பத்திரிக்கை அலுவலக தாக்குதலுக்கும் பிரான்ஸ் முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: பிரான்ஸ் அதிபர்
பிரான்ஸிலுள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கும் பிரான்ஸ் முஸ்லிம்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான விசாரணை சரியான திசையில் சென்றுக் கொண்டிருப்பதாகவும் இது தொடர்பாக யாரும் எவ்வித குழப்பங்களிலும் ஈடுபட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
முகநூல் முஸ்லிம் மீடியா கருத்து :
சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக தாக்குதலை யார் செய்தது என்று முழுமையாக தெரியவில்லை என்றாலும் தண்டிக்கும் உரிமை உலகில் யாருக்கும் வழங்கப்படாததால் இந்த தாக்குதலை முஸ்லிம்களாகிய நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
அதேவேளையில் ஊடகங்களுக்கு என்று ஓர் தர்மம் இருக்கிறது, அந்த தர்மத்தை அவர்கள் காக்க வேண்டும்.
உலகிலேயே சிறந்த 10 தலைவர்களை தேர்வு செய்து அவர்களை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவில் சிலை வைத்தார்கள். அந்த 10 சிலைகளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் ஓர் சிலை வைத்தார்கள்.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் போராட்டத்தால் அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்ட்டது.
சார்லி ஹெப்டோ என்ற இந்த பத்திரிக்கை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக யுத்தம் தொடுத்தார்கள்.
அமெரிக்காவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுப்படுத்தி வெளியிடப்பட்ட திரைப்படமான இன்னொசன்ஸ் ஆப் முஸ்லிம் படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் கொந்தளித்த நேரத்தில் இந்த பத்திரிக்கை நபிகள் நாயகத்த்திற்கு உருவம் கொடுத்து கேலி சித்திரம் வரைந்து எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றியது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொச்சைப்படுத்தி ஒருமுறை இருமுறையல்ல பலமுறை கேலி சித்திரம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
(அவர்கள் வெளியிட்டிருந்த அந்த படத்தின் பிரதியை முகநூல் முஸ்லிம் மீடியாவின் டெலிகிராம் குழுமத்தில் வைத்துள்ளோம். தேவையானவர்கள் அங்கு வந்து பார்வையிடலாம், பார்வையிடுவதற்கு மட்டுமே அனுமதி பரப்புவதற்கு அல்ல)
அதுப்போல் பிரான்ஸ் பெண்களின் புர்கா பிரச்சினைக்கு இந்த பத்திரிக்கை ஓர் முக்கிய காரணம்.
இப்படி தொடர்ச்சியாக இந்த பத்திரிக்கை எல்லை மீறியதால் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரன்ஸ் ஃபேப்யூஸ் பத்திரிக்கையைக் கண்டித்து காட்டமான அறிக்கையையும் வெளியிட்டார்.
இது போன்ற கீழ்த்தரமான செயல்களை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லிப் பார்த்தார்.
அந்த பத்திரிக்கை எதையும் கேட்கும் நிலையில் இல்லை. பத்திரிக்கையின் சீஃப் எடிட்டர் கெரார் பியர்ட் அதற்கு பதிலளிக்கும் போது….
ஒரு பத்திரிக்கையாளனாக எவ்வாறு பிரான்ஸ் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். சட்டத்தை காபூலுக்காகவும், ரியாத்துக்காகவும் வளைத்தால் அதனை நாங்கள் மதிக்க வேண்டியதில்லை என்று திமிராக பதிலளித்தார்.
இப்படி தொடர்ச்சியாக ஒரு சமூகத்திற்கு எதிராக யுத்தம் தொடுத்து வந்ததால் கோபம் கொண்ட இயக்கத்தினர் பதில் தாக்குதல் தொடுத்தார்களா அல்லது இதை யூதர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்களா என்று சரியாக தெரியவில்லை.
யார் செய்திருந்தாலும் ஆயுதம் தூக்குவதை வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கமாகும்.
பாரிஸ் வணிக வளாகத்தில் தாக்குதல்: பொது மக்களின் உயிரைக் காப்பாற்றிய முஸ்லிம்
பாரிஸ் : பிரான்சில் கிழக்கு பாரிஸ்சில் உள்ள கோஷர் வணிக வளாகத்தில் கடந்த வெள்ளியன்று நுழைந்த தீவிரவாதி பலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான். அப்போது தீவிரவாதியிடமிருந்து பலரின் உயிரை கடையின் பணியாளர் காப்பாற்றியுள்ளார்.
மாலியை தாய்நாடாக கொண்ட 24 வயது முஸ்லிம் இளைஞரான லஸ்ஸானா பதிலி, சம்பவம் நடந்த வணிக வளாகத்தில் பணிபுரிந்து வருகிறார். வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியவுடன் கடைக்குள் இருந்த 15 வாடிக்கையாளர்களை அடித்தளத்திலுள்ள ஸ்டோர் ரூமிற்கு கொண்டு போய் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி சொல்லி பாதுகாப்பாக வைத்துள்ளார்.
நான்கு மணி நேரம் கழித்து தீவிரவாதிகள் சோதனையிட வந்து விடுவார்களோ என்ற பயத்தில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லிப்ட் வழியாக மாடிக்குப் போய் தப்பிக்கலாம் என்று அவர்களிடம் யோசனை கூறியுள்ளார். மக்கள் லிப்ட் இயங்கும் சத்தம் கேட்டு தீவிரவாதி தாக்குதல் தொடங்கி விட்டால் இறந்து விடுவோம் என்று பயந்து வர மறுத்ததால் தைரியமாக பதிலி மட்டும் தப்பித்து வெளியேறியுள்ளார்.
பின்னர் காவல்துறைக்கும் தீவிரவாதிக்கும் இடையே நடந்த தாக்குதலில் தீவிரவாதியும் 4 பிணையக் கைதிகளும் பலியாகினர். உயிர் பிழைத்த பிணையக் கைதிகள் ஓடி வந்து பதிலியைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினர். பதிலியின் வீரத்திற்குப் பரிசாக பிரான்சின் மிக உயரிய விருதான ‘லீஜியன் ஆப் ஹானர்’ அல்லது பிரெஞ்சு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.