Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பயனற்றவைகளால் என்ன பயன்?

Posted on December 21, 2014 by admin

பயனற்றவைகளால் என்ன பயன்?

இஸ்லாம் மனித குலத்திற்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட சத்திய மார்க்கமாகும். இம்மார்க்கத்தின் வழிகாட்டுதல்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல! மாறாக உலகில் வாழும் அனைத்து மக்களுக்குமானதாகும். இதன்படி உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும், நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற விருப்பம் இருக்கின்றது. இதில் யாரும் விதிவிலக்கு இல்லை! என்றாலும் பெருவாரியான மக்கள் தங்களின் மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டு, வேதனைக்குரிய வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன! அக்காரணங்களை கண்டறிந்து கலைந்து விட்டோமெனில் அனைவரும் மகிழ்ச்சியான, பொருளுள்ள வாழ்க்கையை வாழ முடியும்.

இதன்படி மனிதன் குற்றஉணர்வில்லா வாழ்வை வாழ்வதற்கு இஸ்லாம் போதிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. அவற்றில் முக்கியமான ஒன்றுதான் நமக்குத் தேவை இல்லாத விஷயங்களை விட்டும் விலகி இருப்பதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : தேவையற்றவைகளை விட்டுவிடுவது ஒரு மனிதரின் இஸ்லாமிய அழகிய (பண்பில்) உள்ளதாகும். (திர்மிதி : 2240)

1. இந்த ஹதீஸில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரு அடிப்படை விதிகள் கூறுப்பட்டுள்ளன. அவற்றில் முதலாவது உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, பக்குவப்படுத்த வேண்டும். அதாவது தேவையற்ற விஷயங்களை அகற்ற வேண்டும். மற்றொன்று தேவையான விஷயங்களை எடுத்து நடக்க வேண்டும் என்பதாகும். இதில் தேவையற்றவைகள் என்பதில்

1. தேவையற்ற சிந்தனைகள்,

2. தேவையற்ற சொற்கள்,

3. தேவையற்ற செயல்கள் என பலவும் இடம் பெறும்.

இவற்றில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதன்படி இவற்றில் முதலாவது, சிந்தனை.

சிந்தனை என்பது அல்லாஹ் நமக்கு வழங்கிய மிகப்பெரும் அருட் கொடையாகும். ஏனெனில் இதனை மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ளான். இவ்விரண்டையும் தவிர்த்து மற்ற ஏனைய படைப்புகளுக்கு இத்திறன் வழங்கப்படவில்லை. அல்லாஹ்வையும், அவனது ஆற்றலையும் விளங்கிக் கொள்வதற்கு இச்சிந்தனைத் திறனே மிகமுக்கிய ஆதாரமாகும்.

ஓர் இளைஞராக இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதற்கொண்டு மற்ற அனைத்து இறைத் தூதர்களும், சாமான்யர்களும் அன்று முதல் இன்று வரை அல்லாஹ்வின் சத்தியக் கொள்கையை தேர்வு செய்வதற்கு இச்சிந்தனையே காரணமாக இருந்து வந்துள்ளது. சிந்தனை நமக்கு இல்லையாயின் மற்ற விலங்குகளுக்கும் நமக்குமிடையே வித்தியாசங்கள் இல்லாமல் போய்விடும்.

எனவேதான் அல்லாஹ் மனிதர்களை நோக்கி…

(நபியே!) நீர் கூறுவீராக ”எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?”

அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா?

இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள். இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா?

இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா?

(இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவேயாகும். கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்?

மேலும், தன்னுடைய ”ரஹ்மத்” என்னும் அருள் மாரி(மழை)க்கு முன்னே நன்மாராயமா (கூறுபவையா) க காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? – அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.

முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா?

(நபியே!) நீர் கூறுவீராக ”நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள். “(அல்குர்ஆன். 27: 59 – 64) என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்து, அதற்கான விடைகளை சிந்தித்து முடிவு செய்ய அல்லாஹ் வலியுறுத்துகின்றான்.

ஒருவன் நடுநிலையோடு அல்லாஹ் முன் வைக்கும் கேள்விகளுக்கான பதிலை அறிந்து கொள்ள முற்பட்டால் அவனது ஆய்வின் முடிவில் அத்துனை கேள்விகளுக்கும் ”அல்லாஹ்” என்ற பதிலையே முடிவு செய்வான். அப்படி முடிவு செய்து அதனை ஏற்றுக் கொண்டு, அவனது வாழ்வில் செயல்படுத்தினால் அவனுக்கு இறை திருப்தியும், சுவனமும் நிச்சயம் கிடைக்கப் பெறும். இப்பேற்பட்ட சிந்தனையை இன்றைய இளம் தலைமுறையினர் முதற்கொண்டு அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய மற்றவர்களும் வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்.

பள்ளிக்கூடத்திலும், கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள் படித்து, அதன் படி பல ஆய்வுகளை மேற்கொண்டு தங்களுக்கும், இச்சமுதாயத்திற்கும் நன்மை செய்ய வேண்டியவர்கள். இந்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்ற வேண்டியவர்கள். ஆனால் என்ன நடக்கின்றது. அவர்களின் சிந்தனைகளை மழுங்கடிக்கச் செய்கின்ற சினிமாக்களை கண்டுகளிக்கின்றனர். இதனைப் பார்க்கும் ஒவ்வொரு மாணவனும் ஏதோ பொழுபோக்கிற்காகவும், சந்தோஷத்திற்காகவும் பார்ப்பதாக அப்போது நினைக்கின்றனர். ஆனால் அவர்களின் உடலின் பருவ வயதையுடையவர்களுக்கு ஏற்படுகின்ற ஹார்மோன் மாற்றங்களால் சினிமாவில் காட்டப்படும் காதல் கதைகள், பாடல் வரிகள், இசைகள், வசனங்கள், சண்டைக் காட்சிகள் என அத்துனையும் அவர்களின் உள்ளங்களை அலைக்கழின்றன. உணர்ச்சியால் தூண்டப்படும் அவர்கள் ஒரு கட்டத்தில் தங்களையே அப்படத்தின் கதாபாத்திரங்களாக எண்ணுகின்றார்கள். பிறகு அதன் தொடர் கற்பனையிலேயே மிதக்கின்றார்கள். பின்னர் அதனை தங்களின் வாழ்வில் நிஜத்திலேயே நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று துடிக்கின்றார்கள்.

இதன் தொடரில் ஏதேனும் ஒரு பெண்ணை காதலித்து, அதை நோக்கியே தங்களின் சிந்தனைகளை நகர்த்தி முடிவில் படிப்பை வீணடித்து காதலில் தோல்வி அடைந்து, தற்கொலை செய்து கொள்கின்றனர். அல்லது வாழ்க்கையின் பொருள் புரியாமல், வாழவேண்டும் என்ற கட்டாயத்திற்காக வாழ்கின்றனர். இன்னும் பலர் தாங்கள் செய்து விட்ட காரியங்கள் யாவும் தவறு என்பதை வாழ்க்கையை வாழ ஆரம்பித்த பின்னரே புரிந்து கொள்கின்றனர். அதற்குள் அவர்களின் வாழ்வில் எதுவெல்லாமோ நடந்து விடுகின்றன. பின்னர் கல்லூரிப்படிப்பை மீண்டும் தொடரலாம் என அவர்கள் விரும்பினாலும் அது அவர்களால் முடியாமலேயே போய் விடுகின்றது. இதற்குக் காரணம் படிக்க வேண்டிய காலத்தில் படிக்காமல் சிந்தனையைச் சிதைக்கும் சினிமா போன்றவைகளில் தங்களின் கவனத்தை ஈடுபடுத்தியதுதான்.

மாணவர்களின் சிந்தனைத் திறனை சினிமா மழுங்கடிக்கின்றது என்றால் குடும்பப் பெண்களின் சிந்தனைகளை தொடர்கள் – சீரியல்கள் சீரழிக்கின்றன. பல குடும்பத்துப் பெண்கள் நேரப்போக்குக்காகவே தாங்கள் சீரியல்களைப் பார்ப்பதாக நினைத்துக் கொண்டு தங்களை அறியாமலேயே கதைக்குள் தங்களை புகுத்தி விடுகின்றனர். இதனால் முஸ்லிம் பெண்கள் செய்ய வேண்டிய குர்ஆனை ஓதுதல், திக்ர் செய்தல், மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளுதல், தொழுகையை ஈடுபாட்டுடன் தொழுதுவருதல், கணவனுக்கு மனதார பணிவிடை செய்தல், குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து, அவர்களின் முதல் ஆசிரியையாக தங்களின் பங்களிப்பை வழங்குதல் போன்ற அனைத்துத் துறைகளிலும் கோட்டை விட்டுவிடுகின்றனர்.

அவர்களைப் பொறுத்த வரை குர்ஆனை ஓதுவதற்கோ, மற்ற அமல்கள் செய்வதற்கோ நேரமில்லை, அப்படியே இருந்து, அவற்றைச் செய்ய முற்பட்டாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியவில்லை. காரணம் அவைகள் இருக்க வேண்டிய உள்ளத்தில் மற்றவைகளுக்கு இடம் வழங்கி விட்டதுதான். இதனால் மறுமையில் வெற்றியை அடைய முழு மனத்துடன் அமல்கள் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர்.

இந்நிலைக்கு அடிப்படைக் காரணம் மார்க்கம் தடை செய்துள்ள சீரியல்களின் தாக்கம் அல்லாமல் வேரெண்ண இருக்க முடியும்? சினிமாவையும், சீரியல்களையும் எடுத்துக்காட்டாகவே கூறியுள்ளேள். இதுபோக நமது சிந்தனைகளை சிதைக்கின்ற பல்வேறு விஷயங்களும் உள்ளன. எனவே சிந்தனைகளில் தேவையில்லாதவைகளைப் உள்ளத்தில் புகுத்தினால் தேவையானவைகளைப் புகுத்த முடியாமல் போய்விடும். பின்னர் இதுவே நம்முடைய தோல்விக்கு வித்திட்டு விடும்.

இரண்டாவது, தேவையற்ற சொற்களாகும். அல்லாஹ் கூறுகின்றான் : ”(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எவ்வித நன்மையும் இல்லை. ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.” (அல்குர்ஆன். 4 : 114)

இவ்வசனத்தில் மனிதர்கள் பேசுகின்ற அநேகப் பேச்சுக்கள் அவர்களுக்கு நன்மையைத் தேடித்தருபவையாக இருக்கவில்லை. மாறாக அவை வீணானவைகளாகவே உள்ளன என்பதை அல்லாஹ் விளக்குகின்றான். இதன்படி நாம் பேசக்கூடிய பேச்சுக்கள் நம்முடைய இம்மை மற்றும் மறுமை வாழ்விற்கு ஏதாவது ஒரு வகையில் நன்மையை அளிக்கத் தகுதியுடையவையாக இருக்க வேண்டும். பயனற்ற பேச்சுக்களை நாம் தவிர்க்க வேண்டும் என்பதை இவ்வசனத்தின் மூலம் அறியமுடிகின்றது.

இதே கருத்தை வலியுறுத்தி 23 : 3 வது வசனத்தில் : அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள் என்றும் அல்லாஹ் கூறுகின்றான். ஆனாலும் நடைமுறை வாழ்க்கையில் என்ன நடக்கின்றது என்றால் நம் மக்களில் பெருவாரியானவர்கள் மற்றவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளில் தலையிடுவது, கேலி செய்வது, மற்றவர்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றியும், அவர்கள் செய்த தவறுகளைப் பற்றியுமே மணிக்கணக்கில் விவாதிக்கின்றனர். இவ்விவாதத்தால் மற்றவர்களுக்கு பலன் கிடைப்பதை விட அவர்களின் குடும்பத்திலோ, அல்லது சமூகத்திலோ பல தீமைகள்தான் விளைகின்றன. இதுபோக மார்க்கம் பேசுவோரில் பலரும் நேரடியாகவும், வலைத்தளங்கள் மூலமாகவும் அர்த்தமற்ற தர்க்கங்களை செய்கின்றனர். இவையாவும் தேவையற்ற காரியங்களேயாகும்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும் அல்லது வாய்மூடி இருக்கட்டும். அல்லாஹ் கூறுகின்றான்.: மனிதன் எச்செயலை சொல்லை மொழிந்தாலும் அதைக் கண்காணித்து பதிவு செய்யக்கூடிய (வான)வர் அதனுடன் இல்லாமல் இருப்பதில்லை. (புஹாரி : 5672)

மேலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”ஓர் அடியான் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகின்றான். அதன் காரணமாக அவன் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகத் தூரத்தில் நரகத்தில் விழுகின்றான்.” (புகாரி : 6112)

இவ்வாறே பயனற்ற செயல்களுமாகும். எனவே தேவையற்ற சிந்தனைகள், சொற்கள், செயல்களைத் தவிர்த்து விட்டு ஆக்கப்பூர்வப் பணிகளை செய்து பயனடைவோமாக. ஆமீன்

-CMN Salim

source: http://www.samooganeethi.org/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb