Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது..!

Posted on January 13, 2015 by admin

தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது..!

இல்லத்தரிசிகள் இல்லத்தில் ஊறுகாய் போடுவார்கள், வடகம் போடுவார்கள், கூடை பின்னுவார்கள் ,ஸ்வட்டர் பின்னுவார்கள் .இப்பொது இவை எல்லாம் செய்வது இல்லை. வேலை செய்யாததால் நோய்கள் பெருகி வருகின்றது.வந்தாரை வரவேற்கும் தமிழர் பண்பாடும் வழக்கொழிந்து வருகின்றது தொலைக்காட்சித் தொடருக்கு அடிமையாகி விட்டனர் .இவர்களை மீட்டு எடுக்க வேண்டும்.

தொலைக்காட்சித் தொடர்களில் வரும் கதாநாயகர்களுக்கு இரண்டு மனைவி .ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை சிதைக்கும் விதமாகவே வருகின்றது .பழிக்குப் பலி வாங்கும் வக்கிரம் வளர்க்கும் விதமாகவே காட்சிகள் வருகின்றது.

மாமியார் மருமகள் சண்டையிட்டுக் கொள்ள பயிற்சி தரும் விதமாகவே தொடர்கள் வருகின்றது .தொடர்கள் எடுக்கும் இயக்குனர்களுக்கு, தயாரிப்பவர்களுக்கு ,ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு யாருக்குமே சமூக அக்கறை இல்லை பணம் சேர்ப்பது ஒன்றே குறிகோளாக இருக்கின்றனர்.

திரைப்படங்கள் தணிக்கை செய்வது போல தொடர்களும் தணிக்கை செய்த பின்பே ஒளிப்பரப்பப்பட வேண்டும். திரைப்படங்கள் தணிக்கை சரியாக செய்வது இல்லை வேறு விஷயம் .கொஞ்சமாவது கட்டுப் படுத்த முடியும் .தொடர்களில் திரைப்படங்களை விஞ்சும் வண்ணம் வன்முறை தலைவிரித்து ஆடுகின்றது .மனிதர்களை விலங்காகும் வண்ணம் தீய எண்ணத்தை கற்பிக்கின்றனர்.

ஒரு பெண் இவ்வளவு மோசமாக இருப்பாளா? என்று கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பெண்ணை மோசமாக, கேவலமாக ,கொடூரமாக தொடர்களில் காட்டிப் பெண் இனத்தையே கேவலப்படுத்தி வருகின்றனர். ரவுடிகளை கதானகனாகச் சிதிறது வருகின்றனர் . சமூக அக்கறை உள்ளவர்கள் சமூகத்தைச் சீரழிக்கும் இந்தத் தொடர்களுக்கு எதிராக உரக்கக் குரல் கொடுக்க வேண்டும்.

தொலைக்காட்சி அறிவியல் கண்டுபிடிப்பு ஆனால் அதனை மூடநம்பிக்கைப் பரப்பவே பயன்படுத்துகின்றனர் .சாமியார் சகல சக்தி உள்ளவர் போல தொடர்களில் காட்டுகின்றனர். செய்தியில் சாமியாரின் பித்தலாட்டத்தை காட்டுகின்றனர் முரண்பாட்டைப் பாருங்கள் .

அயல் நாடுகளில் தொலைக்காட்சியை ஊறுகாய் போல் தொட்டுக் கொள்கின்றனர். நம் நாட்டில் தொலைக்காட்சியை சாப்பாடுப் போல சாப்பிடுகின்றனர்.

பணம் வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்கும் நடிகர்களை அவதாரப் புருசர்கள் போல்சித்தரித்துப் பித்தலாட்டம் செய்கின்றனர் .பாட்டுக்கு நடுவராக வரும் பாடகிகள் கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் வண்ணம் குத்தாட்டம் போடுகின்றனர் . குடும்பத்தோடு திரைப்படம் பார்க்க முடிய வில்லை .இப்போது தொலைக்காட்சியும் பார்க்க முடிவதில்லை.

ஆபாசத் திரைப்படப் பாடல்கள் ஒளிப்பரப்புவதர்கேன்றே தனி சேனல்கள் .ஆரசு தொலைக்காட்சியில் அன்று வெள்ளிக் கிழமை மட்டும் அரை மணி நேரம் ஒளியும் ஒளியும் ஒளிப்பரப்பானது. இன்று 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகின்றது. சமுதாயத்தைச் சீரழித்து வருகின்றனர்.

திரைப்படத்தில் வரும் வன்முறை வசனங்களை தொலைக்காட்சியில் விளம்பரத்தில் அடிக்கடி ஒளிப்பரப்பி இன்று குழந்தைகள் கூட பொருள் புரியாமல் கொன்னு புடுவேன் என்கின்றனர்.
 
அரசியல் விவாதங்கள் பொய்யை பறப்பும் களமாக மாறிவிட்டது. புழுகுமூட்டை கொட்டப்பட்டு மக்களின் உள்ளங்களை அழுக்காக்குவதற்கே துணை போகின்றன, 90 சதவீத விவாதங்கள்.
 
குடியும், விபச்சாரமும் நாகரிகம் எனும் பிம்பம் பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஊடுருவ கங்கணம் கட்டிக்கொண்டு பல சேனல்கள் அலைகின்றன. தங்கள் வருமானத்தை பெருக்கிக்கொள்ள எந்தவித இழிவான செயலுக்கும் செல்ல மக்களை மக்களின் நற்குணங்களை சீரழிப்பது போலவே பல நிகழ்ச்சிகள் அறங்கேற்றப்படுகின்றன.
 
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக சொல்லி உள்ளேன் இது போன்று ஏராளம் கெட்ட பின் விளைவுகள் தொலைக்காட்சிகளால் நிகழ்கின்றது.
 
இப்படிக்கு மனம் பதறும் ஒரு சாமானியன்….!!

-ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

55 − 54 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb