நீங்க ஏன் இன்னும் இப்படி இருக்கீங்க பெண்களே!
[ “நீங்க ஏன் இன்னும் இப்படி இருக்கீங்க பெண்களே! உங்க உடையலங்காரமும் முக அலங்காரமும் யாருக்கு! யாரை மயக்க இந்த பெருமை வேஷத்தை போட்டு வருகிறீர்கள்?
சத்தியமாக உங்கள் கணவன்மார்கள் இப்படி நீங்க கண்டமேனிக்கு காசை அழிப்பதையும் பிறர் மெச்ச உடையணிந்து போலி பணக்கார பகட்டு காட்டுவதையும் விரும்பவே மாட்டார்கள்,
அப்படி நீங்க செய்யும் போலித்தனங்களை ஆர்வமூட்டக்கூடியவராக ஒரு ஆண் இருந்தாரேயானால் நிச்சயம் அவர் போலி மனிதராகத்தான் இருப்பார். ஒரு நாள் இல்லையேல் உங்களைவிட ஒரு போலி அழகியைக்கண்டால் அவளிடம் மயங்கிவிடுவார் (நவ்துபில்லாஹ்),
நல்ல கணவன் இதையெல்லாம் கண்டிப்பான். கண்ட பெண்களோடு கண்ட நேரத்தில் கண்ட இடத்தில் ஊர் சுற்றுவதை அனுமதிக்கமாட்டான். காரணம் அவன் மனைவி அவனுக்கு மட்டும் அழகாய் இருந்தால் போதும் என உணர்வுப்பூர்வமாக நினைப்பான்.
அதேபோல உங்களில் எத்தனைபேர் அவரவர் கணவர்மார்களின் விருப்பத்திற்கு மாறாக நடப்பீர்களோ தெரியவில்லை, நன்மையான காரியங்களில் கணவர்மார்களின் அறிவுரையையும் விருப்பங்களையும் புறந்தள்ளும் பெண்களை அல்லாஹ் விரும்பமாட்டான் அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உரியவர்கள்.”]
நீங்க ஏன் இன்னும் இப்படி இருக்கீங்க பெண்களே!
வீட்டில் ஒரு விசேசம் என்பதனால் குடும்பத்து பெண்கள் அமர்ந்து யார் யார் என்ன புடவை வாங்கினோம் நகை வாங்கினோம், வாட்ச், செருப்பு, ஹேண்ட்பேக், க்ளிப், ப்ரூச், ஸ்கார்ப், புர்கா என எது எது எங்கே வாங்கினோம் என்று விலாவாரியாக பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது சில சிறுவயது பெண்கள் கூறினார்கள், என்னதான் டி.நகர், வண்ணாரப்பேட்டை, சவுக்கார்பேட்டை, புரசைவாக்கம், ஸ்பென்சர், அடையார், ப்ளவர் பஸார் என்று சுத்தி சுத்தி பொருள் வாங்கினாலும் நம்ம லோக்கல் கடைத்தெருவுல ஒரு “லாஸ்ட் மினிட் பர்ச்சேஸ்” பண்ணுனாதான் மனசே ஆறுது இல்லைன்னா நாம எதையோ மிஸ் பண்ணிட்டோம்னு தோணுது என்று கூறினார்கள் ,அதற்கு சில ஆண்டி வயது பாட்டி வயது பெண்களும் ஆமாம் போட்டுக்கொண்டிருந்தார்கள்!
இதனை மிக கவனமாக கேட்டுக்கொண்டிருந்த ஒரு அக்கா மெதுவாக கூறினார் – “உலகில் அல்லாஹ்விற்கு மிகப்பிடித்த இடம் பள்ளிவாயில்கள் அதேபோல அல்லாஹ்விற்கு மிகப்பிடிக்கவே பிடிக்காத இடம் கடைத்தெருக்கள்” -இதனை அறிவிப்பவர் அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு கித்தாப் திர்மிதி -1190″ என்றார்.
உண்மையில் இந்த ஹதீதை சொன்ன அந்த அக்கா, அதிக அளவு கடைதெருக்களில் என்றுமே உலா வராதவர், கணவர் எடுத்து கொடுக்கும் உடையை உடுத்திக்கொள்வார், கணவர் எடுத்து தரும் தோது இல்லாதபட்சத்தில் அவரே எடுப்பார்.
பிறகு அவர் சொன்னார், “நீங்க ஏன் இன்னும் இப்படி இருக்கீங்க பெண்களே! உங்க உடையலங்காரமும் முக அலங்காரமும் யாருக்கு! யாரை மயக்க இந்த பெருமை வேஷத்தை போட்டு வருகிறீர்கள்? சத்தியமாக உங்கள் கணவன்மார்கள் இப்படி நீங்க கண்டமேனிக்கு காசை அழிப்பதையும் பிறர் மெச்ச உடையணிந்து போலி பணக்கார பகட்டு காட்டுவதையும் விரும்பவே மாட்டார்கள்,
அப்படி நீங்க செய்யும் போலித்தனங்களை ஆர்வமூட்டக்கூடியவராக ஒரு ஆண் இருந்தாரேயானால் நிச்சயம் அவர் போலி மனிதராகத்தான் இருப்பார். ஒரு நாள் இல்லையேல் உங்களைவிட ஒரு போலி அழகியைக்கண்டால் அவளிடம் மயங்கிவிடுவார் (நவ்துபில்லாஹ்).
நல்ல கணவன் இதையெல்லாம் கண்டிப்பான். கண்ட பெண்களோடு கண்ட நேரத்தில் கண்ட இடத்தில் ஊர் சுற்றுவதை அனுமதிக்கமாட்டான். காரணம் அவன் மனைவி அவனுக்கு மட்டும் அழகாய் இருந்தால் போதும் என உணர்வுப்பூர்வமாக நினைப்பான்.
அதேபோல உங்களில் எத்தனைபேர் அவரவர் கணவர்மாரகளின் விருப்பத்திற்கு மாறாக நடப்பீர்களோ தெரியவில்லை, நன்மையான காரியங்களில் கணவர்மார்களின் அறிவுரையையும் விருப்பங்களையும் புறந்தள்ளும் பெண்களை அல்லாஹ் விரும்பமாட்டான் அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உரியவர்கள்.
என் அறிவுரை என்னவெனில் நீங்க பட்டு உடுத்தினாலும் உடுத்தாவிட்டாலும் நகை போட்டாலும் போடாவிட்டாலும் மேக்கப்பை அப்பினாலும் அப்பாவிட்டாலும் நம்மைச்சேர்ந்த மக்களுக்கு நாம் யார், யார் வீட்டு பெண், யாருக்கு வாக்கப்பட்டோம் சமூகத்தில் நம் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் என்ன மரியாதை உண்டு நம் வாழ்க்கைத்தரம் என்ன நம் வசதிவாய்ப்புகள் என்ன என்று நன்றாகவே தெரியும் பிறகு யாரை ஏமாற்ற இந்த பகட்டு படோபகாரம் என்று சொன்னாரே பார்க்கனும் எல்லோரும் அவரை வேற்றுகிரகவாசி போல பார்த்துக்கொண்டிருந்தனர்.
இந்த ஹதீதை பலமுறை நான் கேட்டிருக்கிறேன் ஆனால் இந்த குறிப்பிட்ட இடத்தில் நெற்றிப்பொட்டில் அடித்தால் போல அந்த அக்கா சொன்ன விதமும் அது தகுதியான ஒரு நபர் மூலம் நமக்கு உணர்த்தப்பட்டதும் என்னை திடுக்கிட வைத்தது
இனி நாமும் கடைத்தெருக்களை நாடி போகக்கூடாது என நினைத்துக்கொண்டேன் – இன்ஷா அல்லாஹ்!! அல்லாஹ் மிக அறிந்தவன் !!
-Rosy S Nasrath