இஸ்லாம் வழங்கிய அறிவுச் சுதந்திரம்
மெளலானா வஹீதுத்தீன் கான்
[ அறிவுச் சுதந்திரம் எளிமையான ஒன்றல்ல. ஒவ்வொரு மனிதனுடைய முன்னேற்றத்திற்கான இரகசியமும் அவனது அறிவுச் சுதந்திரத்திற்குள் மறைந்திருக்கின்றன.
மனிதனுக்கு அறிவுச் சுதந்திரம் அளிக்காது உச்சக்கட்ட நற்செயலகளை அவனிடமிருந்து பெறவியலாது. பாசாங்கு பாவனையிலிருந்தும் அறிவுச் சுதந்திரமே அவனை வெளிக்கொண்டு வரும்.
அறிவுச் சுதந்திரத்தை நிராகரிக்கும் சமூகம் தேங்கிப்போகும். படைப்பாற்றலுடன் கூடிய முழுமையான மனிதனை உருவாக்க இயலாது, பூரணத்துவம் தடை பட்டுப்போகும்.]
அறிவுச் சுதந்திரத்தை மனிதனுக்கு இஸ்லாம் முழுமையாக வழங்கியிருக்கிறது. உண்மையைக் கூறுவதானால், மனித இனங்கள் அனைத்திலும் உண்டான புரட்சி வரலாறுகளில் சுதந்திர வெளிப்பாட்டைக் கொண்டு வந்தது இஸ்லாம் மட்டுமே.
இஸ்லாத்துக்கு முன்பிருந்த மனித வாழ்க்கை வரலாறுகளை உலகம் முழுவதும் உற்று நோக்கினால், சர்வாதிகார அமைப்பு முறையே மேலோங்கியிருந்ததைக் காணலாம். மனிதனது அறிவுச் சுதந்திரம் மறுக்கப்பட்டதே அதற்குக் காரணம்.
அறிவுச் சுதந்திரம் எளிமையான ஒன்றல்ல. ஒவ்வொரு மனிதனுடைய முன்னேற்றத்திற்கான இரகசியமும் அவனது அறிவுச் சுதந்திரத்திற்குள் மறைந்திருக்கின்றன.
குர்ஆன் 5:94 “மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறிவிப்பதற்காகத்தான்.”
அறிவுச் சுதந்திரத்தில் மனிதன் அடையக் கூடிய முதல் நன்மை இறைவன் மீதான அச்சம் என்பதையே இந்த இறைவசனம் குறிப்பிடுகிறது. மனிதன் தனது அச்சத்தின் மூலமாக அங்கீகாரத்தை அடைகின்றான். முழுமையான சுதந்திரத்துடன், சுயவிருப்பத்துடன் இறைவனை உணர்கின்றான். சுதந்திரம் இல்லாத எந்த ஒரு சூழலிலும் மனிதன் ஆன்மீக மகிழ்ச்சியைப் பெற முடியாது. ஆன்மீக அனுபவம் என்பது மறைவானவற்றின் (இறைவன்) மீது அச்சம் கொள்வது. மனிதனுக்கு அறிவுச் சுதந்திரம் அளிக்காது உச்சக்கட்ட நற்செயலகளை அவனிடமிருந்து பெறவியலாது. பாசாங்கு பாவனையிலிருந்தும் அறிவுச் சுதந்திரமே அவனை வெளிக்கொண்டு வரும்.
மனிதப் படைப்பு சிந்திப்பதற்காகப் படைக்கப்பட்டது. மனித மூளை சிந்தித்தல் மூலம் பல கருத்துக்களை உருவாக்கும். அச்சமயம் மனிதனுக்கு தடை விதிக்கப்பட்டால் அவனது சிந்தனை, பேச்சு, மூளை, பேனா முனை நின்று போய் உள்ளுக்குள்ளாகத் தங்கிப்போகும். எந்த ஒரு நாடு, மாநிலம், நிறுவனமும் மனிதனுடைய அறுவுச் சுதந்திரத்திற்கு தடை விதித்தால், நயவஞ்சகர்களை நிரம்பவே உருவாக்கும்.
தடை செய்ய வேண்டிய ஒரு சூழலை சுற்றுப்புறத்தில் சுயமாக உருவாக்கிவிட்டு அச்சூழலில் இருந்தும் நேர்மையான ஒரு மனிதனை மீண்டும் உருவாக்க முடியாது. அறிவுச் சுதந்திரம் படைப்பாற்றலுடன் நேரடித் தொடர்புடையது. அறிவுச்சுதந்திரத்தை வளர்த்தெடுக்கும் சமூகம் படைப்பாற்றலுடைய மக்களை உருவாக்கும்.
அறிவுச் சுதந்திரத்தை நிராகரிக்கும் சமூகம் தேங்கிப்போகும். படைப்பாற்றலுடன் கூடிய முழுமையான மனிதனை உருவாக்க இயலாது, பூரணத்துவம் தடை பட்டுப்போகும்.
கருத்து வேறுபாடுகளில், விமர்சனத்துக்குரிய விஷயங்களில் நாம் சரியான நிலைப்பாடு எடுக்க வேண்டும். எதன் மீதுமான தேவையற்ற உணர்ச்சிப் போக்குகளை களைய வேண்டும். அவற்றை தடை செய்தலுக்குப் பதிலாக, அதன் மீதான உண்மை மீது உறுதியோடு இருக்க வேண்டும். இஸ்லாத்தின் தேவையும், இயற்கையின் தேவையும் இதுவே!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக முஸ்னத் அஹ்மத் பதிவு: “உண்மையான நம்பிக்கையாளரின் பண்பு, எப்பொழுதெல்லாம் அவர் முன்பு உண்மை வைக்கப்படுகிறதோ அதனை அவர் ஏற்றுக்கொள்வார்.”
உண்மை என்பதன் அர்த்தம் கூறக்கூடிய விஷயத்தின் தன்மை பொறுத்தது. அந்த உண்மையை எற்றுக்கொள்வதற்கு ஒரு நம்பிக்கையான முழு திறன் பெற்றவனாக இருக்க வேண்டும். அவன் முன்பு உண்மை வைக்கப்படும்போது, தவறு சுட்டிக்காட்டப்படும்போது தவறான மனப்பாங்கு, கருத்து கொள்ளாமல் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். எப்போதும் நன்மையின் வேட்கைக்குத் தயாராக இருப்பவன், தன்னுடைய குறைபாடுகளை ஒருவர் சுட்டிக்காட்டும்போது நேசிப்பவன், எற்றுக்கொள்பவனே பண்பின் உச்சக்கட்ட மனிதன்.
சீர்திருத்தம் புரிவதிலும், வழிப்படுத்திக் கொள்தலிலும் மனிதன் பேராசை கொள்வான். இந்த குணமுடைய உண்மையான நம்பிக்கையாளன். இத்தகைய குணத்தை உமர் ஃபாரூக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒவ்வொரு நிலையிலும் வெளிப்படுத்தினார்கள். இக்குணமுடைய மனிதன் இறைவனால் ஆசிர்வதிக்கப்ப்படுவான்.
தன்னுடைய வழிபாடு என்ற உண்மையை ஒப்புக்கொள்வான். உண்மையின் செயல்களை எற்றுக்கொள்வதன் மூலம் மிகப்பெரிய தியாகம் செய்வான். அவனது தியாகமே மிகப்பெரிய வழிபாடு.
தியாகம் என்பது ஒருவருடைய கவுரவம், பெருந்தன்மை. மனிதன் ஏதோ ஒரு காரணத்திற்காக தியாகத்தை ஏற்றுக்கொள்கிறான். அதற்கான பலன்களை மறுமை நாளில் சொர்க்கத்தின் நுழைவு வாயிலில் பெற்றுக்கொள்வான். இந்த வாய்ப்பு, இறை ஆசிர்வாதம் இரண்டும் பெறுவதற்கு மனித முழுமையான அறிவு சுதந்திரமுடன் பேசுப்போது தான் தொடக்கம் பெறும். மேலும், இருபுறமிருப்போர் எவ்விதக தடையுமற்று விவாதிக்கும்போது வளரும். இச்சூழல் சமூகத்திற்குள் நிலவும்போது மனிதர்கள் எளிதாக ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்வர். இருபுறம் இருப்போரும் ஒருவருக்கொருவர் கவனத்தில் கொள்வர்.
இது போன்ற உகந்த சூழல் மூலமாக நற்பண்புகள் முளை விடத் துவங்கும். மனிதனுக்கான உண்மையின் பிரகடனமாக சுற்றுச்சூழலை அமைக்கும். உண்மையை ஏற்றுக்கொண்டதற்கான மற்றொரு வெகுமதியும் மனிதனுக்குக் கிடைக்கும்.
தமிழாக்கம்: ஜெ. நாகூர் மீரான்
நன்றி: முஸ்லிம் முரசு (பக்கம் 62, 63) மார்ச் 2015.