தீர்மானங்கள் போடும் போது ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறலாமா?
திருமணம் நடந்த அன்றே வலீமா விருந்து வைக்கலாமா? அல்லது ஓரிரு நாட்கள் கழித்துத் தான் வைக்க வேண்டுமா?
பத்து வயதுச் சிறுவன் இமாமாக நின்று தொழுகை நடத்தலாமா?
தீர்மானங்கள் போடும் போது அல்லாஹு அக்பர் என்று கூறலாமா?
தீர்மானங்கள் போடும் போதும், முக்கியக் கோரிக்கைகளை எழுப்பும் போதும் அல்லாஹு அக்பர் என்று கூறலாமா? அதற்கு ஆதாரங்கள் உள்ளனவா?
மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும் போதும், அந்த மகிழ்ச்சியான செய்தியைப் பிறரிடம் சொல்லும் போதும் அதை அங்கீகரிப்பது போல் அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கு நபிவழியில் ஆதாரம் உள்ளது. முக்கியமான காரியங்கள் நிகழும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கும் நேரடியான சான்றுகள் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் அல்லாஹு அக்பர் என்று கூறலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு இரவு நேரத்தில் அங்கு போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் ஒரு சமுதாயத்தாரின் மீது இரவு நேரத்தில் படையெடுத்துச் செல்வார்களாயின் காலை நேரம் வரும் வரை அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள்…. அவ்வாறே காலையானதும் யூதர்கள் தம் மண்வெட்டிகளையும் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக் கொண்டு வெயே வந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவர்கள் பார்த்த போது, முஹம்மதும் (அவரது) படையும் (வந்துள்ளனர்) என்று கூறினர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகி விட்டது! நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட (வர்களான அந்தச் சமுதாயத்த) வர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2945, முஸ்லிம் 2793)
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், தங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்து விட்டீர் களா? என்று (ஒரு சந்தர்ப்பத்தில்) கேட்டேன். அவர்கள், இல்லை என்று பதிலத்தார்கள். நான் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னேன். (அறிவிப்பவர்: உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6218)
அல்லாஹ் (மறுமை நால்) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி, ஆதமே! என்பான். அதற்கு அவர்கள், இதோ! வந்து விட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்கல் தான் என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்கருந்து) தனியாகப் பிரித்திடுங்கள். என்று கூறுவான். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், எத்தனை நரகவாசிகளை? என்று கேட்பார்கள்.
அதற்கு அவன், ஒவ்வோர் ஆயிரம் பேரிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றொன்பது பேரை (வெயே கொண்டு வாருங்கள்) என்று பதிலப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுவான்; கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தைப் பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.
(இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதும்) உடனே மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நரகத்திருந்து (வெயே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்கல் யார்? என்று கேட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நற்செய்தி பெற்று மகிழுங்கள்! உங்கல் ஒருவருக்கு யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (நரகத்திருந்து வெயேறாமல் அதனுள்) இருப்பார்கள். பிறகு, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகல் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) அல்லாஹு அக்பர்-(அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினோம்.
உடனே அவர்கள், சொர்க்கவாசிகல் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) அல்லாஹு அக்பர் என்று கூறினோம். அவர்கள், சொர்க்கவாசிகல் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள்.
நாங்கள் (இப்போதும்), அல்லாஹு அக்பர் என்று கூறினோம். அப்போது அவர்கள், நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்கல் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போலத் தான் இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போலத் தான் (மொத்த மக்கல் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 3348, முஸ்லிம் 379)
நீங்கள் சொர்க்கவாசிகல் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நபிகளார் கூறிய போது, நபித்தோழர்கள் நபிகளார் முன்னிலையில் இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு அல்லாஹு அக்பர் என்று கூறியுள்ளார்கள்.
இதன் அடிப்படையில் மார்க்கத்திற்கு உட்பட்டு இயற்றப்படும் தீர்மானங்களை அங்கீகரிக்கும் வண்ணம் அல்லாஹு அக்பர் என்று கூறலாம்.
source: தீன்குலப் பெண்மணி
திருமணம் நடந்த அன்றே வலீமா விருந்து வைக்கலாமா? அல்லது ஓரிரு நாட்கள் கழித்துத் தான் வைக்க வேண்டுமா?
திருமணம் முடித்த மணமகனை வலீமா விருந்து கொடுக்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். அவர்கள் திருமணம் முடித்த போதும் வலீமா விருந்தளித்துள்ளார்கள். எனவே ஒருவர் திருமணம் முடித்தால் அவர் விருந்தளிப்பது நபிவழியாகும்.
அதே சமயம், திருமணம் நடந்த அன்றே வைக்க வேண்டும் என்றோ, அல்லது ஓரிரு நாட்கள் கழித்து வைக்க வேண்டும் என்றோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைபருக்கும், மதீனாவுக்கும் இடையில் (உள்ள சத்துஸ்ஸஹ்பா என்னுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வலீமா லி மணவிருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட அவ்வாறே அது விரிக்கப்பட்டது. பிறகு பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (ஹைஸ் எனப்படும் எளிமையான உணவைத் தயாரித்து மக்களுக்கு விருந்தளித்தார்கள்) (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 42130
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பிறகு விருந்தளித்துள்ளதால், திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் விருந்தளிப்பது தான் நபிவழி என்று சிலர் வாதிடுகின்றனர்.
அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, அவர்களையும், ஸஅது பின் ரபீஉ ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது ரளியல்லாஹு அன்ஹு வசதி படைத்தவர்களாக இருந்தார். அவர், அப்துர்ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், ”எனது செல்வத்தைச் சரிபாதியாகப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்துச் செய்து) உமக்கு மணம் முடித்துத் தருகின்றேன்” என்று கூறினார்.
அதற்கு அப்துர்ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு, ”உமது குடும்பத்திலும், செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக! எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்” என்று கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும், நெய்யையும் இலாபமாகப் பெற்று அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார்.
சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் வந்தார். அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”என்ன விசேஷம்?” என்று கேட்டார்கள். அதற்கவர், ”அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்” என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்கள்?” என்று கேட்டார்கள். ”ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்” என்று பதில் கூறினார். அதற்கு, ”ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பீராக!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2048, 2049)
”ஒரு பெண்ணை மணம் முடித்துக் கொண்டேன்” என்று கூறும் நபித் தோழரிடம், ”நீ இல்லறத்தில் ஈடுபட்டு விட்டாயா?” என்று கேட்டு விட்டு விருந்தளிக்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லை. இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் மண விருந்து கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏதும் இல்லை என்பதை இதிலிருந்து அறிய முடியும். எனவே ஒருவர் மணம் முடித்துக் கொண்ட அன்றோ, அல்லது அடுத்தடுத்த நாட்களிலோ எப்போது வேண்டுமானாலும் விருந்தளிக்கலாம்.
ஆனால் அதே சமயம், திருமணம் நடப்பதற்கு முன்னரே சிலர் விருந்து வைக்கின்றனர். விருந்து முடிந்த பின்னர் திருமண ஒப்பந்தம் செய்கின்றனர். இவ்வாறு திருமணமே நடக்காத நிலையில் வைக்கப்படும் விருந்து மண விருந்தாக ஆகாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நன்றி: ஏகத்துவம்
பத்து வயதுச் சிறுவன் இமாமாக நின்று தொழுகை நடத்தலாமா?
இமாமாக நின்று தொழுவிப்பதற்கு நன்றாகக் குர்ஆன் ஓதத் தெரிந்திருந்தால் போதுமானது. வயது வரம்பு ஏதுமில்லை. பின்னால் நின்று தொழுபவர்களை விட வயது குறைந்தவர் குர்ஆனை நன்றாக ஓதுபவராக இருந்தால் அவர் தாராளமாக இமாமத் செய்யலாம். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் சிறு வயதையுடையவர்கள் இமாமத் செய்ததற்கு ஆதாரம் உள்ளது.
حدثنا سليمان بن حرب حدثنا حماد بن زيد عن أيوب عن أبي قلابة عن عمرو بن سلمة قال قال لي أبو قلابة ألا تلقاه فتسأله قال فلقيته فسألته فقال كنا بماء ممر الناس وكان يمر بنا الركبان فنسألهم ما للناس ما للناس ما هذا الرجل فيقولون يزعم أن الله أرسله أوحى إليه أو أوحى الله بكذا فكنت أحفظ ذلك الكلام وكأنما يقر في صدري وكانت العرب تلوم بإسلامهم الفتح فيقولون اتركوه وقومه فإنه إن ظهر عليهم فهو نبي صادق فلما كانت وقعة أهل الفتح بادر كل قوم بإسلامهم وبدر أبي قومي بإسلامهم فلما قدم قال جئتكم والله من عند النبي صلى الله عليه وسلم حقا فقال صلوا صلاة كذا في حين كذا وصلوا صلاة كذا في حين كذا فإذا حضرت الصلاة فليؤذن أحدكم وليؤمكم أكثركم قرآنا فنظروا فلم يكن أحد أكثر قرآنا مني لما كنت أتلقى من الركبان فقدموني بين أيديهم وأنا ابن ست أو سبع سنين وكانت علي بردة كنت إذا سجدت تقلصت عني فقالت امرأة من الحي ألا تغطوا عنا است قارئكم فاشتزوا فقطعوا لي قميصا فما فرحت بشيء فرحي بذلك القميص
எனது தந்தை (இஸ்லாத்தை ஏற்று விட்டு ஊருக்கு) வந்ததும் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து வந்துள்ளேன். இன்னின்ன நேரத்தில் இந்த இந்த தொழுகைகளைத் தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் தொழுகைக்கு அழைக்கட்டும். மேலும் உங்களில் குர்ஆனை அதிகம் ஓதத் தெரிந்தவர் தொழுகை நடத்தட்டும்’ என்று கூறினார்கள்.
அப்போது அவர்கள் (அத்தகுதியுடைய ஒருவரை தேடிப் பார்த்தார்கள்) நான் ஒட்டக வியாபாரக் கூட்டத்தாரிடமிருந்து ஓதத் தெரிந்து கொண்டிருந்ததால் என்னை விட அதிகமாகக் குர்ஆன் ஓதத் தெரிந்தவர் யாருமில்லை. எனவே தொழுகை நடத்த என்னை முன்னிறுத்தினர். அப்போது நான் ஆறு வயதுடையவனாக அல்லது ஏழு வயதுடையவனாக இருந்தேன்.
என் மீது ஒரு போர்வை இருந்தது. நான் ஸஜ்தாச் செய்யும் போது அது என்னை விட்டு விலகி (எனது பின்புறம் தெரிந்து) விடும். அப்போது கூட்டத்தில் உள்ள ஒரு பெண், ‘உங்கள் இமாமின் பின்புறத்தை மூட (ஒரு துணி கொடுக்க) வேண்டாமா?’ என்று கேட்டார்.
உடனே அவர்கள் எனக்கு ஒரு சட்டையை அளித்தனர். அந்தச் சட்டையைக் கொண்டு நான் அடைந்த சந்தோஷத்தைப் போன்று வேறு எதைக் கொண்டும் சந்தோஷம் அடைந்ததில்லை. (அறிவிப்பவர்: அம்ரு பின் ஸலமா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 4302)
நன்றி: ஏகத்துவம்