பொது இடத்தில் “இச்” கொடுத்து போராடுவது ஒழுங்கீனமானது: -கேரள உயர்நீதிமன்றம்!
கொச்சி: பொது இடத்தில் ஒன்று கூடி முத்தம் கொடுத்து போராட்டம் நடத்துவது ஒழுங்கீனமான செயல் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தொடங்கி நாட்டின் பல பகுதிகளிலும் இந்த Kiss of Love போராட்டம் பரவி விட்டது. பல இடங்களில் கலாட்டாக்கள், அடிதடி, மோதல்களும் அரங்கேறி விட்டன.
கேரள மாநிலத்தில் நடந்த முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலும் நடந்தது. கோழிக்கோடு டவுன்டவுன் கபே ஹோட்டலில் நடந்த தாக்குதலில் கைதான யுவ மோர்ச்சா என்ற அமைப்பைச் சேர்ந்த 5 பேர் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கமால் பாட்சா, முத்த போராட்டம் ஒழுக்கக்கேடானது, ஒழுங்கீனமானது. இந்தப் போராட்டங்களின்போது வன்முறைதான் மூளுகிறது. இதை வைத்து ரவுடிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவே வழி வகுக்கிறது.
கலாச்சாரப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் நடந்து கொண்ட விதத்தால் மாநிலம் முழுவதும் முத்தப் போராட்டம் என்ற பெயரில் சட்டவிரோதமான, ஒழுங்கீனமான செயல்கள் பரவியது வேதனை தருகிறது என்றார் நீதிபதி கமால் பாட்ஷா.
மிருகங்கள் தான் இவ்வாறு கண்ட இடங்களில் இதுபோன்ற பாலுணர்ச்சி இன்பங்களில் ஈடுபடும்
மிருகங்கள் தான் இவ்வாறு கண்ட இடங்களில் இதுபோன்ற பாலுணர்ச்சி இன்பங்களில் ஈடுபடும், ஆறறிவு படைத்த மனிதர்கள் போல செயல்படவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். ஐ ஐ டி-யில் படிக்கிற உங்களுக்கு முதலில் ஒரு உண்மை ஞாபகம் இருக்கட்டும், ஏழைகளின் ரதத்தை உறிஞ்சி அதில் வரும் வருமானத்தை வைத்து மத்திய அரசு உங்களுக்கு இனாமாக எந்த கவலையும் இல்லாமல் நீங்கள் படிக்கவேண்டும் என்று, அதுவும் உங்கள் படிப்பிற்காக செலவு செய்கிறது என்பதை மறந்துவிட்டீர்கள்.
மேலும், உங்களுக்கு தெரியுமா ஒரு மாணவனுக்கு, ஒரு நாளைக்கு மத்திய அரசு எவ்வளவு செலவு செய்கிறது என்று? கண் முன்னே ஏழைகளின் உழைப்பு காம இச்சைகளுக்காக செலவு செய்யபடுகிரதே என எண்ணும் போது நெஞ்சி கொதிக்கிறது!
நாங்கள் இப்படித்தான் மிருகங்கள் போல கலாச்சாரத்தை சீரழிப்போம் என்று நீங்கள் கூறுவீர்களே ஆனால், எக்கேடாவது கெட்டு ஒழியுங்கள். எம் மக்கள் நடமாடுகிற பொது இடங்களில் அருவருக்க தக்க செயலினை அரங்கேற்றதீர். தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் பெண்களின் சிறப்பையும் நீவீர் அறிவீர்களே ஆனால், இப்படி கேடுகெட்டே செயலில் ஈடுபட மாட்டீர்கள் என்பதை வேதனையுடன் பகிர்கிறேன,
ஒரே பெண் இருவரை வாயில் எச்சிலை எடுத்து ,கொடுத்து அன்பை பரிமாறியது இணையத்தில் லட்சம் பேர் பார்க்க ஓடிக்கொண்டுள்ளது. இப்படி பொது இடத்தில், அரசின் உதவியால் நடக்கும் கல்வி நிலையத்தில்கல்வி கற்பதை விடுத்து ஆநாகரிகமாக நடந்த பெண்களை,ஆண்களை தண்டிக்க வேண்டும் .எங்களை போன்றோரின் வரிபணத்தில் நடத்தும் கல்வி நிறுவனங்கள் கலவி நிறுவனங்களாக மாறாமல் நடத்த வேண்டிய கடமை கொண்ட அரசு தக்க தண்டனை வழங்க வேண்டும்.