Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மாட்டுக்கறியின் சத்துக்களும் அறிவியல் ஆய்வுகளும்

Posted on April 6, 2015 by admin

மாட்டுக்கறியின் சத்துக்களும் அறிவியல் ஆய்வுகளும்

[ இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதத்தினர் மாமிசம் உண்பவர்களாவார்கள். மாமிசம் உண்ணாதவர்கள் 31 சதவீதத்தினர். மீதம் 9 சதவீதத்தினர் கோழி முட்டை உண்பவர்களாவார்கள்.]

1. மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பில் லினோலிக், பால்மிடோலிக் ஆசிடுகள் உள்ளன. கேன்சர் எதிர்ப்பு மிகுந்த இந்த ஆசிடுகள் வைரஸ் உள்ளிட்ட கிருமி எதிர்ப்பு சக்திகளையும் உள்ளடக்கியுள்ளது.

2. மாட்டுக்கறியில் அனைத்து விதமான சத்துக்களும் அடர்த்தியாக நிறைந்துள்ளன. அதிக அளவு சத்துக்களை கொடுத்தாலும் குறைந்த அளவு கேலரிகள் தான் அளிக்கிறது. 85 கிராம் மாட்டுக்கறியில் 179 கேலரிகள் தான் உள்ளன. ஆனால் 85 கிராம் மாட்டுக் கறியில் உடலுக்கு தேவையான பத்து சதவிகிதத்திற்கு மேலான உயிர்சத்துகள் நிரம்பியுள்ளன. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தேவையானது மாட்டுக்கறி தான்.

3. கொழுப்பற்ற மாட்டுக்கறியை சாப்பிட்டு வந்தால் இதயக் கோளாறுகள் நீங்கும், இதயம் வலிமை பெறும். ஆங்கிலத்தில் இதனை லீன் பீப் (Lean Beef) என்பார்கள். இதனை 2012இல் அமெரிக்க ஜர்னல் சத்துணவு ஆய்வு மய்யத்தின் (American Journal Clinical Nutrition)  ஆய்வறிக்கையில் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளனர்.

கொழுப்பற்ற மாட்டுக்கறியை தினமும் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும். மாட்டுக்கறியில் உள்ள ஸ்டீரிக் ஆசிடு நல்ல கொலஸ்ட்ராலை (HDL)  அதிகரிக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பாதிக்கும் மேற்பட்ட மாட்டுக் கொழுப் புகளில் இதயத்திற்கு தேவையான ஓலிக் ஆசிடுகள் நிரம்பியுள்ளன.

இதயத்திற்கு வலு சேர்க்கும் சத்துக்கள் மாட்டுக் கறியில் கிடைப்பது போல வேறெந்த உணவிலும் இல்லை. உங்களால் முட்டை அல்லது மீன்களில் இருக்கும் கொழுப்பை அகற்ற முடியாது. ஆனால் மாட்டிறைச்சியில் எளிதாக கொழுப்பை அறுத்து நீக்கலாம். இதை தான் லீன் பீப் (Lean Beef) என்பார்கள். ((LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால்.)

இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. (HDL) என்பது நல்ல கொலஸ்ட்ரால் இரத்தத்தில் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது.)

4. மனித இனம் மாட்டுக்கறியையும் உள்ளடக்கிய சிவப்பு இறைச்சிகளை உண்ணாமல் இருந்திருந்தால் மனித னின் மூளை இப்போதிருக்கும் அளவில் கால் பங்கு தான் இருந்திருக்கும் என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தின் மூளைக்கு கிடைத்த புத்திக் கூர்மைக்கு சிவப்பு இறைச்சிகளே பெரும் பங் காற்றியுள்ளன.

5. உலகில் நீண்ட ஆயுள் வாழும் பகுதிகளை பார்த்தால் இறைச்சி உணவே முதன்மையாக இருப்பது தெரியும்.

6. மாடு மற்றும் ஆட்டில் கிடைக்கும் புரத சத்தினால் தசைகள் வலுவாவது மட்டுமல்ல நமக்கு ஹார்மோன்களும் ஆரோக்கியமாக சுரக்கின்றன.

7. தானியங்களில் கிடைக்கும் ஸின்க், மெக்னீசியம், இரும்பு சத்துக்களை விட சிவப்பு இறைச்சிகளில் கிடைக்கும் சத்துக்களை நமது உடல் எளிதாக முழுமையாக உறிஞ்சிக் கொள்கிறது. வசதியற்றவர்களுக்கு ஏற்ற உணவு மாட்டிறைச்சி. குறைந்த அளவு சாப்பிட்டு வந்தாலும் சத்துக் குறைவினை குறைக்கலாம். குழந்தை சத்து குறைவில் முன்னிலையில் இருக்கும் நம் நாட்டிற்கு அவசியமானது மாட்டிறைச்சி.

8. ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கும், இரத்தத்திற்கும் வைட்டமின் பி12 அவசியம். வைட்டமின் பி12 அசைவ உணவில் மட்டுமே உள்ளது. அதிலும் மாட்டுக்கறியில் வைட்டமின் பி12 37% நிரம்பியுள்ளது. மேலும் மனநோய்களை தவிர்க்கவும், கிழட்டுத் தன்மை மற்றும் மலட்டுத் தன்மையை குறைப்பதிற்கும் வைட்டமின் பி12 அவசியம். வைட்டமின் பி12 சிவப்பு இறைச்சிகளில் நிரம்பியுள்ளது.

நவீன உழைப்பு சுரண்டலில் அழுத்தம் நிறைந்த பணி சூழலில் வேலை செய்யும் கார்ப்பரேட் தொழிலாளர்களுக்கு அவசியமானது மாட்டிறைச்சி.

9. அமெரிக்க விவசாயத் துறையின் 2002 ஆய்வறிக்கையின்படி,

1.1 கிலோ டுயுனா மீனில் கிடைக்கும் ஸின்க் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது.

750 கிராம் கோழியின் தோலற்ற நெஞ்சுக் கறியில் கிடைக்கும் வைட்டமின் பி12 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது.

300 கிராம் கோழியின் தோலற்ற நெஞ்சுக் கறியில் கிடைக்கும் பி விட்டமினான ரைபோப்ஃலேவின் 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது.

மூன்று கட்டு பாலக்(தரைப் பசலி) கீரையில் கிடைக்கும் இரும்புச் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது.

மாட்டிறைச்சியில் சத்துக்கள் அடர்த்தியாக உள்ளன.

450 கிராம் டுயுனா மீனில் கிடைக்கும் பி விட்ட மினான ரைபோப்ஃலேவின் 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது.

ஆறரை கட்டு பாலக் (தரைப் பசலி)  கீரை யில் கிடைக்கும் இரும்புச் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது.

மனித இனம் தொன்று தொட்டு மாட்டிறைச்சியை சாப்பிட்டு வருவதால் பரிணாம வளர்ச்சிக்கு உதவியது என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் தான் நமது உடலும் மாட்டுக்கறியின் சத்துக்களை எளிதாக ஏற்று கொள்கிறது. ‘அசைவ உணவு உடம்பிற்கு நல்லது மேலும் வலிமையான இந்தியாவிற்கு அசைவ உணவு அவசியம்’ என்றார் விவேகானந்தர். அமெரிக்கா சென்றபோது மாட்டுக் கறியை கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார் அசைவப் பிரியரான விவேகானந்தர்.

இந்தியாவில் மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி ஏற்றுமதியின் மூலம் இந்தியாவிற்கு ரூ.3500 கோடிக்கும் அதிகமான தொகை வருமானமாகக் கிடைக்கிறது.உலக அளவில் மிக அதிகம்பேர் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மாட்டிறைச்சியை விரும்பி உண்ணுகிறார்கள். இந்தியாவின் தோல் தொழில் உலக அளவில் பிரசித்திபெற்றதாகும். 2.5 மில்லியன் தொழிலாளர்கள் இந்தத் துறையில் வேலை பார்க்கிறார்கள்.

இதில் 30 சதவீதம் பெண்களாகும். இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதத்தினர் மாமிசம் உண்பவர்களாவார்கள். மாமிசம் உண்ணாதவர்கள் 31 சதவீதத்தினர். மீதம் 9 சதவீதத்தினர் கோழி முட்டை உண்பவர்களாவார்கள்.

அய்க்கிய நாடுகள் உணவு தானியக் கழகம் நடத்திய ஆய்வில் அதிகம்பேர் மாட்டிறைச்சி உண்பவர்களே என்று அறிவித்துள்ளது. (இந்த ஆய்வில் கோழி இறைச்சி சேர்க்கப்பட வில்லை). ஆண்டிற்கு 24 லட்சம் டன் மாட்டிறைச்சி நுகரப்படுகிறது.

இந்தியாவில் மாமிச உணவு உண் பவர்களில் அதிகம் பேர் விரும்புவது மாட்டிறைச்சியையே என்பது இதன் மூலம் தெளிவாகும்.வயதான, உற்பத்தி சக்தியை இழந்த கால்நடைகள் விவ சாயிகளைப் பொறுத்தவரையில் பெரும் பாராமாகும்.இவற்றை இறைச்சிக்காக விற்பதற்கு பசுவதைத் தடைச் சட் டத்தை அமல்படுத்தியுள்ள மாநிலங் கள் அனுமதிப்பதில்லை.

அதனால் கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவற் றைத் தெருவில் விட்டுவிடுகிறார்கள். ஹரியானா முதலான மாநிலங்களில் தெருவில் அலைந்து திரியும் கால் நடைகள் உண்டாக்கும் பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல. நாட்டின் ஆண் டுக்கு மக்கள் தொகை உயர்வு1.58 சதவீதமாகும்.

ஆனால் கால்நடைகளில் இது 4.48 சதவீதமாகும். பசுவதைத் தடை இந்த எண்ணிக்கையில் எவ்வித பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது நாம் உணரவேண்டிய ஒன்றாகும். கால்நடை வளர்ப்போரைப் பொறுத்த வரையில் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து வளர்க்கும் பசு கறவை வற்றி உற்பத்தித்திறனை இழந்த பிறகு அதை விற்பது என்பது எதார்த்தம்.

அவ்வாறு விற்பதுவும் பசுவின் மூலம் விவசாயிக்குக் கிடைக்கும் ஒரு வருமானம் ஆகும்.இவை எல்லாவற்றை யும் விட மனிதன், சிங்கம், புலி, ஆடு, பன்றி, கோழி  போன்று மாடுகளும் ஒரு உயிரினம்தான்.விலங்குதான். மாடுகள் தரும் பலன் அதிகம்தான் .ஆனால் அதை ஒரு உணவாக கொள் வோரை இதை சாப்பிடாதே,

அதை சாப்பிடாதே என்று தடை போட அவர்கள் அளித்த வாக்குகளையே பயன்படுத்துவது சரியாகுமா? பசுவதைத் தடைச் சட்டம் என்பது  மக்களின் உணவுப் பழக்கத்தின் மீதான அத்துமீற லாகும். அது  தனி மனித சுதந்திரத்தைக் கசாப்பு செய்வதாகும்.

உலக அளவில் மாட்டிறைச்சியை உணவிற்காக பயன்படுத்தும் 10 நாடுகள்

1.  அமெரிக்க அய்க்கிய நாடுகள் 11,172,000

2.  பிரேசில் 7,925,000

3.  அய்ரோப்பிய கூட்டமைப்பு    7,720,000

4.  சீனா 6,263,000

5.  அர்ஜண்டினா 2,700,000

6.  ரஷ்யா 2,388,000

7.  இந்தியா 2,125,000

8.  மெக்சிகோ    1,875,000

9.  பாகிஸ்தான் 1,626,000

10. ஜப்பான் 1,285,000

குறிப்புகள்

உலகில் 63 விழுக்காடு மக்கள் தினசரி 2 கிலோ மாட்டிறைச்சியை உண்கின்றனர்.

1. பிரேசில், 2. இந்தியா 3. அர்ஜண் டினா 4. சீனா 5. அமெரிக்கா போன் றவை மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இடம் பெற்றுள்ளன.
பன்றி மற்றும் கோழி இறைச்சியை விட மிக விரைவில் உடலில் சேர்ந்து கொள்ளும் புரதச்சத்து மாட்டிறைச்சியில் தான் உள்ளது.

– சரவணன் ராஜேந்திரன்

source: http://viduthalai.in/page3/99093.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb