றது.
“அவர்களது வரலாற்றை உண்மையுடன் நாம் உமக்கு கூறுகிறோம். நிச்சயமாக அவர்கள் இளைஞர்களாவர். அவர்கள் தம் இறைவனை நம்பினார்கள். மேலும் அவர்களுக்கு நேர்வழியை நாம் அதிகப்படுத்தினோம். எங்கள் இறைவன், வானங்கள் மற்றும் பூமியின் இறைவனாவான். அவனையன்றி (யாரையும்) கடவுளாக நாம் பிரார்த்திக்கவே மாட்டோம். அவ்வாறு செய்தால் நாங்கள் வரம்பு மீறிய சொல்லைக் கூறியவர்களாவோம் என்று அவர்கள் (துணிவுடன்) நின்றபோது அவர்களின் உள்ளங்களை நாம் மேலும் பலப்படுத் தினோம். நமது சமுதாயத்தினராகிய இவர்கள் அவனை விடுத்து பல கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் தங்களுக்காக தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அதிக அநியா யக்காரன் யார்? (எனவும் அவர்கள் கூறினார்கள்.) இவர்களை விட்டும், அல்லாஹ்வைத் தவிர எவற்றை வணங்குகிறார்களோ அவற்றை விட்டும், நீங்கள் விலகும்போது அந்தக் குகையில் தஞ்சமடையுங்கள்! உங்கள் இறைவன் தனது அருளை வாரி வழங்குவான். மேலும் உங்கள் காரியத்தில் எளிமையை உங்களுக்கு அவன் ஏற்படுத்துவான் (என்று தமக்குள் கூறிக் கொண்டனர்).” (ஸூரதுல் கஃப்: 13 16)
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தி யில் ஹிழ்ர் எனும் பேரறிஞரைத் தேடிச் சென்று அவரிடம் பொறுமையுடன் அறிவைப் பெற்ற கதையை ஸூரதுல் கஃப் அழகாக விளக்குகின்றது.
பலமிக்க, சக்திவாய்ந்த எத்தனை இளைஞர்களை நம்பிக்கையும் நாணயமுமிக்க வாலிபர்களை இந்த சமுதாயம் உருவாக்கியிருக்கின்றது என்பது குறித்து நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
07. இளைஞர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஜாஹிலிய்யாக் கால மக்கள் வெறும் மடையர்கள். மது, மாதுக்களை அனுபவிப்பதுதான் அவர்களது வாழ்க்கைவின் நோக்கம். நீர் அருந்துவது போன்று மது அருந்தும் பழக்கமுடையவர்களாக இருந்தனர். அன்று விபச்சாரம் மலிந்திருந்தது. ஒட்டகத்தின் கயிறு திருட்டுப்போனதற்காக வருடக்கணக்கில் போர் புரியும் முரடர்களும் மடையர்களும் அந்தக் காலத்தில் வாழ்ந்தார்கள். பெண் சிசுக்களை உயிரோடு புதைக்கும் வன்நெஞ்சர்கள் வாழ்ந்த காலம் அது.
இப்படிப்பட்ட ஒரு காலத்தில்தான் நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்து, வளர்ந்தார்கள். ஆனால், அவர் அந்தச் சூழலோடு கரைந்து போகவில்லை மதுவும் மாதுவும் அவரை வழிகெடுக்கவில்லை மதுபானம் அருந்த அனுமதிக்கப்பட்ட அக்காலத்தில் ஒரு துளிகூட மது அருந்தாத இளைஞர் அவர். அவர் சிறுபராயத்திலிருந்தே நற்பண்புகளின் உறைவிடமாக விளங்கினார். இளமை துள்ளும் வாலிபப் பருவத்தில் அஸ்ஸாதிக் (உண்மையாளர், வாய்மை யாளர்), அல்அமீன் (நம்பிக்கைக்குரியவர், நேர்மை தவறாதவர்) என்று அக்கால மக்களாலேயே புகழப்பட்டார். அனைவருக்கம் ஒரு முன்னுதாரண புருஷராக வாழ்ந்து காட்டினார்.
இவ்வாறு எத்தனை எத்தனை முன்மாதிரி மிக்க அடையாள புருஷர்களை (யூலியி னிலி-யி) இஸ்லாம் அறிமுகப்படுத்தியிருக்கிறது புடம்போட்டு வளர்த்திருக்கிறது. இத்தகைய ஆளுமைகளே இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரண புருஷர்களளாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.
source: http://www.sheikhagar.org/articles/muslimumma/419-youth-in-islam