மனித உணர்வுகளை புரிந்துக்கொள்வோம், புதிய சமுதாயம் படைப்போம்
மனிதனின் உடல் உறுப்புகள் வளர்வது போல் மனித உணர்வுகளும் வளர்கிறது, இது யதார்த்தம். மனிதன் பிறந்த சமயத்தில் அவன் எதையும் எதிர்ப்பார்க்க மாட்டான், அதே சமயம் அவன் வளர வளர அவனின் தேவைகள் பூர்த்தியடையவில்லை என்றால் அவனின் உள்ளம் பல எதிர்பார்ப்புகள் நோக்கி பயணமாகுகிறது.
மனித வாழ்வு ஒரு போராட்டம், ஒருவன் எவ்வாறு தன் உணவுக்காக சிறு வயதில் போராடுகிறான். அதே போல் வாலிப வயதில் வழிகாட்டலுக்காக, பின்னர் அன்புக்காக, பின்னர் தங்கும் இடம், பின்னர் மதிப்பு, பின்னர் பதவி என மனித தன் போராட்ட வாழ்வில் பயணம் செய்கிறான்.
இதற்கிடையில் தொடரும் பயணம் ஒரு முக்கிய தேவை என எண்ணி தன் வாழ்வின் அணைத்து தருணங்களிலும் அதை அடைய முயலுகிறான்.
மனிதனின் வாழ்க்கை என்ற பயணம் சும்மா காரணமின்றி பயணிக்கவில்லை. அவைகள் அவனின் உள் மனதின் உணர்வுகளின் துண்டுதலே. அதை அம்மனிதனோ, அவனை சூழ்ந்து இருக்கும் மனிதர்களோ விளங்கினால் அவனின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வளரும் உணர்வுகளுக்கு அறிவு ரீதியில் செயலாற்றினால், மனித உணர்வுகளை நல்ல ஆக்க பூர்வமான வழியில் செய்யலாற்றலாம்.
மனம் ஒரு குரங்கு போன்றது சிலர் சொல்வது உண்டு. அது தேவைகள் பூர்த்தியாக துடிக்கும் போதில் தான். அது ஆசைகள் சூழ்ந்த மனசு. வரும் புதிய வெற்றி மிகு சமுதாயத்தை உருவாக்க நினைக்கும் நாம், முதலில் வெற்றி மிகு குடும்பத்தை உருவாக்குவோம்.
தன் குழந்தை ஒரு செயல் வீரனாக வர வேண்டும் ஆசைப்படும், நாம் நம் குழந்தையின் உணர்வுகளை அவன் பிறந்த முதல் அறியவேண்டும். பள்ளி வகுப்பில் மாணவருக்கு சொல்லி தரும் பாடங்கள் போன்றே ஆசிரியர் சொல்லி தரும் பாடங்களை அவப்போழுது படிப்பதை போன்றே, நாம் நம் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு அந்த அந்த நேரத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அவைகளை பூர்த்தி செய்ய தாமதம் செய்ய செய்ய அவனின் உணர்கள் வளர வளர அவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்ப்படுகிறது. அதுவே பின்னர் ஜெனரேசன் கேப் என்கிறார்கள்.
மனித உணர்வுகளை பூரிந்துக்கொள்வோம், புதிய சமுதாயம் படைப்போம்.