Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மோடி அரசின் முடிவு இந்திய வெளியுறவு கொள்கையின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் முயற்சியே!

Posted on December 25, 2014 by admin

பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேலை ஆதரிக்கும் மோடி அரசின் முடிவு இந்திய வெளியுறவு கொள்கையின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் முயற்சியே!

[ இந்தியா இதுநாள்வரை பாலஸ்தீனத்துக்கு ஆயுத உதவியோ, உணவு அல்லது மருத்துவ, கட்டுமான உதவியோ செய்யவில்லை.

இந்தியாவின் 130 கோடி மக்களின் தார்மீக ஆதரவு ஐ.நா.வில் இருந்ததே போதும். ஆனால், யூத மதவாதிகளின் கொலைக்கூடமான இஸ்ரேலை இந்தியா நிபந்தனையின்றி ஆதரிக்கவேண்டும் என்று அங்கு சென்ற ராஜ்நாத் சிங்குக்கு இஸ்ரேல் அமேரிக்கா மூலம் நெருக்கடி கொடுத்திருக்கவேண்டும்.

1976 வரை இனவாத இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல முடியாது. இப்போதோ, இஸ்ரேலின் இன, மதவெறி இங்கே மோடியின் அழிவுக் கொள்கையால் நம் நாட்டை அழிக்கப்போவது படு நிச்சயம்

இன்று இஸ்ரேலிடம் இந்தியாவைவிட அதிகமாக அணுவாயுதங்கள் உள்ளன. மோடியின் பா.ஜ.க. அரசாங்கம் இஸ்ரேலின் இன்னொரு கோர முகத்தை உணராமல் அதனோடு கொள்ளும் நட்புறவு, இறுதியில் இந்தியாவின் தலையில்தான் பேரிடியாக இறங்கப்போகிறது. மோடியின் அரசாங்கம் இப்போதே விழித்தெழுவது காட்டாயம். இல்லையேல் விழிப்பதற்கு நமக்கு விழியே இராது. அதுதான் இஸ்ரேல்.

இஸ்ரேலுக்கு இப்போது தேவை இந்தியாவின் “இஸ்ரோ” ஏவுகணைத் தொழில் நுட்பம். பொறுத்திருந்து பார்ப்போம். “இஸ்ரோ” கூடிய சீக்கிரம் இஸ்ரேலின் “விஞ்ஞானிகளால்” நிரம்பி வழியும். உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை உளவு அமைப்புக்களின் உதவியால் உற்றறிந்தபிறகு, இந்தியாவுக்கே வேட்டு வைக்கும் வேலையை இஸ்ரேல் அதன்பின் சாஸ்திரப்படி தொடங்கும். இன்று இஸ்ரேலுக்கு வால்பிடிக்கும் இந்தியர்கள் அன்று ஒன்றும் செய்யவே முடியாது. Dr. Vanunu என்பவர் இஸ்ரேலின் இத்தகைய கீழறுப்பு செயல்பாடுகளை இஸ்ரேலின் நெகெவ் பாலைவனத்திலுள்ள அணு உலைகளில் பணியாற்றியபோதே கண்டறிந்து உலகை எச்சரித்தவர்.]

இஸ்ரேலின் நட்பினால் உலக நாடுகளில் அரசியல் தலைவர்கள் அவ்வப்போது படுகொலை செய்யப்படுவதுண்டு. இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்காவும் அதற்கு விதிவிலக்கல்ல. இப்போது இந்தியா எண்ணிப்பாராமல் இஸ்ரேலுடன் கொண்டுள்ள உறவினால் என்னென்ன நிகழுமோ? நிகழ நிகழத்தான் இஸ்ரேலின் இரத்தக் கறை படிந்த முகம் பா.ஜ.க. அரசுக்குத் தெரியவரும்.

அதற்குள் நம் நாட்டின் நிர்வாக அமைப்பினுள் 99% இஸ்ரேலின் உளவுப்படையினர் அசைக்கவே முடியாதவாறு ஆக்கிரமித்திருப்பார்கள். அரசியல் களையெடுப்பு இஸ்ரேலால் கன கச்சிதமாக நடைபெறும். எந்த மஹானுபாவர் இந்தியப் பிரதமராக வந்தாலும், முடிவு யாசர் அராபத் முடிவேதான். எப்படி இறந்தார் என்பது அந்த “ய்ஹோவாவுக்கே” வெளிச்சம்!

கொஞ்சம் சிந்தியுங்கள். கியூபாவுக்கு எதிராக மிசைல் குறிவைத்த கென்னடியை லீ ஹார்வி ஆஸ்வால்டு சுட்டுக் கொன்றான். அவன் கம்யூனிஸ்ட் என்றார்கள். ஆனால், லீ ஹார்வி ஆஸ்வால்டை ஜேக் ரூபி ஏன் சுட்டான்? ஏன் கொன்றான்? யார் இந்த ஜேக் ரூபி? அவனுக்கும் ஆஸ்வால்ட் அல்லது கென்னடிக்கும் என்ன தொடர்பு? அதற்குக் காரணத்தை இன்றுவரை அமெரிக்க மக்கள் அறியாதபடி பதுக்கியிருப்பது இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பு.

1793 ஆம் ஆண்டில் கட்டபொம்மன் என்னும் பாளையக்கரர் தொடங்கிய விடுதலைப் போர் 1947 வரை நீடித்தது. இடைப்பட்ட 150 ஆண்டுகளாக நாம் நம்முடைய தேசவிடுதலைக்காகப் போராடினோம். உயிரை ஈந்தோம். நம் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அதை இஸ்ரேல் நாடு, இன்று பாலஸ்தீனத்தில் செய்துவருகிறது. இப்போதுதான் பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளன. இந்த நிலையில், வரலாறை மறந்த மோடியின் பா.ஜ.க. அரசு புரியும் அநியாயமான பாலஸ்தீன எதிர்ப்பு இந்தியாவின் உலகளாவிய மதிப்பை உருக்குலைக்கும்.

இந்தியா இதுநாள்வரை பாலஸ்தீனத்துக்கு ஆயுத உதவியோ, உணவு அல்லது மருத்துவ, கட்டுமான உதவியோ செய்யவில்லை. இந்தியாவின் 130 கோடி மக்களின் தார்மீக ஆதரவு ஐ.நா.வில் இருந்ததே போதும். ஆனால், யூத மதவாதிகளின் கொலைக்கூடமான இஸ்ரேலை இந்தியா நிபந்தனையின்றி ஆதரிக்கவேண்டும் என்று அங்கு சென்ற ராஜ்நாத் சிங்குக்கு இஸ்ரேல் அமேரிக்கா மூலம் நெருக்கடி கொடுத்திருக்கவேண்டும். 1976 வரை இனவாத இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல முடியாது. இப்போதோ, இஸ்ரேலின் இன, மதவெறி இங்கே மோடியின் அழிவுக் கொள்கையால் நம் நாட்டை அழிக்கப்போவது படு நிச்சயம்

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் தாலிபான் மற்றும், இப்போது சிரியா, இராக்கில் தங்களை “இஸ்லாமிக் ஸ்டேட்” என்று கூறிக்கொண்டு காட்டுமிராண்டிகளைப்போல் மக்களைக் கொன்று குவிக்கும் ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளுக்களோடு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை இணைத்துப் பேசுவது முற்றிலும் தவறு. ஏறத்தாழ இந்தியா சுதந்திரப் போர் நடந்துவந்த காலத்தில்தான் பிரிட்டனின் ஆளுமையில் இருந்த பாலஸ்தீனத்துக்குள் ஐ.நா., இஸ்ரேல் என்ற நாட்டை வலுக்கட்டாயமாக நிறுவியது. போலந்து நாட்டிலிருந்து அமெரிக்காவில் திரட்டிய நிதியில் பேரழிவு ஆயுதங்களைக் கப்பலில் கொண்டுவந்து எருசலேம் நகரைத் தரைமட்டமாக்கியது இஸ்ரேலின் இர்குன், ஹகானா “mercineries” எனப்படும் கொலைக்கும்பல்.

இப்போதும் இஸ்ரேல், கிழக்கு ஜெருசலேமை விடாப்பிடியாக ஆக்கிரமித்துள்ளது. காசா குருநிலப் பகுதி, மேற்குக் கரை WEST BANK ஆகிய பாலஸ்தீனப் பகுதிகளிலிருந்து இன்றும் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.இஸ்லாமியத் தீவிரவாதம் நேற்று முளைத்த உலகளாவிய விசக்களை. பாலஸ்தீன விடுதலையோ 66 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட ஒரு உரிமை இயக்கம். அது இதுவல்ல.

பாலஸ்தீன விடுதலைப் போரை இஸ்லாமிய தீவிரவாதத்துடன் ஒப்பிடுவதோ அவ்விரண்டுக்கும் தொடர்புள்ளது என்று சொல்வதோ, நாசிகளின் ஜெர்மனியோடு பாலகங்காதரத் திலகர், நேதாஜி போன்ற சுதந்திர விடுதலைத் தியாகிகளோடு ஒப்பிடுவதற்கே நிகர். பாலஸ்தீன விடுதலை வரலாறு ஒரு நாட்டின் சுதந்திரப் போர் வரலாறு. இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு அமைந்த பல்வேறு காரணங்களுள் வேண்டுமானால் இன்னொன்றாக இஸ்ரேல் பாலஸ்தீனியர் மீது புரியும் கொலைவெறித் தாக்குதல்கள் கருதப்படலாம்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலை எதிர்த்து அரபு முஸ்லீம்கள் மட்டும்தான் போராடுகிறார்கள் என்று கருத வேண்டாம். கிறிஸ்துவர்களே அதிகம் போராடுகின்றனர். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபாத்கூட ஒரு கிறிஸ்துவ நம்பிக்கையாளர். ஆண்டுதோறும் அவர் பெத்லேஹெமில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய உண்மையை எத்தனை கிறிஸ்துவர்கள் அறிவர்? அனால், இஸ்ரேலில் கிறிஸ்துவர்கள் மிருகங்களைப்போல் வேட்டையாடப் படுகின்றனர். யூதராய்ப் பிறந்த யோவான், ஏசுகிறிஸ்து, மோசஸ் போன்றோரைக் கொன்றது முஸ்லீம்கள் உட்பட வேறு எவருமில்ல. அவர்களைக் கொன்றது யூத இஸ்ரேலியர் என்று உணர்ந்தாலே இஸ்ரேலின் கோர முகம் தெரியவரும்.

இஸ்ரேலுக்கு இப்போது தேவை இந்தியாவின் “இஸ்ரோ” ஏவுகணைத் தொழில் நுட்பம். பொறுத்திருந்து பார்ப்போம். “இஸ்ரோ” கூடிய சீக்கிரம் இஸ்ரேலின் “விஞ்ஞானிகளால்” நிரம்பி வழியும். உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை உளவு அமைப்புக்களின் உதவியால் உற்றறிந்தபிறகு, இந்தியாவுக்கே வேட்டு வைக்கும் வேலையை இஸ்ரேல் அதன்பின் சாஸ்திரப்படி தொடங்கும். இன்று இஸ்ரேலுக்கு வால்பிடிக்கும் இந்தியர்கள் அன்று ஒன்றும் செய்யவே முடியாது. Dr. Vanunu என்பவர் இஸ்ரேலின் இத்தகைய கீழறுப்பு செயல்பாடுகளை இஸ்ரேலின் நெகெவ் பாலைவனத்திலுள்ள அணு உலைகளில் பணியாற்றியபோதே கண்டறிந்து உலகை எச்சரித்தவர்.

இன்று இஸ்ரேலிடம் இந்தியாவைவிட அதிகமாக அணுவாயுதங்கள் உள்ளன. மோடியின் பா.ஜ.க. அரசாங்கம் இஸ்ரேலின் இன்னொரு கோர முகத்தை உணராமல் அதனோடு கொள்ளும் நட்புறவு, இறுதியில் இந்தியாவின் தலையில்தான் பேரிடியாக இறங்கப்போகிறது. நம் வெளியுறவுத் துறையில் ஏகப்பட்ட இஸ்ரேலிய உளவாளிகள் தங்களுடைய கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டனரோ என்று ஐயுற வேண்டியுள்ளது. மோடியின் அரசாங்கம் இப்போதே விழித்தெழுவது காட்டாயம். இல்லையேல் விழிப்பதற்கு நமக்கு விழியே இராது. அதுதான் இஸ்ரேல்.

இஸ்ரேல் எள்ளளவு பாலஸ்தீனியர் தலைவர்களை ஈவு இரக்கமில்லாமல், ஈனதனமாக கொன்றிருக்கிறது என்று உங்களுக்கு தெரியாது. சிங்களவர்கள் தமிழர்களை கொன்றதை விட மிக கொடூரமாக. மொசாத் என்ற உலகின் வலுவான் உளவு அமைப்பு. ஒரு உதாரணம் எந்த அளவு இஸ்ரேல் உளவு அமைப்புகள் ஈவு இறக்கம் இல்லாமலா தங்கள் அரசியல் எதிரிகளை கொள்வார்கள் எபதற்கு இதோ. சமீபத்தில் வெளிநாட்டில் வாழும் முக்கியமான பாலஸ்தீனியா தலைவரை சத்தமில்லாமல் துபையில் வைத்து கொன்றது. எப்படி என்றா? அவருடய ஆன்லைன் பயண விபரம் ஹாக்கிங் மூலம் திருடி அதன் மூலம் துப்பு அறிந்து, அவர் தங்கி இருந்த துபாய் ஹோட்டல் ரூம் கதவ்வின் டிஜிட்டல் சிஸ்டத்தை சத்தமில்லாம் செய்லளிளக்க செய்து, ரூம் பாய் சாப்பாடு கொண்டு வரும் அந்த 30 நிமிடங்களுக்குள் அவரை கொடூரமாக கொலை செய்து விட்டு, தப்பி ஓடி விட்டது மொசாத். துபாய் போலீஸ் கண்களை கூட நம்ப முடியவில்லை. இஸ்ரேலிய தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்காதீர்கள். உலகம் வெறுக்கும் ஒரு பயங்கரவாத நாடு.

– தி இந்து வாசகர் செ.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

72 − 69 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb