ஆங்கில புத்தாண்டு பிறப்பும்! முஸ்லிம்களின் இன்றைய நிலைமையும்!
M.J. ஸாதிக், கோவை, 8144355900
முஸ்லிம் சமுதாயமே! Happy New Year என்றால் தமிழ் விளக்கம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? மகிழ்ச்சி புதிய ஆண்டு என்று பொருளாகும். இதற்கும் புதிய ஆண்டு வரவேற்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது. முஸ்லிம்களே சிந்தியுங்கள்!
இன்றைய முஸ்லிம் சமுதாய மக்கள் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்பதற்கு (முஸ்லிம் அல்லாத மக்களைச் சந்தித்தால்) நேரிலும் SMS மூலமாகவும் வாழ்த்துக்கள் சொல்லுகிறார்கள். மேலும் தியேட்டர்களுக்குச் செல்லக் கூடிய முஸ்லிம்களும் உள்ளார்கள். இந்தச் செயல்கள் முற்றிலும் குர்ஆன், ஹதீஃதுக்கு மாற்றமானது.
இந்தப் புதிய ஆண்டு துவங்குவதால் என்ன நன்மை வரப்போகிறது என்று பார்த்தால் எதுவுமே வரப்போவது இல்லை. ஆனால் இந்த ஆண்டில் முதல் நாள் ஏதாவது நல்ல காரியம் செய்தால் வருடம் முழுவதும் நல்ல காரியமே நடக்கும் என்பது எல்லா மக்களின் நம்பிக்கையாகும். ஒரு சில முஸ்லிம்கள் இதில் அடங்குவர். இது மிகப் பெரிய தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் இதைச் செய்கிறோம் என்று பார்த்தால் :
இந்தச் செயல் நமக்கு முஸ்லிம்களுக்கு ஏன் தவறாக தெரியவில்லை? என்ன காரணம் என்றால் நம் முடைய பெற்றோர்களும், பள்ளியிலுள்ள இமாம்களும் இந்தத் தவறைப் பற்றி நமக்குச் சொல்லவில்லை, கண்டிக்கவும் இல்லை என்பதே காரணம். இதனால் நாம் செய்யும் தவறில் (பெற்றோர்க்கும் இமாம்களுக்கும்) பங்குண்டு. (சில நல்ல பெற்றோர்கள், இமாம்கள் தவிர)
இதை ஏன் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை?
புத்தாண்டைக் கொண்டாடுவதினால், வாழ்த்துச் சொல்வதினால் என்ன தவறு என்று சில முஸ்லிம்கள் கேட்கிறார்கள். அன்பான முஸ்லிம்களே! இறைவன் நமக்கு 2 பெருநாட்களைக் காட்டித் தந்துள்ளான். அந்த நாள்களில் புத்தாடை அணியலாம். மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளலாம். (ஆனால் வீண் விரயம், அனாச்சாரம் கூடாது) இந்த 2 நாள்களை நமக்கு இறைவன் அளித்திருக்கும்போது மாற்று மதத்தினரின் பண்டிகை நமக்கு எதற்கு? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் முஸ்லிம்களே!
மேலும் 2 பெருநாளை பற்றி நபியவர்கள் கூறும்போதும், யூத, கிறித்தவர்கள் இரண்டு நாளை தேர்ந்து பெருநாளாக கொண்டாடியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் அவ்விரண்டையும் விட சிறந்த பெருநாளாக நோன்புப் பெருநாளும் ஹஜ் பெருநாளையும் தந்திருக்கின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஹதீஃத் சுருக்கம் – அபூதாவூத் 9595)
மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றுவது கூடாது என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளை!
உங்களுக்கு முன் சென்றோர் (யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின்) வழிமுறையை (முஸ்லிமாகிய) நீங்கள் அங்குலம், அங்குலமாக, முழத்திற்கு முழமாக பின் பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஓர் உடும்புப் பொந்திற்குள் நுழைந்தாலும் கூட நீங்களும் அதில் நுழைவீர்கள் என நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு: அபுஸயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நூல் : புகாரி: 3456 மேலும் 3456-ல் அடிகுறிப்பை (129)ஐ பார்க்கவும்)
மேலும் யார் மாற்றுமதக் கலாச்சாரத்தைப் பின் பற்றுகிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவர்களே என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத் : 3512)
இவ்வாறு இஸ்லாத்திற்குச் சம்பந்தமில்லாத புத் தாண்டைக் கொண்டாடி வீண் விரயம் செய்கி றோமே! இது சரியா என்பதை ஒவ்வொரு முஸ்லிம் களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும் வீண் விரயத்தைப் பற்றி அல்லாஹ் கூறும்போது
உண்ணுங்கள், பருகுங்கள் வீண் விரயம் செய்யா தீர்கள்; வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (7:31) மேலும் பார்க்க: அல்குர்ஆன் : 17:27, 4:5, 2:205
மேலும் நம்முடைய பொருளாதாரம், நேரம் போன்றவற்றை தேவையில்லாமல் செலவு செய்து அதற்குப் பகரமாக இறைவனின் தண்டனையையும் அதிருப்தியையும் பெற வேண்டுமா?
ஆகவே அன்பான முஸ்லிம்களே! வரக்கூடிய புதிய வருடத்தின் முதல் நாளை புதிய வருடம் என்று நினைக்காமல் வெறும் நாட்களில் ஒன்றாகக் கணக்கிடு வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் அதற்கு எந்தவொரு தனி சிறப்பும் இஸ்லாத்தில் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நம்முடைய குழந்தைகளுக்கும் இதைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் முஸ்லிம்களே நீங்கள் உங்கள் உறவினர் வீட்டுக்கு செல்லும்போது அவர்களுக்கும் இதை எடுத்துச் சொல்ல வேண்டும்.
அன்பான முஸ்லிம்களே! மேலே உள்ள இத்தனை விஇயங்களையும் படித்த பின் இந்த புத்தாண்டை வர வேற்பேன் என்று நீங்கள் சொன்னால் கீழே உள்ள இந்த குர்ஆன் வசனத்தை படித்து பாருங்கள்.
அல்குர்ஆன் : 4:14
குறிப்பு : முஸ்லிம்களே! யாருக்கேனும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வதோ, புத்தாண்டிற்காக SMS அனுப்புவதோ செய்யாதீர்கள், அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், தூதருக்குக் கட்டுப்படுங்கள்.
அன்பான முஸ்லிம்களே! 88:21-25, 5:67, 2:272 இந்த குர்ஆன் வசனங்கள்படி சொல்வதுதான் எங்கள் மீது கடமை; நீங்கள் இதை ஏற்று நடப்பதும் நடக்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம் என்பதை சொல்லிக் கொள்கிறோம்.