அரவாணிகள் பற்றிய இஸ்லாமிய தீர்ப்பு என்ன?
ஆண்கள் பெண்கள் என்ற இருபாலாருக்கும் இடையில் தங்களை மூன்றாவது பாலினமாக அறிவிக்கக் கோரி போராடும் ஒரு குழுவாக இன்றைய நாட்களில் நம்முன் தெரியக் கூடிய ஒரு வகையினர் அரவாணிகள்.
தங்களை மூன்றாவது பாலினமாக அறிவிக்கும் படி கூறும் இவர்கள் ஆரம்பத்தில் தங்கள் பெயருக்காக போராடினார்கள்.
அலிகள் என்று அழைக்கப் பட்டவர்கள் மீடியாக்கள் தங்களை அரவாணிகள் என்று அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி அதில் வெற்றியும் கண்டார்கள்.
இதே குழு தற்போது தங்களை திருநங்கைகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.
அரவாணிகள் என்றால் யார்?
மக்களுக்கு மத்தியில் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல நாங்கள் மூன்றாவது பாலினம் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள்.உண்மையில் மூன்றாவது பாலினம் என்பது பொய்யாகும்.
இவர்கள் உண்மையில் ஆண்கள் தான் என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அதாவது பிறப்பில் ஆண்களாக இருக்கும் இவர்கள் பெண்களைப் போல் தங்களை ஜாடை செய்து கொள்வார்கள்.
பெண்களைப் போல சேலை கட்டுவதிலிருந்து அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது வரை அனைத்து விஷயங்களிலும் தங்களை பெண்களாக காட்டிக் கொள்ள முயல்வார்கள்.
நடை உடை பாவனை அனைத்திலும் செயற்கையாக தங்களை பெண்ணாக காட்டுவார்கள்.
ஆனால் உண்மையில் இவர்களின் உடல் அமைப்பு ஆணாகத் தான் இருக்கும்.
இந்தியாவின் மும்மை டெல்லி குஜராத் போன்ற இடங்களில் ஆண்களை அறுவை சிகிச்சை மூலம் பெண்களின் சில உடல் அமைப்பிற்கு மாற்றும் செயன்முறையை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இதன் மூலம் மார்பு போன்ற பிறப்பில் தங்களுக்கு இல்லாத சில பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் இவர்கள் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.அதன் பின் தங்களை பெண்களாக மக்களுக்கு மத்தியில் அறிமுகப் படுத்துகின்றனர்.
அரவாணிகளின் தொழில்(?)உலகுக்கே ஆபத்தானது.
திருநங்கைகள் என்று சொல்லப் படும் இந்த அரவாணிகள் தங்களுக்கென்று பெரும்பாலும் சுய தொழில்கள் எதையும் செய்வதில்லை.
இவர்கள் தங்கள்; முக்கிய தொழிலாக விபச்சாரத்தைத் தான் செய்கிறார்கள்.
அதனுடன் சேர்த்து பிச்சை என்ற பெயரில் மக்களிடம் பணம் பரிப்பதும் இவர்களின் முக்கிய தொழில்களில் ஒன்றாகும்.
இவர்கள் தங்கள் இரு கைகளையும் ஒன்றுடன் ஒன்று ஒரு அடி அடித்துவிட்டு பிச்சை கேட்பார்கள் அப்படி அவர்கள் கேட்கும் போது யாரும் அவர்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் அவர்களை கண்ட வார்த்தைகளை கொண்டு திட்டுவதும் வசை பாடுவதும் இவர்களின் தொழில்.
இவர்களின் இந்த இழி செயலுக்கு பயந்தே பலர் இவர்களிடம் பணத்தை கொடுத்துவிடுகிறார்கள்.
இதற்காக வேண்டிய தன்னைத் தானே பெண்ணாக உருவகப் படுத்தி அரவாணியாக காட்டிக் கொள்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
அரவாணிகள் வாழும் நாடுகள்.
அரவாணிகள் ஆரம்பத்தில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தான் அதிகமாக இருந்தார்கள் தற்போது அதிகமாக இந்தியாவில் தான் உருவெடுக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்திய நாட்டின் முக்கிய நகரங்களாகிய மும்மை கல்கத்தா குஜராத் டெல்லி சென்னை போன்ற நகரங்கள் இதில் அதிகம் முக்கியத்துவம் பெருகின்றன.
இது தவிர மலேசியா சிங்கப்பூர் இஸ்ரேல் வட தென் அமெரிக்க நாடுகள் போன்றவற்றிலும் இவர்கள் அரவானிகள் என்ற பெயரில் இருக்கிறார்கள்.
அரவாணிகள் என்ற பெயரைத் தவிர்த்து இவர்களின் வேலையை செய்யக் கூடிய கேடு கெட்டவர்கள் பலர் அணைத்து நாடுகளிலும் உள்ளனர்.
ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று இவர்கள் அழைக்கப் படுவர் இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் அரசாங்கங்களின் அங்கீகாரத்துடன் கிட்டத்தட்ட 128 நாடுகளில் பகிரங்கமாக இந்த அசிங்கத்தை நடத்தி வருகிறார்கள்.இந்தப் பட்டியலில் இருதியா 128வது நாடாக இந்தியா இடம்பிடித்துள்ளது.129வது நாட்டினராக தங்களை அறிவிப்பு செய்யும் படி இலங்கையில் இருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்கள் இலங்கை அரசுக்கு கோரிக்கை வைப்பதாக அன்மையில் பி.பி.சி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.(இவர்கள் பற்றிய முழு விபரத்திற்கு இளைஞர்களே சுயஇன்பமும் விபச்சாரமே என்ற நமது ஆய்வுக் கட்டுரையைப் படிக்கவும்.)
கூத்தாண்டவர் திருவிழாவும், அரவாணிகளின் அசிங்கங்களும்.
சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக சென்றால் கூவாகம் என்ற கிராமம் இருக்கிறது.
இங்கு தான் வருடா வருடம் அரவாணிகளின் திருவிழா நடக்கிறது.
இந்த விழாவில் இந்த கேடு கெட்டவர்களின் அழகிப்போட்டியும் நடை பெரும்(அழகிப் போட்டியென்பதே கேடு கெட்ட செயல்தான் என்பதை புரிந்து கொள்ளவும்)இவர்களின் வருடாந்த விழாவில் யார் அழகியாக தேர்ந்தெடுக்கப் படுவாரோ அவருக்கு மிஸ்கூவாகம் என்ற பட்டம்(?)வழங்கப் படும்.
இந்த விழா முழுக்க முழுக்க பெண் தோற்றத்தை தங்களுக்குள் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட ஆண்களால் தான் நடத்தப் படுகிறதே ஒழிய இவர்கள் ஒன்றும் மூன்றாம் பாலினம் அல்ல.என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அரசுகளும் இந்த ஜன்மங்களுக்கு உடந்தையே!
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசாங்கள் இந்த அரவாணி என்று சொல்லப் படும் விபச்சாரிகளுக்கு அதிக சழுகைகளை வழங்கி அவர்களுக்கு இன்னும் உத்வேகம் கொடுத்து சமூக சீர்கேட்டுக்கு வழிகோழுகின்றன.
குறிப்பாக இவர்களுக்கு சங்கங்கள் அமைத்து அதற்கெண்றே சில நாடுகள் சட்ட சீர்திருத்தங்களைக் கூட மேற்கொண்டுள்ளன.
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எப்படி அரசு அனுமதி கொடுத்துள்ளதோ அதே அனுமதி இந்த அரவாணிகளுக்கும் உள்ளது.
இந்திய அரசாங்கமோ மற்ற அரசுகளை விட ஒரு படி மேலே சென்று இவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதி வாரியாக கணக்கெடுத்தால் அரவாணிகளை மூன்றாம் பாலினமாக கணக்கெடுப்பது பற்றி ஆராய்ந்து வருவதாக இந்திய மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கங்களே இப்படி கேடு கெட்ட விதத்தில் கருத்து வெளியிடும் போது மாநில அரசுகளை கேட்கவா வேண்டும்.
அரவாணிகளை எதிர்ப்பது மனிதநேயத்திற்கு எதிரானதா?
அரவாணிகளை எதிர்ப்பது மனிதநேயத்திற்கு எதிரானது என்று இன்றைக்கு சில தன்னார்வக் குழுக்கள் குரல் கொடுக்கின்றன.
இவர்கள் இப்படி குரல் கொடுப்பது சமுதாய சிந்தனையுள்ளவர்களை பெரும் கவலைக்கு உள்ளாக்குகிறது.
இயற்கைக்கு மாற்றமாக செய்ற்கை முறையில் தன்னை பெண்ணாக காட்ட முயலும் இவர்கள் சுய லாபத்திற்காக உழைக்காமல் கையேந்தி சாப்பிடுவதற்காக இப்படி செய்யும் போது சமுதாய நலனை விரும்பும் எந்தவொருவரும் அவர்களை எதிர்க்க வேண்டுமே தவிர அவர்களை ஆதரிப்பது எந்த விதத்திலும் சரியானதாக அமையாது.
அத்தோடு ஓரினச் சேர்க்கை போன்ற மிகப் பெரும் சமூகக் கொடுமையை அரங்கேற்றும் இவர்களை ஆதரித்தால் அவர்களை நாம் எந்த பட்டியலில் சேர்ப்பது?
இஸ்லாமிய தீர்ப்பு என்ன?
அரவாணிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் இவர்களைப் பற்றி இஸ்லாம் அழகான மிகத் தெளிவான நிலைப் பாட்டை எடுத்துள்ளது.
உலகில் ஏற்படும் அணைத்துப் பிரச்சினைகளுக்கும் அழகாக எந்த மார்க்கமும் சொல்லாத வகையில் தீர்பை சொல்லும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மாத்திரம் தான் என்பது உலகறிந்த உண்மை.
இந்த தூய இஸ்லாம் இவர்களை ஆண்களாகத் தான் முடிவெடுக்கிறது.
இவர்கள் எந்த விதத்திலும் மூன்றாம் பாலினமாக அறிவிக்கப் பட முடியாதவர்கள்.
உலகில் ஆண் பெண் என்ற இரண்டு பாலினம் தான் இருக்கிறது. இதை தவிர செயற்கை பாலினமாக மாற முனையும் இவர்களை ஒருக்காலும் மூன்றாம் பாலினமாக அறிவிக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை.
திருக்குர்ஆன் பார்வையில் இரண்டு பாலினம் மாத்திரமே!
உலகில் இரண்டு பாலினம் மாத்திரமே உள்ளது என்பதை குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறது.
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான் எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1)
மேற்கண்ட வசனத்தில் ”ஆதம் அலைஹிஸ்ஸலாம் மூலம் அவரின் துணையை படைத்து அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் படைத்தான்” என்று குறிப்பிடுவதிலிருந்து உலகில் ஆண் பெண் ஆகிய இரு பாலினத்தைத் தவிற வேறு பாலினம் இல்லை என்பது உள்ளங் கையில் நெல்லிக் கணி போல் தெளிவான விஷயம்.
அரவாணிகள் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தை:
(நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்; என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) ‘அலி’ ஒருவர் அமர்ந்திருந்தபோது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த ‘அலி’ (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம் ‘அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால் அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும் பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்” என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இந்த அலிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது” என்று கூறினார்கள். (புகாரி 4324)
அரவாணிகள் என்று தங்களை அழைக்கும் இவர்கள் ஆண்கள் என்பதால் தான் நபியவர்கள் அவர்களை பெண்கள் இருக்கும் இடத்திற்கே வர விடக்கூடாது என்று தடுக்கிறார்கள்.
இவர்கள் பெண்களிடம் தங்களை பெண்களைப் போல் காட்டிக் கொண்டு அவர்களுடைய அங்க அவயவங்களை நோட்டமிடும் கீழ்தரமான காரியங்களை செய்பவர்கள் அதனால் இவர்கள் ஒரு போதும் பெண்களுடன் தொடர்பு வைக்க அனுமதிக்கக் கூடாது என்பது நபியவர்களின் தெளிவான வார்த்தை.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும் அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்! என்றும் சொன்னார்கள். அவ்வாறே நபியவர்கள் இன்னாரை வெறியேற்றினார்கள்; உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இன்னாரை வெளியேற்றினார்கள். (புகாரி 6834)
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சாபத்திற்கு உரியவர்கள்.
அதாவது ஆண்களைப் போல் நடக்கும் பெண்களையும் பெண்களைப் போல் நடக்கும் ஆண்களையும் நபியவர்கள் சபிக்கிறார்கள்.
இந்த அரவாணிகள் என்று சொல்லப்படுபவர்கள் ஆண்கள் ஆனால் பெண்களைப் போல் தங்களை அடையாளப் படுத்துகிறார்கள்.
மொத்தத்தில் இவர்கள் இறைவனி சாபத்திற்கு உரியவர்கள் என்பதால் அரவாணிகள் விஷயத்தில் நாம் கவணமாக இருக்க வேண்டும் அவர்களை ஆண்களாகத் தான் நாம் முடிவெடுக்க வேண்டும் அவர்களுடன் நமது பெண்கள் (அரவாணிகளை பெண்களாக நினைத்து)பழகுவதை தடுக்க வேண்டும்.
மொத்தத்தில் அரவாணிகளை நாம் வீடுகளிலேயே வைக்கக் கூடாது அவர்கள் தங்களை ஆண்கள் என்று பகிரங்கமாக அறிவித்து ஆணுடைய தோற்றத்தில் இருந்தால் நாமும் அவர்களை ஆண்களாக ஏற்றுக் கொள்ள முடியும் மாறாக தன்னை ஒர அரவாணியாக எவர் காட்டிக் கொள்கிறாரோ அவருக்கு நமது வீட்டில் கூட இடம் கொடுக்கக் கூடாது என்பது இஸ்;லாத்தின் தெளிவான நிலைபாடு.
தொகுப்பு : Rasmin M.I.SC
source: http://rajmohamedmisc.blogspot.in/2010/08/blog-post_4490.html
அரவாணிகள் செய்த ரேப்…
கண்ணீரும் கம்பலையு மாக தல்லாகுளம் காவல்நிலையத்துக்கு ஓடிவந்தார் 17 வயது ஜெஷிபாலா. ஏதோ அடிதடி விவகாரம் என நினைத்த இன்ஸ்பெக்டர் விஜயகுமார், என்னது? என்றார் விரைப்பாக. ஜெஷியோ, “என்னை மும்பை அரவாணிகள் செக்ஸ் டார்ச்சர் பண்ணி… கற்பழிச்சிட்டாங்க. என்னை மும்பைக்கு கடத்தவும் பார்த்தாங்க. உடனே அவங்கமேல் கற்பழிப்பு வழக்கைப் போடுங்க இன்ஸ்பெக்டர்”’என தேம்பலோடு புகாரை நீட்டினார்.
கிறுகிறுத்துப் போய்விட்டார் இன்ஸ்பெக்டர். காரணம், புகாரோடு வந்த ஜெஷியும் ஒரு அரவாணி. மெல்ல சுதாரித்துக்கொண்ட இன்ஸ்பெக்டர்… “அரவாணியான உன்னை… அரவாணிகளே கற்பழிச்சிட்டாங்கன்னு சொன்னா எப்படி நம்பறது?” என்றார் எச்சிலை விழுங்கியபடி. ஜெஷியோ, “என்ன சார் நம்பமாட்டேங்கறீங்க. பெண்களைக் கற்பழிக்கிற மாதிரி அரவாணிகளையும் மிகக்கொடூரமா கற்பழிக்க முடியும். அதனால வழக்கைப் பதிவு பண்ணுங்க” என்றார் உறுதியாய்.
தர்மசங்கடமான இன்ஸ்பெக்டரோ “”சரிம்மா.. உன் புகாரை நான் நம்பினாலும் கோர்ட் நம்பணுமே… அரவாணிகள் கற்பழிப்புக்கெல்லாம் சட்டவிதிகள் இருப்பதா நான் படிக்கலையே… அதனால் உன்னை மத்த அரவாணிகள் தாக்கினாங்கன்னு வழக்கைப் பதிவு பண்ணிடலாமா’ என் றார் பரிதாபமாக.
ஜெஷியோ ஒத்துக் கொள்ளவில்லை. கோபமாக வெளியேறிவிட்டார். ஆனால் பிரச்சினை அதோடு முடியவில்லை. ஏறத்தாழ 300 அரவாணிகள் புடைசூழ ஜெஷிபாலா ஸ்டேஷனுக்கு வந்து… “வழக்கைப் பதிவு செய்யாமல் நாங்க போக மாட்டோம்’’’என முற்றுகையிட்டார்கள்.
திகைத்துப்போன இன்ஸ்பெக் டர்… ஓடிப்போய் டி.ஐ.ஜி., கமிஷனர், சட்ட நிபுணர்கள் என பலரிடமும் ஆலோசனை பெற்றபின்… எதிர்தரப்பு அரவாணிகளோடு சேர்ந்து ஜெஷிக்கு டார்ச்சர் கொடுத்த ஐந்து ஆண்கள் மீது கற்பழிப்பு வழக்கைப் பதிவு செய்ததோடு… இதற்கு உடந்தையாக இருந்து டார்ச்சர் பண்ணியதாகவும் மும்பைக்கு கடத்த முயன்றதாகவும்… ஜெஷிபாலா கை நீட்டிய அரவாணிகள் மீதும் எஃப்.ஐ.ஆர் போட்டார். இதன்பிறகே நள்ளிரவுவரை முற்றுகையிட்ட 300 அரவாணிகளும் கலைந்து போனார் கள்.
புகார் கொடுத்த திருநங்கை ஜெஷிபாலாவிடம் என்ன நடந்தது என்றோம். ஜெஷியோ, “மதுரை பூமிகா அறக்கட்டளையின் பாது காப்பில் அம்மா ஊர்வசியின் பரா மரிப்பில் வாழ்ந்து வர்றவ நான். மதுரை அரசு மருத்துவமனையில்… சமூகநலத்துறை சார்பில் நடந்த ஹெல்த் செக்கப்புக்குப் போனேன். அங்கேயே பிரச்சினை. அங்க இருந்த ஆண் டாக்டர்கள்… அதைக் கழட்டு, இதைக்கழட்டுன்னு சொல்ல… பெண் டாக்டர்கள்தான் செக்கப் செய்ய ணும்னு சொன்னேன். அந்த சங்கடமெல்லாம் முடிஞ்சு நான் வெளில வந்தப்ப… மும்பை நூரி தலைமையில் 5 அரவாணிகள் இருந் தாங்க. வா டீ குடிக்கலாம்னு கூப் பிட்டாங்க.
அதை நம்பி ஆட்டோவில் ஏறினா… அவங்க ஆட்டோவிலேயே செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாங்க. நான் தடுக்க… எங்க ரூமுக்கு வந்து டீ குடிச் சிட்டு போயிடுன்னு பி.பி.குளம் பக்கத்தில் இருந்த ஒரு ரூமுக்குக் கொண்டுபோய் என்னை அடைச்சிட்டாங்க. அப்புறம் முருகேசன் உட்பட 5 ஆண்களை வரவழைச்சி… “இவளை வெள்ளிக் கிழமை மும்பைக்கு ரயில்ல கொண்டுபோயிடுங்க…
சேட்டுக்கிட்ட 50 ஆயிரத்துக்கு வித்துடுங்க. இப்ப இவளை அனுபவிச்சிக்கங்க’ன்னு நூரி சொல்ல…அந்த அஞ்சுபேரும் மிருகத்தனமா.. என்னை நிர்வாணமாக்கி கெடுத்தாங்க. ஓவர் டார்ச்சர். அந்த மும்பை அரவாணிகள் தண்ணியைப் போட்டுட்டு தூங்கியதும் நான் தப்பிச்சி ஓடிவந்துட்டேன். இந்தப் புகாரை பதிவுபண்ன படாதபாடு பண்ண வேண்டியதாயிடிச்சி”’என்றார் விலாவாரியாகவே.
ஜெஷியின் வழக்கறிஞரான ரஜினி நம்மிடம் “மும்பை அரவாணிகளின் அராஜகம் அதிகமா ஆயிடுச்சி. அரசிடம் லோன் வாங்கி தொழில்களை செய்து முறையாக வாழவிரும்பும் அர வாணிகளை…இந்த மும்பை அரவாணிகள் செக்ஸ் தொழிலில் இறக்கிவிடப் பாக்குறாங்க. பல அரவாணிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படறாங்க. இப்படிப்பட்ட குற்றவாளிகள் மீது 376-வது சட்டப்பிரிவின் படி கற்பழிப்பு கேஸ்போட போலீஸ் மறுக்குது.
அரவாணி சக அரவாணியால கற்பழிக்கப்பட்டாலும் ஓரின சேர்க்கை தொடர்பான 377-வது பிரிவின்படி மட்டுமே வழக்கைப் பதிவு செய்கிறார்கள். இது தவறானது. சமீபத்தில் உச்சநீதி மன்றம்… அரவாணிக்கு பெண்ணுக்கான உடல் பாகங்களும் உணர்வுகளும் இருக்குமானால் அவர் பெண்ணாகவே கருதப் படவேண்டும் என்று அடித்துச் சொல்லியிருக்கிறது. இதன்படி ஜெஷியைப் பெண்ணாகக் கருதி… கற்பழிப்பு வழக்கைப் பதிவு செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். மதுரை போலீஸ் கேட்கவே இல்லை. எனவே விவகாரத்தை உயர்நீதிமன்றத்துக்குக் கொண்டுபோய்… போலீஸையும் கூண்டில் ஏற்றுவோம்” என்கிறார் அழுத்தமாய்.
நூரி தலைமையிலான மும்பை அரவாணிகள் தரப்போ “எங்கள் மீது ஜெஷி கொடுத்திருப்பது பொய்ப் புகார்’’ என ஒரேவரியில் மறுக்கிறது. தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரிடம் இந்த விவகாரம் குறித்து நாம் கேட்டபோது “”நாலுநாளா நாங்க அவங்கக்கிட்ட படறபாடு ஜென்மத்துக்கும் போதும். எஃப்.ஐ.ஆர். போட் டாச்சு ஆளைவிடுங்க சார்”’என்றபடி எஸ்கேப் ஆனார்.
source: http://www.eegarai.net/t6925-topic.