Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முஸாபஹா செய்வதில் சரியான முறை எது?

Posted on January 16, 2015 by admin

முஸ்லிமை சந்திக்கும் போது…

ஒரு முஸ்லிம், இன்னொரு முஸ்லிமை சந்திக்கும்போது, ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுவதும் ‘முஸாபாஹா’ செய்வதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்திய நடைமுறையாகும்.

நம் தமிழகத்தைப் பொறுத்த வரை, பெரும்பாலான முஸ்லிம்கள் இரண்டு கைகளாலும், மிகவும் சிறுபான்மையினர் ஒரு கையாலும், ‘முஸாபாஹா’ செய்து வருகின்றனர். “இதில் சரியான முறை எது?”

இரண்டு கைகளால் ‘முஸாபஹா’ செய்ய வேண்டும் என்போர் புகாரியில் இடம் பெற்றுள்ள ஒரு ஹதீஸை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர். “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ‘அத்தஹியாத்’ கற்றுக் கொடுக்கும் போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது இரு கைகளால் இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஒரு கையைப் பிடித்திருத்தனர்.” என்பது தான் அந்த ஹதீஸ்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது இரு கைகளப் பயன்படுத்திய காரணத்தால். இரு கைகளால் “முஸாபாஹா’ செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கின்றனர் சிலர்.

இந்த ஹதீஸை ஆராயும் போது இரண்டு கைகளால் முஸாபஹா செய்வதற்கு இந்த ஹதீஸில் எவ்வித ஆதாரமும் கிடையாது என்பதை உணரலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘முஸாபஹா’ செய்யும் போது இரண்டு கைகளைப் பயன்படுத்தினார்கள் என்று இந்த ஹதீஸில் குறிப்பிடப்படவில்லை. மாறாக “அத்தஹிய்யாத்” கற்றுக் கொடுக்கும் போது தனது இரு கைகளைப் பயன்படுத்தினார்கள் என்றே உள்ளது.

“ஒரு ஆசிரியர், மாணவருக்கு எதையேனும் கற்றுத் கொடுக்க விரும்பினால் தனது இரு கைகளால் அவரது கையைப் பிடித்துக் கொள்ளலாம்” என்று மட்டுமே இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.

“முஸாபஹாவுக்கும் அதில் ஆதாரம் உள்ளது” என்ற கருத்தை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், அந்த ஹதீஸ்படி, முஸாபஹா செய்பவர்களில் ஒருவர் இரண்டு கைகளையும், இன்னொருவர் ஒரு கையையும் பயன்படுத்த வேண்டும்” என்று தான் புரிந்து கொள்ள முடியும்.

அந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரு கைகளையும், இப்னு மஸ்ஊது ஆதாரமாக இந்த ஹதீஸைக் கருதுபவர்கள், ஒருவர் இரண்டு கைகளையும், இன்னொருவர் ஒரு கையையும் பயன்படுத்த வேண்டும்” என்று தான் முடிவு செய்ய முடியுமே தவிர இருவருமே இரண்டு கைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இதில் ஆதாரமில்லை. (யார் இரண்டு கைகளைக் கொடுப்பது, யார் ஒரு கையைக் கொடுப்பது என்பதையும் முடிவு செய்தாக வேண்டும்).

ஆனால் முஸாபஹா செய்யும்போது ஒரு கையைப் பயன்படுத்துவது பற்றி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் சிலதைக் கீழே பட்டியல் போட்டுள்ளோம்.

நூல் பாடம் அறிவிப்பவர்கள்:

1) புகாரி தப்ஸீர் அபூசயீது இப்னு முஅல்லா ரளியல்லாஹு அன்ஹு

2) புகாரி முஆனகா இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு

3) புகாரி, அஹ்மத் நேர்ச்சை அப்துல்லா இப்னு ஹிஷாம் ரளியல்லாஹு அன்ஹு

4) முஸ்லிம் பழாயில் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

5) அபூதாவூத் கியாம் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹு

6) திர்மிதீ முஸாபஹா அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

7) அபூதாவூத் ஹுஸ்னுல்உஷ்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

8) இப்னு மாஜா இக்ராமூர்ஜுல் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

9) அஹ்மத் பாகம் 3, பக்கம் 111 அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

10) திர்மிதீ பாகம் 2, பக்கம் 97 அப்துல்லா இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு

11) அத்காருன்னவவீ பக்கம் 228 அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

12) தாரமீ பாகம் 2, பக்கம் 286 அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

13) அஹ்மத் பாகம் 4, பக்கம் 289 அபூதாவூது ரளியல்லாஹு அன்ஹு

14) அஹ்மத் பாகம் 5, பக்கம் 267 அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு

15) தர்கீப், தர்ஹீப் பாகம் 5, பக்கம் 103 ஹுதைபா ரளியல்லாஹு அன்ஹு

16) அஹ்மத் பாகம் 3, பக்கம் 142 அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

17) அஹ்மத் பாகம் 4, பக்கம் 291 பரா இப்னு ஆஸிம் ரளியல்லாஹு அன்ஹு

18) தர்கீப் தர்ஹீப் பாகம் 5, பக்கம் 104 சல்மான் பார்ஸீ ரளியல்லாஹு அன்ஹு

19) அஹ்மத் பாகம் 5, பக்கம் 360 அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு

20) இப்னு அஸாகிர் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு

21) திர்மிதீ பாகம் 2, பக்கம் 255 நாபிவு ரளியல்லாஹு அன்ஹு

22) அஹ்மத் பாகம் 5, பக்கம் 163 அபூதர் ரளியல்லாஹு அன்ஹு

இன்னும் பல ஹதீஸ்களும் ஒரு கையால் முஸாபஹா செய்வது பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இரண்டு கைகளால் முஸாபஹா செய்வதற்கு நேரடியாக எந்த ஒரு ஹதீஸையும் நாம் காண முடியவில்லை.

புகாரியில் இடம் பெற்றுள்ள அந்த ஒரே ஒரு ஹதீஸும் முஸாபஹா பற்றியது அல்ல. அது முஸாபஹாவுக்கு உரியது என்று வைத்துக் கொண்டாலும் ஒரு கையால் முஸாபஹா செய்பவர்கள் தான் அந்த ஹதீஸையும் செயல்படுத்துகிறார்கள். யாரேனும் நம்மிடம் முஸாபஹாவுக்கு இரண்டு கைகளை நீட்டினால் நீங்கள் ஒரு கையை மட்டும் நீட்டுங்கள்! அந்த ஹதீஸில் உள்ளபடி அப்போதும் நாம் அமல் செய்து விட்டோம். ஏனெனில் அந்த ஹதீஸில் ஒருவர் இரண்டு கைகளையும், இன்னொருவர் ஒரு கையையும் பயன்படுத்தினார்கள் என்று தான் உள்ளது. இரண்டு நபர்களும் இரண்டு கைகளைக் கொடுக்க அந்த ஹதீஸில் ஆதாரம் எதுவும் கிடையாது.

எவ்வித ஆதாரமுமில்லாமல் ஏன் மக்களிடம் இந்தப் பழக்கம் வேரூன்றியது தெரியுமா?

அதற்கும் ஒரு பின்னனி உண்டு.

ஹில்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பல மனிதர்களின் தோற்றத்தில் வருவார்களாம். சிலருடன் முஸாபஹா செய்வார்களாம். அவர்களால் முஸாபஹா செய்யப்பட்டு விட்டால் உடனே அவர் இறைநேசராம்! ஹில்று அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வலது கைப் பெருவிரலில் எலும்பு இருக்காதாம். இரண்டு கைகளால் முஸாபஹா செய்யும் போது மற்றவரின் வலது கைப் பெருவிரலை அழுத்திப் பார்க்க வேண்டுமாம். எலும்பு இல்லாவிட்டால் ஹில்று அலைஹிஸ்ஸலாம் என்று புரிந்து கொள்ள வேண்டுமாம் இந்தக் கதையை அடிப்படையாக வைத்தே இரு கைகளால் முஸாபஹா செய்வது நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஹில்று அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை முன்பே நாம் ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்தி இருக்கிறோம். எனவே ‘முஸாபஹா’ ஒரு கையால் செய்வதே சுன்னத் என்று நாம் தெரிந்து கொள்கிறோம்,

குன்யதுத் தாலிபீன் என்ற நூலில் அப்துல்காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், “வலது கையால் செய்ய வேண்டியவை” என்ற தலைப்பில் முஸாபஹாவையும் சேர்த்துள்ளார்கள்,

இமாம் நவபீ அவர்கள் வலது கையால் முஸாபஹா செய்வதுதான் விரும்பத்தக்கது என்று கூறியுள்ளனர். இவற்றிலிருந்தும் ஒரு கையால் தான் ‘முஸாபஹா’ செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.

இரண்டு கைகளால் முஸாபஹா செய்பவர்களில் சிலர், வலது கையை இடது புறமாகக் கொண்டு சென்று, இடது கையை வலது புறமாகக் கொண்டு சென்று (ஏறத்தாழ ‘பெருக்கல்’ வடிவத்தில் கைகளை வைத்துக் கொண்டு) முஸாபஹா செய்வதும், இன்னும் சிலர் வலது கையை, தன் தலைக்கு நேராக வைத்துக் கொண்டு முஸாபஹா செய்வதும், பார்க்க தமாஷாக இருக்கும். இந்த விநோதங்களை எல்லாம் எங்கிருந்து கற்றார்களோ தெரியவில்லை.

சுன்னத்தான முறைப்படி நாம் ஒரு கையை நீட்டினால், ஏதோ அதிசயப் பிராணியைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள். நாகரீகமான ஒரு முஸாபஹாவை நம்மிடமிருந்து மேனாட்டவர் கற்றுக் கொண்டு செய்து வருகின்றனர். நம்மவர்கள் தான் அந்த “சுன்னத்தை” மாற்றிக் கொண்டோம். சுன்னத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு கையால் முஸாபஹா செய்வோமா!

முஸாபஹா செய்யும் போது எதுவும் ஓத வேண்டும் என்று எவ்வித ஆதாரமும் கிடையாது. “முஸாபஹா செய்யும் போது ஸலவாத் ஓத வேண்டும்” என்று இப்னு ஹப்பானில் இடம் பெற்றுள்ள ஹதீஸ், முற்றிலும் நிராகரிக்கப்பட்டதாகும் என்று இமாம் இப்னு ஹப்பான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.

முஸாபஹா செய்யும் போது வேறு எந்த திக்ருகளும் ஓத வேண்டும் என்பதற்கும் ஆதாரம் கிடையாது. குறிப்பிட்ட சில தொழுகைக்குப் பின் ‘முஸாபஹா’ செய்வதற்கும் ஸஹீஹான ஆதாரங்கள் எதுவும் கிடையாது.

-மர்ஹும்

source: http://annajaath.com/archives/147

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 72 = 73

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb