Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

“குர்ஆனும், ஹதீஸும் முஸ்லீம்களுக்கு மட்டும் அல்ல, உலக மக்கள் அனைவருக்கும் என்பதே உண்மை”

Posted on December 19, 2014 by admin

“குர்ஆனும், ஹதீஸும் முஸ்லீம்களுக்கு மட்டும் அல்ல, உலக மக்கள் அனைவருக்கும் என்பதே உண்மை” -இஸ்லாத்தை ஏற்ற காவல்துறை ஆணையார் ஃபுஷன் குமார் உபாத்யா
 
[ 8-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரை அறிவியல், தொழியில் நுட்பம், கட்டிட கலை, கொள்கை, வியாபாரம் என அணைத்திலும் முன்னேற்றம் கண்டது. நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அறவே இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்றால் மற்ற எல்லா துறைகளிலும் வெற்றி தானே. அதுவே 8 முதல் 12 நூற்றாண்டு வரை நடந்தது என்பது உலகம் மறக்க முடியுமா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் சுமார் 84 போர்கள் நடந்துள்ளது அந்த போர்களில் சுமார் 1014 பேர் கொல்லப்பட்டனர் என்றால் அந்த சண்டைகளில் எவ்வளவு நீதம் பேனப்பட்டது என்பது புரியும்.

போரின் போது குழந்தைகள், வயோதிகர்கள், பெண்கள், விவசாயநிலம், கால்நடை போன்றவற்றுக்கு எந்த தீங்கும் வரக் கூடாது என தன் தோழர்களுக்கு கட்டளையிட்டு தலைமை தாங்கி 84 போர்கள் நடத்தினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்பது மிகப் பெரிய சரித்திர சான்று.

குர்ஆன் படித்தால் மட்டும் போதாது. அதன் பொருள் அறிந்து படிக்கவேண்டும். ஒரு சிலர் ஒரு வசனத்தை படித்துவிட்டு அதில் ‘கொல்லுங்கள்’ என உள்ளதே என கேட்கின்றனர். அந்த வசனத்தின் முந்தைய வசனத்தை படித்தாயா? என்றால் இல்லை என்பார்கள் அல்லது பிந்தைய வசனத்தை படித்தாயா? என்றால் இல்லை என்பார்கள் அல்லது ஹதீஸ்களை படித்து உள்ளாயா? என்றால் இல்லை என்பார்கள். அப்படி என்றால் உங்களுக்கு எப்படி உண்மை புரியும்? இஸ்லாத்தின் மாண்புகளை தெரிந்துக்கொள்ள முடியும்?

நான் ஒரு போலிஸ் கமிஷ்னராக கூறுகின்றேன். எனது இந்து நண்பர்களே! நீங்கள் கண்டிபாக குர்ஆன் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிமுறையும் (ஹதீஸ்) படியுங்கள், அது போன்றே முஸ்லீம் நண்பர்களே நீங்கள் கீதாவை படியுங்கள் காரணம் டாக்டர் நாயக் கீதா, பைபில் போன்றவற்றில் இருந்து பல உதாரணங்களை கொடுக்கின்றார். அதனால் நம் நம்மார்கத்தை பற்றியும், பிற மார்கத்தைபற்றியும் மக்களிடம் விவாதிக்க வசதியாக இருக்கும். இந்தியாவில் உள்ள மக்களிடம் கொள்கை மட்டும் சொன்னால் புரியாது மேற்கோள் காட்டி விளக்கினால் மட்டுமே அவர்களுக்கு புரியும்.]

ஃபுஷன் குமார் உபாத்யா மஹாரஷ்ரா மாநிலத்தில் உள்ள சோலாபூர் மாநகர காவல்துறை ஆணையார் அவர்கள் இஸ்லாத்தை ஏற்று பின் இஸ்லாமிய மாண்புகளை பற்றி ஆற்றிய சிறு உரை கீழே..

அல்ஹம்துல்லாஹ்.

அன்பு சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள் நான் ஏற்கனவே இங்கே பேசியிருக்கின்றேன். இருந்தாலும் இம்முறை உங்களோடு பேசுவது தனிசிறப்பு. இங்கே பீஸ்-டி.வியில் டாக்டர் நாயக் பல நிகழ்ச்சிகளை நடத்துக்கின்றார். நான் கேட்டு உள்ளேன். அதே நேரத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் பலர் இங்கே உறையாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இஸ்லாமிய மார்கத்தை பற்றி ஒரு தவறான கருத்து நிலவுகின்றது அதாவது சிலர் தெரியாமலேயே? சிலர் தெரிந்தும் இஸ்லாத்தைப்பற்றி தவறான கருத்துக்களை விதைத்து வருகின்றனர். இந்த மனிதர்களின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை என்பது எனது கூற்று. எனக்கு அரபி தெரியாது ஆனால் அங்கிலம், இந்தி, மராட்டி, உருது, ஆகிய மொழிகளில் குர்ஆனை படித்துள்ளேன். அதன் பின் சிலரிடம் இஸ்லாத்தை பற்றி கேட்டு தெரிந்துக்கொண்டேன். பிறகு நான் இஸ்லாத்தை பற்றிய யேசனைகளில் இறங்கி வந்தேன்.
 
இந்நிலையில் குர்ஆன், மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிமுறைகளை தெரிந்துக்கொண்ட பின் இஸ்லாம் வாள் முனையில் வளர்க்கப்பட்ட மார்கம் இல்லை என்பது எனக்கு புரிந்தது.

இஸ்லாமிய மாண்புகளை படித்தோ, தெரிந்தோ, புரிந்தோ, யார் ஒருவர் நடைமுறைபடுத்துகின்றனறோ அவருக்கு இஸ்லாம் வாள் கொண்டு பரப்பவில்லை என்பது புரியும்.

சாந்தியையும்,  சமாதானத்தையும் ,ஏற்படுத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வாள் முனை கொண்டு போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அமைதியான சூழல் ஏற்பட வேண்டும். அமைதிக்காகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாள் ஏந்தினார்கள்.

குர்ஆன் படித்தால் மட்டும் போதாது. அதன் பொருள் அறிந்து படிக்கவேண்டும். ஒரு சிலர் ஒரு வசனத்தை படித்துவிட்டு அதில் ‘கொல்லுங்கள்’ என உள்ளதே என கேட்கின்றனர். அந்த வசனத்தின் முந்தைய வசனத்தை படித்தாயா என்றால் இல்லை என்பார்கள் அல்லது பிந்தைய வசனத்தை படித்தாய என்றால் இல்லை என்பார்கள் அல்லது ஹதிஸ்களை படித்து உள்ளாயா என்றால் இல்லை என்பார்கள். அப்படி என்றால் உங்களுக்கு எப்படி உண்மை புரியும் இஸ்லாத்தின் மாண்புகளை தெரிந்துக்கொள்ள முடியும்?

ஒரு வரி மட்டும் இஸ்லாம் இல்லை என்பது புரிந்துக்கொள்ளுங்கள் சகோதரர்களே! நான் சில நேரங்களில் பீஸ்-டி.வி பார்பேன் அதில் டாக்டர் நாயக் ஒவ்வொரு விஷயத்தை பற்றியும் தெளிவாக விளக்கம் கொடுப்பார். அதில் ஒன்று ஜிஹாத் பற்றி. ஜிஹாத் என்றால் அமைதியை நிலை நாட்ட போராடுவது தான் ஜிஹாத். சாமான்ய மனிதனும் புரிந்துக்கொள்ளும் அளவுக்கு தெளிவாக கூறியிருப்பார்.

நான் ஒரு போலிஸ் கமிஷ்னராக கூறுகின்றேன். எனது இந்து நண்பர்களே நீங்கள் கண்டிபாக குர்ஆன் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிமுறையும் (ஹதிஸ்) படியுங்கள், அது போன்றே முஸ்லீம் நண்பர்களே நீங்கள் கீதாவை படியுங்கள் காரணம் டாக்டர் நாயக் கீதா, பைபில் போன்றவற்றில் இருந்து பல உதாரணங்களை கொடுக்கின்றார். அதனால் நம் நம்மார்கத்தை பற்றியும், பிற மார்கத்தைபற்றியும் மக்களிடம் விவாதிக்க வசதியாக இருக்கும். இந்தியாவில் உள்ள மக்களிடம் கொள்கை மட்டும் சொன்னால் புரியாது மேற்கோள் காட்டி விளக்கினால் மட்டுமே அவர்களுக்கு புரியும். .

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாமிய பணி செய்ய ஆரம்பிக்கும் போது அரபுலகம் மட்டும் இல்லை அண்டை நாடுகளும் கூட அமைதியும், சாந்தியும், கானல் நீராக இருந்தது என்பது குறிப்பிடதக்கது.

8-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரை அறிவியல், தொழியில் நுட்பம், கட்டிட கலை, கொள்கை, வியாபாரம் என அணைத்திலும் முன்னேற்றம் கண்டது நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அறவே இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்றால் மற்ற எல்லா துறைகளிலும் வெற்றி தானே. அதுவே 8 முதல் 12 நூற்றாண்டு வரை நடந்தது என்பது உலகம் மறக்க முடியுமா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் சுமார் 84 போர்கள் நடந்துள்ளது அந்த போர்களில் சுமார் 1014 பேர் கொல்லப்பட்டனர் என்றால் அந்த சண்டைகளில் எவ்வளவு நீதம் பேனப்பட்டது என்பது புரியும். போரின் போது குழந்தைகள், வயோதிகர்கள், பெண்கள், விவசாயநிலம், கால்நடை போன்றவற்றுக்கு எந்த தீங்கும் வர கூடாது என தன் தோழர்களுக்கு கட்டளையிட்டு தலைமை தாங்கி 84 போர்கள் நடத்தினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்பது மிகப் பெரிய சரித்திர சான்று.

இஸ்லாமிய கொள்கைகளை முதல் முதலில் மக்காவில் விதைக்கப்படும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களையும் அவர்களின் தோழர்களையும் மக்கா நகர் மக்கள் எவ்வளவு தொந்தரவுகளும், கொடுமைகளும் கொடுத்தார்கள் என்பது உலகம் அறிந்தது ஆனால் மக்கா வெற்றியடைந்த போது எதிரிகளை மன்னித்து ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் வெற்றி கண்டார்கள் என்பதை நினைத்தால் வன்முறையான மார்கம் இஸ்லாம் இல்லை என்பது புரியும்,

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள் என்றால் அங்கே நீதியை நிலை நாட்ட வேண்டிய கட்டாயத்தில் ஆயுதமேந்தி சந்தியையும் ,சமாதானதையும், நிலைநாட்டினார்கள் . இவ்வளவு ஏன் கீதாவில் கிருஷனன் அர்சுணனுக்கு போர் செய்ய கட்டளை இடும் போது அர்சுணன் நான் போர் செய்ய மாட்டேன் என ஓடினார் அப்போது கிருஷ்னன் நீ போர் செய்யாவில்லை என்றால் உன்னால் எப்படி நீதியை நிலை நாட்டமுடியும் என்றார்.

அது போலவே இஸ்லாம் தேவையான போது (ஜிஹாத்) போராட சொல்கின்றது. வீரத்தைவிட விவேகம் முக்கியம் என்பதிற்க்கு சில சாட்சிகள் உதைபியா உடன்படிக்கை நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏன் போட்டார்கள் மக்கள் கொல்லப்படுவதை தடுக்கவே ஒழிய பயந்து அல்ல இந்த உடன் படிக்கையின் போது உடன் இருந்த நபி தோழர்களுக்கே சில கருத்து வேறுபாடுகள் இருந்தது இருந்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்கு வந்த கெட்ட பெயரை கூட பொருட்படுத்தாமல் உடன் படிக்கை ஏற்படுத்தினார்கள் என்பது குறிப்பிடதக்கது.

ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களுடன் அமர்ந்து இருக்கும்போது யூத ஜனாஸா செல்கின்றது அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து நின்றவுடன் தோழர்கள் ”யா ரசூலே! அவர் யூதர்” என சொன்னபோது ”அவரும் மனிதர் தானே” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் .

மக்காவில் இஸ்லாம் பரவ தொடங்கிய உடன் அங்கிருந்தா மக்கள் ஓட துவங்கினார்கள் அப்போது ஒரு வயதான பெண் தன் தலையில் சுமந்து சென்ற சுமையை ஒருவர் வந்து வாங்கி கொள்கின்றார் நீண்ட தூரம் சென்ற பின் அந்த பெண்னிடம் தான் தூக்கி வந்த சுமையை கொடுக்கும் போது அந்த பெண் உன் பெயர் என்ன என கேட்க்கும் போது என் பெயர் முஹமத் என அழைப்பார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லும் போது அந்த பெண் நாம் யாருக்கு பயந்து ஓடுகின்றோமே அவரா இவர் என இஸ்லாத்தை ஏற்றார் .

அது போலவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தினமும் தொழுகைக்கு போகும் போது எல்லாம் சபித்து குப்பையை கொட்டுவாள் ஒரு நாள் அந்த பெண் குப்பையை கொட்டவில்லை அப்போது தோழர்களிடம் அந்த பெண் குப்பையை ஏன் இன்று கொட்டவில்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்ட போது தோழகள் அவருக்கு உடல் நலம் சரியில்லை என சொன்ன போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த பெண் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார் அப்போது தினமும் நான் எவ்வளவு தொந்தரவு செய்தும் இவ்வளவு இறக்கம் உள்ள நபரா என அந்த பெண் இஸ்லாத்தை ஏற்றார் என்பது வரலாறு
.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் என இஸ்லாத்தை ஏற்ற ஃபுஷன் குமார் உபாத்யா மஹாரஷ்ரா மாநிலத்தில் உள்ள சோலாபூர் மாநகர காவல்துறை ஆணையார்

குறிப்பு:  மக்களே இஸ்லாம் வாள் கொண்டு வளரவில்லை என்பது இந்த போலிஸ் அதிகாரியின் வாக்கு மூலமே சாட்சி. அது போன்றே இஸ்லாமிய மார்கமும், குர்-ஆனும், ஹதீஸும் முஸ்லீம்களுக்கு மட்டும் அல்ல, உலக மக்கள் அனைவருக்கும் என்பதே உண்மை.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

28 + = 36

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb