சார்லி ஹெப்டோ – கருத்து சுதந்திரம் என்பதன் எல்லை அறியா மூடர்கள்
[ தொலைக்காட்சி விவாதங்களில் சூடு கிளப்பிய நம் சமூக தலைமைகளோ ஒரு உயிரை கொல்வது ஒட்டு மொத்த மனித குலத்தையும் கொல்வதற்கு சமம் என்று அப்படுகொலையை வன்மையாக கண்டிப்பதாக முழங்கினார்கள்.
ஆனால் எதிர்வினையை கண்டித்த தலைவர்கள் வினையை கார்டூனிஸ்டுகளை கண்டிக்காமல் ஏதோ அவர்கள் புனித ஆத்மாக்களை போல் கருத்து கூறினார்கள்.
இன்னும் நம் முக நூல் போராளிகளோ நபிகளாரே தம்மை இழிவுபடுத்தியவரை மன்னித்து இருக்கும் போது நாம் எப்படி தண்டிக்கலாம், அதிகாரம் கைவரப்பெற்றவர் தானே தண்டிக்க வேண்டும் என்று பிக்ஹு விவகாரத்தில் மூழ்கி போயிருந்தனர்.
இப்படி சாத்வீக அவதாரம் எடுத்து சார்லீ ஹெப்டோவுக்காக வக்காலத்து வாங்கிய நவீன மார்க்க அறிஞர்கள் சல்மான் ருஷ்டிக்கும் தஸ்லீமா நஸ்ரினுக்கும் எதிராக பத்வா கொடுப்பதை மத அடிப்படைவாதம் என்று கூறுமளவுக்கு யாரை திருப்திபடுத்த வேண்டிய தேவை இருந்தது என தெரியவில்லை.]
சார்லி ஹெப்டோ – முஸ்லீம் உம்மாவுக்கான சோதனை
உலகெங்கும் வாழும் பில்லியன் கணக்கான முஸ்லீம்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இறை தூதரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நையாண்டி செய்து கார்டூன் வெளியிட்டதற்காக சார்லீ ஹெப்டோ எனும் அங்கதப் பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 நபர்களும் அதை தொடர்ந்த காவல்துறை வேட்டையில் 5 நபர்கள் என 17 நபர்கள் இறந்து போனர்.
இதை கருத்து சுதந்திரத்துக்கு விடப்பட்ட சவால் என மேற்குலகம் சித்தரிப்பது உண்மை தானா?.
இஸ்லாம் சகிப்புத்தன்மை அற்ற மார்க்கமா ? என்பதை பார்க்கும் முன் சார்லீ ஹெப்டோவை கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்.
முன் வரலாறு :
1960ல் பெர்னியர் மற்றும் ப்ரன்கோஸ் ஆகியோரோல் ஆரம்பிக்கப்பட்ட மாதாந்திர பத்திரிகையான ஹரா கிரி பத்திரிகை 1961லும் 1966லும் இரு முறை சிறிது காலம் தடை செய்யப்பட்டது. 1969ல் ஹர கிரி ஹெப்டோ எனும் பெயரில் வாராந்திர பத்திரிகை புதிதாக தொடங்கப்பட்டது.
1970ல் முன்னாள் ப்ரெஞ்சு ஜனாதிபதி சார்லஸ் டீ கல்லே இறந்ததை கிண்டல் செய்ததை தொடர்ந்து அப்பத்திரிகை தடை செய்யப்பட்டது. தடையிலிருந்து தப்பிக்கும் முகமாக சார்லீ ஹெப்டோ என பெயர் மாற்றம் செய்து மீண்டும் வெளியானது.
காமிக்ஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சார்லி ப்ரெளனை அடிப்படையாக கொண்டே இப்பெயர் சூட்டப்பட்டது.
2006 – 2007 :
2006 பிப்ரவரி 9 அன்று “அடிப்படைவாதிகளால் ஆட்கொள்ளப்பட்ட முஹம்மது ” என்று தலைப்பிட்டு வந்த இதழில் டென்மார்க் பத்திரிகையில் வெளிவந்த சர்ச்சைக்குரிய 12 கார்டூன்களை மறுபதிப்பு போட்டதோடு வேறு சில கார்டூன்களையும் நபிகளாரை இழிவுபடுத்தி வரைந்தது.
வழக்கமாக 1 இலட்சம் பிரதிகள் விற்கும் சார்லி ஹெப்டோ நபிகளாரை இழிவுபடுத்தி கார்டூன் வரைந்த காரணத்தால் 3 இலட்சத்துக்கும் மேல் விற்பனையானது. அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஜாக்கூஸ் சிராக் மத உணர்வுகளை புண்படுத்துவம் இப்போக்கை கடுமையாக கண்டித்தார். மேலும் உலகெங்கும் உள்ள பல்வேறு இஸ்லாமிய குழுக்களும் இப்போக்கை கண்டித்தன.
இக்கார்டூன்களை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கார்டூனிஸ்டுகளுக்கு ஆதரவாக பிரான்ஸில் பின்னால் அதிபர்களான நிக்கோலஸ் சர்கோசியும் பிரான்கோஸ் ஹாலந்தேவும் கார்டூனிஸ்டுகளாக ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் நீதிமன்றத்தில் படித்தும் காட்டப்பட்டது விசித்திரமானது. 2007லும் இப்பத்திரிகை இறுதி தூதரை குண்டை டர்பனில் கட்டியவராக நிறவெறியை அப்பட்டமாக பிரதிபலிக்கும் கார்டூனையும் வெளியிட்டது.
2011 2011 நவம்பர் 3ல் முகமது நபியை சிறப்பு ஆசிரியர் என குறிப்பிட்டு வெளி வந்த இதழில் “ சிரிக்காமல் இறந்தால் சவுக்கால் 100 அடிகள் கொடுக்கப்படும்” என இறை தூதர் சொன்னதாக அப்பத்திரி.கை நையாண்டி செய்திருந்தது. அச்சூழலில் சார்லி ஹெப்டோவின் இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டதோடு அலுவலகம் மீதும் கையெறி குண்டுகள் வீசப்பட்டன.
2012 செப்டம்பர் 2012ல் மீண்டும் சார்லி ஹெப்டோ அங்கதப் பத்திரிகை உலகை உய்விக்க வந்த உத்தம தூதர் நிர்வாணமாக இருப்பதை போன்ற கார்டூன்களை பதிப்பித்தது முஸ்லீம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது தான் “இன்னோசண்ட் ஆப் முஸ்லீம்கள் “படம் வெளியாகி பெரும் கொந்தளிப்பான சூழல் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போதைய பிரான்ஸ் அரசின் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த லாரெண்ட் ஃபேபியஸும் எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றும் செயல் என சார்லி ஹெப்டோ பத்திரிகையை கண்டித்தது குறிப்பிடத்தக்கது. இச்சூழல்களின் பிண்ணணியில் பார்க்கும் போது சார்லி ஹெப்டோ அறியாமையால் ஏதோ முதல் தடவை தெரியாமல் இறைதூதரை இழிவுபடுத்தவில்லை. மாறாக இப்பத்திரிகை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தெளிவாக திட்டமிட்டே இழிவுபடுத்தியுள்ளார்கள் என்பதை நடைபெற்ற சம்பவங்களை ஆழ்ந்து நோக்கினால் உணர்ந்து கொள்ள முடியும்.
உலக முஸ்லீம்களின் கண்டனங்கள், பேரணிகள், அரசின் எச்சரிக்கைகள், நேரடியான தாக்குதல்கள் என பல்வேறு விதத்தில் நெருக்கடிகள் வந்தாலும் பெருமானாரை இழிவுபடுத்துவதில் கண்ணும் கருத்துமாக இக்கயவர்கள் இருந்துள்ளனர் என்பது கண்கூடு. எதிர்வினையா? சதி வலையா?
இதற்கு எதிர்வினையாக ஆயுதம் தாங்கிய இரு சகோதரர்கள் சார்லி ஹெப்டோவின் அலுவலகத்தில் நுழைந்து கார்டூனிஸ்டுகள் உள்ளிட்ட 12 நபர்களை சுட்டு கொன்றனர். பாலஸ்தீன் விஷயத்தில் பிரான்ஸ் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து பிரான்ஸுக்கு நெருக்கடி கொடுக்க ஏற்படுத்தப்பட்ட மொஸாத் தாக்குதல் என்றும் லிபியாவின் உள்ளே நுழைய பிரான்ஸே போட்ட திட்டம் என்று சொல்லப்படுவதையும் நம்மால் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க முடியாது.
இத்தாக்குதலில் சில அப்பாவிகளும் பலியானாது தவிர்க்க முடியா சோகம். நகை முரணான எதிர்ப்புகள் இத்தாக்குதல் நடத்தப்பட்டது சரியா, தவறா, சயீத் மற்றும் செரீப் கவுச்சி பயங்கரவாதிகளா, பலியாடுகளா என்பதை தாண்டி இச்சம்பவத்திற்கு எதிராக எழுந்த கூக்குரல்கள் முதல் தடவையாக இப்பூமிப்பந்தில் இது போன்ற சம்பவம் நடப்பதை போன்ற உணர்வை கூட சாமான்யனுக்கு தரலாம்.
பொருளாதார தடை எனும் பெயரில் இலட்சக்கணக்கான குழந்தைகளை கொன்றவர்கள், ஷாப்ரா ஷத்தீலா அகதி முகாமில் அகதிகள் என்றும் பாராமல் அபலைகளை ஆயிரக்கணக்கில் கொன்றவர்கள், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்களை தாங்கள் சுகமாய் வாழ சுரண்டி கொழுத்தவர்கள் என உலகின் அனைத்து சர்வதிகாரிகளும் தீவிரவாதத்திற்கு எதிராக பாரீஸ் பேரணியில் ஒன்று கூடியது நகை முரண்.
குஜராத் நரவேட்டை மோடியையும் அப்பேரணிக்கு அழைத்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். இப்பேரணியில் கலந்து கொண்டு பிரான்ஸில் நடந்ததை கண்டித்தவர்கள் பாலஸ்தீனத்தில் 17 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதையோ இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் பிஞ்சுகளும் கொல்லப்பட்டதையோ கண்டிக்கவில்லை என்பது நம்மனைவருக்கும் தெரிந்த ரகசியமே. ஆனால் முஸ்லீம்களே அத்தகைய மனோ நிலையில் இருந்தது தான் வேதனையளிக்கும் உண்மை. வினையா? எதிர்வினையா?
தொலைக்காட்சி விவாதங்களில் சூடு கிளப்பிய நம் சமூக தலைமைகளோ ஒரு உயிரை கொல்வது ஒட்டு மொத்த மனித குலத்தையும் கொல்வதற்கு சமம் என்று அப்படுகொலையை வன்மையாக கண்டிப்பதாக முழங்கினார்கள். ஆனால் எதிர்வினையை கண்டித்த தலைவர்கள் வினையை கார்டூனிஸ்டுகளை கண்டிக்காமல் ஏதோ அவர்கள் புனித ஆத்மாக்களை போல் கருத்து கூறினார்கள்.
இன்னும் நம் முக நூல் போராளிகளோ நபிகளாரே தம்மை இழிவுபடுத்தியவரை மன்னித்து இருக்கும் போது நாம் எப்படி தண்டிக்கலாம், அதிகாரம் கைவரப்பெற்றவர் தானே தண்டிக்க வேண்டும் என்று பிக்ஹு விவகாரத்தில் மூழ்கி போயிருந்தனர். இப்படி சாத்வீக அவதாரம் எடுத்து சார்லீ ஹெப்டோவுக்காக வக்காலத்து வாங்கிய நவீன மார்க்க அறிஞர்கள் சல்மான் ருஷ்டிக்கும் தஸ்லீமா நஸ்ரினுக்கும் எதிராக பத்வா கொடுப்பதை மத அடிப்படைவாதம் என்று கூறுமளவுக்கு யாரை திருப்திபடுத்த வேண்டிய தேவை இருந்தது என தெரியவில்லை.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஈராக்கிய அட்டூழியங்களுக்கு கிறித்துவர்களோ, குஜராத்தில் மோடி நிகழ்த்திய படுகொலைகளுக்கு இந்துக்களோ, பர்மாவிலும் இலங்கையிலும் புத்த பிக்குகளே நடத்திய வெறியாட்டங்களுக்கு புத்தர்களோ எக்கண்டனத்தையும் பதிவு செய்யாத போதும் முஸ்லீம்களோ அனைத்திற்காகவும் கண்டனம் தெரிவித்து தங்கள் மனிதாபிமானத்தை நிரூபிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். காருண்ய நபி மாத்திரமல்ல இஸ்லாத்தை முழுமையாக போதிக்க வேண்டிய தலைமைகளோ தமக்கு இலகுவானதை மாத்திரமே முஸ்லீம் பொது புத்தியில் திணிக்கின்றனர்.
சமாதானத்தை போதித்த காருண்ய நபி தான் வாளின் நபியாகவும் இருந்தார்கள் என்ற வரலாறு ஏனோ நம் உம்மாவுக்கு மறைக்கப்படுகிறது. நபி ஸல் அவர்கள் மீது ஒட்டக குடலை போட்டவனையே மன்னித்த காருண்ய நபியின் வாரிசுகள் இம்மாபாதக செயலை செய்யலாமா என்று தர்க்கம் நடக்கிறது செய்தது யார் என்று தெரியாமலே.
குப்பையை தினந்தோறும் கொட்டிய கிழவியையே மன்னித்தவர் அல்லவா நபிகளார் என்று நாகூர் ஹனீபாவை ஆதாரம் காட்டி முஸ்லீமின் போராட்ட உணர்வு ‘உணர்ச்சிவசப்படுதல்’ எனும் ஒற்றை சொல்லாடலில் நசுக்கப்படுகிறது. நபிகளாரை இழிவுபடுத்தியவர்களின் நிலை நபிகளாரின் மீது ஒட்டகத்தின் குடலை போட்டு அவமானப்படுத்திய உக்பா பத்ர் போரில் பிடிபட்ட போது சிறப்பு பரிசாக சிரச்சேதம் செய்யப்பட்டான் என்ற உண்மை நம்மில் பலருக்கு தெரியாது. அபூசுப்யான், இக்ரிமா உள்ளிட்ட இஸ்லாத்தின் எதிரிகள் பலர் மன்னிக்கப்பட்டு இறைவனின் தோழர்கள் ஆயினர் என்பது உண்மை தான்.
ஆம், அவர்களின் முன் இஸ்லாம் அல்லது வாள் தேர்வுக்கு கொடுக்கப்பட்ட போது அவர்கள் இஸ்லாத்தை தேர்வு செய்ததால் அவர்களின் தலை தப்பியது. மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது தன்னை விரட்டியடித்த மக்களை மன்னித்த அதே நமது தலைவர் தானே பனூ குரைளா போரில் யூதர்களை கொல்ல உத்தரவிட்டார்கள் என்பதை ஏன் மறைக்க பாடுபடுகிறோம்.
எப்படியாவது மறைத்து யாரையும் நாம் திருப்திபடுத்த முடியாது என்பதை நாம் உணர வேண்டும். மன்னிக்கும் அதே நபி தான் தேவைப்படும் போது தண்டிக்கவும் செய்தார்கள் என்பது நம் மக்களுக்கு தெளிவாக்கப்பட வேண்டும். பத்ர் தோல்விக்கு பின் குறைஷிகளை உசுப்பேற்றும் விதமாக கவிதைகளை இயற்றியதோடு நபிகளாரையும் முஸ்லீம் பெண்களையும் இழிவுபடுத்தி பாடல் இயற்றி பெருங்குழப்பத்தை விளைவித்த கஅப் பின் அஷ்ரப்பை கொல்ல நபிகளார் உத்தரவிட்டது வரலாற்றில் பசுமரத்தாணியாய் பதிந்து கிடக்கிறது.
இஸ்லாமிய ஆட்சி இருந்த போதிலும் தனிப்பட்ட முறையில் ஒரு ஸஹாபியால் அக்கொடியவன் கொல்லப்படுவதற்கு நமது உயிரினும் மேலான உத்தம நபி அனுமதி அளித்ததை இன்றைய சம்பவங்களோடு பொருத்தி பார்க்க வேண்டும். நபியும் நாமும் தனிப்பட்ட விரோதத்துக்காக அல்லது தன்னை எதிர்த்தவர்களை நபிகளார் மன்னித்ததே வரலாறு.
எனினும் தன்னை இழிவுபடுத்தியவர்களை அல்லது சமூகத்தில் குழப்பம் விளைவதை தடுக்கும் பொருட்டு தண்டிக்கவும் செய்துள்ளார்கள் என்பதை நபிகளாரின் சீராவை ஆழ படிப்பதன் மூலம் உணரலாம். வாதத்திற்கு நபிகளார் மன்னித்தாலும் தன்னை இழிவுபடுத்தியவர்களை மன்னிப்பதும், மன்னிக்காததும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அல்லாஹ்வின் தூதரின் மேல் மட்டற்ற பாசம் வைத்துள்ள உண்மை முஸ்லீம்கள் உயிரினும் மேலான இறை தூதர் இழிவுபடுத்துப்படுவதை சகிக்க மாட்டார்கள்.
கருத்து சுதந்திரம் என்பதன் எல்லை அறியா மூடர்கள் இத்தகைய நிகழ்வுக்கு பிறகும் படிப்பினை பெறாமல் நம் தூதரை இழிவுபடுத்த நினைக்கிறார்கள். முழு நிலவான எம் நாயகத்தின் பெருமையை எவராலும் நிச்சயம் அழித்து விட முடியாது.
மாறாக இத்தகைய வாய்ப்பை நம் தஃவாவுக்கான களமாக எடுத்து கொண்டு நபிகளாரின் வரலாற்றை புவிக்கு எடுத்து சொல்லுவோம். நபிகளார் உருவாக்கிய மதீனத்து சமூகத்தை நாமும் இவ்வுலகில் சமைப்போம். ‘கலிமத்துல்லாஹி இயல் உள்யா” தீனை மேலோங்க நாம் அனைத்தையும் அர்ப்பணித்து இப்பணிக்கு தடையாய் உள்ளவற்றை தகர்த்தெறிவோம்.
source: http://islamiyakolgai.blogspot.in/2015/01/blog-post.html