சார்லி ஹெப்டே பத்திரிக்கை அலுவலக தாக்குதலின் பின்னணியில் மேற்குலகம்: துருக்கி அதிபர் எர்துகான்
கடந்த 12.01.15 நடந்த பிரான்சின் சார்லி ஹெப்டே பத்திரிக்கை அலுவலகத் தாக்குதலின் பின்னணியில் மேற்குலகம் இருப்பதாக துருக்கி அதிபர் வீரமகன் ரஜப் தய்யிப் எர்துகான் குற்றம் சாட்டியுள்ளார்.
மீடியாக்களுக்கு அளித்த பேட்டியில் எர்துகான் மேற்குலகை குற்றம் சாட்டி பின்வரும் கேள்விக் கணைகளை அள்ளி வீசினார் எர்துகான்.
பிரான்ஸ் பாதுகாப்புப் படையினருக்கு தாக்குதல் குறித்ததகவல் தெரிந்தும் ஏன் தடுக்கவில்லை?
சிறையில் இருந்து வெளிவந்தவர்களை ஏன் கண்காணிக்கவில்லை?
உங்களின் விளையாட்டுக்களை ஏன் இஸ்லாமிய உலகில் நடத்துகிறீர்கள்?
தாக்குதல் நடத்தியவர்கள் யாரென்று தெரிந்தும் உண்மையை அம்பலப்படுத்தாமல் ஏன் உள்ளீர்கள்?
உங்களின் நயவஞ்சகத்தனத்திற்கு பிரெஞ்சு குடிமக்கள் சாக வேண்டுமா?
முஸ்லிம்கள் அதற்கு விலை தரவேண்டுமா? (நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பிரான்சில் தாக்கப்பட்டுள்ளனர். பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டுள்ளன.)
சார்லி ஹெப்டே பத்திரிக்கை அலுவலகம் மற்றும் யூதர்களின் கோஷர் சூப்பர் மார்க்கெட் தாக்குதலில் உங்களின் விளையாட்டுக்களை முஸ்லிம்கள் நன்கறிந்துள்ளனர்.
முஸ்லிம்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். உங்களின்
சதிவேலைகள் நிச்சயம் பலன் தராது.
தீவிரவாத எதிர்ப்புப் பேரணியில் தீவிரவாதி கலந்து கொள்வதா?
முன்னதாக பிரான்சில் நடந்த தீிவிரவாத எதிர்ப்பு மத நல்லிணக்கப் பேரணியில் துருக்கி பிரதமர் அஹ்மது தாவூது அவ்குலு, பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ் ஆகியோர் பிரான்ஸ் அதிபர் ஹாலன்டு இன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இப்பேரணிக்கு வர வேண்டாம் என்று நெதன்யாகுவிடம் தெரிவித்திருந்தார் ஹாலன்டு.
ஆனால் அழையா விருந்தாளியாக கலந்து கொண்ட நெதன்யாகு முன்வரிசைத் தலைவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் போய் தாமாகப் போய் ஏறி முன்வரிசைத் தலைவர்களுடன் பேரணியில் முன்வரிசையில் நின்றார். (இதனை இஸ்ரேலின் ஹார்சட் (இடதுசாரி) நாளிதழ் விமர்சித்திருந்தது.
பேரணியில் கலந்து கொண்ட அப்பாஸ் மறுநாள் திங்கட் கிழமை துருக்கி வந்தார். ஒருநாட்டின் அதிபருக்கு தரப்படும் ராணுவ அணிவகுப்பு மரியாதையைத் தந்தார் எர்துகான். (பாலஸ்தீனத்தை தனிநாடாக ஐ.நா. அறிவிக்கவிட்டாலும் தாம் அங்கீகரித்து விட்டதை மறைமுகமாக சர்வதேச நாடுகளுக்கு மறைமுகமாக உணர்த்தி விட்டார் எர்துகான்)
அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சிக்கு பின்பு எர்துகான் பேசியதாவது, “தமது அரசு பயங்கரவாதத்தின் (state terrorism) மூலம் காசாவில் 25000 மக்களை கொன்று குவித்தவர் (நெதன்யாகு) பாரிசில் நடந்த தீவிரவாத எதிர்ப்பு பேரணியில் எப்படி கலந்து கொள்ள இயலும்?
ஒரு தீவிரவாதி தீவிரவாத எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்வதா? அவர் மற்றவர்களின் கரங்களை பற்றிக் கொண்டு நிற்பதா?
அவ்வாறு செய்வதை மக்கள் உற்சாகமாகப் பார்ப்பார்கள் என்று எண்ணிக் கொண்டாரா?
ஒரு கொலைகாரனாக இருந்து கொண்டு அங்கே செல்வதற்கு எப்படி தைரியம் வந்தது?
(நெதன்யாகு!) நீர் என்ன நல்லவரா? உங்களின் கணக்கில் ஆயிரக்கணக்கான பெண்களையும் , குழந்தைகளையும் கொன்ற இரத்தக் கறை இருக்கின்றதே!
தெளிவான இரட்டை வேடம் (Obvious hypocrisy’)
தொடர்ந்து மேற்குலம் குறித்து எர்துகான் கூறியதாவது, “மேற்குலம் தீவிரவாதத்தின் விஷயத்தில் இரட்டை வேடம் போடுகின்றது. நாங்கள் உறுதியாக கூறுகின்றோம்.
முஸ்லிம்கள் தீவிரவாதத்தில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. இது போன்ற இரக்கமற்ற படுகொலைகளை முஸ்லிம்கள் செய்வதில்லை.
முஸ்லிம்களுக்கெதிரான இனவெறியை உருவாக்குதல், முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்பு பிரச்சாரம்,இஸ்லாமோபோபியா (இஸ்லாம் குறித்து அச்சம் ஏற்படுத்துதல்) ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் இத்தாக்குதலின் பின்னணியில் இல்லை.
இத்தாக்குதல் நடந்தவுடன் மேற்கண்ட அனைத்தும் நடந்தன. முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்பு பிரச்சாரம் ஏவிவிடப்பட்டன.
மேற்கத்திய நாடுகளின் ஆட்சியாளர்களே! உங்களின் நாடுகளில் எங்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன. தயவு செய்து அதனை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுங்கள். (கைகட்டி வேடிக்கை பார்க்காதீர்கள்.)
உங்களின் விளையாட்டுக்கள் இஸ்லாமிய உலகில் நடத்தப்படுகின்றன. ஆனால் இப்பொழுது முஸ்லிம்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். உங்களின் கற்பனைக் கதைகளை முஸ்லிம்கள் நம்பத் தயாரில்லை.”
இவ்வாறு எர்துகான் பேசினார்.
முன்னதாக கடந்த 11.01.15 அன்று பாரிசில் நடந்த மத நல்லணக்க தீவிரவாத எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்ளுமாறு 52 உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் இஸ்ரேல் படுகொலையாளன் நெதன்யாகு, குஜராத் படுகொலையாளர் மோடி, எகிப்து படுகொலையாளன் சிஸி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நெதன்யாகு மட்டும் கலந்து கொண்டார்.
பாரிஸ் தாக்குதலை நடத்தியது குறித்து நேற்று முன்தினம் பினான்சியல் டைம்ஸ் (Financial Times.) பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி அங்காரா மேயர் அதனை மொசாத் நடத்தியது என்றார்.
ரஷ்யாவில் பல பத்திரிக்கையாளர்கள் அதனை அமெரிக்காவின் சி.ஐ.ஏ தான் நடத்தியது என கூறிவருகின்றனர்.
இப்போது 12.01.15 அன்று எர்துகான் அதனை மேற்குலம் தான் செய்தது என்று கூறியுள்ளார்.
எர்துகானின் இப்பேச்சினை துருக்கியின் அனைத்து பத்திரிக்கைளும், அரபு பத்திரிக்கைகளும், பிரிட்டனின் பிரபல டெய்லி மெய்ல் நாளிதழும், ஜெர்மனியின் DW நாளிதழும் பிரசுரித்துள்ளன.
(இதோ முஸ்லிம்களின் சார்பில் பேச ஒரு வீர ஆண்மகன் கிடைத்துள்ளார்)
(புகைப்படங்கள்)
1.இஸ்லாமிய உலகின் வீர ஆண்மகன் எர்துகான்
تصاعدت الاتهامات الموجهة لرئيس الوزراء الإسرائيلي بنيامين نتنياهو باستغلال مشاركته أمس الأحد في مسيرة باريس الدولية ضد الإرهاب لأغراض انتخابية.
وذكرت القناة الثانية الإسرائيلية أن فرنسا كانت تفضل عدم قيام رئيس الوزراء الإسرائيلي بالمشاركة في المسيرة “خشية إثارة بعض الإشكاليات”.
وكان نتنياهو قرر في 3 ديسمبر/كانون أول الماضي حل الكنيست (البرلمان) والتوجه إلى انتخابات مبكرة.
وصادقت الهيئة العامة للكنيست على مشروع قانون حل الكنيست، وتم تحديد يوم 17 مارس/آذار المقبل لإجراء انتخابات مبكرة.
وأوضحت القناة الإسرائيلية أن الإشكاليات التي ستثيرها الزيارة هي “تحويل الأنظار من الحرب على الإرهاب للصراع الفلسطيني الإسرائيلي، خاصة في ظل مشاركة الرئيس الفلسطيني محمود عباس”.
وأضافت أن قرار الذهاب إلى فرنسا جاء على خلفية الانتخابات الإسرائيلية، “وهذا ما يعتقده الفرنسيون”.
ومضت إلى القول إن الفرنسيين يعتقدون أن طلب نتنياهو المشاركة في زيارة باريس يأتي لأغراض الانتخابات الإسرائيلية.
12.01.15
அல்ஜஸீரா
source: http://www.dw.de/erdogan-blasts-netanyahu-and-weஸ/a-18186839