காதல் உண்மைகளும் இரகசியங்களும்…!
இந்த உலகில் எழுதப்பட்ட இலக்கியங்கள், கதைகள், கட்டுரைகள் பெரும்பாலனவற்றில் காதலின் தாக்கம் நேரடியாகவோ மறைமுகமகவோ இருந்திருகிறது. காதலை பற்றி எழுதாத எழுதாளர்களே இருக்க முடியாது. எத்தனை புத்தகங்கள் எழுதபட்டாலும், எவ்வளவு விமர்சனங்கள் செய்யப்பட்டாலும் இதுவரை முழுவதுமாய் விடை தெரியாத ஓர் உணர்வு காதல்.
உடல் ரீதியான தேவைகளை வெளிபடுத்தும் உணர்வுகளான பசி, தாகம், போன்ற ஓர் உணர்வு காமம். சரியாக சொன்னால் காதலின் மையப்புள்ளி அல்லது ஆதரம் காமம். பாலியல் தேவைகளோ, ஆசைகளோ மனிதர்களுக்கு இல்லாதிருந்தால் காதல் என்ற உணர்வே மனிதர்களுக்கு உண்டாயிருக்காது என்பது உண்மை.
உடலில் ஏற்படும் ஹார்மோன் வளர்ச்சி அல்லது மாற்றம் காம உணர்வை தூண்டுகிறது துண்டப்படும் உணர்வால் உந்தபடும் ஆசை உயிர் பெறும்போது காதல் மலர்கிறது. டினேஜ் பருவத்தில் ஹார்மோன்களின் ஆதிக்கம் தொடங்கிறது அல்லது அதிகமாகிறது. இங்கேதான் மனிதர்களுடைய மனம் தனது காதல் பயணத்தின் முதல் அடியை எடுத்து வைக்கிறது. இங்கே அந்த பயணத்தின் வேகமும் சற்று அதிகமாக இருக்கிறது.
காதலின் தன்மை காதலர்களின் வயதையும், பக்குவத்தையும் சார்ந்து மாறுபடுகிறது. பொதுவாக டினேஜ் காதல்கள் உடல் கவர்ச்சியையும் உணர்வுகளின் கொந்தளிப்பையும் சார்ந்து இருக்கிறது.
ஆனால் எந்த வயதில் காதல் உணர்வு வந்தாலும் அதில் காம வாசனை வீசாமல் இருக்காது. அதில் பாலியல் தேவையின் அளவு மட்டும் உடல் சார்ந்தும், மனம் சார்ந்தும், வயது சார்ந்தும் நபர்களை பொறுத்து மாறுபடலாம். ஆனால் உடல் சார்ந்த பாலியல் தேவைக்காக மட்டும் காதல் என்ற உணர்வு மனிதர்களுகிடையே வாழ்கிறது என தீர்க்கமாக சொல்ல முடியாது. அதையும் தவிர்த்து சில விஷயங்கள் காதல் என்ற சுவரசியதுக்குள் ஒளிந்திருக்கிறது.
பல ஆயிரம் மனித உயிர்களை எந்த தடுமாற்றமும், இரக்கமும் இல்லாமல் கொன்றவன், உலக நாடுகளையே நடுங்க வைத்தவன் ஹிட்லர். அந்த இரும்பு இதயத்திர்குள்ளும் ஒர் இனிமையான காதல் மலர்ந்திருந்திருக்கிறது .வெறும் பாலியல் தேவை மட்டுமே காதலின் நோக்கம் என்றால் ஹிட்லரால் அதை தன் காதலி ஈவாபிரவினிடம் எளிதாக அடந்திருகமுடியும், பலியல் தேவைகளை தவிர்த்து பல விசியங்கள் காதலுக்குள் இருப்பதால் தான் ஹிட்லராலும் காதலிக்க முடிந்தது.
ஆதி மனிதன் ஆதமிடம் இறைவன் குறிப்பிட்ட கனியை மட்டும் சாப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட போதும் ஏவாளின் வார்த்தையை நம்பி கனியை சாப்பிட்டு பாவத்திற்கு ஆளாகிறான் ஏன் தெரியுமா? மனிதன் இறைவனை விட தன் காதலை நம்புகிறான். நம்ப வைக்கிற சக்தி காதலுக்கு உண்டு.
உண்மை காதல் ஒருமுறை தான் மலரும் என்பது முட்டாள் தனமானது, பொய்யானது, அபத்தமானது .இப்படி பட்ட கருத்துகளை நம் சமுதாயத்தின் மீது ஆழமாக பதிய வைத்ததிற்க்கு திரைபடங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
வாழ்வின் பெரும் பகுதியை போர்களத்தில் கழித்த நெப்போலியன், போர்களத்திலிருந்து காதல் ரசம் சொட்டும் உருக்கமான பல கடிதங்களை தன் காதல் மனைவி ஜோஸ்பினுக்கு எழுதி இருந்தான். அவன் எழுதிய கடிதங்கள் பிற்காலத்தில் உலக புகழ் பெற்ற காதல் கடிதங்களாயின . அவன் எழுதிருந்த ஒவ்வரு வ்ரிகளும் நெப்போலியனின் அழமான காதலை உணர்த்துவதாக இருந்தது .இப்படி உலக புகழ் பெற்ற காதல் கடிதம் எழுதிய நேப்போலியனே பிறகு வேறொரு திருமணம் செய்யும் சூழல் ஏற்பட்டது அப்படியெனில் நெப்போலின் முதல் காதல் உண்மையானது இல்லையா?
தன் காதல் மனைவிக்காக உலக அதிசயத்தில் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹானுக்கு மும்தாஜ் முதல் காதலி அல்ல. அப்படியெனில் ஷாஜகானுக்கு மும்தாஜிடம் இருந்த காதல் உண்மையானது இல்லையா ?
சந்தர்ப்ப சுழ்நிலைகளாலும் கருத்து வேற்றுமையினாலும் காதல் உறவுகள் முறிந்து போவதுண்டு ஆனால் காதல் அழிந்து விடுவதில்லை. காதல் நினைவுகள் இதயத்தின் ஒர் ஓரத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும் . அது வலி அல்ல சுகம் முதல் காதல் மட்டுமல்ல வாழ்கையில் நடக்கிற முதல் நிகழ்வுகள், கிடைக்கிற முதல் பொருள் முதல் வெற்றி இப்படி அனைத்தும் மனதில் பதிந்து இருக்குமே தவிர வாழ்கையின் பாதையை பாதிப்திலை.
காதல் உற்வு முறிந்து போகும் போது காதல் துணையை எப்படி பழிவாங்கவும், கொலை செய்யவும், அல்லது தற்கொலை செய்யவும் மனம் தயாராகிறது .கொலை செய்யவும் பழிவாங்கவும் மனம் தூண்டுகிறது என்றால் அது சுயநலம் .தற்கொலைக்கு மனம் தூண்டுகிறது என்றால் அது பலவீனம், தழ்வுமனபான்மை. இதை உளவியல் ரீதியாக எதிர்மறை எண்ணங்கள் எனலாம். இந்த எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் போது அது மன நோயாகவும் மாறுகிறது .தன் காதல் பலமானதகவும், உண்மையாகவும் இருக்கும் போது எதிர்மறை எண்ணங்கள் உருவாவதில்லை.
தன்னுடைய காதல் துனையால் ஏமாற்ற படும்போது தனக்கு இதைவிட நல்ல துணை கிடைக்கும் என நம்பாதவர்கள் தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்களிடம் இருந்தது காதல் அல்ல வாய்ப்பை பயன்படுத்தும் தந்திரம்.
காதல் முறியும் போது இருக்கும் கோபம் இனோரு அழகான வாழக்கை கிடைக்கும் போது மறைந்து விடுகிறது. காதல் முறிந்த பின் வாழ்கையை சரியாக அமைக்க தெரியாதவர்களுக்கும், அமைக்க தவறியவர்களுகும் மட்டும் தான் எதிர்மறை எண்ணங்கள் உருவாகிறது.
source: http://kathalikkiren.blogspot.in/2013/11/blog-post.html