காதல் கணவனும் அவன் கொண்ட அன்பு மனைவியும்!
நீயும் நானும்
நானும் நீயும்
ஒருவருக்கொருவர்
என பிறந்தோம்!
உனக்காய் நானும்
எனக்காய் நீயும்
உயிருக்கு உயிராய்
கலந்து இருப்போம்!
நம்தேகங்கள் இரண்டு,
அதிலுள்ள இதயங்களும்
இரண்டு, ஆனால்
காதல் எனும்
ஒற்றை நாணில்,
கொய்து வைத்த
மலர்களாய் நம்மை
பிணைத்து வைத்தான்
நமது இறைவன்!
நீ பட்டப்பகலிலும்
எனக்கு குளிர்
நிலவொளி கொடுக்கிறாய்!
நான் நட்டநடு
இரவிலும் உனக்கு
சூரிய ஒளியாய்
இருந்து வேர்க்கச்செய்கிறேன்!
இப்பொழுது முழுபகலும்
முடிந்து போனாலும்
உனக்கென்ன?,உன்
சொந்த சூரியனான
நான் உன்
மடியினில் கிடக்கிறேன்!
இப்பொழுது முழுஇரவும்
முடிந்து இருந்தாலும்
எனக்கென்ன? என்
குளிர் நிலவாய்
நீ என்
மார்பில் புதைந்துக்கிடக்கிறாய்!
வின்ணவருக்கும் கிட்டாத
வரமாய் காதல்,
மண்னவர்கள் ஆகிய
நம்மிடம் உள்ளது!
என்னை பற்றி
நானே அறியாத
விடயங்களையும் நீ
அறிந்து இருக்கிறாய்!
நீ வேர்க்க
பிறப்பெடுக்கும் வாசம்
கொண்டே உன்
மன நிலையை
நான் அறிகிறேன்!
இனி இந்த
பாச பிணைப்பை
பிரிக்கும் சக்தி
அந்த பாசக்கயிறுக்கும்
கிட்டாது,கிடையாது!
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
இடம் பெயர்ந்ததை
எப்படி அறியும்
அக் கயிறும்?
யாரை கொன்றால்
யார் மரிப்பார்
குழம்பி திரும்பும்
அக் கயிறும்!
காதல் கொண்டே
காதல் நினைவில்
காதல் உழைப்பில்
வாழ்வை வெல்வோம்
வா வா
என் தேவதையே!
-அன்புடன் நவீன் மென்மையானவன்