ஆப்கானிஸ்தானில் குர்ஆன் பிரதியை எரித்ததாக குற்றம்சாட்டி பெண் அடித்துக் கொலை!
ஆஃப்கான் காட்டுமிராண்டிகளே! எவரையும் எரித்துக்கொள்வது ஹராமாயிற்றே!
ஆப்கானிஸ்தானில் குர்-ஆன் பிரதியை எரித்ததாக குற்றம்சாட்டி அடித்துக் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானில் குர்ஆன் பிரதிகளை எரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு அடித்துக் கொலைசெய்யப்பட்ட பெண் உண்மையில் ஓர் அப்பாவி என்று அந்நாட்டின் குற்றவியல் வழக்குகளுக்கான மூத்த விசாரணையாளர் கூறுகின்றார்.
ஃபார்குன்டா என்ற அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டிருந்தனர். அவரது பிரேதப் பெட்டியை பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் சுமந்துசென்றனர்.
ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று, கடந்த வியாழக்கிழமை காபூலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து அந்தப் பெண்னை வெளியே இழுத்துவந்து அடித்து உதைத்து அவரது உடல் மீது தீயிட்டு கொழுத்தியுள்ளது.
என்ன நடந்தது என்பதை விசாரிக்காமலேயே அந்த பெண்ணை தரையோடு தரையாக இழுத்து வந்து ஆத்திரம் தீர தாக்கினர். ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த அந்த பெண்ணின் உடலை காபூல் ஆற்றங்காரைக்கு எடுத்துச் சென்று தீயிட்டு கொளுத்தினர். நீண்ட நேர இடைவெளிக்குப் பின்னர் வந்த போலீஸாரும், தீயணைப்பு படையினரும் பாதி எரிந்த நிலையில் உள்ள பர்குந்தாவின் உடலை மீட்டனர்.
அப்பெண்ணின் தாயார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “எனது மகள் சிறிது மன நலம் பாதிக்கப்பட்டவள். அவளை பல்வேறு மருத்துவர்களிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தோம். மன அமைதிக்காக “ஷா-டோ ஷாம்சிரா” மஸ்ஜிதுக்கு அவர் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்பாவிப்பெண்ணை அநியாயமாக கொன்று விட்டனர்” என்று கண்ணீர் மல்க கூறினார்.
கொலை செய்யப்பட்ட பெண் குர்ஆன் பிரதிகளை எரித்ததற்கான எந்தவொரு தடயமும் இல்லை என்று ஜெனரல் மொஹமட் ஸாஹிர் தெரிவித்துள்ளார்
முன்னதாக, இந்தக் கொலையை கண்டித்திருந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானி, அதுபற்றிய விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தார்.
ஆஃப்கான் காட்டுமிராண்டிகளே! எவரையும் எரித்துக்கொள்வது ஹராமாயிற்றே!
“heinous attack”
Afghanistan Buries Farkhunda, Woman Beaten and Set Alight by Mob
KABUL, Afghanistan — An Afghan woman who was beaten to death by a mob was buried in Kabul on Sunday, her coffin carried aloft by women’s rights activists.
Hundreds of people gathered in northern Kabul for the funeral of 27-year-old Farkhunda, who like many Afghans is known by only one name.
She was killed late Thursday by a mob of mostly men who beat her, set her body on fire and then threw it into the Kabul River, according to police accounts.
Officials and eyewitnesses told NBC News that she was set upon after burning copies of the Quran, but at her graveside, the head of the Interior Ministry’s criminal investigation directorate, Gen. Mohammad Zahir, said no evidence had been found to support those allegations.
“We have reviewed all the evidence and have been unable to find any single iota of evidence to support claims that she had burned a Quran,” Zahir said. “She is completely innocent.”
He said that 13 people had been arrested in connection with her killing.
President Ashraf Ghani condemned Farkhunda’s killing as a “heinous attack” and ordered an investigation. Following allegations that police stood by and did nothing to stop the fatal attack, Ghani said it revealed “a fundamental issue” — the country’s police were too focused on the fight against the Taliban insurgency to concentrate on community policing.
His comments followed widespread condemnation of the killing. In Afghanistan, women are generally treated as inferior, despite constitutional guarantees of equality. Violence against women often goes unpunished.
source: http://www.nbcnews.com/news/world/afghanistan-buries-farkhunda-woman-beaten-set-alight-mob-n328011