Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இந்தப் புற்றிலும் பாம்பிருக்குமா?

Posted on April 11, 2015 by admin

இந்தப் புற்றிலும் பாம்பிருக்குமா?

  Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)   

சமீப காலங்களில் வெளியிலும், வீட்டிலும் நடைபெறும் பாலியல் குற்றங்கள் பற்றி பரபரப்பாக பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன என்பதினை அனைவரும் அறிவோம். அந்தப் பாலியக் குற்றங்கள் பற்றி சில ஆராய்ச்சித் தகவல்களை உங்களுடன் ஒரு வருமுன் காக்கும் விழிப்புணர்விற்காக பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

அதுவும் மும்பையில் மூடிக் கிடந்த மகாலட்சுமி மில்லில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கை பெண் 23.8.2013 அன்று பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட பின்பும், புது டெல்லி உபேர் டாக்சியில் சென்ற பெண் பொறியாளர் 5. 12. 2014  அன்று பாலியல் பலாத்க்காரம் செய்யப் பட்ட நிகழ்விற்குப் பின்பு பாலியல் குற்றங்கள் சம்பந்தமான செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது, கடுமையான சட்டங்கள் வேண்டும் என்றும் குரல் எழுப்பப் பட்டது.

ஆனால் வெளியில் நடக்கும் குற்றங்களை விட வீட்டுக்குள் நடக்கும் பாலியத் தொல்லைகள் அதிகம் என்று ஆராய்சிக் குறிப்புகள் சொல்கின்றன:
 
புதுடெல்லியில் நடந்த பாலியல் குற்றத்திற்குத் தொடர்ந்து புதுடெல்லியில் உள்ள 44 காவல் நிலையங்களில் பதிவு செய்யப் பட்ட பாலியல் குற்றங்கள் சம்பந்தமான முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை என்ற ஒரு ‘அபிடாவிட்’ தாக்கல் செய்ய புதுடெல்லி காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த அபிடாவிட்டில் டெல்லி காவல்த் துறையினர், 2014 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் மாதம் வரை தாக்கல் ஆன குற்றங்கள் 2276 என்றும், அதில் 1375 புகார்கள் அதாவது 60 விழுக்காடுக் குற்றங்கள் வீடுகளிலேயே நடந்துள்ளதாம்.

1767 பாலியப் புகார்களில் அதாவது 78 விழுக்காடு குற்றங்கள் குடும்பத்தில் உள்ள ஏதாவது ஒரு உறுப்பினரோ, அல்லது குடும்பத்தினவருக்கு நன்கு தெரிந்தவராகவோ இருந்துள்ளனர். பெரும்பாலான வீட்டுக்குள் நடக்கும் குற்றங்கள் காவல் நிலையம் வரை வருவதில்லை.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் உண்மையே என்பதினைக் கூறும் அளவிற்கு, ‘பிட்டர்  சாக்லேட்'(கசக்கும் மிட்டாய்) என்ற புத்தகத்தினை எழுதிய பிங்கி என்ற எழுத்தாளர், ‘இந்தியா முழுவதிலும் நடுத்தர மற்றும் மேல் நிலைக்  குடும்பத்தில் வாழும் இளம் சிறார்கள் ஆண்களோ, பெண்களோ பாலியல் குற்றங்களால் பாதிக்கப் படுகிறார்கள். அதுபோன்றே குடும்பத்தினர் மிகவும் நம்பி இருக்கும் டிரைவர்களோ, தந்தையோ, மாமா என்று அழைக்கப் படுகிரவர்களோ, தாத்தாக்களோ, மதபோதகர்களோ, மருத்துவர்களோ, சமயல்க்காரர்களோ, பள்ளி ஆசிரியர்களோ, பள்ளிப் பணியாளர்களோ, நிர்வாகிகளோ சிறார்களிடம் பாலியல்க் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்று விரிவாக வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளார். அதனைப் பத்திரிக்கைகள், டி.வி. ஒளிபரப்புகள் மூலம் அறிந்துள்ளோம்.

காவல்துறையும், அரசும் வீட்டுக்கு வெளியே நடக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்க அல்லது கண்டு பிடிக்க அல்லது சட்டங்கள் இயற்ற நடவடிக்கைகள் எடுக்கலாம். ஆனால் வீட்டுக்குள் நடக்கும் பாலியல் குற்றங்களைத் யார் தடுப்பது என்றக் கேள்விக்கு விடை அல்குராணின் அல் நூர் 24 அத்தியாயத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது அகிலத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு படிப்பினை என்றால் மறுக்க முடியாது:

அத்தியாயம் 24(27-29) ‘இறை நம்பிக்கை கொண்டவர்களே, உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர் வீடுகளில் அந்த வீட்டாரின் அனுமதியின்றி நுழையாதீர்கள்’

அத்தியாயம் 24(30) ‘இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும், தங்கள் வெட்கத் தளங்களைப் பாதுகாத்துக்  கொள்ளும்படியும், பெண்கள் தங்கள் அழகை வெளிக் காட்டாதவாரும் பார்த்துக் கொள்ளவும்’

அத்தியாயம் 24(58-59) ‘உங்களுடைய அடிமைகளான ஆண்களும், பெண்களும் பருவ வயதை அடையாத உங்கள் சிறுவர்களும், மூன்று நேரங்களில் உங்களிடம் வருவதிற்கு அனுமதியுங்கள், உங்கள் சிறுவர்கள் விபரம் தெரியும் பருவத்தை அடைந்து  விட்டால், அவர்களுடைய பெரியோர்கள் எவ்வாறு அனுமதி கோருகிறார்களோ அவ்வாறு அவர்களும் அனுமதி பெற்று வரட்டும்’.

சிறுவர், சிறுமி ஏழு வயதினை அடைந்து விட்டால் தனித் தனியே படுக்கைக்கு அனுப்பும் வழிமுறையும் இருக்கின்றது என்றால் எவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் தொலை நோக்குக் கண்ணோடு எந்நாளும் பொருத்தமாக எடுத்துச் சொல்லி இருக்கின்றது என்று தெளிவாகும்.

ஆகவே தான் உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் பாலிய தொல்லைகள் இஸ்லாமியக் குடும்பத்திலும் நடக்காது பாது காப்போமாக!
 
AP,Mohamed Ali   

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 42 = 48

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb