அதிகரிக்கும் முதிர் இளைஞர்கள்!
கடந்த காலங்களில் குழந்தைகள் விடுமுறை விட்டால் தாத்தா வீட்டுக்கு சென்று தாத்தா, பாட்டியோடு ஆட்டம் பாட்டத்துடன் இருப்பார்கள் இனி வரும் காலங்களில் பேரக்குழந்தைகளோடு கொஞ்சி குழாவி மகிழ வருங்கால தாத்தாக்கள் அந்த உடல் நலத்தோடு இருப்பார்களா என்றால் நிச்சயம் சந்தேகம் தான்…
இதற்கு முந்தைய தலைமுறையினர் அதிகபட்சம் 25 வயதில் திருமணம் செய்து கொண்டனர் இதனால் தங்களது மகனுக்க 25 ஆகும் போது அவர்களுக்கு 50 வயதாகி இருக்கும். தன் மகனுக்கு 26 அல்லது 27ல் திருமணம் செய்து வைத்து தங்களது பேரன் பேத்திகளோடு நல்ல உடல் ஆரோக்கியத்தோடு விளையாட முடிந்தது. இளமைகாலங்களிலும் சந்தோசமாக வாழ முடிந்தது.
இப்போதைய இளைஞர்கள் படித்து முடித்தவுடன் வேலை எதிர்பார்க்கின்றனர் வேலை கிடைத்ததும் திருமணத்தை பற்றி யோசிப்பதில்லை கேட்டால் இன்னும் அதிக சம்பளத்தில் வேலையில் சேர வேண்டும் வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்தில் செட்டில் ஆக வேண்டும் பின்பு தான் திருமணத்தைப்பற்றி யோசிக்க வேண்டும் என்கின்றனர்.
இன்றைய இளைஞர் தனது இளமைக்காலங்களை சம்பாரிப்பதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் இது தவறில்லை ஆனால் சம்பாரிக்கும் வயதில் இளமையை தவறு விடுகின்றனர் என்பது தான் இதில் கவனிக்கவேண்டியது. இன்றைய கலாச்சாரத்தில் லிவிங்டுகெதர் அதிகம் இருப்பது சற்றே இளப்பாருகிறார்கள் என்று கூறலாம். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு இளைஞர்கள் வேலைக்கு அலையும் போதும் குறைந்த சம்பளத்தில் வேலையில் இருக்கும் போது அவர்களது இளமைக்காலங்கள் கட்டாயமாக அமுக்கப்படுகிறது.
கலாச்சார சீர்கேடு என்று நகரங்களிலும், இப்பெவெல்லாம் காலம் கெட்டுப்போச்சு என்று கிராமப்புறங்களிலும் சொல்பவர்கள் சரியான வயதில் திருமணம் செய்து வைத்தால் இப்பிரச்சனைக்கு ஓரளவு தீர்வுகாணலாம். ஆனால் அதை அனைவரும் செய்ய மறுப்பர் காரணம் இன்னும் செட்டில் ஆகவில்லை இன்னும் சம்பாரிக்க வேண்டும் என்ற கனவால் திருமணத்தைப்பற்றி யோசிப்பதில்லை.
என் நண்பன் இன்று சென்னையில் பெரிய கம்பெனியில் உயர்ந்த பதவியில் அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்குகிறான் எங்கள் ஊரைச் சேர்ந்தவன் அவன் வயது 33 இன்னும் திருமணம் ஆகவில்லை எப்ப கேட்டாலும் அவன் அப்பா சொல்வது பார்த்துகிட்டே இருக்கிறோம் ஒன்னும் செட்டாக மாட்டிங்கு அவனுக்கு செவ்வாய் இல்ல சுத்த ஜாதகம் எப்படியும் இன்னும் 2 வருடத்தில் முடித்துவிடுவேன் என்கிற அவருக்கு வயது 65. அவனைக்கேட்டால் என்னடா செய்யறது வீட்ல பார்த்து முடிக்கட்டும் என்று இருக்கிறேன் என்கிறான். இவனைப்போல் முதிர்கண்ணன்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர்.
பெண்களில் 27 வயதுக்கு மேல் திருமணம் செய்யும் பெண்கள் அதிகம் பேர் சிசேரியன் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர் என்று ஒரு கருத்து கணிப்பு கூறுகிறது. முன்னர் சரியான நேரத்தில் பெண்ணுக்கு திருமணம் செய்யும் போது அவர்களது உடல் அமைப்பில் மாற்றம் வர வர குழந்தை பேரு இயற்கையானதாக இருக்கிறது. தற்போது தான் சிசேரியன் பழக்கம் அதிக அளவில் உள்ளது கடந்த காலங்களில் 5, 6 குழந்தை பெற்றவர்கள் எல்லாம் இயற்கையாகத்தான் குழந்தை பெற்றுள்ளனர். தற்போது அது குறைந்து வருகிறது.
வயது அதிகமாக திருமணம் செய்வதால் குழந்தை இல்லாமல் தவிப்பர்கள் இன்று ஏராளம் இதற்கான மருத்துவமனைகளில் இன்று கூடும் கூட்டத்தை கண்டாலே தெரியும்.
30 வயதில் இருந்து 35 வயதுக்குள் தான் இன்று அதிகம் திருமணம் செய்கின்றனர் அவ்வாறு செய்யும் போது அவர்களது வாழ்க்கையில் பாதி வருடங்கள் முடிவடிந்து விடுகிறது நம் ஆட்களின் சராசரி ஆயுட்காலம் 65 என்கின்றனர். பாதி வாழ்க்கையில் திருமணம் செய்து தன் மகன் அல்லது மகளுக்கு திருமணம் முடிக்கும் போது அவர்களுக்கு 65 வயதாகிவிடுகிறது தங்கள் பேரன் பேத்திகளோடு அந்த கால தாத்தாக்கள் போல இந்தக்கால, வருங்கால தாத்தாக்கள் இருப்பார்களா என்றால் நிச்சயம் சந்தேகம் தான்…
நிச்சயம் இன்று விற்கும் விலைவாசிக்கு நல்ல சம்பாரித்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்பது நன்றாக தெரியும் ஆனால் அந்த 24 வயதில் இருந்து 30 வயதுவரையான இளமைக்காலங்களை இழக்கின்றனர் என்பது தான் என் கருத்து.
பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாரிக்கலாம் ஆனால் வயது???????