உள்ளொன்றும் புறமொன்றும் வேண்டாம் அகத்தின் அழகை முகத்தில் காட்டுவோம்
மு.சே.ஷப்பீர் அஹமது
இறைவனின் அருள் கொடைகளில் செல்வம், ஆரோக்கியம், மனை, மக்கள், அதில் மனிதனின் வெளித்தோற்றமும் அழகாய் மிடுக்காய் அமைவதும் அவனின் கிருபையே. ஆள் பாதி ஆடை பாதி என்பது நம் மானுட வர்க்கத்திற்கு எந்தவித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. first impression is best impression என்பார்கள் நம்முடைய முகத்தோற்றம் சரியாக இருக்கும் பட்சத்தில் நாம் சந்திக்கும் நபரிடம் நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சுலபமாக இருக்கும்!
நம்மீது அவர் நல்ல அபிப்பிராயம் கொள்ளாத பட்சத்தில், நம் கருத்து எவ்வளவு சரியாய இருந்தாலும் எடுபடாமல் போய்விடும்! இது நேர்முக தேர்வு விஷயத்தில் மிக பொருத்தமாக இருக்கும் சிலருக்கு எவ்வளவு உயர்ந்த ஆடை உடுத்தினாலும் மிடுக்காய் தெரியமாட்டார்கள் அதுதான் வெளி தோற்றம் சிறப்பாய் அமைந்து இருப்பவர்கள் இறைவனின் அருள் பெற்றவர்கள் என்றேன்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் திருடனை அவன் [திருட்டு] முழியிலேயே கண்டுகொள்ளலாம். பாராரியை அவன் தோற்றத்திலேயே சாதாரணமாக காணலாம். ஒவ்வொருவரின் உத்தியோகத்திற்கும் ஒரு உடை வழங்கப்பட்டுள்ளது. அதைவைத்து கண்டுகொள்ளலாம் இதுவெல்லாம் வெளி விஷயம் இனி சொல்ல இருப்பது முக்கியமான விஷயம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பண்டைய மொழி அதாவது உள்ளே உள்ள விஷயம்தான் வெளியே தெரியும் என்பார்கள் ஆனால் வேஷதாரிகள் தன் அறிவு நிலையை தன் ஆன்மீக நிலையை கல்வி கற்ற நிலையை பறைசாற்றுவதற்காக தன்னை முற்றும் துறந்தவன் என்றும் எதிலுமே நாட்டம் இல்லாதவன் போல் காட்டிக்கொண்டும் வேடமிட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர். மக்களோ வேடதாரியின் மேல் மோகம் கொண்டு வீழ்ந்து விட்டில் பூச்சிகளாய் மாய்கின்றனர் பாவிகள் செய்யும் குற்றத்திற்கு பழமொழியை குற்றம் சொல்ல முடியுமா ? கோடி கோடி சொத்துக்கள் உள்ள ஆசிரமங்களுக்கு பெயர் மடம் அங்கே இருப்பவர் சாமியார் இது எதிர்மறை இல்லையா !?
இரண்டாம் விஷயம் ஆள் பாதி ஆடை பாதி என்பது உண்மையான விஷயம்தான் முன்னாள் முதல்வர் காமராசர் அவர்கள் மாணவர்களிடம் பேதங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக பள்ளிச்சீருடை கொண்டுவந்தார். இன்று தமிழகத்தில் ஆங்கில வழிக்கல்வி பயில்விக்கும் பள்ளிக்கூடங்கள் நிறைய முளைத்து இருக்கின்றன. அங்கே ஆங்கிலத்தைத்தான் முதல் பாடமாக பயில்விக்கிறார்கள். சரி ஆங்கிலேயரின் சூழலுக்கேற்ற பழக்கமான காலுக்கு சூ, மோசா, கழுத்துக்கு இறுக்கி பிடித்த டை இடுப்புக்கு பெல்ட் அத்துனையும் 100 டிகிரி வெயில் கொளுத்தும் நம் தேசத்தில் என்பது எதிர்மறையான விஷயம் அல்லவா ? (தேவையா நமக்கு ! 🙂
உள்ளொன்றும் புறமொன்றும் வேண்டாம் அகத்தின் அழகை முகத்தில் காட்டுவோம்.
source: http://nijampage.blogspot.in/