கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன?
குழந்தை இல்லாத தம்பதிகளின் கனிவான கவனத்திற்கு – இதை நீங்க அவசியம் படிக்கணும்?
கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன?
கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22-26. இதற்கு விதிவிலக்குகளும் உண்டு.
இந்த வயதுகளில் இல்லை எனறால் குழந்தை பிறக்காதா?
அப்படி இல்லை. இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும்.
சில புள்ளி விவரங்கள்:
30 வயதில், 75% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 91% நான்காண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.
35 வயதில், 66% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,84% நான்காண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள். 40 வயதில், 44% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 64% நான்காண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.
ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு முக்கியம் இல்லையா?
இதுவும் ஓரளவுக்கு முக்கியமே, ஆனால் பெண்ணின் வயது அளவுக்கு முக்கியமானதல்ல. இதற்குக் காரணம், பெண்கள் பிறக்கும்போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன.
இக்கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு விந்துக்கள்தினம் உருவாகும். ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக, ஆக, குறையும்.
ஆண்கள் பற்றிய புள்ளி விவரம்:
20–39 வயதில், 90% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும். 40–69வய தில், 50% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.
80 வயதிற்குமேல், 10%ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.
கருமுட்டை உற்பத்தியாகும் காலம்:
பெண் வயதுக்கு வந்தபின், சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீ ழிறங்கும். இதனைமுட்டை வெளியீடு என்று அழைப்பார்கள், ஆங்கிலத்தில் இதற்கு ஓவுலஷன் (ovulation) என்று பெயர்.
கர்ப்பம் தரிக்க ஏதுவான நாட்கள் எவை:
எந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பதுதான் இதற்கு முக்கியம். கரு முட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து, 18-24மணிநேரத்துக்குள் ஆணின்விந்துவை சேர வேண்டும். அதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் (Fallopian tube) விந்து இருக்க வேண்டும். ஆணின் விந்து (sperm) சராசரி யாக 3–5 நாட்கள் வரை பெண்ணின் பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.
உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது?
உங்கள் முட்டை வெளிவரும்போது, அதாவது ஒவுலஷன் (Ovulation) நடக் கும்போது, அதற்கு இரண்டு நாட்கள் முன்னாலும், இரண்டு நாட்கள் பின்னாலும், உடலுறவு கொள்வது மிகுந்த பயனளிக்கும். முட்டை வெளியீடு (Ovulation) காலம் நடக்கிறது என்று எப்படிதெரிந்துகொள்வ து?இந்நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்து உங்களு க்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
1. உங்கள் பெண்ணுருப்பிலிருந்துவரும் திரவம் (Cervical mucus) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகிவிடும்.
2. மேலும், உங்கள் மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு பிடிக்கும் (belly cramps), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச்சொட்டு க்கறை (spotting), உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும்.
3. முட்டை கருப்பையில் இரு ந்து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4ஊF – 0.8ஊF அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (Digital Thermo meter) ஒன்றை கடையிலிருந் துவாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு, இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம். இதற்கான பட்டியல் மாதிரி களை இப்போது இணையங்களிலே யே தருகிறார்கள். இதன் மாதிரியை
4. உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளியீடு (Ovulation) நாள் சரியாக 14 ஆம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளியீடு நாள் என்பது, உங்கள் மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும். உதாரணமாக, உங்கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17 ஆம் நாள்தான் உங்கள்முட்டை வெளியீட்டுநாள். இதுதவிர ovulation testing kits போ ன்ற பொருட்கள் இப்போதெல்லாம் புழக்கத்தில் உள்ளன. அவை உங்கள் சிறுநீரில் உள்ள ஹார்மோன் அளவைக் கொண்டு உங்கள் முட்டை வெளியீட்டுநேரத்தை சரியாக சொல்லி விடும்.
கர்ப்பமடைய முயற்சி செய்யும்போது எதை எதை தவிர்க்க வேண்டும்?
உடலுறவின் போது நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவை பயன்படுத்தினால், அவற்றை நிறுத்திவிடுங்கள். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவி க்கும். குழந்தைகளுக்கான எண்ணெய் (baby oil) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்த வரை எந்த விதமான லூப்ரிகன்ட் (Lubricant) பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.
பலபெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் பெண்குறியை சுத்தம் செய்யபலதிரவங்களையு ம், தண்ணீரையும் உள்ளே பீய்ச்சி அ டிக்கிறார்கள். இதை Vaginal Douche என்று ஆங்கிலத்தில் என்று சொல் வார்கள். நீங்கள் கருப்பிடிக்க நினைக்கும் கட்டத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத்திரவங்கள் விந்துவைக் கொ ல்வதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன் மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.
35 வயது தாண்டிய பெண்களின் பாலியல் பிரச்சனைகள் – ஆழமான அலசல்
இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மன தில் எழும் பொதுவான ஒரு சந்தேகம் நமக்கு செக்ஸ் உணர்வு குறையத் தொடங்கிவிட்டதே என்பதுதான். ஆனால் அப்படி ஒரு கவலை தேவையில்லை என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
35 வயதைத் தாண்டிய பல பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு போல ஈடுபட முடியாதா, உச்ச நிலையை அடைய முடியாதா என்ற எண்ணம் பரவலாக தோன்றுகிறதாம். மேலும் 30 வயதைத் தாண்டி விட்டாலே செக்ஸ் உணர்வுகள் குறையத் தொடங்கிவிடும் என்ற பரவலான கருத்தும் அவர்களிடம் நிலவி வருகிறதாம். இதற்குக் காரணம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பெண்களுக்கு ஏற்படும் மாற்றம் தான் என்கின்றனர் நிபுணர்கள்.
தாம்பத்ய உறவின்போது உச்சநிலை எனப்படும் கிளைமேக்ஸ் சரியாக இல்லையெனில் திருப்தி என்பது ஏற்படாது. கிளைமேக்ஸ் பிரச்சினை பிறப்புறுப்பின் வலியினாலும், வறட்சியினாலும் ஏற்படும். மேலும் 35 வய திற்குமேல் பெண்களுக்கு உடல் பருமன், நீரிழிவு போன்றவை இருந்தாலும் உச்சநிலையை உணர்வரில் பிரச்சினை ஏற்படும்.
நீரிழிவினால் பெண்களுக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் முதுகெலும்பில் பிரச்சினை என்றாலும் அவர்களால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடமுடியாது. அதேபோல் ஹார்மோன்கள் சரிவர சுரக்கவில்லை என்றாலும் பெண்கள் தங்களின் உச்ச நிலையை உணர்வதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் நிபுணர்கள்.
இதுபோன்ற சிக்கல்கள் உள்ள பெண்கள் தங்கள் கணவருடன் கலந்து ஆலோசித்து அதற்கேற்ப பொசிசன்களை மாற்றினால் வலியின்றி உறவில் ஈடுபடமுடியும். இனிமையான உச்சநிலையை உணரமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
30வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வள வுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட் டொழியுங்கள். 20 வயதுகளில் எப்படி செக்ஸை அனுபவித்தீர்க ளோ அதேபோல 30 வயதைத் தாண்டிய பின்னரும்கூட அனுபவிக்கலாம். அதற்கு ஒரே முக்கிய தேவை உங்கள து மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்வ துமட்டுமே. உண்மையில் 30வயதுக்குமேல் தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரிபூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடுபட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.
அதேசமயம், சில பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் உறவில் ஆர்வம் குறைவது இயல்பு தான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் இது வித்தியாசப்படும். பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது. உச்ச நிலையை அடைவதில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு என்றில்லை, 20களில் இருக்கும் பெண்களுக்கும் கூட பிரச்சினை வருவதுண்டு. எனவே ஆர்கசம் என்பது எல்லோருக்கும் உள்ள பொதுவான பிரச்சினைதான். அது, தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது நமது மனநிலை, உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தது. எனவே கிளைமேக்ஸ் பிரச்சனை உள்ள பெண் கள், உரிய தெரபிஸ்டுகளை அணுகி ஆலோசனை கேட்கலாம். ஆர்கசத்தை அடைவதற்கு பல மருத்துவ ரீதியான, மனோரீதியான வழிமுறைகள் உள்ளன. அதைக் கையாளலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
மேலும் 30 வயதைத் தாண்டிய, விவாகரத்து செய்த அல்லது கணவரை இழந்த பல பெண்களுக்கும் கிளைமேக்ஸ் வரும். செக்ஸ் உணர்வும் அதிகமாக இருக்கும். இதை நினைத்து பல பெண்கள் கவலைப்படுவார்கள். நாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணமும் அவர்களிடம் எழலாம். ஆனால் இது நிச்சயம் தவறான ஒன்றில்லை. இது இயல்பான ஒன்றுதான். பெண்களின் உடலியல் அப்படி. எனவே நாம் செக்ஸ்குறித்து சிந்திப்பது தவறு என்று இந்தப் பெண்கள் நினைக்கத் தேவையில்லை. இதுபோன்ற பெண்கள் தங்களது மனதை ஒருமுகப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஈடுபடலாம்.
எனவே 30 வயதுக்குமேல் செக்ஸ்உணர்வும், உச்சநிலையும் அற்றுப் போய்விடும் என்ற கவலையும், கிளைமேக்ஸ் அதிகமாக இருக்கிறதே என்ற கவலையும் தேவையில்லை. இவை இயல்பானவைதான். அதற்கான செயல் முறைகளை கையாண்டு அவற்றை வெற்றிகரமாக சமாளிக்க அவர்கள் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் மூளைக்கும், மனதிற்கும் முக்கிய பங்குண்டு. எனவே சரியான வழியில் உணர்வுகளை திசைதிருப்பினால் நம்மால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையை வாழ முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
கணவனை இழந்து அல்லது கணவனை பிரிந்து வாழும் பெண்கள், அவர்களுக்கு ஏற்படும் மிதமிஞ்சிய செக்ஸ் உணர்வால் பலர் கள்ளக் காதல், வேறு மாதிரியான பழக்கங்களுக்கு ஆளாக தங்களது இனிமையான வாழ்வைக் கெடுத்துக் கொள்கிறார்கள். இதுபோன்ற தவறான வழிகளுக்கு எல்லாம் செல்லாமல் அவர்களுக்கு ஏற்றதொரு துணையைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டு பின் அந்த துணையுடன் மட்டுமே செக்ஸை பகிர்ந்து கொண்டு சமுதாயத்தில் வாழலாம்.