Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

காந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு நாடெங்கும் சிலைகளா?

Posted on December 17, 2014 by admin

காந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு நாடெங்கும் சிலைகளா?

காந்தியாரைக் கொலை செய்த நாதுராம் கோட்சே விற்கு நாடெங்கும் சிலைவைக்க இந்துமகாசபை முடிவு செய்துள்ளது. இது குறித்து எக்னாமிக் டைம்ஸ் என்ற இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்தியாவின் மகா புருஷர்களுக்கு இந்தியாவில் சிலைவைக்காமல் பாகிஸ்தானிலா சிலைவைக்க முடியும்? என்று எதிர்கேள்வி வைக்கின்றன.

காந்தியைக் கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ் அமைப் பைச் சேர்ந்த நாதுராம்கோட்சே என்பது நாடறிந்த செய்தியாகும். இந்த நாட்டின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக மதிக்கப்படும் காந்தியாரை அகண்ட பாரதத்தின் எதிரி மற்றும் இந்துக்களின் துரோகி என்று கூறி கோட்சே தலைமையிலான குழு திட்டமிட்டுக் கொலை செய்தது. இந்தக்கொலை நிரூபிக்கப்பட்டு கோட்சேவிற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலகர்த் தாவாக இருந்த வி.டி.சவர்க்கார் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிவிட்டார்.

இந்த நிலையில், மத்தியில் புதிதாக ஆட்சி அமைத்த பாஜக அரசு இந்துத்துவச் சக்திகளின் அரசாக அமைந்ததால், நாளுக்கு நாள் இந்துத்துவக் கொள்கையை தூக்கிப்பிடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகராஜ் என்ற சாமியார் நாதுராம் கோட்சேவை தேசபக்தன் என்று கூறி பிறகு மன்னிப்புக் கேட்டார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் மிகவும் விவாதத்திற்கு உள்ளாகிக்கொண்டு இருக்கும் நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சகோதர அமைப் பான இந்து மகாசபை இந்தியா முழுவதும் நாதுராம் கோட்சேவின் சிலையை திறக்க முடிவு செய்துள்ளதாம்.

இது குறித்து இந்துமகா சபைத் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக் எக்னாமிக் டைம்ஸ் என்ற இதழுக்கு அளித்த பேட்டியில் நாங்கள் ஜனவரி 30 ஆம் தேதி (காந்தி கொலை செய்யப்பட்ட நாள்) இந்தியா முழுவதும் கோட்சேவின் சிலையைத் திறக்க விருக்கிறோம். இதற்காக ராஜஸ்தானின் கிஷான் கட் என்ற ஊரில் நூற்றுக்கணக்கான பளிங்கு சிலைகள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன. புதுடில்லியில் கோட்சே தங்கி இருந்த மத்திய டில்லியில் உள்ள கிருஷ்ணகஞ்சில் கோட்சே சிலையுடன் அவருக் கான காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது. நாங்கள் மத்திய அரசிடம் உடனடியாக அய்ந்து நகரங்களில் வைக்க அனுமதி கேட்டு இருக்கிறோம். மத்திய அரசு எங்களுக்கு அனுமதியளிக்காவிட்டாலும் கவலையில்லை, நாங்கள் இந்த நாட்டின் மகாபுருஷர்களுக்கு சிலை வைக்க யாரும் தடைசெய்ய முடியாது. விரைவில் நாடெங்கும் கோட் சேவின் சிலைகள் வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கோட்சே இந்து மகாசபையின் தலைமையகத்தில் தான் வந்து தங்கினார். புதுடில்லியில் உள்ள தலைமையகத்தில் தான் அவர் துப்பாக்கிச்சுடும் பயிற்சி பெற்றார். அவருக்குப் புகலிடமும் திட்டமிட்டுக் கொடுத்ததும் இந்துமகாசபையின் உறுப்பினர்கள்தான். இந்த ஆண்டு ஜூலை மாதம் கோட்சேவின் சிலைகள் செய்ய உத்தரவிட்டதாகவும், இந்தச் சிலைகளில் 17 சிலைகள் டில்லியில் உள்ள இந்து மகாசபை தலைமையகத்திற்கு வந்துவிட்டனவாம். காந்தியைக் கொலைசெய்யும் முந்தைய நாள் முழுவதும் கோட்சே இந்துமகாசபை உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் விவாதம் நடத்தினான். அவனுக்குத் துப்பாக்கிச் சுட பயிற்சியளித்த இடத்தில் தற்போது அவனுக்கான சிலை அமைக்கும் மேடைகள் தயாராக உள்ளன.

இந்தத் தகவல்களை எக்னாமிக் டைம்ஸ் (15.12.2014) வெளியிட்டுள்ளது. மற்ற ஏடுகள் திட்டமிட்டு மூடி மறைத்துவிட்டன.

மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தவுடன், அதிகாரப் போதை கண்களை மறைக்கும் என்ற நிலையில், மிகக் கேவலமான, அருவருக்கத்தக்க, அநாகரிகமான செயல் களைக்கூட கம்பீரமான சாதனைகளாக மாற்ற முயலும் கள்ள நாணயக்காரர்களின் கைகள் மேலோங்கி வரும் தருணம் இது என்பதற்கு இது ஒரு கடைந்தெடுத்த சாட்சியமாகும்.

காந்தியாரின் பிறந்த நாள் மக்கள் மத்தியில் விழாவாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி, அந்த நாளை தூய்மை நாள் என்று அறிவித்து, நாட்டைத் தூய்மைப்படுத்தும் காட்சி களை அரங்கேற்றினார். மோடியே குப்பைக் கூட்டு வதுபோல, ஊடகங்களிலும் இடம்பெறச் செய்து, அந்த நாளில் காந்தியாரைப்பற்றி எந்தவிதத் தகவலும் வெளி வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகவே பார்த்துக் கொண்டார்.

குஜராத் மாநிலத்தில்தான் காந்தியார் பிறந்தார் – ஆனால், அவருக்கு முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது; மாறாக அம்மாநிலத்தில் பிறந்த வல்லபாய் படேலுக்கு 597 அடி உயரத்தில் (பீடத்திற்கு மட்டும் ரூ.200 கோடி பூங்கா மற்றும் காட்சியகத்துக்கு ரூ.500 கோடி) சிலை எழுப்ப முயலுவதில், காந்தியாரை மட்டம் தட்டும் சூழ்ச்சியே!

காந்தியாரைக் கொலை செய்வதற்குத் தூண்டுகோலாக இருந்த காரணத்தால்தான் கீதையை இந்தியாவின் தேசிய புனித நூலாக அறிவிக்கப் பார்க்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பி.ஜே.பியோ, சங் பரிவாரோ எதைச் செய்தாலும் அதற்கு நேரிடையான பொருள் கிடையாது என்பது நினைவில் இருக்கட்டும்.

இந்து மகாசபையை விட்டு நாதுராம் கோட்சேவுக்கு முதற்கட்டமாக அய்ந்து முக்கிய நகரங்களில் சிலை எடுக்கப் போகிறார்களாம் – நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது? இந்துத்துவாவை எதிர்த்தால் காந்தியாருக்கு ஏற்பட்ட கதிதான் என்று அச்சுறுத்துவதே இதன் நோக்கம்.

இவர்கள் அரசமைப்புச் சட்டத்தையே தூக்கி எறிந்து மனுதர்மத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/92989.html#ixzz3MA6OPpFm

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

29 + = 34

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb